செந்நீரில் உறையும் மதங்கி 2-10(முடிவுற்றது)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

🩸-2

    இன்ஸ்பெக்டர் தர்ஷன் வந்த நேரம் கூடுதலாக நபர்கள் இருக்கவும் நெற்றி சுருக்கி, “இவங்களாம் யாரு?” என்றான்.

     “சார் குடோன்ல வேலை பார்க்கறவங்க. வேலைக்கு வந்தாங்க. சரி உங்களிடம் கேட்டுட்டு போக சொல்லலாமா வேண்டாமானு..” என்று ரமேஷ் தலையை சொரிந்தான்.

    “இங்கயே இருக்கட்டும். குடோன்ல போய் பேசலாமா? ஒன் பை ஒன்னா அனுப்புங்க. முதல்ல அந்த பாட்டிய? ரபீக் அந்த பொண்ணோட கணவருக்கு லைன் கிடைச்சா உடனே சொல்லுங்க” என்று சென்றான்.
   அங்கு குடோன் ஓனர் அமர டேபிள் நாற்காலி இருந்தது. அதில் டேபிளில் அமர்ந்தவன் நாற்காலியை காட்டி பாட்டியை அமர சொன்னான்.
   
     “இங்க எப்பதிலருந்து வேலைக்கு இருக்கிங்க?” என்றான்.

    “ஒரு பத்து வருஷமா சார்” என்றார் ஈஸ்வரி.

    “இறந்து போன பொண்ணு எப்படி? எப்ப பார்த்திங்க. என்னாச்சு? ஏதாவது சந்தேகப்படற மாதிரி?” என்று கேட்டான்.

    “அந்த பொண்ணு நதியா ரொம்ப நல்ல பொண்ணு சார். என்னிடம் பேசின வரை அது உண்டு அது வேலையுண்டுனு இருக்கும். அதிகம் பேசாது. டிவில படம் போட்டு பார்க்கும். வித விதமா சமைக்கும். அப்படி செய்தா கொடுக்கும்.

    இன்னிக்கு முறைவாசல் பணம் வாங்க வந்தேன். இப்படி இரத்த வெள்ளத்தில அலங்கோலமா கிடக்குது. இன்னிக்குனு பார்த்து அந்த தம்பி விஜய் ஊரில இல்லை. ஏதோ பெங்களூரு போயிருக்காம். காலையில கதவு திறக்கிறக்காதப்ப கூட போன் போட்டேன். ஆயா நான் ஆபிஸ் வந்துட்டேன். சமைக்கலைனு தூங்கிட்டு இருப்பா நல்லா கதவை தட்டி பெல்லடிச்சு எழுப்புங்கனு சொன்னார்.

    இப்ப என்னடானா பிணமா இருக்கு. அந்த பையனுக்கு தெரியுமோ தெரியாதோ.” என்று சேலை தலைப்பில் மூக்கை உறிந்து புலம்பினார்.

    “வீட்டுக்கு வேற யாரெல்லாம் ரெகுலரா வருவாங்க? அவங்க கணவன் மனைவி உறவு எப்படி?” என்றான்.

    “ரெகுலரா… நானு.. அப்பறம்.. வேலைக்காரி… அதுக்கு பிறவு…” என்று யோசித்து “யாருமே வரமாட்டிங்க. அந்த தம்பி வேலைக்கு போனா சாயந்திரம் வரும்.

   குடோன் பசங்க மேல வரமாட்டாங்க.

   இவங்க தனி வீடு. சனி ஞாயிறு எல்லாம் கதவு பூட்டியே கிடக்கும். ஒரே சிரிப்பு சத்தம் இருக்கும். குழந்தை குட்டியில்ல சந்தோஷமா அடிக்கடி வெளியே போவாங்க. நல்லா தான் வாழ்ந்தாங்க. ஏன் சார் தற்கொலை பண்ணிக்கிடுச்சு?” என்றார்.

     “அது தற்கொலை இல்லை பாட்டி கொலை. ஆமா.. மாடில தண்ணியா இருக்கு. ஏன்?” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

    “கொலையா… அச்சோ..” என்று வாயை பிளந்தார்.
  
    “பாட்டி ஆச்சரியம் அதிர்ச்சி அப்பறம் இருக்கட்டும். தண்ணி எதுக்கு இருக்கு.?” என்றான்.

   “அது… அது இன்னிக்கு வெள்ளி கிழமை அதனால எப்பவும் கழுவி விடறது தான். ஏன் சார்?” என்றார்.

    “நத்திங்… கீழ குடோன் பசங்க எப்படி?” என்றான்.

   “எப்படின்னா… எல்லாம் இளவட்டம் பசங்க. படிக்காததுங்க. லாரில வர்ற அட்ட பெட்டிய எடுத்து வந்து அடுக்கி வைக்கும். மேல யாரும் வரமாட்டாங்க. காலையில ஒன்பதுக்கு வந்து இரவு எட்டு மணிக்கு போயிடுவாங்க.” என்றார்.
    
     “வேற சொந்தக்காரங்க நம்பர் இருக்கா?” என்றதும் இல்லையென தலையசைத்தார் ஈஸ்வரி.

     “நீங்க வெளியே இருங்க.” என்று அனுப்பினான்.
  
  அடுத்து ஜன்னல் வழியே எட்டி பார்த்த இளைஞன் வந்து நின்றான். அவனுக்கு அப்பொழுதே வியர்த்து. “சார்… அந்த ஆயா என்னனு பார்க்க சொல்லுச்சு. ஜன்னலுல பார்த்தேன். செத்து கிடந்தாங்க. எனக்கு அது மட்டும் தான் தெரியும், அந்த அக்காவும் அண்ணாவும் கீழ இறங்கி வெளியே போனா பார்ப்போம். அந்த அண்ணா ஏதாவது சீண்டிட்டே போகும். அவ்ளோ தான் தெரியும் சார்ர்.” என்று அழுதிடும் நிலையில் கூறினான்.

   இன்ஸ்பெக்டர் தர்ஷனுக்கு அழுதிடும் ஆண்களை பிடிக்காது. அதனால் இவன் செய்கை எரிச்சலை புரட்டியது.

     “கெட்அவுட்… ஏய்.. அடுத்த முறை அழுவுற மாதிரி பேசினா பல்லை பேத்துடுவேன். போய் முடியை வெட்டு டா.” என்று திட்டி அனுப்பினான்.

    குடோன் ஓனர் கணபதி வந்து அமர்ந்தார்.

     “சார் கொலையா தற்கொலையா?” என்று கேள்வி கேட்டார் கணபதி.

      “அதை முடிவு பண்ண தான் உங்களை கூப்பிட்டது. ப்ளீஸ் சிட்டவுன்” என்றான் தர்ஷன்.

    அதிகப்பிரசங்கியாக இருப்பானோ என்றே நோட்டமிட்டவன், “இந்த குடோன் ஓனர் நீங்கன்னா? இந்த வீட்டு ஓனர் யாரு.?” என்றான்.

    “அதுவும் என்னோடது தான் சார். எங்க துணிகடைக்கு ரெகுலர் கஷ்டமர் விஜய். எங்களோட கடை துணிகளுக்கு பிரதான அட்டப்பெட்டியை தயாரிக்கறது தான் கீழே குடோன். ஒரு முறை விஜய் வந்தப்ப வாடகைக்கு வீடு பார்க்கணும் திருமணம் முடிஞ்சதும் ஓய்பை நேரா புது வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும்னு வீடிருந்த சொல்ல சொன்னார். நான் நம்ம குடோன் இருக்க மேல வீடு காலியா இருக்குணு சொன்னேன். முன்ன இங்க குடோன் பசங்களே தங்கினாங்க. அப்ப ஒரு ஆறு பேரு இருந்தாங்க. எல்லாம் குழந்தை குட்டினு போயிட்டாங்க. பற்றாததுக்கு வேற தொழில் செய்யவும் போயாச்சு. இப்ப புதுசா சேர்ந்தவங்க எல்லாம் குடும்பஸ்தனுங்க. அவங்களும் வீட்டுக்கு போயிடுவாங்க. மீதி இரண்டு பேரு. அவனுங்களுக்கு எதுக்கு இத்தனை வசதினு சின்னதா வீடு பார்த்து வச்சிட்டேன்.
  இந்த வீடு சுத்தம் செய்து பெயிண்ட் அடிச்சி வச்சி இருந்தப்ப விஜய் கேட்டதும் கூட்டிட்டு வந்து காட்டவும் அவருக்கு வீடு பிடிச்சிருந்தது.

    குழந்தை குட்டி ஆனா இரண்டு பெட்ரூம் தேவைப்படும். நானே குடிவந்துக்கறேன் சொன்னாப்ள. சொல்லி கொஞ்ச நாள்ல குடிபுகுந்தார்.

    பதினொரு மாசமா வாடகை சரியா கொடுப்பான். அந்த பொண்ணு நதியா நல்ல டீ போடும். குடோன் கீழே உள்ள என்பதால அந்த பொண்ணு போனா வந்தா கூட தெரியாது.

   எப்பயாவது பார்த்தா ஒரு சிரிப்பு தெரிஞ்சவங்கனு பண்ணும். அவ்ளோ தான். மற்றபடி நின்னு பேசாது. காலையில குடோனுக்கு குப்பை எடுக்கறவன் போன் போடவும் தான் அடிச்சி பிடிச்சி ஓடிவந்தேன்.” என்றார்.

      “தேங்க்ஸ்… விஜய் எப்படிப்பட்டவர்? அவரிடம் தெரிவிச்சிங்களா? இவங்க இருவரை தவிர வேறயாரோட நம்பர் இருக்கா? அப்பா அம்மா இப்படி?”

      “விஜய் கடை கஸ்டமர் சார். பேசின வரை ரொம்ப நல்ல பையன். அப்பா அம்மா நம்பர் எதுவும் இல்லையே சார். அவன் லவ் மேரேஜ் பண்ணியதுல வீட்ல அதிருப்தினு கேள்விப்பட்டேன். நதியா பத்தி வேறயெதும் தெரியாது சார். அவங்களுமே லவ் மேரேஜ் பண்ணியதில வீட்ல பேசிக்கலைனு சொல்வாங்க. விஜய் அப்பா அம்மா இதே ஏரியா தான் சார். வீடு தெரியாது.” என்றார்.

    தர்ஷன் குடோனை பார்வையிட்டவாறு வந்தான். ஆங்காங்கே அட்டைப்பெட்டியும் அழுக்கும் இருந்தது.

    “இங்க பாத்ரூம் எங்கயிருக்கு?” என்றான்.

     “அந்த மூலையில் சார்.” என்றார் கணபதி.
  
    தன் தொப்பியை டேபிளில் கழட்டி வைத்தவன் அங்கு பாத்ருமிற்கு சென்றான். வெளிவந்த நேரம் வெளியே குசுகுசுவென சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

     கடையில் வேலை செய்யும் அனைவரும் வந்து விட்டனர் போல. அனைவரிடமும் சின்னதாய் விசாரணை துவங்கி அனுப்பி வைத்தான்.

    “சார் கொலை மோட்டிவோட பண்ணியதா இருக்குமா? இல்லை திருட வந்து பெண்ணோட அழகுல மயங்கி தப்பு செய்ய அந்த பொண்ணு கோஆப்ரேட் பண்ணலைனு தீர்த்துட்டு திருடாம ஓடிட்டு இருப்பானா சார்.” என்றான் ரபீக்.

     “உங்களுக்கு எப்படி படுது ரபீக்” என்று கண்ணாடி அணிந்து வெளியே வர மக்கள் கூட்டம் எட்டியிருந்து தங்கள் பார்வையாளர்கள் மட்டும் என்று பறைச் சாற்றினார்கள்.

     “கழுத்துல அறுத்ததில் கொலைனு தோனுது சார். ஆனா வீடு பூட்டியிருக்கு அதான் குழம்புது சார்.” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

   “இது கொலையே தான் ரபீக். டவுட் வேண்டாம். கண்டிப்பா மோட்டிவோட தான் வந்திருக்காங்க” என்றான்.

     “சார் பன்மையில சொல்லறிங்க?” என்று ரபீக் கேட்க “எஸ் ரபீக் குற்றம் நடந்தப்ப இரண்டு பேர் கன்பார்மா இருந்துயிருப்பாங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்” என்று கூறிமுடித்தை தடைச் செய்யப்பட்ட பகுதி என்பதால் மாடிக்கு செல்லாமல் இருக்க கட்டளையிட்டு தடுப்பு அமைத்து ஏற்பாட்டை கவனித்து சென்றான்.

        விஜயின் அலுவலகம் கண்டறிந்து அவன் சென்ற பெங்களூர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விஷயம் கூறவும் அவனாகவே போனை எடுத்து பேசினான்.

    அதிகம் கண்ணீரும் கம்பளையுமாக வசனங்கள் வந்து விழுந்தது.

    உடனடியாக திரும்பி வர கார் புக் செய்து ஓடி வந்தான்.

    அதற்குள் மார்சுவரியில் நதியா உடலை கூறுபோட்டு போஸ்மார்ட்டம் பார்க்கப்பட்டது.

   விஜயிற்கு நதியா இறப்பு கேள்விப்பட்டு வியேர்த்து விருவிருத்து வந்தவனை நேராக அவனை இன்ஸ்பெக்டர் தர்ஷனை காண விரைந்தான்.

🩸- 3

    விஜய் அழுது கொண்டு தர்ஷன் அறைக்குள் வர, அழைத்து வந்தான் ரமேஷ்.

    ஒரு சல்யூட்டை அடித்து விட்டு, “சார் அந்த இறந்து போன பொண்ணு நதியாவோட கணவன் விஜய் சார்” என்று அறிமுகப்படுத்தினான்.

         தண்ணீரை எடுத்து கொடுத்து “முதல்ல இதை குடிங்க” என்று நீட்டினான்.

     “உங்களுக்கு உங்க மனைவி இறப்பை யார் சொன்னா?” என்று கேட்டான். காதை விட கண்கள் கூர்த்தீட்டி விஜயின் முகங்களை அளவெடுத்தது தர்ஷன் பார்வை.

    “பெங்களூர் ஆபிஸ் மேனேஜர் சார். போன்ல பிடிக்க முடியலைனு இங்கயிருக்கற மேனேஜர் அவரிடம் கால் பண்ணி சொன்னாங்க.

     “எப்படி சார் இறந்தா என் நதியா? என்னாச்சு சார்? அவளை பார்க்க விடுங்களேன்” என்று இறைஞ்சினான்.

     “வாங்க கூட்டிட்டு போறேன். எனக்கு சில விஷயம் மட்டும் சொல்லுங்க” என்று செல்லும் போதே விசாரணையை துவங்கினான்.

     “உங்க மனைவியும் நீங்களும் எப்படி? உங்களுக்கு கொலை செய்யற அளவுக்கு விரோதிகள் இருக்காங்களா?” என்று கேட்டு முடித்தான்.

    “சார் என்னோட லவ்வர் சார்.. காதலிச்சு ஆசை ஆசையா கல்யாணம் செய்தேன். எங்களுக்கு கொலை செய்யற அளவுக்கு விரோதிகள் இல்லையே சார்.” என்று அழுவது குறைந்தாலும் வார்த்தையில் எஞ்சியிருந்தது அழுகை.

      “உங்க பேரண்ட்ஸ் அவங்க பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?” என்று கேட்டதும் “அம்மாவிடம் சொன்னேன். என்னை முதல்ல எங்க வீட்டுக்கு வர சொல்லறாங்க. ஏதாவது தப்பான முடிவெடுத்துடுவேனோனு பயப்படறாங்க. இங்க தான் இரண்டு ஸ்டாப் தள்ளி அம்மா வீடு சார். நதியாவுக்கு அப்பா மட்டும் சார். அவரும் குடிக்காரர் மந்தவெளில இருக்கார். அவளுக்கு அப்பாவை பிடிக்காது. ஒரேயொரு தங்கச்சி. அவளும் அப்பா குடிக்காரர்னு அவர் மேலயும், நதியா என்னை மேரேஜ் பண்ணிட்டானு நதியா மேலயும் கோபத்துல ஹாஸ்டல் போயிட்டதா முன்ன நதி சொல்வா.” என்றதும் தர்ஷன் குறித்து கொண்டான்.

    “எங்கம்மா சீர் வரிசை நகை நட்டு எக்ஸ்பெக்ட் பண்ணினாங்க. என் மேரேஜ்ல எல்லாம் அதிகமா வாங்கி கிராண்டா பண்ணணும்னு இருந்தாங்க. நதியாவை மேரேஜ் பண்ணறேனு சொன்னதும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எங்க மேல கோபத்துல வெளியே அனுப்பிட்டாங்க. இப்ப சொன்னதும் அம்மா ஒரே அழுகை. நீ அங்க தனியா இருக்காதே டா வந்துடுனு.

    எங்களுக்குனு வேற எந்தவித பிரச்சனை இல்லை சார். நதியா  அவளுண்டு அவ வேலையுண்டுனு இருப்பாளே தவிர எந்த பிரச்சனையும் போக மாட்டா.” என்று கண்ணீரை சட்டையில் துடைத்து கொண்டே கூறினான்.

   அவன் துடைக்க துடைக்க கண்ணீர் வற்றாமல் வெளியேறியது.

    “சார் நகைக்காக பணத்துக்காக கொன்னுட்டாங்களா சார்?” என்றதும் தர்ஷன் யோசனை கலைந்தவனாக “ம்ம்… இல்லை ரேப்.” என்றவன் தொப்பியை அணிந்து பிணவறையை காட்டினான்.

    பேசிக்கொண்டே வந்ததில் மருத்துவமனையில் வந்தவன் முகத்தில் அறைந்து விஜய் அழவும் ரமேஷை பார்த்தான்.

இப்படி பிணவறை முன் தர்ஷன் நிறுத்துவானென அறியாது கதவை திறந்ததும் குமட்டி கொண்டு வாந்தி எடுத்தான் விஜய்.

     பாதி வாந்தியும் மீதி ஆளுமாக சென்று மனைவியை கண்டான். உடலை தழுவி ஒரு துணியை போர்த்திருந்தனர்.

     தொடாமல் பார்த்தவனுக்கு சில நொடிகளிலேயே மயக்கம் வர ரமேஷ் பிடித்து இழுத்து வந்தான்.

    “சார் நீங்க சொன்ன மாதிரியே மயங்கிட்டார். நல்ல வேளை சொன்னிங்க” என்றதும் தர்ஷன் ஒரு பழச்சாறை வாங்கி வந்து விஜயின் முன் நீட்டினான்.

    “சார் என்ன சார் இது?” என்றான் அதிர்ச்சி விலகாமல்.

    “கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்காங்க விஜய். நீங்க மற்ற முறையை கவனிங்க” என்றவன் விடைப்பெற்றான்.

   மாலை என்பதால் விஜயும் அடுத்த நாள் நடக்க வேண்டிய இறுதி சடங்கிற்கு ஆட்களை தேடிபிடித்து நாளைக்கு தேவையானதை பார்த்து வைத்தான். இரவு அன்னையின் வீட்டுக்கே வந்து சேர்ந்து சோர்ந்தான்.

   அடுத்த நாள்…

   மருத்துவர் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை மாலை தருவதாக கூறியிருக்க, தகன காரியங்களை விஜய் செய்ய ஆரம்பித்தான்.
 
    நதியாவின் இறந்த உடலை புதைக்க ஏற்பாடு நடந்ததது. அன்றும் நதியா தந்தை பொறுப்பற்று குடித்து முடித்து அந்த இடத்தில் திரிந்தார்.
    
   நதியா தங்கை காயத்ரி மட்டும் சொட்டு கண்ணீர் சிந்தாமல் இரும்பு போல நின்று அழுகையை கட்டுப்படுத்தி அஞ்சலி செலுத்தினாள்.
  
     காரியங்கள் மாலை  முடிவடைய, விஜய் இன்றே அரை ஆளாய் மாறினான்.

   காயத்ரியோ ஆட்டோ பிடித்து ஏறியவள், ‘இவளுக்கு நல்ல சாவு வராதுனு தெரியும். நான் வாழ வேண்டிய வாழ்வை பறிச்சு நான் காதலிச்ச விஜயை அவ காதலிச்சதா காட்டி போயிட்டாளே.’ என்றவளின் மன எண்ணங்கள் வேறென்னயென்ன எண்ணியதோ அவள் மனமே அறியும்.

***
   
    “என்ன டா லோகு… இரண்டு நாளா ஆளை காணோம்? எங்க போன?” என்று திடீரென வந்து தோளில் கையை போட்டான் வசந்த்.

     “கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு டா. அதனால வேலைக்கு போயிட்டேன்.” என்று தோளிலிருந்து கையை எடுத்து விட்டு லோகு நழுவினான்.

     “என்ன கொள்ளை அடிக்க போனியா இல்லை கொலை பண்ண போனியா. இப்படி ஆள் அட்ரஸே காணாம போயிட்ட. உன்னை இளங்கோ தேடினான் தெரியுமா?” என்று மீண்டும் கையை தோளில் போட லோகுவிற்கு வியேர்த்து விட்டது.

    கை எடுத்து விட்டு “பணம்னா பொணமும் வாயை திறக்கும். நானே எங்க குடும்ப வறுமைக்கு என்ன வேலை கிடைக்கும்னு நாயா தேடிட்டு இருக்கேன். நின்னு பேச நேரமில்லை. அதுவுமில்லாம உன்னோட சேர இஷ்டமில்லை. கையை எடு” என்று கூறிவிட்டு நடையிட்டான்.

   அவன் நடப்பதே ஓட்டமாக தோன்றியது வசந்திற்கு. “ஒரு நாள் மாட்டுவடி. அன்னிக்கு தெரியும்” என்று கூறிவிட்டு வசந்தும் அவன் வீட்டை நோக்கி பயணித்தான்.

    வசந்த் இருபது வயது கொண்டவன். லோகுவிற்கு அதிகபட்சம் பதினெழுவில் கால் பதித்தவன். இருவரும் நண்பர்கள் எல்லாம் கிடையாது. இதே குப்பத்தின் ஆஸ்தான குடிசைவாசி.

    இருவரும் ஒரே நண்பன் இளங்கோ. வயது பதினெட்டு அடியெடுத்து வைத்தவன்.
    அந்த குப்பத்தில் படிக்கும் வாலிபன் கல்லூரியில் விண்ணப்பத்து விட்டு வந்து இருப்பதால் அந்த இருப்பிடத்தில் இளங்கோவிற்கு மதிப்பு. லோகுவும் நல்ல படிப்பாளி. என்ன குடும்ப வறுமை கல்லூரிக்கு எல்லாம் கனவு கண்டுவிடாதே என்று நடு மண்டையில் அடித்து பதிவு செய்ததால் கல்லூரி பக்கம் எட்டியும் பார்க்க விருப்பபடமாட்டான்.

    லோகு வீட்டிற்கு வந்த நேரம் “ஏன்டா எங்க போன. உன்னை நேத்துல இருந்து தேடிட்டு இருக்கேன். பதினெட்டு வயசு கூட ஆகலை. வீட்ல தங்கறதில்லை. எங்க தான் ஊர் சுத்துவ?” என்று தாய் கமலா கேட்க, பதில் கூறாமல் சோத்தை அள்ளி தட்டில் போட்டுவிட்டு அங்கிருந்த கருவாடை கடித்து திண்ண ஆரம்பித்தான்.
  
    “கேட்டுட்டே இருக்கேன். ஒரு வார்த்தை மரியாதைக்கு வாயை திறக்கியா நீயு. அதென்ன டா உங்கப்பா ஊட்ல தங்கறது இல்லை. இப்ப நீயுமா? அவர் தான் ஏதோ செண்டு போட்ட ஒரு சிறுக்கி பின்னாடி போயி சுத்தறாரு. நீயாவது உருப்பிடுவியா மாட்டியா.” என்று கேட்டதும் “இப்ப எதுக்கு அவரையும் என்னையும் இழுக்கற. இன்னா வேணும். பணம் தானே இந்தா. இந்த கேள்வி கேட்கறது எல்லாம் வேணாம்.” என்று ரூபாய் தாளை விட்டெறிந்து மீண்டும் உண்பதில் தீவிரமானான்.

    “ஏதுடா இம்புட்டு பணம். ஐம்பது ரூபா நூறு ரூபாவா இருக்கு. எப்பவும் பத்து பத்து ரூபாவா கொண்டாருவ. இன்னிக்கு இன்னா? ஆமா நேத்து எங்க போன” என்று கேட்டாள்.
  
    “ம்ம்… ஒரு வீட்ல கொள்ளையடிச்சேன். அம்புட்டுது. போய் வேலையை பாரு.” என்று கத்தினான்.

   “நீ கொள்ளை மட்டுமா அடிப்ப. கொலையே பண்ணுவ. இந்த வாய் இருக்கே…  அது இல்லைனா நீ பிழைக்க மாட்ட” என்று திட்டினாலும் பணத்தை எண்ணி முடித்து நிமிர்ந்தாள் கமலா.

     “இதோ பாரு. உன் புருஷனுக்கோ இல்லை உன் சின்ன பையனுக்கோ கொடுத்துட்டு காசு காலி டா லோகுனு வந்து நிற்காத. என்னை கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கவுடு. லிஸ்ட்ல அக்காவும் தான்” என்று படுத்தான்.

     அது ஒரு அறை கொண்ட குடிசை வீடு. பெயருக்கு ஒரு டிவி ரேடியோ. தடுப்பு சுவர் இருக்க அறையாக பாவிக்கலாம்.

  மற்றபடி குளியலுக்கோ மலம் கழிக்கவோ பொது கழிப்பிடம் தான்.

      தடுப்புக்கு அந்தபக்கம் படுத்தவன் இமை மூடினான்.

    “அப்பாடி வந்துட்டானா மா. காதுல இரத்தம் வர்ற வரை புலம்பிட்ட. எங்க போனானோ ஏது போனானோனு. இப்ப திருப்தியா? புருஷன் ஊர் சுத்தினா கூட அதை சட்ட பண்ணலை பையன் காணோம்னு தாம்தூம்னு குதிக்கிற. சின்னது டியூசன்ல இருந்து வரலை.” என்று அனிதா கேட்டதும் இமை மூடியவன் திறவாமலே தன் அக்கா வந்து விட்டாளென யூகித்து கொண்டான். அடுத்து 14 வயது சிவா என்ற சின்னவனும் வந்து சாப்பிட்டு தட்டு அலும்பி படுக்க ஆரம்பித்தார்கள்.

   கமலா மட்டும் வாசலில் எட்டி எட்டி பார்த்து படுத்து கொண்டாள்.
   கதவு தாழிட எதுவுமில்லை. சின்னதாய் ஒரு ஜன்னல் ஊக்கு தான். அதை போட்டு சாற்றி விட்டு கமலா கண்ணீரை உகுத்தி கணவனை காணாது தவித்தார். வழக்கமாய் நடக்கும் விஷயம் தான். ஒன்று அதிகாலை வந்து சேர்வார். இல்லை அரைபோதையில் வந்து கதவை தட்டி உருட்டி அருகே பூனை போல வந்து அவனின் தேவை தீர்க்க அணைப்பான் ராஜேஷ்.

       லோகுவிற்கு அந்த கருப்பு இருட்டில் ஏதோ குபுக்கென வந்து முகத்தில் தெளிக்க வியேர்த்து இமை திறந்து பயந்து முழித்தான்.

   அனைவரும் உறங்க தந்தை முனகல் மட்டும் கேட்டது. அது தடுப்பு சுவர் என்றாலும் தந்தை நிழல் தாயை தழுவியதாக தோன்றவும் குப்புறப்படுத்து கொண்டான்.

மதங்கி-4

     இன்ஸ்பெக்டர் தர்ஷன் தன் முன் இருந்த பாரன்சிக் ரிப்போர்ட்டை கூர்ந்து ஆராய்ந்தவன் நதியாவின் புகைப்படத்தை பல முறை பார்த்து விட்டு விஜயிடம் தகவல் கூறி கையெழுத்து வாங்க வரச்சொன்னான்.

   விஜயும் ஒரே நாளில் பாதி ஆளாக முன் வந்தான்.

     “நதியா… நதியாவுக்கு என்னாச்சு சார். எதுக்கு கொன்று இருக்காங்க சார்.” என்று கேட்டான்.

   “வீட்ல நகை பணம் எல்லாம் எந்தளவுக்குள் வச்சிருப்பிங்க?” என்று கேட்டான்.

    விஜயோ தர்ஷன் சம்மந்தமே இல்லாமல் கேட்டதும் விழித்தவன் போலிஸ் ஆட்கள் சும்மா கேட்க மாட்டார்களென பிறகு கூற ஆரம்பித்தான்.

    “எப்பவும் கார்டு தான் சார். அளவுக்கதிகமா கையில கேஷ் இருந்தா செலவு அதிகமாகுதுனு இரண்டு மூன்று பொருளா வாங்க மட்டும் தான் கடைக்கு போவோம். அதனால கார்டு தான் ஸ்வைப் பண்ணுவோம்.

     சில்லரை தேவைகள் மட்டும் வீட்ல எப்பவும் பத்தாயிரம் இருக்கும்.

   அது கூட இப்ப மாசம் பிறந்ததால இனி தான் காசு எடுக்கணும். வீட்ல மூவாயிரம் இல்ல இரண்டாயிரம் இருக்குனு நதியா சொன்னா. ஏன் சார்” என்று கேட்டான்.

    “நத்திங்…. நகை எதுவும் திருடு போகலை. பணம் போயிருக்கும். அப்பறம்… விஜய் பாரன்சிக் ரிப்போர்ட்ல நதியா கற்பழிக்கப்பட்டிருக்கா.” என்றதும் விஜய் தலையிலும் முகத்திலும் அடித்து அழ ஆரம்பித்தான்.

       “இரண்டு பேர் ரேப் அட்டன் பண்ணியிருக்காங்க. பிறகு தான் கழுத்தை அறுத்து கொன்றுயிருக்காங்க.” என்றதும் விஜயோ இரண்டு பேரா.. கழுத்தை அறுத்தா என்பது போல அதிர்ந்து சரிந்தான்.

     “ஐ அம் சாரி.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்றான் தர்ஷன்.

     “சார் எங்களை பழி வாங்கவோ கொல்லவோ யார் சார் இருக்கா. நாங்க அந்தளவு பெரிய ஆள் இல்லையே… இது திருட வந்து இப்படி நடந்திருக்கலாம் சார். எனக்கு யார் மேலயும் சந்தேகம் இல்லை” என்றான்.

      தர்ஷனுக்கோ ஏதேனும் பேச்சு வாக்கில் நூல் கிடைக்கும் அதை பிடித்து அதன் முனைய அறிய பார்த்தான். ஆனால் பரிதாபமாக இப்படி பதில் வரவும் சோர்ர்து போனான்.

    தற்போது தான் வேலைக்கு சேர்ந்தே சில நாட்கள் ஆகின்ற நேரம் எதிலும் இது தான் என்று வகுத்திட முடியவில்லை.

   யார் அந்த இருவர் என்றவனின் யோசனையை “நான் அப்ப கிளம்பறேன் சார். கொலைககாரன் கிடைச்சா சொல்லுங்க சார்.” என்று தோய்ந்த முகமாக கூறி சென்றான்.

    அவன் தலை மறைந்ததும் தர்ஷன் நதியா தரப்பில் யாருமே வரவில்லையே அப்பா குடிமன்னன். ஆனால் தங்கை காயத்ரி படித்தவள் வேலை செய்பவளாயிற்றே ஒரு வார்த்தை எங்க அக்காவை யார் கொன்றிரும்பானு கேட்டியிருக்கலாமே. ஏன் வரலை என்ற சந்தேகம் வலுத்தது.

    சந்தேகம் வந்ததும் காயத்ரியினை தேடி புறப்பட்டான்.

     சாதாரண கணக்கு வழக்கு பார்க்கும் துறையில் பணிப்புரிந்திருந்தாள். தனக்கு தேவையான சம்பளம் தன் தேவையை பூர்த்தி செய்வதும் என்று தந்தையை ஒதுக்கி அவளுமே வாழ செய்வதால் அவள் பணிப்புரியும் இடத்திற்கு வந்தான். ஆனாலும் காக்கி உடையோடு வந்தால் அலுவலக மக்கள் பீதியடைந்து என்ன ஏதென அச்சம் கொள்வார்களென போன் மூலமாக அழைத்து அருகே இருக்கும் இடத்திற்கு வர கூறினான்.

    காயத்ரியோ எவ்வித பதட்டமும் இல்லாமல் வந்து நின்றாள்.

     அவனாகவே நதியா இறப்பின் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டை பற்றி கூறினான்.

    அதிர்ச்சி அடைந்த காயத்ரி சிறிதளவே வருந்தினாள்.

     “கொலையாளியை எப்ப சார் கண்டுபிடிப்பிங்க. ஏதாவது எவிடென்ஸ் கிடைச்சுதா?” என்று கேட்டாள்.

      “இல்லை… கிடைக்கலை. ஆனா உங்க தரப்பில எந்த வித அதிர்ச்சியும் அடைந்த மாதிரி தெரியலை. என்ன காரணம். காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டா ஒரேடியா தலைமுழுகி செத்தாக்கூட பீல் பண்ண மாட்டிங்களா என்ன?” என்றான்.

     “பீல் பண்ணினேன் சார். ரொம்ப ரொம்ப… நான் விரும்பின விஜயை அவ தட்டிட்டு போனப்ப.

    ரொம்பவே அழுதிருக்கேன். ரோம்ப வருந்திருக்கேன்.” என்றதும் தர்ஷன் என்ன என்பதாய் கேள்வியாய் நோக்கினான்.

   “ஆமா சார். விஜயை நான் விரும்பினேன். பட் எங்க வீட்டு லேண்ட்லைன் மூலமா என்னை கண்டுபிடிக்க வந்து எனக்கு பதிலா நதியாவை விரும்ப ஆரம்பிச்சுட்டான்.

    நதியா நான் லவ் பண்ணலை என் தங்கைனை சொல்லிருக்கலாம். ஆனா சுயநலவாதி சொல்லாமலேயே அவனிடம் பழகிட்டா. பற்றாத குறைக்கு என் தங்கைக்கு உன் மேல ஆசை. தயவு செய்து லேன்லைன்ல போன் போட்டா எடுக்காதேனு என் மேல தப்பான பிம்பத்தை மாற்றிட்டா.

     அடுத்தவன் கணவனை காதலனை அதுக்கு பிறகு எண்ணி பார்க்க எனக்கு விருப்பமில்லை. நான் உண்டு என் வேலையுண்டு வாழ ஆரம்பிச்சுட்டேன்.

   அவளுக்கு வந்த காதலை பிரப்போஸ் எல்லாம் கண்டுக்காம விட்டுட்டு என் விஜயை நான் விரும்பியவனை என்னிடமிருந்து பிடிங்கிட்டா. என் காதலை கூட விஜய் புரியாம பண்ணிட்டா.

  இப்ப அவ செத்தா எனக்கென்ன சார். பீல் பண்ண மனசு வரலை.” என்றாள்.

    தர்ஷனுக்கோ ‘எப்பா’ என்றிருந்தது. பேச்சின் இடையில் நதியாவுக்கு காதல் தூது வந்ததென கூறினாளே என்று தோன்ற “உங்கக்காவுக்கு லவ் பிரப்போஸ் பண்ணியது யாரு.” என்றான்.
 
    “அதுகடக்கு லிஸ்ட் பெருசா. அவ தான் அழகியாச்சே. என்ன அவ செலக்ட் பண்ணியது என் விஜயை.” என்று கூறவும் கண்ணீர் வெளியேறியிருந்தது.
  
     “லிஸ்ட் பெருசுனா… குறிப்பிட தகுந்தவங்க இருப்பாங்களே. ரொம்ப சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் செய்து” என்று கேட்டதும் சில நொடி யோசித்தாள்.

     “பிடிக்கலைனா திட்டி விட்டுடுவா சார். அதிகமா நெருங்க விடமாட்டா. ஆனா ஒரு பையனிடம் மட்டும் பிரெண்டா பழகினா. அவனும் காதலிக்கலைனா கூட பரவாயில்லைனு பேசினான். ஆனா அவனையும் ஒரு கட்டத்தில சுத்தமா நிறுத்திட்டா. என்ன காரணம் என்று எல்லாம் என்னிடம் அதிகம் சொல்லை.

     அந்த ஆள் கூட இதே ஏரியா தான். பெயர் கூட ஏதோ… ஜீவா… அப்போ விஜய் பற்றி அவளுக்கு தெரியாது. அதனால இதெல்லாம் ஷேர் பண்ணியிருந்தா.” என்று கூறினாள்.

    “ஓ… இப்ப அவர் எங்க இருப்பாருனு சரியா தெரியுமா?” என்றதும் யோசித்தவள் உதடை பிதுக்கி இல்லையென்றாள்.
   
    “சார் அவர் இந்த ஜவுளிக்கடை வச்சிருக்கார் சார். சின்னதா ஒரு ரூம் அளவுக்கு வாடகை எடுத்து நம்ம பெரியார் தெரு முனையில கடையிருககே அது தான்.

    இது கூட நதியா ஒரு முறை அந்த தெரு வேண்டாம். ஜீவா கடைப்போட்டிருக்கான். ரோட்டுல போனா பார்த்துட்டு பேச வருவான். அவாய்ட் பண்ண சொன்னது.” என்றதும் தர்ஷன் தகவலை கேட்டுக் கொண்டான்.

    “உங்கப்பா ஏன் கண்டுக்கலை? அவர் ஏதாவது காரணத்தோட இருக்காரா?” என்றான்.

     “என்ன சார் பெரிய காரணம். சம்பாரிச்ச பணத்தை அவர் கேட்கறப்ப கொடுக்கலை. அதுக்கு பெத்த பொண்ணுங்க எப்படி போனா என்னனு சுத்தறார்.

     என்னாலையோ நதியாவாலையோ அவர் குடிக்க பணம் கிடைக்காதப்ப நாங்க உயிரோட இருந்தா என்ன செத்தா என்ன?” என்று விரக்தியாக பதில் தந்தாள்.

     தர்ஷனோ “ஓகே… நீங்க உங்க ஒர்க்கை பாருங்க. சிவாவை பார்த்து உங்க நம்பருக்கு படத்தை செண்ட் பண்ணறேன் அவரானு சொல்லுங்க. தேவைப்பட்டா திரும்ப வர்றேன்.” என்றான்.

     தர்ஷன் போனதும் காயத்ரியை தேடி ஒருவன் வந்து, “என்ன ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சா?” என்று கேட்டான்.
  
     “உன்னை என்னிடம் பேசாதே கிட்ட வராதேனு சொல்லிட்டேன்  அப்படியிருக்க வந்து நிற்கற. நீ உன் வேலையை பாரு” என்று கடுப்பாக மொழிந்து அவனை விட்டு தூரமாக சென்றாள்.

     தர்ஷன் இங்கு பெரியார் தெருவுக்கு வந்தவன் காயத்ரி கொடுத்த அடையாளத்தோடு அந்த கடையை நெருங்கினான்.

   பெயர் பலகையில் உரிமையாளர் ஜீவா என்றிருக்க கண்ணாடியை கழற்றி அந்த மேஜை மீது சாய்ந்தவனை கண்டு ஜீவாவிற்கு தொண்டையில் எச்சில் இறங்க சதி செய்தது.

     வியேர்த்து துடைத்து “என்ன சார் வேண்டும்?” என்று திருட்டு முழியில் கேட்டவனை தர்ஷன் சந்தேகம் கொண்டான்.

     “உங்களிடம் உங்க பழைய எக்ஸ் லவ்வர் நதியாவை பற்றி விசாரிக்க வந்தேன். பேசலாமா?” என்றான். கடையில் மதியமாவதால் கூட்டம் இல்லை. அது சின்ன கடை அதனால் வாடிக்கையாளர் என்பது அறிந்தவர் தெரிந்தவர் என்று வருவது குறைவே.

     “சார் அவயிறந்ததுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சார். முன்ன விரும்பினேன். அப்பறம் விட்டுட்டேன். எனக்கே இப்ப தான் கல்யாணமாகி இரண்டு மாசம் ஆகுது சார்.” என்றதும் தர்ஷனுக்கு இவனுக்கு எப்படி நதியா இறந்தது தெரியும் என்று பார்வை வீசினான்.

    “ஆமா நதியா இறந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான்.

    “நதியா இருக்கற அதே தெருவுல தான் இருக்கேன் சார். நேற்றே போலிஸ் வந்து போனது இறந்தது தெரியும்.” என்று கூறினான்.

    தர்ஷனுக்கோ “என்னது அதே தெருவா?” என்று சந்தேகம் விழுந்தது.

    “ஆமா சார்.” என்றான் ஜீவா.

     “நீங்க நதியாவோட எக்ஸ் லவ்வருனு விஜய்க்கு தெரியுமா?” என்று கேட்டான்.

     “இல்லை சார் தெரியாது. இதுவரை அறிமுகப்படுத்தியது இல்லை. யார் சார் அறிமுகப்படுத்துவா? ரோட்டுல போனா நான் தான் பார்ப்பேன். அவ கண்டுக்க மாட்டா. தனியா வந்தா நானா பேசுவேன். சின்னதா சிரிச்சிட்டு நழுவிடுவா” என்றான்.

   இவனின் பதிலில் தர்ஷனுக்கு என்னவோ சரியாக இல்லையே என்ற உணர்வு. பின்னே ரோட்டுல போனா கண்டுக்க மாட்டா… சிரிச்சி நழுவிடுவானு சொல்லறான்.
 
     திருமணமானப்பின் யார் பழைய காதலை கண்டுக்கொள்வார்கள் அவனை பார்த்தால் தவிர்க்க தானே செய்வார்கள். இவன் பேச்சே சற்று இடித்தது. ஆனாலும் ரேப் செய்த ஆட்கள் இருவர் என்றதில் தர்ஷனுக்கு அங்கே முட்டுகட்டு விழுந்தது.

     இவனை பார்த்தால் கொலைக்கு அஞ்சுபவனாக உள்ளதே என்று எங்கே தங்கியிருப்பது என்ற எல்லா விவரமும் வாங்கி கொண்டு சென்று விட்டான்.

     கடவுளே ‘இவயென்ன அடுத்த நாளே இங்க வந்து நிற்கறான்.’ என்றது போல வியேர்வையை துடைத்து கொண்டு தர்ஷன் சென்ற வண்டியை புள்ளியாய் மறையும் வரை பார்வையிட்டான்.

மதங்கி-5

      தன்னை முன்னே போகவிட்டு பின்னால் எட்டி பார்க்கும் ஜீவாவின் செய்கை, அதுவும் மறையும் வரை நோக்கியவனின் அந்த திருட்டு முழி வண்டியின் சைட் கண்ணாடி வழியே தெரியவும் தர்ஷன் மனம் இவனை விடாதே தோண்டி துருவு என்றது.

     ஆனாலும் சட்டென ஒருவரை அடித்து பிடித்து விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லையே. சந்தேக வட்டத்தில் விழுபவரை எல்லாம் உடனே அவன் பாணியில் விசாரிக்க இயலாதே. அந்த ஏரியாவின் திருடர்கள் கொள்ளை கொலை என்று கை வரிசை காட்டும் ஆட்களை எல்லாம் வரச்சொல்லி பேச்சை தொடுத்தான். யாரேனும் அவனின் பார்வைக்கு நதியா கொலையோடு தொடர்பு கொண்டவர்களாயென்று.

   ஜீவாவிற்கு அடுத்த புது வாடிக்கையாளர் வரவும் தான் தன்னிலையை மறந்து நிம்மதியானான்.

   இங்கு மதுபான கடையில் வெளியே இருந்த மது பாட்டிலை ஒரு கோணி பையில் திணித்து கொண்டிருந்தான் இளங்கோ. அதனை பார்த்த லோகுவோ “என்னடா என்னை தேடினியா?” என்றான்.

    “என்ன மச்சி இரண்டு நாளா ஆளை காணோம். உன்னை தேடி தேடி அலுத்துட்டேன். ஆமா… எங்க போன?” என்று கேட்டான் இளங்கோ.

       “அடப்போடா… இங்கிருக்கவே பிடிக்கலை டா. எங்கயாவது போகணும். பணம் காசு வண்டி டைய்ல்ஸ் வூடு. தனி ரூமு இப்படி போயிடணும். பணத்தை பேயா சம்மாதிக்கணும். அதில்லாம எதுவும் நடக்க மாட்டேங்குது.” என்று அலுத்து கொண்டான்.

      “நான் என்ன கேட்கறேன். நீ என்ன பேசுற டா.” என்றான் இளங்கோ.

     “என்ன பேச.. ஆமா நீயேன் தேடின.” என்றான்.

    “டேய் பிரெண்டுனா தேட மாட்டாங்களா… ஆமா என்ன பணம் பணம்னு பேசற” என்றான். மதுபாட்டிலின் கோணிப்பையை முதுகில் சுமந்துக் கொண்டு அருகே அமர்ந்தான்.

    லோகுவின் பார்வை அழகாக உடையணிந்து ஸ்கூட்டியில் செல்லும் பெண்களையும், நடைப்பாதையில் முடிவிரித்து ஸ்லீவ் கைகள், ஜெக்கின்ஸ் என்று அணிந்து செல்லும் பெண்களையே காண்பதை இளங்கோ பார்த்து விட்டு அவனை இடித்தான்.

     “என்னடா பண்ணற.?” என்று இளங்கோ கேட்க, “என்ன சொன்ன ?” என்று லோகு கேட்டு நின்றான்.
 
      “சுத்தம் நீ கவனிக்கலையா… ஆமா எதுக்கு பணம், தனி வூடு, தனி ரூமு, காரு… எதுக்கு டா அந்த பொண்ணுங்களை அப்படி பார்க்கற?” என்றான் இளங்கோ.

     “உனக்கு சொன்னா புரியாது மச்சி” என்றவன் நிராசையாக பார்த்து மது பாட்டிலை கையிலெடுத்தான்.

     “இத்த வித்தா எவ்ளோ டா கிடைக்குது.” என்றான் லோகு.

     “அது பாட்டிலோட எண்ணிக்கையை பொறுத்து டா. ஒரு நாளைக்கு நிறைய கிடைக்கும். ஒரு நாளைக்கு சுமாரா கிடைக்கும். என்ன இத்த பொறுக்கறதுக்குள்ள போறவன் வர்றவன் நம்மளை ஒரு லுக்கு விடுவான் பாரு.
    அப்படியே செத்துடலாம் அந்தளவு இளக்காரமா பார்ப்பாங்க. சில பேரு பிஞ்சிலேயே பழுத்ததுனு பேசுவாங்க” என்றான் இளங்கோ.

      “எத்தனையோ அவமானம் பார்த்தாச்சு. இதுல நம்ம இந்த குப்பத்து ஜனம்னு தெரிந்தாலே இளக்காரமா தான் பார்ப்பாங்க.

     பார்க்கறவனா நாளைக்கு நம்ம கஷ்டத்துல பங்கெடுப்பான். என்று பேசிக் கொண்டே சென்றார்கள்.

     கமலாவோ வீட்டில் புலம்பி கொண்டே இருப்பது அந்த தெரு திரும்பும் போதே லோகு காதிற்கு கேட்டு விட்டது.

      “வீட்ல அரிசியில்ல பருப்பில்லை…. அந்த மனுஷனிடம் சொன்னா ஒன்னுத்துக்கும் பிரோஜனமில்லை. பொம்பள பிள்ளை அது வேலைக்கு போகுது. சின்ன பையன் பள்ளிக் கூடத்துக்கு போகுது. பதினெட்டு வயசாகலை இவன் எப்படியோ என்னமோ சம்பாறிச்சு கொண்டாந்து தர்றான். இந்த மனுஷன் வாங்கற சம்பளத்தை அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டு கை வீசிட்டு வந்தா நாலு உசுரு எப்படி கஞ்சி குடிக்கும். கொஞ்சமாவது அறிவிருக்கா.” என்ற கத்தல் கேட்டு “கொஞ்சம் சும்மா கத்தாம இருக்கியா. நீ கத்தறது தெரு வரை கேட்குது. அப்பறம் எப்படி உன் புருஷன் வருவான். உன் குரலை கேட்டு அப்படியே ஓடிடுவான். இன்னா பிரச்சனை உனக்கு?” என்று அதட்டினான் லோகு.

     “ரேஷன் வாங்கணும் டா. இன்னிக்குனு பார்த்து இவ்ளோ தான் இருக்கு” என்று புலம்பினாள் லோகு தாய் கமலா.

     “நேத்து தானே இரண்டாயிரத்து முந்நூறு கொடுத்தேன். இன்னா பண்ண?” என்றான்.

    “அது அது வந்து வூட்டு வாடகை, சிவா ஸ்கூல் டிரஸ் உட்கார்ற இடத்துல கிழிஞ்சிடுச்சு டா. அதனால புதுசு வாங்கிட்டேன். மிச்ச காசை இங்க வச்சேன் டா. பாவி… நான் குளிக்க போனதும் பாத்திரத்தை உருட்டி எடுத்துட்டு போயிட்டான்.” என்றதும் லோகுவுக்கு கோபமே வந்தது.

     “ரேஷன் வாங்க போகணும் இப்ப இதான் இருக்கு” என்று இருநூறு ரூபாய் தாளை நீட்டினாள்.

      “உன்கிட்ட எல்லாம் மொத்தமா துட்டு கொடுத்தா இப்படி தான்.. கொடு” என்று பிடுங்கி கொண்டு சென்றான்.

    இளங்கோவோ “என்ன டா கோபமா சுத்தற. முன்ன எல்லாம் இப்படியில்லையே. என்னாச்சு உனக்கு என்று கேட்கவும் பேசாமல் நடையிட்டான்.

     ரேஷன் கடைக்கு போகும் வழியில் பாட்டிலை வாங்கும் கடையிருக்க அதனை போட்டு பணமாக பெற்றான் இளங்கோ.

   லோகுவுக்கோ அதனையெல்லாம் கவனித்தான்.

     ரேஷன் கடை வந்ததும் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை என்று அரசாங்கம் கொடுக்கும் அனைத்தையும் வாங்கினான். அப்பொழுதும் ஐம்பது ரூபாய் அதிகமாக இளங்கோ நீட்டினான்.

    எதுக்கு கொடுக்கற என்றதும் “உங்க அம்மா தான் இருநுறு தான் கொடுத்துச்சே.” என்றான் இளங்கோ.

     “அது ஏமாந்ததுனு தெரியும். நான் ஏமாறலை. அதுக்கு தான் கொஞ்சூண்டு கையில வச்சிட்டேன். என்கிட்ட இருக்கு.” என்று ஐந்நூறு ரூபாய் தாளை நீட்டினான்.

    இளங்கோவிற்கு என்னவோ இவனிடம் என்ன பணம் அதிகமா இருக்கு. இருபது ரூவா ஐம்பது ரூவாவே எடுக்க மாட்டான்.’ என்று எண்ணினான்.

      அரிசி பருப்பு என்று அனைத்தும் வெவ்வேறு பையில் வாங்கி அடக்கி கொண்டு தூக்க ஒரு பை சின்னதாய் ஓட்டை இருந்தவை கிழிசல் விட ஆரம்பித்தது.

      ரேஷன் கடையில் கிடைக்கும் பருப்பு, அரிசி, உப்பு, சர்க்கரை, டீ தூள், எண்ணெய், சோப்பு என்று மற்றவர்கள் வாங்குவார்களோ அல்லது கள்ள சந்தையில் வாங்கி விற்பார்களோ லோகு போன்றோரின் நிதிநிலைக்கு கல்லும் தூசியும் பார்ப்பதில்லை.

    வயிற்றில் ஈரத்துண்டை போடாமல் பலரின் வாழ்வு செழிக்க வைக்கிறது ரேஷன் கடை பொருட்கள்.

    லோகுவிற்கு வீட்டை அடைவதற்குள் போதும் போதுமென்றானது. ஓட்டையை அடைப்பதற்காக கஷ்டப்பட்டு தான் தூக்கி கொண்டு வந்தான்.

    போதாதற்கு எதிரே போலிஸ் ஜீப் அவனை தாண்டி செல்ல கை நழுவி கீழே கொஞ்சம் சிதறியது. எரிச்சலில்  அதில் செல்லும் தர்ஷனை திட்டினான். நிச்சயம் அது தர்ஷன் காதிற்கு சென்றிருக்காது.

    வீட்டுக்கு வந்தப்பொழுது அன்னையை திட்டி முடித்தான். “ஒரு பையை ஒழுங்கா கொடுக்க மாட்ட” என்று எரிந்து விழுந்தான்.

    இளங்கோ இதற்கு மேல் இங்கிருக்க முடியாது சென்று விட்டான்.

    நகத்தை கடித்து துப்பியபடி அறைக்குள் வந்து அமர்ந்தவனுக்குள் சீற்றம் கூடியது.

     இங்கு தர்ஷன் மீண்டும் கைரேகை  கண்டறிந்தவரோடு பேச வந்தான்.

    நதியா வீட்டில் கிடைத்த கைரேகையை சற்று முன் ஜீவா கடைக்கு டீ கொடுக்க சென்று திரும்ப வாங்கிய கண்ணாடி டம்ளரை எடுத்து முன் வைத்தான்.

    “சார் இந்த நதியா கேஸுக்கும் அந்த ஜீவாவுக்கும் சம்மந்தம் இருக்கும்னு நினைக்கிறிங்களா சார்.” என்று கான்ஸ்டேபிள் ஒருவர் சற்று முன் ஜீவா குடித்த டம்ளரை வாங்கி வந்த குழப்போத்தோடு கேட்டார்.
   
     “இருக்கலாம்… இல்லை எல்லா மனிதரை போல போலிஸானு பயப்பட்டிருக்கலாம்.  நம்ம நதியாவோட எக்ஸ் லவ்வராச்சே.. ஏதாவது நம்மை இதுல இழுத்து விட்டுடுமோனு பயப்படலாம். எதுனாலும் கைரேகை வச்சி தான் சொல்ல முடியும்” என்று கூறியவன் அதன் ரிப்போர்டை வாங்க காத்திருந்தான். 

     வீட்டிலிருந்து அவனின் இல்லாள் போன் போடவும் உதட்டில் மென்னகையை உதிர்த்து “சொல்லு ரசகுல்லா” என்றான்.

     “என்னடா ரோபோ சாப்பிட வராம என்ன பண்ணற?” என்றாள்.

     “கொஞ்சம் வேலை மா. வெளியே சாப்பிட்டுக்கறேன்.” என்றான்.

    “ஆமா டா… இந்த ஒரு கேப் தான் நீயும் நானும் கொஞ்சம் டைம் கிடைக்க கொஞ்சி ரோமியோவா இருப்ப. அதுக்கும் இப்ப எல்லாம் ஆப்பு வச்சிட்டு வெளியே சாப்பிடறியா.. சாப்பாடு எல்லாம் கட்டி ரெடியா இருக்கு. கணேஷ் அண்ணாவை அனுப்பி எடுத்துக்கலாமே” என்றதும் “சார் ரிப்போர்ட் ரெடி” என்றதும் “அஸ்வதி நான் அப்பறம் பேசறேன்” என்று துண்டித்து கொண்டான்.

    மறுபக்கம் ‘இவனை எல்லாம் கட்டிட்டு நான் படற பாடு இருக்கே’ என்ற புலம்பி இருப்பாளென தர்ஷன் யூகித்து சிரித்து கொண்டான்.
   
     “சொல்லுங்க சார் வேற வேற கைரேகை தானே?” என்றதும் ரிப்போர்டை காட்டி செருமியவர் தர்ஷனுக்கு பதில் கூற வாயெடுத்தார்.

மதங்கி-6

கையிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட டேப் வாட்டரில் கழுவினான் தர்ஷன்.

அடிவாங்கி சோர்ந்து “எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை சார்… என்னை விட்டுடுங்க” என்று அதனையே திரும்ப திரும்ப கூறியவனை கண்டு எரிச்சலில் அங்கிருந்த ஸ்டூலை காலால் எட்டி உதைத்தான்.

அது சுவரில் பட்டு விழவும் ஜீவா அச்சத்தில் நடுங்கினான்.

“நீ நதியா வீட்டுக்கு போகாம உன் கைரேகை மட்டும் எப்படி டா அவங்க வீட்டு டிரஸிங் டேபிள் கண்ணாடில பதிந்தது. என்ன பூ சுத்தறியா… ஒரு பொண்ணை நாசம் பண்ணி கழுத்தறுத்து போட்டுட்டு பாவமா முகத்தை வைத்து எனக்கு சம்மந்தம் இல்லை விட்டுடுங்கனா சும்மா இருக்கணுமா?

உன்னோட இருந்த அந்த இரண்டாவது கல்பெர்ட் யாரு? இப்ப சொல்லலை… உயிரை மட்டும் வச்சிட்டு செத்த பாம்பா படுக்கையில போட்டுடுவேன்.” என்று கோபத்தில் பேசி முடித்தான்.

“சார் நிஜமா நான் ஒன்னும் பண்ணலை சார்.” என்று அழுதவனை கையை முறுக்கி குத்துவிட, சேரோடு விழுந்தான்.

தர்ஷனுக்கு கட்டிப்போட்டு அடிக்கும் பழக்கம் இல்லாததால் கீழே விழுந்தவன் அச்சத்தில் பின் நகர்ந்தான்.

“உண்மையை சொன்னா தப்பிச்ச. இல்லை அடிவாங்கியே சாகாதே. நதியாவை ரேப் பண்ணின இரண்டு பேரில் உன்னோட ஸ்போர்ம் மேட்சாகியிருக்கு” என்றதும் ஜீவா படத்தில் கண்டது நிஜத்திலும் கண்டறிந்திடுவார்களென எப்படி எண்ணாமல் போனான்.

தர்ஷன் கூறிவிட்டு முன்னே வர, ஜீவா தேய்த்துக் கொண்டே பின் நகர்ந்து மிரண்டான்.

சுவற்றில் முதுகு படவும் நின்றவன். “அய்யோ அடிக்காதிங்க… சொல்லிடறேன்” என்று அலறினான்.

சேரை காலால் மிதிக்க அது நேராக நிமிர்ந்தது. கையை அதன் பக்கம் காட்டி “உட்காரு” என்றான்.

எச்சிலை விழுங்கி முடிக்க, அடித்ததினால் தொண்டை வரண்டு இருக்குமென நீரை நீட்டினான்.

கைகள் நடுங்க வாங்கி குடித்தான். பாதிக்கு மேலாக கீழே கொட்டியது. ஆனால் தர்ஷனின் கூர்பார்வைக்கு பயந்தே தண்ணீரும் கிட்டாமல் போய் விடுமோயென பயந்தான் ஜீவா.

“சொல்லு… இன்னொரு அக்யூஸ்ட் யாரு?” என்றான் தர்ஷன்.

“சார்… நிஜமா அம்மா சத்தியமா.. நான் நதியாவை கொலை பண்ணலை சார்.” என்றதும் தர்ஷன் எதிர் இருக்கையில் இருந்து எழுந்திட, “சார் சார் சார் உண்மை சார். நான் போனேன் அவளை அனுபவிச்சேன். ஆனா நான் அவளை கொல்லலை சார். வேற யாரோ கொன்னுயிருக்காங்க சார்.

நான் நதியாவை காதலிச்சேன் சார். அவளும் முதல்ல காதலிச்ச மாதிரி தான் பார்த்தா பழகினா. நான் படிக்கலைனதும் முதல்ல ஷாக் ஆனா, அப்பறம் உன்னை காதலிக்கலை என்ன டிஸ்டர்ப் பண்ணாதேனு சொன்னா. பிறகும் என்னால அவளை மறக்க முடியலை. ரதி மாதிரி பொண்டாட்டி வேண்டும்னு யார் தான் சார் விரும்ப மாட்டாங்க.

அதனால தொடர்ந்து காதலிக்க சொல்லி டார்ச்சர் பண்ணினேன். ஒரு கட்டத்துல மூஞ்சிக்கு நேர திட்டிட்டா. சரி நண்பர்களா இருக்கலாம்னு பேசினேன். சரினு தலையாட்டினா. என்னை அவளா தவிர்த்தா. நம்பரை யூஸ் பண்ணலைனு சொன்னா. நைஸா நழுவிட்டா.

விஜயை கல்யாணம் பண்ணிட்டு எங்க தெருவுல நதியா வந்ததும் எனக்கு அவ்ளோ குஷி. தெரிந்த பொண்ணு அதுவும் லவ் பண்ணின பொண்ணுனு பேச வந்தேன். அவ என்னை கண்டுக்கவே இல்லை. அப்படியே என்னவோ புழுவை பார்த்து கிராஸ் பண்ணற மாதிரி  தவிர்க்க பார்த்தா எரிச்சலா இருந்தது.

தனியா பார்த்தப்ப கேட்டேன். உன்னை மாதிரி ஆட்களோட பேசினா என்னை அவர் தப்பா நினைக்கவா. எப்படி பழக்கம்னு கேட்டா என்னனு சொல்ல.? அப்படியிப்படி பேசினா.

சேர்தான் போடினு நானும் விட்டுட்டேன். எனக்கு இரண்டு மாசம் முன்ன கல்யாணம் பண்ணினாங்க.

பத்திரிகை வச்சேன். அதுக்கும் வரலை. வரலைனா கூட பரவாயில்லை அதுக்கு பிறகு நானும் என் ஓய்ப்பும் கடைத் தெருவுக்கு போனப்ப இளப்பமா பார்த்தா.

மறுபடியும் ஒரு முறை தனியா பார்த்தப்ப ‘என்ன போன் நம்பர் தர மாட்டியானு கேட்டேன். அவ பழைய நம்பரையே இப்ப யூஸ் பண்ணறேன். அதுலயே பேசுனு சொன்னா. முன்ன மாதிரி இல்லைனாலும் பேசினா… என் லைப் எப்படி போகுது, வியாபாரம் எப்படி எல்லாம் கேட்பா.

ஒரு கட்டத்துல நானும் நீயும் கல்யாணம் பண்ணிருந்திருக்கலாம்னு பேச, விளையாட்டா பண்ணிருக்கலாம். இதே தெருவுல உங்க வீட்ல இருந்திருப்பேனு நார்மலா பேசினா.

எனக்கே ஆசையா இருந்தது. என் வூட்ல நதியா நடமாடி என்னை கவனிச்சிட்டு என் பொண்டாட்டியா இருப்பதா நினைச்சி பார்க்க பார்க்க ஒரு மார்க்கமா இருந்தது.

கொஞ்சம் அப்படி இப்படி பேச்சு போச்சு. நதியா அப்ப எல்லாம் சுதாரிச்சிடும். ஒரு முறை அதுவும் வாய விட்டுடுச்சு. ஆமா நீ என்னை உருகி உருகி விரும்பினவன் என்னை விட்டு விலகாம என் கால்ல கிடந்திருப்பனு.

போதை ஏறிடுச்சு சார். அடையணும் ஆசை வந்துடுச்சு. ஒரு தடவை கேட்டேன். மறுத்தா… உன் தகுதிக்கு நான் பேசறதே அதிகம். ஏதோ பேசினேன். இந்த எண்ணத்துல என்றால் பழகாதே. என்னையே தப்பான பொண்ணா மாத்திட்டியே.

அசிங்கமா திட்டிட்டா. மனசு அடிச்சிக்கிச்சு சார். பேசினதை எல்லாம் அழிக்கவா முடியும். அவளை பார்க்கறப்ப ஆசை வளர்ந்ததே தவிர அடங்கலை.

எனக்கு நதியா வீட்ல வழியெல்லாம் அத்துபடி. ஏன்னா அந்த குடோன்ல தான் முதல்ல ஸ்கூலு முடிச்சி வேலையில இருந்தேன். அப்ப குடும்பம் எல்லாம் இல்லை. அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் மதுரை பக்கம். அதனால நான் மட்டுமா. நதியா இப்ப இருக்கற வூட்ல தான் முதல்ல பேச்சுலர் நாங்க ஆறெழு பேர் இருந்தோம்.

அப்ப ஒரு முறை மாடில இருந்து அந்த க்ரில் வழியா போன் விழுந்துடுச்சு. எடுக்கறதுக்காக க்ரில் கம்பியை நாங்களே ஓனருக்கு தெரியாம உடைச்சி இறங்கினோம்.

அந்த ஓனர் கஞ்ச பிசினாறி சார். கையில வளைச்சாலே உடையற அளவுக்கு தான் அந்த கம்பியை போட்டான். பற்றாததுக்கு இந்த கண்ணாடி கதவு ஸ்லைடிங் டோரு, செலவு கம்மினு போட்டிருந்தான். ஜன்னலும் அப்படி தான் கண்ணாடியை எடுத்துட்டு கஷ்டப்பட்டு போயிடலாம். ஏன்னா அந்த இடத்துல சின்னதா கதவை மூடற இடத்துல உடஞ்சி இருக்கும். பார்க்க தான் பூட்டின மாதிரி இருக்கும். ஆனா பூட்டியிருக்காது.

அதே வூட்ல இருக்கறதால ஹால்ல இருந்த இந்த கண்ணாடி ஜன்னல் டோருல இறங்க முடியும்.

போன மாசம் முழுக்க நதியாவையே பத்தியே யோசிச்சப்ப விஜயை நோட்டமிட்டேன். அவன் ஊருக்கு போறதா கணபதி ஓனரிடம் பேசியதை கேட்டேன்.

நதியா தனியா இருக்கும்னு தெரியும். கீழே குடோனு பத்து மணிக்கு மேல ஆள் எல்லாம் இருக்க மாட்டாங்க. அதனால தனி கட்டிடம் தைரியமா போனேன்.” என்றான்.

“அதெப்படி மாடிக்கு போன. கீழே பூட்டியிருக்கும். பிறகு எப்படி? முன்னாடியே போய் மாடில ஒளிஞ்சிக்கிட்டியா?” என்று கேள்வியை தற்போது கேட்டான் தர்ஷன்.

“கீழே கேட்டு பூட்டிட்டா போக முடியாது சார். மாடியும் லாக் பண்ணி தான் இருந்தது. ஆனா பக்கத்துல வீடு ஆல்ட்ரேஷன் பண்ணறாங்க. அவங்களோட கொஞ்சம் பழக்கம்.

அதுல இரண்டு பசங்கலை தவிர எல்லாரும் ஆறுமணிக்கே வீட்டுக்கு போயிடுவாங்க. அந்த பசங்க மட்டும் தான் அவங்க கூட ‘புஷ்பா’ படத்துக்கு நைட்டு போகணும்னு பேசிட்டு இருந்தாங்க. டிக்கெட் கூட வாங்கிட்டதா காட்டினாங்க.

அந்த வூடு பூட்டியில்லை. அந்த வழியா போனா மாடி ஒன்னோட ஒன்னு மாறி போற மாதிரி தான் இருக்கும். அதனால நைட்டு பதினொன்றுக்கு போனேன். மாடில இருந்து அந்த ஹால் ஜன்னல் வழியா இறங்கினேன். நதியா ரூம்ல தூங்கிட்டு இருந்தா.

முதல்ல பயத்துல சுத்தி சுத்தி பார்த்தேன். கையில்லாத வழவழப்பான நைட்டி போட்டு நதியா தூங்கறதில கிட்ட போயிட்டேன்.

நதியா என்னை இருட்டுல பார்த்து கத்தினா. நான் வாயை மூடிட்டு மிரட்டவும் நான் தான்னு கொஞ்சம் அமைதியானா.

ஏன் இங்க வந்த? எப்படி வந்த? வெளியே போடா அப்படி இப்படி திட்டினா.

நான் இருந்த போதையில அடிச்சி அவளை அனுபவிச்சிட்டேன்.

முதல்ல துள்ளினவ, பிறகு வேண்டா வெறுப்பா சம்மதிச்சிட்டா. முடிஞ்சதும் “முதல்ல வெளியே போ நாயே. உன்னை விஜயிடம் சொல்லறேனு கோபமா திட்டினா. என்ன சொல்லி திட்டுவ, பழைய காதலன் என்னை நாசம் படுத்தினானு சொல்வியானு கேட்டதும் என்னை அடிச்சி வெளியே கதவை திறந்து அனுப்பிட்டா. எப்படியும் அவளால விஜயிடம் என்னை பத்தி மூச்சு விடமுடியாது.

   அதனால நான் திரும்ப மாடி வழியா வரலை. அவளா தான் கதவு திறந்து ரோட்டுல தள்ளின். பிறகு என் கண் எதிர்ல கதவை பூட்டினா. வெளியே இருந்து எட்டி பார்க்க வீட்டுக்கு வந்தும் கதவை தாழிட்ட சத்தம் கேட்டுச்சு. அதுக்கு பிறகு வீட்டை பார்த்து போயிட்டேன்.

நான் அவளை கொல்லலை சார். அந்த இன்னொருத்தன் யாருனு தெரியாது. நான் காலையில போலிஸ் ஜீப் பார்த்து தான் பயந்தேன். அவ தற்கொலை பண்ணிட்டாளோனு. ஆனா கொலைனு சொன்னதும் அள்ளு விட்டுடுச்சு.

குடோன் பையன் ஜன்னல் வழியா பார்த்ததை பிறகு சொல்லவும் அப்ப நமக்கு பிறகு எவனோ வந்து கொன்றுயிருக்கானு நினைச்சேன். அதனால தான் எப்படியும் என்னை தேடி வரமாட்டிங்கனு இருந்தேன். கொலை நான் பண்ணலையே.

ஆனா கைரேகை மாட்டும்னு யோசிக்கலை. அந்தளவு புத்தி இல்லை சார். உங்களை பார்த்ததும் தான் பயந்தேன். ஒரு வேளை நான் தான் கொலை பண்ணினேனு புடிச்சிட்டு போயிடுவிங்கனு.

பாருங்க கொலையே செய்யாம தூக்கிட்டு வந்துட்டிங்க.” என்று கூறவும் தர்ஷன் எழுந்தான்.

“ஏன்டா ஒரு பொண்ணு தனியா இருந்தா என்னவேன்னா பண்ணுவியா, லவ் பண்ணின பொண்ணு பார்த்தா ஹாய் பாய் என்ற லிமிட்க்குள்ள இருக்கணும். அதென்ன படுக்கையை பங்கு கேட்டு மிரட்டறது. இதுல கொலை பண்ணலைனு நியாயம் பேசற.

ரேப் பண்ணியதுக்கு என்ன தண்டனை தெரியுமா?” என்றான்.

ஜீவாவோ பதறி “சார்… என்னை விட்டுடுங்க.” என்று அழுதிட, அதனை செவி மடுக்காமல் “இரண்டாவது அக்யூஸ்ட் மாட்டற வரை இவன் இங்கயே இருக்கட்டும்” என்று கூறி லாக்கப்பை பூட்டினான்.

ஜீவாவின் குரல்கள் ஓலமாக கேட்டது.

தர்ஷன் போனை சுழற்றி “சார் அந்த ஸ்பெர்ம் வச்சி எந்தெந்த வயசு இருக்கும்னு சொன்னிங்க?” என்று கேட்டான்.

“ஒருத்தருக்கு முப்பதுல இருந்து நாற்பதுல, இன்னொன்னு இருபது வயசுக்குள்ள… சொல்லப் போனா பதினைந்துல இருந்து இருபது வயது இருக்கலாம்.” ரிப்போர்ட் இரண்டு மணில உங்க கைக்கு வந்துடும் தர்ஷன்.” என்றதும் “தேங்க்யூ சார்” என்று வைத்தவன் பல்வேறு கோணத்தில் அந்த மற்றொருவனை எப்படி தேட என்பதாய் சிந்திக்க துவங்கினான்.

மதங்கி-7

          தர்ஷனோ தனது உயர் அதிகாரியிடம் “இல்லை சார் அக்யூஸ்ட் ஒருத்தன் தான் கண்டுபிடிக்க முடிஞ்சது. இரண்டாவது அக்யூஸ்ட் கண்டுபிடிக்க முடியலை.” என்றதும் அவனுக்கு உயரதிகாரியாக இருந்த நெல்சனோ, “வாட் மேன் அக்யூஸ்ட் நம்பர் ஒன்னை கஸ்டடில எடு. தானா இரண்டாவது அக்யூஸ்டை யாரு என்னனு கறந்திடு மேன். இதுக்கூட சொல்லித்தரணுமா?” என்று இடக்காக கேட்டார்.

      “முதல்ல கேஸ் டீடெய்ல் படிச்சி பாருங்க சார். அதுல நான் சப்மிட் பண்ணியதுல தெளிவா எழுதியிருப்பேன்.

     அதாவது நதியாவோட எக்ஸ் லவ்வர் ஜீவா அந்த வீட்டோட அமைப்பையும், விஜய் இல்லாததையும் தெரிந்து, பக்கத்து வீட்டு ஆல்ட்ரேஷன் செய்யற வீட்டு வழியா மாடிக்கு போய் நதியா வீட்டுக்குள் போய் தனியா சந்திச்சி ரேப் பண்ணிருக்கார்.

    ஜீவா அங்கிருந்து போனதும் நதியை கதவை அடைத்து திட்டிட்டு லாக் பண்ணிருக்காங்க. சோ ஜீவா வெளியே கொலை நடந்தப்ப ஸ்பாட்ல இல்லை. ஆனா கொலைக்கு காரணம் அவர் தான்.  இரண்டாவதா நாம தேடற அக்யூஸ்ட் ஜீவாவை பின் தொடர்ந்து தான் வந்து ரேப் பண்ணிட்டு கொலை பண்ணிருக்கணும். இது என்னோட கெஸ் ஓன்லி. மேபீ திருட வந்து கூட எதச்சயமா ரேப் பண்ணி சாகடிச்சிருக்கலாம்.” என்றான்.

     “என்னயா இது… சரி யாரென்னனு கண்டுபிடி.” என்று வைத்து விட்டார்.

    இவரெல்லாம் என்ன உயரதிகாரி? உப்ஸ் கேஸ் கட் படிக்காமலையே பேசறார் என்று எரிச்சலாய் அந்த ஏரியாவில் சந்தேகம்படும் படியாக இருபது வயதுக்குள் இருக்கும் ஆட்களை போட்டோக்களை எடுத்து பார்த்தான்.

     அவனின் ஸ்கேனர் கண்களுக்கு அதிலிருந்த யாரும் அந்த கொலையை செய்தவர்களாக தோன்றவில்லை.

     மாறாக எதையோ விடுபட்ட உணர்வில் கிடந்தான்.

      அடுத்த ஒருவாரம்  எவ்வித க்ளூவும் கிடைக்காமல் சுற்றினான்.

    தனக்கான க்ளு எங்கோ ஒளிந்து இருக்கு. அதை கண்டறிய தான் வழியில்லாது குழம்பினான்.

     நதியாவின் போன் கால்ஸ் சமூக வலைத்தளம் என்று அனைத்தும் தனக்கு தெரிந்த அர்ஷித் என்பவனால் ஹாக் செய்து  ஆராய்ந்ததில் நதியாவின் பெயரில் இம்மியளவு குறை கூற எதுவும் சிக்கவில்லை. அப்படியிருக்க, அதன் மூலமும் எந்த ஆபத்தும் அவளை அணுகியிருக்காதென ஹாக்கர் அர்ஷித் உறுதியாக கூறியிருந்தான்

     பெரும்பாலும் இது போன்றவையை எளிதில் கண்டறிந்து முடித்திடும் ஆற்றல் தர்ஷனுக்கு உண்டு. லோக்கல் திருடர்கள், கள்ளக்காதலன் அல்லது காமுகர்கள் கை வரிசை இப்படி தான்.

     இதெல்லாமே எதச்சையமாக வந்து கற்பழித்து மாட்டிக் கொண்டு அகப்பட்டுக் கொள்வார்கள்.

    ஏதாவது திட்டமிட்டு கற்பழிக்க வந்தவர்களென்றாலும் எதிலாவது சிக்கிக் கொள்வார்கள்.

இது  எப்படி ஒருவனை கண்டறிந்தாயிற்றை மற்றவன் யார். கொலை செய்தவன் தனது கைரேகை பதிய கூடாதென திட்டமிட்டு இருக்கின்றான்.

   அவன் செல்லும் பொழுது தன் கைரேகை பதியா கூடாதென கண்ணாடியில் துணிக் கொண்டு துடைத்து உள்ளான்.
   
     வரும் பொழுது ஜீவா கைரேகை கண்ணாடியில் பதிந்திருக்கும் அதுவுமே இல்லையே. அதனால் கொலை செய்தவனின் ரேகை அழிக்க முயன்று அனைத்தும் துடைத்து வைத்திருக்கின்றான். போதாதற்கு தாலி நகையையும் நதியா போட்டிருந்த வளையல் கம்பள் என்று அனைத்தும் எடுத்து அவளை மூளியாக்கியிருந்தான்.

   பணமும் ஐந்தாயிரம் போனதாக விஜய் கூறியிருந்தாரே. இது பணத்திற்காகவும் நகைக்காகவும் நதியாவை கொன்றிருக்க வாய்ப்புண்டு.

கொலை செய்தவனை கண்டறியும் வரை தனக்கு மண்டையில் வேறு எதுவும் ஓடாது.

    மனைவி அஸ்வதி வேறு தொடர்ந்து அழைத்து விட்டாள். இனியும் தாமதப்படுத்தினால் தன்னை கடித்து மென்றிடுவாளென வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான்.


 
    லோகுவோ இந்த ஒரு வாரத்தில் நிம்மதியடைந்திருந்தான். அவனுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

   இனி நிம்மதியாக தன் வேலையில் கவனம் செலுத்திடலாம்.

      தனக்கான வாழ்வில் இனி தான் எதிர்பார்த்ததெல்லாம் அமையுமென கனவு கண்டான். அவன் எதிர்பார்த்த வேலை அவனுக்கு கிடைக்க போகிறது. இந்த ஊரை விட்டு கோவா செல்ல போகின்றான். அதற்கு தக்க வேலையை அவர்கள் கேட்ட பணத்தை எல்லாம் நீட்டிவிட்டான். தன் நண்பர்களான இளங்கோவுக்கும் வசந்த் என்பவனுக்கும் அங்கிருந்த பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்று ட்ரீட் வைத்தான்.

வசந்த் மட்டும் “ஏது டா இவ்ளோ காசு?” என்று கேட்டான்.

   இளங்கோவிற்கும் அந்த கேள்வி குடைந்தது. அதனால் வசந்தின் வினாவிற்கு லோகு கூறும் பதிலுக்காய் அவனையே பார்த்திருந்தான்.

     “மச்சான்… ஏஞ்சலு கொடுத்தது டா” என்று கூறினான்.

     “எந்த ஏஞ்சல்?” என்று இளங்கோ கேட்டதும் உஷாரானவன் “அது ஒரு பொண்ணு அவ்ளோ தான்.” என்று சாப்பிட கூறி பேச்சை கத்தரித்து கொண்டான்.

   இரவும் லோகுவோடு வசந்த் தோள் உரசி நடக்க அவனை தள்ளி நிறுத்தி “நான் இளங்கோவோட போறேன் வசந்த். பாய் டா” என்றான்.

   இளங்கோ சற்று வசந்தை லோகு ஒதுக்குவதை கண்டு ஏன் என்ன என்று விசாரிக்க, “அவன் முன்ன மாதிரி இல்லை டா மாறிட்டு வர்றான்.   கையை பிடிக்கிறான் உரசுறான் நீ என்ன புரிஞ்சிட்டு லவ் பண்ணுவியானு கேட்கறான். முடியலை… என்னனு சொல்லி விளக்குவேன்.” என்று லோகு கதை கூற இளங்கோவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

    இருவரும் வீட்டை அடைந்த நேரம் அதன் பின் எதையும் பேசவில்லை. அவரவர் வீட்டில் உறங்க சென்றார்கள்.

  அடுத்த நாள் காலையில் ஜன்னல் வழியே நதியாவை பார்த்த குடோன் ஒர்க்கரை அழைத்தான்.

      “இந்த கொலையை பற்றி நீ எங்கங்க பேசினா. ஐ மீன் யாரெல்லாம் உன்னிடம் கதை கேட்டது.?” என்றான்.

     அதற்கு அந்த குடோன் பையனோ பயந்து நடுங்கி  “சார் யார் யாரோ கேட்டாங்க சார். தம்பி நீ தான் முதல்ல டெட் பாடியை பார்த்தியா? கழுத்துல அறுத்து கிடந்ததா? பார்க்க கோரமா இருந்ததா? இப்படி சிலர் கேட்டாங்க.
  
    சிலரோ ரேப்புனு பேசிக்கறாங்க உடம்டுல டிரஸ் இருந்ததா இல்லையானு கேட்டாங்க.

    நிறைய பேர் நீ தான் முதல்ல பார்த்த இனி பாரு போலிஸ் உன்னை தான் பிடிச்சிட்டு போய் நீ தான் பண்ணினனு பைல்ல எழுதி ஜெயிலில் தள்ளிடுவாங்கனு அது இது பேசினாங்க சார்.

     சார் சத்தியமா அந்தக்கா போகும் வரும் அது மூஞ்சி கூட சரியா பார்தததில்லை சார்ர்ர்…” என்று அழுதான்.

    தொப்பியை கழட்டி வைத்து தலையை கோதிய தர்ஷன் இமை மூடி திரும்ப, இருபது வயதுக்குள் இருவர் வந்து நிறுத்தினான் ரபீக்.

     “சார் ஜீவா சொன்ன அந்த இரண்டு பேர்.” என்றதும், இருவருமே முழித்து கொண்டு வந்தனர்.

     “அன்னிக்கு எந்த படத்துக்கு போனிங்க?” என்றான்.
 
    “அன்னிக்குனா என்னைக்கு சார்?” என்று தலையை சொரிந்தான்.

      அவனின் தலையில் தட்டி “என்ன திமிரா… கொலை நடந்த அன்னிக்கு டா.” என்று கேட்டதும் “சார் சார் அடிக்காதிங்க சார். நாங்க அடிக்கடி படத்துக்கு போயிடுவோம். அதுக்கு தான் அவன் அப்படி கேட்டான். கொஞ்சம் சட்டுனு புரியாது சார். வேலை செய்ய மட்டும் தெரியும்.” என்றார்கள்.

     “சரி நீங்க ஜீவா இருக்கறப்ப வேற யாரெல்லாம் கூடயிருந்தாங்க?” என்று கேட்டான்.

      “இங்க கட்டடம் கட்டறதால கிடைக்கிற நேரம் பேசுவோம் சார். இல்லையா வேலை முடிச்சி தான். நடுவுல பேச உட்கார்ந்தா மேஸ்திரி திட்டுவாரு. அதனால சரியா டீ குடிக்கிறப்ப தான். டீ விற்க சைக்கிளிலும், சமோசா விற்கனு தள்ளு வண்டியிலும்  ஆட்கள் வருவாங்க சார்.  அன்னிக்கும் அப்படி தான் பேசுனோம்னு நினைக்கேன். படத்துக்கு போகணும்னு.

   அன்னிக்கு தான் ஜீவாண்ணா எப்படா போறிங்க? நைட் ஷோ வா. எப்ப வருவிங்கனு கேட்டுச்சு. அப்ப யாருமிருக்க மாட்டிங்களா, கல்லு சிமெண்ட் மூட்டை கம்பி கட்டைனு ஏதாவது திருட்டு போன என்னடா பண்ணுவிங்கனு எல்லாம் கேட்டுச்சு.

  நாங்க தான் சும்மாயிருனா. நைஸா போயிட்டு வந்துடுவோம். நைட்டு எவன் திருட வருவான்னு சொன்னோம்.

   அப்ப அந்த அண்ணா கேட்டதுல அக்கறையா கேட்குதேனு தோனுச்சு. இப்ப தான் தெரியுது. அது காரணத்தோடு எங்ககிட்ட விசாரிச்சிருக்குனு.” என்று அழாத குறையாக தங்கள் முட்டாள்தனத்தை கூறி முடித்தான் ஒருவன்.

     “ஆமா வேறயாரு அங்கயிருந்து இருப்பாங்கனு ஏதாவது நினைவிருக்கா?” என்றதும் மற்றொருவன் சிறிது நேரம் யோசித்தான்.

     இந்த பக்கம் சித்தாள் இரண்டு பேரு அங்க சிமெண்ட் பூசற அண்ணா இருந்துச்சு. இந்த பக்கம் மேஸ்திரி வர்றாரானு இவன் தான் நின்னுட்டு உஷார் பண்ண இருந்தான்.

    டீ விற்கறவன் சமோசா ஆளு, அப்பறம் குப்பத்து பையன் இரண்டு பேர்.

   பெயர் கூட ஏதோ சொன்னானே.” என்று சிந்தனைக்குள் முழ்கினான்.

    “ஒருத்தன் லோகு லோகுனு ஏதோ பேசிட்டு இருக்க, “மேலயிருந்து கையை எடு. என் உசுரை வாங்காம சும்மாயிருக்கியானு கேட்டான். என்றதும் தர்ஷனோ “வயசு என்ன இருக்கும்?” என்று கேட்டான்.

     “அந்த ரெண்டு பேருமே வயசு பசங்க சார். எங்க வயசு தான். இருபதுக்குள்ள இருக்கும்ல டா.” என்று தன் நண்பனிடம் கலந்து கேட்க, “இருக்கும் சார் அதுக்கும் குறைவா தான் இருக்கும். ஆனா கொலை பண்ணற அளவுக்கு தைரியம் இருக்குமா? இல்லை திருடற அளவுக்கு வேண்டுமின்னா தைரியம் இருக்கலாம்” என்று கூறினார்கள்.

      இருவரின் ஸ்டேட்மெண்ட் மனதில் ஏற்றினான். பக்கத்தில் ரபீக் எழுதி முடித்திருந்தான்.

     “நீங்க போங்க?” என்றவன் நெற்றியில் தன் வலது விரல்களால் நீவிவிட்டபடி இருக்க, “சார் அந்த டீ கடைக்காரர், சமோசா விற்கறவன் அப்பறம் அந்த இரண்டு பேர் யாரு என்னனு கூட்டிட்டு வரவா?” என்று ரபீக் கேட்டு நின்றான்.

      “ஏன் ரபீக்.. அக்யூஸ்ட் உஷாராகவா? முதல்ல அந்த குப்பத்துல அந்த வேலை செய்த பசங்க சொன்ன அடையாளத்துல இருந்த பசங்களோட நிதிநிலை இந்த குறிப்பிட்ட நாளில் எப்படி ஏதுனு தெரிந்துக்கணும். ரொம்ப கிளோஸா மூவ் பண்ணாதிங்க அப்பறம் மப்டில கூட நம்ம ஹேர்கட் இருக்கற ஆட்களை அனுப்பாதிங்க. அந்த ஏரியாவுக்கு மிங்கிள் ஆகற மாதிரி பரட்டை தலை ஆசாமியா எவனையாவது போய் விசாரிக்க சொல்லுங்க?” என்றான்.

    “நம்ம டிபார்ட்மெண்ட்ல அப்படி யாரு இருக்காங்க?” என்றவனை தர்ஷன் விநோதமாக பார்த்து, ரபீக் அப்படியிரும் இல்லை. ஜஸ்ட் இந்த ஏரியா மக்களோட மக்களா பழகி சில தகவல் வேண்டுமின்னா கேட்பதற்குனு வாலண்ட்ரியா சில பசங்க இருக்காங்க. இருங்க வர்றேன்.” என்றவன் ஒரு மேஜை டிராவில் இழுத்து ஒரு சின்ன நோட்டை எடுத்து இதுல ஆறு பேர் இருக்காங்களே. இதுல அட்ரஸ் போன் நம்பர் இருக்கு பாருங்க. இது மாதிரி நாம போகாம அனுப்ப” என்றவன் பாலா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு அழைத்து கேஸ் டீடெய்ல் ரத்தின சுருக்கமாக கூறினான்.

    “நாம போக வேண்டியதில்லையா சார்?” என்றான் ரபீக்.

     “ரபீக் அதெல்லாம் தூரத்துல இருந்து நிலவரம் பார்த்து வர மட்டும் தான். அவனிடம் டீடெய்ல் வந்து நம்மோட சந்தேகத்துக்கு ஆளாக்கினா அந்த நபரை விசாரிக்க நாம தான் போகணும். நீங்க அந்த விஜயை ஒரு எட்டு பார்த்து அவனோட நிலைமை எப்படி இருக்குனு விசாரிச்சிட்டு வாங்க” என்று அனுப்பினான்.

8888888888888 

மதங்கி-9

      லாக்அப்பில் ரபீக் இழுத்து கொண்டு வசந்தை தள்ளினான். வசந்த் அதற்கே மிரண்டு விட்டான். அவனின் மாற்றங்கள் வந்ததும் அவன் அனுபவத்திலும் சேகரித்த செய்தியிலும் தன்னை பலரும் பலவிதமாக நடத்துவார்களென அறிந்திருந்தான்.

   அதன் தாக்கமோ என்னவோ ரபீக்கை கண்டதிலிருந்து பயந்து நடுங்கினான்.

      “ரபீக்… ஏன் இந்தளவு கோபம். கொஞ்சம் ரிலாக்ஸா..” என்று சேரை முன் வைத்து வசந்தை அமர சொன்னான் தர்ஷன்.

    “என்ன சார் இவனுக்கு போய் உட்கார வச்சி மரியாதை பண்ணறிங்க.” என்று தர்ஷனிடம் ஆரம்பித்து “ஏன் டா அந்த பொண்ணை கற்பழிச்சி கொண்றுபோட்ட?” என்று வசந்தை அடிக்க கையை மேல் எழுப்பினான்.
 
      “ரபீக்… வெயிட் வெயிட். நான் இவனை அக்யூஸ்ட் நம்பர் டூனு சொல்லவேயில்லையே.” என்றதும்    ரபீக்கோ, “சார்…. என்ன சார் சொல்லறிங்க? அப்ப யாரு லோகுவா? அவனை விட்டுட்டு இவனை எதுக்கு சார்?” என்று வினாவினான்.

     “உட்காருங்க.” என்றவன் வசந்த் பக்கம் வந்து, “எங்களை பார்த்து ஏன் ஓட முயன்ற” என்றான்.

     “எங்களை மாதிரி இருக்கறவங்களை போலிஸ் புழுவா ட்ரீட் பண்ணுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதனால தான் இவரை பார்த்து பயந்தேன். ஒருத்தங்க சொன்னாங்க என்னை மாதிரி இருந்தா போலிஸ் அப்யூஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்கனு… அதனால இவரை பார்த்ததும்…” என்று ரபீக்கை சுட்டி காட்டி இழுத்து கூறினான் வசந்த்.
   
   “ரபீக் உன்னை பார்த்து பயப்படவும் ஆளிருக்கு பார்றேன்… அதுவும் அப்யூஸ் பண்ணிடுவியோனு. டேய் உன் முகமே அக்யூஸ்டா தெரியுதாம்” என்று நகைச்சுவையை அள்ளி தெளித்தவனாக கூறி சிரித்து விட்டு, சீரியஸாக மாறினான் தர்ஷன்.

     “உன்னிடம் பேசணும்… எங்களுக்கு சிலரோட ரெகுலர் லைப் நீ சொல்லணும். அது வேற யாருமில்லை… உன் பிரெண்ட் லோகு… அண்ட் இளங்கோவை தான்” என்றதும் வசந்த் திகைத்து முழித்தான்.

     “இங்க பாரு நீ பயப்படறதுக்கு ஒன்றும் இல்லை. உன் பிரெண்ட்ஸ் பத்தி உனக்கு தெரிந்ததை நீ சொல்லப்போற அவ்ளோ தான்.” என்று பீடிகை போட்டதும் “எதுக்கு சார்?” என்றான்.

     “நதியானு ஒரு பொண்ணு ரேப் அண்ட் மர்டர் ஆகியிருக்கா. அதுல உன் பிரெண்ட் சம்மந்தப்பட்டிருக்கான்.

      எங்களுக்கு எழுபத்தியைந்து சதவீதம் லோகு தான் கொலைககாரனா கண்ணுக்கு தெரியுது. பட்… எனக்கு ஒரு இருபத்தியைந்து சதம் இளங்கோவா இருக்கலாம்னு உருத்துது.

    ஆல்ரெடி இப்ப தான் குப்பத்து ஜனத்தை கைது செய்து தேவையேயில்லாம பழிப்போட்டு உள்ளத்தள்ளறோம்னு ரூமர். இப்ப நான் போனா… அதுக்கு எதிர்ப்பு தான் வரும்.

    எங்களுக்கு தெரியும் அந்த இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் அக்யூஸ்ட். ஸ்பெர்ம் டெஸ்ட் எடுத்தாலோ இல்லை எங்க பாணில விசாரிச்சாளோ சிலபல நிமிஷம் தான் ஆகும். பட் இரண்டு பேரையும் எங்களால அரஸ்ட் பண்ணினா பிரச்சனை திசை திரும்பும். அந்த தப்பே செய்யாத இன்னொருத்தன் பாதிக்கப்படலாம். அதுக்கு தான் இப்ப பொறுமையா ஹாண்டில் பண்ணறேன். வயசு பசங்க வாழ்க்கையை யோசிக்கணும் பாரு.

      உன் வயசென்ன வசந்த்” என்றான்.

    “இருபது சார். லோகுக்கு பதினெழு, இளங்கோக்கு பதினெட்டு.” என்றான்.

     “தட்ஸ் குட். இந்த மாதிரி ஆன்சரே போதும்… தென்… லோகு எப்படிபட்டவன் இளங்கோ எப்படிப்பட்டவன்?” என்றான்.

     “சார் லோகு ரொம்ப நல்லவன் சார். பதினொன்று வரை படிச்சான். அதுக்கு பிறகு தினமும் அவங்கப்பா பணம் தராம அம்போனு குடும்பத்தை விட்டுட்டு வேறொரு சின்னவூடு வச்சதும் இந்த வூட்டுக்கு பணமே தரலை சார்.

    கமலா அம்மா பிறவு வருத்தப்படவும் அனிதா அக்காவே வேலைக்கு போச்சு.

     வேலைக்கு போற இடத்துல அனிதா அக்காவை அடிக்கடி வந்து அழும். வேலை சொல்லி கொடுக்கற அந்த ஆளு தொட்டுகிட்டு பேசி சீண்டறான்னு. இரண்டு இடத்துல வேலை மாறுச்சு. ஆனா ஒன்னு மாத்தி ஒன்னா கம்பெனியோட ஓனர் கை வைக்கறான்னு ஓடி வந்துடுச்சு.

   இப்ப தான் ஒரு வூட்ல வயசானவங்களை பார்த்துக்க போகுது. லோகு அதுக்கே ரொம்ப பீல் பண்ணுவான். எங்கக்காவும் நல்ல துணிமணி போட்டு காலேஜி போகும் வேலைக்கு போகும்னு பார்த்தா இத்து போன துணியையும் கிழிசலை போட்டு அடுத்தவங்க பார்வைக்கு காட்சி பொருளா போகுதேனு சொல்லுவான் சார்.

     போதாதற்கு அப்பா அம்மாவை நடுராத்திரி தொந்தரவு பண்ணுது. நானும் அக்காவும் புரிஞ்சி திரும்பிக்கறோம். நாளைக்கு ஒன்னும் தெரியாத தம்பி சிவா மனசுல தப்பான எண்ணங்கள் வந்துடுமோனு தினமும் பயப்படுவான் சார்.

     சின்னவன் சிவாவுக்கு வெவரம் தெரியாறதுக்கு முன்ன தனி ரூமு இருக்கற வூடா பார்த்து போயிடணும்.  அக்காவை கட்டி கொடுக்கணும் பணம் வேண்டும்னு ராப்பகலா அலையறான் சார்.

     இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்ன எங்கயோ போனான். எங்க போனானு தெரியலை. ஆனா கையில காசு இருந்தது. துபாய் போறதா சொன்னான். இனியாவது அவன் வாழ்க்கை நல்லாயிடும்னு வேண்டுறேன்.

   அவன் மனசு சரியில்லைனா என்னாண்ட தான் பேசுவான். அதனால தான் நான் மாறியதை அவனிடம் முதல்ல சொன்னேன். அப்ப கூட என்னை கிண்டலோ கேலியோ பண்ணலை. இந்த நிமிஷம் வரை அது ஹார்மோன் பிராப்ளம் டா. நீ இப்படி ஆகறதுல உன் தப்பில்லைனு சொன்னான்.” என்று கூறவும் ரபீக் கண்கள் தர்ஷனை வட்டமிட்டது.

    “சார் பொய் சொல்லறான் சார். ஜிகிடு தோஸ்த்தை காட்டி கொடுக்க கூடாதுனு கதை திரிக்கறான். அந்த கட்டடம் கட்டறவன் என்ன சொன்னான் சார். இவங்க இரண்டு பேர் தானே சொன்னது. நீங்க என்ன வேற பெயர் இளங்கோனு சொல்லறிங்க?” என்று கேட்டான்.

     “ரபீக்… முழு கதையை கேட்க விட்டு அப்பறம் நாம பேசலாம் வசந்த் இப்ப நீங்க இளங்கோவை பற்றி சொல்லுங்க.” என்றான். ரபீக்கை கண்டு சற்றே அதிருப்தி அடைந்தவனாய் கூற ஆரம்பித்தான்.
  
     “இளங்கோ ரொம்ப ரொம்ப நல்லவன் சார். அவன் தான் எங்க செட்டுல படிக்க காலேஜ் வரை  போறான் இப்ப தான் ஏதோ பிஏ காமர்ஸ் முதல் வருஷம் படிக்கறான்.

    அவங்க வூட்ல அம்மா இல்லை சார். அப்பா மட்டும் தான். அவரும் வேலைக்கு போய் சரியா பணத்தை சேமிப்பார். அதனாலயே ஏதாவது எங்களுக்கு கடன்னா நாங்க சில சமயம் இளங்கோவிடம் தான் வாங்குவோம்.

      யோசிக்காம காசை கொடுத்து எங்களுக்கு உதவுவான்.

     என்ன அம்மா இல்லாத பையன். அப்பா மட்டும் என்பதால எங்க கூடவே இருப்பான். எப்பயாவது அவன் தாத்தா வூட்டுக்கு போவான். அங்கயும் மஜா தான் நல்லா கறிவிருந்து கொடுப்பாங்க.

   எங்களாண்ட வந்து இத்த துண்ணேன் அத்த துண்ணேன். சங்கர் தாத்தா துட்டு கொடுத்துச்சு. மகேஷு பாட்டி இதை செய்து கொடுத்துச்சுனு சொல்வான். கஷ்டம்னு எதுவுமில்லை.

    அப்ப கூட சமோசா விற்பான், மதுபாட்டிலை பெறக்கி காசு சேர்ப்பான். நல்ல உழைப்பாளி சார்.

   என்ன நான் இப்படின்னு தெரிந்ததும் ஒரு மாதிரி தள்ளி போறான். அதான் மனசு கஷ்டமா போச்சு.

      இன்னிக்கு கூட அதனால தான் எங்களுக்குள் சண்டை. இனி எங்களாண்ட பழகாதேனு இளங்கோ சொல்ல, நான் லோகுவோட பழகுவேன்னு சொல்ல, லோகுகிட்ட இப்படிப்பட்டவனோட பழகினா உன்னையும் அப்படி தான் சொல்வாங்கனு இளங்கோ தனியா போயிட்டான்.

   அப்ப தான் லோகுவும் அவன் சரியாகிடுவான் டா. பீல் பண்ணாதேனு அனுப்பிட்டு வூட்டுக்கு போனான்.

   எனக்கு லோகு ரொம்ப பிடிக்கும் சார். என்னை விட மூன்று வயது சின்னவன் என்றாலும் அன்பா இருக்கான். நல்லா யோசித்து என் பிரச்சனையை புரிஞ்சிக்கறான். அதனாலையோ என்னவோ அவனை இந்த மனசு லவ் பண்ணுது.
  
    இளங்கோ சொல்றது போல என்னான்டா பழகினா லோகுவையும் தப்பா பேசுவாங்களோ, பழகறதுக்கே இப்படின்னா என்னை லவ் பண்ண மாட்டானானு நான் அத்தையே யோசிச்சிட்டு வந்ததும் இந்தா நிற்கறாரே போலிஸ் அவர் வரவும் மிரண்டு ஓட, அவர் என்னை அறைந்து கூட்டிட்டு வந்துட்டார்.” என்று கூறினான்.

    “இப்படி இவனும் நல்லவன் அவனும் நல்லவன்னு ஸ்டேட்மெண்ட் சொல்லவா உன்னை கூட்டிட்டு வந்தது. சார் இரண்டு பேரையும் இழுத்துட்டு போய் டெஸ்ட் எடுத்தா கெடுத்தவன் யாருனு தெரிய போது.” என்றான் ரபீக்.

    ரபீக் அது தெரியாம இல்லை. சின்ன டவுட். வசந்த் நீங்க வாங்க நான் யாருனு கண்டுபிடிச்சிட்டேன். என்று வசந்தை எப்படி அழைத்து வந்தானோ அப்படியே குப்பத்திற்கு அழைத்து வந்தார்கள்.

     நேராக லோகு இளங்கோ வீட்டிற்கு மத்தியில் நிறுத்த கூறினான்.

     “எது லோகு வீடு. இது இளங்கோ வீடு” என்றதும் வசந்த் கை காட்ட அந்த பக்கம் தர்ஷன் கால்கள் அடியெடுத்து வந்தது.

     ரபீக்கோ ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்ப்பவனாய் மாறி நின்றான்.

    ‘இவரிடம் ஒர்க் கத்துக்கணும்னா நீ அப்ஷர்வேஷன் பண்ண கத்துக்கணும், இல்லைனா குற்றவாளியை கண்ணுலயே எடைப்போட ரோபோ மெத்தட் புரிஞ்சிருக்கணும்’ என்ற ரமேஷின் சொற்கள் தற்போது ரபீக்கின் செவியில் எதிரொலித்தது.

மதங்கி-10

தர்ஷன் கால்கள் நேராக இளங்கோ வீட்டிற்கு வந்தது. ரபீக் மண்டையை பிய்த்து கொண்டு பின் தொடர்ந்தான்.

வசந்தும் நம்மை விசாரித்ததை போல இளங்கோவிடமும் லோகுவை பற்றி அபிப்ராயம் கேட்க போகின்றனர் என்று எண்ணினான்.

ஆனால் தர்ஷனோ வாசலில் நின்றவன் “பேக்ல துணி பணம் நகை எல்லாம் எடுத்து வச்சியா இளங்கோ?” என்றதும் இளங்கோ பயந்து வெளிறி நின்றான்.

அடுத்த நொடி தர்ஷன் மீது அங்கிருந்த மேஜையை தூக்கி போட கையால் தடுத்தவன்.

தன் இரும்பு கையால் ஒரடி கன்னத்தில் அறைய ரேகைகள் பதிந்து கன்னம் அடுத்த நிமிடமே கன்றியது.

“பொண்ணை ரேப் பண்ணி கொண்ணு எங்க ஓடப் பார்க்கற… ராஸ்கல்.” என்று அங்கே கொடியில் தொங்கிய காய்ந்த துண்டை எடுத்து கையை கட்டினான்.

“ரபீக் அவன் பையில நகை பணம் இருக்கான்னு செக் பண்ணுங்க.” என்று கட்டளையை பிறப்பித்தான்.

கல்லூரி பையில் சில சீக்ரேட்டாக அடியில் சில ஜிப் இருந்தது. அதை திறக்க தாலி, வளையல், வாட்ச் , மோதிரம் மெட்டி கொலுசு என்று நதியா அணிந்திருந்த நகைகள் கிடைத்தது. கூடவே ஐந்நூறு ரூபாய் தாள் நாலாயிரம் இருந்தது.

போதாதற்கு ஏதோ மாத்திரை வேறு பேக்கெட்டில் இருந்தது.

“சார் பையன் வேற என்னவென்னவோ வச்சிருக்கான் சார். ரேப் மர்டர் மட்டும் இல்லை ஏதோ மாத்திரை மேட்டரும் இருக்கு.” என்று அக்யூஸ்ட் நம்பர் 2 கிடைத்த ஆனந்தத்தில் இருந்தான் ரபீக்.

அதற்குள் இளங்கோ வீட்டின் முன் கூட்டம் கூடியது. நகை பணம் என்று பார்த்து விட்டு மாத்திரை என்றதும் ஆதரவுக்கு வந்த ஜனங்களும் வழிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

கூட்டத்தில் லோகுவும் எட்டி பார்த்து வசந்திடம் என்ன ஏதென விசாரித்தான்.

வசந்தோ “ஒரு பொண்ணை ரேப் பண்ணி கொன்றிருக்கானாம் டா. இப்ப ஏதோ மாத்திரை வேற இருக்கு. போலிஸ் சும்மா விடாது.” என்று கூறி லோகுவை தலையிடாமல் நிறுத்தினான்.

லோகுவோ அதையும் மீறி “சார் இளங்கோ எந்த தப்பு செய்திருக்க மாட்டான் சார். எதுக்கோ விசாரிங்க” என்றதும் தர்ஷனோ “டேய் பொண்ணை ரேப் பண்ணியதில் ஸ்பெர்ம் டெஸ்ட் பண்ணினா இவன்னு தெரியும். உன் வேலையை பாரு.” என்று அதட்டினான்.

“தம்பி ஜஸ்ட் மிஸ்ஸூ. என்னை மாதிரி ஒருத்தனா இருந்தா. இந்த இடத்துல அவனுக்கு பதில் நீதானு தூக்கி போட்டு தொங்க விட்டுயிருப்பேன். சாரா இருப்பதால தான் சரியா கணிச்சிருக்கார். என்ன பார்க்கற சந்தேகம் முழுக்க முழுக்க உன் மேல தான் விழுந்தது. அதென்னவோ சார் தான் நீயில்லைனு எப்படியோ கண்டுபிடிச்சார். எப்படி சார்…. கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்று பேச, ஈஸ்வரி என்னும் மகேஸ்வரி என்ற கிழவி வந்து வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதார்.

“சார் சார்.. என் பேரனை விட்டுடுங்க சார். தெரியாம பண்ணிட்டான். ஏதோ வயசு வேகத்துல தப்பு பண்ணி பதட்டத்துல கொன்னுட்டான் சார்.” என்று வந்து நின்றார்.

“என்ன ரபீக் இப்ப புரிஞ்சதா.” என்றதும் ரபீக் தலை ஆம் என்று மெதுவாய் அசைந்தது.

“ஏன் பாட்டி… உங்க வீட்ல ஒரு பொண்ணு இருந்து அந்த பொண்ணுக்கு உங்க பேரன் மாதிரி ஒரு காமுகன் வந்து கற்பை களவாடிட்டு கொன்று போட்டா சும்மா இருப்பீங்களா? சொல்லுங்க பாட்டி?

அதை மறைக்க நீங்க அவன் தடயத்தை கழுவி விட்டிங்க பாருங்க.

நான் கூட பாட்டியாச்சேனு உங்க மேல சந்தேகம் வராம தான் விசாரணையை துவங்கினேன்.

வயசானவங்க… கொலையை முதல்ல பார்த்தவங்க அதனால மிரண்டு இருப்பிங்க. இதுல நான் வேற கேள்வி கேட்டு பயமுறுத்த வேண்டாமேனு தான் சும்மா இருந்தேன். இப்ப தான் தெரியுது இனி கிழவி குழந்தை என்று பாரபட்சம் எல்லாம் கொலை கொள்ளை விசாரணையில தேவையற்றது விடக்கூடாதுனு” என்று தர்ஷன் பேசினான்.

மகேஸ்வரி என்னும் ஈஸ்வரி பாட்டி அழுது கெஞ்சினார். அதிலேயே குப்பத்து வாசிகளுக்கு இளங்கோ செய்தது விளங்கியது. போதாத குறைக்கு ரபீக் கையில் சில மாத்திரை நகை என்று கண்டதும் பின் தங்கினார்கள்.

ஈஸ்வரி புலம்பல் தர்ஷனின் செவியில் அதற்கெல்லாம் இரக்கம் பிறக்கவில்லை கையில் விலங்கை மாட்டி இளங்கோவை இழுத்து செல்ல லோகுவுக்கை ஒன்றும் புரியாமல் பின்னால் சைக்கிளில் சென்றான். அவனை தொடர்ந்து வசந்த் சென்று சைக்கிள கெரியரில் அமர்ந்தான்.

லோகு தாயோ “அய்யோ இவன் எதுக்கு கூட போறானோ.” என்று புலம்பினார்.

அதே ஏரியா என்பதால் விரைவில் ஸ்டேஷன் வந்ததும் இளங்கோவின் கழுத்தை பிடித்து தள்ளி சிறைக் கம்பிக்குள் தள்ளினான் தர்ஷன்.

ஜீவாவோ ஓரத்தில் சுருண்டு இருக்க, இதுவரை இருந்த தைரியம் வற்றியவனாக இளங்கோ முகம் கலவரமானது.

“இங்க பாருங்க… என்னை அடிக்க முடியாது. நான் மைனர்.” என்று தான் மாட்டினால் தப்பிக்க யோசித்தவையை எடுத்துரைத்தான்.

“உனக்கு பதினெட்டு ஆரமபிச்சு ரொம்ப நாள் ஆகுது டா தம்பி.. என்ன தப்பு செய்தப்பிறகு தப்பிக்க ஓட்டையை தேடறியா? அச்சோ… அதுக்கு வேற ஏரியால மாட்டியிருக்கணும். இங்க வந்துட்டா அரசாங்கமே தண்டனை கொடுக்கலனாலும் இந்த தர்ஷன் தருவான்.

ஏன்டா… பதினெட்டு அடியெடுத்து கொஞ்ச நாள் ஆகலை. அதுக்குள்ள என்ன ரேப்… ம்ம்.. எல்லா தப்பும் செய்து பார்க்கற வயசு தான். அதுவும் இந்த காலத்துல. அதுக்குன்னு… இப்படி பண்ணுவியா? என்னடா நடந்துச்சு” என்று குத்து விடவும் மூக்கிலிருந்து நொடியில் குருதி வழிய துவங்கியது.

“எதுக்கு டா கொன்ன… இப்ப உன்னால தான் நானும் மாட்டினேன். ஏன் டா… ஏன்டா இப்படி பண்ணின” என்று ஜீவா கற்பழிப்புக்காக தண்டனை பெறும் எண்ணத்தில் இளங்கோவை உலுக்கி எடுத்தான்.

“அடச்சீ கையை எடு. நான் அந்த கட்டிடத்துல சிமெண்ட் மூட்டையை தான் திருட வந்தேன். முடிஞ்சா வேற ஏதாவது அபேஸ் பண்ண தான் அன்னிக்கு சமோசா விற்றுக்கிட்டே உங்க பேச்சை கவனிச்சேன். அதனால தான் மீன்பாடி வண்டியை எடுத்துட்டு நடுராத்திரி அங்க வந்தேன்.

நீ அங்க வந்ததும் எனக்கு ஷாக்காயிடுச்சு. சரி நீயும் திருட வந்தியோனு தான் நீ திருடியதும் நானும் கைக்கு கிடைச்சதை எடுத்துட்டு போக வந்தேன்.

நீ என்னனா பக்கத்து மாடிக்கு தாவின. எனக்கு உன்னை பாலோவ் பண்ண ஆர்வம் வந்துச்சு. அதான் பின்னாடியே சத்தமில்லாம வந்தேன்.

நீ கம்பியை வளைச்சு எகிறி குதிச்சு கண்ணாடி கதவை திறக்கவும் மாடில எட்டி பார்த்தேன். நீ போற ரூட்டை பார்த்தியே தவிர மேல என்னை பார்க்கலை.

சட்டுனு எதுக்கு போறேனு தெரியலை. சரி வந்ததும் வந்தாச்சு என்ன தான் பண்ணறனு நானும் நீ வந்த பாதையிலேயே வந்தேன்.

என்ன போனை சைலண்ட்ல போட்டுட்டு தேவைப்பட்டா போன்ல நீ என்ன காரணத்துக்காக வந்தனு வீடியோவா எடுக்க வந்தேன்.

அப்ப தான் நீ ரூம்ல போனியா. அந்த பொண்ணை அடிச்ச, கப்டாயப்படுத்தின. அவசரமா வீடியோ எடுக்க போனேன்.

என் கெட்ட நேரம். போன்ல பின்னாடி மாத்திரை இருந்தது. ஆனா சார்ஜ் இல்லை.

நீ முடிச்சதும் அந்த பொண்ணு வாயிலருந்து கையை எடுத்ததும் கூச்சல் போடும்னு பார்த்தா உன்னை நாயை போடா அதுயிதுனு திட்டவும் பழக்கமானவங்கனு கண்டுக்கிட்டேன். அந்தப் பொண்ணு  அடிச்சிக்கிட்டே உன்னை வெளியே தள்ள அவசரத்துல பாத்ரூம்ல போயிட்டேன். அப்ப தான் சரி மிரட்டி ஒப்பேத்தினா மாத்திரைக்கு துட்டு கிடைக்கும்னு யோசனை வந்துச்சு. உன்னையும் அடிக்கடி அந்த தெருவுல பார்த்திருக்கேன். குடோன்ல வேலை செய்யறப்ப சமோசா வாங்கினவன் தானே.

சரி வெளியே வந்து பார்த்துக்கலாம்னு அங்கிருந்து ஹாலுக்கு வந்தேன். அதுக்குள்ள அந்த பொண்ணு வந்துடுச்சு. சரி அது கண்ணுல மாட்ட வேண்டாமேனு சமையகட்டு பக்கம் போனேன்.

அது ரூமுக்கு போயிடுச்சு. என் கிரகம் அப்படியே கண்ணாடி வழி ஏறி மாடிக்கு வந்து சிமெண்டு மூட்டை கம்பினு கைக்கு கிடைச்சதை எடுத்துட்டு கிளம்பியிருக்கணும்.

அந்த பொண்ணை பார்க்க ஆசை வந்து தொலைச்சது. அது வேற நைட்டியோட மேல் கோர்ட்டு கழட்டிட்டு படுத்துட்டு யோசிச்சது.

நான் பார்க்கறது அதுக்கு உறுத்தியிருக்குமோ இல்லை நீ எப்படி வந்தனு யோசித்து ஹாலுக்கு வந்துருக்குமோ என்னையும் பார்த்துடுச்சு.

கத்த பார்த்துச்சு ரூம்லயே போட்டு மெத்தையில தள்ளி வாயை மூடிட்டேன்.

அதுக்கு பிறகு நீயும் அந்த பொண்ணும் கண்ணுல நிற்க, ரேப் பண்ணற ஐடியா வந்துச்சு. பண்ணிட்டேன். சனியன் போலிஸுக்கு போன் பண்ணறேன்னு சொல்லிட்டு போனை எடுத்துச்சு. செவுலயே விட்டேன்.

நீ மடக்கற மாதிரி உன் புருஷனிடம் சொல்வேன்னு தான் ஆரம்பிச்சேன். அவ என்ன பண்ணினா தெரியுமா. தனியா இருந்த என்னை கெடுத்துட்டனு சொன்னா நீ சொன்னதை நம்ப மாட்டாங்கடா மடையானு திமிரா அப்ப வந்த கோபத்துக்கு தான் ஆஷாபிளேடால கழுத்தை அறுத்துட்டேன்.

அறுத்த பிறகு தான் கொலை பண்ணிட்டேனு பயந்தேன்.

பதட்டத்துல என்ன செய்யறதுனு தெரியலை. யோசித்தப்ப கை ரேகை தான் நினைவு வந்துச்சு. நான் கை வச்ச எல்லா இடத்துலயும் அழிச்சேன். எப்படியோ கண்ணாடி ஜன்னல் வழி வந்து அதையும் தொடச்சிட்டு கிரில் கம்பியும் மடக்கி பழைய படி வச்சிட்டு அதையும் தொடச்சிட்டு வந்தேன்.

மாடில எந்த பக்கம் வந்தேன் எப்படி வந்தேனு தெரியலை. எங்க ஈஸ்வரி பாட்டி வீட்டுக்கு போயிட்டேன்.

அங்க தான் அழுது திருட போய் இப்படி ஆகிடுச்சுனு சொன்னேன்.

பாட்டி முதல்ல திட்டுச்சு அடிச்சது. தாத்தா தூங்குறாரு அவருக்கு தெரியாம பார்த்துக்கிச்சு.

எந்த வூடு எதுனு கேட்டதும் சொன்னேன். நான் வேலை செய்யற வூடு டா. அந்த பொண்ணை இப்படி பண்ணினனு மறுபடியும் திட்டுச்சு.

அப்பறம் பணத்தை இப்ப செலவு பண்ணாதே. நகையும் தான் மாட்டிப்ப. என் வூட்ல வைக்காதே. போலிஸ் என்னை சந்தேகப்பட்டா உன்னை கண்டுபிடிச்சிடுவாங்க. அம்மா சமாதில போட்டு வை. சமாதில ஒரு பெட்டி கணக்கா இருக்கும் விளக்கு எரிய தீப்பொட்டி அதுயிதுனு இருக்கும் மறைச்சி வைனு சொல்லிச்சு.

நானும் மறைச்சி வச்சிட்டேன்.

இத்தினி நாளா வரலைனு நேத்து தான் நகை பணம் எடுத்தேன். இப்ப மாட்டிக்கிட்டேன்.

இன்னா சாரு…. நல்லா மோப்பம் பிடிச்சிட்ட. எப்படி?” என்று தெனாவட்டாக கேட்டான்.

“உங்க பாட்டி வெள்ளிக்கிழமை மாடியை கழுவியது சந்தேகம் வரலை. எல்லார் வீட்லயும் மெயிண்டெயின் பண்ணறது தானேனு இருந்தேன். ஆனா பக்கத்துல விசாரிச்சப்ப அந்த கிழவி நேத்தும் கழுவி விட்டுச்சு குடோன் பையன் சொன்னான்
வெள்ளிக்கிழமை வேற கழுவியது சந்தேகத்தை தந்தது. நீங்க வேற பேரனுக்கு துணி எடுக்கணும் டிரஸ் வாங்கணும்னு சொன்னதும் பேரன் வயசை கேட்டேன். பதினெட்டுனு சொன்னாங்க. போதாத குறைக்கு கட்டிடத்துல வேலை செய்யற பையன் சமோசா விற்கற அண்ணானு லோகு வசந்த் கூட உன்னை காட்டினான்.

உன்னை விசாரிச்சப்ப உங்க அப்பா சம்பளம் நல்லா வருதுனு தெரிந்தது. ஆனாலும் பாட்டில் பொறுக்கற, சமோசா விற்கற என்றதும் ஏன்னு டவுட். உழைப்பாளியோனு கூட ஒரு நிமிஷம் தோனுச்சு. அப்பறம் தான் பணம் இருக்கறவனுக்கு பத்தலைனா கூட தேவைக்கு மீறி எதுலயாவது பணத்தை தேடுவான்னு மனசு சொல்லிச்சு.

என் மனசு எப்பவும் சரியா சொல்லும் டா. அதுவும் என்னை மீறி போறப்ப ஒரு லுக் விட்டியே. வன்மத்தை வச்சிட்டு. என் கண்ணுக்கு நீ தான் குற்றவாளினு அப்பவே தெரிந்துடுச்சு.” என்று கூறினான்.

“எனக்கு வயசு கம்மி குறைந்த பட்ச தண்டனை தருவாங்க.” என்று எகிறினான்.

“இப்ப நான் இருக்கற கோபத்துக்கு ஒரே அடியில உன்னை படுத்த படுக்கையா போட்டு ஆம்பளைனு ஜம்பமா திரியற உன்னை ஜடமா மாற்றிடுவேன். ஆனா நாளைக்கு கோர்ட்டுல உன்னோட ஸ்பெர்ம் டெஸ்ட் கொடுக்கணும். ஆதாரம் வேணும். அதுக்கு தான் உன்னை உயிரோட நிற்க வைக்கறேன்.” என்றவன் முகத்தில் மீண்டும் அடிக்க பற்கள் உடைந்த சத்தம் கேட்டது. நாக்கில் பட்டு வலி வேறு வாட்டியது.

    லோகு வசந்த் லாக்கப்பிற்கு வெளியே இளங்கோவின் வாயல் கேட்டு திடுக்கிட்டு நின்றனர்.

மதங்கி-11

   சில நாட்களுக்கு பிறகு….
 
லோகுவும் வசந்தும் எப்பொழுதும் பேசும் இடத்தில் நின்றிருந்தனர்.

     ”அவன் இவ்ளோ பண்ணிருப்பானு என்னால இப்பவும் நம்ப முடியலை வசந்த்.

    இளங்கோவுக்கு பத்து வருடம் தண்டனை முடிஞ்சி எப்ப வருவானோ. திரும்பி வர்றப்பவாது நல்லவனா வருவானா டா. பச் ஒரு பொண்ணை நாசம் பண்ணிட்டானே.

    எனக்கும் அக்கா இருக்கா. இத்தனை நாள் என்ன அர்த்தத்துல பழகினான். சே நினைக்கவே குமட்டுது.” என்றான் லோகு.

   ஆம் இளங்கோவிற்கு பத்தாண்டு தண்டனை கொடுக்கப்பட்டு சிறை காவலில் இருக்கின்றான். கூடவே ஜீவாவும் எட்டாண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்கின்றான்.
   
   வசந்தோ கையை பிசைந்தவாறு, பதிலுக்கு என்ன கூறி லோகு  மனதை மாற்ற என்றே யோசித்தான். இதோ இந்த ஒரு மாதம் எந்த பேச்சு போனாலும் ஒரு நாளாவது லோகு மனம் தன் நண்பனை நாடி விடுவதை வசந்த் கண்டுவிட்டான்.

   அதனாலே “நீ துபாய் போறியா லோகு.” என்றான் சம்மந்தேமேயில்லாமல். அந்த அடையாறு பாலத்தின் மேல் இருவரும் எட்டி பார்த்து பேசிக்கொண்டிருந்தனர்.

       “ஆமா வசந்த். போகணும். பணம் வேண்டும். இந்த கற்பழிப்பு கொலை எல்லாம் கடந்து வயிற்று பாட்டை பார்க்கணுமே.

    தம்பியையாவது படிக்க வைக்கணும். அக்காவை கட்டி கொடுக்கணும். அம்மாவை அப்பா தான் வாழவைக்கணும். ஆனா அவர் யாரோ ஒரு குடும்பத்தோட போயிட்டார். நினைச்சா வர்றார் நினைச்சா போறார். நானாவது அம்மாவை உட்கார வச்சி சோறு போடணும்.

     அன்னிக்கு மாதவரம் பகுதில சாக்கடை அடைச்சிக்கிச்சுனு போயி இறங்கி தூர் வாறினேன். வாடை போகலை ஆனா பணம் மூவாயிரம் தந்தாங்க. அது என்னவோ கெமிக்கல் கலந்து அடைச்சிடுச்சுனு. ஒரு நாள் முழுக்க போச்சு. என்ன வாடை தான் உடம்புல இருந்து போகலை.

   நானும் குளிச்சி முடிச்சி பவுடர் தடவி என்னயென்னமோ பண்ணினேன். நாத்தம் போகலை. சரி இரண்டாவது நாளாவது போகும்னா அப்பயும் நாத்தம் வந்துச்சு. அதனால தான் வூட்டுக்கே வரலை. ஆனா ஒரு வூட்ல வூடு மாற பொருளை எடுக்க ஆளில்லை. நான் அப்ப போனதும் எடுத்து வைக்க ஆள் தேடினவங்களிடம் என் நிலவரம் சொல்லி கேட்டு பொருளை எடுத்து  வூட்ல வச்சேன்.  அவங்களும் பணம் தந்தாங்க. அந்த வூட்ல என் மேல நாத்தமடிக்குது கேட்டாங்க.

    ஏஞ்சல்னு ஒர் அம்மா. நான் செய்த வேலையை சொன்னேன்.

     என் கஷ்டம் புரிந்ததோ என்னவோ துபாய் போக ஏற்பாடு பண்ணறேன் போறியானு கேட்டாங்க. சரினு சொன்னேன். சும்மா போகவும் மனசில்லை. கையிலருந்ததை கொடுத்தேன். ஆயிரம் மட்டும் வாங்கிட்டு தயாராயிரு துபாய் போகனு சொன்னாங்க.

     உங்களுக்கு ட்ரீட் எல்லாம் தந்தேனே டா. இப்படி கூடயிருந்து சாப்பிட்டவன் கொலைக்காரனா இருப்பானு நம்பலை. இப்பவரை நம்பவும் முடியலை.” என்று பேசியபின் கணத்த மௌனம் ஆட்கொண்டது. மீண்டும் கூட பழகிய தோழன் பேச்சே முன் வந்ததை லோகுவும் கவனித்தான்.

அவனாகவே “சரி வசந்த் நாம போகலாம். ஆமா அந்த போலிஸ் உன்னை கூட்டிட்டு போய் என்னவோ பேசினாரே என்ன?” என்றான்.

      “அந்த தர்ஷன் சாரா… அவர் ஒரு பேங்க்ல லோன் எடுக்க உதவுறாராம். என்னை ஒரு ரூம் வாடகை எடுத்து ஜெராக்ஸ் கடை நடத்தறியானு கேட்டார். சரினு சொன்னதும் அதற்கு தான் பெயர் அட்ரஸ் ரேஷன் கார்டு ஆதர் கார்டுனு வாங்கினார்.

    அங்கயே ஒரு பிசிஓ வைக்கலாமானு பார்க்கறேன். எதிர்காலம் நினைச்சி ரொம்ப பயந்துட்டேன் லோகு. அதனால தான் நீ என்னை புரிஞ்சு வச்சிருக்கியேனு உன்னிடம் நாம சேர்ந்து வாழலாம்னு கேட்டேன்.

   இப்ப அந்த பயம் போயிடுச்சு. ஏதோ இனி வாழ்க்கையில பயப்பட வேண்டாம்னு அவரிடம் பேசினப்பிறகு தோனுது. சரி டா நான் கிளம்பறேன். என் அண்ணா எங்க இருக்கானோ. அம்மா வேற திட்டும். இப்பவே என்னை கண்டுபிடிச்சிடுச்சு. அடிக்கடி ஜாடையா திட்டுது அதுக்கிட்ட என்னை பற்றி எப்ப எப்படி சொல்லப் போறேனோ.” என்று புறப்பட ஆயத்தமானான்.

    லோகுவோ கல்லூரி மாணவ மாணவியர்கள் போன்று தோற்றத்தோடு மனிதர்கள் நடமாட ஏக்கமாய் பார்த்தான். இதே பார்வை தான் அனிதா வயது பெண்களையும் லோகு பார்த்ததை தற்போது வசந்திற்கு புரிந்தது.
  
     அடுத்த இரண்டு வாரத்தில் துபாய் சென்று பணிப்புரிய வேண்டும். அங்கு என்ன வேலை காத்திருக்கின்றதோ என்று நடந்தான்.

     இருவருமே நடந்து செல்ல, கிழிஞ்ச டவுசரை தைய்த்து அரைஞான் கயிற்றை இடுப்பில் பெல்டாக மாற்றியவனாய் லோகு தம்பி சிவா வந்தான்.

     “அண்ணா… ஏதாவது அசிரமத்துல படிக்க வைக்க சொல்லி டோனேஷன் கேட்டியா. இங்க பாரு ஒருத்தர் உன்னை பன்னிரெண்டாவது படிக்க வைக்கிறதா சொல்லி ஸ்கூலுக்கு பணமெல்லாம் கட்டிட்டாராம். அக்கா சொல்லிச்சு. இந்தா” என்று ஒரு கடிதத்தை நீட்டினான் சிவா.

   அதில் ‘ஸ்ரீராம்’ என்றவர் படிக்க வைக்க நல்ல மாணவ மாணவியரை தேட, லோகுவின் மார்க் படிமனை கண்டதாகவும் படிக்க, உடுத்த துணி என்று எல்லாம் அவர்களே ஏற்று கொள்வதாக எழுதி அதில் கையெழுத்து இருந்தது. இதை கொண்டு சென்று காட்டி பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பிறகு  கல்லூரியில் சேர்ந்துவிட எழுதி வந்திருந்தது.

       வீட்டிற்கு வந்தப்பின் அனிதாவை கண்டு குழம்ப, “டேய் படிப்பு எனக்கு வரலை. உனக்கு நல்லா ஏறும். போ படி. படிச்சி முடிச்சி என்னை யாருக்காவது கல்யாணம் பண்ணி வை. அதுவரை நான் குடும்பத்தை பார்த்துப்பேன். நான் மூத்த பிள்ளை தானே. பெண்ணா இருந்தா பொறுப்பா நான் இருக்க கூடாதா. ஜாலியா போடா” என்று ஊக்கப்படுத்தினாள்.

    ஸ்ரீராம் என்பவர் யாரென அறியாமல் போனாலும் படிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பாக லோகு எண்ணி மகிழ்ந்தான்.

   Arter 4 Years….

     படிப்பை முடித்து லோகு தன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க தரகரின் போன் எண்ணினை எடுத்தான்.
    அப்பொழுது தான் தனக்கு படிக்க வைக்க எண்ணிய நல் இதயத்திற்கும் நன்றி நவில எண்ணினான். அதனால் அதில் உள்ள எண்ணிற்கு போனை அழுத்தி காத்திருந்தான்.

   இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ முறை யார் என்ன என்று அறிய முயன்றும் அறிய முடியவில்லை. இம்முறை போனில் நன்றி கூற முயன்றான்.
  
    இம்முறையும் போன் எடுக்கவில்லை. சோர்ந்தவனாக ‘வசந்தி ஜெரக்ஸ் கடை’க்கு வந்தான்.
   
    ஆம் வசந்த் என்பவன் முழுமையாக உலகை எதிர்த்து வசந்தியாக மாறி தனி அடையாளம் பதிய ஆரம்பித்து நான்கு வருடம் மேலோங்குகிறது.

     அவனி(ளி)டம் தன் மன ஆதங்கமாக இந்த நம்பர் தான். எனக்கு படிக்க உதவுது. ஆனா எப்பவும் போன் எடுக்க மாட்டேங்கறாங்க.” என்று விசனப்பட்டான்.

   வசந்தி தனது பிசிஓவிலிருந்து அழைக்க இம்முறை போன் மறுபக்கம் எடுக்கப்பட்டது.
  
    லோகு கைக்கு போன் மாறி நன்றி நவில்ந்து ஆனந்த கண்ணீரை வழிய விட்டான். அந்த பக்கம் ஸ்ரீராம் என்பவரோ தர்ஷனின் ஒரு வார்த்தைக்காக செய்ய எண்ணிய சேவையிது என்பதை லோகுவிடம் கூறாமல் தவிர்த்து விட்டார்.

    லோகு வசந்த் இங்கு சுமூகமாக வாழ்வை பகிர, ஜெயிலில் ஜீவாவை இன்னும் மூன்று வருஷம் நான் வெளியே போயிடுவேன். மனைவியிடம் மன்னிப்பு கேட்கணும். மன்னிப்பாளா தெரியலையே. கடவுளே… என்று நாட்களை எண்ணினான்.

    இளங்கோவோ அங்கிருந்த வார்டனால் அடிவாங்கி அல்லல்பட்டு மிதிபட்டு ஒவ்வொரு வேலையும் கஷ்டப்பட்டு நொடிகளை நரகமாக கழித்தான்.

    கொஞ்சம் யோசித்து நடந்திருக்கலாம். புத்தி போகும் பாதைக்கு எல்லாம் வயசு பசங்கள் போனால் இளங்கோ நிலை தானோ என்று கூறாது கூறியது அவன் நிலை.

    விஜயோ நதியா இறந்தப்பின் நடைப்பிணமாக வாழ்ந்தவன் இதோ இந்த வருடம் தான் பெண் பார்க்கவே தலையாட்டியிருக்கின்றான்.

   அதுவும் காயத்ரி கண்ணன் காதலித்து மணந்து கொண்டார்கள் என்ற செய்தியில், இனி தன்னிலை மாறாது வாழ்ந்து யாரின் மனதை வெல்ல என்ற சலிப்பில் பெற்றோர் பார்க்கும் பெண்ணோட வாழ முடிவெடுத்தான்.

      மற்றொரு இடத்தில் தர்ஷன் செந்நீரில் உறைந்த ஒரு பெண்ணின்(மதங்கியின்) சடலத்தில் மீண்டுமொரு அக்யூஸ்டை தேடி இன்வஸ்டிகேஷன் ஆரம்பமானது.

-முற்றும்.
பிரவீணா தங்கராஜ்.

     உலகத்துல நிறைய இறப்பு நடக்குது. அதுவும் கொலையும் கொள்ளையும். அதிலும் பெண்ணை சர்வ சாதாரணமாக தன் சில நொடி இன்பத்திற்காக கற்பழித்து கொலை செய்து வெட்டி வீசுவதெல்லாம் தற்போது காபி குடிப்பது போல நடக்கிறது.

     பெண்ணை ஆற்று பள்ளத்திலும், பெட்டியில் வெட்டி பூட்டியும், எத்தனை விதமான கொடூரமாக உடலில் சித்ரவதை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அழிப்பதும் புணரப்படுவதும் எல்லாம் ஆண்மகனின் செயலே அல்ல.

    எல்லார் வீட்டிலும் அக்கா தங்கை இல்லாமல் இருக்கலாம். அன்னை என்பவள் இருக்கின்றாளே. தாய் இறந்து போனாலும் பெற்றவள் பெண் என்ற இங்கிதம் அளவிற்காவது யோசித்து நடக்கலாம்.

     சற்று யோசித்து பெண்ணை பெண்ணாக மதிப்பளியுங்கள்.

   இது ஜீவா மற்றும் இளங்கோவின் செயலுக்கு மட்டும் புனையப்பட்ட கதை. நதியாவின் செயலை நான் எதிலும் நியாயப்படுத்தலை. சில பெண்களும் காதலை ஒரு செட்டில்மெண்ட் தேடுதலாக பாவித்ததலும், பழைய காதல் மீண்டும் சந்திக்க நேர்ந்தாலும் ஒரு கோட்டின் எட்டி நிறுத்தி பழகுவதை விடுத்து மாறாக மனம் குரங்காக மாறியதன் விளைவும் இறப்பை சந்திக்கின்றாள்.

    என்ன இங்கு தவறே செய்யாத சில பெண்களும் குழந்தைகளும் நம் (உலகத்தில்)நாட்டில் கற்பழிப்பில் கொலையில் பாதிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.