கோடிடாத இடங்களை நிரப்புக-5

நிரப்புக-5
கடிக்காரத்துக்கும் ஈடுகொடுக்கும் வகையில் இரவு பகல் என்றில்லாது எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதுரை மாநகரில்….

நேராக மதுரை ஆளும் மீனாட்சி தாயாரை ஒருமுறை தரிசித்துவிட்டு சூர்யாவின் கார்க்கு பின்னால் செல்வோம்.

ராமின் அக்கா வெண்பாவின் இல்லம்,(வெண்பாரதியை அனைவரும் வெண்பா என்று அழைப்பதால் நாமும் அவ்வாறே அவளை அழைப்போம்)

வெண்பாவின் கணவன் பிரபாகரனின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தினர்.பாக்கியவதி வெண்பாவை தனது அண்ணின் ஒரே புதல்வன் பிரபாகரனுக்கு மணமுடித்து கொடுக்கும்போதே அவளுக்கு சீராக மதுரையில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்துவிட்டாள்.

பிரபாகரன் தந்தை வீரப்பன் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர், தாய்-போதும்பொண்ணு இல்லத்தரசி.பிரபாகரன் கட்டிட கலை பொறியியலராக உள்ளான்.

ராமின் தந்தை அவனின் பதினைந்து வயதிலேயே பக்கவாதத்தில் விழுந்தார். பாக்கியவதி தான் இருக்கும் சொத்தை பராமரித்து,வட்டிக்கொடுத்து குடும்பத்தை காத்தாள். மகளுக்கு திருமணம் செய்துவைத்தோடு அவளின் குடும்பத்தோடு மதுரைக்கு குடிபெயர்ந்துவிட்டாள். மதகுப்பட்டியில் சொத்து நிலம் எல்லாம் இருந்தாலும் அனைத்தும் இன்னொருவரின் பராமரிப்பில் இருக்கிறது.

“வெண்பா,மாப்பிள்ளை போன் பண்ணாரா?” என்று கேட்டுக்கொண்டே சமயலறைக்கு வந்தாள் பாக்கியவதி.

“பண்ணிட்டேன் மா, அடுத்த வாரம் வரேன் சொல்லிட்டாரு” என கூறியவாறே சமையலில் மூழ்கி இருந்தாள்.

“அவரை இங்க வந்து வேலை பார்க்க சொல்லுமா,அவர் ஏன் இன்னும் சிங்கப்பூரல இருக்காரு?” என பாக்கியவதி தன் மகள் ஒருபுறமும் மருமகன் ஒருபுறமும் இருப்பதை விரும்பாமல் வழமையாக வருத்தக்கொண்டாள்

அம்மாவின் கேள்விக்கு மெல்லிய புன்னகை பூத்த வெண்பா, “அம்மா இந்த வேலை அவரோட லட்சியம் கனவு ஆசைனு சொல்லலாம். இன்னும் சாதிக்கணும் நினைக்குற மனுஷன் மா அவரு.அதுனால என் புருஷன் லட்சியம் தான் எனக்கு முக்கியம்” என அவளே மேலும் தொடர்ந்தாள்.

“நாங்க பக்கத்துல இல்லாட்டியும் மனசுளவுல ஒன்னு தான்.இனி இதையே திரும்ப திரும்ப கேக்காத” என பட்டென்று கூறியவள், தனது தொலைபேசியை எடுத்து சூர்யாவிற்கு அழைத்தாள்.

“டேய் சூர்யா,எங்க வரிங்க ம்ம் சீக்கிரம் வாங்க” என தொலைபேசியை அணைத்துவிட்டு திரும்பியவளின் மழலை அழுகையின் இசை செவியை தீண்டும்முன்பே அங்கிருந்து நகர்ந்தாள்.

சிறிது நேரத்தில் சூர்யாவின் கார் வெண்பாவின் வீட்டின் முன்புவந்து நின்றது.

காரிலிருந்து முதலில் இறங்கி சூர்யா கைகளை மேலே நீட்டி உடலை வளைத்து நெட்டிமுறித்தான்.

“மச்சி இறங்குடா” என கூறியபடியே மாதவனும் சூர்யா போன்று நெட்டி முறிக்க அவனைக்கண்ட சூர்யா,
“தூ கார்ல ஏறுனதுல இருந்து என்னமோ நாய்போல விழுந்தடிச்சு தூங்கிட்டு வந்து நெட்டியா முறிக்குற.மவனே கொண்ணுறுவேன் ஒழுங்கா அவனை கூட்டிட்டு உள்ள வா” என சீரிய சூர்யா,காருக்குள் அமர்ந்து நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த ராமை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

சூர்யா கூறியபடி காரிலிருந்து இறங்கிய ராம், காரில் சயந்தபடியே எதிர் வீட்டை பார்த்தவாறு நின்றான்.

“என்ன மச்சி பக்கத்து வீட்டை அப்டி பார்க்குற, அங்க ஏதும் பொண்ணு நிக்குதா என்ன?” என்ற மாதவனுக்கு,
“இங்க வாயேன் நான் காட்டுறேன்”

“இதோடு வரேன்” என தன்னருகில் வந்த மாதவனின் கழுத்தை முழங்கையால் வளைத்து பிடித்தபடியே, “பொண்ணுனு சொன்னா பல்லை காட்டிட்டு வர,இனிமே இப்படி கேட்ட பல்லு இருக்கும் ஆனால்” என நிறுத்த,

“மச்சி மச்சி” என மாதவன் கத்த, இவர்களை காணாமல் தேடிவந்த சூர்யா,

“டேய் மாடே வீட்டுக்குள் வா,புது மாப்பிள்ளையா ஆர்த்தி எடுத்து அழைக்க அட சீ வாங்க” என பொங்கிவிட்டு சென்றான்.

மாதவன் கழுத்தை விட்ட ராம், “உன் நண்பன் ரொம்ப பேசுறான்.ஐயாவுக்கு இருக்கு, உனக்கும் தான்” என இவனையும் சேர்த்து தரதரவென உள்ளே இழுத்து சென்றான்.

மூவரையும் கண்டதும் இன்ப முகமாக வரவேற்ற வெண்பாவின் மாமியார், “வாங்க பா,மூணு பேரும் எப்டி இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே இருமியபடியே வீரப்பன் அங்கு வந்தார்.

‘வீரப்பன் பெயர் வச்சா எப்ப பாரு மீசையை திருகிக்கிட்டே வரது.ஒருநாள் கண்டிப்பா அந்த மீசையை பத்த வைக்கல நான் மாதவன் இல்லையாக்கும்’ என மனதுக்குள்ளே பேசிய மாதவன் வெளியில் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டான்.

மாதவனின் அருகில் நின்ற ராம், “மச்சி உன் மனசில பேசுனது எனக்கு கேட்டுருச்சுடா. அப்டி பத்த வச்சா கருகி போய்டும்டா” என மெதுவாக கூறினான்.

“மச்சி மெதுவா பேசுடா, சந்தனக்கட்டை காதுல விழுந்துச்சு நம்மள கருகிபுடுவாறுடா” என மாதவன் கண்களால் ராமிடம் கெஞ்சினான்.

இவர்கள் உரையாடல்கள் அருகில்நின்ற சூர்யாவின் காதில் விழுந்ததால் இருவரையும் முறைத்துவிட்டு,“நல்லா இருக்கோம் அத்தை,எங்க அக்கா,அம்மா எல்லாம் காணாம்?”என்று கேட்டவனுக்கு,
“அண்ணனுக்கு செக்அப் இன்னைக்கு அதான் ரெண்டு பேரும் அண்ணன்கூட போயிருக்காங்க” என போதும் பொண்ணு கூறினாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க,வெண்பா வந்ததும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்ற வீரப்பனுக்கு,
“சரிங்க அங்கிள்” என மாதவன் தானாக முன்வந்து சிரித்தபடிக்கூற,

“உன்கிட்ட தனியா பேசணும் அப்புறம் வச்சுக்குறேன், சண்டியராவா திரியுற” என வீரப்பன் ஒரு அணுகுண்டை போட்டதும் மாதவனுக்கு வயிறு கலங்கிற்று.

மாதவன் முகபாவனைக்கண்டு சிரிப்பை அடக்கிய ராம், “மச்சி ட்ரெஸ்ல போயிறாத, உன் சைஸ்க்கு இங்க ட்ரெஸ் இல்லை” என மெதுவாக அவனுக்கு கேக்கும்படி கூறியதும் தான் தாமதம் ஓட்டமும் நடையாக இவர்கள் எப்பொழுதும் வந்தால் தங்கும் அறைக்கு முதல் ஆளாக ஓடினான்.

யாரையும் கண்டுக்காமல் ராம் நேராக தன் அக்காவின் அறைக்கு சென்றவன், மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த தனது இரண்டு வயது மருமகனுக்கு முத்தமிட்டு அவனருகில் படுத்துக்கொண்டான்.

சூர்யா மட்டும் ஹாலில் தனித்து நின்றுக்கொண்டிருக்க,அவனையும் தன் கணவனையும் பார்த்த போதும்பொண்ணு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகன்றாள்.

“உக்காறு சூர்யா”

“ம்ம்,சொல்லுங்க அங்கிள் ஏதோ பேசணும் நீங்க சொன்னதா அக்கா சொன்னா.என்ன விஷயம்” என தங்களை வர சொல்லியதற்கான காரணத்தை நேரிடையாக வீரப்பனிடம் வினவினான்.

வீரப்பன் பதில் கூறுவதற்குள்,வெண்பாவின் கார் சத்தம் கேட்டதும் அமையாகினார்.

செல்வத்தை நகரும் நாற்காலியில் அமர்த்தியபடி பாக்கியவதியும் வெண்பாவும் வந்தன.
ஹாலில் சூர்யாவை மட்டும் கண்டு துணுகுற்ற வெண்பா,“வா சூர்யா,எங்க மத்த ரெண்டு பேரையும் காணாம்” என உள்ளே சென்ற குரலில் கேட்டாள்.

“மாதவன் ரூம்க்கு போய்ட்டான், ராம் உங்க ரூம்ல இருக்கான் அக்கா” என சூர்யா கூற்றைக்கேட்ட பிறகு தான் மூவருக்கும் நிம்மதி பிறந்தது.

“ராம் உண்மையிலே வந்தருக்கானா நான் போய் பாக்குறேன்” என்று செல்வத்தை அழைத்துக்கொண்டு நகர்ந்த பாக்கியவதியின் கால்கள் சூர்யா உரைத்தவற்றையால் அசைய மறுத்தது.

“இன்னுமா?” என துடிக்கும் இதழ்களோடு வினவிய பாக்கியவதிக்கு ஆமாம் என சூர்யா தலையசைத்தான்.

சூர்யா பதிலில் செல்வத்தின் கண்கள் கண்ணீரை சுரந்தது.

வீரப்பன் ஒன்றும்பேசாமல் அங்கிருந்து தன்னறைக்கு செல்ல, வெண்பா ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

பத்து நிமிடங்கள் மவுனமாக கழிய,வெண்பா தான் பேச்சை ஆரம்பித்தாள்.

“சரி டா இவனை இனிமே இப்படி விட்டா சரிவராது. நாங்க ஒரு முடிவு எடுத்துருக்கோம் அதுக்கு உங்களோட உதவி தேவை”
சூர்யா வெண்பா எதை கூறுவாள் என்றிந்தவனாய் அமைதி காக்க, “ராம் கல்யாணம் தவிர வேற எதுனாலும் நாங்க செயுறோம் அக்கா” என வெண்பாவிற்கு கூறியவாறு வந்த மாதவன் சூர்யாவின் அருகில் அமர்ந்தான்.

“மாதவா நீங்களே இப்படி சொல்லிட்டா?” என்ற பாக்கியவதிக்கு,

“அம்மா இன்னைக்கு எங்க உதவி கேக்குற நீங்க,அன்னைக்கு நாங்க சொல்லுறதை கேக்காமல் பண்ணிட்டீங்க.ராம் உங்களுக்கு மகனா இருக்கலாம்,ஆனால் அவன் எங்களோட நண்பன்.அன்னைக்கு உங்கனால அவன்பட்ட வலிக்கு சீக்கிரம் மருந்து போட நினைக்காதீங்க” என நீண்ட நாட்களாக மனதை அறித்தவற்றை முழுமூச்சாக பேசிவிட்டான்.

மாதவன் கூற்றும் தான் தன்னுடையதென என்பதுபோல சூர்யா வெறித்த பார்வையுடன் வெண்பாவை நோக்கினான்.

நீண்ட பெருமூச்சுவிட்ட வெண்பா,தனது தொலைபேசியை எடுத்து தனது கணவனுக்கு அழைத்து நடப்பவற்றை கூறினாள்.

அனைவரும் அவர்கள் எண்ணத்தில் இருக்க, வெண்பா தனது கணவனிடம்,
“ஏங்க நீங்க சொன்னா அவன் கேப்பான்”
“______”

வர வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரோம் சொல்லிட்டேன்

“________”
“பொண்ணு நமக்கு தெரிஞ்ச இடம்தான், ப்ளீஸ்ங்க நீங்க எப்படியாவது அவனை ஒத்துக்க வைக்கணும்”
——“
நீங்க எப்ப வரிங்க?”
________”
“சரிங்க நான் அப்புறம் பேசுறேன்” என தனது தொலைபேசியை அணைத்தாள்.

தெளிவான முகத்தோடு வந்த வெண்பா, “யாருக்கும் டென்ஷன் வேணாம்,அவர்க்கிட்ட சொல்லிட்டேன்.பார்த்துக்குவாறு,டேய் நீங்க ரெண்டு பேரும் எனக்காக கொஞ்சம் பேசி வர வெள்ளிக்கிழமை அவனை கூட்டிட்டு வரணும் ப்ளிஸ்டா” என இருவரை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.
“அக்கா,நாங்களும் உங்க தம்பிகள் தான்.உங்களுக்காக முயற்சி பண்ணுறோம் இப்படி கும்பிட்டு எங்களை அந்நியப்படுத்த வேணாம்” என சூர்யா உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்க,
“அதைவிடு மச்சி அந்நியம் சொல்லி சாப்பாட்டை ஞாபகப்படுத்திட்ட.அக்கா எனக்கு ஒரு ஆனியன் அம்பலேட்” என்று மாதவன் வயிற்றை தடவியபடியே கேட்டதும் சூர்யா அவனை குனியவைத்து குத்த ஆரம்பித்தான்.
“அந்நியம் சொன்னதும் ஆனியன் அம்பலேட் ஞாபகம் வருது உனக்கு” என சூர்யா அடித்துக்கொண்டே கேக்க,
“மச்சி,பசிக்குதுன்னு கேட்டா குத்தமா.அதுக்கு இப்படி குத்துணுமா” என மாதவன் பேச்சில் சிரித்த வெண்பா,
“போதும் விடு சூர்யா, வாங்க சாப்பிடலாம்” என கண்ணோரம் கசிந்து கண்ணீரை துடைத்தப்படியே சமயலறைக்கு சென்றாள்.

நடப்பவற்றை எல்லாம் பார்வையாளராக மட்டுமே ராமின் பெற்றோர்களால் காண முடிந்தது. காரணம் அவர்கள் செய்த கர்மவினையின் பலன்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இரண்டு நாட்கள் கடந்த நிலையில்,

உலகை அளந்த பெருமாளின் சிறப்பு மாதமாகிய புரட்டாசி மாதம் என்பதால் அதிக வெயிலிலும் இல்லாமல் சிறிது மழை சாளரலாக குளுமையாக இருந்தது.

சூரியன் தன் களைப்பை துயிலாக கழித்து, புதிய உற்சாகதோடு தவழும் குழந்தையை போல தவழ்ந்துக்கொண்டிருந்தான்.

இன்று முக்கியமான வேலை என்பதால் காலையிலே வேகமாக சுகந்தி கிளம்பிக்கொண்டிருந்தாள்.

சுகந்தி அறைவாசலில் மறைவாக நின்ற சுமதி சமையலறையில் இருக்கும் தனது அன்னைக்கு செய்கையில் ஏதோ சொல்லுவதை கவனித்த நவீன்,

“என்னடி சுண்டெலி அக்கா ரூம் வாசலில் நிக்குற,என்ன விஷயம்” என்று நவீன் சத்தத்தைக்கேட்டு சுகந்தி வந்தாள்.

சுமதியோ நவீனை முறைக்க, “எதுக்கு இங்க நிக்குற?,நானும் பார்க்குறேன் இரண்டு நாளா குட்டிப்போட்ட பூனைபோல என் பின்னால திரியுற” என தன் கையை கட்டிக்கொண்டு அறைகதவில் சாய்ந்தபடி கேட்ட சுகந்தியின் கேள்விக்கு சுமதி குனிந்தவாறே தலையை சொரிந்தாள்.
“இல்ல அக்கா…அது..அது” என சுமதி இழுக்க, இவள் கூறமாட்டாள் என உணர்ந்த பார்வதி அவளே முன்வந்து பேசினாள்.
“சுகந்தி மா உனக்கு ஒரு வரன் பார்த்துருக்கோம்.நல்ல இடம் எல்லாம் விசாரிச்சாச்சு,உன் கண்டிஷனுக்கு மாப்பிள்ளை ஒத்துகிட்டாரு.வர வெள்ளிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க” என கூறிவிட்டு தான் தன் மூச்சையே விட்டாள் பார்வதி.

பார்வதி பேச்சைக்கேட்ட நவீன் ஓரக்கண்ணால் தன் அக்காவை பார்த்தான்.

சுமதியும் பார்வதியும் தவிப்பாக சுகந்தியை நோக்க,சிறிதுநேரம் நெற்றியை நீவியபடியே சாமியறையில் உள்ள தன் தந்தை புகைப்படத்தின் முன்பு கைகளை கூப்பி அமைதியாக நின்றாள்.
சுமதி கண்களால் நவீனிடம் கெஞ்ச,அவனோ கண்களை மூடித்திறந்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

சுகந்தியின் தோள்தொட்ட நவீன், “அக்கா” என அழைத்ததும் கண்களை திறந்தாள்.

“சரி பார்க்க வரசொல்லுங்க,ஆனால் ஒன்னு இந்த வரன் அமையாட்டி இனிமே எனக்கு வரனே பார்க்கக்கூடாது.கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறத்தக்கூடாது” என்று தனது எண்ணத்தை கட்டளையாக கூறிய சுகந்தி மூவரையும் தீர்க்கமாக பார்த்தாள்.
சுகந்தியின் சம்மத்தத்தில் சந்தோஷமடைந்த மூவரும் அவளின் கடைசி வார்த்தையில் அதிர்ந்தனர்.
ஒரு பெண்ணிற்கு ஒருமுறை என்றால் பரவாயில்லை,நான்குமுறை திருமண ஏற்பாடாகி நின்றால் மனதளவில் அவள் எவ்வளவு வேதனையடைந்து இருப்பாள்.
சுகந்தி என்றும் தான் எடுத்த முடிவில் சற்று தளராதவள். அவளுக்கு கல்யாணம் என்ற பெயரில் நடந்த சம்பவத்தினால் அவள் எடுத்த முடிவு சரியென்று கூறினாலும் துணையில்லா ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சரியா? தவறா?..அவளின் தலைவிதி தான் வேறா? இல்லை மாற்ற முடியுமா அவளால்? காண்போம் அடுத்த பதிவில்….
பெண் பார்க்கும் படலத்துக்கு அனைவரும் வரணும், கேசரி வடை எல்லாம் உண்டு. வருக வருக…