பூ பூக்கும் ஓசை-5

பூ பூக்கும் ஓசை-5

பதினொன்று மணிக்கு சூர்யா புது பிராஜக்ட் பற்றியும் அதன் டீம் எதுவென்றும் அதில் யார் யார் கூட்டாக வேலை செய்ய போகின்றனர் என்ற தனி பெயர் பதிவையும் எடுத்து மீட்டிங்கை ஆரம்பித்தான்.

அங்கே பூர்ணா வந்து சிவனேனென அமர்ந்திருந்தாள். சத்யதேவோ ‘ஒரு பொண்ணு அடிச்சிட்டாளே.. அதுவும் இப்ப அவளுக்கு கீழே வேலைப் பார்க்கணுமா?’ என்று அடிக்கடி கோபமாய் பார்த்து பற்கடிக்கும் தோற்றம் கண்டு, அவளோ ‘இவனை மாதிரி கல்யாணம் பண்ணி வைக்க ஒருத்தன் சப்போர்ப் பண்ணினா எல்லாரும் பெத்தவங்களை மறந்துட்டு ஓடிப்போக தைரியம் வர தான் செய்யும்.’ என்று முனங்கினாள்.

அவள் தன்னை திட்டி தீர்க்கின்றாளென அறியாத குழந்தையல்ல சத்யதேவ். அவனும் அவளை தான் மனதில் வறுத்துக் கொண்டிருக்கின்றான்.

சூர்யா வந்து ஆங்கிலத்தில் பணியை பற்றியும் யார் யார் எந்த பிரிவு என்றும் பகுத்து பெயரை வாசித்து முடித்து ஓகே காய்ஸ் இனி உங்க ஓர்க்கை முடிங்க. அப்பறம் வீக்லி சாட்டர்டே டீம் லஞ்ச் ஆபிஸே ஸ்பான்சர் பண்ணிடறாங்க. இந்த ஆறுமாதம் பிராஜக்ட் டைமுக்கு முடிச்சிட்டா, நாமெல்லாம் ஒரு ஆபிஸ் ட்ரிப் போறோம்.” என்றதும் மற்றவங்கள் கைதட்டி ஆராவரிக்க, சத்யதேவ் பூர்ணா இருவரும் மாறி மாறி ‘இவன்(ள்) கூடயெல்லாம் குப்பை கொட்டணுமா’ என்ற எண்ணத்திலே சுழன்றனர்.

மீட்டிங் களைந்து மதியம் சாப்பிடும் நேரம் வரவும், சூர்யா அவளை சாப்பிட அழைக்க, “ப்ளிஸ் என்னை ப்ரீயா விடு. நான் பெர்ஸனலா கொஞ்சம் டவுனாகியிருக்கேன். இந்த நேரம் என்னோட காலேஜ் டேஸ் பற்றி பேசவோ பழகவோ நாட் இன்ட்ரஸ்ட். குயிக்கா பழைய பூர்ணாவா பேசறேன் பை” என்று தனதறைக்கு வந்தாள்.

  சூர்யாவுக்கு எதுவும் புரியாவிட்டாலும், தன்னை அவள் எதிர்பாராது இருக்க தன்னை கண்டு தவிக்கின்றாளென முறுவளித்து கொண்டான்.

அவளது கேபின் அறைக்கு வந்தும் சாப்பிட பிடிக்காமல் முழங்கையை மேஜைக்கு வைத்து உள்ளங்கையை பிணைத்து நெற்றிக்கு முட்டு வைத்து இமை மூடியிருந்தாள்.

சத்யதேவ் அழகான தோற்றத்திலும் வசீகரமான பேச்சிலும் தானாக தோழன்கள் தோழிகள் வந்து பேசினார்கள். அதிலும் இவனை போலவே புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களோட இயல்பாய் பொருந்தினான்.

சாப்பிட்டு அரட்டை அடித்து கொண்டே பூர்ணாவின் கண்ணாடி அறையை நோட்டமிட தவறவில்லை. உள்ளே பேசுவது கேட்காது. ஆனால் வீடியோ பதிவாக தெளிவாய் காட்டியது.

அவனுக்கு இதுவரை இருந்த கோபம் மாறி ‘அவ சாப்பிடலை’ என்றவொன்றே நெஞ்சில் குடைய துவங்கியது.

டிபன் பாக்ஸை அங்கு பணிப்புரியும் ஆயாம்மாவிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள்.

ஆயம்மாவோ ஏதோ கேட்க பூர்ணா தலையசைத்து மறுக்க, பின்னர் ஆயம்மாவை தடுத்து தானே பார்த்துக் கொள்வேனென செய்கையில் கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக கேண்டீன் செல்வதை அறிந்து கொண்டு வேகமாக டிபன் பாக்ஸை மூடி நீர் அருந்தி அவளிடம் பேச பின் தொடர்ந்தான்.

அவன் எதிர்பார்த்தது போல தனியாக அமர்ந்து இருந்தாள். அவளுக்கு முன்னே ஆரேஞ்சு பழச்சாறு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சத்யதேவிற்கு நிச்சயம் அவள் அதிலிருந்து குடிக்காமல் எழ போகின்றாளென ஆருடம் போன்று தெரிந்தது.

அவன் எண்ணியதற்கு நூறுசதம் சரியென்பதை போல இவன் வந்ததும் எழுந்து செல்ல முயன்றாள்.

“உங்ககிட்ட பேசணும் அதுக்கு தான் பாதி சாப்பாட்டுல ஓடி வந்தேன்” என்றதும் சாவதனமாக திரும்பினாள்.

“என்னடா பேசணும்… அதான் நல்லா வக்கணையா பேசறிங்களே. ஒருத்தர் என்னடானா பொண்ணை மடக்கலையா கேட்கறான். இன்னொருத்தன் நீ அதுக்கு செட்டாக மாட்டனு பேசறான். திடீரென வந்த ஒருத்தி நாமளும் திருட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பேசறா. இதுல நீ முன்ன பின்ன தெரியாத என் கையை பிடிச்சி நிறுத்தற… இதெல்லாம் விட என் தங்கை ஓடிப்போய் கல்யாணம் பண்ணி  எங்கப்பா அம்மாவோட லைப்பை இருட்டுல தள்ளி விட்டுட்டா.

இதுக்கு மேல என்னடா பேசணும்” என்று கோபமானாள்.

“லுக்… அவ சந்திக்க வந்தா வாசல்லயே விரட்டினா அவளோட பிராப்ளத்தை எப்படி சொல்வா.

ஏதோ முன்னவே சொன்னா கேட்போம் ஏன் சொல்லலைனு பேச்சுக்கு சொல்லறிங்க. நிஜமா அவ லவ் பண்ணியதை சொன்னா அக்சப்ட் பண்ணிருப்பிங்களா?” என்று சூடாக அங்கே விற்கும் தக்காளி சாதம் போன்றே அவனும் சூடாக கேட்டான்.

“எங்கப்பா காதலுக்கு எதிரி இல்லை. மேபீ சொன்னா நல்ல நாள் பார்த்து படிப்பு முடிஞ்சி கட்டி வச்சியிருப்பார்.” என்றாள் பூர்ணா.

“வெறும் பேச்சுல தான் பண்ணியிருப்பிங்க. அவங்களை காரணம் சொல்லவே விடலை.” என்றான்.

“லுக் காரணம் சொல்லலை… நேரா கல்யாணம் பண்ண தானே வந்துட்டா. என்ன உன்னால நான் அங்க வருவேன்னு தெரியாது.

என்ன அலைபாயுதே ஸ்டையில்ல கல்யாணம் பண்ணி தனிதனியா குடும்பம் நடத்த பிளான் பண்ணினாங்களா. என்னால சொதப்பிடுச்சா.” என்று நக்கலாய் கேட்டாள்.

“சூழ்நிலை தெரியாம பேசாத” என்றவனின் குரலில், ஒருமை தெரிய பூர்ணா அதை கவனித்து விட்டாள்.

“என்னடா பேசாதனு சொல்லற. இங்க நான் உனக்கு கீழே வேலை செய்யலை. நீ தான் என் டீம்ல எனக்கு கீழ வேலை செய்யற. உன்னோட ஜாப் என்னோட கையில. இந்த வா போ என்றெல்லாம் உன் பிரெண்ட் லவ்வரிடமோ, உன் லவ்வரிடமோ பேசு, என்னிடம் வச்சிக்காதே.

பெரிய காரணம், சூழ்நிலைனு புடலங்கா காரணம்” என்று திமிராய் பேசினாள்.

“சரிங்க மே….டம். விக்கி சொல்லியிருக்க மாட்டான். ஏன் உன் தங்கையும் சொல்லியிருக்க மாட்டாங்கனு நல்லாவே தெரியுது. 

அதனால நானே சொல்லிடறேன். உன் தங்கை வயித்துல இரண்டு மாத சிசு வளருது. அதை முதல்ல தெரிஞ்சிக்கோ.” என்றவன் வெடியை கொளுத்தி போட்டான்.

      “இருக்காது… என் தங்கை அப்படி” என்றவள் வாயை மூடினாள்.

     போன மாதம் அவள் விஸ்பர் உபயோகிக்காமல் இருந்தது  பூர்ணாவுக்கு நினைவு வரவும் வாயை மூடினாள்.

     ‘எப்படி… எப்படி இது சாத்தியம்? தங்கை அப்படிப்பட்டவளா?’ என்று தொப்பென அமர்ந்தாள்.

       சத்யதேவ் எதிரில் அமர்ந்து ஸ்ட்ராவை கலக்கி அவள் முன் நகர்த்தினான்.

      “முதல்ல இதை குடி. பயப்படுற மாதிரி விக்கி தப்பானவன் இல்லை. அதனால தான் விக்கி உன் தங்கை கலைவாணியை மேரேஜ் பண்ணி தப்பை சரியாக்க முயற்சி பண்ணி சரியா மாத்திட்டான்.

     கொஞ்சம் யோசி… இதே அவன் விட்டுட்டு ஓடிட்டு, உன் தங்கை வயித்துல குழந்தை வளர்ந்து, ஊர்க்காரங்க என்ன பேசியிருப்பாங்க.
 
      எவனையோ நம்பி வயித்துல பிள்ளைய வாங்கிட்டா ஒழுக்கம் கெட்டவன்ற பெயரும், அப்பா யாருனு அங்கீகாரம் இல்லாமலும், கழுத்துல தாலி இல்லாமலும் நின்றிருப்பா.

    விக்னேஷ் அப்படியொன்னும் விடலை. பிரெண்ட்ஸ் கூட ஹெல்ப் கேட்டு கல்யாணம் பண்ணி வைங்கடானு தான் நின்றான்.

     உண்மையானா பிரெண்ட்ஸ் சேர்த்து வைப்பாங்க. நண்பனோட காதலை மதிப்பாங்க. நாங்களும் அதை தான் செய்தோம். ஏன் ஒரு கேங்க்ல இரண்டு பேர் லவ் பண்ணறவங்க இருக்க கூடாதா? பத்ரி வனிதா லவ்வர்ஸ் அவங்க பேச்சை எப்படி தப்புனு சொல்வ?

      நானும் சக்தியும் கமிட்டேட் இல்லை. அவனுக்கு தோன்றியதை பேசினான். ஏன் ஒரு பையன் சைட்டு அடிகுகிறது மடக்கிறதுனு ஜாலியா வேடிக்கையா பேசறது தப்பா?

    சொல்லு… எதையும் காது கொடுத்து கேட்காம ஓடறியேனு கையை பிடிச்சேன். என்னவோ இடுப்பை பிடிச்ச மாதிரி அடிக்கிற.

     ஒரு ஆம்பளையை நீ எப்படி கை நீட்டலாம். என்னை அடிக்க உனக்கென்னடி ரைட்ஸ் இருக்கு. அடிக்கிறதா இருந்தா உன் தங்கையை அடிச்சிருக்கணும். இல்லை உன் தங்கையை லவ் பண்ணினவனை அடிச்சிருக்கணும். அதை விட்டு கையை பிடிச்சி காரணத்தை விளக்க பார்த்த என்னை அடிச்சா என்ன நியாயம்.” என்று அதட்டினான்.

       தங்கை கர்ப்பவதி என்றதிலேயே சத்யதேவை பேசவிட்டு அதிர்ச்சியில் வேடிக்கை பார்த்தாள்.

     பேசவோ அவனிடம் சண்டையிடவோ சுத்தமாய் தெம்பிழந்து நின்றாள்.

     கண்ணில் மிளிர்ந்த கண்ணீரை கண்டு, சத்யதேவ் பதறினான்.

     “பூர்ணா… என்னங்க நீங்க இப்படி பொசுக்குனு அழுவறிங்க. உங்க தங்கை மேல எல்லாம் தப்பில்லைங்க. என் பிரெண்ட் விக்கி தான் காரணமா இருப்பான். ஏங்க அழாதிங்க. இது ஆபிஸ்ங்க.. நீங்க இங்க டீம் லீடர். நீங்க இப்படி அழுதா மத்தவங்க அதை கேலி பேசுவாங்க. அதுவும் இல்லாம நான் நியூ ஜாயின் வேற.” என்று விழித்தான்.

     சுற்றி முற்றி கண்களை சுழலவிட்டு கைக்குட்டையால் கண்ணீரை ஒற்றி எடுத்தாள்.

     “முதல்ல இந்த ஆரேஞ்சு ஜூஸை குடிங்க. அப்ப தான் நார்மலுக்கு வருவிங்க. நான் டி போட்டு பேசியதுக்கு அடிக்காம அமைதியா இருக்கிங்க பாருங்க” என்றதும் பத்ரகாளியாய் முறைத்தாள்.

     “முதல்ல குடிங்க” என்றதும் அதனை தட்டி விட்டு எழ எண்ணினாள். ஆனால் தூரத்தில் சூர்யா வரவும் அமைதியாக குடித்தாள். அவனிடம் வேறு பழச்சாறை தட்டி விட்டு காரணத்தை கூறி ஒவ்வொருத்தருக்காய் தங்கை பற்றி கூற மனமில்லை.

     “பரவாயில்லை நான் சொன்னதுக்கு மதிப்பு கொடுக்கறிங்க. இதை அன்னிக்கே கொஞ்சம் காது கொடுத்து கேட்டிருக்கலாம்” என்றதும் பூர்ணாவுக்கு கொலைவெறி உண்டானது.

     “ஏன்டா…. உன் அக்கா இல்லை தங்கை இப்படி கல்யாணம் செய்து நீ அதை ரிஜிஸ்டர் ஆபிஸ்ல நின்று பார்த்தா, உனக்கு அதிர்ச்சியாவோ கோவமாவோ இருக்காது. வாம்மா… உட்காரு என்ன திடீருனு கல்யாணம் பண்ணற. அதுவும் நம்ம அப்பா அம்மாவிடம் கூட சொல்லலை. என்னிடமும் சொல்லலைனு கொஞ்சி பேசி கூல்டிரிங்ஸ் வாங்கி தந்து விசாரிப்பியா.” என்றதும் சத்யதேவிற்கு அவளின் நக்கல் நன்றாகவே புரிந்தது.

     “நீ என்ன பண்ணியிருப்ப தெரியுமா? இதே மாதிரி உன் லைப்ல  உன் அக்கா தங்கைக்கு நடந்திருந்தா, அந்த பையனை தூக்கி போட்டு மிதிச்சிருப்ப. தங்கையா இருந்தா நாலறை அறைந்திருப்ப தானே” என்றதும் சத்யதேவ் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது.

    ஆனால் பூர்ணா விடவில்லை பேச்சை தோடர்ந்தாள். “அவளோட வந்த பிரெண்ட்ஸ் என்னிடம் பேசின மாதிரி உன்னிடம் பேசியிருந்தா, உன் பிரெண்ட் அவ பெயர் என்ன வனிதா… அவளை இவயெல்லாம் என்ன பொண்ணுனு முகம் சுழித்திருப்ப, பொண்ணா பிறந்துட்டு  இதெல்லாம் செய்ய முடியலை. ஆனா என்னோட கோபத்தை நான் சரியான நேரத்துல சரியா தான் காட்டுவேன்.

    உனக்காக ஜூஸ் குடிச்சேனா.. மேனேஜர் சூர்யா என்னையே பார்த்து என்னாச்சுனு செய்கையில கேட்டுட்டு நிற்கறான். அதனால எதுவும் காட்டிக்க கூடாதேனு அமைதியா குடிச்சிட்டு உனக்கு கோபத்தை குறைச்சி பதில் சொல்லறேன்.

     நீ யார் பெத்த பிள்ளையோ, தினமும் என்னிடம் அடிவாங்க நேந்து விட்டுட்டாங்களா என்னனு எதுக்கோ கேட்டுட்டு வா. இல்லை கூட வேலை பார்க்கற மற்ற கொலீக் முன்னாடி அவமானப்படற மாதிரி அடிச்சி வச்சிடுவேன்.” என்று கோபமாய் பேசி முடித்து எழுந்து சென்றாள்.

       ‘இவ பக்கம் இருந்து பார்க்கறப்ப எல்லாமே கரெக்டா இருக்கு.’ என்று தாடையில் கைவைத்து பழச்சாறை ஆர்டர் கொடுத்துவிட்டு போனை எடுத்தான்.

   விக்கிக்கு திருமணம் ஆனாப்பின் அடுத்த நாள் போனில் அழைத்தது. அதனால் இன்று கிடைக்கும் நேரத்தில் பேசலாமா? என்று எடுத்தான். 

   ஒரு மனமோ வேண்டாம் பூர்ணா என்னோட டீம் லீடர் என்றது மட்டும் சக்திக்கு தெரிஞ்சுது என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டுவான்.

     என்னடா மச்சி ஒரே ஆபிஸ் என்று உசுப்பேத்திடுவான். தேவையில்லாதது மனசுல ஊத்தி ஒரு கலக்கு கலக்கினாலும் கலக்குவான்’ என்ற போனை மீண்டும் பேண்ட் பாக்கெட்டில் வைத்து பணியை கவனிக்க சென்றான்.

-தொடரும்.
~பேரரளி