மஞ்சள் மலரே 9

அந்நிய ஆடவனையும்  அவனது பார்வையும் கண்டு அசூசையாக உணர்ந்தாள் கமழி. ஆனால் பக்கத்தில் நின்ற யாழினிக்கோ அவனைக் கண்டதும் உடல் தானாக அதிர, முகம்  வெளுக்கப் பயத்தில் நின்றாள். வந்தது அஜய் யாழினின் வகுப்பு ஆசிரியர். கணிதம் புரியவில்லை என்று அண்ணனிடம் சொன்னதன் விளைவு, அவளது வகுப்பு ஆசிரியரையே மாலையில் வீட்டிற்கு வந்து பாடம் எடுக்கச் சொல்லி அழைத்திருந்தான். அவனும் ஒரு பதினைந்து நாளாக வந்து கொண்டிருக்கிறான்.

யாழினியின் அருகே வந்தாலும் கமழியிடமிருந்த அவன் பார்வை மாறவே இல்லை. “யார் யாழினி இது புதுசா இருக்கு?” அவளுக்கு வெகு அருகில் வந்து நின்று கேட்டான். அவனது நெருக்கம் யாழினிக்கு அச்சத்தை கொடுக்க கமழிக்கோ முகச்சுளிப்பை தந்தது.

‘யாரிவன் பக்கத்துல வந்து நிக்கிறான்? ஒரு வேள அண்ணனா இருப்பானோ ! அண்ணனா இருந்தா இவ ஏன் பயப்பட போறா ? புரியலியே ஒன்னும்’ என யோசனையில் இருந்தவளை யாழினியின் பதலில் சற்று வெளியே வந்தாள்.

“இ… இவங்க… அ.. அம்மாவ பா… பாத்துக்க வந்த அ..அக்கா ” என்றாள் திணறி. “ஓ” என்றவன், அவளை ஒரு தரம் பார்த்து விட்டு யாழினியின் கைகளைப் பிடித்துக் கொண்டு  படிக்கும் அறைக்குள் சென்று
பட்டென்று கதவை சாத்தினான். இவளுக்கு பக்கென்றாக,

“பொன்னிக்கா…” வீடே அதிர கத்தினாள். அவள் கத்தலில் விஷ்வாவும் அடித்து பிடித்து ஓடி வந்தான். “என்ன மா ஆச்சி?” பொன்னியக்காவும் ” என்ன கம்ஸ் ஏன் இப்படி கத்துற?” விஷ்வாவும் கேட்க, மேலே பார்த்துக் கொண்டிருந்தவள் கோபத்தை இவர்களிடம் காட்டினாள்.

“யாருக்கா அவன் ? வந்தான்  யாழினிய உள்ள கூட்டிட்டு போயி கதவை சாத்திக்கிட்டான். என்னக்கா நடக்குது இங்க?” என்றதும் இருவர் வாய்விட்டு சிரித்தனர்.

“இதுக்கா கம்ஸ் நீ வீடே அதிர கத்துன. வந்தது யாழினியோட கிளாஸ் டீச்சர். அவளுக்கு ஹோம் டியூஷன் எடுக்க வந்திருக்கார். டிஸ்டர்பென்ஸா இருக்குனு கதவை சாத்திட்டு டியூசன் எடுப்பார்”என்று அவன் விளக்கினாலும்  அவளுக்கு சந்தேகமாக அதிகரிக்க தான் செய்தது.

“எவ்வளவு நேரம் எடுப்பான்?”

“தினமும்  இரண்டு மணி நேரம் எடுப்பார் பாப்பா”

“எப்படி இப்படி கதவை பூட்டிக்கிட்டா?”என்றதும் வாயடைத்துக் கொண்டார்.” ஏன் டவுட்படுற கம்ஸ்? அவருக்கு கிளாஸ் எடுக்கும் போதும்  எதுவும் டிஸ்டர்பென்ஸ் இருக்கக் கூடாதுனு தான் கதவை சாத்திட்டு  டியூஷன் எடுக்கறார். இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற?”

“டென்ஷன் ஆகாம என்ன  செய்ய சொல்ற நீ ! இங்க என்ன  டிஸ்டர்பென்ஸ் இருக்குனு அவன் கதவை சாத்தறான். இங்க என்ன குழந்தைகளா இருக்கு  சத்தம் கேட்க,  வீடே எவ்வளவு அமைதியா இருக்கு. அப்படியே சத்தம்னு ஒன்னு வந்தால் அது சமயலறையில இருந்து மிக்சி சத்தத்தை விட வேற  என்ன கேட்கப்போகுது. அதுவும் நைட்  ஒன்பது மணிக்கு தான் சமைக்கப் போறோம் எது அவன டிஸ்டர்பென்ஸ் பண்ண போகுது ?”எனக் கேட்கவும் இருவரும் அமைதியாக இருக்க மேலும் அவளுக்கு கோபம் கூடியது”ரெண்டு பேரும் அமைதியா இருந்தால்  என்ன அர்த்தம்?  நீங்க அவளை பார்க்க தான இருக்கீங்க? ஒரு வயசு பொண்ண தனியா கூட்டிட்டு போய் கதவை அடைக்கிறான். நீங்களும் வேடிக்கைப் பார்க்கிறீங்க.நானும் ஓரமா இருக்கேன் நீங்க கிளாஸ் எடுங்க சொல்லிருக்கலாம்ல ஏன் நீங்க சொல்லல?”பொன்னியிடம் விசாரித்தாள்.

“சொன்னேன் மா, அவர் தான் வேணாம் என்னை வெளிய போகச் சொல்லிட்டார் “என்றார். ” இதுல இருந்தே தெரியல அவள் எவ்வளவு பெரிய அயோகியன்னு”என பல்லைக் கடித்தாள்.

“கம்ஸ், என்ன பேசற நீ? அவர் ஒரு டீச்சர். அவர போயா சந்தேகப்படுறீயா நீ !”

“ஆமா சந்தேகப்படுறேன். டீச்சரா இருந்தால் சந்தேகப்படக் கூடாதா ? இப்போ எல்லாம் டீச்சரை தான் சந்தேகப்பட தோணுது. ஜெண்ட்ஸ் டீச்சரால எத்தனை பொண்ணுங்க இறந்து இருக்காங்க உனக்கு தெரியுமா?  எத்தனை நியூஸ் பார்த்திருக்கோம். அதுல ஒருத்தியா  யாழினியை நான் வர விட மாட்டேன்”என்றவள் சொன்னத்தை கேட்டு அதிர்ந்தனர் இருவரும் ” என்ன கம்ஸ் பேசற நீ? யாழினிக்கு  அப்படி எதுவும் ஆகாது. நீ ஓவரா திங்க் பண்றனு தோணுது”

“ஓவரா திங்க் பண்ணத்தான் வேணும் விஷ்வா. காலம் சரியில்ல. ஒரு டீச்சர் கதவை அடைச்சிட்டு கிளாஸ் எடுப்பாரா?  அதுவும் சத்தமே இல்லாத வீட்ல டிஸ்டர்பென்ஸ் இருக்குனு சொல்லி.  நம்புற மாதிரியா இருக்கு !” எனவும் அவர்கள் இவரிடத்தில் பதில் இல்லை.

இத்தனை நாள் அவனை பற்றி  யாரும் சந்தேகிக்கவில்லை. ஒருவேளை யாழினியின் முகமாற்றத்தை  கண்டிருந்தால் யோசித்திருப்பார்கள். அவளை அத்தனை  தூரம் பார்த்து கொள்ள தான் ஆள் இல்லையே. அண்ணன் இருந்தும் பயனில்லை. உள்ளே அவன் வகுப்பு மட்டும்  எடுக்கவில்லை என்ற கமழியின் சந்தேகம்  நூறுக்கு நூறு உண்மை.

இவன் வெறும் பாடம் மட்டும் எடுக்க வில்லை.அவளிடம் அவளது அழகை புகழ்ந்து காதலிப்பதாக கூறி, அவளது தேகங்களை தீண்டுவது முத்தங்கள் இட வருவது போல செய்து கொண்டிருப்பான். அவள் மறுத்தாலும் பதிலுக்கு எதாவது பேசி அவனது வேலைகள் தொடர்வான் கண்ணீர்விட்டு கதறினாலும் காதல் என்று சொல்லி அவளை மேலும் தீண்டுவான். முக்கியமாக இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும்  வைத்திருக்கிறான்.

அன்று கூட அண்ணனிடம் சொல்ல தான் வந்தாள். ஆனால் அவன் தான் வேலை இருப்பதாக கூறிவிட்டானே யாரிடம் போய் சொல்வாள் அவள். அவன் செய்கை எல்லாம் பல்லைக்கடித்து பொறுத்து கொண்டிருந்தாள். பாவம் பிறவிலே பயந்த சுபாவம் கொண்டவளுக்கு  அவனை எதிர்க்க துணிவில்லை. பயம் தானே ஒரு மனிதனை தன் இஷ்டம் போல ஆட்டி வைக்க கிடைத்த ஆயுதம் அதை பயன் படுத்தி ஆட்டி வைத்து கொண்டிருக்கிறான் அவளை அவன்.

இரண்டு மணி நேரம்  கமழி அமரவே இல்லை ஹாலில் நடந்துகொண்டே இருந்தாள். விஷ்வாவும் பொன்னியக்காவும் கூட அவ்விடம் விட்டு நகர வில்லை . இரண்டு மணி நேரம் பதினைந்து  நிமிடம் கழித்து கதவை திறக்க எழுந்து நின்றாள் அவள். அவன் இறங்கி வர,  அவனை பாராது நின்றவள், அவன் சென்றதும் யாழினிடம் செல்ல சோர்வாக  டேபிளில் தலையை சாய்ந்திருந்தாள். “ஆர் யூ ஓகே”என கமழி வந்து கேட்டதும் படக்கென்று தலையை நிமிர்த்தினாள்.அவள் விழிகளில் அத்தனை பயம் குடிக்கொண்டிருந்தது.

“என்னாச்சி ஏன் இப்படிநீ பயப்படுற ? ” அருகே  இருந்த தண்ணீர் குடுவையை நீட்டினாள். ” ஒன்னுல்ல” என்று மடக்கென்று குடித்து முடித்தாள். அவளை அணைத்துக் கொண்டு கீழே சென்றாள். அவளது நடுக்கத்தை கமழியும் உணர்ந்தாள் ஆனால் எதுவும் கேட்கவில்லை…  அவளை  அமர வைத்து இவளே சென்று மூன்று தோசை ஊற்றிக் கொண்டு வந்து வைத்தாள். சாம்பாரை ஊற்றி அவளே ஊட்டிவிட மறுக்காது வாங்கிக்கு கொண்டாள் யாழினி. ஆனால் கமழியின் பார்வை யாழினியை துளைக்க அவளை பாராது  எங்கோ பார்த்து உணவை வாங்கிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர் இவ்விருவரும்.

நேரமாகிட, வளவனும் வர, அவன் கண்ட காட்சியில் அதே இடத்தில்  சட்டென நின்றான். தினமும் அவனும் தந்தையும் கதை வளவளத்தபடி வர, வளரோ  யாழினிக்கு ஊட்டிவிட்டப் படி அவர்கள் இருவரையும் வரவேற்பார். இவனும்  ஓடிச்சென்று ஒரு வாய் வாங்கிக் கொள்வான். பழைய நிகழ்வு நெஞ்சில் நினைவுகளாக தேங்கி சுமையோடு வலியை கொடுத்தன. யாழினியின் அருகே வந்து, அவள் தலையை தடவியவன் நெற்றியில் முத்தம் வைத்து”சாப்டு” என்றவன் தனக்கும் ஒருவாய் கிடைக்காத என்று ஏக்கமாக கமழியையும் அவள் கையையும் பார்த்தான். அவளோ இவன் நிற்பதையும் மறந்து எதையோ யோசித்து கொண்டிருந்தாள். அவளது முகபாவனை கண்டு புருவம் சுருக்கியவன், ” என்னாச்சி? ஆர் யூ ஓகே?” என வினவ,
அதில் சுயம் பெற்றவள், ” நந்திங் சார். நீங்க போய் ஃபிரேஷ்ஷாப் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்”என்றாள் புன்னகையில் தன்னை மறைத்தபடி.

குளித்து விட்டு உடை மாற்றி வந்தவனுக்கு இன்று கமழி தான் பரிமாறினாள்”ஏன் எதுவும் கேட்காமல் உண்டான். அவள் பரிமாறுவது அவனுக்கு பிடித்து இருந்தது. ” நீயும் உட்கார்ந்து  சாப்பிடு” என்றான்.

“இல்ல நான் விஷ்வா கூட சாப்பிட்டுகிறேன்” என்றதும் அவனுக்கு ஏதோ போலானது. அவள் கையில் அதிகம் சாப்பிட எண்ணியவன், அவள் பதிலில் சாப்பாடு இறங்காமல் போக “போதும்” என்று முடித்துக் கொண்டு எழுந்து அறைக்கு சென்று விட்டான். அவளும் எதுவும் கேட்கவில்லை பொன்னியும் விஷ்வாவும் வர மூவருமாக அமர்ந்து உண்டனர்.

விஷ்வா அவளை சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொக்கைப் போட பதிலுக்கு அவளிடம் அடிகளை பெற இதை மேலே நின்று பார்த்தவனுக்கு பொறாமையும் கோபமும் உள்ளுக்குள் தோன்றியது.  சுவரைக் குத்தியவன் அறைக்குள் சென்று விட்டான். மூவரும் உண்டு முடித்து உறங்கச் செல்ல, இவளும் வழமை போல வளர அருகே அமர்ந்தவள்,

யாழினிக்கு டியூசன் எடுக்க வரும் அஜய்யைப் பற்றி வளரிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.” எனக்கு அந்த அஜய்ய பார்க்க பிடிக்கல- த்த ! ஏதோ தப்பா இருக்கு. கதவை சாத்திட்டு உள்ள போய் டியூஷன் எடுக்கறது சரியா, வயசு பொண்ண அவன் அப்படி அனுப்ப மனமில்ல…நாளைக்கே அதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் பாருங்க”என்று அவர் கையை பற்றி பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு அருகே வந்து நிழலாடுவதை கண்டு பயந்தவள் நிமிர்ந்து பார்க்க, வளவன் தான் நின்றிருந்தான்.அவள் பேசிய முடித்த பின் தான் வந்திருந்தான்.

அவன் முகத்தையே பார்த்தாள், அவனும் புன்னகை முகமாய் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். வளரின் கையை தன் பிடியிலிருந்து கீழே வைத்து விட்டு எழுந்தவள், “ஏதாவது வேணுமா சார்?” என்றாள்.

“நீ தான காலையிலே உதவி கேட்ட, அதான் தினமும் அந்த உதவிய செஞ்சுட்டு போகலாம் வந்திருக்கேன் ” என்றான் குறும்பாக, அவன் முகத்தில் புன்னகையுடன் தவழும் குறும்பையும் பார்க்க அதிசயமாக இருந்தது.

“தேங்கயூ சார் உங்க உதவிக்கு” என்றாள் அவளும் குறும்புடன்.

“யூ மோஸ்ட் வெல்கம்” என்றான் தலையை சாய்த்து. அவள் அறையை விட்டுச்செல்ல, அவன் செல்வதையே பார்த்திருந்தவன், தாயின் புறம் திரும்பினான்.

கமழியோ யாழினியின் அறைக்குச் சென்றவள் பூட்டிருந்த கதவை  தட்ட பதறியவள், “யா… யாரது…?” என்றாள் பயத்தில் . “நான் தான் கமழி கதவை திற”என்றாள்.

வேகமாக வந்து திறந்தவளின் முகத்தை பார்க்க பயத்தில் வெளுத்து இருந்தது. “ஏன் இன்னும் தூங்காம இருக்க, உன் ரூம் லைட் எரிஞ்சத பார்த்துட்டு தான் கதவை தட்டினேன். ஏன் இன்னும் முழிச்சிட்டு இருக்க? படிச்சிட்டு இருந்தீயா?” என்று அமளியில் புத்தகத்தை தேட, புத்தகம் இல்லை.

“ஆமா, நான் படிச்சிட்டு தான் இருந்தேன் நீங்க வந்ததும் மூடி உள்ள வச்சிட்டேன்…” என்று சமாளித்தாள். அவளும் அதை நம்பியது போல தலையாட்டினாள்.

“சரி ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத, வா வந்து படு “என்றாள் அவளும் படுத்துக் கொள்ள அருகே படுத்தவள், தலையைக் கோதினாள். யாழினிக்கு அது பிடித்திருக்க, இமைகளை மூடாது அந்தச் சுகத்தை கண்ணீரோடு அனுபவித்தாள்.

“யாழு நான் ஒன்னு கேட்பேன் பதில் சொல்லுவீயா?” அவளருகே குனிந்து கேட்டாள்.” இல்ல உங்க டியூஷன் சார் எப்படி ஸ்ட்ரீக்ட்டா ?” எனக் கேட்டவும், “இல்லை ” என்று அவளிடமிருந்து பதில் வந்தது.

“நிறைய ஹோம்வொர்க் கொடுப்பாரா?”
எனவும் மீண்டும் அதே பதிலை சொன்னாள்..” அப்றம் ஏன் நீ அவரை பார்த்து பயப்படற?” எனக் கேட்டதும் சட்டென அவள் முகம் பார்த்தாள்.

“எனக்கு நீ பயப்படுற நல்லாவே தெரியுது யாழினி. ஆனா ஏன் தான் தெரியல. அவர் உன்னை டீஸ் பண்றாரா? உன்கிட்ட தப்பா நடந்துகிறாரா? பேட் டச் எதுவும் பண்றாரா சொல்லு.. பயப்படாம சொல்லு, நான் இருக்கேன் உன் கூட” என்றவளிடம் சொல்ல தோணினாலும் அடுத்து வரும் விழைவுகளை எண்ணி பயந்தவள், “அதெல்லாம் எதுவும் இல்ல அவர் நல்லவர் தான். என்னை எதுவும் செய்ய மாட்டார். எனக்கு கொஞ்சம் அவரை பார்த்தால் பயம் அவளோ தான்” என்று திரும்பிக் கொள்ள அவள் பொய் சொல்வதும் அப்பட்டமாக தெரிந்தாலும் எதுவும் சொல்லவில்லை தட்டிக் கொடுத்து அவளை தூங்க வைத்தாள்.  அவள் உடனிருக்கும் தைரியத்தில் நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் வழக்கம் போலவே விடிந்தது அவரவர் வேலையையும் பார்க்க, கமழி மட்டும் அந்த அஜய்யை பற்றியே யோசித்து கொண்டிருந்தாள். மாலையும் வர, இதற்கு ஒரு முடிவு கட்டியவளாய்.
அஜய் வந்ததும் அவன் சாவி கொடுத்த பொம்மை போல  பின்னால் சென்றாள் யாழினி. அதை பார்த்துக் கொண்டிருந்தவள் பொன்னியக்காவுடன் மேலே  சென்றாள்.

அவன் கதவை சாத்து முன் இருவர் உள்ளே நுழைந்தனர். ” என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு வந்திருக்கீங்க ரெண்டு பேரும்?”

“யாழினிக்கு கொஞ்சம் ஃபீவரிஸ் இருக்கு ஸோ இவங்க துணைக்கு இருக்கட்டும். அவளுக்கு எதுனாலும் இவங்க பார்த்துப்பாங்க. உங்களை இவங்க எந்த  விதத்துளையும் தொந்தரவு   செய்ய மாட்டாங்க நீங்க அவளுக்கு தாராளமா சொல்லிக் கொடுங்க” என்றவளை அவனால்  முறைக்க மட்டுமே  முடிந்தது.

பொன்னியக்கா  ஓரமாக அமர்ந்து கொண்டார். கமழி பொன்னியைப் பார்த்து கண்ணடித்து விட்டுச் சென்றாள்.  இங்கு நடக்கும் எதுவும் அவளுக்கு புரியாமல் போனாலும் அஜய்யை எண்ணிப் பயந்தாள். அதுபோலவே அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

பொன்னியின் முன்  எதுவும் பேச முடியாமல் போக,  பேப்பரில்” நீ எதுவும் சொன்னீயா ?” என எழுதி அவள் மூன்பு வைக்க, அவளோ நடுங்கி கொண்டே “இல்லை” என்றாள்.
ஒரு மணிநேரம் கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை.. “கிளாஸ் ஓவர் ”  ஒரு மணி நேரத்திலே சொல்லிக் கொண்டு சென்று விட்டான்.

இதனால் விஷ்வா, பொன்னி,  கமழிக்கு அஜய் மேல் சந்தேகம் வந்தது.அடுத்த வந்த மூணு நாட்கள் பொன்னி வந்து ஓரமாக அமர்ந்துக் கொள்ள யாழினியிடம் அவனால் சில்மிஷத்தை காட்ட முடியவில்லை.. யாழினி பயமின்றி நிம்மதியாக உறங்கினாள். பள்ளியிலும் அவனால் யாழினிடம் நெருங்க முடியவில்லை. இதற்கு முடிவு கட்ட, வளவனிடம் பேச எண்ணினான்.

அன்று காலையில் தான்  கோர்ட்டில் ஹியரிங் இருக்க, தாயிடம் சந்தோசமாக சொல்லிவிட்டு கோர்ட்டிற்குச் சென்றான்.
ஆனால் அங்கோ அவன் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை. செல்லக்கண்ணு அந்த டிரைவரின் குடும்பத்தை மிரட்டி பணம் கொடுத்து தனக்கு சாதகமாக சாட்சிச் சொல்ல சொல்லிருந்தார்.

அந்த டிரைவரும் செல்லக்கண்ணுக்கு சாதகமாக சாட்சி சொல்ல, செல்லக்கண்ணுவை குற்றவாளி இல்லை என்று அவர் மேல் இருந்த கேஸை தள்ளுபடி செய்தார் நீதிபதி

வளவனோ கோபம் கொண்டு அங்கிருந்து வெளியே வந்துவிட்டான் கணேசனும் ஒன்று புரியாமல் வெளியே வந்தார்.” என்ன அங்கிள் இது? அந்த டிரைவர் நமக்கு சாதகமா சாட்சி சொல்வான் சொன்னீங்க.. இப்படி மாத்தி அந்த செல்லக்கண்ணுக்கு சாதகமா சொல்லிருக்கான் என்ன நடக்குது அங்கிள் ஏன் அவன் மாத்தி சொன்னான் ?” எனக் கோர்ட் என்று பாராமல் காட்டு கத்தலாக  கத்தினான். அவனது கோபத்தை அங்கே கட்டுப்படுத்த முடியவில்லை அவரால்.

அங்கே வந்த செல்லக்கண்ணோ அவனருகே வந்தவர். ” என்ன தம்பி, ட்ரைவர் எப்படி மாத்தி  எனக்கு சாதகமா சாட்சி சொன்னார் புரியலையா? கொஞ்சம் கொலை மிரட்டல் கொஞ்சம் பணத்தை காமிச்சேன். இதோ மாத்தி சொல்லிட்டான்ல என்னப்பா பண்றது உயிர் முக்கியம் இல்லியா? என் மேல இருந்த கேஸ்ஸையும் தள்ளுபடி பண்ணிட்டாங்க… இனி எப்படிப்பா உன் அப்பன் சாவுக்கு நியாயம் கிடைக்கும். படுத்த படுக்கையா கிடக்கிறாளே அவ வந்து சொன்னாத்தான் உன் அப்பன கொன்னது நான் தெரியும். அதுவரைக்கும் அது ஒரு விபத்து தான் தம்பி. அவ எப்போ எந்திருக்கிறது, நீ எப்போ இந்தக் கேஸ புதுப்பிக்கிறது. கோர்ட்டில் வந்து அவ சாட்சி சொல்றது இந்த ஜென்மத்துல அது நடக்காது . போ தம்பி அப்பன் சாவுக்கு நியாயம் கிடைக்கணும் எதாவது பண்ணிட்டு இருக்காம போய் வேற வேலை இருந்தால் பாரு” என்றவன்” அப்றம் வளரு புள்ள செத்து போச்சுன்னா சொல்லி அனுப்பு வந்து சந்தோசமா மாலை போடுறேன்” என்றதும் வளவனின் கோபம் கட்டுக்கடங்காமல் போக செல்லக்கண்ணுவின் கழுத்தை பிடித்து நெறிக்க ஆராம்பித்தான். அங்கிருக்கும் மக்கள் அவர்களை பிரித்து விடுவதற்குள் ஒரு வழியாகினார்.
வளவனை கஷ்டப்பட்டு பிரித்துஅழைத்து கொண்டு போனார் கணேசன்.
அன்று முழுவதும் கொஞ்சம் கூட  குறையாத கோபத்துடன் இருந்தான். அவன் முன் வந்த அனைவரையும் கண்டபடி திட்டி தீர்த்தான்.
அதே கோபத்துடன் வீட்டினுள்  நுழைந்தவன் முன் நின்றான் அஜய்.

“சார், இனி என்னால டியூஷன் எடுக்க முடியாது… என் மேல் நம்பிக்கை இல்லாமல் என்னை கிளாஸ் எடுக்க விடாம ரூம்குள்ள உட்கார்ந்துட்டு டிஸ்டர்ப் பண்றாங்க. யாழினியோட கான்செண்ட்ரேஷனும் மிஸ்ஸாகுது. ஏன் எங்களை டிஸ்டர்ப் பண்றீங்க கேட்டால், உங்க மேல நம்பிக்கை இல்லை அதான் யாழினிக்கு துணையா இருக்கோம் சொல்றாங்க… வாட் நான்சென்ஸ் திஸ் சார். நம்பிக்கை இல்லைன்னா எதுக்கு என்னை டியூஷன் எடுக்க கூப்பிடீங்க.. திஸ் இஸ் நாட் பேர்” என்று அழகாக தன் நடிப்பை போட்டான்.

“பொன்னியக்கா” வீடே அதிர கத்தினான். விஷ்வா, பொன்னியக்கா , கமழி என மூவரும் அங்கு வந்தனர்.

“பொன்னியக்கா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? அஜய் மேல் உங்களுக்கு என்ன டவுட்? இத்தனை நாளா இல்லாத சந்தேகம் இப்ப ஏன் வந்துச்சி? ஏன் அவர தொந்தரவு  செய்றீங்க “என்றவன் கத்த, பதில் சொல்ல முடியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.

” எனக்கு தான் அவர் மேல சந்தேகம். நான் தான் பொன்னியக்காவ கூட இருக்கச் சொன்னேன்” என்றாள் திமிராக, ஆனால் அவளது திமிரை கண்டு அவனுக்கு மேலும் எரிச்சலும் கோபமும் வந்தது.

“உனக்கு ஏன் அவர் மேல் சந்தேகம் வருது?”

“எனக்கு அவர் கிளாஸ் எடுக்கற முறையே சரினு படலை . கதவை மூடிட்டு ரெண்டு மணி நேரம் கிளாஸ் எடுக்கார். ஒரு வயசு பொண்ண, அவர் கூட அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல… அவ முகமே சரியில்ல அடிக்கடி பயப்படுறா அதுவும் இவரை பார்த்து பயப்படுறா ஏன்னு கேட்ட கூட சொல்ல மாட்றா ! அதான் நான் பொன்னியக்காவ துணைக்கு இருக்க சொன்னேன்” என்று விளக்கம் சொன்னாள்.

“பாருங்க சார் நான் வர்றது  அவங்களுக்கு பிடிக்கல. அதுக்கு என்ன என்ன காரணம் சொல்றாங்க. யாழினி நல்லாத்தான் இருக்காள். ஆனா அவ பேர சொல்லி என் மேல பழி போடுறாங்க. நீங்க வேணா யாழினிக்கிட்ட கேளுங்க நான் அவகிட்ட தப்பா நடந்து கிட்டேனானு  அப்படி நான் நடந்துகிட்டேனா உன்கிட்ட வந்து சொல்லிருப்பால சார். நான் என் வேலைய மட்டும் தான் பார்த்துட்டு போறேன்.இவங்க தான் என் மேல் பழிய தூக்கிப் போடுறாங்க. நீங்க வேணா யாழினிய கூப்பிடு விசாரிங்க… யாழினி நீ சொல்லு நான் உன்கிட்ட தப்பா நடந்துகிறேனா? சொல்லுமா அவங்கிட்ட”என்று நல்லவனை போல நடித்தான். வளவனின் பார்வை யாழினிடம் சென்றதும்.

“சொல்லு யாழினி, உள்ள அவன் என்ன பண்றானு சொல்லு”  என கமழியும் சொல்ல, அஜய்யின் மேலுள்ள பயத்தில் உண்மையை மறைத்தாள்.” சார், ரொம்ப நல்லவர். கிளாஸ் மட்டும் எடுப்பார். அவரை என்னை தப்பா பார்க்கல  என் கிட்ட தப்பா நடந்துக்கல. அவர் ரொம்ப நல்லவர்” என்று கமழியைக் கண்டு கூற, “ஏன் யாழினி பொய் சொல்ற, நீ அவனை பார்த்ததும்  பயப்படுற,  நடுங்கற எனக்கும் தெரியும் ஏன் உண்மைய மறைக்கிற,” என்றதும் வளவனுக்கு  கோபம் வந்தது.

“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் . உனக்கு என்ன பிரச்சனை கமழி? என் இப்படி ஓவர் ஆக்ட் பண்ற? உன் வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க தெரியாத உனக்கு, அடுத்தவங்க விஷயத்தில ஏன்  முக்க நுழைக்கணும்  நினைக்கற? என் தங்கச்சிய பார்த்துக்க எனக்கு தெரியும், நீ அவளுக்கு நல்லது பண்றேன். அவ லைப் ஸ்பாயில் பண்ணிடாத, வந்த வேலை மட்டும்  பார். ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத. ஸ்டே  இன் யூர் லிமிட். அதை எப்பையும் கிராஸ் பண்ணணும் நினைக்காத. திஸ் இஸ் யூர் லாஸ்ட் வார்னிங். யாழனி விஷயத்துல நீ தலையிட்ட நான் மனுசனா இருக்க மாட்டேன். மைண்ட் இட்” என்றவன் விறுவிறுவென அறையை நோக்கிச் செல்ல அஜய்யின் வெற்றிச் சிரிப்பும் வளவனின் பேச்சும் அவளைக் கூனிக் குறுகி நிற்க வைத்தது . வேகமாக அறைக்குள் அவளும் சென்று விட்டாள். யாழினி  தான் உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லாவும் முடியாமல் தீயில் இட்ட புழுவாக துடித்தாள்.