கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்7

நிரப்புக-7
வெண்பாவிடம் வழிகேட்டு ஒருவழியாக பெண் வீட்டை அடைந்தனர் மூவரும். காரில் இருந்து சூர்யா,ராம் இறங்கிய பின்னர் பொறுமையாக கண்ணாடி மாட்டிக்கொண்டு ஸ்டைலாக மாதவன் இறங்கினான்.

மாப்பிள்ளையை வரவேற்க நின்ற பெண் உறவின ஆண்கள் மூவரில் யார் மாப்பிள்ளை என குழம்பி தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

“ஏப்பா இதுல யார் மாப்பிள்ளை?,ஒன்னும் புரியல”என்ற ஒருவருக்கு,

“அட இது தெறியல,அதான் மாப்பிள்ளை கணக்காக சந்தன கலர்ல சட்டை இருக்காருல அந்த தம்பி தான் மாப்பிள்ளை.யோ வாங்க அழைப்போம்”என்ற மீசை வர்க்கத்தினர் நேராக மாதவனை மாப்பிள்ளை என நினைத்து அழைக்க,அவனோ கூச்சத்தில் நெளிந்தான்.

கிளம்பும்போதே மாதவனை வேறு சட்டை மாற்ற சொன்ன சூர்யாவிற்கு போக்கு காட்டி,இப்பொழுது இவனை மாப்பிள்ளை என நினைத்துக்கொண்டு பெண் வீட்டார் அழைப்பதால் சூர்யா கொலைவெறியோடு மாதவனை நோக்கினான்.

ராம் நல்லப்பிள்ளையாக நடக்கும் நிகழ்வை ரசித்துக்கொண்டிருந்தான்.

மாதவன் சூர்யாவின் கண்கள் தன்னை சுட்டெறிப்பதை ஓரக்கண்ணால் கண்டவன், “மாப்பிள்ளை நான் இல்லை,நான் தோஸ்து”என்று மென்றுமுழுங்கியபடியே அங்கிருந்தவர்களிடம் கூறினான்.

மாதவன் கூற்றைக்கேட்டு மீசை ஒருவர், “நான் தான் சொன்னேன்ல,மாப்பிள்ளை இவரில்லைனு”என தன் பேச்சை மாற்றி பேச,சுற்றியிருந்தோறும் அதை ஆதரித்து ஒருவழியாக மூவரையும் அழைத்து சென்றனர்.

மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும் பார்வதி அனைவரையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தாள்.

சுகந்தியின் பெரியப்பா பெண் வீட்டின் சார்பில் வந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

அறையிலிருந்து தனது பெரியப்பாவை கவனித்த சுமதி, ‘இவரை யாரு இப்ப வர சொன்னா,இந்த மனுஷன் எதைவாது பேசி கெடுத்து விட்டாலும் விடுவாறு.பெயரு தான் பெரியப்பன் எப்ப பார்த்தாலும் பெரிய ஆப்பா வைக்குறாரு.கடவுளே இந்த வரன் நல்லபடியா அமையனும் பிலீஸ் பிலீஸ்’என தன் தந்தையின் அண்ணன் என தங்களுக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கவேண்டியவர் பணத்திற்காக சுயநலமிக்கவராக இருக்கிறார் என மன ஆற்றாமையை தனக்குள்ளே பொங்கிக்கொண்டாள்.

நிமிடங்கள் கரைய,பெண் வீட்டு மாப்பிள்ளை வீட்டு சொந்தம் ஒவ்வொரும் பேசிக்கொண்டிருந்தனர். சுகந்தி வீட்டு சொந்தத்தில் உறவினர் ஒருவர், “ஏப்பா மாப்பிள்ளையை காக்க வச்சுட்டு என்ன பேச்சு,போங்கத்தா பிள்ளையை அழைச்சுட்டு வாங்க.என்ன மாப்பிள்ளை நான் சொல்லுறது”என மாப்பிள்ளையாக வந்தவனிடம் குறும்பாக வினவ, அவனோ மிக கடுப்போடு முறைத்தான்.

மாப்பிள்ளை சொந்தத்தின் மனிதர்களைக்கண்ட பார்வதிக்கு இந்த வரன் அமைந்துவிடும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. அந்த நம்பிக்கை கொடுத்த இன்பத்தில், “இதோ அழைச்சுட்டு வரேன் மாமா” என திரும்பியவளின் காதில் விழுந்த அழுகை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருநிமிடம் வேரூன்றி நின்ற பார்வதி திரும்பி வாயிலை நோக்க, ஆறு வருடங்களுக்கு முன்பு தொலைத்த மகளைக்கண்டு திகைத்து நின்றாள்.

வாயிலில் அழுதபடியே, “அம்மாஆ அம்மாஆ”என சத்தமாக அழைத்த சுவாதி இவ்வளவு வருடங்களுக்கு கழித்து தன் தாயை பார்த்த உணர்ச்சிபெருக்கில் கதறி அழுதாள்.

சுவாதியின் குரலைக்கேட்டதும் வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினர் தங்களுக்குள் கிசுகிசுக்கத்தொடங்கினர்.

வெளியில் நடக்கும் சூழ்நிலையைக்கண்டு சுகந்தி அறையைவிட்டு வெளியே வருவதை கங்காவும் சுமதியும் தடுத்துவிட்டு இவர்கள் மட்டும் வெளியே சென்று பார்த்தவர்களும் திகைத்தனர்.

இத்தனை வருடங்கள் சுவாதி உண்டாகிய வலியின் தாக்கம் இப்பொழுது வரை அதனை பொறுத்துக்கொண்ட சுமதியினால் அவளை க்கண்டதும் தனது கோவத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுதுக்கொண்டிருந்த சுவாதியைக்கண்ட சுமதி இருக்குமிடம் மறந்து வாசற்படியில் நின்றவாறே, “யாருடி நீ?யாருன்னு கேக்குறேன்.எங்க வந்த? எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகவே கூடாதுன்னு இருக்கியாடி?”என்றவள் வார்த்தைகள் எரிமலை போன்று கொட்ட,சுவாதியோ அழுகையை மறந்து பேச்சற்று நின்றாள்.

அப்பொழுது சுவாதியின் அருகில் நவீனும் அவனின் பின்னே வந்த சுவாதியின் குழந்தைகள் அவளின் கால்களை கட்டிக்கொண்டனர்.

தன் உடன்பிறந்தவள் என்பதை மறந்து சுற்றோர் முன்னிலையில் கத்திக்கொண்டிருந்த சுமதியிடம், “எதுனாலும் அப்புறம் பேசலாம்.நீ உள்ள போ, எல்லாரும் பார்க்குறாங்க”என இருக்கும் சூழ்நிலையை அவளுக்கு புரியவைக்க முயற்சித்தான் நவீன்.

அவனையும் முறைத்த சுமதி, “நீ ஏன் டா அவளுக்கு சப்போர்ட் பண்ணுற?.ஏய் நீ போடி முதல இன்னும் என்ன இங்க இருக்க” என சீரிக்கொண்டிருந்தாள்.

நடப்பதை தனக்கு சாதமாக்கிக்கொண்ட சுகந்தி பெரியப்பா விநாயகம் பொய்யாக வரவழைத்த கோவத்துடன் வேகமாக வெளியே வந்து வார்த்தைகளால் சுவாதியை சாடினார்.

தனது பெரியப்பாவை அடக்கிய நவீன், “பெரியப்பா, பார்த்து பேசுங்க.அவள் என்னோட அக்கா”என இவன் ஒருபுறம் துள்ள, திடீரென விநாயகம் நவீன் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

அறையில் ஓரளவுக்கு பொறுத்துபார்த்த சுகந்தி பொறுமையிழந்தவளாக அறையைவிட்டு வரும்நேரம் நவீனை விநாயகம் அடிக்கவும் சரியாக இருந்தது.

இவ்வளவு நிகழ்வையும் கூடியிருந்த சொந்தகளும் மாப்பிள்ளை வீட்டினரும் பார்வையாளராக பார்த்தனர்.

தனது தம்பியை அடித்ததும் சினங்கொண்ட சுகந்தி வெளியே செல்லமுற்பட,பார்வதி அவளின் கைபிடித்து தடுத்தாள்.

“வேணாம்..”என கூறவரும்போதே தனது தாயின் கையை வலியபிரித்த சுகந்தி, விறுவிறுவென்று வாசலுக்கு சென்றவள் தனது தம்பியை அடித்த பெரியப்பாவை பார்த்தவாறு அங்கு நின்றுக்கொண்டிருந்த சுமதியை இழுத்து நான்கு விட்டாள்.

நவீன் முதல் அனைவரும் சுகந்தியின் செயலில் அதிர்ச்சியடைய, அவளோ “யார் வீட்டுல வந்து யாரை அடிக்குறிங்க,என் அப்பாவோட அண்ணனா போயிட்ட இல்லை இந்த அறை உனக்கு விழுந்துருக்கும்.சூடு சுரணை உள்ளவனா இருந்தா இனிமே இங்க வர வேணாம்” என விநாயகத்தை எச்சரித்த சுகந்தி,
அதே வேகத்தோடு நவீனிடம், “டேய் அவங்களை உள்ள கூட்டிட்டு வா.நீ என்னடி இங்க இருக்க,உள்ளே போ”என சுமதியை இழுத்தவாறே கூடத்திற்கு வந்தாள்.

இதுவரை அமைதியாக இருந்த மாப்பிள்ளையின் உறவினர் பெண் ஒருத்தி, “ஏண்டி கல்யாணி,பொண்ணு தங்கமானவ.நல்ல குடும்பம் சொன்ன,ஆனால் இங்கே என்ன என்னமோ நடக்குது.நம்ம சர்வேஷுக்கு ஏத்த பொண்ணா இது”என தனது வாய்க்கு தீனியாக அரைத்துக்கொண்டிருக்க,கணவன் இல்லாமல் ஒரு ஆளாக வளர்த்த தன் மகனுக்கு திருமணம் என்று வந்தாலே ஏதோ ஒரு தடங்கல் வருவதை நினைத்து வருந்தினாள் மாப்பிள்ளையாக வந்த சர்வேஷின் தாய் கல்யாணி.

திருமணமே பிடிக்காமல் தனது தாய்க்காக வந்த சர்வேஷ்,இங்கு நடந்த நிகழ்வைக்கண்டதும் மனதிற்குள் நிம்மதி பிறந்தாலும் சுகந்தி அவனின் மனதை சிறிது சலனப்படுத்தி விட்டாள் என்றே சொல்லலாம்.

தங்களை அவதூறாக பேசிய பெண்ணிடம் கங்காவின் அப்பத்தா ராசியம்மாள், “ஆத்தா இப்படியெல்லாம் பேசாதிங்க.இரெண்டாவது பிள்ளை காதல்னு போனதையும் எல்லாம் சொல்லி தானா செஞ்சோம்.இப்ப அந்த பிள்ளை வந்திருக்கு,அதையென் பெருசுபடுத்திறிங்க”என பொறுமையாக கேட்டாள்.

“அப்படியா சொன்னாங்க, ஆனாலும் எங்க பையன் சாது.இந்த பிள்ளை இப்படி சாமி ஆடுது”என வாய் திறந்தவளுக்கு,
“போதும்”என சத்தமாக உரைத்த சுகந்தி அனைவரையும் பார்த்தவாறு கையெடுத்து கும்பிட்டாள்.

“எல்லாரும் கிளம்பலாம்”என சுகந்தியின் கூற்றைக்கேட்டு,பார்வதியும் சுமதியும் கண்ணீர் வடித்தனர்.அறையில் அமர்ந்தபடியே கேட்ட யமுனாவுக்கு மனது பாரமாகி வலித்தது.

ராசியம்மாள் சேலை தலைப்பால் வாயினை மூடியபடியே அழுக,கங்கா தான் ஆறுதல்படுத்தினாள்.

இதுவரை வெறுப்பாக அமர்ந்திருந்த சர்வேஷ், “பொண்ணு பார்க்க கிளம்பும்போது என்ன பேசுனீங்க எல்லாரும்,அவங்க பேமிலில ஏதோ பிரச்சனை.அதுக்கு ஒரு பொண்ணை மட்டும் இப்படியெல்லாம் பேசமுடியுது.அம்மா நீ என்ன சொல்லி கூட்டிட்டு வந்த” என எழுந்து ஆதங்கமாக பேசியவன் தனது அம்மாவிடம் கேள்விகேட்டான்.

பெண் பார்க்க செல்லும்முன், சுகந்தியை பற்றி புகழ்ந்து பேசிய கல்யாணி தற்பொழுது மகனின் கேள்விக்கு அமைதி காத்தாள்.

மாப்பிள்ளை யாரென்று அறியாத சுகந்தி,சர்வேஷின் பேச்சைக்கேட்டு அவனை கண்ணெடுக்காமல் நோக்கினாள்.

வாசலில் சுவாதியோடு நின்றபடியே நவீன் தவிப்போடு சர்வேஷை பார்த்துக்கொண்டிருக்க,
சுகந்தியை நேராக பார்த்த சர்வேஷ், “இந்த கல்யாணம் பிடிக்காம தான் வந்தேன்.ஆனால் இப்ப உங்களை பிடிச்சிருக்கு நீங்க என்ன சொல்லுறீங்க?”என பட்டென்று கேட்டுவிட,
இதனை எதிர்பாராத சுகந்தி சொல்லுவதறியாமல் நின்றாள்.

“எனக்கு..”என சுகந்தி கூறவருவதற்குள் குறுக்கே வந்த சுமதி,
“மாமா எங்க அக்காக்கு உங்களை பிடிச்சு தான் வர சொன்னா”என கூறினாள்.

சுமதியின் பதிலால் சர்வேஷ் நம்பாத பார்வையாக சுகந்தியை பார்க்க,அவளோ தனது முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.

“என்ன கல்யாணி உன் மவன பார்த்தியா உன்னை கேக்காமல் இப்படி பேசுறான்.நீ என்ன அமைதியா இருக்க” என மாப்பிள்ளை உறவினர்கள் கல்யாணியை கேள்விமேல் கேள்வி எழுப்பி துளைத்தனர்.

சட்டென்று எழுந்த கல்யாணி தனது மகனின் கையை பற்றிக்கொண்டு அவனின் பேச்சை பொருப்படுத்தாமல் அங்கிருந்து செல்ல,இவர்கள் பின்னே அனைவரும் ஏதோ பேசியவாறே களைந்து சென்றனர்.

தான் தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என உணர்ந்த சுவாதி,தனது மகளை தூக்கிக்கொண்டு ஒரு கையில் தனது மகனையும் மற்றொரு கையில் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகன்றவளை ஒரு கரம் தடுத்தது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

விருதுநகரில் ராமிற்கு பெண் பார்க்க சென்ற இடத்தில்,பெண்ணிடம் பேசவேண்டும் என தனியாக பெண்ணை அழைத்து சென்றவன் உண்மையை கூறுகிறேன் என கூறி இந்த திருமண பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு யாரையும் பொருப்படுத்தாமல் அங்கிருந்து சென்றான்.

பெண் வீட்டார் வெண்பா குடும்பத்தினரை திட்டி விரட்டியடித்தனர். இதனால் அனைவரும் மனஉளைச்சலோடு வீடு திரும்பினர்.

ராம் சென்றதும் உருவான கலக்கத்தை முடித்து வெண்பாவோடு மற்றவர்களை அனுப்பி வைத்த சூர்யாவும் மாதவனும் அவனை காணாமல் தேடி அலைந்தனர்.

யாரையும் காண பிடிக்காமல் காலப்போக்கில் நடந்த ராம்,சாலையோரம் இருந்த மரத்தடியில் அமர்ந்தான்.

தனது மனதை புரிந்துகொள்ளாமல் தன்னை வேதனைப்படுத்தும் உறவுகளை நினைத்தவனுக்கு வெறுப்பாக இருந்தது.

கண்கள் மூடி சிந்தித்தவனுக்கு அவளின் மன தேவதை தெரிந்தாள்.