பூ பூக்கும் ஓசை-18

பூ பூக்கும் ஓசை-18

     விக்னேஷ் காலையிலேயே வீட்டிற்கு சென்று அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூற ஸ்ரீநிதி கல்லூரிக்கு கிளம்பவும் அவனோடு செல்வதாக கூறி விடைப்பெற்றாள்.

     பூர்ணா கேப் வந்ததும் அவளும் கிளம்பினாள். அவள் வந்ததும் சத்யதேவ் இடத்தை காண அது வெற்றிடமாக காட்சியளித்தது.

    தன் பணியை கவனிக்க அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தான்.

   அவன் வந்து அரை மணி நேரம் கழித்து பூர்ணா அழைத்து காரணம் கேட்க, “பெர்ஸனல் மேம்” என்றான்.
   
    பூர்ணாவுக்குள் அவனின் மேம் முதல் முறை வலித்தது. “தேவ்… கலைவாணி விக்னேஷ் நேத்து வந்தாங்க ஹாப்பியா போச்சு. மார்னிங் தான் விக்னேஷ் வீட்டுக்கு போனார். ஸ்டில் கலை வீட்ல தான் இருக்கா.” என்று கூறவும் “நேத்தே சொல்லிட்டிங்களே” என்று கூறினான்.

     “என்னாச்சு.. ஒரு மாதிரி டல்லா இருக்கிங்க. உங்களுக்கு விருப்பமில்லைனா விட்டுடுங்க. சொல்லணும்னா சொல்லுங்க” என்று அக்கறையாய் கேட்டாள்.

     “ஒன்னுமில்லை… உனக்கு சொன்னா புரியாது. என் சித்தப்பா பொண்ணுக்கு மேரேஜ் போக முடியலை” என்று அயர்ச்சியாய் கூறினான்.

     “ஐசுவர்யானு ஆன்ட்டி சொன்னாங்களே அவங்களுக்…க்..” என்று நிறுத்தினாள்.

    “ஓ… தெரியுமா. ஆமா… சித்தப்பா பொண்ணு தங்கை… ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கேட்டியே… உன் அக்கா தங்கைக்கு இப்படி திருட்டு கல்யாணம் நடந்தா என்னடா பண்ணுவனு.

   அடிச்சேன்…. இழுத்து போட்டு செவுள்லயே நாலறை. நீ என்னை அடிச்சது எல்லாம் ஜஸ்ட் ஒத்தடம். அன்னைக்கு பார்த்திருக்கணும்” என்று திருமணம் போகயியலாத இயலாமையில் பேசினான்.
     
        “தேவ்…” என்றதும் கைதட்டும் ஓசை கேட்டது.
  
    கதவில் சாய்ந்து சூர்யா “வாவ் தேவ் தேவ்.. என்னமா உருகுற.” என்றவன் கோபமாய் “இங்க என்ன லைலா மஜ்னுவுக்கு பதிலா நீங்க டூப் போடப்போறிங்களா. லுக் இது ஆபிஸ் இங்க சீனியர் ஜூனியர் என்று கூட பார்க்காதனு பெரிய இவளாட்டம் பேசிட்டு இப்ப என்ன தேவ் என்ற கொஞ்சல்.
    
    என்ன சத்யதேவ்.. வேலையோடு உங்க லவ்வையும் பக்காவா மெயின்டெயின் பண்ணறிங்க” என்றான் சூர்யா.

      சத்யதேவோ பூர்ணாவை பார்க்க, அவளோ கையை பிசைந்து சத்யதேவை கண்டு பேச்சற்று போனாள்.

     சத்யதேவ் சூர்யா பேசியதற்கு எதற்கும் பதில் அளிக்காமல் தனது கேபினை நோக்கி சென்றான்.

     மடமடவென சிஸ்டமில் டைப் செய்தவன், தனது பணிநீக்க கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, பூர்ணாவிடம் தெரிவித்து விட்டு அவன் பாட்டிற்கு சென்றான்.

      பூர்ணா அவனின் பணிநீக்க கடிதத்தை கண்டு திகைப்புற்றுலாக நின்றாள்.

    சூர்யாவோ “என்னவொரு கெத்துல. உன் எதிர்ல திட்டியதும் வேலை வேண்டாம்னு போறான். ஏன் உன் சம்பளமே போதும்னு நினைக்கறானா” என்று கேட்டதும் பூர்ணாவோ, “தேவையற்ற கேள்விக்கு பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை.” என்று பூர்ணா சூர்யா என்பவனை புறம் தள்ளினான்.

     “நான் காலேஜ்ல விளையாடினேன். ஆனா இப்ப உண்மையா லவ் பண்ணியும் என்ன உதாசினப்படுத்தறியே. ஏன் அவன் தான் உன் கண்ணுக்கு அழகனா தெரியறானா.

    அன்னிக்கு போட்டோவுல ஒருத்தனை காட்டின.” என்று நெருங்கவும், பூர்ணாவோ “சூர்யா திஸ் இஸ் தி லிமிட். பெர்ஸனல் பகிரணும்னு அவசியமில்லை.” என்று கூறிவிட்டு ப்ரியாவை கூப்பிட அவள் வந்ததும் சூர்யா சென்று விட்டான்.
  
     அன்று மாலை வீட்டுக்கு போகும் பொழுது இரண்டு மூன்று முறை சத்யதேவிற்கு அழைக்கவும் அவன் எடுக்கவில்லை.

      அவமானமாய் உணர்ந்து மெதுவாய் வீட்டுக்குள் நுழைய டிவி சத்தம் சிரிக்கும் சப்தம், மகிழ்ச்சியாய் வீடு நிறைந்திருப்பதை உணர்த்தியது.

     ஸ்ரீநிதி விக்னேஷிடம் நன்றாய் பேசவும் கலைவாணியோ “அக்கா வந்துட்டா” என்று கூறவும் விக்னேஷை பார்த்து பேச்சற்று நடந்தாள்.

     “கலைவாணி நான் சத்யதேவை பார்த்துட்டு வந்துடறேன்.” என்று நழுவினான்.

     பூர்ணாவோ விக்னேஷ் சென்றதும் அவனையே பார்த்து ஏதோ சொல்ல வந்து வாயடைத்து நின்றாள்.

      விக்னேஷ் நேராக சத்யதேவ் வீட்டுக்கு வந்த பொழுது எங்கோ செல்ல தயாராகி இருந்தான்.
 
     “ஹாய் டா” என்று விக்னேஷ் வந்ததும் “வாப்பா… மாமனார் வீட்ல தான் இருக்கியா சந்தோஷம்பா” என்று காயத்ரி கேட்கவும் “ஆமா அம்மா” என்று சிரித்தபடி வந்தவன் “என்னாச்சு டா போன் பண்ணா எடுக்க மாட்டுற.” என்று வந்தான். அவன் கேட்டு முடிக்க பத்ரியின் பைக் சத்தமும் வாசலில் கேட்டது.

     “உன்னையும் சக்தியும் புரிஞ்சிக்கவே முடியலைடா. உன் தங்கை கல்யாணத்தை பார்த்து வெறி வந்தவன் மாதிரி அடிச்சதா கேள்விப்பட்டேன். அதே தப்பை இங்க நான் செய்துட்டு கல்யாணம் பண்ணறேன்னு சொன்னதும் முதல் ஆளா மாலை பூங்கொத்துனு வாங்கிட்டு வந்து 
சேர்த்துவச்ச.

      அவன் என்னடானா படிச்ச வேலையை விட்டு சொந்தமா
பீட்சா கார்னர் வைக்கணும்டா கடைத்திறந்து நிற்கறான்.” என்று விக்னேஷ் பேசவும் பத்ரி கையை வைத்து தடுத்தான்.

    “மச்சான்… அதெல்லாம் விடு. இவனை அறைந்த அந்த பொண்ணு பூர்ணாவுக்கு கீழ வேலை பார்க்கறானாமே அது ஏன் நம்மிடம் சொல்லலை கேளு டா.

    ஒரு மாசம் ஆகப்போகுது. சார் மூச்சு விடலை. இதுல அந்த பூர்ணாவிடம் சார் உங்க காவியத்தை புட்டு வச்சி ஒன்னு சேர்த்திருக்கார்.

    நம்மிடம் ஏன் சொல்லலை. இப்ப ரெண்டு நாளா ஏன் போன் எடுக்கலை அதுக்கு ஆன்சர் பண்ண சொல்லு டா.” என்று பத்ரி சேர்ந்து கொண்டு வினாவினான்.

    சத்யதேவ் மூச்சு விடாமல் யாரிடமும் பேசாது இருந்தான்.

     “அவனிடம் சொல்லியிருப்பானா டா. சக்தியும் நேத்துல இருந்து சொல்லி வச்சாப்ல சரியில்லை. போன் எடுக்கலை.” என்று பேசவும் சத்யதேவ் யோசனைவயப்பட்டு திரும்பினான்.

    “இங்க கேட்கறதுக்கு பதில் சொல்லு சத்யா” என்று விக்னேஷ் அதட்டினான்.

     “டேய்… இன்னிக்கு தான் ஜாபை ரிசைன் பண்ணியிருக்கேன்  எனக்கு அங்க செட் ஆகலை. எப்படியும் அங்க நிலைச்சி இருக்க மாட்டேனு தெரியும். அதனால சொல்லலை அப்படியே சொன்னாலும் என்ன பண்ணுவிங்க. ரெண்டு பேரும் ஓட்டுவீங்க” என்று கூறினான்.

    இரு நட்புக்களும் அவனை புரிந்து கொண்டு அமைதியானது.

     “டேய் அவனையும் கூப்பிடு டா. ஒன்னா இங்கயே சாப்பிட்டு போவோம்.” என்று விக்னேஷ் கூறிட, “எதுக்கு.. டேய் அவன் லோன் வாங்கி கடைதிறந்து இருக்கான். நினைச்ச நேரம் மூடவா… நீ மாமியார் வீட்டுக்கு தானே வந்த அங்க போய் மொக்கு” என்று கூறினான் சத்யதேவ்..

பத்ரியோ “மச்சி… எங்க வீட்ல பெரிய சண்டை டா. ஒரு வழியா சமாதானமாகி வனிதாவையே கட்டி வைக்கிறதா முடிவு பண்ணிட்டாங்க.

    ஆனா ஆறு மாசம் போகட்டும்னு ரூல்ஸ் போட்டிருக்காங்க டா” என்று பத்ரி கூறவும் சத்யதேவ் மற்றும் விக்னேஷ் வாழ்த்து தெரிவித்தனர்.

     ஹாலில் உதயேந்திரன் காயத்ரியிடமும் பகிர அவர்களும் வாழ்த்தினார்கள்.

     “சொல்ல மறந்துட்டேன் சத்யா. உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு பொண்ணு வருமே. நீ கூட தங்கை மாதிரினு சொல்வியே அந்த பொண்ணு பெயர் ஸ்ரீநிதியாடா. அங்க தான் கலை வீட்ல இருக்கா. படிக்க வந்திருக்கா. என்னையெல்லாம் பார்த்திருக்களாம் டா. கலையோட அக்கா பூர்ணாவை விட நல்லா பழகுறா. அண்ணா அண்ணானு வாய் நிறைய கூப்பிடறா.” என்றதும் சத்யதேவிற்கு ஸ்ரீநிதியின் செய்கைக்கு காரணம் புரிந்தது.

    ஸ்ரீநிதி தன்னிடம் உதவி கேட்டு இயலாதென அடுத்து விக்னேஷிடம் உதவி கேட்க முயல்கின்றாளென.

     “உன்கிட்ட தனியா பேசணும் வா” என்று வாக்கிங் போல அழைத்து சென்றான்.

      ஸ்ரீநிதி சக்தியை லவ் பண்ணறாளாம். நீங்க எல்லாம் ஐசு விஷயத்துல நான் மனசு ஒடிந்து போனேன்னு வந்து இரண்டு வாரம் இருந்திங்களே.

   அதுல அவ சக்தியை நோட் பண்ணியிருக்கா. சக்தியை பத்தி அம்மாவிடம் விசாரிச்சு இப்ப லவ்வுனு சென்னை வந்து இருக்கா. அங்க படிக்கறதுல எல்லாம் அரியர் வச்சிட்டு இங்க இன்ட்டீரியல் கோர்ஸ் படிக்கணும்னு வந்திருக்கா. அவனை தேடி நேத்து பீட்சா கடையில உட்கார்ந்து ஒரு மணி நேரமா போக மாட்டேன். என் லவ்வுக்கு ஓகே சொல்லுனு அவனை டார்ச்சர் பண்ணியிருக்கா.

   அவன் எனக்கு போன் போட்டு அவளை கூட்டிட்டு போக சொல்லிட்டான். நான் வீடு எதுனு கேட்டப்ப தான் அவ பூர்ணா வீட்டை சொன்னா. ஷாக் ஆகிடுச்சு. சுத்தி சுத்தி பூர்ணாவையே வந்து சேரவும் மைண்டே சரியில்லை.

   டேய்… நீ அவ நல்லா பேசறானு உதவி பண்ணிட்டு திரியாதே. இப்ப தான் கலையோட அவங்க வீட்ல சேர்த்து இருக்காங்க.” என்று சத்யதேவ் கூறி முடித்தான்.

    “என்னடா பொண்ணுங்க இந்தளவு பாஸ்டா இருக்காங்க. வோர்த் தான் நம்ம சக்தி. பார்த்ததும் பிடிக்கிறதுல தப்பில்லையே.” என்று விக்னேஷ் பேசவும் தலையில் தட்டினான்.

    “நீ இப்படி தான் திங்க் பண்ணுவேன்னு சொல்ல வந்தேன். ஹெல்ப் பண்ணறேன்னு சக்தியிடம் வாங்கிக்கட்டிக்காதே.” என்றான் சத்யா.

     “ஏன் மச்சி ஒரே வீட்ல நாம மூனு பேரும்… சாரி பூர்ணாவுக்கு எவனையோ கோர்த்துட்டாங்க. நாங்க இரண்டு பேரும் பொண்ணு எடுத்தா என்ன தப்பு” என்றவனை சத்யதேவ் சட்டென திரும்பி முறைத்தான்.

     “ஏன்டா… பிரச்சனை பண்ணணும்னே பேசுவியா. பல்லை உடைச்சிடுவேன். நானே எந்த பிரச்சனையும் வேண்டாம்னு ஒதுங்கியிருக்கேன். நீ வேற… தயவு செய்து அவளை உசுப்பேத்தாதே. படிக்கற வேலையை பார்க்க சொல்லு.” என்று கடிந்தான்.
 
   “மச்சான் நான் கூட பூர்ணா அறையவும் உன் பழைய கோபம் தலைதூக்க திருப்பி அடிச்சி அப்படியே சாரி கேட்டு லவ் டெவலப் ஆகும்னு எதிர்பார்த்தேன் டா. பத்ரி மச்சான் கூட அது மாதிரி பேசிட்டு இருந்தான்.

     நீ வேற ஒரே ஆபிஸ் என்றதும் ஒரு நிமிஷத்துல என்னனென்னவோ எக்ஸ்பெக்ட் பண்ணினேன் டா.” என்றதும் சத்யதேவ் பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டதும் “பொறுமை டா… ஏதோ எக்ஸ்பெக்ட் பண்ணினேன்.” என்று பேசவும் தூரத்தில் சரவணன் இருவரையும் பார்த்தபடி வண்டியை நிறுத்தினான்.

    போனை எடுத்து பூர்ணா அனுப்பிய தங்கை கலைவாணி , தங்கை கணவர் விக்னேஷ் என்றதை எடுத்து பார்த்தான்.

   ஆனால் கீழேயிறங்கி போய் அறிமுகமின்றி பேச தயங்கி வீட்டிற்கே வண்டியை செலுத்தினான்.

    பூர்ணா வீட்டை அடைந்ததும் அழைப்பு மணி அழுத்த, கதவை திறந்த பூர்ணாவோ வரவேற்க மனமின்றி நின்றாள்.

    “ஹாய் டியர்… ஷாக்கிங் சர்பிரைஸ்… இன்னிக்கு வந்தா தானே உங்க சிஸ்டர் அவங்களோட ஹஸ்பெண்ட் பார்க்க முடியும்.” என்றவனை கண்டு “வாங்க” என்று வரவேற்றாள்.

    “வீட்ல யாருமில்லையா?” என்று பூர்ணா அருகே வரவும், பூர்ணாவோ அவனின் நெருக்கத்தில் எரிச்சலடைந்து அதை முகத்திலும் பிரதிபலித்தாள்.

     “என்னாச்சு… மேரேஜ் டேட் சொல்ல வந்தேன். அப்ப தானே பத்திரிக்கை அடிக்க முடியும்.” என்றதும் பூர்ணாவுக்குள் கலக்கமே உண்டானது.

-தொடரும்.
~பேரரளி