மீட்டதா வீணை தருகின்ற ராகம் -16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அவன் அறைக்குள் நுழையவும் அதுவரை இருந்த சத்தங்கள் அனைத்தும் அடங்கி பின்- ட்ராப் சைலன்ஸ் என்பார்களே அதுபோல் ஆகிவிட்டது.

மிடுக்காக உள் நுழைந்தவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்து அமர்ந்த தோரணையில் பெண்கள் மையல் கொண்டனர் என்றால் ஆண்கள் மனம் நொந்தனர். மனம் நோகமால் எப்படி இருக்கும் அவன் வந்துவிட்டால் அதுவரை தங்கள் மேல் இருக்கும் பெண்களின் பார்வை அவன் மீது திரும்பிவிடுகிறதே.

அனைத்து பெண்களும் அப்படி அல்ல அண்ணன் ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் பெண்களும் உண்டு . சைலன்டாக சைட்டடிப்பவர்களும் உண்டு.  பகிரங்கமாக வெளிப்படுத்துபவர்களும் உண்டு அப்படி பகிரங்க பிரிவில் இருப்பவர்களே சுனேனா மற்றும் ஜனனி இருவரும்.

அவன் அமர்ந்த அடுத்த நொடியில் மீட்டிங் ஆரம்பம் ஆனது.  புதிதாக சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறான். மேலும் தயாரிப்பு துறையிலும் இறங்கிவிட்டான்.

இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது இந்நிறுவனத்தை தொடங்கி. ஆரம்பத்தில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் இரண்டு வருடத்தில் தன்னையும் செதுக்கி   நிறுவனத்தையும் செதுக்கி செம்மைப்படுத்தினான்.

மக்கள் மத்தியில் அவனது சேனலுக்கு நல்ல வரவேற்பு.  இரண்டு வருடத்தில் முதல் ஐந்து இடங்களின் பட்டியலில் அவன் சேனல் இடம் பெற்றுவிட்டது.

அதற்கான சக்சஸ் பார்ட்டி அரேஜ்மெண்ட்ஸ்  பற்றியும் மேலும் முதல் இடத்தை பிடிப்பதற்கான வழி முறைகள் என்ன என்பதை பற்றியும் விவாதிப்பதற்கான மீட்டிங் தான் தற்போது அனைவரும் கூடி இருப்பது.

ஒரு மணி நேரத்தில் மீட்டிங் முடிந்து விட்டது.  மீட்டிங் முடிந்தவுடன் வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான்.

காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வெளியே வந்தான்.  சிறிது தூரம் சென்றதும் ஒரு ஷாப்பிங் மாலின் உள் சென்று சிலவற்றை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் சென்றவன் நேராக தன் அறைக்கு சென்று வாங்கி வந்த பொருளை பத்திரபடுத்தியவன் கழிவறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான்.

கட்டில் மல்லாக்க படுத்து கொண்டவனின் கண் முன் சில நிழற்படங்கள் காட்சியாகவும் கண்களை அழுந்த மூடி திறந்தான். பின் எழுந்து அமர்ந்தவன் தன் எதிரில் இருந்த சுவற்றை வெறித்தான். அதில் மாட்டப்பட்டிருந்த யாழ்நிலாவின் புகைபடத்தை கண் இமைக்காமல் பார்த்தான். அழகாக சிரித்து கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் இருந்து கண்ணீர் அவன் அனுமதி இன்றி வெளியேறியது.

எதுக்காக என்ன விட்டு போன யாழு…  சத்தியமா என்னால முடியலடி… 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவள் புகைபடத்தின் அருகில் இருந்த மற்றொரு புகைபடத்தை பார்த்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைபடம்.  அதில் அப்படி ஒரு சிரிப்பு அவன் முகத்தில். ஆனால் தற்போது யாரேனும் அந்த புகைபடத்தை காண நேரிட்டால் நம்பமாட்டார்கள். 

ஒரு வேளை சுனேனாவும் ஜனனியும் அதை கண்டால் சத்தியமாக நம்ப மறுப்பர்.  ஏனெனில் அவர்கள் இதுவரை அவனை சிரித்துப் பார்த்தது இல்லை. 

அவனது குறும்பு தனமும் சிரிப்பும் நான்கு வருடங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டது.  அவன் சிரிப்பு வெளிப்படுவது ஒரு நபரிடம் மட்டுமே.

அறையில் இருந்து வெளியே வந்து உணவு மேசையில்  அமர்ந்தான்.  காலையில் இருந்து உண்ணாமல் இருந்தது வேறு அதிக பசியை தூண்டிவிட்டிருந்தது.

மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.  உணவை எடுத்து தனது தட்டில் பரிமாறி உண்ண ஆரம்பித்தான். 

அப்பொழுது ஹாலில் இருந்த அறை கதவு திறக்கப்பட்டது.  உள்ளிருந்து அவனது தாய் வெளியே வந்தார்.  அவரையே ஏக்கமாக பார்த்தான். ஆனால் அவரோ அப்படி ஒருவன் அங்கு இருப்பதே அறியாதவர் போல் நடந்து கொண்டார்.

திடிரென்று அவனுக்கு புரைஏற அவனது தாய் கண்மணி அடுக்களைக்குள் சென்று தண்ணீரை எடுத்து வந்து அவன் அருகில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

தண்ணீரை எடுத்து குடித்தவன் அவர் போகும் திசையை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பை செலுத்திவிட்டு பாதி உணவிலே எழுந்து கை கழுவிவிட்டு தன் அறை உள்ளே சென்றுவிட்டான்.

படுக்கையில் வந்து விழுந்தவனின் நினைவுகளோ மீண்டும் பின்னோக்கி சென்றது.

குழலியும் யுக்தயனும் சேர்ந்து நடந்து வந்தவர்கள் தங்கள் முன் கண்ட காட்சியில் கண்களை அகல விரித்தனர்.

யாழு…  என்று கத்தியவன் அவள் அருகில் வேகமாக ஓடினான்.

ஆனால் அவன் காதல் மனைவியோ அவனது குறலை சிறிதும் சட்டைசெய்யாமல் மரத்தின் மேல் ஏற முயன்று கொண்டிருந்தாள்.

அவளுக்கு மேல் உள்ள ஒரு கிளையில் அமர்ந்து கனிகளை பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான் ருத்ரன்.

அருகில் நெருங்கி அவளது கைகளை பிடித்து கீழே இழுத்தான்.  இழுத்த வேகத்தில் தடுமாறி பின் சில நொடிகளிலே தங்களை நிலைபடுத்தி நின்றனர்.

அவர்கள் இருவரையும் தொடர்ந்து மற்றும் ஒருவரும் கீழே விழுந்தார்.  அவரை கண்டு பயந்த நிலாவோ யுகியின் மீது உப்பு மூட்டை ஏறி கொண்டாள்.

ஆனால் இவள் பார்த்து பயந்தவரோ இவளை பார்த்து பயந்து வேகமாக ஊர்ந்து அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தார்.

யுக்தயனோ ஒரு சிரிப்பை உதிர்த்து “மேடம் என்னவிட்டு கீழ இறங்குனா நல்லா இருக்கும்.”

அவளோ இடம் வலமாக தலையை ஆட்டியவள் இறங்க மறுத்தாள்.

யுகி, “ஏய் இறங்குடி….”

நிலா, “ம்ஹும் மாட்டேன் கீழ பாம்பு இருக்கு “

யுகி, “ஏய் அது போயி ரொம்ப நேரம் ஆச்சு இறங்கு “

நிலா, “ஏங்க பிளீஸ் பிளீஸ் நாம இங்க இருந்து சீக்கிரம் போகலாம் அதுக்கு அப்புறம் நா இறங்குறே. “

ருத்ரனும் குழலியும் அவளை பார்த்து சிரித்தனர்.  அவளோ எவ்வளவு வேண சிரிங்க நா இறங்க மாட்டேன் என்பது போல அவனை இறுக பற்றிக் கொண்டாள்.

குழலியும் ருத்ரனும் கீழே விழுந்த பழங்களை சேகரித்துக் கொண்டனர். யுக்தயன் தன் பையில் இருந்த செல்போனை  எடுத்து இருவரையும் சேர்ந்தார் போல் ஒரு செல்பி எடுத்தான்.
பயணத்தின் போதே அவன் எடுத்து வந்த சில பவர்பேங்க் உபயத்தால் அவனது செல்போனை அடிக்கொரு முறை பயன்படுத்த முடிந்தது. 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

போட்டோ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் மற்றபடி கால் செய்ய வேண்டும் என்றால் காட்டுக்குள் தான் சிக்னல் கிடைக்காதே.

நிலா, “எதுக்கு மாமா போட்டோ எடுக்குறீங்க அத முதல அழிங்க “

யுகி, “போடி இதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் நாம ஊருக்கு போனதும் இத எல்லார்கிட்டையும் காட்டி சிரிப்பேன். “

நிலா, “ஐயோ மானம் போகுது “

யுகி, “ஏன்டி இவ்ளோ ஃபீல் பண்றேல கீழ இறங்க வேண்டியது தான “

நிலா, “ஆ…  அதெல்லாம் முடியாது நமா முதல இந்த இடத்தவிட்டு கிளம்பலாம் “

ருத்ரன் முன்னே செல்ல அவர்கள் பின் குழலியும், நிலாவை சுமந்து கொண்டு யுகியும் பயணத்தை தொடர்ந்தனர்.

செல்லும் வழியில் ஒரு இடத்தில் அமர்ந்து   கொண்டுவந்த உணவை உண்டனர்.
நிலாவோ சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே இருந்தாள்.

ருத்ரன், “பயப்படாத நிலாமா இங்க எந்த மிருகமும் வராது. “

நிலா, “எப்படி சொல்றீங்க அண்ணா இதுவும் காட்டுபகுதி தான “

ருத்ரன், “நாங்க மலை உச்சிக்கு போகும் போது இங்கதா ஓய்வு எடுப்போம்.  இந்த பகுதியில மிருகங்களோட நடமாட்டம் கிடையாதுடா. “

அதன் பிறகே சற்று தெளிவு பெற்றவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

உணவை முடித்துக் கொண்டவர்கள் சிறிது நேர ஓய்விற்கு பின் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

செல்லும் வழியெங்கும்  யுக்தயனின் சட்டையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா தன் பணியான பதிவு செய்யவதையும் மறக்கவில்லை.

நன்றாக இருட்ட ஆரம்பிக்கும் வேளையில் நதிக்கரை ஓரம் வந்து சேர்ந்தனர்.

ருத்ரன், “யுகி இதுக்குமேல பயணம் பண்ண முடியாது இங்கையே தங்கிட்டு காலையில புறப்படலாம்.  இன்னும் கொஞ்ச தூரம் தா ஆனா இருட்டிருச்சு இப்போ பயணம் பண்றது பாதுகாப்பா தோணல “

யுகி, “சரி ருத்ரா காலையில புறப்படலாம்”

பின் நால்வரும் சேர்ந்து அருகில் கிடைத்த மரக்கட்டைகள் மற்றும் சுள்ளிகளை சேர்த்து நெருப்பு பற்ற வைத்தனர்.  பின் அதன் அருகில் அமர்ந்து கொண்டனர்.

நிலா, “மாமா எனக்கு பசிக்குது “

யுகி,”அந்த பழத்தை சாப்பிடு யாழு “

ருத்ரன், “வேண்டா நிலாமா கொஞ்சம் இரு ” என்று நதி அருகில் சென்றவன் நதியை  உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் வந்து குழலியை அழைத்தான். 

அவள் கையில் வைத்திருந்த துணியின் உதவியால் மீன் பிடிக்கலாம் என்று முடிவு செய்து சற்று உள்ளே சென்றான்.

அவன் கையில் இருந்த துணியின் மறு பாகத்தை பிடித்துக் கொண்டு குழலியும் நீரின் உள் சென்றாள்.

நீரின் உள் சென்று கொண்டிருந்தவனோ கரையில் நின்றிருந்த யுக்தயனை பார்த்து

ருத்ரன் “யுகி நெருப்பு பந்தம் ஒன்ன எடுத்து கையில வச்சுக்கோ” என்றான்.

யுக்தயனும் நெருப்பு பந்தத்தை கையில் எடுத்துக் கொண்டு நிலாவை அருகில் அழைத்து மறு கையால் அவளை அணைத்துக் கொண்டான்.

தொடரும்…..