சுயம்-வரம் 29
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்-30
“HAPPILY EVER AFTER IS NOT A FAIRY TALE. IT’S A CHOICE.”
-TAWN WEAVER.
சரண்யா கேட்ட கேள்வியில் ஜெயச்சந்திரன் அதிர்ந்தான். பின்பு அவளைக் கோபத்துடன் நோக்கினான்.
“இது யாருனு தெரியுதா?” அவளுடைய கைப்பேசியில் கன்னடத்தில் எழுதப்பட்ட செய்திக் கட்டுரையைக் காட்டினாள். சரண்யாவுக்கு கன்னடம் தெரியாது. ஆனால் புகைப்படத்தில் இருந்தது ஜெயச்சந்திரன்.
‘போதை மருந்தின் ஆதிக்கத்தில் தன் காதலியுடன் கார் ஓட்டிய ஐடி துறை இளைஞர் ஒரு பெண்மணியின் மோத அவர் சம்பவ இடத்திலேயே இறப்பு.’
இதுதான் அந்த செய்திக் கட்டுரையின் சாராம்சம். கன்னடம் தெரியவில்லை என்றாலும் கூகுள் லென்சில் போட அது கட்டுரையை மொழிபெயர்த்துக் கூறியது.
“எவ்வளவு எங்கிட்ட மறைக்க முடியும்னு நினைக்கற? டிரக்ஸோட டிரைவ் பன்னி ஒருத்தங்களை கொலை செஞ்சுருக்க?”
அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் சரண்யா. தன் சட்டையைப் பிடித்திருப்பவளின் இரு கைகளையும் பிடித்தான்.
“உண்மை என்னனு தெரியாமல் பேசாத?” என்று சந்திரனின் குரலும் கோபமாக மாறியது. அவன் முகமும், கண்களும் சிவந்தது.
சந்திரனிடம் இதுவரை கோபத்தைப் பார்க்காத சரண்யாவும் சற்று திகைத்து நிறுத்தினாள்.
“சும்மா.. கொலை அது இதுனு சொல்லிட்டு இருக்காத சரண்யா.. உனக்கு முதலில் நடந்தது என்னனு தெரியுமா?”
அந்தச் செய்தியைப் படித்ததில் இருந்து சரண்யாவால் நம்பவே முடியவில்லை. ஆனால் அதில் தெளிவாக புகைப்படத்தில் இருந்தது ஜெயச்சந்திரன் மட்டும்தான். அது நடந்த சில நாட்களில் அவன் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான். சிறு வயதில் இருந்து பழகியவன். ஆனால் இடையில் சில வருடங்கள் தொடர்பில்லை. அதற்குள் இப்படி ஒரு மாற்றமா? என்று தோன்றியது. மதுபானம் என்பது பொதுவானது. ஆனால் போதைப் பழக்கம் என்பது அது வேறு. மதுப்பழக்கம் எவ்வளவு ஆபத்தானதோ அதை விட பல மடங்கு ஆபத்தானது போதை மருந்து பழக்கம்.
“சொல்லு அப்படி என்ன நடந்தது?”
அவன் சட்டையில் இருந்து கைகளை எடுத்துக் கொண்டு வயிற்றில் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டாள்.
சில மாதங்களுக்கு முன்,
இரவு பதினொரு மணி.
பெங்களூரின் ஒரு பிரபல பப்பிலிருந்து காக்டெயில் டிரஸ்ஸில் வெளியே வந்தாள் ரியா. நடனமாடியதில் களைத்திருந்தாள். அவள் மஞ்சள் நிற தேகம் வியர்வையில் குளித்திருந்தது. பப்பில் நடனமாடிவிட்டு வந்ததால் அப்படி இருந்தாள். லேசாக முடி கலைந்திருந்தாலும் அலை அலையான கேசம் அவள் அழகை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது.
தன் காரை எடுத்தவள் ஓட்ட ஆரம்பித்தாள். அவள் மதுபானம் எதுவும் அருந்தி இருக்கவில்லை. தன் பாய்பிரண்டிடம் சண்டை போட்டிருந்தாள். அதன் அழுத்தத்தைக் குறைக்க பப் வந்திருந்தவள் நடனமாடிவிட்டு மீண்டும் தன் பாய்பிரண்டைப் பார்க்க புறப்பட்டாள்.
அவன் இன்னும் அலுவலகத்தில் இருப்பது தெரியும். அதனால் அலுவலகம் முன் காரை நிறுத்தி அழைத்தான்.
அலுவலகத்தில் கணினியின் முன் அமர்ந்திருந்தான் ஜெயச்சந்திரன். மாலை ரியாவிடம் சண்டை போட்டிருந்ததால் அவன் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. காதலி ரியாவை நினைத்துக் கொண்டான். இப்போதெல்லாம் அவளிடம் அடிக்கடி சண்டையிடுவதாகத் தோன்றியது. இப்படி அவன் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் சரியாக ஸ்கீரினில் ஜெயச்சந்திரனும், ரியாவும் தோள் மீது தோள் போட்டு கை எடுத்த புகைப்படம் மிளிர கைப்பேசி அதிர்ந்தது.
அவள் அழைத்ததும் ஏதோ நிம்மதி படர்ந்தது. உடனே கைப்பேசியை எடுத்தான்.
“ரியா..” சந்திரன் குரல் குழைந்து ஒலித்தது.
“பேபி… கீழ பாரு.”
உடனே கண்ணாடிக் கதவின் திரையினை விலக்கி வெளியில் பார்த்தான். அவளுடைய காரிலிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரியா.
“ரியா.. பேபி கீழ வாடா.. ஐம் சாரி. ஒரு லாங்க் டிரைவ் போவோம்..”
சண்டையே அவளுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்பதால் உடனே ஜெயச்சந்திரனும் சம்மதித்தான்.
“ஃபைவ் மினிட்ஸ் வந்தறேன்.” என்று கூறியபடியே கணியை லாக் அவுட் செய்துவிட்டு அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு தன் பொருட்களை பேக் செய்து கொண்டு லிப்டில் வழியே அவன் காதலியைக் காண விரைந்தான். ஒரு முக்கிய புராஜக்ட்டில் இருந்ததால் முன்பு போல் ரியாவிடம் நேரம் செலவிடமுடியவில்லை. ஒரு வருடமாக அவளைக் காதலித்து வருகிறான் ஜெயச்சந்திரன். திருமணம் கூட முடிவு செய்துவிட்டனர்.
காரின் கதவைத் திறந்து கொண்டு அமர்ந்தவன் உடனே அவளை அணைத்தான்.
“ஐம் சாரிடி.. நானும் உங்கிட்ட கோபபட்டிருக்கக் கூடாது.”
அதன் பிறகு காரை எடுத்தாள் ரியா. மெல்லிய இசை ஒலிக்க பயணத்தை ஆரம்பித்தனர்.பெங்களூரின் சாலையில் கார் சுகமாக வழுக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஓரிடத்தில் ஐஸ்கீரிம் வண்டி இருந்தது. அதைப் பார்த்ததும் ரியா ஐஸ்கீரிம் கேட்க காரை நிறுத்திவிட்டு அதை வாங்க ஜெயச்சந்திரன் மட்டும் சென்றான்.
அவன் வாங்கிக் கொண்டு வரும் போது காரில் இருந்து வாட்டர் பாட்டிலில் நீரைக் குடித்து விட்டு காலி பாட்டிலைத் தூக்கிப் பின் பக்கத்தில் போட்டாள்.
கப் ஐஸ்கீரிமை அவன் ஊட்டிவிட ரியா சாப்பிட்டுக் கோண்டே டிரைவ் செய்தாள். ஐந்து நிமிடங்கள் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் தீடிரென்று ரியாவின் கண்கள் சிவந்தது. அவள் உடலில் மாற்றம் தெரிந்தது.
இதை ஜெயச்சந்திரன் கவனிப்பதற்குள் எதிர்பாராமல் வந்த ஒரு பெண்ணின் மீது கார் மோதியது. நல்லவிதமாக ஏர்பேக் இருவரையும் காப்பாற்றியது. டிராபிக் ஆக்ஸிடன்ட் கேஸ். இந்த விபத்திற்குப் பிறகு ரியா மிகவும் மனமுடைந்து போனாள். சில மாதங்களுக்குப் முன்னர்தான் ரியாவின் அப்பா தவறி இருந்தார். அது அவளை மிகவும் பாதித்திருந்தது. அப்போதெல்லாம் அவளுடன் இருந்தவன் ஜெயச்சந்திரன். ஆனால் அந்த இறப்பு அவளை பாதிக்க எப்படியோ போதை மருந்து பழக்கம் ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த போது ஜெயச்சந்திரனுக்கும் அதிர்ச்சிதான். ஆம்புலன்ஸ் வரும் போது ரியா மயங்கி இருந்தாள். அவளுக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றதால் இந்த உண்மைகளை அறிந்து கொண்டான் ஜெயச்சந்திரன்.
ஏனோ அவளை அந்த நிலையில் விட ஜெயச்சந்திரனுக்கு விருப்பமில்லை.அதனால் காவல் துறையில் அவளுக்குப் பதிலாக தான் காரை ஓட்டியதாக சரணடைந்தான். ஆனால் ஆதாரம் தேடிய காவல் துறையினருக்கு பல சிசிடிவி எவிடென்ஸ்கள் இருந்ததால் அவர்களுக்கும் உண்மை தெரிந்து விட்டது. அதுமட்டுமின்றி போதை மருந்து உபயோகமும் தெரிந்துவிட்டது.
முதலில் பப்பில் யாரோ ரியாவுக்கு போதை மருந்து கொடுத்துவிட்டனர் என்று நினைக்க அவளேதான் அந்தப் பழக்கத்திற்கு அடிமை என்று பின்னால் தெரியவந்தது. போதை மருந்தை நீரில் கலக்கி ஜெயச்சந்திரன் ஐஸ்கீரிம் வாங்கும் சமயத்தில் குடித்திருக்கிறாள். ஆனால் அவள் கைதாகும் போது ஜெயச்சந்திரனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் அவன் மனதை கொன்று தின்று விட்டது.
“நீ எல்லாம்.. என்னடா.. ஆம்பளை? உன்னால என்னைப் போலீசில் இருந்து காப்பாத்த முடியலை. உன்னாலதான் எனக்கு இந்தப் பழக்கம் வந்தது. நீ எங்கூடவே இருந்திருக்கலாம். இல்லைனா அவனோட நான் பழகி இருக்கவே மாட்டேன்..”
எல்லாப் பழியையும் அவன் மேல் தூக்கிப் போட்டாள். அதன் பிறகுதான் அவளுக்குப் போதை மருந்தை பழக்கி விட்டவனிடம் எல்லை மீறிப் பழகி இருந்ததும் தெரிந்தது. அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஜெயச்சந்திரனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் எந்த இடத்தில் தவறினான் என்றும் தெரியவில்லை. அதன் பிறகு பெங்களூரில் இருக்கவும் பிடிக்கவில்லை. வேலையையும் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டான். நீண்ட நாளாக சொந்த தொழில் தொடங்க ஆசை . தன் கவலைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்த சரண்யா அவன் வாழ்வில் வேறு உறவாக முளைத்தாள்.
இதை அவன் கூறும் போது சரண்யா இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏண்டி உனக்கு என்னைப் பத்தி தெரியாதா? சின்ன வயசில் இருந்து உன் கூட இருக்கேன். ஆனால் உனக்கு என் மேல் நம்பிக்கையே இல்லை.ச்சே..” புசு புசுவென்று மூச்சு விட்டுக் கொண்டே தலை முடியைக் கோதிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டான். ஆனால் இரண்டடிகளுக்கு மேல் அவனால் நகர முடியவில்லை.
எப்படி நகருவான்? அவனைத்தான் பின் பக்கத்தில் இருந்து சரண்யாவின் கைகள் அணைத்துப் பிடித்திருந்தனவே. அதுவும் இறுக்கமாக. அவளிடம் இருந்து இதை எதிர்பார்க்காத ஜெயச்சந்திரனுக்கும் அது ஒரு இனிய இறுக்கம்தான்.
“எங்கிட்ட கூட கோபபடுவேனு இன்னிக்குத்தாண்டா தெரியும். வழக்கமா நீ கோபமேபடமாட்டே. அதுவும் எங்கிட்ட நோ.. இது கூட உனக்கு சூட் ஆகுது. என்னடா.. எனக்கு உன்னைப் பத்தி தெரியாதுனு நினைச்சியா? உன்னை அவ்வளவு கேவலமான நான் நினைச்சுருவேனாடா? முசப் படிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா? வேணும்னே உன்னைக் கோபப்படுத்தி பார்த்தேன்.”
கூறியவள் அவனை விட்டு விலகினாள். அவள் கூறிய வார்த்தைகள் அவன் அடிமனதைச் சென்று தாக்கியது. அவளை நோக்கித் திரும்பினான். அந்த இடத்தில் அவனுக்கு கூற வார்த்தைகளே இல்லை. அனைத்தையும் கண்கள் வழியே மொழி பெயர்த்தான்.
“இப்ப சொல்லு எதுக்கு என்னை அவாய்ட் பன்னற? அதுக்கு காரணத்தைச் சொல்லு?”
“அதெல்லாம் சொல்ல முடியாது.” உடனே அவனை முறைத்தாள் பச்சைக்கிளி.
“இப்படிப் பக்கத்தில் இருந்தால் மட்டும்தான் சொல்லுவேன்.” என்று அவளை இடையில் கை வைத்து வளைத்துப் பிடித்துக் கொண்டான்.
“எல்லாத்துக்குக் காரணம் நீதாண்டி. ஆல்ரெடி ஒரு பிரேக் அப்பில் இருந்து வெளிய வர எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு. அதுக்குள்ள நீ என்னோட வாழ்க்கைகுள்ள வந்துட்ட. எனக்கும் உன் மேல் இருக்கற பீலிங்க்ஸ் ஒரு கட்டத்தில் மாற ஆரம்பிச்சுருக்கு. நானுமே அதை ரியலைஸ் செய்யலை. ஆனால் இதை நீ கண்டுபிடிக்கும் போது எப்படி ரியாக்ட் செய்வனு தெரியும் அதான். எனக்கும் தெரியும் பிரன்ட்ஷிப்பில்…உனக்குப் படிக்காது.”
“தேங்க் காட். எனக்கும் கன்பூசன் இருந்துச்சு. நீ பக்கத்தில் இருந்தும் உன்னை மிஸ் பன்னற மாதிரி இருக்கும். எனக்கும் எப்ப உன் மேல இருக்கற பீலிங்க் மாறுச்சுனு தெரியலை. ஆனால் நீ இல்லாமல் இருக்க முடியும்னு தோணலை. எனக்காக நான் கேட்கமாயே எல்லாம் செஞ்ச. வாட் எவர் எப்போதும் நீ என்னோட லைஃப்பில், எண்ணத்தில் இருந்திருக்க. இப்ப என்னோடவே இருக்கப் போற.. உங்கிட்ட மட்டும்தான் எல்லாமே பேசனும்னு தோணும். இப்படி நிறைய சொல்லிட்டுப் போலாம்… என்னோட பீலிங்க்ஸ் சேஞ்ச் ஆகிருச்சு. அதை எதுவும் செய்ய முடியாது.”
அவன் முகத்தை நேராகப் பார்த்து அனைத்தையும் கூறினாள். அவளை தோள் வளைவில் புதைத்துக் கொண்டான் சந்திரன்.
“இப்ப ரியா என்ன பன்னிட்டு இருக்கா?”
“ஏதோ ஒரு டி அடிக்சன் செண்டரில் இருக்காள்னு கேள்விபட்டேன்.. ரியா அப்ப நிறைய பேசுனாள். அதெல்லாம் தேவை இல்லாதது. இங்க வர வரைக்கும் எனக்கு என்னைப் பத்தி மட்டும்தான் யோசனை. ஆனால் உன்னைப் பார்த்ததுக்குப் பின்னாடி நீ மட்டும்தான். உன் மேல் பீலிங்க்ஸ் இருக்குனு எனக்குப் புரிஞ்ச அப்புறம் ஒரு கில்டி பீலிங்க். ரியா மேல எனக்கு இருந்த காதல் அவ்வளவுதானானு?..”
தலை நிமிர்த்தி அவன் உதடுகளில் விரலை வைத்தாள் சரண்யா.
“யாருக்கு யாரு மேல் எப்ப பீலிங்க் வரும்னு தெரியாதுடா.. எல்லாம் நம்ம கன்ட்ரோலில் இருக்குற மாதிரி தெரியும். ஆனால் இருக்காது. அதுதான் இண்டர்ஸ்ட்டிங்கே..”
“போதும் பச்சைகிளி தத்துவம்..”
பச்சைகிளி என்றதும் அவன் மார்பில் லேசாக அடித்தள் சரண்யா.
“வலிக்கலைடி பச்சைக்கிளி.. எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ..”
மேலும் இரண்டடி அடித்தவளை இறுக அணைத்துக் கொண்டான். அன்றைய இரவு சரண்யாவுக்கும், சந்திரனின் வாழ்க்கையை மாற்றிய மூன்றாவது இரவாக அமைந்தது.
பல நாட்களுக்குப் பிறகு,
ஞாயிறு. சரண்யாவின் வீட்டில் பலத்த சிரிப்பொலி எழுந்து கொண்டிருந்தது. காயத்ரிக்கும் அவனுடைய கணவனுக்கு சரண்யா விருந்து கொடுக்கிறாள். அவர்களுக்கு தீபாவளி கழிந்து திருமணம் ஆகி இருந்தது.
கௌதம் ஏதோ சொல்ல கோபமாக எழுந்து சென்றாள் காயத்ரி.
“என்ன புரோ? அக்கா கோபிச்சுட்டு போயிட்டாங்க.”
“சமாதானப்படுத்திக்கலாம் புரோ.” என்று கண்ணடித்தான் கௌதம்.
கிட்சனில் சரண்யா பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“எப்படியோ இரண்டு பேரும் ஒன்னா வாழ முடிவெடுத்தீட்டிங்க. ரொம்ப ஹேப்பிடி நானு.”
“சந்திரன் மாதிரி ஒருத்தன் கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கனும். நான் எதிர்ப்பார்க்காமல் கிடைச்ச வரம். நானே பார்த்துப் பார்த்து தேடி இருந்தாலும் கிடைச்சுருக்க மாட்டான். என்னோட சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது இல்லை. நானாவே இருக்கலாம்.அவனும் அப்படித்தான். மேபி நாங்க முன்னாடி பிரண்டா இருந்ததால் இருக்கலாம். ரொம்ப நாள் கழிச்சு நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கேன் அக்கா.” அவளை அணைத்துக் கொண்டாள் காயத்ரி.
“அப்புறம் ராகினி.. அடுத்து உன்னோட கல்யாணம் தான்.”
சமையலறை மேடையில் சாய்ந்து நின்று கொண்டு குலோப்ஜாமுனை விழுங்கிக் கொண்டிருந்தாள் ராகினி. அவளுக்கும் மாப்பிள்ளை முடிவாகிவிட்டது. அதற்கும் சேர்ந்துதான் இந்த டீரிட் சரண்யா கொடுக்கிறாள்.
எந்த ஒரு குடும்பமாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் எண்ணங்களையும், கருத்துகளையும் மதித்து, தன் பிரச்சினைகளையும், விருப்பு வெறுப்புகளை கூற இடமிருந்தால் எல்லா உறவுகளும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் நிலைக்கும். தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினரின் சுயத்தை மதிக்காமல் ஏறி மிதித்தால் பயமும் வெறுப்புமே மிஞ்சும். எந்த உறவாக இருந்தாலும் சுயத்தை மதிக்கும் நபர் கிடைப்பது வரம். சுயம்-வரம். இந்த காலத்துப் பெண்களுக்கு தனக்கு என்ன வேண்டும் என்று தெரியும். சொந்த காலில் நிற்பவர்களுக்கு சுய முடிவுகளையும் எடுக்கத் தெரியும்.
சரண்யாவுக்கு சந்திரன் அப்படித்தான். இந்த தோழிகளை இல்லை.. காயத்ரியை நீண்ட நாட்கள் பாலோ செய்து கௌதம் இறுதியில் அவளைக் கைபிடித்தும் விட்டான். காயத்ரிக்கு இது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்தான். ஆனால் கௌதமுக்கு காதல் திருமணம்.
இவ்வளவு நடந்தும் தோழிகள் தங்கள் முடிவில் இருந்து மாறவில்லை. ராகினிக்கும் வீட்டில் பார்த்து முடித்த திருமணம் தான். திவ்யாவுக்கும் உமாவுக்கும் இன்னும் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம். சரண்யா இன்னும் அவள் பெற்றோர்களுடன் பேசுவது இல்லை. சந்திரன் கணவனாக அமைந்ததால் நல்லதாகப் போயிற்று. அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் சரண்யாவால் தன் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு திருமணமான ஆண் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒரு பெண் இருந்திருந்தால்?… இப்படி பல கேள்விகள். காயம் இன்னும் சரண்யாவின் மனதில் ஆறவில்லை. அதனால் தீபாவளிக்கு அவள் வீட்டுக்குச் செல்லவில்லை. வருங்காலத்தில் அவள் மனம் மாறலாம். மாறாமலும் போகலாம். காலம் தான் அதற்கு பதில் கூறும்.
அப்போது சரியாக வீட்டுக்கு வந்தனர் உமாவும், திவ்யாவும். அவர்களும் வர டைனிங்க் டேபிளில் அமர்ந்தவர்கள் உணவை ஒரு பிடி பிடித்தனர்.
உணவுகளுடன் வாசனையுடன் காதலும், நட்பும் சேர்ந்து அங்கே மணந்தது.
முற்றும்.
கதை முடிக்கும் வரை என்னுடன் பயணித்த தோழிகளுக்கு நன்றி. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய இடத்தில் மற்றொருவரை வைத்து யோசித்துப் பார்த்தால் மற்றவருடைய கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். அது பல பிரச்சினைகளை குறைக்கும். நம்மைப் போல்தான் அவர்களுக்கும். அடித்தால், திட்டினால் வலிக்கும். LOVE OR FAMILY IS NOT AN EXCUSE TO STEP ON OTHERS AND CONTROL THEM. LIKE A TREE LET IT GROW. SO THAT YOUR RELATIONSHIP MAY DEEP LIKE A ROOT.
மற்ற கதைகள் போல் இதில் ரொமான்ஸ் குறைவுதான். இருந்தும் கமெண்ட் போட்டு இதுவரை படித்த வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.💜💜💕💕♥️ Love you all.
Dedicated to the broken souls. They may find the happiness they deserve. By the this story is 80% based on true incidents. போட்டியில் பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த மாதிரி ஒரு கதை எழுதியதில் எனக்குப் பெருமைதான். அதுஸமட்டுமின்றி என்னோட எந்த கதைக்கும் இவ்வளவு கமென்ட் வந்ததில்லை. முதலில் எழுதும் போது இதை எல்லாம் படிப்பாங்களானா ஒரு சந்தேகம் இருந்தது உண்மை. ஆனால் இவ்வளவு வியூஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. ♥️💜💜💜💜 Muh.. Thanks a lot my dear readers. I gave the ending as much as practical.