ஜீவித்தேன் உந்தன் கவிதையில்-4

கவிதை-4

      ரிதத்திற்கு மூன்று நாட்களாய் முகநூல் பக்கம் சென்று நித்திலனின் பழைய புகைப்பட பக்கங்களை பார்த்து பார்த்து சோகமானாள்.

       அவள் ஆன்லைனில் இருப்பதை பச்சை வட்டம் காட்டி கொடுக்க, இம்முறை நித்திலனே ‘ஹாய்’ என்று மெஸன்ஞரில் அனுப்பி வைத்தான்.

    ரிதத்திற்கு உள்ளங்கைகள் சூடாக, கன்னம் சிவக்க, கண்கள் மலர்ந்திட உதடு தானாக சிர்ப்பை உதிர்த்து, “ஹாய் சார்” என்று ஆசையாய் ஆரம்பித்தாள்.
 
     “என்ன இரண்டு நாளா உன்னை ஆளையே காணோம் ரிதம். உடம்புக்கு முடியலையா.” என்றான் கரிசனையாக.

    “நோ சார்… கொஞ்சம் அப்செட்.” என்று அனுப்பினாள்.

    “வயிற்றுல பீரை வார்த்த. எங்க கவிதை நல்லாயில்லைனு சொல்வியோனு நினைச்சேன்.” என்று கூறினான்.
 
     “சேசே உங்க கவிதை ஏ-ஒன். அதை ரசிக்க தான் கவிதை குரூப்ல வந்து சேர்ந்ததே.

    சார் அதென்ன பீரை வார்த்தேன் நல்லாவேயில்லை உங்க பேச்சு” என்று இரண்டை அனுப்பினாள்.

   மூன்றாவதாக ‘சாரி சார்.’ என்ற மெஸேஞ்சரில் அனுப்பினாள்.

     நித்திலன் டைப்பிங் என்று காட்டவும் பதறி “மன்னிச்சிடுங்க. உங்க புகைப்படம் பார்த்த எபெக்ட். அப்செட்” என்று அனுப்பினாள்.

     அதற்குள் நித்திலனோ “அட நீ எதுவும் தப்பாவே பேசலையே.” என்றதும் தான் நிம்மதியானாள்.

   அதன் பின் முகநூலில் பழக்கம் கூடவும், கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தாள்.

அவளாகவே தயங்கி தயங்கி நம்பரை கேட்டாள்.

   இப்படி போகவும், போனையே நோண்டியபடி, வகுப்பறையில் ஸ்பூனால் அளந்து சாப்பிட, தனதருகே இருந்த தோழிகள் ஒவ்வொருத்தராய் எழுந்து சென்றதை அறியவில்லை.

    சட்டென மின்னலாய் ஒரு கை போனை பிடுங்கியது.
  ‘போச்சு மேம் போனை பிடுங்கிட்டாங்க’ என்று பயந்து நிமிர, எதிரே எம்.பி.ஏ ஸ்டூடண்ட் தஸ்வின் பிடுங்கியதை அறிந்தாள்.

   லேசாய் கைகள் வெடவெடத்தது, மெதுவாய் எழுந்துமர்ந்து, “போனை கொடுங்க” என்று கேட்டதும், போனை கொடுக்காமல், தனது நம்பரை பிளாக் செய்ததை விடுவித்து விட்டு, “யாரவன் நித்திலன் ஓவரா கமெண்ட்ஸ் எல்லாம் போடுற? என்ன புது ட்ராக்கா? இதப்பார் உன்னை லவ் பண்ணறேன். தெரியும்ல… எல்லாத்திலும் பிளாக் பண்ணினா உன் ஆக்டிவிட்டிஸை கண்டுபிடிக்க முடியாதுனு அர்த்தமில்லை.

   வகுந்திடுவேன்” என்று கூறிடவும் ரிதத்திற்கு கண்ணீர் வழிந்தது.

     “அப்ப பேக் ஐடில வந்து நோட்டமிடறிங்க அப்படி தானே?” என்றதும் “அதப்படியில்லை… என் ரிதம் யாரிடமும் மாட்டிட்டு முழிக்க கூடாது. டேக் கேர்.” என்று கூறினான்.

      “இல்லை… நீங்க நோட் பண்ணிட்டு இருக்கிங்க… முதல்ல சத்யா கூட பேசியதை வச்சி என்னை அதட்டினிங்க, இப்ப நான் போறயிடத்துல பழகறவங்களிடம் பேசினா தப்பா புரிந்துக்கறிங்க” என்று கூறியதும் பளீரென ஒரறை விடுத்திட தான் கை சென்றது. ஆனால் தன்னை மிகவும் கட்டுப்படுத்தி கொண்டு தான் எப்பொழுதும் இவள் முன்னே வருவது அவன் வழக்கம்
 
   “சத்யாவிடம் நீ பழகறதை அவன் லவ்வுனு சொல்லிட்டு சுத்தறான். அது தெரியாம பேசாதே.

    உன்னை காதலிச்ச பாவத்துக்கு பாதுகாக்க ட்ரை பண்ணறேன். நீ என்னடானா மழையில நனைச்சி கோழிகுஞ்சா வீட்டுக்கு போற, மேடம் நாயுக்கு பால், பிஸ்கேட் வைக்கறிங்க. ஏதாவது நாய் கூட்டம் அந்த நேரம் ஓடிவந்து கொதரியிருந்தா என்ன பண்ணிருப்ப. வெறிநாய் துரத்தவும் பெண் தடுக்கி விழுந்து பலினு எத்தனை செய்தி வாசிக்கற.

  இத்ல தம்பியோட டிப்பார்ட்மெண்ட் கடைக்கு போனியே ஸ்டாப் ஒழுங்கா இருக்கறானு பார்க்கறதில்லை. பில் போடறவன் ஜாலியா ஜோள்ளுவிடறான்.

    இதோ இப்பவும் லூசு மாதிரி ஷாலை போடற, லோ நெக் வேற… ஏதாவது சொன்னா.. இதோ இப்ப முறைக்கிற?” என்று கத்தினான்.

    “நான் உங்களை விரும்பலையே” என்றதும் “அப்பறம் எதுக்குடி என் பெயரை ‘தஸ்வி’னு சேவ் பண்ணிருக்க. இதப்பார்…. இந்த பிரேக்கப் எல்லாம் சேர்ந்து பண்ணணும். நான் உன்னை இன்னமும் பிரேக்கப் பண்ணலை. உனக்கு கொடுத்த கெடு இன்னிக்கு முடியுது. மனியாதையா நீயா எப்பவும் போல கிரவுண்டுக்கு வந்துடு” என்று நகர, “நான் வரமாட்டேன்” என்று பிடிவாதமாய் கத்தினாள் ரிதம்.

    “ஓகே.. அப்ப நம்ம ராஜலிங்கத்துக்கு போன போட்டு, மாமனாரே… உங்க மகளை லவ்ஸ் பண்ணினேன். இப்ப கொஞ்சம் சண்டை… பிரேக்கப் பண்ணறா.

    எனக்கு இந்த இயரோட படிப்பு முடியுது. வேலையும் தேடணும்னு அவசியமில்லை. அப்பாவோட ஆப்செட் பிரிண்டிங்கை எடுத்து நடத்தப்போறேன்.
    எங்கப்பா கல்யாணம்னு பேச்செடுத்தாலே உங்கப்பொண்ணை தேடி வீட்டுக்கு வருவேன். இப்பவே கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கனு சொல்லிடலாம்.” என்று அப்பா என்ற எண்ணிற்கு அழைப்பை தொடுப்பதாக நடித்தான்.
 
     அவளோ அவனிடமிருந்து பிடுங்க முயற்சிக்க, கையில் போனை வைத்து உயர்த்தி பிடித்தான்.

   “சீனியர் கொடுங்க.” என்று குதிக்க அவன் மீது லேசாய் உரசவும், முகம் கடுக்க “எனக்கு போனும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் நீங்களே வச்சிக்கோ. எப்பபாரு என்னை ஹர்ட் பண்ணி அழவைக்கிறிங்க” என்று பாதி சாப்பாட்டை முடி வைத்து பையில் திணிக்க பார்த்தாள் ரிதம்

    “ஏய்… யாரும் உன்னை அழவைக்கலை. இந்தா” என்று அவனருகே போனை வைக்க அவளோ வேகமாய் எடுத்தாள்.

   அதற்குள் டிபன் பாக்ஸை எடுத்து ஓபன் செய்து, வாசம் பிடித்தான். ப்ரிஞ்சு சாதமா எடுத்துட்டு வர்ற. இந்த சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி எடுத்துட்டு வரமாட்டியா?” என்று கேட்டான் தஸ்வின்.

     “நாங்க நான் வெஜ் சாப்பிடாதவங்க” என்று அவன் சாப்பாட்டை பிடுங்க இயலாது நின்றாள்.

   ஒருவர் சாப்பிடும் போது எப்படி பறிப்பது என்ற கவலை.

    அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை போல சாப்பிட்டு முடித்து தண்ணீரை குடித்து முடித்தான்.

      “வர்றேன் இது உனக்கு… நான் உன்னோடது சாப்பிட்டதால உனக்கு பசிக்கும்ல அதனால வாங்கிட்டு வந்தேன்.” என்று குழந்தைகள் சாப்பிடும் அளவு ஒரு பெட்டியை முன் வைத்தான்.

   தஸ்வின் சென்றதும் தான் அந்த வகுப்பறை தோழிகள் உள்ளே வந்தார்கள்.

    “துரோகிகளா…. அவன் வந்தா நீங்க ஏன் வெளியே ஓடிப்போறிங்க.” என்று கத்தினாள் ரிதம்.

    “ஆமாடி… இப்ப அவன்னு சொல்வ, அடுத்து சீனியர் முன்னாடி வந்து நின்றா ‘அவர்’ ஆகிடுவார்.” என்று தஸ்வின் தந்த டிபன் பாக்ஸை திறந்தாள் ஒருத்தி.

    “ஹே… பிரட் ஆம்லேட்… அதுவும் சூடா சீஸ் போட்டு.” என்று தோழி சந்தியா கூறவும், ரிதம் எட்டி பார்த்தாள்.
  
  ரிதம் அக்கிரகாரத்து பெண். முட்டை மட்டும் அவளுக்கு பிடிக்கும். அதுவும் பிரட் ஆம்லேட் சீஸ் தூவி இருந்ததென்றால் உயிர்.

    வீட்டில் சாப்பிடுவது தெரிந்தால் தோலை உறித்திடுவார்கள்.
      ஆனால் தஸ்வின் எப்படியோ அவள் சாப்பிட ஆசைப்பட்டதை அறிந்தவன் இப்படி தான் கொடுத்துவிடுவான்.

   “சீனியர் தந்துட்டான் வேற வழியில்லை.” என்று முதலில் கோபமாக நடிப்பாள் உள்ளுக்குள் ருசித்து சாப்பிடுவாள்.

    காதல் இது தான் அவர்களிடம் இன்னமும் இருக்கா? இல்லையா? என்று கண்ணாமூச்சி ஆடுகின்றது.

   தஸ்வின் இருக்கு என்பான். ரிதமோ இல்லை எப்பவோ முடிஞ்சிடுச்சு. நீ பேசி பேசியே பயமுறுத்தி தக்க வைக்க பார்க்கற’ என்பாள்.

   ஆனால் காதலும் உள்ளுக்குள் வைரம் போல இருக்கும். அவன் கொடுத்தவையை வெட்கப்படுவதை காட்டிக்கொள்ளாமல் விழுங்கினாள்.

மனதிற்குள் இவனை காதலிச்திட்டு என்னலாம் சகிச்சிக்கணும். இப்பவே மீன்கடையை கடக்குறப்ப வாந்தி எடுத்துடுவேனோனு பயமாஇருக்கு. கட்டிக்கிட்டா சமைக்க வேற செய்யணுமோ, அவங்கம்மா கைபக்குவம்லாம் சுத்தமா வராது.’ இவன் வேண்டாம் என்று முழு பிரெட் ஆம்லேட்டை திண்று விழுங்கினாள். அங்கே சீரகம் மிட்டாயை வேறு தனியாய் வைத்திருக்க சிரித்தபடி பிரித்து வாயில் போட்டாள்.

  போனில் ‘தஸ்வி’ என்ற எண்ணை கண்டு, கொனட்டிக்கொண்டாள். அதன் பின் நேரங்கள் சென்றதும் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.

   ஈவினிங் கிரவுண்ட் முன் வந்து நின்றாள். புட்பால் விளையாடியவன் நண்பனிடம் பந்தை உதைத்து விட்டு அவளருகே வர, அவளோ அவன் சற்று தூரம் வருவதை கண்டு, “டிபன் பாக்ஸ் வச்சிட்டேன். அவ்ளோ தான் சீனியர். எனக்கு நேரமாச்சு” என்று கிடுகிடுவென ஓடினாள்.

  “ஏய்.. ரிதம்.. நில்லு” என்றதற்கு நிற்காமல் ஓடினாள். பச் என்றவன் டிபன் பாக்ஸை தனது பையில் திணித்துவிட்டு மீண்டும் புட்பாலாட தென்றுவிட்டான்.

   பேருந்தில் சிரிப்புடன் ஏறி அமர்ந்துவிட்டு, தனியாக சிரித்தாள்.

   மொபைல் டேட்டா ஆன் செய்யவும் நித்திலன் கவிதை நோட்டிபிகேஷனில் முன் வந்தது.

அக்கடை கடக்கும் போதெல்லாம்
ஒவ்வாமை தான் எனக்குள்
நாசியினை கைக்குட்டையால்
நுகர்ந்துகொண்ட பின்னும்
ஒவ்வாமை சமிக்ஜை போகாது
அத்தகைய பாவையான யென்னிடம்
மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்ற
ஏக வெள்ளித்திரை வசனத்தை பேசியே
அன்பை கொட்டிவிட்டாய்
காதல்யெனும் மரத்தை வளர்த்துவிட்டாய்
அதனாலோ என்னவோ
எனக்கு பிடிக்காத அக்கடையின் வாடையை
சகித்துக் கொண்டு வாங்கி விடுகின்றேன்
உன் தாயின் கை பக்குவத்தில் பாதியாவது
வரவேண்டுமென்ற ஆசையுடன்
நீக்குகின்றேன் மீன் செதில்களை.
                     -நித்திலன்                            

        ரிதத்திற்கு லேசாய் ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கிட, இவரிடம் பேசியே ஆகணும் என்ற தவிப்பு மேலோங்கியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்