பூ பூக்கும் ஓசை-1

பூ இலக்கு எண்-6
பூ பூக்கும் ஓசை-1

         நேற்றிரவு பெய்த மழையால், பூமி தாய் குளிர்ந்திருந்தாள். மைந்தன் சூரியன் தன் பூமித்தாயை குளிர்வித்த மேகத்தோடு பொதிந்து தன் சூரிய கதிர்களினை கொஞ்சமாய் உலகுக்கு காட்டியது.

     சுள்ளென்ற வெயிலிருந்து விடுபட்டு, குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் மனிதர்கள் பேருந்திற்காக காத்திருந்தனர்.

     இளஞ்சிவப்பு நிறத்தில் காட்டன்  ஆடையுடுத்தி, பூர்ணாவும் பேருந்திற்காக காத்திருந்தாள்.

     அவளின் உயரத்திற்கும் அளவான  உடல் அளவுக்கும் பாந்தமாய் பொருந்திய சேலையால், ஆண்கள் அவளை விழியகற்றாது பார்வையிட வைத்தது.

     ‘சேலை கட்டினாலும் துகில் உறிப்பாங்க. மாடர்ன் டிரஸ் போட்டாலும் துகில் உறிப்பானுங்க. இவனுங்களை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது’ என்ற எரிச்சல் மனநிலையில் வராத பேருந்தையும் சேர்த்தே திட்டி முடித்தாள்.

     அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம். அப்படி தான் பூர்ணா மனதின் எரிச்சல் நிலையை முகம் காட்டி கொடுக்க, அவள் உதடு திட்டி முடிக்கும் நேரம் அவளை கண் கொத்தி விழுங்கும் ஆண்கள் பார்வை அப்படியே மற்றொரு பெண்ணின் வதனத்தை மொய்க்க சென்றது.

     “ஏன்மா… பஸ் லேட்டா” என்று பக்கத்தில் ஒரு பெண்மணி கேட்க, “தெரியலை அக்கா. நான் இன்னிக்கு தான் பஸ் ஸ்டாப்ல வந்து வெயிட் பண்ணறேன். வேற யாரிடமாவது கேளுங்க” என்று பதில் தந்தாள்.

    ‘எப்பவும் கேப் வந்துடும் இன்னிக்கு பஞ்சர் என்று கடைசி நேரத்துல டிரைவர் காலை வாரிட்டார். ‘உபர், ஓலா’ எதுவும் வரலை. தனி ஆட்டோ பிடிக்கலாம்னா ஸ்கூல் ஆட்டோவா போகுது.” என்று புலம்பி நொடிக்கு ஒரு முறை வாட்சை திருப்பினாள்.

         அவளை காக்க வைத்த பேருந்து மக்களை அடைத்து வைத்து சாய்ந்தபடி வந்து கொண்டிருந்தது.

     ‘கடவுளே… இதென்ன பஸ்ல போய் ரொம்ப நாள் ஆனதால பழக்கம் விட்டு போச்சா. இல்லை தினமும் இப்படி தான் பஸ் கூட்டம் நிரம்பி இருக்குமா’ என்று மிரண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

     “பஸ் கூட்டம் இல்லை இதுலயே ஏறு டா” என்று ஒரு தாய் தன் மகனை அந்த படிக்கட்டில் ஏற்றி விட, ‘கூட்டம் இல்லையா?’ என்று விழித்து பஸ்ஸை காண, “எக்ஸ்கியூஸ் மீ ஏறப்போறிங்களா இல்லைனா வழியை விடுங்க” என்று ஒரு கல்லூரி பெண் கேட்டதும் வழிவிட்டாள்.

   கல்லூரி பெண் ஏறுவதை கண்டதும் அவளை பின்பற்றி பூர்ணாவும் ஏறினாள்.

    கைப்பை, போன், கர்ச்சீப் என்று கையில் வைத்திருந்தவள் கைப்பையை தோளுக்கு மாட்டி போனை ஜிப்பில் போட்டு விட்டு, கர்ச்சீப்பை கொண்டு நெற்றியில் பூத்த இரண்டு வேர்வை துளியை அதற்கு வலிக்குமோ என்னவோ என்பது போல துடைத்தெடுத்தாள்.

        டிக்கேட் வாங்கி கம்பியை பிடித்தாள். பெண்கள் பெரும்பாலும் ஐந்தரை அடிக்கு கீழே இருக்கலாம். ஆனால் பூர்ணா ஐந்தரை அடிக்கு சற்று கூடுதல் என்பதால் கம்பியை இலகுவாக பிடித்து நின்றாள். அதனாலோ என்னவோ வேகத்தடையில் ஏறி இறங்கி பஸ் குலுங்கவும் சாமர்த்தியமாய் விழாது தப்பித்தாள்.

       பூர்ணா அதிர்ஷ்டமோ என்னவோ, அவள் பிடித்திருந்த கம்பிக்கு அருகேயிருந்த சீட்டில் அமர்ந்திருந்த பயணி இறங்குமிடமாக எழுந்தனர்.

     பூர்ணா அதில் அமர்ந்ததும் நீண்ட பெருமூச்சு விடுத்து கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்தினாள்.

     பயணிகள் ஏறவும் இறங்கவும் மலைப்பாய் பார்தது சாய்விருக்கையில் சாய்ந்தாள்.

     கையில் பேரரளி(Daffodills) மலைரை தாங்கி ஒரு இளைஞன் பேருந்து நோக்கி மெதுவாய் ஓடிவந்தான்.

      அலைபாயும் கேசம் பஞ்சு போன்று மிருதுவாய் அவனின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு மெதுவாய் அசைந்தது.

    நிச்சயம் அங்கிருந்த சில பெண்களின் மனம் அவனை கண்டு ரசித்து இருப்பார்கள்.

     ஒரு கையில் பூங்கொத்தும், மறுகையில் படியில் இருந்த கம்பியையும் பிடிக்க லேசாய் கைப்பிடி வழுக்கவும் பிடி நழுவியது.

     அப்போது தான் சாய்ந்த பூர்ணா படியில் பிடி நழுவி விழ பார்த்தவனால் பயந்து போனாள்.

    அதற்குள் மற்றொரு இளைஞன் கைப்பிடித்து ஏற்ற, “தேங்க்யூ பாஸ்” என்று படியில் ஏறி பேருந்துக்குள் வந்தவன் கையில் பேரரளி(daffodills) மலரும் மற்றொனு கையில் சிகையும் கோதி முடித்தான்.

     டிக்கேட் வாங்கி முடித்து நின்ற கணம் நடத்துனர் பேருந்தினுள் உள்ளே போக கூறவும் நகர்ந்தான்.

    சரியாய் பூர்ணா பக்கம் வந்தவன் பூவை அவளிடம் கொடுத்து முடித்தான்.

    பூர்ணாவுக்குள் பூகம்ப அலைகளே தாக்க, “என்ன மிஸ்டர் நேரா வந்து என்னிடமே பூ கொடுக்கறிங்க? பப்ளிக்ல எப்படி பிஹேவ் பண்ணுவாங்க?” என்று மற்றவர்கள் பார்வை காதலியென்ற அரத்தம் பொதிந்து தாக்கவும் வெடித்தாள்.

     ”எக்ஸ்கியூஸ் மீ… பூங்கொத்து ஸ்பாயில் ஆகிடக் கூடாதெனு சேப்பா உங்களிடம் கொடுத்தேன். நீங்க என்ன தப்பா நினைக்கிறிங்க.” என்றதும் தனது அவசரக் குடுக்கையை எண்ணி நொத்து அமைதியாய் வாங்கி மடியில் வைத்து கொண்டாள். ஆனால் இது அவள் தவறல்ல. இவன் மலரை எடுத்து வந்ததிலிருந்து பேருந்தினுள் இருந்த கூட்டம் இவனை தான் மொய்த்தது. அவன் நேராக பூர்ணாவிடம் நீட்டவும் காதலியா என்ற பாவனையில் தான் சுற்றியிருந்தவர்களின் கண்கள் சாடியது. அதை உணர்ந்தவளாய் தான் பூர்ணா பேசிவிட்டாள்.

      பார்க்க அழகாய் இருந்த மலரை வருட தோன்றியது. ஆனால் யாருக்கோ வாங்கியதை ரசிக்கலாம். தொட்டு வருட இயலுமா?!

       மடியில் ஜம்பமாய் அமர்ந்தை பூர்ணாவை தனித்துவமாய் காட்டிக் கொண்டு மற்றவரின் பார்வையையும் அதன் மேலே பதிய வைத்து கொண்டது.

        இரண்டு மூன்று ஸ்டாப் வந்ததும் பூக்கொடுத்த இளைஞனின் போன் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்து விட்டாள் என்று பாடலை ஒலிக்க விட்டது.

    அதனை எடுத்து “சொல்லு பத்ரி…” என்று தொடர்பை உயிர்பித்து பேசினான்.

     “……” மறுபக்கம் ஏதோ பேச்சு ஒலி கேட்டு

      “சத்யதேவ் தான் டா பேசறேன். வந்துட்டு இருக்கேன். என்னது…. மாலையா.. ஓ காட்.. ஓகே வாங்கிட்டு வர்றேன்.” என்று போனை அணைத்தான்.

    ‘பச் ஒரு மாலை கூட வாங்க மாட்டாங்க.’ என்று ஜன்னல் பக்கம் தலையை குனிந்து பார்த்தான்.

    பூக்கடை ஒன்று தென்படவும், அங்கே மாலை இருக்கவும், பேருந்தும் அந்த நேரம் நிறுத்தத்தில் நின்றதால் பூங்கொத்தை மறந்து இறங்கி விட்டான்.

      இறங்கிய சத்யதேவிற்கு பூங்கொத்து வாங்கியதை விட மாலை வாங்கும் எண்ணமே மேலெழும்ப, வேகயெட்டு வைத்து நடந்து போனான்.

     இங்கு பூர்ணா அப்பொழுது தான் மலர் மீது ஆசையை கட்டுப்படுத்தாது வருடிவிட்டு நிமிர அங்கே பூங்கொத்து கொடுத்த ஆடவன் இல்லையென்றதும் திரும்பி பார்க்க தன்னிடம் பூவை கொடுத்து சென்றவன் நடக்கவும் “ஏய்.. ஏய்..” என்று அவசரமாய் பேருந்திலிருந்து இறங்கி அவனை தேடி நடந்தாள்.

       அவன் பூமாலை வாங்கி கையில் வைத்து ஆட்டோவில் ஏறியதும், பக்கத்திலிருந்த ஷேர் ஆட்டோவில் அவனை சுட்டிக்காட்டி பின் தொடர செய்தாள்.

     “மேடம் இது ஷேர் ஆட்டோ. தனி ஆட்டோ இல்லை. அடுத்த ஸ்டாப் வந்தாலோ இல்லை யாராவது ஏறினாலோ நிறுத்திடுவேன்” என்று ஆட்டோககாரன் தன் பக்க நிலையை கூறினான்.

      “அச்சோ.. சரி அந்த ஆட்டோவை ஸ்டாப் பண்ணிடுங்க அண்ணா. அது போதும்” என்றதும், ஆட்டோக்காரன் முன்னே இருக்கும் ஆட்டோவை முந்தி செல்ல வேகமெடுத்தான்.

      ‘எனக்கு இது தேவையா… பூங்கொத்தை அவனிடமிருந்து வாங்கி இப்ப ஆபிஸ்கு போக லேட்டாகுது.’ என்று முனங்கினாள்.

     “மேடம்… அந்த பையன் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இறங்கறான்.” என்றதும் தலையை நீட்டி பார்த்தாள்.

    “நானும் இறங்கிக்கறேன் அண்ணா. எவ்ளோ ஆச்சு” என்று பணத்தை நீட்டினாள்.

     ஆட்டோக்காரன் சென்றதும் ரிஜிஸ்டர் ஆபிஸுக்குள் நுழைந்தாள்.

    ஆங்காங்கே அங்கே வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள் தன்னை நோக்கவும், தன் கையிலிருந்த மலரை நோக்கவும் அசூசை அடைந்தாள்.
  
       இதில் அவளுக்கு மேல இருந்த கண்ணாடி அவளின் தோற்றத்தை அழகாய் காட்ட, பக்கத்திலிருக்கும் மணப்பெண் கூட தோற்றுப் போனாள்.

    பூர்ணா சிறிதளவு ஒப்பனையிலேயே அழகோவியமாய் இருந்தாள்.

    ‘பச் மாலை வாங்க போன அவசரத்துல பூங்கொத்தை பஸ்ல ஒரு பொண்ணுக்கிட்ட கொடுத்ததை மறந்துட்டேன் டா.” என்று நாயகன் சத்யதேவ் கூறிமுடித்தான்.

    “பொண்ணு அழகா அம்சமா இருந்தாளா டா.” என்று பத்ரி என்பவன் கேட்டு வைத்தான்.

     “மச்சான் அதுக்கு எல்லாம் ஒர்த் இல்லைடா. நாம தான் அதெல்லாம் நூல் விட்டு பார்ப்போம். இவன் சாமியாராக போறான் டா” என்று மற்றொருவன் சத்யதேவை கிண்டல் செய்து பேசினான்.

     “ரொம்ப ஓட்டாதே டா. நான் நினைச்சா… எவளா இருந்தாலும் என் பின்னால வரவைக்க முடியும். வரவழைச்சி காட்டவா…?
     எனக்கு உங்களை மாதிரி லவ் மேரேஜ்ல ஆர்வம் இல்லை டா. அதுக்காக ஓட்டாதிங்க” என்று சத்யதேவன் பதில் தந்து திரும்பினான்.

     பூர்ணா கையை கட்டி மூவரை முறைக்க, பத்ரி என்பவனோ “மச்சான் டேபோடில்ஸ் பூங்கொத்து வாங்கனேனு சொன்னியே அதுவா டா” என்றதும் ‘ஆம்’ என்று தலையாட்டினான் சத்யதேவ்.

    “மச்சி இன்னிக்கே உன்னை தேடி ஒரு பொண்ணை வரவழைச்சிட்ட கில்லாடி டா.” என்று ஒரு நண்பன் கூறவும் சத்யதேவ் நேரங்காலம் இல்லாம பேசி தொலைக்கறாங்களே என்று சூடானான்.

     “சக்தி வாயை மூடு. தப்பா பேசாதே.” என்று நண்பனை அடக்கினான். ஆனால் அதற்குள் பூர்ணாவுக்கு கஷ்டப்பட்டு இங்கு கொடுக்க வந்து கரிபூசிய உணர்வில் எரிச்சலானாள்.

     “சீ… விலையுயர்ந்தது, பார்க்க அழகா இருக்கேனு ஆபிஸ் போகறதை கூட அவாய்ட் பண்ணிட்டு உன்னிடம் கொடுக்க வந்தேன் பாரு. என்னை சொல்லணும்.” என்று சத்யதேவ் முகத்தில் வீசியெறிந்து செல்ல முற்பட்டாள்.

     “ஹலோ சாரிங்க பிரெண்ட்ஸ் பேசியதை தப்பா அர்த்தம் பண்ணிக்காதிங்க. அவனுங்க கிண்டலுக்கு பேசறாங்க.

     கொண்டு வந்ததுக்கு தேங்க்ஸ் ஆனா இப்படி தூக்கியெறியாதிங்க. ஒரு திருமணத்துக்கு கிப்டா கொடுக்க வாங்கிட்டு வந்தது.” என்று சத்யதேவ் எடுத்து கூறியும் பூர்ணா கடுங்கோபமாக திரும்பி நடந்தாள்.

     அவளெதிரே மணக்கோலத்தில் மணமகன் மணப்பெண் காட்சியளிக்க, தன் காலுக்கடியில் பூமி சுழல் உண்டாக்கி இழுப்பது போன்றதொரு மாயையில் திளைத்தாள்.

   மணப்பெண்ணோ கையிலிருந்த சம்பங்கி பூங்கொத்தை தவறவிட்டாள்.

    “கலை… பூங்கொத்தை கீழே போட்டுட்ட” என்று மணமகன் எடுத்து கொடுக்க பூர்ணாவை கண்டு அவனும் மிரட்சியடைந்தான்.

    “யார் டா இவங்க கலை அழுவுறா, விக்கி ஏதோ பொண்ணோட அப்பா பார்த்த மாதிரி முழிக்கறான்” என்று சக்தி நேரம் காலம் இல்லாமல் கலாய்த்தான்.

     பத்ரியோ “மச்சான் ஏதோ சீரியஸ் டா. விக்கிக்கு வியேர்த்து ஒழுகுது பாரு.” என்று சத்யதேவ் அருகில் சென்றான்.

    “தெரிஞ்சவங்களாடா?” என்று சத்யதேவ் கேட்க மணமகன் விக்கி என்பவனோ தலையாட்டி ஆமென்று கூறினான்.

    கலை என்னும் கலைவாணியின் கைகளை அழுத்தமாய் பற்றினான் விக்கி என்னும் விக்னேஷ்.

    ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அதற்குள் கூட்டம் அலைமோத, இங்கு நடக்கும் காட்சியை பார்த்தும் பார்க்காதது போன்றும் சிலர் கடந்தனர்.

    “கலைவாணி விக்னேஷ் ஜோடி எங்கயா… அடுத்து உங்களுக்கு தான் பதிவு திருமணம் பண்ணணும். உங்களிடம் நான் கேட்ட சர்டிபிகேட் எல்லாம் தயாரா இருக்கா. ஆபிஸர் கூப்பிடுவார் அங்க போங்க” என்று அங்கு வேலை செய்யும் ஆட்கள் கூறி விட்டு செல்ல, “இவங்க தான் சார் இதோ வந்துடறோம்.” என்று சத்யதேவ் பதில் தந்தான்.

     “என்னடா… தெரிந்தவங்களா… வந்து பிளஸ் பண்ணிட்டு போக சொல்லு” என்று சத்யதேவ் கூறினான்.

    பூர்ணாவோ அவனை அணலை விழுங்கியவளாக முறைத்து திருமண ஜோடியை சுட்டெரித்தாள்.

-தொடரும்
~பேரரளி~

    Readers please share your thoughts with us. Thank u keep supporting friends….