கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்9

நிரப்புக9
சுவாதியின் பெண் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,மருந்தின் உதவியால் உறங்கிக்கொண்டிருந்தது.அறையில் குழந்தை படுத்திருந்த மெத்தை அருகில் அமர்ந்திருந்த கங்கா,குழந்தையின் தளிர் கரங்களை வருடிக்கொண்டிருந்தாள்.

அவளின் உடல் இங்கிருந்தாலும் அவளின் மனமெல்லாம் வேறுஎங்கோ தொலைந்திருந்தது.

தனது அலைபேசியின் அழைப்பை உணர்ந்தவள்,தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேவந்து எடுத்தாள்.

“சொல்லு யமுனா,நீ எங்க இருக்க?”என்ற கங்காவிற்கு,

“நானும் அப்பத்தாவும் நம்ம வீட்டுக்கு வந்துட்டோம் கங்கா.பாப்பா எப்டி இருக்கா?”

“காய்ச்சல் குறைஞ்சு இருக்குன்னு சொன்னாங்க,இப்ப நல்லா தூங்கிட்டு இருக்கா”
“கங்கா,அத்தை சாயங்காலம் நாலுமணி போல வரேன்னு கால் பண்ணி சொன்னாங்க. நீ சீக்கிரம் வந்திரு”
யமுனாவின் மாமியார் வருகிறாள் என கேட்டதும் கங்காவிற்கு எரிச்சலாகியது. வந்தால் எதையாவது பத்த வைப்பதற்கு என்றே வருவாள் என தன் மனதில் நொந்தவளாக, “நாலு மணிக்கா வாரேன். என்னத்த சொல்ல வருதோ தெரியலையே உன் மாமி.அனுசரிச்சு தானா போகணும்,சுகந்தி அக்காகிட்ட சொல்லிட்டு இப்பவே கிளம்பி வாரேன்.அப்பாத்தக்கிட்ட ஏதும் பலகாரம் பண்ணவேணாம் சொல்லு நானே கடையில் வாங்கிட்டு வரேன்”என்றாள்.

“ம்ம் சரி கங்கா பார்த்து வா”என யமுனா அழைப்பை துண்டித்துவிட்டு,வருத்தத்தில் ஆழ்ந்தாள்.

திருமணமான முதல் யமுனாவின் மாமியார் கேட்ட சீர் அனைத்தையும் கங்காவும் ராசியம்மாளும் கஷ்டப்பட்டு செய்தாலும் அதில் ஏதேனும் குறை கண்டுபிடித்து கூறி மட்டம் தட்டுவாள்.தன் மகனுக்கு மாமனார்,மச்சனன் இல்லாத இடத்தில் பெண்எடுத்து ஒத்த ஆளாக உள்ளான் என்று அனுதினமும் யமுனாவிற்கும் விழுகும் அர்ச்சனை தான். அவள் கர்ப்பவதி ஆன பின்பு தாய்மாமன் சீர் செய்ய ஒரு நாதியில்லை குத்தல் இன்னும் அவளுக்கு அதிகமாகி போனது.கங்காவை கண்டால் யமுனா மாமியாருக்கு கொஞ்சம்கூட பிடிக்காது,அதான் அவள் வரும்போது கங்கா வீட்டில் இல்லையென்றால் மேலும் கதை வளர்த்துவிடுவாள் என பயந்துதான் யமுனா கங்காவை வர சொன்னாள்.

தன் அக்காவிடம் பேசிமுடித்த கங்கா,சுகந்திக்கு தொடர்புக்கொண்டாள்.ஆனால் முழு அழைப்பும் சென்றும் முழுதாக துண்டிக்கப்பட்டது.

என்னவாகியது என சிந்தனையோடு திரும்பிய கங்கா,சுகந்தி அவரசமாக தன்னை நோக்கி ஓட்டமும் நடையாக வருவதை கண்டாள்.

சுகந்தியின் முகம் பதட்டமாக இருப்பதை உணர்ந்த கங்கா கேள்வி எழுப்புமுன், “என்னாச்சு கங்கா கால் பண்ணியே,பாப்பா நல்லா தான இருக்கா?”என படபடவென்று சுகந்தி கேட்டாள்.

“பாப்பாக்கு காய்ச்சல் குறைஞ்சு இப்ப தூங்கிட்டு இருக்கா அக்கா.நீங்க ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?”என கங்கா குழந்தைக்கு ஒன்றுமில்லை என கூறியதும் தான் சுகந்தி ஆசுவாசமானாள்.

“தங் காட், என்ன சொல்ல மா.வீட்டுல அம்மா சுவாதிக்கிட்ட கோவமா திட்டிட்டாங்க.அவள் அழுத்துட்டே மயங்கி விழுந்துட்டா”என கலக்கத்தோடு சுகந்தி கூறினாள்.
“என்ன அக்கா சொல்லுறீங்க? சுவாதி இப்ப எப்டி இருக்காங்க?”
“இதே ஹாஸ்பிடல் தான் அட்மிட் பண்ணியிருக்கேன்.அவளை டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க,நீ கூப்பிட்டதும் பாப்பாக்கு என்ன ஆச்சோனு பயந்துட்டு ஓடிவந்தேன்”
“நீங்க மட்டுமா அக்கா வந்திங்க?”
“இல்ல எல்லாரும் தான்”
“பாப்பா தூங்கிட்டு இருக்கா நர்ஸ்க்கிட்ட அவளை பார்த்துக்க சொல்லிட்டு நம்ம அங்க போகலாம்”என கங்கா அங்கிருந்த செவிலியரிடம் கூறிவிட்டு சுகந்தியோடு சுவாதியை சேர்ந்திருந்த மருத்துவமனையின் இரெண்டாவது தளத்திற்கு சென்றாள்.

சுவாதி இருந்த அறையின் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே பார்வதி சுமதியின் தோளில் அழுதுக்கொண்டிருந்தாள்.

“அம்மா சுவாதி மகன் எங்க?”என சுகந்தி சுவாதியின் புதல்வனை காணாமல் கேள்வியெழுப்பியவாறே அங்கு வந்தாள்.

“அவனை நவீன் வெளில தூக்கிட்டு போயிருக்கான்”என சுகந்திக்கு சுமதி பதில் அளித்தாள்.

அப்பொழுது சுவாதியை பரிசோதித்த மருத்துவர் அறையின் கதவினை திறந்துக்கொண்டு வெளியே வரவும் அவரிடம் சுகந்தி விசாரித்தாள்.

“ஒன்னுமில்லை,இரண்டு நாளா சரியா சாப்பிடாம தூங்காம இருந்திருக்காங்க.அதுமட்டுமில்லை அவங்க டூ மந்த் ப்ரெகண்ட் இருக்காங்க.இனிமே கவனமா பார்த்துக்கோங்க”என மருத்துவர் கூறியதும் அனைவரும் அமைதியாக நின்றனர்.

“டாக்டர் இப்ப அவளை பார்க்கலாமா?”என சுகந்தி அனுமதி கேக்க,
“ஓ எஸ் பாருங்க.தூங்கிட்டு இருக்காங்க சோ டிஸ்டர்ப் பண்ணவேணாம்”என மருத்துவர் சென்றதும்,பார்வதி தலையில் கைவைத்தவாறே அமர்ந்தாள்.
தனது தாயின் அருகில் அமர்ந்து தோள்தொட்ட சுகந்தி, “என்னமா உனக்கு சந்தோஷமில்லையா?”என்றவளுக்கு பார்வதியால் விரகத்தியாக சிரிக்க மட்டுமே முடிந்தது.

“எதை சந்தோசம் சொல்லுற,நம்ம கல்யாணம் பண்ணிவச்சு இதைக்கேட்டா பெத்த தாயா சந்தோசம் பட்டுருப்பேன். எனக்கே தெரியாம கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பிள்ளையை பெத்துட்டா இதுல மூணாவது பிள்ளைக்கு நான் சந்தோஷ படுறதா வருத்தப்படுறதா தெரியல மா?”என தன் மனநிலையை விளக்கி கூறிய பார்வதி,அப்பொழுது நவீனோடு வந்த சுவாதி மகனை தன்னிடம் அழைத்தாள்.

அந்த பாலகனும் அழுதவாறே பயந்து பார்வதி அருகில் சென்றான்.

குழந்தையின் முகத்தை தனது முந்தானையால் துடைத்துவிட்டு மடியில் அமரவைத்த பார்வதி, “உன் பெயர் என்ன ஐயா?”என வினவ,கூறமுடியாது என தலையை இருபுறமும் ஆட்டி மறுத்தான்.

“நான் உன் ஆச்சி ஐயா,உன் அம்மா இதுயெல்லாம் சொல்லியிருக்க மாட்டா.அதான் உனக்கு தெரியல?”என பார்வதி கூறியதும்,அவளின் மடியிலிருந்து இறங்கியவன், தன் புருவத்தை சுருக்கி உர்ரென்று வைத்தபடியே,

“எங்க மம்மி, எனக்கு சொல்லி கொடுத்துருக்காங்க”என ஒவ்வொருவரையும் கைகாட்டி கூற ஆரம்பித்தான்.
“நீங்க பார்வதி ஆச்சி,இவங்க சுகந்தி அம்மா,இவங்க நவீன் மாமா,இவங்க சுமதி சித்தி”என சரியாக கூறியவன்,கங்காவைக்கண்டு யாரென்று தெரியவில்லை என்றான்.

சுவாதியின் மகன் தன்னை சித்தி என்றதும் வாயை பிளந்த சுமதி,அவனின் உயரத்திற்கு மண்டியிட்டவள், “எப்டி டா கரெக்ட்டா சொல்லுற?”என்று கேட்டவளின் தலையில் கொட்டினான்.
“நான் தமிழ் எல்லாம் சரியா சொல்லுவேன்,உனக்கு தெரியுமா என் கிளாஸ் ல நான்தான் குட் பாய்”என சுமதியை அவன் ஒருமையில் சொன்னதும் அவளுக்கு சந்தோஷமானது.

“ஆனால் நேத்து நீ என்னை பார்த்தப்ப தெரியாத மாதிரி இருந்த?”என நவீன் தன் சந்தேகத்தை கேக்க,அதுக்கு தமிழின் முகம் வாடியது.

“அது அது…நேத்து மம்மி அழுதுட்டே இருந்தாங்க.அதான் நானும் அழுதேன்,இப்பக்கூட மம்மிக்கு உடம்பு சரியில்ல தான”என தற்போது மறந்த அழுகையை தன் அன்னையை நினைத்ததும் தொடர்ந்தான்.

“நீ குட் பாய் சொன்ன,இப்டி அழுகையெல்லாம் கூடாது.உங்கா அம்மாக்கு ஒன்னுமில்ல உள்ள படுத்து தூங்குறா”என நவீன் தமிழை தூக்கி,அவனை சமாதானப்படுத்தினான்.

“தங்கம் உன்னோட முழு பெயர் என்ன அழகா சொல்லு பார்ப்போம்”என சுமதி அவனை திசைதிருப்பும் பொருட்டு கேக்க,தன் அழுகையுடனே மெதுவாக கூறினான்.

சுவாதி மகன் பேச்சில் பார்வதியின் மனம் சற்று லேசானதுபோல் இருந்தது.சுகந்தி அவன் பேச்சைக்கண்டு ரசித்துக்கொண்டிருக்க,கங்கா பார்வையாளராக இருந்தாள்.

“சத்தமா சொல்லு பா,எனக்கு கேக்கல”என சுமதி அவனிடம் மீண்டும் கேக்க,
“தமிழ்வேந்தன்”என உரக்க கத்தினான்.

பெயரைக்கேட்டதும் சுமதி திடுக்கிட்டு கங்காவை நோக்க, அவளோ கண்களை இமைக்கக்கூட மறந்துநின்றாள்.அடுத்த நிமிடமே சுகந்தியிடம் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.

கங்காவின் செயல் மற்றவர்களுக்கு கருத்தில் பதியாமல் இருந்தாலும், சுமதிக்கு அவளின் மனகாயம் புரிந்தது.அதனால் அவளும் கங்காவின் பின்னாலே ஓடினாள்.

மருத்துவமனையின் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்ற கங்காவின் அருகே சென்ற சுமதி அமைதியாக நின்றாள்.

“கங்கா நீ இன்னும் வேந்தனை மறக்கலயா?”என பட்டென்று சுமதி கேள்வியெழுப்ப,

“மறக்கலனு இல்லை ஆனால் நினைவுபடுத்த விருப்பமில்லை”

“எனக்காக இப்ப ஒருவாட்டி அவனுக்கு கால் பண்ணேன்”என்ற சுமதிக்கு,
“இதுவரை அவனுக்கு கால் பண்ணேதே போதும்டி.நான் வேணாம்னு முடிவுஎடுத்து விலகி போய்ட்டான் இன்னுமா அவனை நான் தொங்கனும்”
“ஏய் கங்கா”என சுமதி அவளை மேலும் வறுப்புறுத்த,
“வேணாம் டி விடு,அங்க உங்க வீட்டில எவ்வளவு பிரச்சினை போகுது.அதைவிட்டு எனக்காக பேசிட்டு இருக்க”
“ஆமாம் போடி நீ வேற,வாழ்க்கையில் என்னைக்கு நமக்கு பிரச்சினையில்லை.இந்த நாளே தலைகீழா போகும் நினைக்கவேயில்லை.உன்கிட்ட வேந்தன் விஷயத்தை பேசணும் நேத்தே நினைச்சேன்டி அதான் இப்ப கேட்டேன்,விடு எது நடக்கணும் இருக்கோ நடக்கட்டும்”என வெறுப்பு கலந்த சிரிப்போடு பேசிய சுமதியின் கையினை வலுவாக பிடித்த கங்கா ஆறுதல் கூறிவிட்டு பேருந்தில் ஏறி தன் இல்லத்திற்கு பயணப்பட்டாள்.
இங்கு கங்கா சென்றதும்,பாப்பாவுக்கு துணையாக பார்வதியும் சுமதியும் செல்ல,நவீன் தமிழை தூக்கிவைத்துக்கொண்டு அவனோடு பேசிக்கொண்டிருந்தான்.

சுவாதியின் அறையில் அவளின் தலையை வருடியபடி சுகந்தி இருந்தாள்.

“நீ இப்படியொரு தப்பு பண்ணுவேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல சுவாதி. எப்டி கல்யாணத்துக்கு முன்ன இப்படியொரு தப்பை பண்ண,உன் புருஷன் யாரு?.இந்த உண்மையை வீட்டுல சொல்லிருந்தா இந்நேரம் என்ன நடந்திருக்கும்னு என்னால கற்பனைக்கூட பண்ணமுடியல”என சுகந்தி சுவாதி உறங்கிக்கொண்டிருக்கிறாள் என நினைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

மூடியிருந்த இமைகளின் வழியே கண்ணீர் வருவதைக்கண்டதும் சுகந்தி தனது பேச்சினை நிறுத்தி தனது தங்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுவாதி என்ற சுகந்தியின் அழைப்பிற்கு,தனது இமைகளை பிரித்து எழுந்து அமர்ந்தாள்.

“நான்..”என ஆரம்பித்தவளை தடுத்த சுகந்தி,
“வேணாம் நீ ஏதும் சொல்ல வேணாம்”என அவளின் நிலையை எண்ணி தற்பொழுது வேண்டாம் என்றாள்.

“இல்லை அக்கா,நான் பேசணும்”என நடந்தவற்றை கூற ஆரம்பித்தாள்.

“திருச்சியில ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து அவரை தெரியும்.ஆரம்பத்தில நட்பா பழக ஆரம்பிச்சோம்,போக போக காதலா மாறுச்சு.அப்பா இறந்துபோனதும் நம்ம குடும்ப சூழ்நிலை தலைகீழா மாறி போச்சு.எனக்கு எப்பவும் ஒரு துணையா ஆறுதலா இருந்ததுயெல்லாம் அவர் தான்.அவரை பிரிய மனமில்லாம தான் வலுக்கட்டாயமா திருச்சியிலே காலேஜ் சேர்ந்தேன்,நீ பாதி காலேஜ் பீஸ் தான்கா கட்டுன,எனக்கான செலவு எல்லாத்தையும் அவர்தான் அக்கா பார்த்தாறு.உன் கல்யாணம் முடிந்ததும் என் காதலை சொல்லலாம் இருந்தேன்,அப்ப தான் என்னோட கல்யாணமும் சேர்ந்து முடிவு ஆச்சு”என சுவாதி தலைகுனிந்தவாறே பேசினாள்.

சுவாதி கூறுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சுகந்தி,அவளின் தலையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தாள்.

தன் அக்காவின் கண்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் சுவாதி தவித்தாள்.

“நீ காதலிச்சது எல்லாம் தப்பில்லை,ஆனால் அந்த தப்பை நீ பண்ணுவேன் நான் நினைச்சுக்கூட பார்க்கல”என சுகந்தி அழுத்த திருத்தமாக கூறியதும் சுவாதி மவுனமாக கண்ணீர் வடித்தாள்.

“நான் வேணும்னு அந்த தப்பை பண்ணல அக்கா,அந்த வயசுல என்னைமீறி நடந்துருச்சு.என்னை மன்னிருச்சு”என சமாளிக்க முயன்றாள்.

“எனக்காக கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட,எனக்காக சாக போனேன் சொன்னியே எல்லாம் பொய் தான”என சுகந்தி தான் கேக்கவேண்டாம் நினைத்தவற்றை பட்டென்று கேட்டுவிட,அழுதுக்கொண்டிருந்த சுவாதி மேலும் அழுதாள்.

“அக்கா, பொய் எல்லாம் இல்லை.உண்மையிலே நான் கர்ப்பமா இருந்தேன்னு எனக்கு தெரியாது”என வாய் திக்கி துடித்த பேசிய சுவாதி மேலும் தொடர்ந்தாள்.

“எனக்கே தெரியாம தான் அக்கா என்னை அவரு…அது எனக்கு சத்தியமா தெரியாது.அதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்,உன்னை மணமேடைக்கு அழைச்சுட்டு போனதுக்கு அப்புறம்..

அன்று திருமண மண்டபத்தில்,
மணமகள் அறையில் தன்னை பிரதிபலிக்கும் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த சுவாதி,மணப்பெண்ணுக்கு உண்டான களையின்றி இருந்தாள்.அப்பொழுது அறைக்குள் நுழைந்த பெண்,அவளை முறைத்தவாறு நின்றாள்.

“என்னடி பெரிய சாதனை பண்ணபோற போல,வாழ்த்துக்கள்”என நக்கலாக சுவாதியின் தோழி லாரா கூறியதும்,அவளை நோக்கி திரும்பியவளின் கண்கள் கலங்கியது.

“வேணாம் சுவாதி,உன்னையும் கஷ்டப்படுத்தி உன் ஜீவாவையும் கஷ்டப்படுத்தி இந்த வாழ்க்கை வேணுமா சொல்லு”என்றவளுக்கு,
“நீ என்னோட பிரின்ட் முறையில எனக்காக பேசுற,ஆனால் இதுல என்னோட வாழ்க்கை மட்டுமில்லை என் அக்காவோட வாழ்க்கையும் பிணைஞ்சு இருக்கு”என தேய்ந்த குரலில் கூறியவளை அடிக்க தோன்றிய கைகளை கட்டுப்படுத்திய லாரா,சுவாதியை பிடித்து தன்புறம் திருப்பினாள்.

“உன் அக்காக உன்னோட வாழ்க்கையை அழிச்சுக்கோ.ஆனால்,ஜீவா வாழ்க்கையும் சேர்த்து ஏன் அழிக்குற.இப்பக்கூட ஒன்னுமில்ல சுவாதி நான் உன் அக்காகிட்ட பேசுறேன் பிலீஸ்”என தனக்காக கெஞ்சியவளை அழுகையோடு சுவாதி கட்டிக்கொண்டாள்.

“சுவாதி பிலீஸ்டி”என கெஞ்சிய லாராவுக்கு,
“என் அக்கா எங்களுக்காக வாழ்ந்தவ அவளுக்காக என் உயிரே கொடுப்பேன் என் காதலை அழிக்க மாட்டேனா. காதலிக்குறவங்க எல்லாரும் சேரணும் இல்லையே”என லாராவுக்கு கூறுவதுபோன்று தனக்கே கூறிக்கொண்டாள்.

“அப்ப இந்த வாழ்க்கையை ஏத்துக்க ரெடியா இருக்க.ஐ ஆம் ரைட்”

“அது..அது”என சுவாதி திணற,
சுவாதியை பிடித்து உலுக்கிய லாரா,கோவத்தில் அவளை மாறி மாறி அறைந்தாள்.
தன் தோழி கொடுத்த அடியை அசராமல் வாங்கியும் சுவாதி அமைதியாக இருந்தாள்.
“எதையும் போராட தைரியமில்லாத நீ எதுக்குடி லவ் பண்ண டம்இட்”என லாரா சுவாதியை திட்டிக்கொண்டிருந்தாள்.
தன் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாத சுவாதியை லாரா திரும்பி பார்க்க,தன் கையில் வைத்திருந்த மருந்தை குடிக்க ஆரம்பித்தாள்.

லாரா தடுக்கும்முன் முழுவதும் குடித்த சுவாதி, “ஜீவா தவிர இன்னொருத்தன் சுவாசம் கூட என்னை தீண்ட விடமாட்டேன்.தாலி கட்டுற வரை உயிரோட இருந்தா போதும்,என் அக்காக்கு கல்யாணம் ஆன சந்தோஷத்தில அப்டியே செத்துருவேன்”என தியாகி போன்று பேசியவளை நினைத்து லாரா வருந்தினாள்.

“ஆர் யூ மேட்,சீ இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கியே.வா சுவாதி ஹாஸ்பிடல் போகலாம்”என லாரா சுவாதியின் கையை பிடித்து இழுக்கும்போதே சுவாதி லாராவின் மீது மயங்கி சரிந்தாள்.

சிறிதுநேரம் கழித்து கண்விழித்த சுவாதி,தலையை பிடித்தவாறே எழுந்து அமர்ந்தாள்.முதலில் புரியாமல் முழித்த சுவாதி,தான் மண்டபத்தில் இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதைக்கண்டு அதிர்ந்தாள்.

வேகமாக எழுந்து தான் இருந்த அறையின் கதவினை தொடுவதற்குமுன், இவளின் காதலன் ஜீவா கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான். அவனைக்கண்டதும் அசையாமல் நின்ற சுவாதி,மறுநொடியே அவனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.

“எங்க போற சுவா?என்னை விட்டு போவியா”என்றவனுக்கு,
“புரிஞ்சுக்கோ ஜீவா,என் நிலைமையை”என பேசியவளின் வாயில் கைவைத்த ஜீவா,அவளின் கண்களை உற்று பார்த்தான்.

“என்னை விட்டு போறியா போ”என ஜீவா சொன்னதும்,சில நிமிடங்கள் நிதானித்த சுவாதி அவனைவிட்டு விலகி அறையின் கதவை நெருங்கினாள்.

“என்னை விட்டு போற சரி நம்ம பிள்ளையை என்ன பண்ண போற?”என்றவனின் கூற்றில் திடுக்கிட்டு திரும்பிய சுவாதி ஜீவாவை அதிர்ச்சி குறையாமல் பார்த்தாள்.

அப்பொழுது இவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்த லாரா,அதிர்ச்சியாக நின்ற சுவாதியின் கரங்களை பிடித்தாள்.
லாரா தொடுதலில உணர்வுக்கு வந்த சுவாதி அதிர்ச்சியான முகத்தோடு, “லாரா இவன் என்ன சொல்லுறான்.நான் கர்ப்பமா?”என கேட்டவளுக்கு லாரா ஆமாம் என்றாள்.

“அய்யோ அய்யோ…கடவுளே”என தன் தலையில் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து கதறினாள்.

“சுவா”என அழைத்துக்கொண்டே தன்னருகில் வந்தவனின் சட்டையை பிடித்த சுவாதி,
“எப்ப இப்படியொரு தப்பு நடந்துச்சு?”என ஆக்கோரோசமாக கத்திய சுவாதிக்கு,

“அது எனக்கு ஒரு பயம் இருந்துச்சு,நீ எதிர்காலத்தில் என்னைவிட்டு போயிருவேனு. நம்ம கொடைக்கானல் போனபோது…”என ஜீவா மேலும் பேச முடியாமல் நிறுத்தியவனை,வெறுப்பு கலந்த கோவத்தோடு சுவாதி பார்த்தாள்.

“ஏன் ஜீவா உங்களை லவ் பண்ணத்துக்கு அவளுக்கு இப்படியா துரோகம் பண்ணுவீங்க.அசிங்கமா இல்லை உங்களுக்கு”என லாரா சுவாதிக்காக ஜீவாவிடம் வாதாட, அவன் சுவாதியே பார்த்துக்கொண்டிருந்தான்.

“விடு லாரா அதான் நான் குடிச்ச விஷத்துல சாகும்போது அவன் பிள்ளையும் சாகட்டும்”என தன் வயிற்றின் மேல் கைவைத்து கூறிய சுவாதியை லாரா பரிதாபமாக பார்த்தாள்.

“சாரி சுவாதி,நீ விஷம் வாங்கி வச்சது எனக்கு முன்னவே தெரியும்.அதான் தூக்க மருந்தை மாத்தி வச்சேன்.உன்னை ஜீவாவோட சேர்த்துவைக்கணும் தான் பண்ணேன்”என லாரா தன் செய்தவற்றை கூறியதும் எதை நினைத்து வருந்துவது என்று புரியாமல் சுவாதி அழுதாள்.

லாரா கையை பிசைந்தப்படியே நிற்க,ஜீவா தன் தவறையெண்ணி கூனி குறுகி நின்றான்.நேரம் ஆக ஆக வாய்விட்டு அழுத சுவாதி ஏதோ தோன்றியதும் சட்டென்று அழுகையை நிறுத்தினாள்.

“லாரா அங்க கல்யாணம்,நான் எப்டி இங்க?”என்று கேட்டவளுக்கு,
“அது நீ மயங்குனதும் உனக்கு பர்தா போட்டு மண்டபத்திலிருந்து கூட்டிட்டு வந்தேன்”என லாரா கூறியதும்,அவளை இழுத்து சுவாதி அறைந்தாள்.

“என்னடி பண்ணி வச்சிருக்க,அய்யோ என் அக்கா கல்யாணம் நின்னு போயிருக்குமே.என் குடும்பமே எல்லார் முன்னாடி அசிங்கப்பட்டு தவிச்சு நிக்குமே. நான் என்ன பண்ணுவேன்,கடவுளே நான் மனசு அறிஞ்சு செய்தா தப்புக்கு இப்ப சுமக்குற வயித்தோட எப்டி எல்லார்முன்ன நிப்பேன்.அய்யோ நான் என்ன பண்ணுவேன்.இந்த உயிரே எனக்கு வேணாம் நான் சாகனும் சாகனும்”என பித்துப்பிடித்தவள் போன்று கத்தியவளைக்கண்டு ஜீவாவும் லாராவும் பயந்தனர்.

சுவாதி அருகே சென்ற ஜீவா, “சுவா நான் பண்ணது தப்பு தான் அதை நியாயப்படுத்த விரும்பல.அதுக்கு நீ ஏன் சாகுறேன் சொல்லுற,இப்படி பேசாத என்னால தாங்க முடியாது.உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுறேன்”என பேசியவனை அறைந்த சுவாதி,

“என்ன பண்ணுவ,என் குடும்பத்துல எல்லார்க்கிட்டையும் போய் நான் தான் தப்பு பண்ணேன்,இவளுக்கு சமந்தமில்லைனு சொல்லுவியா சொல்லு.அப்டியே நீ சொன்னாலும் என் அம்மாக்கூட நம்ப மாட்டாங்க”என ஜீவா சட்டையை கிழித்து அவன் நெஞ்சிலே அடித்தாள்.

“என்னை இன்னும் வேணா அடி,நீ இந்த சமயத்துல இவ்வளவு கோவப்படக்கூடாது.நம்ம குழந்தைக்கு ஆகாது”என ஜீவா கூறியதும்,அவனை அதற்குமேல் என்ன சொல்லுவதுயென புரியாமல் தன்னிலையை எண்ணி நொந்துக்கொள்ள மட்டுமே சுவாதியால் முடிந்தது.

“என்னால என்ன அக்கா பண்ண முடியும்.நான் காதலிச்சவன் என்மேல உள்ள காதலால் இப்படியொரு தப்பை பண்ணிட்டான்.உன் கல்யாணமும் நின்னுபோச்சு,நான் திரும்பியும் வர முடியாது.ஏன்னா தமிழ் என் வயிற்றில் இருந்தான்.அதான் மனசை மாத்திக்கிட்டு மறுநாளே அவனை கல்யாணம் பண்ணிட்டேன்”என மண்டபத்தில் நடந்தவற்றை சுவாதி கூறிமுடித்தாள்.

சுவாதியின் விளக்கத்தை கேட்டதும் சுகந்திக்கு சுவாதியும் கணவன்மீது ஆத்திரமாக இருந்தது.

“அப்டியே அவருக்கு பெங்களூர்ல வேலை வாங்கிட்டு அங்க போய்ட்டோம்.கொஞ்ச நாள்ல தமிழ் பிறந்தான்.ஆனால் அவர் என்னை அப்டி பார்த்துகிட்டாறு, அவ்வளவு அன்பா இருப்பாரு.அவர் அன்பில் நான் கோவத்தையெல்லாம் மறந்துட்டு வாழ ஆரம்பிச்சேன்.ரெண்டு வருஷம் முன்ன பாப்பா பிறந்தா பெயர் அகல்யா,தம்பி பெயர் தமிழ்வேந்தன்.தமிழ்க்கிட்ட உங்க போட்டோ எல்லாம் காட்டி அடிக்கடி சொல்லுவேன் அக்கா”என லேசாக புன்னகைத்தப்படியே சுவாதி கூறினாள்.

“இப்ப நீ கர்ப்பமா இருக்குறது உனக்கு தெரியுமா?”என்ற சுகந்திக்கு,
“தெரியும் அக்கா,ஆனால் என் ஜீவாவுக்கு தெரியாது” என்றாள் வருத்தத்தோடு.

“சரி போனது போகட்டும்,உன் புருஷன் பண்ண தப்புக்கு இனிமே அவரை தட்டிகேக்க முடியாது தான்.ஆனால் இப்பயென் அவரில்லாமல் இங்க வந்திருக்க?என்ன ஆச்சு?”என சுகந்தி சுவாதியின் பிரச்சனையை அறியும்பொருட்டு கேட்டாள்.

தன் மனத்திலுவற்றை அக்காவிடம் கூறிவிட்டோம் என்ற நிம்மதியில் இருந்த சுவாதிக்கு சுகந்தியின் அடுத்த கேள்வி அவளை வருத்தமடைய செய்தது.

“அது என”என சுவாதி கூறும்பொழுது மருத்துவர் வந்ததால் தன் பேச்சை அதோடு நிறுத்திக்கொண்டாள்.