பூ பூக்கும் ஓசை-20(completed)

பூ பூக்கும் ஓசை-20

     சத்யதேவோ தயக்கமாய் “பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை போட்டோ இருக்கா..?” என்று நாராயணனிடம் கேட்டான்.

    “போட்டோ என்னிடம் தான் இருந்தது. ஆனா நேத்து கல்யாணத்துக்கு பேனர்ல கட் அவுட் வைக்க அந்த பிக்சர் தான் நல்லாயிருக்கும்னு வாங்கிட்டார். என்னிடம் வேற பிக்சர் இல்லை” என்று கூறவும் அந்நேரம் கலைவாணி விக்னேஷிற்கு கால் செய்தாள்.

    “போலிஷ் ஸ்டேஷன்ல இருக்கோம் மா. பூர்ணா பற்றி தகவல் தெரிஞ்சா நானே கூப்பிடறேன். சப்போஸ் உங்கக்கா அங்க வந்தா எங்களுக்கு கால் பண்ணு. சரவணன் கூடவும் போகலையாம்.” என்று விக்னேஷ் பேசவும், சத்யதேவ் போனை வாங்கி “கலை… உங்க அக்கா… சரவணன் போட்டோவை வேற ஏதாவது வச்சிருக்காங்களா” என்று கேட்டான்.

    “சரவணன் போட்டோ… அவ அப்படியொன்னும் ஆர்வமா எதுவும் எடுக்க மாட்டாளேங்க” என்று கலைவாணி கூறவும் ஸ்ரீநிதி இடைப்புகுந்து, “சரவணன் அண்ணா போட்டோ என்கிட்ட இருக்கு போன்ல க்ளிக் பண்ணியிருக்கேன்.” என்றதும் சத்யதேவ் “அப்ப அதை எனக்கு அனுப்பு ஸ்ரீ” என்றான்.

     அதற்குள் சூர்யா வரவும் அவனிடம் போலிஸ் விசாரணை துவங்கவும், பூர்ணாவின் தந்தை மற்றும் சத்யதேவை கண்டும், தன் மீது பழி வருவதையும் அறிந்து திகைத்து போனான்.

     “சார் நான் பூர்ணாவோட சீனியர் சார். ஒரே காலேஜ்… காலேஜ் படிக்கிறப்ப அவ மேல ஜஸ்ட் க்ரஷ் இருந்தது. அதே க்ரஷ் அவ ஆபிஸ்ல சந்திக்க ஆரம்பிச்சதும் காதலா முடிவு பண்ணினேன். ப்ரப்போஸ் பண்ணினேன். பட் அவ அதை இக்னோர் பண்ணிட்டு மூவ் ஆன் பண்ணினா. நான் தான் தொடர்ச்சியா ஒரு நப்பாசையில விரும்பினேன்.

    அதுக்கூட நிச்சயம் ஆகிடுச்சு பொண்ணு பார்த்தாங்கனு சொல்லவும் விலகினேன் பட் பூர்ணா சத்யா காதலிக்கறதை நேர்ல பார்க்கவும் எரிச்சலில் இரண்டு மூன்று முறை சத்யதேவ் இருக்கறப்ப மேலதிகாரியா சீன் போட்டேன்.

   அப்பவும் சத்யா வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிட்டார். போட்டோல ஒருத்தான் இங்க சத்யா கூட என்ன ஒரு இணக்கம்னு பேசினப்ப, நான் சத்யதேவை விரும்பறேன். எங்கப்பாவிடம் முதல்ல என் காதலை சொல்லி எனக்கு பார்த்த வரனை தவிர்ப்பேன்னு பேசிட்டு போனா. ஆனா காணோம்னு நீங்க சொல்லறிங்க.

    என்னவோ நான் அவளை என்னவோ பண்ணிட்டதா பேசறிங்களே.. நான் அந்தளவு வோர்த் இல்லைங்க. பூர்ணாவை பொறுத்தவரை நான் ஒரு கோமாளி. தயவு செய்து என் மேல கவனத்தை வச்சி நேரத்தை வீணாக்காதிங்க. அவளை வேற ஆங்கிளில் தேடுங்க.” என்று பதறினான்.

    அவன் பேச்சில் பூர்ணாவுக்கு எதுவும் ஆகக்கூடாதென்ற எண்ணமே மேலோங்கியது.
  
     நாராயணன் மற்றும் விக்னேஷ் இருவரும் சத்யதேவை பார்த்தனர்.

    சத்யாவிற்கோ பூர்ணா தன்னை விரும்புவது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் தற்போது இந்த இக்கட்டான நிலையில் பூர்ணா அப்பா நாராயணன் எப்படி எடுத்துப்பாரோ என்று பரிதவித்தான்.

      அந்த நேரம் ‘டோங்’ என்று ஓசையெழுப்பி வாட்சப் நோட்டிபிகேஷன் வரவும், போனை எடுத்து பார்க்க ஸ்ரீயிடமிருந்து ஒரு புகைப்படம் வந்தது.

     அந்த புகைப்படத்தை கண்டதும் தானாய் “ஆத்ரேயன்” என்றான்.

     “இவன்… இவன் தான் பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளையா?” என்றவன் நாராயணனிடம் வந்து, “அங்கிள்… என் விவகாரம் பிறகு பார்த்துக்கலாம். ப்ளிஸ்… நீங்க பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை இவனா?” என்று கேட்டான் சத்யதேவ்.

   நாராயணனோ சூர்யா பேச்சிலிருந்து சத்யதேவை மகள் விரும்பியிருக்கின்றாளா என்ற எண்ணங்களுக்குள் சிக்கியிருக்க, சத்யதேவ் பேசவும் பதில் அளிக்க இயலாது ஸ்தம்பித்து நின்றார்.

     விக்னேஷோ போனை வாங்கி “இவர் தான் டா. ஏன்?” என்று கேட்டதும் “இவன் தான் டா ஐசுவர்யாவை காதலிச்சு கர்ப்பமாக்கி ரிஜிஸ்டர் மேரேஜ் வரை போய், நான் அடிச்சதும் அந்த கோபத்துல ஐசுவை கல்யாணம் பண்ண மாட்டேன்னு ஓடிட்டான்.” என்று கோபமாய் மொழிந்தான்.

    மாப்பிள்ளையாய் தான் பார்த்தவன் ஏற்கனவே காதல் கர்ப்பம் திருமணம் வரை போனவனா? என்று நாராயணன் அதிர்ந்தவராய் இருக்க, விக்னேஷ் என்ன செய்வது என்று விழித்தான்.

      அதே நேரம் போலிஸ் இன்ஸ்பெக்டர் திலீபன் அந்த போனை வாங்கி புகைப்படத்தை உற்று நோக்கினான்.
 
     விக்னேஷோ “நேத்து நீயும் நானும் பேசினதை அவர் பார்த்திருக்கார்டா. நேத்து முழுக்க, என்கிட்டயும் பூர்ணாவிடமும் உன்னை பத்தி கேட்டார்.” என்று கூறவும், சத்யதேவ் போலிஸிடம் திரும்பி, “சந்தேகமேயில்லை.. அவன் என்னை பழிவாங்க பூர்ணாவை தூக்கியிருப்பான். அவ என்னை விரும்பறதை இந்நேரம் சொல்லியிருந்தா அவளுக்கு ஆபத்து இந்த ஆத்ரேயனால தான் வரும்.” என்று கூறினான்.

    மிஸ்டர் சத்யதேவ். நீங்க ஆத்ரேயன் சொல்லறிங்க. அவர் சரவணன் சொல்லறார்.” என்று பேசவும், “சார் இப்ப பெயர் முக்கியமில்லை. அவன் எங்க இருக்கான்னு தெரிந்தா… பூர்ணா அங்க தான் இருப்பா. நிச்சயம் அவன் மேல சந்தேகம் வந்ததா காட்டிக்கிட்டா தப்பிச்சிடுவான். இதுக்கு முன்ன பேசின கால் எங்க இருந்து வந்ததுனு லொகேஷன் கிடைச்சா. நாம அங்க தாமதிக்காம போயிடலாம்.

   நீங்க அதை கலெக்ட் பண்ணினா பூர்ணாவை கண்டுபிடிச்சிடலாம்.” என்றதும் திலீபன் நேரம் கடத்தாமல் செயல்பட்டார்.


   
    இங்கு சரவணன் என்பவனோ பூர்ணாவை கட்டிலில் கிடத்தினான்.

  கை கால்கள் கட்டி இருக்க மயக்கத்திலிருந்த பூர்ணாவின் உதட்டை வருடிவிட்டு, மெயின் கதவை மூடிவிட்டு வந்தான்.

    அரை மயக்கத்தில் இருந்து பூர்ணா கண்களை சுழற்றியவள், புது இடம் கண்டு திகைத்தாள்.

     தனக்கு அப்பா பார்த்த வரன் சரவணன் அவன் எதற்கு தன்னை மயக்கப்படுத்தினான் என்று குழம்பினாள்.

    ஆம்… பூர்ணா லிப்டில் வந்துக் கொண்டிருக்க அங்கே மாஸ்க் அணிந்திருந்த சரவணன் திடீர் சந்திப்பு போல கைகொடுக்க அவளோ மறுக்கவும், “என்ன டி அவனை லவ் பண்ணறதால என்னை விலகி நிறுத்தறியா?” என்று கேட்டதும் சரவணனின் அந்த வித்தியாச பேச்சை கேட்டு புருவம் சுருக்கினாள்.

   அடுத்த நொடி, “உன்னையும் அவன் என் கைக்கு கிடைக்க விடமாட்டான். அதனால அவனுக்கு நீ பரிசுத்தமா கிடைக்கக்கூடாது” என்று முகத்தில் கைக்குட்டையால் அழுத்த, சட்டென நடந்தவையில் தடுக்க இயலாது மயங்கினாள்.

     இதோ தற்போது கண் திறக்கவும் எதிரில் வந்தவனை கண்டு கொதித்தவளாய் உடலை முறுக்கி கட்டவிழுக்க முயன்றாள்.

     “சரவணன் தப்பு பண்ணறிங்க. உங்களுக்கும் எனக்கும் மேரேஜ் இன்விடேஷன் கூட அடிக்கலை. நான் சத்யதேவை விரும்பறேன். தயவு செய்து பெருந்தன்மையா என் காதலுக்கு மரியாதை கொடுங்க.” என்று கையை விடுவிக்க போராடியபடி கூறினாள்.

     “பூர்ணா பேபி… இப்ப கடத்தியது நம்ம மேரேஜ் நின்று, எனக்கு அவமானமாகும்னு கடத்தினேன்னு நினைச்சியா…

    எனக்கு கல்யாணம் ஆகறதும் அது தடைப்படுவதும் பெரிய விஷயமேயில்லை. பிகாஸ் நான் கல்யாணம் பண்ண இருந்த வரிசையில நீ இருபத்தி இரண்டாவது ஆள்.

     என்ன உன் காதலன் சத்யதேவ் தடுக்காம இருந்தா இருபத்தி மூன்றாகியிருக்கும். அந்த ஐசு… அவனோட தங்கச்சியாமே. கல்யாணம் பண்ணற நேரம் வந்து அடிச்சி தடுத்துட்டான்.

     மாடாட்டும் கண்மண் தெரியாம, கல்யாணம் பண்ணறதுக்கே அடிக்கிறான். இதே நான் அவன் தங்கையை பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணி பிறகு விட்டுட்டு ஓடினா தேடி வந்து மொத்துவான்னு தான் கட்டிக்கவே மாட்டேன்னு அங்கிருந்து இங்க வந்தது.

    என்ன கண்ணு முழிக்குற… புரியலையா… நான் பார்க்க அழகா இருக்கேனா… இந்த அழகை வச்சி கல்யாண மாப்பிள்ளையா மாறி பொண்ணை கல்யாணம் பண்ணி, நகை பணம் லவட்டிக்கிட்டு இருக்கற வரை பொண்ணோட ஜாலியா மத்தது முடிச்சிட்டு எஸ் ஆகிடறது தான் என் வேலையே.

நீ பார்த்தவங்க என் அப்பா அம்மாவேயில்லை. எல்லாம் பணத்துக்கு நடிக்கறவங்க. என் பார்ட்னர்ஸ்.

      இங்க வந்ததும் மாப்பிள்ளையா வேடம் போட புகைப்படம் எடுத்து, பொய் பேசற தரகரிடமா கொடுத்தேன். நீங்களா வந்து மாட்டிக்கிட்டிங்க. சரி கல்யாணம் பண்ணி இரண்டு மாசம் உன்னோட சல்லாபம் முடிச்சிட்டு பணம் நகை என்று அள்ளிடலாம்னு பார்த்தா இங்கயும் அவன் வந்துட்டான்.

இதுல லவ் பண்ணறியோ… எப்படியும் அவனுக்கு என்னை தெரிந்து அவன் ஐசு விரும்பியவன் என்று அறிமுகப்படுத்தி கல்யாணம் நிற்கும். ஆனா என்னை அடிச்சிட்டதுக்கு அவனை பழி வாங்க முடியாது. அதனால தான் உன்னை தூக்கிட்டேன்.

   எப்படியும் இன்னிக்கு உன்னை அடைந்துவிட்டு, நான் நார்த் பக்கம் எஸ்ஸாகிடுவேன்.” என்று கூறவும் பூர்ணாவுக்குள் தைரியம் வற்றியது.

     பெரும்பாலும் பூர்ணா மனதில் பட்டதை பேசும் ரகம். துணிச்சலான பெண், ஆனால் இப்படி கைகட்டப்பட்டு தனியாக ஒருவனிடம் மாட்டிக்கொண்டு பயம் வராத தைரியசாலியா? என்று கூறயியலாதே.

   யாராயிருந்தாலும் இத்தகைய சூழ்நிலையில் தன் மனதைரியம் துவண்டுவிடுமே.

    பூர்ணாவோ தன்னை அப்பா அம்மா தேட ஆரம்பித்து இருப்பார். வரவில்லையென போனை போட்டு களைத்து இருப்பார்கள். இவனுக்கும் விக்னேஷிற்கும் கூட காணவில்லையே என்று பகிர்ந்து தேட ஆரம்பித்து இருக்கலாம்.

    ஆனாலும் இவனால் இங்கு அகப்பட்டிருப்பதை அறிந்திட இயலாது. தானாக தப்பித்தால் மட்டும் உண்டுயென கால் மடக்கி அமர்ந்தவள் பின் பக்கம் கட்டிய கைகளால் கால் முடிச்சை அவிழ்க்க சரவணனிடம் பேச்சுக்கொடுத்தபடி போராடினாள்.

    “இங்கபாரு சரவணன்… என்னை நாசமாக்கினா சத்யதேவை பழிவாங்கினதா தப்பா யோசிக்காதே. அவர் என்னை விரும்பலை. நான் தான் விரும்பினேன்.” என்று பேசினாள்.

     “நீ விரும்பினாலும் அவன் விரும்பினாலும் எனக்கு கவலையில்லை. அவனை விரும்பின நீயும் நாசமாகணும்” என்று நெருங்கி வந்து தொடையை தீண்டவும் முகத்தை திருப்பி, “நீ என் நகை பணத்தை எடுத்துக்கோ. என்னை விட்டுடு” என்று கத்தினாள்.

    “இப்ப விட்டா.. எப்படியும் என்னை போலிஸ்ல மாட்டிவிடுவ. அதுக்கு உன்னை அடைந்து பிறகு நிம்மதியா எங்கயாவது போயிடுவேன்.” என்று முகத்தின் முன் உதடருகே குனியவும் வலது இடதென முகத்தை திருப்பினாள்.

      “இதுக்கு தான் மயக்க மருந்து கொடுத்துட்டு என் வேலையை முடிக்க பார்த்தேன். நீ தான் அதுக்குள்ள எழுந்து உட்கார்ந்துட்ட. இரு… மயக்க மருந்து எடுத்துட்டு வர்றேன்.” என்றவன் கைகள் அவளின் இடையில் ஊர்ந்திட தேள் பூராணின் ஊர்வலமாய் மேலொழும்பியது அவளுக்கு.

   பூர்ணா பல்லைக்கடித்து கையை அவிழ்க்கவே தீவிரமாய் இருந்தாள்.

    சரவணன் எழுந்து மயக்க மருந்தை தேடி கைக்குட்டையில் வைத்து அறைக்கு வரவும் பூர்ணா மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருந்தாள்.

     சரவணன் அருகே வந்து முகம் நோக்கி கையை கொண்டு செல்லவும், பூர்ணா சற்று முன் வேகமாய் பதட்டத்தை குறைத்து வாயால் கட்டை அவிழ்த்து பின்னால் மாயமாய் கட்டி வைத்தது போலவே அமர்ந்திருக்க, தற்போது சரவணன் அருகே வரவும் கையை தட்டி விட்டு அந்த கையில் அழுத்தமாய் கடித்து வைத்தாள்.

   முடியை பிடித்து இழுக்கவும் கடிப்பதை விடாது இருந்தாள். போதாதற்கு அவன் இழுத்த இழுப்பில் முகத்திலேயே நகத்தால் கீறிவிட்டு, அங்கிருந்த போர்வையினால் மூடிவிட்டு மயக்க மருந்து கர்ச்சிப்பை எடுத்து கொண்டு வெளியே ஓடினாள்.

      வாசல் பக்கம் பூட்டியிருக்க, கிச்சன் பக்கம் விரைந்தாள்.

    அங்கே கதவு திறந்து கிச்சன் பால்கனி வழியே மற்றொரு பாதையிருக்க மோட்டார் போடுவதற்கு ஒரு ஆள் போகுமளவு இருந்தது.
 
    வெளியே வந்து தப்பிக்க முயலும் நேரம் அவளின் கையை யாரோ பிடித்திருக்க சரவணன் என்று உதறினாள்.

    “பூர்ணா.” என்ற குரலில் சத்யதேவ் என்று அறியவும் திரும்பியவள் அவனை கண்டு அழுது அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.

     “தேவ்.. தேவ்..” என்றவளால் அதற்குமேல் பேச்சு வரவில்லை.

    “அவன் எங்க?” என்று கேட்டதும் வீட்டினுள் கையை நீட்டினாள்.

   “திலீபன் உள்ள தான் அந்த பொறுக்கி இருக்கான்” என்றதும் அவர்களோடு வந்த போலிஸ் வீட்டினுள் நுழைந்தனர்.

     விக்னேஷ் மற்றும் நாராயணனை கண்டு சத்யதேவ் பூர்ணாவை கண்டான்.

   பூர்ணாவோ “அப்பா… நான் இவரை..” என்று தடுமாறினாள்.

     “தம்பி சொல்லிடுச்சு மா. சரவணன் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கலை.” என்று மகளிடம் தான் பார்த்த வரன் சரியில்லையே என்று வருந்தினார்.

     “ஐசுவோட காதலன் தான் இந்த சரவணன்” என்று பூர்ணா கேட்கவும், “ம்ம்… ஆத்ரேயன் பெயர் மாற்றி இங்க வந்து இருக்கான். அதான் ஏன்னு தெரியலை.” என்று சத்யதேவ் குழப்பமாய் கூறினான்.

    “அப்பா… அவன் ஏற்கனவே இருபத்தி இரண்டு பேரை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி அவங்களிடமிருந்த நகை பணம் எடுத்துட்டு ஓடிவந்திருக்கான். இது அவனோட ப்ராடு வேலை.” என்றவள் சத்யதேவிடம் திரும்பி “ஐசு கர்ப்பமாக்கி நகை பணம் அபேஸ் பண்ண நினைச்சிருக்கான். நீங்க அடிச்சி மிதிச்சதும் உஷாராகி அங்கிருந்து இங்க ஓடிவந்திருக்கான். உங்களுக்கு என்ன பிடிக்கு..ம்…னு.. தப்பா தெரிந்து என்னிடம் அத்துமீறி பழி வாங்க பார்த்திருக்கான்.” என்று சத்யதேவிடம் உரைத்திடவும் “அவனை…” என்று அடிக்க செல்ல பூர்ணா பேசியதில் திலீபனே அவன் முகத்தில் குத்தவும் நிலை தடுமாறி கீழே விழுந்தான். சரியாய் படிக்கட்டு முனை கம்பியில் மூக்கு பட்டு உடைந்து இரத்தம் வழிந்தது.

     சரவணன் என்ற ஆத்ரேயனை போலிஸ் அழைத்து சென்று கடமையாற்றியது.

மணி பதினொன்று ஆனது வீட்டில் கலைவாணிக்கு போன் செய்து பூர்ணா கிடைத்து விட்டாளென கூறிவிட்டனர்.

    “அப்பா அவசரப்பட்டு சரியா ஆராயமா வரன் பார்த்துட்டேன் டா. மன்னிச்சிடு நல்லவேளை கல்யாண பத்திரிக்கை கூட அடிக்கலை.” என்று நாராயணன் மகளிடம் மன்னிப்பு கேட்டு நின்றார்.

     “அப்பா… அவனை விடுங்க… தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.” என்றவள் சத்யதேவை கண்டு தந்தையிடம் எப்படி கூறயென்று தயங்கினாள்.

    நிஜமாகவே சத்யதேவிற்கு தன்னை பிடிக்குமா? இல்லை தனக்கு மட்டும் அவனை பிடித்துள்ளதா மீண்டும் தொடக்கநிலையில் வந்துநின்றாள்.

     “நீ அந்த தம்பியோட வந்துடுமா. மாப்பிள்ளை நான் உங்க கூட வர்றேன்.” என்றதும் பூர்ணா மறுக்காமல் நின்றாள்.

       சத்யதேவ் மற்றும் பூர்ணா, விக்னேஷ் மற்றும் பூர்ணா தந்தை நாராயணன் என்று இரு வேறு பைக்கில் பயணம் மேற்கொண்டனர்.

     சத்யதேவ் அந்த இருட்டில் தன்னவளை அழைத்து வந்துக் கொண்டிருந்தான்.

     பூர்ணாவே மௌவுனத்தை கலைத்து, “சரவணனை நான் விரும்பி எல்லாம் மேரேஜ் பண்ணறேன்னு சொல்லலை. அப்பா வரன் பார்த்தும் அவர் மனசு நோகக்கூடாதுனு ஓகே சொன்னது. அப்ப எனக்கு உங்க மேல…” என்றவள் பேச்சை நிறுத்தவும் சத்யதேவும் வண்டியை நிறுத்தினான்.

     “எ…என்னாச்சு..?” என்று இதயம் துடிக்க இறங்கினாள்.

     “பூர்ணா… நீ அறைய மாட்டனா நான் ஒன்னு சொல்லவா.” என்று கேட்டு நின்றான்.

   “என்ன.. என்ன சொல்லப்போறிங்க?” என்று துடிக்க, “சத்யதேவோ, அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று பார்த்து சுற்றி இடங்களை ஆராய்ந்தான். இரவென்பதால் மனித நடமாட்டம் என்றது துளியும் இல்லை. ஏதோ பகுதிக்கு ஒருவர் கடந்து சென்றனர்.

    “என்ன பார்க்கற?” என்று கேட்டாள் பூர்ணா.

     “ஒன்னுமில்லை… நான் ஏதாவது சொல்லி நீ சப்புனு அடிச்சிட்டா..” என்றவன் குறும்பாய் சிரித்து சொல்ல வாயெடுக்க, கண்களில் தவிப்புடன் “தேவ்… ஐ லவ் யூ… டூ யூ லவ் மீ?” என்று கேட்டு நின்றாள்.

சத்யதேவிற்கு இதை விட ஆனந்தம் ஏது?!

    அவளின் கையை பிடித்து “எஸ்… ஐ லவ் யூ. கேன் வீ கேட் மேரீட்?” என்று தன்னவளின் வினாவிற்கு விடைத்தொடுத்து எதிர் வினாவாக, ‘நாம திருமணம் செய்துக் கொள்ளலாமா?’ என்று அவளை போலவே கேட்டு வைத்தான்.

    பூர்ணா அவனை காற்று ஊடுறவும் வழி கொடுக்காமல் அவனை இறுக அணைத்து கொள்ள, சத்யதேவோ “வீட்டுக்கு போகலாம் அத்தை மாமா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று வாஞ்சனையாய் அவள் தலையை வருடி நெற்றியில் முதல் முத்திரையை பதித்தான்.

   அதன் பின் வீட்டுக்கு சென்றதும் கோகிலா, கலைவாணி, ஸ்ரீநிதி என்று மாறி மாறி பூர்ணாவை கட்டி பிடித்து சரவணன் என்ற அயோக்கியனிடமிருந்து மீண்டதில் மகிழ்ச்சியாய் பாவித்தனர்.
  
    சத்யதேவ் இவர்களோடு சென்றதால் அன்று இரவே காயத்ரி பூர்ணா இல்லாது கோகிலா கலக்கம் கொள்வாரென உதயேந்திரனை அழைத்து வந்து ஆறுதலாய் இருந்தார்.

சத்யதேவ்-பூர்ணா சேர்ந்து வந்ததும் உதயேந்திரன் மகனின் காதலுக்கு தடையாய் இருந்த ஒன்றும் தகர்ந்திட, நாராயணனிடம் வெளிப்படையாய், “நீங்க குறிச்ச நல்ல நாள்ல என் மகனுக்கும் உங்க பொண்ணுக்கும் திருமணம் பண்ணி வைக்கலாமா? உங்க அபிப்ராயம் என்ன நாராயணன்” என்று உதயேந்திரன் நேரிடையாய் கேட்டார்.

      கோகிலாவோ காயத்ரியின் அருகே அமர்ந்திருந்தவர் கணவர் சம்மதம் அளித்திடவே ஏங்கினார்.

     நாராயணனோ “என்னம்மா பூர்ணா… சத்யதேவ் இந்த வீட்டு பெரிய மாப்பிள்ளை தானே” என்றதும் “போங்கப்பா.” என்று ஸ்ரீநிதி பின்னால் போய் மறைந்தாள்.

    “அண்ணி… இந்த வெட்கம் இப்ப தான் வெளியே வருது. ம்ம்.. சரியான நபர் சரியானவங்க கூட ஜோடியா நின்னா தான் இந்த வெட்கம் ஏக்கம் கூட வருமா” என்று சீண்டினாள்.

    சத்யதேவ் பூர்ணாவை தேடி சென்றதாக சக்தியிடம் கூறியதால் கடை அடைத்து விட்டு உதயேந்திரனை காண வந்த சக்தி ஸ்ரீநிதியின் பேச்சில் கவரப்பட்டான்.

      அனைவரும் அங்கேயே படுத்துறங்கினார்கள்.

   அடுத்த நாள் காலையில் டிவியிலும் செய்தியிலும் ‘பல வருடமாக காதல் கல்யாணம் என்ற வலையில் பெண்களை திருமணம் செய்து, சில மாதம் வாழ்ந்து விட்டு, பெண்ணின் நகை பணம் எடுத்து கொண்டு மோசடி செய்த சரவணனை நேற்று கையும் களவுமாக அகப்பட்டார். சரவணன் ஆத்ரேயன், கைலாஷ், வினாயக், விஜய் என்று பலபேரில் மோசடி செய்தவன். நல்ல நிறமும் அழகான முகமைப்பும் கொண்டதனை இவ்வாறு தவறாக பெண்ணை ஏமாற்ற பயன்படுத்தியதில் பெரும் பெற்றோர்கள் கூட ஏமாந்து பெண்ணை மணமுடித்து வைத்துள்ளனர்.’ என்று நாளிதழில் வாசிக்கவும், நாராயணன் மகளை கண்டு, “அப்பா பெரிய புதைக்குழியில தள்ளி விட பார்த்தேன். கடவுள் அருளால் தப்பிச்சிருக்க மா” என்றார்.

    உதயேந்திரன் போன் அதை ஆமோதிப்பதாய் ஓசையெழுப்பியது.

     அதனை எடுக்கவும் “அண்ணா இப்ப தான் நியூஸ் பேப்பரை பார்த்தேன். நல்ல வேளை சத்யா ஐசு வாழ்க்கையை காப்பாத்தி கொடுத்திருக்கான் அண்ணா.” என்று பேச, “என் மகன் உன் பொண்ணு வாழ்க்கையை அழிச்சவன்பா. அப்படி தான் பேசி பேசி அவனை கோவையில இருக்க விடாம பண்ணின. அதோட நான் அண்ணா இல்லை. உன் அண்ணா செத்துட்டாராச்சே.” என்று உதயேந்திரன் கறாராக பேசினார்.

     “அண்ணா… அப்படி சொல்லாதிங்க அண்ணா.” என்று மறுபக்கம் கெஞ்சிட, “உன் மக கல்யாணத்துக்கு கூட எங்களுக்கு தெரியாதேப்பா. அப்ப நாங்க யாரோ எவரோ தானே. உங்களுக்கு சாதகமா நடந்தா உறவு வேண்டும் அதே பாதகமா போனா உறவை முறிச்சிப்பிங்க தானே. உங்க அண்ணா நேத்தே இறந்துட்டார். செத்த அண்ணா உயிரோட மறுபடியும் வரமாட்டார்” என்று கத்தரித்தார்.

    மற்றவர்கள் பார்க்க, “சரிங்க சம்மந்தி… வீட்டுக்கு கிளம்பறோம். கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு. இப்பவே நமக்கு காபி வரலை. ஆனா பாருங்க பையனுக்கு முதல்ல காபி வந்துடுச்சு” என்று உதயேந்திரன் கூறவும் தட்டில் காபியை பரிமாறின பூர்ணா சத்யதேவிற்கு கொடுப்பதை கண்டு கூறினார்.

    “அச்சோ மாமா அப்படியில்லை குட்மார்னிங் காபி கப் எமோஜி  அனுப்பினா அவர் தான் காபி எமோஜியா? நேர்ல காபி கொண்டுவானு அனுப்பினார்.” என்று சத்யதேவை மாட்டிவிட்டாள்.

      ஸ்ரீநிதியோ, “இப்ப தான் அண்ணிக்கு திருமண கலை வந்துயிருக்கு. பாருங்க போன்ல லவ் பண்ணறாங்க.” என்று உசுப்பேத்தினாள்.

     மகிழ்ச்சியும் சந்தோஷமும் வீட்டில் நிறைவை எதிரொளிக்க, சத்யதேவ் பூர்ணா திருமணம் அதே ஆடி மாதம் முடிந்த பின் நடைப்பெற உறுதியானது.(எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடுங்க)

சத்யதேவ் பூர்ணாவின் இதயம் மணக்கோலத்தில் கைப்பிடிக்க  ஆர்வமாய் அந்நாளுக்காய் காத்திருந்தது.

    அதன் பின் கலைவாணி வளைக்காப்பு விமர்சனமாய் நடைப்பெறவும் விக்னேஷ் கனவுக்கொண்டான். 

    எப்படியும் ஸ்ரீநிதி சத்யதேவ் விக்னேஷ் என்ற இரண்டு அண்ணன்களின் துணையோடு சிடுமூஞ்சி சிங்காரமான சக்தியை கைப்பிடிப்பாள். அதற்கு பத்ரி-வனிதா ரெஜிஸ்டர் மேரேஜிற்கு வந்ததை போலவே ஜோடியாய் வந்து கலந்து கொள்வார்கள்.

    சூர்யாவுக்கு எப்படியும் காலம் ஒருத்தியை கைகாட்டும். பூர்ணாவோடு சீனியர் மற்றும் மேலதிகாரி என்ற இடத்திலேயே அவன் பங்களிப்பு இடம்பெறும்.

    இவ்வாறு அன்றைய நாட்கள் இனிதாய் மாறியது.

    இரவு குட் நைட் என்று முத்தமிடும் ஸ்டிக்கரை பூர்ணா அனுப்பிட, “காலையில காபி எமோஜி போட்ட, நான் நேர்ல தான்னு சொன்னதும் டம்ளர்ல காபி எடுத்துட்டு வந்த. இப்ப முத்த ஸ்டிக்கர் அனுப்பியிருக்க? எனக்கு ஸ்டிக்கர் வேண்டாம். லிப் ஸ்டாம் தான் வேண்டும்” என்று அனுப்ப, பூர்ணாவோ, வெட்கம் கொண்டு “ஆப்டர் மேரேஜ் முத்தங்கள் நேரில் வழங்கப்படும். அதுவரை ஸ்டிக்கரில் மட்டுமே வழங்கப்படும்” என்று கூறி அனுப்பிவிட்டு சிரித்தாள்.

      சத்யதேவோ “எங்க அதை திரும்பி நின்று இப்ப சொல்லு” என்று விக்னேஷ் உதவியால் வீட்டுக்குள்ளும், ஸ்ரீநிதி உதவியால் அறைக்குள் வந்து அட்சாரம் கேட்டு அடம்பிடித்தான் குறும்புகாரன்.

    காலையிலிருந்து போனில் இருவரும் சந்தித்தது முதல், நேற்று நடந்ததுவரை மொத்தமும் பகிர்ந்து பேசி, இருமனமும் இணைந்து ஒரிதயமாக மாறியதன் விளைவில் உரிமையாய் வந்து நின்றான்.

     “நோ… தேவ்… நோ…” என்று பின்னால் நகர, அவளின் கரத்தை பிடித்து பின்னால் மறைத்து வைத்த பேரரளி(daffodills) மலர்கொத்தை நீட்டி, “பஸ்ட் கிஸ் வாங்க போறேன். உன்னையும் என்னையும் சந்திக்க வச்ச பேரரளி(daffodills) இல்லாமலா?” என்று வெட்கத்தை சம்மதமாய் ஏற்று, அவளிடம் மலரை கொடுத்து மலரிதழில் முத்தங்களை பரிசாய் வழங்கினான்.

                        🏵சுபம்🏵
                                 -பேரரளி.✍🙏🏽

பொறுமையாய் வாசித்து ஆதரவு கொடுத்து கமெண்ட்ஸ் தந்த வாசகர்களுக்கு இதயகனிந்த நன்றிகள்.