மஞ்சள் மலரே 6

மருத்துவர் மூர்த்தியைப் பார்த்து, “நீங்க போலி டாக்டரா? இவரை ஏமாத்தி காசு பாக்கிறீங்களா???” எனக் கேட்டு  இருவரையும் அதிர வைத்தாள் கமழி.

தன் அத்தையின் நிலையைப் பார்த்ததும் அவளது நெஞ்சம் பதறி போனது. அவர் வளர்ந்த விதம் அறியாதவளா? அவரது தந்தையும் தமயனும் காட்டிய கொள்ளை அன்பில், வளர்ந்தவருக்கு, இன்று அவ்வன்பை கிள்ளிக் கொடுக்க கூட ஆள் இல்லை. சுதந்திர பறவையென சிறகின்றி பறந்தவர், இன்று  சிறைப் பறவையாய் நான்கு சுவருக்குள் மெலிந்து கிடப்பதைக் கண்டதும் ஏனோ கோபமும் ஆத்திரமும் அவளுக்குள் பொங்கி வந்தன.

வியர்வை வழிய சம்பதிக்கிறவன் கூட தன் பிள்ளைகள் பசியாலும், பாசத்தாலும் வாடக்கூடாது என்று  எண்ணுவான். ஆனால் இவ்வளவு பணம் இருந்ததும் உடனிருந்து பார்த்துக் கொள்ள, அன்பு,  பாசம்  காட்ட ஆள் இல்லாததை எண்ணி உள்ளுக்குள் கலங்கிப் போனாள். தன் ஆத்திரங்களை வளவன் மீது காட்டாது மருத்துவரை அதற்கு பலியாக்கினாள். அவரிடம் ‘நீங்க போலி டாக்டரா? ஏமாத்தி காசு பார்க்கிறீங்களா?’ எனக் கேட்டு வைத்து வளவனின் பி.பியையும் எகிற வைத்தாள்.

“வாட் தி ஹெல் ஆர் யூ டாக்கிங் மிஸ் கமழி?  போலி டாக்டர், ஏமாத்தி காசு பார்க்கிறார்னு சொல்ற, இவரை பத்தி உனக்கு என்ன தெரியும்? இவர் ஒரு  நியூரோசைகாடிரிஸ்ட், எத்தனை சிவியர் கோமா பேசண்ட்ஸ் க்யூர் பண்ணிருக்கார் தெரியுமா? அவரை போய்… எதோ  உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருக்காத, மைண்ட் யூர் பிசினஸ்.” என பொங்கியவனை அடக்கினார் மூர்த்தி.

“எனக்கு எதுவும் தெரியாது தான். இவர் பெரிய நீயுரோசைகாட்ரிஸ்ட்வே இருக்கட்டும். ஆனா ஏன் இன்னமும் அத்… அம்மாவை குணப்படுத்தல? அவங்கள இப்படி சிறைப் படுத்தி கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாத அறையில போட்டு வச்சிருக்கிறது தான்  ட்ரீட்மெண்ட்டா? இது தான் இவர் ட்ரீட்மெண்ட் கொடுக்கற லட்சணமா? அவருக்கு தெரியாத கோமா பேசண்ட்டை எப்படி கவனிக்கணும், ஏன் அந்த மாதிரி பார்த்துக்கல யாரும்? ஏதோ மன நல கைதி மாதிரி இருக்காங்க! எப்படி உங்களால உங்க அம்மாவை அப்படி வச்சிருக்க முடியுது? அவங்க குணமாகவே மாட்டாங்க, அப்படியே கிடக்கட்டும் நீங்க விட்டுடீங்களோ?” உணர்ச்சிப் போங்க கத்தியவளை இருவரும் ‘பே’ வென விழித்தனர்.

“என்ன பார்க்கிறீங்க, ரெண்டும் பெரும் அவங்களை குணப்படுத்த  என்ன முயற்சி எடுத்தீங்க? அவங்க ஏன் இப்படி  வெளிச்சமே இல்லாத அறையில் அடைச்சி வச்சிருக்கிங்க? ஏன் அவங்க கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் இல்ல என்ன காரணம் கண்டுபிடிச்சிங்களா?” உரிமையுள்ளவளை போல கேள்வி கேட்டு இருவரையும் கேள்வி கேட்டு கொன்றுவிட்டாள்.

‘இவளை பார்த்ததும் வெறும் சம்பளத்துக்காக வேலைக்கு வந்தது போல தெரியவில்லை,   சொந்த அன்னைக்காக துடிப்பது போல துடிக்கிறாளே! இவள் யாராக இருக்கும்?’ என உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவர், ‘சீக்கிரம் இவளைப் பற்றி  தெரிந்து கொள்ள வேண்டும்.’ என்று முடிவுக்கு வந்ததை புறம் தள்ளிவிட்டு அவளுக்கு பதில் சொல்லும் கடமையில் இறங்கினார்.

“என்னம்மா பண்ண? எங்களால் முடிந்தளவு ஹாஸ்பிட்டல்ல வச்சுதான் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம் வீட்ல வச்சு குடுக்க தான் செஞ்சோம். உங்க அம்மா கொஞ்சம் கூட மனசு வைக்கல. அவர் கூட இருந்து அன்பா, பொறுப்பா, அக்கறையா பார்த்துக்க  உன்னை போல ஆள் இல்ல, எங்களுக்கு கிடைக்கவும் இல்ல. கொடுத்த பணத்துக்கு பார்த்துக் கிட்டங்க  அவ்வளவு தான். உன்னை போல இன்வால்வ் மெண்டடோட் பார்த்துகிற கேர்டேக்கர் கம்மி தான்மா, இனி உன் கவனிப்புலையாவது தேறி வராங்களானு பார்ப்போம் மா!” என்றவர்  ஓர் அளவுக்கு பேசி அவளை குளிர வைத்தார்.

“எனக்கு உங்க நம்பர் வேணும் டாக்டர்!”

“எதுக்குமா?”

“அம்மாக்கு எதாவதுனாலும் உங்களை காண்டேக் பண்ண, சில டவுட்ஸ் கிளாரிஃப்பை  பண்ண  உங்க கிட்ட டிரெக்ட்டா கால்  பண்ணி பேச தான் கேட்டேன். நமக்குள்ள இன்டர்மிடியேட்டர் வச்சி, நான் அவங்க கிட்ட சொல்லி, அவங்க உங்க கிட்ட சொல்லி, அப்புறம் நீங்க அவங்களுக்கு பதில் சொல்லி அப்புறம் அவங்க  எங்கிட்ட சொல்லி உப்… எதுக்கு ஸோ உங்க நம்பர் கொடுத்தால் ரொம்ப நல்லது.” என்று நீண்ட விளக்கம் கொடுக்க அவரும் புன்னகையுடனே தன் அலைபேசி எண்ணைப் பகிர்ந்தார்.

“தேங்கஸ்  டாக்டர்! அண்ட் ஸாரி உங்களை போலி டாக்டர் சொன்னதுக்கு. அவங்க எனக்கு  தெரியாதவங்களா இருந்தாலும் நானும் மனுஷி தான, எனக்கு அவங்க இருந்த நிலயை பார்த்ததும் கொஞ்சம் கோபப்பட்டேன் ஸாரி அக்கேன்.” என்றாள்.

“பரவாயில்ல மா! வளர் எனக்கு பேசண்ட் மட்டும் இல்ல ஒரு சிஸ்டரும் கூட, எனக்கும் அவ பழைய படி பேசணும், அண்ணானு வாய் நிறைய கூப்பிடனும் ஆசை இருக்குமா, டாக்டரா நானும் முயற்சி பண்றேன். கண்டிப்பா அவளும் கோமா ல இருந்து வெளிய வருவா எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று கமழியை வைத்து சொல்ல அவளும் அதை ஆமோத்தித்து விட்டு தன் அறைக்குச் சென்றாள்.

இருவரும் பேச, அங்கிருக்கும் ஒரு ஜீவனை மறந்தனர். அவள் சென்றதும் மூர்த்தி வளவன் பக்கம்  திரும்ப, அவன் சுயநினைவை இழந்து நின்றான்.

“வளவா  என்னாச்சு?” அவனை உலுக்கினார் மூர்த்தி. நினைவிற்கு வந்தவன், “ஏன் அங்கிள் நான் அம்மாவை சரியா பார்த்துகளையா? யாரோ ஒருத்தி குற்றம் சொல்ற அளவுக்கு நான் அம்மா பார்த்துகிட்டேன்ல!” என தலையை பற்றி அமர்ந்துவிட்டான். சின்னபிள்ளையை  போல கண்கள் கலங்கி இருந்தவனை தேற்ற முயன்றார் மூர்த்தி 

“ஒரு ஆளா, வீட்டையும் பிஸ்னஸ் பார்க்கிறது கஷ்டம் தான்  வளவா! ரெண்டையும் ஒண்ணா மெயிண்ட் பண்ற அளவுக்கு உனக்கு அனுபவம் இல்ல. கண்டிப்பா உனக்கு ஒரு சப்போர்ட் வேணும். உன்னை நம்பி உன் அம்மா தங்கச்சி மட்டும் இல்லையே பல தொழிலாளர்களும் இருக்காங்க. அவங்களையும் நீ பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருக்கு. எதையும் நினைச்சி குழம்பிக்காம, உன் வொர்க்க பாரு. அட் தி சேம் டைம் உன் அம்மா குணமாக கொஞ்சம் நேரம் அவங்களுக்கு செலவிடு, எனக்கு என்னமோ கமழி உனக்கு சப்போரட்டா இருப்பானு தோணுது. அவளை மிஸ் பண்ணிடாத!” குறிப்புடன் தான் கூறி விட்டுப் போனார். அவனும் அவளை பற்றி அமர்ந்த  வாக்கிலே யோசித்த்தான். அவளோ அவள் அத்தையுடன் அறிமுகம் படலம் நடத்திக் கொண்டிருந்தாள்.

வளரின் கையைப் பிடித்து தன் இரு கைக்குள் வைத்தவள், அவருடன் பேச ஆரம்பித்தாள். “நான் தான் கமழி. உங்க மருமக. அதாவது உங்க அண்ணன் யாழ்மாறனோட பொண்ணு. எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது”நிறுத்தி விட்டு அவர் முகம் பார்க்க, அவர் முகத்தில் எந்த அசைவும் இல்லை ஆனாலும் பேசினாள்.” எப்ப பாரு  எங்க அப்பா உங்களோட தான் என்னை ஒப்பிட்டு பேசுவார். நான் உங்களை போல இருக்கேனா, உங்கள போல சிரிக்கிறேனா, உங்களுக்கு பிடிச்சது எல்லாம் எனக்கும் பிடிக்குமாம், அப்படி உங்க வளர அத்தை போல பண்றனுசொல்றத கேட்டு கேட்டு புளிச்சி எனக்கு போச்சு. முடியல உங்க புராணம் தான் எப்பையும். என் அப்பாக்கு முதல்ல நீங்க அப்புறம் தான் நான். எங்க அப்பாவோட பாசம் முதல் உங்களுக்கு தானாம், அதான் உங்களை எனக்கு பிடிக்கல. ஆனாலும் உங்களை இந்த நிலமையில் பார்க்க  என்னால முடியல அத்தை. அத்தையா உங்களை வம்பிழுக்க, உங்க பையன கட்டிக் கொடுங்க முறையா கேட்டு விளையாட,  சண்டை போட  சமாதானமாகி  சேர்ந்து ஊர் சுத்த’னு, நாம சேர்ந்து பார்க்காத நாட்கள் எல்லாம் திரும்ப வராது தான். இனி வர நாட்களாவது உங்களை மீட்டு அத்தைனு உங்க கைபிடிச்சி ஊர் ஊரா சுத்துனும்.  சுத்துவேன். இது இந்த கமழியோட சபதம் கண்டிப்ப இதுல ஜெயிப்பேன்.” அவருடன் சபதமேற்றாள்.

அப்போது அவளது அலைபேசி அலற, மாறன் தான் அழைத்திருந்தார். “அப்பா சொல்லுங்க…” என்றாள்.

“என்னம்மா வேலை கிடைச்சதா? அந்தம்மா அங்க இருந்ததா? உன்னை அடையாளம் கண்டு உண்மைய சொல்லிடுச்சா, அந்த தம்பி எதுவும் உன்னை சொல்லிடுச்சா? இப்போ நீ எங்க இருக்க?” படப்படவென மனதிலுள்ள பயத்தை கொட்டிவிட்டார் மாறன்.

“அப்பா! அப்பா!!! பொறுங்க பொறுங்க. ஏன் நெகடிவ்வா யோசிக்கிறீங்க? நம்ம பொண்ணுக்கு வேலை கிடைச்சிடும், நம்ம பொண்ணு வளரை பத்திரமா பக்கத்துல இருந்து பார்த்துப்பானு ஏன் பாசிடிவ் யோசிக்க கூடாது நீங்க.” என்று புதிர் போட அவருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. “என்னம்மா சொல்ற நீ? அப்பாக்கு ஒன்னும் புரியலமா.” 

“அப்பா ! இப்போ நான் உங்க வளர பக்கத்துல தான் இருக்கேன். உங்க தங்கச்சிய பார்த்துக்கற வேலை எனக்கே கிடைச்சிருச்சி. நான் தான்  உங்க தங்கச்சிய பார்த்துக்க போற டேக்கேர்.” என்று அனைத்தையும் அவள் உற்சாகமாக கூற, அவரோ அங்கே ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“கமழி மா, அப்பாக்கு வளரோட முகத்த காட்டு மா, அவளை  பார்த்து வருஷ கணக்கா ஆகிடுச்சி ப்ளீஸ் மா!” என அவர் கெஞ்ச, வளரை அவர் இந்த நிலையில் பார்க்க வேண்டாம் எண்ணியவள், 

“அப்பா, இப்போ நீங்க அத்தைய பார்க்க வேண்டாம்பா, பார்த்தால் உடைஞ்சு போயிடுவீங்க. கொஞ்ச நாள் கழிச்சி பாருங்கப்பா ப்ளீஸ்!” என்றிட, மகளின் எண்ணம் புரிந்தவர் போல் ‘சரிமா’ என்றார். மேலும் குடும்பத்துடன் பேசி விட்டு வைக்க மதியமாக பொன்னி வந்து அவளை சாப்பிட அழைத்தார். 

அவளும் அவருடன் பேசிய படியே உணவு மேசையில் வந்தமர்ந்தாள். வேறொரு ஆள் வந்து பரிமாற, உணவைப் பிசைந்து வாயில் வைத்தவளுக்கு சாப்பாடு விலங்க வில்லை. ஊரில் கைப்பக்குவமாக மசாலா பொருட்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல் அதை உணவுடன் சேர்த்து ருசித்து சாப்பிட்டவளுக்கு. இந்தப் பகட்டுச் சாப்பாடு வாய்க்கு ஒப்பவில்லை  துப்பி விட்டாள்.

“என்ன பாப்பா ஆச்சி?” பொன்னி பதற, “என்ன சாப்பாடுக்கா இது? ச்சி ருசியும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. மண்ணு கூடா ருசியா இருக்கும் போல, யாருக்கா சமைச்சது?” என எண்ணெய்யில் இட்ட கடுகாய் பொறிந்தாள்.

“தம்பி தான் சமைச்சது.” 

“யாரு உங்க முதலாளியா?”

“இல்ல பாப்பா! விஷ்வா தம்பி. அது தான் இங்க ஒரு வருஷமா சமைக்கிது. இந்த சாப்பாடத்தான் ஒரு வருஷமா நாங்க சாப்பிடுறோம்.” என்றதும் அதிர்ந்தவள், “என்ன இந்த சாப்பாட்டையா ஒருவருஷமா சாப்பிடுறீங்க?  உங்க முதலாளி ஒன்னும் சொல்ல மாட்டாரா?”

“அவருக்கு ஏதுமா சாப்பிட நேரம் இருக்கு,  ஆபீஸே கதினு இருக்கற மனுஷனுக்கு சாப்பாட பத்தி அக்கறையே  இல்லம்மா! பாப்பாவும் ஏனோ  தானோனு தான் சாப்பிடுது. அம்மா இருக்கிறவரைக்கும் நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆகிடுச்சிமா.”  கண்கள் கலங்க  வருத்ததுடன் சொன்னார்.

“ஏன்க்கா நீங்க சமைக்கலாம்ல க்கா!”

“இல்லமா இங்க எல்லாருக்கும் அவங்க  அவங்க கொடுத்த வேலையை தான் பார்க்கணும். எனக்கு பாப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கற வேலை தான் மா ! நான் சமைக்க கூடாது.” என்றார்.

“இது வேறயா?” என  சலித்துக் கொண்டவள் எழுந்து சமயலறையை நோக்கி நடந்தாள். 

“நான் சமச்சா வாயில் எல்லார் வாயிலும் எச்சி தான் ஊறும்.” என்று தன் முன்னால் போனை வைத்து கொண்டு இன்ஸ்டா ரீல் செய்தவனின் பின்னால் நின்று, “எதுக்கு எல்லாரும் காரி துப்பாவா?” மீதி ரீல்சை அவள் செய்ய, அலைபேசி திரையில் அவளை கண்டு சட்டென திரும்பினான்.

“யார் நீ இங்க என்ன பண்ற? எதுக்கு இங்க வந்த?” படபடவென கேள்விகளை அடக்கினான் அவன்.

“விஷ்வா தம்பி ! அம்மாவ பார்த்துக்க வந்த கேர்டேக்கர்.” 

“ஓ … கேர்டேக்கரா ! ஆமா நீ இங்க ஏன் வந்த?”

“ம்ம்ம் நீ சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு உன்னை பக்கம் பக்கமா புகழ வந்திருக்கிறேன்.” என்றாள் பல்லை அறைத்தபடி, “ஓ..  ஐ சீ… எனக்கு முகஸ்துதி எல்லாம் பிடிக்காது இருந்தாலும் வந்துட்ட புகழ்ந்துட்டு போ.” என்றவன் அவளை மேலும்  கோபம் ஏத்த,  இருக்கற அத்தனை ஆங்கில கெட்ட வார்த்தையும் கொஞ்சம் தமிழ் கெட்ட வார்த்தையையும் சொல்லி திட்ட அவன் காதில் வடிந்த ரத்தம் வெளியே கசிந்திடாமல் இருக்க காதை அடைத்து கொண்டான்.

“இனிமே சமைக்கிறேன்னு அடுப்புல கைய வையி, உன்னை வெட்டி துண்டு துண்டா போட்டு ஊறுகா போடுறேன்.”

“நான் சமைக்க கூடாதுனா நைட்டுக்கு யார் சமைக்கிறது? சமைக்கலேன்னா பாஸ் திட்டுவார்.” பாவம் போல சொன்னவனை வெறித்தவள், “நான் வந்து சமைக்கிறேன். நீ எனக்கு அசிஸ்டெண்ட்ட இரு!” என்று கட்டளையிட்டு செல்ல, நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “எக்கா இந்த கிழிக்கறா எந்த ஊர் காரியா இருப்பா?” பொன்னியிடம் விசாரிக்க, “தெரியலப்பா! ஆனா என் மனசுல பட்டதெல்லாம் பேசிட்டு போயிருச்சு பா.” என்று பொன்னியும் சென்றுவிட, “எக்கா யூ டூ? ஆத்தி அப்பா நம்ம சமையல சாப்பிடற எல்லார் நம்ம மேல கொலவெறியா இருப்பானுங்களோ! இன்னும் பயிற்சி வேண்டுமோ விஷ்வா.”  தனக்கு தானே பேசிக் கொண்டான்.

மணித்துளிகள் கரைய, இரவும் வந்து  அவள் தான் சப்பாத்தியும் உருளைகிழங்கு குருமாவும் வைத்தாள் விஷ்வாவிற்கு கத்து கொடுத்த படி. தனிகாட்டு ராஜா இருந்தவன் அவளுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருந்தான்.

யாழினியும், வளவனும் சாப்பிட வந்தார்கள், அப்போது தான் கமழியும் யாழினியை பார்த்தாள். சின்ன பெண் தான் சமீபத்தில் தான் பருவம் எய்தி இருந்தால் வளவனுக்கு அடுத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு பின் பிறந்தவள். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது வந்தமர்ந்தவள், பரிமாற பட்ட உணவை சாப்பிட  ஆரம்பித்தாள். 

வளவனுக்கு சுவை வேறுபட்டு இருக்க, பரிமாறியவரிடம், “யார் சமைச்சது?” என்று வினவினான்.

அவரோ பயந்து கொண்டு நிற்க, “நான் தான் சமைத்தேன்.” என்று முன் வந்தாள் கமழி “கண்டிஷன் எல்லாம் தெரியும் தானே மிஸ் கமழி? எதுக்கு அதை எல்லாம் மீறிட்டு இருக்கீங்க, உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.” எனக் கடுகடுத்த படி சொன்னவனை வெறித்தவள்

“ஸாரி எனக்கு ஒன்னும் உங்க போல நாக்கு செத்து போய் கிடக்கல, நான் காரஞ்சாரமா சாப்பிட்டு வளர்ந்தவ, இந்த உப்பு சப்பு இல்லாத சாப்பாட்ட என்னால சாப்பிட முடியாது.  எனக்கு நானே சமைச்சி சாப்பிட்டுகிறேன். உங்களுக்கு வேணும்னா  சொல்லுங்க உங்களுக்கும் சேர்த்து சமைக்கிறேன். அதுக்கு நீங்க சேலரி எல்லாம் கொடுக்க வேணாம்.” என்றவளின் இந்த அதிரடி முடிவு அவனுக்கு சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்க, அதை புறம் தள்ள வைத்தது யாழினியின் குரல்”அண்ணா! சாப்பாடு நல்லா இருக்கு. அம்மா செஞ்சு கொடுக்கறது போல இருக்கு. ப்ளீஸ் அவங்களே சமைக்கட்டும்.” என்று மனம் விட்டு பேசிய தங்கையை கண்டு ஆச்சர்யமாக பார்த்தான்.