பூ பூக்கும் ஓசை-17

பூ பூக்கும் ஓசை-17

    “அக்கா… மாமா அழகாயிருக்கார். மாமாகிட்ட என்னை பத்தி என்னை சொல்லி வச்சியிருக்கிங்க. போன் போட்டு பேசுவியா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினாள்.

      “இதுவரை ஒரு முறை பேசியிருக்கேன் கலை. அப்பா சின்ன பொண்ணு லவ் பண்ணி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்கானு சொல்லியிருக்காங்க. வேறயேதும் சொல்லலை வேண்டுமின்னா… வர்ற புதன் இன்வெயிட் பண்ணி இதான் என் தங்கைனு சொல்லி அவ கன்சீவா இருக்கா. வீட்ல எல்லாரும் மன்னிச்சு பேசிக்கிட்டோம்னு சொல்லிடலாம்” என்று திரைக்கதை எழுதினாள்.

    “ஆமா ஸ்ரீநிதி இங்க தான் தங்கிருக்கறதா சொன்னிங்க. இன்னும் வரலை.” என்று கேட்டதும் தான் கோகிலாவுக்குள் ஸ்ரீநிதி வரவில்லை என்றதே உதித்தது.

    “என்னங்க போன் போட்டு பாருங்க” என்று நாராயணனிடம் கூறவும், அவரும் அழைத்தார். ஆனால் அவளோ தொடர்பை துண்டித்தாள்.

    ஸ்ரீநிதியோ இன்னமும் சத்யதேவ் முன்னால் கெஞ்சுதலோடு நின்றாள்.

      “லுக் மிஸ்டர் டியர் பிரெண்ட் சத்யதேவ். வந்தியா… பீட்ஸா ஸ்டார்டட் சாப்பிட்டியா… நண்பன் கடை என்று கூட பார்க்காம காசை எடுத்து வச்சி மீதி சில்லரையை வாங்கிட்டு போனியா இப்படி தான் இருக்கணும். அதை விட்டு இங்க இருந்து போகமாட்டேன் அது இதுனு உன் தங்கை பண்ணறதை வேடிக்கை பார்த்த, வேலை செய்யற பையனிடம் கழுத்தை பிடிச்சி அவளை வெளியே தள்ளிட சொல்வேன்.” என்றான் சத்யதேவ் நண்பன் சக்தி.

     ஸ்ரீநிதி இங்கு கல்லூரிக்கு அருகே இருந்த பீட்சாகடைக்குள் வந்ததன் பலன் சக்தி பார்வை வட்டத்தில் விழுந்தான். அவள் தேடி வந்த நாயகன் சக்தியை கண்டதும் ஆர்பரித்த மனதை கட்டுப்படுத்தி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

    ‘ஹாய் நான் தான் ஸ்ரீநிதி. சத்யதேவ் அண்ணா வீட்டுக்கு பக்கத்துல பார்த்திருப்பிங்களே.’ என்று கூறவும் சக்தி விழித்தான்.

     “கோயம்புத்தூர்ல… ஸ்ரீனு  அண்ணாவோட” என்றதும் முதலில் மரியாதை நிமித்தமாய் சத்யதேவிற்காக பேசினான்.

    ஆனால் ஸ்ரீநிதி “நான் உங்களை தேடி தான் வந்தேன். அண்ணா வீட்ல பிரச்சனைனு நீங்க வந்திங்களே அப்ப அண்ணாவை நீங்க சமாதானம் செய்து பேச வைத்து சிரிக்க வச்சப்ப எல்லாம் உங்களை நோட் பண்ணினேன். அப்ப க்ரஷ் மாதிரி இருந்தது.

    ஒரு நாள் நீங்க எல்லாம் திரும்ப போனதா அண்ணா சொன்னார். அன்னையிலருந்து ஏதோ என் லைப்ல மிஸ்ஸான பீல். அந்த பீலை அனலைஸ் பண்ணினப்ப தெரிந்தது… நான் உங்களை லவ் பண்ணறேன்னு” என்றதும் சக்தி எழுந்துவிட்டான்.

     அவன் கையை பிடித்து அமர வைத்து “ப்ளிஸ் என் லவ்வை அக்சப்ட் பண்ணுங்க.” என்று கூறவும் “என்னை பத்தி என்ன தெரியும்னு கோவையில இருந்து சென்னைக்கு வந்த?” என்றான் சக்தி.

    “தெரியும் காயத்ரி ஆன்ட்டி சொல்லியிருக்காங்க. நீங்க அநாதை ஆசிரமத்துல வளர்ந்து காலேஜை ஸ்பான்சர்ல முடிச்சிங்கனு. அண்ணாவோட பெஸ்ட் பிரெண்ட்… பத்ரி விக்னேஷ் விட அண்ணாவுக்கு நீங்கனா ரொம்ப க்ளோஸ் என்றவரை தெரியும்.” என்று கூறி முடித்தாள் 

    “மரியாதையா சாப்பிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கிளம்பு.” என்று எழுந்துவிட்டான்.

    “நான் எழுந்துக்க மாட்டேன்” என்று ஒரு மணி நேரம் அமர்ந்த இடத்திலே இருந்தவளால் சக்தி எரிச்சலோடு சத்யதேவிற்கு அழைத்து “கடைக்கு வாடா” என்று மொழிந்து விட்டு கடுப்போடு பணியாற்றினான்.

    சத்யதேவ் வந்ததும் “ஹேய்… ஸ்ரீ எப்படி இருக்க. இங்க எப்ப வந்த?” என்று மகிழ்ச்சியாய் கேட்டு முடிக்க சக்தியோ கோபமாய், “டேய் மரியாதையா இவளை கூட்டிட்டு கிளம்பு.” என்று கத்தவும் முதலில் புரியாமல் “ஏன்டா என்ன ஆச்சு.?” என்று கேட்டான்.

    “சக்தி இது யாரு தெரியுதா எங்க பக்கத்து வீட்ல ஒரு வாலு இருக்குமே. எப்ப பாரு என்ன அண்ணா அண்ணானு சுத்துமே. நான் கூட ஸ்ரீநிதினு இன்ட்ரோ கொடுத்தேனே டா. என் தங்கை மாதிரி டா” என்று தெளிவாய் கூறினான்.

    “மயிறு… உன் தங்கை என்னை லவ் பண்ணறாளாம. என்னை தேடி கோவைல இருந்து இங்க சென்னைக்கு படிக்க வந்தேன்னு பொய் சொல்லி வந்திருக்கா. தயவு செய்து புத்திமதி சொல்லி அனுப்பு” என்றதும் தான் சத்யதேவ் ஸ்ரீநிதியை கவனித்து விசாரித்தான்.

   கீழே விழுந்த ரெக்கார்ட் போல திரும்ப திரும்ப “சக்தியை காதலிக்கறேன் அண்ணா” என்று பிணாத்தினாள்.

     பொறுமையாய் எடுத்து கூறியும் அசையாது உட்கார்ந்திருக்க, சத்யதேவிற்கு கோபம் வந்து அங்கிளுக்கு கால் பண்ணவா என்றதும் தான் பயந்து எழுந்தாள்.

     அவளை தானே கொண்டு போய் விடுவதாக கூறி அட்ரஸ் கேட்டதும், பூர்ணா விலாசத்தை கூறினாள்.

    “இந்த வீட்ல நீ எப்படி?” என்று கேட்டான் சத்யா.

   “அது என் மாமா நாராயணன் வீடு. அம்மா அண்ணா வீட்ல தங்கி படினு அனுப்பினாங்க” என்று கூறவும் வண்டியில் அமர கூறினான்.

     சத்யதேவ் மனமோ ஏற்கனவே கலை காதல் திருமணம் புரிந்தாள். இதுல பூர்ணாவுக்கு அவசரமா திருமணம் பார்த்தாங்க. இப்ப படிக்க வந்து இவ காதலில் விழுந்தாலும், உங்க வீட்டுக்கு அனுப்பி தான் இப்படி ஆச்சுனு சொல்ல எத்தனை நிமிடம் ஆகும்.

   தனது சித்தப்பா கூறவில்லையா. அண்ணா என்று அழைப்பவன் எல்லாம் சொந்த அண்ணனாகிடுவானா? என்று அதே போல ஸ்ரீநிதி தந்தை பத்மநாபன் அங்கிள் பூர்ணா வீட்டை கூறிவிட்டாள்.

  மனிதர்கள் செய்யும் பெரிய தவறே. தன் தவறை கூட அடுத்தவன் தலையில் கட்ட பார்ப்பது தானே. என்றவன் சிந்தனையில் தானாய் வண்டியை கோவில் முன் நிறுத்தினான்.

    உங்க மாமா கடை மூடியிருக்கு. வீட்டுக்கு போ” என்றான் சத்யதேவ்.

     “அண்ணா… உங்களுக்கு மாமாவை தெரியுமா?” என்று கேட்டாள். அதில் அதிக பயம் இருந்தது.

    “உங்க மாமா நாராயணன் தெரியும் அத்தை கோகிலா. அக்கா பொண்ணு பூர்ணா கலை ரொம்ப நல்லாவே தெரியும். இன்னொரு இன்பர்மேஷன் சொல்லறேன் கேட்டுக்கோ கலைவாணி காதல் திருமணம் பண்ணியிருக்குற பையன் வேறயாருமில்லை. என் பிரெண்ட் விக்னேஷ். பூர்ணா என்னோட டீம் லீடர்” என்று வரிசையாய் குண்டை தூக்கி போட்டான்.

     “அண்ணா…” என்று விழிவிரிய நின்றவளிடம் “உனக்கு ஏற்கனவே தெரியும் எங்க வீட்ல என் தங்கை ஐசு விவகாரம். இங்க கலைவாணி விவகாரமும் தெரியும் தானே. எந்த தைரியத்துல நீயும் அங்கிருந்து வந்த. பெத்தவங்க மன்னிச்சி ஏத்துப்பாங்கன்னா… முதல்ல படிக்கிற வழியை பாரு. இல்லை… நீ பக்கத்து வீட்டு ஆளு தானேனு நினைச்சா என்னவோ பண்ணி தொலை.

    ஆனா சக்தி கஷ்டப்பட்டு சொந்த உழைப்புல கடை திறந்து இருக்கான். அங்க வந்து இன்னிக்கு பண்ணின மாதிரி உட்கார்ந்து போக மாட்டேன்னு அடம் பண்ணாதே.” என்று மனதில் புரியும் விதமாக எடுத்துரைத்து சென்றான்.

    வீட்டுக்கு வந்ததும் கலைவாணி இருக்க, அவளை கண்டு வந்தவள் போன் எடுக்காததற்கு காரணம் கேட்டதும் சைலண்ட்ல போட்டுட்டுட்டேன் மாமா. பிரெண்ட்ஸோட படத்துக்கு போனோம்” என்று பொய்யுரைத்தாள்.

   கலைவாணி வந்ததும் கிளம்பவா என்று வீட்டில் தங்க கூறி அப்படியே சுபத்ராவோடு வீடியோ காலில் பேசினார்கள்.

    பூர்ணாவோ நிறைவாய் வீடு சந்தோஷத்தில் மூழ்கவும் சத்யதேவிற்கு போன் போட்டாள்.

     “சொல்லு” என்று ஸ்ரீநிதியிடம் பேசிய அதே கோபத்தோடு கேட்டான்.

    “கலைவாணி உங்க பிரெண்ட் விக்கி வந்துயிருக்காங்க. அம்மா அப்பாவிடம் பேசியாச்சு. ஒரு மாசத்துலயே எல்லாரும் சேர்ந்துவிட்டது சந்தோஷமா இருக்கு.” என்று கூறினாள்.

    “ஓகே. வேற..” என்று கேட்டான் சத்யதேவ்.

   பூர்ணாவுக்கு அவன் பேச்சு ஒருவித ஒட்டாத தன்மையாய்படவும் “வேறவொன்னுமில்லை… தேங்க்ஸ்” என்று செல்லை அணைத்தாள்.

     சத்யதேவோ துவண்டு போய் வீடு வந்து சேர, உதயேந்திரன் காயத்ரி இருவரும் வருத்தமாய் அமர்ந்திருந்தனர்.

    “சத்யதேவ்… ஐசுக்கு கல்யாணம் பண்ண போறாங்க” என்று உதயேந்திரன் கூறவும், “சந்தோஷம் பா. குழந்தையை கொடுத்தவனை நினைச்சி இன்னமும் பீல் பண்ணாம தைரியமா மேரேஜ் பண்ணறா நல்லது தான் அப்பா. எப்ப கல்யாணம்” என்று சற்று நிம்மதியாய் கேட்டான்.

     “நாளைக்கு ஏழு டூ ஒன்பதரைக்கு கல்யாணம்” என்று கூறினார் உதயேந்திரன்.

    “என்னப்பா இப்ப வந்து சொல்லறிங்க. உடனே எப்படி போற.. அப்பா… சித்தப்பா உங்களிடம் சொல்லலையா? என்றான் சத்யதேவ்.

     “ஒதுக்கிட்டாரு டா. நாம தேவையில்லைனு ஒதுக்கிட்டாரு?” என்று கண் துடைத்தார் காயத்ரி.

     இரண்டு நிமிடம் மௌவுனம் குடிப்புக, “ஐசு நல்லாயிருக்கட்டும் அம்மா. இங்கிருந்து பிளஸ் பண்ணுங்க. வேண்டாம்னு ஒதுங்கறவங்க முன்ன போகணும்னு அவசியமில்லை” என்றவன் சோர்வாய் அறைக்குள் சென்றான்.

    சுற்றி சுற்றி தன் நண்பர்களோடு பூர்ணா குடும்பம் சுழலாய் பிணைக்கும் விதியை திட்டி தீர்த்தான்.

    நாயகன் இங்கு புலம்பி வேதனை அடைய நாயகியும் வேதனையில் உழன்றாள்.

    “அவர் ஏன் ஒழுங்கா பேசலை. எப்பவும் கையை பிடிச்சி நிறுத்தி நிதானமா சொல்றதை கேளுனு சொல்வார். திருப்பதியில அத்தனை களோபரத்துல கூட டீயை வாங்கி கொடுத்துட்டே கலை திருமணம் பற்றி பேசினார். இப்ப நான் சந்தோஷமா பேசினா சட்டுனு வைக்கிறார்.’ என்று காலம் கடந்து அவனுக்காய் தன் மனம் கேள்வி எழுப்புவதை அறியாது குழம்பினாள்.

        ஸ்ரீநிதியோ கலைவாணியோடு பேசி நேசக்கரம் கொடுத்தாள். அதுவும் விக்னேஷை அண்ணா அண்ணா என்று உரிமையாய் விளித்து டின் டின்னாய் ஐசை வைத்தாள்.

    சத்யதேவிடம் தன் பாட்சா பலிக்காதென விக்னேஷ் அண்ணாவை தன் பக்கம் ஆள் சேர்க்க முயன்றாள்.

    அது அறியாது விக்னேஷ் பூர்ணாவை விட ஸ்ரீநிதியிடம் நன்றாக பழகினான்.

    நாரயணனும் கோகிலாவும் விக்னேஷை தூரத்திலிருந்து பார்த்து தற்போது பழகவும் இனிமையாய் தோன்றிட அதுவும் மகளை அக்கறையாய் அன்பு செலுத்த நிறைவாய் உணர்ந்தார்கள்.

    அந்த நேரம் பூர்ணா போன் மின்னி ஒளிகொடுக்க, அது சரவணன் அனுப்பியது என்று அறிந்தாள்.  “ஹாய் பூர்ணா… சாப்பிட்டாச்சா” என்று வாட்ஸப்பில் அனுப்பி கேட்டதும் அதை திறவாமலே மேலே காட்டியதில் படித்து விட்டு நைஸாக ஆப்லைன் சென்றதாக மொபைல் டேட்டாவை ஆப் செய்து உறங்கினாள்.

-தொடரும்.
~பேரரளி