பூ பூக்கும் ஓசை-15

பூ பூக்கும் ஓசை-15

     “அம்மா.. டீ குடிக்கறிங்களா?” என்று கோவிலை விட்டு வெளியே வந்ததும் பூர்ணா கேட்டதும், வாங்கு மா” என்றதும் “நீங்க இருங்க நான் போறேன்” என்று சத்யதேவ் முன் செல்ல, “அத்தனை கப் டீயும் ஒரே ஆள் எடுக்க முடியாது.” என்று அவனோடு வந்தாள்.

    ஐந்து டீ ஒரு காபி ஆர்டர் கொடுத்து விட்டு நின்றனர். அவ்விடம் சற்று பெற்றோர்கள் இருக்கும் இடத்தை தள்ளி மறைத்து இருந்தது.
  
    “என்ன பிளான் பண்ணி என்னை உன்னோட கூட்டிட்டு போற. ஏற்கனவே அம்மா அப்பாவுக்கு ஒரே ஏரியா என்றதும் பேச நிறைய டாபிக் கிடைச்சிருக்கும். அங்க சுத்தி இங்க சுத்தி கலைவாணி பத்தி பேச்சு வரப்போகுது. நீ தான் கல்யாணம் பண்ணி வச்ச உன் பிரெண்ட் தான் விக்னேஷ்னு தெரியப்போகுது.” என்று அங்கே கொதித்த பாலை விட பெண்ணவள் அதிகமாகவே கொதித்தாள்.

     “கொஞ்சம் நீயாவது காது கொடுத்து கேட்கறியா… என்னவோ உன் தங்கை கன்சீவா ஆனதை மட்டும் யோசிக்கறிங்க.

   உன்னிடம் ஒரு ஆம்பள பக்கத்துல வந்தாலே நாலடி எட்டி நிறுத்தற மாதிரி பேசற. ஏன் கைப்பிடிச்சதுக்கு என்னை அறைந்த.

     உன் தங்கை லவ் பண்ணலாம். ஆனா கர்ப்பமாக இடம் கொடுத்திருப்பாளா? யோசிக்க மாட்ட?” என்று திட்டினான்.

      ”இந்த பக்கம் திரும்பறியா…” என்று கடிந்து, “ஆக்சுவலி சக்தி பீட்சா கார்னர் ஓபன் பண்ணினான்.

   எல்லாம் உன் தங்கை பெர்த்டே அப்போ தான். ஹாப்பியா நான் பத்ரி வனிதா, அண்ட் விக்கி-கலை எல்லாரும் அவனோட கடைதிறப்பு விழாவுக்கு போனோம்.

    அப்ப தான் ஆப்டர்நூன் கடையடைச்சிட்டு மூடறப்ப கை அலம்பி வீட்டுக்கு போறோம்னு போனாங்க உன் தங்கை அண்ட் என் பிரெண்ட் விக்கி.

    அவங்க நேரம் உன் தங்கை சிக்கன் ஸ்டோரேஜ் பண்ணற இடத்தை காட்ட சொல்ல, இரண்டு பேரும் அங்க போயிருக்காங்க. அவங்க போனதா நினைச்சி நாங்க டோர் லாக் பண்ணிட்டு திரும்பிட்டோம்.

       ரொம்ப நேரமா சிக்கன் வச்சிருக்கற ஸ்டோரேஜ்ல இருந்துயிருக்காங்க. போன் போகலை…. பத்ரி நாயுக்கு மெஸேஜ் பண்ணியிருக்கான் அது தான் கடைசியா செண்ட் ஆனது. அந்த நாயு போன் பேட்டரி லோவாகி, வனிதாவோட ஊர்சுத்திட்டு வீட்டுக்கு லேட்டாக போய் ஈவினிங் தான் பார்த்திருக்கான்.

     கொஞ்சம் யோசிச்சு பாரு. ப்ரீஸாகி செத்து போக வேண்டியது. அந்த நேரம் நடந்த உடல் தேவை தான் உயிரோட வத்சிருந்தது.

     பச்… டீம் லீடர் தானே நீ… அன்னிக்கு நடந்தது ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்திக்க யூஸ் பண்ணின டெக்னிக். நாங்க அதுக்கு பிறகு போய் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் நார்மலாகி வீட்டுக்கு வனிதாவை கொண்டு போய் விட வச்சோம்.

    தப்பு செய்யணும்னு செய்யலை. அதுவா நடந்தது. இது அவங்களை பொறுத்தவரை ஜஸ்ட் ஆக்சிடெண்ட்.” என்றதும் பூர்ணா மனமோ தங்கை பிறந்தநாளன்று இறந்து இருக்க வேண்டியது கடவுளே என்று வேண்டியது.

    “அநேகமா உன் தங்கை உன்னிடம் பேசணும்னு சொன்னா. மேபீ சொல்வா.. நான் தான் அதுக்கு முன்ன முந்திரிக்கொட்டையாட்டும் உளறிட்டேன்.

     ஐ அம் சாரி…. நீ என்னை ஏதோ வில்லன் மாதிரி பார்க்கற.. என்னால அதை தாங்க முடியலை. அதான் மனசுல இருக்கறது சொல்லிட்டேன்.

    எங்கம்மாவிடம் சொன்னதால தான் அவங்களை புரிஞ்சிட்டு விருந்துக்கு அழைச்சாங்க.

    இப்ப சொல்லு பிரெண்ட்ஸ் சப்போர்ட் பண்ணாம வேற யாரு பண்ணுவா. என் பிரெண்ட் விக்கி நல்லவன் தான். அவன் ஒன்னும் சந்தர்ப்பம் கிடைச்சதுனு தேன் குடிச்சிட்டு பறந்து போற வண்டில்லை.

    சந்தர்ப்பம் கிடைச்சா கை கழுவுற காதலர்களையும்… நான் பார்த்துட்டேன். என் நண்பனுக்கு சப்போர்ட் பண்ணறேன்னு நினைக்காதே” என்றவன் கண்கள் கலங்கியது.

     அவன் தங்கை காதலனை கூறுகின்றானென புரிந்திட இயன்றது.

     டீ காபியை அவனே மற்றவரிடம் கொடுத்து விட்டு அவளிடமும் டீயை தர, வாங்கி பருகியவள், “அம்மாவிடம் வீட்டுக்கு போய் பேசறேன்.” என்று டீயை குடித்து முடித்து அங்கேயே வைத்து சென்றாள்.

     “பூர்ணா… நான்… ஒன்னுமில்லை.. நான் ஏதாவது ஹர்ட் பண்ணிருந்தா மன்னிச்சிடு” என்று கூறவும் அவள் நின்று திரும்ப, அவன் டீக்கப்பை வைத்து சென்றான். அவளும் தாயை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

   ஏனோ அவன் கூறவந்தது வேறு… அது என்னவாகயிருக்கும் என்ற ஆர்வம் மேலோங்கியது.

       உதயேந்திரன் வற்புறுத்தலில் நாராயணன் கோகிலா காரில் ஏற, பூர்ணாவும் ஏறவேண்டிய நிர்பந்தமானது.
    
     ஏசி காரில் மிதமான வேகத்தில் செல்ல, காரில் ‘பூவே செம்பூவே உன் வாசம் வரும். வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்’ என்று பாடல் கேட்கவும் பூர்ணாவோ பழைய பாடலா என்பது போல கார் கண்ணாடியில் பார்க்க, அவனோ அதை அறிந்தவனாய் அடுத்து எஃப்.எஃம் போட்டு விட்டான்.

     பாதி தூரம் சென்றதும் உணவருந்தினார்கள். சத்யதேவ் பூர்ணாவின் பெற்றோரை கவனித்து நடந்துகொள்ள, உதயேந்திரன் பார்வையாளராய் கவனித்தார். அவருக்கு நாராயணன் இடம் பற்றி கூறவும் விருந்து சாப்பிட்ட கணம் விக்னேஷ் கூறிய அடையாளமும் ஒத்துப்போக சத்யதேவை கண்கானித்தார்.

      போதாதற்கு ‘என்னம்மா அவ்ளோ நேரம் அவங்களோட பேசிட்டு இருக்க ரொம்ப அட்டாச் ஆகிட்டியோ’ என்று காயத்ரியிடம் கேட்க அவரோ ‘அவங்க பொண்ணும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாங்க கஷ்டத்தை சொன்னாங்க. நம்ம ஐசு பத்தி பேசினேங்க’ என்று காயத்ரி கூறவும் உதயேந்திரனுக்கு அந்த சந்தேகம் வலுத்தது. கலைவாணி அக்கா பூர்ணாவோ? ஒரு வேளை பையனுக்கு அவளுக்கும் மோதல் என்றனரே என்று அவன் முகத்திருப்புதல் செய்கின்றானோயென பார்த்தால் அவளிடம் நெருக்கம் காட்ட ஓடியது உறுத்தியது.

     முன்பு தன்னை விட்டு இங்கு தனியாய் வந்ததை கூட மறந்துவிட்டு இன்று பையனிடம் பேசி விசாரிக்க ஆவல் கொண்டார்.

     மதியம் சென்னை வந்து சேர்ந்ததும் பயணம் தொடர, ஒரு ஹோட்டலில் உணவருந்தினார்கள்.
 
      மீண்டும் பயணம் ஆரம்பித்த நேரம், பாதி உறக்கத்தில் கழிந்தது.

     பின்னர் இறங்குமிடம் வந்ததும் “நீ எங்க ஒர்க் பண்ணறம்மா?” என்று காயத்ரி கேட்க, அதற்கு பூர்ணா பதில் கூறவும் புருவம் சுருக்கி, “சத்யா.. நீயும் அங்க தானே ஒர்க் பண்ணற?” என்றதும் காரையோட்டியபடி “ஆமா மா” என்றான்.

     “பூர்ணா என்னோட டீம் லீடர்.” என்று கூறினான்.

     “இவ்ளோ நேரம் இதை சொல்லலை” என்றதும் இருவரும் விழித்தனர்.

     “அவசியப்படலைமா” என்று கார் கதவை திறந்து விட்டான்.

     “வீட்டுக்கு வந்துட்டு போங்கங்க” என்று கூற, காயத்ரியோ “கோவிலுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு போறது நல்லதுங்க. இன்னோரு நாள் வர்றோம்” என்று கூறினார்.

      மூவரும் விடைப்பெற்று வீட்டை சுட்டிக்காட்டினார்கள். காயத்ரிக்கு அப்பொழுது தான் மாடம் துளசி செடி என்று கலைவாணி கூறிய அடையாளங்களோடு தென்படவும் விடைப்பெற்றார்.

     “பூர்ணா… ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம். உன் கூட வேலை பார்க்குற தம்பினு இப்ப சொல்லற. ஏன் அப்பவே சொல்லலை?” என்று கோகிலா கேட்டதும், பூர்ணா தலையில் கை வைத்து “அந்த சத்யதேவ் தான் கலைவாணி மேரேஜ் பார்க்க காரணமா இருந்தார். நான் சொன்னேனே என்னிடம் பூ கொடுத்து மறந்துட்டு போனாருனு அது சத்யதேவ் தான். அவரை பார்த்ததும் உங்களிடம் சொல்லுற அளவுக்கு தோணலைமா.” என்றதும் கோகிலா ஸ்தம்பித்தார்.

   நாராயணனோ “நல்ல மனிதரா இருக்காங்க. இவங்களை வச்சி நம்ம வீட்டு பொண்ணு போனவனை ஒப்பிட முடியாது மா.” என்று அகன்றார்.

    இன்றே கலைவாணி பற்றி கூற வாய் துருதுருத்தாலும் எப்படி ஆரம்பிப்பது என்று அறியாது விழித்தாள்.


 
    வீட்டுக்குள் நுழையும் போதே உதயேந்திரன் சத்யதேவை தடுத்தார்.

     “நீ இப்ப பண்ணறது தப்பு சத்யா” என்றார் மொட்டையாக. பேண்ட் பேக்கெட்டில் இடது கையை விட்டு வலது கையில் சாவியை சுற்றி வந்தவன், “என்ன சொல்லறிங்க அப்பா.” என்றான்.

   “முன்ன செய்ததாவது தப்பில்லை டா. அண்ணனா ஐசுக்கு சரியா தான் வழிநடத்தின. வீட்டை விட்டு வந்தது கூட பெரிய தவறில்லை. ஆனா இப்ப பண்ணறது..” என்று தலையை இடவலமாக ஆட்டினார்.

      “புரியலையா… புரியாத மாதிரி நடிக்கிறியா சத்யா?” என்று கேட்டதும், சத்யா சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

        “நான் இப்பவும் தப்பு பண்ணலைப்பா.” என்றான் முகத்தை திருப்பியபடி.

      “அந்த பொண்ணுக்கு கல்யாண தேதி குறிச்சிட்டாங்க சத்யா.” என்றதும் சத்யதேவ் கவலையாய் “தெரியும்ப்பா… அந்தளவு காதல் மன்னன் அஜித் கணக்கா முன்ன முன்ன போய் நிற்க மாட்டேன்.” என்று கூறினான்.

     “ஆபிஸ்ல அவளை தானே தினமும் சந்திப்ப?” என்று கேட்டதும், சத்யதேவ் வேண்டாவெறுப்பாய் ‘ஜாபை ரிசைன் பண்ணிடறேன் பா. போதுமா. இங்க சொந்தமா நூறு பேர் ஒர்க் பண்ணற மாதிரி புதுசா சின்ன கம்பெனி ஆரம்பிச்சுக்கறேன். பணத்தை ரெடிபண்ணுங்க.” என்று விடுக்கென அறைக்குள் அடைந்தான்.

      “இரண்டு பேரும் என்னங்க பேசிக்கறிங்க எனக்கு புரியுது ஆனாலும் புரியலை” என்று விழிக்க, “உன் பையன் பூர்ணாவை விரும்பறான். அந்த பொண்ணு பூர்ணா கலைவாணியோட அக்கா. அவ தான் அன்னிக்கு கல்யாணத்தப்ப அறைந்ததா பத்ரி சொன்னது. திருப்பதில சந்திச்சதுல இருந்து கமுக்கமா இரண்டு பேரும் பேசிக்காமலேயே சுத்தினாங்க.

திருமால் தரிசனத்தப்ப நீங்க எல்லாரும் முன்ன போயிட்டிங்க. உன் அருமை பையன் அங்கேயே நின்றான். என்னடானு பார்த்தா அந்த பிள்ளை பக்தியா வேண்டிட்டு இருக்க கடவுள் சந்நிதியில ரசிக்கிறான்." என்றதும் காயத்ரிக்கு கலக்கமாய் போனது. 

    “என்னங்க சொல்லறிங்க அந்த பொண்ணுக்கு கல்யாண தேதி குறிக்கணும் பேசிட்டு இருந்தாங்களே.” என்று காயத்ரி பதறினார்.

    “அதுக்கு தான் சத்யாவிடம் பேசினேன். நம்ம சத்யா அந்தளவு போகக்கூடாது பாரு.” என்று கடந்தார். ஆனால் சத்னதேவ் அந்த எல்லையை தான் தொட்டு கொண்டிருக்கின்றான்.

-தொடரும்
~பேரரளி