பூ பூக்கும் ஓசை-19

பூ பூக்கும் ஓசை-19

     “என்னை எதிர்பார்க்கலைனு நல்லாவே தெரியுது. இதுக்கு தான் டூ ஆர் த்ரி டைம் நேர்ல பேசலாம்னு கூப்பிட்டேன். நீ வரலை…. மாமா அத்தை இருக்காங்களா?” என்றதும் தான் பூர்ணா “அம்மா… அப்பா… உள்ள இருக்காங்க வாங்க உட்காருங்க” என்று கூறவும் சரவணன் அமர்ந்தான்.

      ‘பேசறதுக்கே யோசிப்பா போலயே’ என்று சாய்ந்து அமரவும் நாராயணன் வந்தார்.

      “வாங்க மாப்பிள்ளை பத்திரிக்கை அடிக்க நாள் எல்லாம் பார்த்தாச்சுனு அப்பா சொன்னார். உங்களிடமே கொடுத்து விடுவாங்கனு தெரியாது. கோகிலா மாப்பிள்ளைக்கு ஸ்வீட் காபி எடுத்துட்டு வா” என்றதும் கலைவாணி ஸ்ரீநிதி வெளிவந்தனர்.
 
     “ஹாய் நீங்க தான் கலைவாணியா.” என்று நேசக்கரம் நீட்டினான்.

   கலைவாணியும் அக்கா கணவன் என்று சந்தோஷப்பட்டு பேசினாள்.
 
வலுக்கட்டாயமாக பூர்ணா பதில் தர, யாராவது காப்பாத்தினா நல்லாயிருக்கும் என்று வேண்டவும் ஆபத்பாண்டவன் போல விக்னேஷ் வரவும் நாராயணன் வரவேற்று பெரிய மாப்பிள்ளையை சின்ன மாப்பிள்ளையிடம் அறிமுகப்படுத்தி பேச வைத்தார்.

     சரவணன் விக்னேஷ் பேச ஆரம்பித்ததும் பூர்ணா நைஸாக நழுவி கலைவாணியோடு ஸ்ரீநிதியோடும் ஒதுங்கினாள்.

     சரவணனும் விக்னேஷிடம் நட்பாய் பேசி சிரித்தனர். விக்னேஷோ பூர்ணாவை முதலில் சந்தித்த நிகழ்வை கூறினான்.

   தன் நண்பர்கள் சத்யதேவ் சக்தி பத்ரி வனிதா என்று கையெழுத்து போட வந்ததை கூறினான்.

    பின்னர் பூர்ணா எப்படி தன் திருமணத்தன்று தன் நண்பன் சத்யதேவால் வந்தாள் என்றும், பூர்ணா அடித்து விட்ட கதையும், அதன் பின் பூர்ணா அலுவலகத்திலேயே சத்யதேவ் வந்த கதையையும் கூறவும் சரவணன் கதைக்குள் மூழ்கி போனான்.

      பூர்ணாவை பார்த்து கொண்டே இரவு உணவையும் சாப்பிட ஆரம்பித்தான்.

     பூர்ணா பரிமாறவும் அவளின் கையை பிடிக்க அவன் தீண்டலில் கரண்டியை விட்டாலும் அவன் தீண்டியபடி, “ஹாய்.. நீயா பேசமாட்டியா” என்று பேசவும் தன் சுற்றுப்புறம் பார்க்க கலைவாணி வாந்தி எடுக்க வரிசையாய் அம்மா அப்பா ஸ்ரீநிதி விக்னேஷ் கவனிக்க சென்றதை தாமதமாய் உணர்ந்தாள்.

      கையை உருவினாலும் பிடியும் விடாமல், பேசவும் முடியாது தவிக்க, சரவணனின் சிறு தீண்டலையும் ஜீரணிக்க இயலாது தவித்தாள்.

     “லுக் ஆகஸ்ட் மாதம் எல்லாருக்கும் சுதந்திர தினம் எனக்கு மட்டும் ஆடி முடிந்து சிறைத் தண்டனை உன்னோட.” என்றதும் பூர்ணா மனதிலோ ‘ஏன் நீயும் சுதந்திரமாவே இரு. என்னை ஏன்டா கல்யாணம் பண்ணி சிறைப்பறவையா மாறுற?’ என்று வறுத்தெடுத்தாள் 

    “போன் பண்ணினா பேசு டியர். இப்ப சாதாரணமா பேசினா தானே கொஞ்ச நாள்ல மத்ததை பேசி நம்ம புரிதல் நெருக்கமாகும்.

     பாரு..  கையை தீண்டினா வேர்க்குது. நெர்வஸாகுற.” என்றதும் தன் நிலை உணர்ந்தவளாய் வேகமாய் “மேபீ… பேசி பழகலைல.. ப்ளிஸ் கையை விடுங்க. அப்பா பார்த்துட போறார்.” என்றதும் விடுவித்தான்.

      “விக்னேஷ் பிரெண்ட் சத்யதேவ் உங்க ஆபிஸா. அவரை அடிச்சிட்டு அடிக்கடி அவரை நேர்ல பார்க்கறப்ப கில்ட்டி பீல் வரலை.” என்று தூண்டிலாய் கேட்டான்.

    “இல்லை… அவர் அதை பெருசா எடுத்துக்கலை. என் சிட்டுவேஷனை புரிந்து கொண்டார். ஸ்வீட் பெர்ஷன் கலைவாணி மேரேஜை கூட ரிசனோட ஜெனுவா ஹாண்டில் பண்ணினார். அவரோட தங்கை லைப் ஸ்பாயில் ஆனதில, அவர் என் தங்கை லைப்பை சக்சஸ் ஆக்கினதும் ஒரு நிறைவான பீல். ஹீ இஸ் எ குட் மேன்.” என்று பூர்ணா அவனின் குணத்தை ஒவ்வொன்றாய் அடுக்க ஆரம்பித்தாள்.

     “வாவ் பூர்ணா… உன் முகம் அப்படியே ஜொலிக்குது. கண்கள் ஐ வோல்டேஜ் பிரகாசமா மின்னுது. சத்யதேவ் ஸ்வீட் பெர்ஷன், ஜெனுவான ஹாண்டலிங், ஹீ இஸ் எ குட் மேன்… நீ அவனை நல்லா புரிஞ்சி வச்சியிருக்க பூர்ணா. அவன் லவ்வர் கூட இந்தளவு புரிந்து வச்சியிருக்க மாட்டாங்க.” என்று கேட்டதும் பூர்ணா கண்கள் மெதுவாய் தரையில் அங்கும் இங்கும் தாண்டவமாடியது.

     “ஓகே பைன்… நான் கிளம்பறேன்.” என்றவன் கன்னம் தட்டி எழுந்தான்.

    வீட்டில் அனைவரிடமும் கையசைத்து விடைப்பெற்றான். அவன் சென்றதும் முகம் கழுவி கன்னத்தை தேய்த்தாள். ஏனோ சரவணன் பார்வையை தீண்டலை ஏற்க முடியவில்லை

     தனியாய் அடுத்த நாள் பூர்ணா அலுவலகம் சென்றதும் சத்யதேவ் இருந்த கேபினையே வெறித்தாள். அவன் இல்லையென்றதை அவளிதயம் ஏற்க கடினமாய் இருந்தது. சூர்யாவோ மிக ஆனந்தமாய் அங்கும் இங்கும் உலாத்தினான்.

    மதியம் சாப்பிடும் நேரம் சம்ருதி ப்ரியாவிடம் “போங்க சம்ருதி… அதெப்படி ஒருத்தரோட பழகியதில்லை பேசியதில்லை. ஆனா ஒரு இக்கட்டுல நேரா அவனோட சந்திப்பை நிகழ்த்தி அவனை பிடிக்க வச்சி, அவனையே நினைக்க வைக்குற உணர்வுக்கு பெயர் காதல் இல்லையா…” என்று கேட்டாள்.

     “அட பார்க்கறவனை எல்லாம் காதலிக்க முடியுமா?” என்று ப்ரியா சலித்த பதிலை தந்தாள்.

     “நாம ஒரு நாளைக்கு எத்தனை பேரை பார்க்கறோம். அத்தனை பேர் மேலயும் ஈர்ப்பு வருதா? அதெல்லாம் பர்டிக்குலர் பெர்சன் மேல மட்டும் வித்தியாசமான பீலிங் வரும்.

     அவனை பிடிக்காது ஆனா பிடிக்க ஆரம்பிச்சிடும். அவன் பேச மாட்டான் ஆனா நம்மிடம் எப்ப பேசுவான்னு ஆவலா இருக்கும்.

      அவன் தினசரி இருக்கற இடங்கள் எல்லாம் நம்ம மனசு தேடும்.

      உரிமையா ஒருத்தன் தீண்டினா கம்புளிபூச்சி உடம்புல ஏறின மாதிரி உடம்பு ஊரும். அதே மனசுல நினைச்சவன் தீண்டலுக்கு மனசு ஏங்கி தவிக்கும்.” என்றதும் பூர்ணா சத்யதேவினை அருகே இருப்பது போல காட்சியை எண்ணினாள்.

     ‘என்ன குழப்பம் முதல்ல சாப்பிடு. குழப்பமெல்லாம் வேண்டாம் நான் விரும்பறேன்.’ என்று கானல் நிழலாய் சத்யதேவ் உருவம் வந்து பூர்ணா தட்டை எடுத்து உணவை மூடி வைத்தாள்.

   இதென்ன அசிங்கமா… சத்யதேவை ஒப்பிட்டுப் பார்த்து மனசு எக்கு தப்பா நடக்குது. என்றவளின் முகம் வேர்த்திருந்தது.

   சூர்யா அருகே வந்து “என்ன உன் ஹீரோ இல்லாம சாப்பிட பிடிக்கலையா?” என்றதும் “ஆமா சூர்யா… என் ஹீரோ இல்லாம சாப்பிட பிடிக்கலை. என் ஹீரோ இல்லாம வேலை செய்ய பிடிக்கலை. நீ இப்படி காதல் கீதல்னு பேத்திட்டு இருந்தா வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு நானும் கிளம்பிடுவேன்.

    உனக்கு பிராஜக்டும் பண்ண முடியாது. என்னையும் இப்படி உசிரை வாங்கற மாதிரி கேள்வி கேட்க முடியாது. சிலரை எப்பவும் விரும்ப முடியாது. அந்த கேட்டகிரி நீ சூர்யா. சீனியரா பார்த்து மதிப்பு கொடுத்து பழகிட்டேன் காதல் வரவே வராது.

    நான் சத்யதேவை லவ் பண்ணறேன்” என்று மூச்சுவாங்க அவளை அறியாது கூறினாள்.

    “அப்ப அந்த போட்டோ…? வுட்பினு காமிச்ச?” என்று சூர்யா கேட்டதும், “பேரண்ட்ஸ் பார்த்தவங்க…. அப்பாவிடம் கல்யாணத்தை நிறுத்த சொல்லணும். சரவணனிடம் என்னால என் லைப்பை பகிர முடியாது.” என்றவள் மனதிற்குள் சத்யதேவிடம் என் மனசை எப்படி வெளிக்காட்டணும் தெரியலை. தப்பா எடுத்துக்கலாம்.

என் காதலை இக்னோர் பண்ணலாம்.

தங்கை மேரேஜ் அப்ப பெரிசா பேசிட்டு இப்ப எனக்கும் லவ் வந்துடுச்சுனா கேலி பண்ணுவானா?
 
    கேலி செய்து, தப்பா எடுத்துக்கிட்டு என் காதலை இக்னோர் பண்ணினாலும் என் மனசு அவனை தவிர யாரையும் ஏற்றுக்காதுனு புரிய வைக்க பார்க்கணும்.

     அப்படி புரிய வைக்க முடியலைனா கூட அப்பா அம்மாவிடம் இப்ப மேரேஜ் வேண்டாம்னு சொல்லணும்’ இதையே மதியம் சூர்யாவிடமிருந்து வந்து தனது கேபின் அமர்ந்தப்பின்னும் அதே சிந்தனையே அவளுக்குள் ஓடியது.

    ஒரு நிமிடம் கூட சத்யதேவ் காதலிப்பது தவறு என்றோ சரவணனை மறுக்க போவதால் வருத்தமோ துளியும் தோன்றவில்லை.

    மணி ஐந்தாக ஹாண்ட்பேக் எடுத்து கொண்டு தனது வீட்டை நோக்கி புறப்பட்டாள். முதலில் தன்னை பெற்றெடுத்த தாய்தந்தையரிடம் தன் மனதை பகிர்ந்து அவர் மனம் நோகாமல் கூறி தன்னிலையை விளக்கவே முயலும் எண்ணத்தோடு லிப்டில் நுழைந்தாள்.

இடம்: சக்தி பீட்சா ஷாப்

     சத்யதேவ் சக்தியின் முன் அமர்ந்தவன் “நேத்து என்னிடம் வேலைக்கு ஆகாதுனு விக்னேஷிடம் அண்ணா அண்ணானு பாசத்தை பொழிந்திருக்கா. சொன்னா நம்ப மாட்ட, அவன் ஏன்டா நம்ம மூன்று பேரும் ஒரே பேமிலில பொண்ணு எடுக்க கூடாதுனு என்னையே கேட்கறான். அந்தளவு ஒரே நாள்ல பேசியிருக்கா அந்த ஸ்ரீநிதி வாலு” என்று சத்யதேவ் கூறவும் சக்தி இதழில் குறுநகை எட்டிப்பார்த்து.

      சத்யதேவ் கண்ணில் அந்த குறுநகை கருத்தில்படவும் “உனக்கு அவளை பிடிச்சிருக்கா?” என்று கேட்டதும் சக்தி, “சேசே அப்படியில்லை டா. பிடிச்சிருக்கு பிடிக்கலைனு நான் எப்படி சொல்ல? அந்த பொண்ணு நல்ல வசதியானவள் டா. நான் அநாதை தேவையில்லாம நான் ஏதாவது அவளிடம் பேசி அந்த பொண்ணு வீட்ல அநாதை பையனுக்கு கட்டி கொடுக்க முடியாதுனு சொல்லி பிரச்சனை எதுக்குடா. என்னால யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. எனக்குனு இப்ப மேரேஜ் பத்தி தாட்ஸே இல்லை டா.” என்று பேசினான்.

   சட்டென அவ்வார்த்தை நினைவு வர “ஏன் மச்சி… அதென்ன மூன்று பேரும் ஒரே பேமிலில பொண்ணு எடுக்கறது. விக்னேஷ் என்னை தவிர்த்து வேற யாரு?

   என்ன மச்சி… உன்னை அடிச்ச கையே உன்னை அணைக்கணும்னு காதல் வந்துடுச்சா? என்றதும் சத்யதேவ் பீட்சாவை வாயில் வைக்க போனவன் தட்டிலேயே வைத்தான்.

     “அப்படி தான் மச்சான் தோணுது. ஆனா அவளுக்கு கல்யாணம் பண்ண பத்தரிக்கை அடிக்க போறாங்க.” என்று சத்யதேவ் கலங்கியவனாய் பிளேட்டை ஒதுக்கி வைத்தான்.


இடம்: பூர்ணா வீடு

     “மணி எட்டாகுதே மாப்பிள்ளை, எப்பவும் ஐந்து மணிக்கே கிளம்பிடுவா. வீட்டுக்கு ஆறு ஆறுபத்துக்கே வந்துடுவா.” என்று நாராயணன் குரல் தழதழத்தது.
  
  “எங்கயாவது பிரெண்ட் வீட்ல போயிருக்கலாம் மாமா. பயப்படாம இருங்க… திரும்ப போன் போட்டு பாருங்க” என்றான் விக்னேஷ்.

     “போன் சுவிட்ச்ஆப்னு வருதே மாப்பிள்ளை” என்று கோகிலா சேலையில் வாயை பொத்தி அழுகையை அடக்கினார்.

    “லோ பேட்டரில அப்படி ஆகியிருக்கலாம் அத்தை.” என்று விக்னேஷ் சமாதானம் செய்தான்.

    “என்னங்க…  அக்கா காலையில புல் பேட்டரியோட தான் போனா. நான் பார்த்தேன். எதுக்கோ ஆபிஸ்ல கால் பண்ணிப் கேட்கலாம்” என்றதும் “குட் ஐடியா போன் நம்பர் என்ன?” என்று கேட்டு வாங்கினான்.

    பத்து நிமிடத்தில் பூர்ணா ஐந்து மணிக்கே சென்றதாக தகவல் வந்தது. நாராயணன் உடனே கேப் டிரைவர் கூட கிளம்பினானா இந்நேரம் வந்திருக்கணுமே.’ என்று யோசித்தவர் கேப் டிரைவரின் எண்ணை ஒரு முறை கடை டைரியில் எழுதி வைத்ததாக கூறி விக்னேஷை அழைத்து கடைக்கு சென்றார்.

    விக்னேஷும் கடையில் கடைசி பக்கத்தில் சேகரித்து வைத்த அந்த கேப் டிரைவரின் எண்ணிற்கு அழைத்து பூர்ணா வரவில்லை என்று கேட்டதும், ‘மேடம் அப்பவே போன்ல இருந்து கால் பண்ணி அவங்க யாரையோ பார்க்க போறதா சொல்லிட்டு என்னை வெயிட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்களே சார்’ என்ற குண்டை தூக்கி போட்டார்.

    விக்னேஷ் மீது பொறுப்புகள் தலைமேல் விழவும் குருவி கூட்டில் பனம்பழம் வைத்த கதையாக மாறியது.

    என்ன செய்ய என்று யோசித்தவன் சத்யதேவிற்கு போனில் அழைத்தான்.

   போனை எடுத்த அடுத்த நொடியே “மச்சி பூர்ணாவை ஐந்து மணில இருந்து காணோம் டா. ஆபிஸுக்கு கால் பண்ணினா ஐந்து மணிக்கே கிளம்பிட்டதா சொல்லறாங்க. அவ எப்பவும் வர்ற கேப் டிரைவரிடம் கேட்டா, மேடம் என்னை வெயிட் பண்ண வேண்டாம்னு யாரையோ மீட் பண்ண போறதா சொல்லிட்டாங்கனு சொல்லறார்.

   இங்க மாமா, அத்தை, கலை எல்லாம் அழுது கவலையா இருக்காங்க. என்ன பண்ணறதுனு தெரியலை டா. நீ வர்றியா…?” என்று கேட்டதும், “பத்து நிமிஷத்துல வர்றேன்” என்றவன் சக்தியிடம் நிலைமையை விடைப்பெற்றான்.

    கால் மணி நேரம் கழித்து பூர்ணா வீட்டுக்கு வந்த சத்யதேவ் விக்னேஷை கண்டு, “போலிஸிடம் கம்ப்ளைன் பண்ணினியா… போன் சுவிட்ஆப் ஆகியிருக்கு.” என்று வந்தான்.

     ”இனி தான் போகணும்.” என்று விக்னேஷ் நாராயணனை கண்டான்.
  
   “பூர்ணா அவளோட வுட்பியை பார்க்க போயிருக்கலாமே. அவரிடம் கேட்டிங்களா?” என்று சத்யதேவ் கேட்டதும், கேட்கலை… அவருக்கு பூர்ணா காணோம்னு சொல்ல வேண்டாமேனு” என்று தயங்கினார்.

    “காணோம்னு சொல்லாம பூர்ணா உங்களை பார்க்க போறதா சொன்னா பார்த்தாளானு கேளுங்க” என்று சத்யதேவ் கூறவும் நாராயணன் நம்பர் தரவும் விக்னேஷ் சரவணனுக்கு போன் போட்டு கேட்டு நின்றான்.

     “எங்க பாஸ் பார்க்க வர்றேன் வர்றேன்னு சொல்லறா.. வந்து பேச மாட்டேங்குறா. அரேன்ஜ் மேரேஜ் என்றால் இப்படி தான் இருக்குமா?” என்று கேட்டு அப்பா அம்மாவோடு பூர்ணாவுக்கு நெக்லஸ் எடுக்க வந்ததாக கூறினான்.

    சத்யதேவ் கட் பண்ண கூறவும் “ஓகேங்க.. நான் அப்பறம் பேசறேன்” என்று கத்தரித்தான்.

   “என்னடா பண்ண?” என்று கேட்டான் விக்னேஷ்.

     “லேட் பண்ண வேண்டாம். முதல்ல போலிஸ்ல கம்பிளைன் பண்ணிடுவோம்” என்று நாராயணனை அழைத்து சென்றனர்.
  
    போலிஸ் ஸ்டேஷன் அடியெடுத்து வைக்கவும் உடைந்து அழுதார். அதுவும் போலிஸ் “பிடிக்காம கல்யாணம் ஏற்பாடு பண்ண பார்த்திங்களா… பொண்ணு லவ் பண்ணி எவனோடவாது  ஓடிடுச்சா” என்று கேட்ட நிமிடம் சத்யதேவ் வாயெடுக்கும் முன் “அவ அந்த மாதிரி பொண்ணு இல்லை.” என்று கத்தினார் நாராயணன்.

       “எப்ப காணோம், எந்த ஆபிஸ்ல ஒர்க் பண்ணறாங்க, யார் மீதாவது சந்தேகம் இருக்கா என்று கேள்விகளை அடுக்கவும், “யார் மேலயும் சந்தேகம் இல்லை சார். கல்யாணம் கூட அவளிடம் கேட்டுட்டு தான் ஏற்பாடு செய்தேன்.” என்று குமறினார்.

    “மாப்பிள்ளைக்கு தெரியுமா?” என்று கேட்டதும் “தெரிந்தா திருமணம் நின்றுடுமோனு பயமாயிருக்கு. அவரிடம் போன் போட்டா, அவளுக்காக தங்க நெக்லஸ் வாங்க கடையில இருக்கறதா சொன்னாங்க.” என்று தவித்தார்.

    பின்னர் சத்யதேவ் சூர்யாவை பற்றியும், ஒருதலையாய் காதலிப்பதையும் போலிஸுக்கு கூற பின்னர் போலிஸ் சூர்யாவை வரக்கூறினார்கள்.

    சூர்யா வரும் வரை காத்திருந்தனர். நாராயணன் மிகவும் பரிதவிப்போடு மகளுக்காக வேண்டுதலிட்டார். பெருமாளிடம் சேவித்து வந்தப்பின்னரும் கண்ணீரை பரிசாய் தருகின்றாரே என்ற கவலையில் மூழ்கினார்.

-தொடரும்.
-பேரரளி.