கோடிடாத இடங்களை நிரப்புக-10

நிர்பபுக-10:
பெண் வீட்டிலிருந்து யாரிடமும் ஏதும் கூறாமல் கிளம்பிய ராம்,கால்போக்கில் செல்ல ஆரம்பித்தான்.
தன் இருகால்களும் வலியெடுத்த பின்புதான்,சாலையோரத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்தான்.அமர்ந்தவனின் சிந்தனை முழுக்க அவளின் தேவதையே நிரம்பியிருந்தாள்.

“கிருஷ் நீதான் எனக்கு எல்லாம்,நீ இல்லாம என் உயிர்கூட உன்னைவிட்டு போகாது”என அவள் கடைசியாக தன்னிடம் கூறிய வார்த்தைகள் அவன் இதயத்தை கூறாக அறுத்துக்கொண்டிருந்தது.

இவனை ஊர்முழுக்க காரில் தேடியலைந்த சூர்யாவும் மாதவனும் ஒருவழியாக வழியில் ராமை கண்டுபிடித்தனர்.

அவனைக்கண்டதும் நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

நீண்ட பெருமூச்சுவிட்ட மாதவன்,சூர்யாவின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு காரிலிருந்து இறங்கினான்.

‘ராம் உன்னை எப்படா பழைய ராமா பார்ப்பேன்.உன்னோட இந்த நிலைக்கு நானும் காரணமா போய்ட்டேன்ல,எனக்கு வலிக்குதுடா.கடவுளே ஏதாவது அதிசயம் நடந்து இவன் மாற மாட்டானா?’என வருத்தப்பட்ட சூர்யா தன் அலைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை பார்த்தான்.

இங்கு மாதவன் அழைப்பதைக்கூட கருத்தில் பதியாமல் ராம் தன் நினைவுகளிலே உழன்றான்.

“மச்சி ராம் டேய் ராம்”என மாதவன் ராமை உலுக்கவும் தான் நடப்பிற்கு வந்தான்.

“வா மச்சி கிளம்பலாம்,நேரம் ஆச்சு”என கூறிக்கொண்டே,

ராமை தூக்கி நிறுத்திய மாதவன், “ராம் நீ இப்படியே இருக்காதா டா.பயமா இருக்கு”என்றவனுக்கு,

“என்னடா மறுபடியும் சாக ட்ரை பண்ணுவேன் நினைக்குரியா.இரண்டு தடவை சாக போனதுக்கு தான் அவன் இன்னும் என்கிட்ட பேசாம இருக்கான்.என் உயிரே என்னைவிட்டு போயிருச்சு,இது வெறும் கூடுடா.அதுவும் அவனுக்காக தான் இருக்கு,இல்லாட்டி மண்ணுக்குள்ள போயிருக்கும்”என்று கூறியவனின் வார்த்தைகள் சூர்யாவின் செவியையும் வந்தடைந்தது.

தன் நண்பனின் கடந்தகால வாழ்க்கையில் நிகழ்ந்த துயரை நீக்கி அவனை பழைய நிலைக்கு போராட ஒருவன் முயன்றால்,தனக்காக நிறைய வலிகளை தாங்கி தன்னிடமே மவுனம் சாதிக்கும் நண்பனுக்காக உயிர் வாழ துடிக்கும் மற்றொருவன்.இவர்கள் எண்ணம் தான் பலிக்குமா? இல்லை நிரப்படாத இடங்கள் என்றும் நிரப்பாமல் போய்விடுமா?

இவனை ஏதாவது செய்து சந்தோஷமாக வாழவைக்க வேண்டும் என எண்ணத்தோடு இருப்பவனுக்கு தன் நண்பனின் வார்த்தைகள் அவனுக்கு உயிர்வரை சென்று வலித்தது. ஆனால் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் இயல்பாக முகத்தை வைத்திருக்க சூர்யா மிகவும் சிரமப்பட்டான்.
“மாதவா சீக்கிரம் வா போகணும்”என சூர்யா அழைக்கவும்,நண்பர்கள் இருவரும் காரில் அமர்ந்தனர்.

இருவரும் அமர்ந்ததும் காரை செலுத்திய சூர்யாவின் கரத்தினை ராம் சட்டென்று பிடித்தான்.

தன் நண்பனின் தொடுதலை உணர்ந்த சூர்யா அவனை ஏறிட, “எனக்கு அந்த வீட்டுக்கு போகணும்,மனசுக்குள்ள ஏதோ பண்ணுது சூர்யா”என கண்கள் நிறைய வலியோடு ராம் கெஞ்சலாக கேட்டான்.

தன் நண்பனுக்காக எதையும் செய்ய துணிந்தவனிடம் இவ்வாறு கெஞ்சலாக கேட்டால் அவன் மனம் தான் தாங்குமா என்ன?
தன் பெயரை நீண்ட நாள்களுக்கு பிறகு அவன் கூறகேட்டதும் சூர்யாவின் வீராப்பு,பிடிவாதம் எல்லாம் தூள் தூளாகியது.

உணர்ச்சிபெருக்கில் அமர்ந்தவாறே ராமை கழுத்தோடு இறுக்கி கட்டிக்கொண்ட சூர்யா ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்கவில்லை.ராமும் அவனை கட்டிக்கொண்டான்.எத்தனை நாட்கள் மாதங்கள் கடந்தது என தெரியவில்லை இந்த அணைப்பிற்கு,நிமிடங்கள் கரைந்தாலும் சூர்யாவை ராம் விடவில்லை.சூர்யாவின் அலைபேசி எழுப்பிய ஒலியின் சத்தத்தில் தான் இருவரும் விலகினர்.

இப்பொழுதாவது என்னிடம் பேசமாட்டாயா என்ற ஏக்கத்தோடு பார்த்த ராமிற்கு,எந்த உணர்வையும் காட்டது கார் ஓட்டுவதில் சூர்யா கவனமானான்.
‘இப்பவே உன்கிட்ட பேசிட்டா அடுத்து நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் ராம். கண்டிப்பா உன்னை அப்டி முடிவெடுக்க விட மாட்டேன்.நான் கொடுக்குற வலி உன்னோட கடந்த கால வலியை மறக்க வைக்கும் கண்டிப்பா’என மனதில் நினைத்தவனாக காரை தன் நண்பன் கூறிய இடத்திற்கு செலுத்தினான்.

இவர்கள் இருவரும் இவ்வாறு இருக்க,பின்னால் அமர்ந்திருந்த மாதவனுக்கு தாங்கள் மூவரும் நான்கு வருடங்களுக்கு முன்பு எவ்வளவு இன்பமாக இருந்தோம் என எண்ணியபடியே இருந்தான்.

மதகுப்பட்டியில்,

இரண்டு நாட்களாக,மருத்துவமனை வீடு என அலைந்துகொண்டிருந்த சுமதிக்கு இன்று தான் ஓய்வு கிடைத்ததால் கங்காவை பார்ப்பதற்காக அவளின் வீட்டிற்கு வந்தாள்.

கங்காவை தேடி அவளின் அறைக்கு வந்த சுமதி,அங்கு சோகமாக யமுனா அமர்ந்திருந்தப்பதை கண்டாள்.

“கங்கா எங்க அக்கா?”என்ற சுமதி கேள்வி கேட்பதைக்கூட கவனத்தில் கொள்ளாமல் தனது வயிற்றின்மேல் கைவைத்தபடி இருந்தாள்.

“அக்காஆஆஆஆ!”என சுமதி சத்தமாக அழைத்ததும் தான் யமுனா உணர்விற்கு வந்தாள்.

தன்னறையில் யமுனா சுமதியைக்கண்டதும்,
“வா சுமதி”என பெயரளவிற்கு அழைத்தவாறு புன்னகைத்தாள்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த சுமதி, “என்ன அக்கா பண்ணுறீங்க,குட்டி உள்ள உதைக்குறானா?”என கேள்விகேட்டபடி யமுனாவின் அருகில் அமர்ந்தாள்.

“சும்மா தான் இருக்கேன்”என கூறியவாறு மீண்டும் தனது மணிவயிற்றை தடவினாள்.

தனது குழந்தையின் பரிசத்தை உணர்ந்த யமுனா,வழக்கமாக ரசிப்பதை மறந்து கண்ணீர் வடித்தாள்.

யமுனாவின் கண்ணீரை கண்ட சுமதி, “அக்கா என்ன ஆச்சு? வலி எடுக்குதா நான் போய் அப்பத்தாவை கூட்டிட்டு வரேன்”என யமுனாவின் பதிலைக்கூட எதிர்பாராமல் அறையிலிருந்து ஓடினாள்.

சுமதி கூறுவதைக்கேட்டு பதறியபடி ராசியம்மாளும் கங்காவும் யமுனாவை தேடி ஓடிவந்தனர்.

“ஆத்தா என்ன பண்ணுது”என ராசியம்மாள் ஒருபுறமும்,
“யமுனா இடுப்பு வலிக்குதா?”என கங்கா மறுபுறமும் மாறிமாறி விசாரிக்க,யமுனா ஒன்றுமில்லை என கூறினாள்.

“ஆத்தா தங்கம் பிள்ளையை வயிற்றில் வச்சுட்டு மனசுல புழுங்கி கிடைக்காத.என் ராசாத்தி,வாழ்க்கைனா அப்படித்தான் எல்லாம் சரியாகும்.நீ சத்த தூங்கு,அப்பத்தா மதிய சோறு ஆக்கிட்டு கூப்பிடுறேன்”என ராசியம்மாள் தனது பேத்திக்கு அறிவுரை கொடுத்துவிட்டு,சத்தமில்லாமல் புலம்பியபடியே வேலையை கவனித்தாள்.

நடப்பது ஒன்றும் புரியாமல் சுமதி கங்காவின் முகம்நோக்க, அவளோ கூறுகிறேன் என கண்களை மூடித்திறந்து யமுனாவின் கூட சிறிதுநேரம் கழித்துவிட்டு சுமதியோடு வெளியில் கிளம்பினாள்.

அந்த ஊரிலுள்ள குளத்தின் ஓரத்தில் அரசமரமும் ஆலமரமும் சேரந்தாற்போல் இருக்கும்.அந்த இருமரத்தின் நடுவில் பிள்ளையார் சிலையும் நாக சிலையும் வைக்கப்பட்டிருக்கும்.மழை காலம் மட்டுமே குளமாக காட்சியளிக்கும் அவ்விடம் மற்ற காலங்களில் வறண்டு புதர் மண்டி கிடக்கும்.

சுமதிக்கும் கங்காவுக்கும் அந்த குளத்து மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவது வழக்கமில்லை.ஆனால்,தனியாக மனம்விட்டு பேசுவேண்டுமென்றால் மட்டுமே இங்கு வருவர்.

வந்ததிலிருந்து கங்கா மவுனமாக இருப்பதால் பொறுமையிழந்த சுமதி,“என்ன கங்கா,அன்னிக்கு ஹாஸ்பிடல் இருந்து வந்ததிலிருந்து நீ போன் கூட பண்ணல.சரி நான் எவ்வளவு தடவை போன் பண்ணேன் அட்டென் பண்ணவேல்லை”என இருநாட்களாக கங்கா தன்னிடம் பேசுவதை தவிர்ப்பதை சுமதி கேட்டாள்.

“பச் எனக்கு எதுவுமே பிடிக்கல சுமதி.ஏன் நான் பொண்ணா பிறந்தேன்.அதுனால தான எங்க அப்பன் ஓடி போனான் சா என்ன வாழ்க்கை”என கங்கா புலம்பியதும் சுமதி தன் இருகண்களை அகலமாக விரித்தாள்.

“இது கனவா,நீயா டி இப்படி பேசுற.பொண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன் சொல்லுவ. அப்டி என்ன நடந்துச்சு இந்த இரண்டு நாள்ல”என கங்கா எப்போதும் இவ்வாறு புலம்பியதை கேக்காத சுமதி அவளிடமே அவளின் புலம்பலுக்கு என்ன காரணம் என்றுவறிதற்கு கேட்டாள்.

“நான் என்ன பெரிய ஆளா”என கங்கா மேலும் சலித்துக்கொள்ள,
“இந்தாடி நீ இப்ப சொல்ல போறியா இல்லையா. நான் வேற உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்,நீ சீக்கிரம் சொல்லேன்”என சுமதி கங்காவை அவரசப்படுத்தினாள்.

“நீ என்னத்த சொல்ல போற,உன் வீட்டு கவலையை சொல்லுவ அதானே.எப்ப பாரு ஒரே புலம்பல் சுமதி நம்ம வாழ்க்கை”என கங்கா மேலும் சலித்துக்கொள்ளவதை பொறுக்காத சுமதி,

“அப்டியே வச்சேன் வச்சுக்கோ எருமை மாடு.வர வர நவீன் போல பண்ணுறடி,பன்னிக்குட்டி.சொல்லி தொலையேன் எருமை எருமை”என கத்த தொடங்கினாள்.

“அது நேத்து யமுனா மாமி வருதுன்னு நான் சீக்கிரம் போனேன்ல”என கங்கா பேசும்போது சுமதியை பார்க்க,அவளோ இவளை முறைத்தாள்.

“நான் என்ன குழந்தையா,அட சீ பக்கி நேரா விஷயத்துக்கு வா”என சுமதி கங்காவை திட்ட தொடங்கவும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தவற்றை கூறினாள்.

கங்கா கூறுவதைக்கேட்ட சுமதி நம்பாத பார்வையாக கங்காவை பார்த்தாள்.

“என்ன சொல்லுற அந்த குண்டு கிழவி அப்படியா சொல்லுச்சு”என்றவளுக்கு,

“ஆமாம் சுமதி,அது எங்கேயோ குறி பார்த்துச்சாம்.அதுல அக்காக்கு பொம்பளை பிள்ளை பிறந்தா என் மாமா ஓடி போயிருவாராம்,அதுனால ஆம்பளை பிள்ளை பெத்துக்கொடுத்துருன்னு கண்டிப்பா சொல்லிட்டு போகுது.

நீயே சொல்லு சுமதி,பிள்ளை பிறக்குறது நம்ம கையிலா இருக்கு.குறி ஜோசியம்னு பார்த்தது மட்டுமில்லாம பாவம் பிள்ளைத்தாச்சி மனசை புண்ணாக்குது”என கங்கா ஆதங்கப்பட்ட்டாள்.

“நீ ஒன்னும் சொல்லலையா”என சுமதி கேக்க,

“சொல்லாம இருப்பேனா,எந்த பிள்ளைனாலும் ஒன்னு தான் அத்தை. பெத்துக்க போற என் அக்காவை கஷ்டப்படுத்தாதீங்க.ஆணோ பொண்ணோ தான் முடிவு பண்ண நம்ம கடவுள் இல்லைனு சொன்னேன்”

“அதுக்கு என்ன சொன்னா?”

“என்ன சொல்லும்,அது உங்க குடும்ப ராசி.நீங்க பொண்ணா பிறந்தனால உங்க அப்பன் ஓடிப்போன மாதிரி என்மகன் ஓடிப்போன நான் என்ன பண்ணுவேன்.உன் அப்பத்தா போல நான் என்ன மடச்சியா,உங்களை வச்சு வளக்குற மாதிரிஎல்லாம் இருக்க மாட்டேன் கள்ளிப்பால வச்சு முடிச்சுட்டு போயிருவேன் சொன்னதும் யமுனாவுக்கு எங்க இருந்து கோவம் வந்துச்சு தெரியலடி”என கங்கா கூறும்போது,
“என்னது யமுனா அக்கா கோவப்பட்டங்களா?”என சுமதி அதிர்ச்சியாக வினவ,

“உன்னைப்போல தான் நானும் ஷாக் ஆனேன்.நல்லா சொன்னாடி,உங்களுக்கு மருமகள் நான்தான் என் குடும்பமே இல்லை.இதுவரை என்னையும் என் தங்கச்சியும் சொன்னிங்க பொறுத்துகிட்டேன் இப்ப என் அப்பத்தாவையும் பேச ஆரம்பிச்சுட்டீங்களா.எங்க அப்பா பொறுப்பில்லாம ஓடிபோனாரு உண்மை தான்,ஆனால் என் புருஷன் அப்படியில்லை.பிறக்காத பச்சமண்ணை கொல்லுவேன்னு பேசுறீங்க அதுவும் என்கிட்டையே பார்த்து பேசுங்க,என் பிள்ளைக்குன்னா நான் யாரையும் சும்மா விட மாட்டேன்.என் அப்பத்தா எங்களுக்கு குலசாமி போல,தயவுசெய்து இப்படி பேசாதீங்கனு நச்சுன்னு சொல்லிட்டா”என கங்கா சொன்னதும் சுமதி கைதட்டினாள்.

“அக்கா செம இப்பதான் நல்ல பார்ம்ல இருக்காங்க”என சுமதி பெருமையடைய,

“இல்ல சுமதி,இது நல்ல விஷயமில்லை டி.என் அக்கா அந்த கிழவியை எதிர்த்து பேசுனதை மாமாக்கிட்ட ஒன்னுக்கு இரண்டா போட்டு கொடுத்துருச்சு”என கங்கா கடுப்போடு கூறினாள்.
“மாமா அதை நம்ப மாட்டாரு கங்கா,நீ கவலைபட வேணாம்”
“நானும் உன்னைப்போல தான் நினைச்சேன்.ஆனால்,அவரு மறுநாளே வந்து யமுனாக்கிட்ட நல்ல சண்டை போட்டு போயிட்டாரு.கொஞ்சம் கூட யமுனாவை பேசவே விடல.நேத்திலிருந்து அதான் அவள் அழுதுட்டே இருக்கா”

“என்ன கங்கா,இப்படி ஷாக் மேல ஷாக்கா கொடுக்குற.அவர் என்ன லூஸா டி,பொண்டாட்டி சொல்லுறதை கேக்க மாட்டாரா”என சுமதி கொதிப்புடன் பேச,
“ஆம்பளைங்க எல்லாரும் ஒண்ணுடி.அவங்க காரியம் ஆகணும்னா இறங்கி வருவாங்க,ஆனால் அவங்களோட சுயநலத்துக்கு எப்பவும் நம்மளும் அடிமையா இருக்கணும் நினைப்பு”என கங்கா பல்லை கடித்தபடி வெறுப்பாக பேசினாள்.

சுமதி ஏதும் கூறுவாள் என நினைத்த கங்காவிற்கு அவளின் அமைதி யோசிக்க வைத்தது.

“என்னடி அமைதியா இருக்க?ஆமாம் நீ என்னமோ சொல்லணும் சொன்ன என்னது?”என கங்கா தன் புருவத்தை உயர்த்தி கேக்க,

“இந்த நேரத்தில் சொல்லாம தெரியல”என தயங்கிய சுமதி,மனதில் முடிவுஎடுத்தவளாக தான் கூற ஆரம்பித்தாள்.

சுமதியின் முக பாவனைகளை கவனித்த கங்கா,அவள் எதை கூற போகிறாள் என்பதை உணராவிட்டாலும் யாரைபற்றி கூறுவாள் என சரியாக கணித்தாள்.

“அது வேந்தன்க்கிட்ட பேசுனேன் கங்கா,உனக்காக தான்”என சுமதி மென்று முழுங்க,

வேந்தன் என்றதும் கங்காவின் முகம் ரௌத்திரமானது.

“நீயா பண்ணியா? அவன் பண்ணானா?”என கங்கா தீர்க்கமான குரலில் கேக்க,

“யார் பண்ணா என்னடி.ஆனால் அவர் சொன்னது தான் முக்கியம்”என கூறவந்த சுமதியை பேசுவிடாமல் தடுத்த கங்கா,

“அப்ப நீ தான் பண்ணிருக்க,அப்டி என்னடி அவனுக்கு திமிரு.காதல் சொல்ல தெரிஞ்சவனுக்கு காப்பாத்த தைரியமில்லை.அவனை பத்தி இனிமே என்கிட்ட பேசாத”என ஆவேசமாக எழுந்த கங்கா,சுமதியை முறைத்துவிட்டு தனது நடையை கட்டினாள்.

“ஏய் நான் சொல்லுறதை கேளுடி தயவுசெய்து கேளுடி”என கூறிய சுமதியின் வார்த்தைகள் காற்றில் தான் கலந்தது.
சுமதி கூறுவதைக்கேட்டு தனது மனதை மேலும் ரணப்படுத்த விரும்பாமல் கங்கா அங்கிருந்து வேகமாக சென்றாள்.

சுமதி கூறுவதை கங்கா சில நொடிகள் ஒதுக்கி கேட்டிருந்தால் பின்னால் அனுபவிக்கும் வலியிலிருந்து தப்பி இருப்பாள்.சுமதியாவது கங்காவிடம் வற்புறுத்தி கூறியிருந்தால் அவளுக்கு ஏற்பட இருக்கும் கலங்கத்தை தவிர்த்து இருப்பாள்.
சுகந்தி இல்லத்தில்,
சுகந்தி சுவாதியின் மகள் அகல்யாவை மடியில் வைத்தபடியே உறங்க வைத்துக்கொண்டிருந்தாள்.
இதுநாள்வரை கல்யாணத்தை வெறுத்தவளுக்கு தன்னுள்ளும் தாய்மை வெளிப்படவும் தான் எதையெல்லாம் இழந்துள்ளோம் என்ற சிறு வருத்தம் அவளின் மனதில் உதித்து மறைந்தது.

“மெத்தையில படுக்க வை அக்கா,அவளை ஏன் மடியிலே வச்சிருக்க?”என கேட்டவாறு குளித்துமுடித்து வந்த சுவாதியின் முகத்தை சுகந்தி பார்த்தாள்.

“என்ன அக்கா அப்டி பார்க்குற?”என கேட்டவாறு சுவாதி கண்ணாடிக்கு முன்சென்று குங்குமத்தை எடுத்து நெத்திவகிட்டில் இட்டுக்கொண்டாள்.

“இல்லை இரண்டு நாளா உன்னை சரியா கவனிகல.இப்ப தான் பார்க்குறேன்,ஆளே மாறிட்ட சுவாதி”என சுகந்தி கூறியதும்,சுவாதி சிரித்தாள்.

“ஆறு வருஷம் ஆச்சு அக்கா,காலேஜ் பொண்ணாவா இப்பவும் இருப்பேன்”என்றவளுக்கு,

“அது உண்மை தான்,அதுஎன்ன நெத்தில் குங்குமம் எல்லாம் வைக்குற?”என சுகந்தியின் கேள்விக்கு அவளை புரியாமல் நோக்கிய சுவாதி,

“அக்கா எனக்கு கல்யாணம் ஆச்சு அதான் வைக்குறேன்”என உள்ளே சென்ற குரலில் கூறினாள்.
“அப்படியா எங்கமா உன் புருஷன்?,என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கு இடையில”

“தயவுசெய்ஞ்சு அதைமட்டும் கேக்காத”என சுவாதி கெஞ்சலாக கேட்டதும் அதற்குமேல் சுகந்தி அவளை வறுப்புறுத்தவில்லை.

குழந்தை நன்கு உறங்கியதால் அவளை மெத்தையில் படுக்கவைத்துவிட்டு எழுந்து தன் உடையை சரிசெய்த சுகந்தி, “அம்மா உன்னை மன்னிக்காட்டியும் நல்லா கவனிக்குறாங்க.என்கிட்ட எதுனால இங்க வந்த என்ன பிரச்சனைனு கேக்குறாங்க நான் என்ன சொல்லட்டும்.ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த வாழ்க்கையை ஏதோ காரணத்தினால் இழந்துராத”என கூறிவிட்டு தங்கள் கடைக்கு கிளம்பி சென்றாள்.

தன் அக்கா சென்றதும் அவள் கூறிய வார்த்தைகளை செவிமடுத்த சுவாதி, “நான் இன்னமும் இழக்க என்ன அக்கா இருக்கு.இழந்துட்டேன் எப்பவோ அதான் உங்களை தேடி வந்தேன், இனிமே எனக்கு என் பிள்ளைகள் மட்டும் போதும்”என தானாக பேசிக்கொண்டிருந்தவளின் வார்த்தைகள் வலியை சுமந்து இருந்தது.

மதுரையில்,

பெண் பார்க்க இடத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை பொறுக்க முடியாமல் வெண்பாவின் மாமியார் இரண்டு நாட்களாகியும் அவளை வறுத்துக்கொண்டிருந்தாள்.

“என் பெரியம்மா வழி சொந்தமுன்னு உங்க பேச்சைக்கேட்டு பொண்ணு பார்க்கபோய் இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்குறேன்.அவனுக்கு கல்யாணம் வேணாம் சொன்னா விடாம எதுக்கு உனக்கு வேண்டாத வேலை”என போதும்பொண்ணு சாடலை கண்டும் காணாமல் சமையலறையில் தன் மகனுக்காக பால் காய்ச்சி கொண்டிருந்தாள்.

வெண்பாவின் பெற்றோர்கள் இருவரும் போதும்பொண்ணு கேக்கும் வசவு வார்த்தைகளை அனுபவிப்பதை தவிர இருவருக்கும் வேறு வழியில்லை.

வீரப்பனும் தன் மனைவியை பேசவிட்டு, அமைதி காத்தார்.

“அம்மா நிறுத்துறியா!”என்ற அதிகார குரல் வீட்டு வரவேற்பறையில் இருந்து கேக்கவும் போதும்பொண்ணு தன் பேச்சை நிறுத்தினாள்.

குரலைக்கேட்டு கூடத்திற்கு விரைந்து வந்த வெண்பா,கையில் பெட்டியோடு வெண்பாவின் கணவன் பிரபாகரன் நின்றுக்கொண்டிருந்தபதைக்கண்டு வியந்தாள்.

தன் கணவனைக்கண்டதும் இதுவரை வாடியிருந்தவளின் முகம் மலர்ந்தது.
“வாங்க,என்னங்க நீங்க சிங்கப்பூரில இருந்து வரேன்னு சொல்லவே இல்லை”என அவன் கையிலிருந்த பொருட்களை வாங்கியபடியே நலம் விசாரித்தாள்.

“சடன்ஆ சர்பைர்ஸ் பண்ணலாம் நினைச்சேன்”என தன் மனையாளிடம் கூறியவன்,கோவமான முகத்தோடு தன் தாயிடம் சென்றான்.

“ஏன் மா அவளை இப்படி திட்டிட்டு இருக்கீங்க?அவளை பார்த்தா பாவமா இல்லை.எதுக்கு வெண்பாவை சத்தம் போடுற சொல்லுமா”என பிரபாகரன் சற்று எரிச்சலோடு தன் தாயிடம் வினவ,

“டேய் என்னது வந்தது வராததுமா உன் அம்மாவை எல்லார் முன்ன கேள்விகேட்டுட்டு இருக்க,உள்ள போடா”என வீரப்பன் கூறும் வார்த்தைகளை பிரபாகரன் கொஞ்சம்கூட காதில் வாங்கவில்லை.

“இங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லுறேன்.நான் கூட இல்லைன்னு அவளை ஏதாவது சொன்னிங்க”என பிரபாகரன் அதிகாரமாக கத்தவும்,

தன்னை எல்லோர் முன்னிலையில் அவமதிக்கும் மகனின் வார்த்தைகள் தன்னை சுட்டதும் ஆத்திரமடைந்த வீரப்பன், “என்ன பண்ணுவ டா?”என மல்லுக்கு நின்றார்.

பிரபாகரன் சிறுவயதிலிருந்தே தனது பெற்றோர் நிழலில் வளராதவன்.பள்ளி முதல் கல்லூரி வரை விடுதியில் தங்கி படித்ததால் தாய் தந்தை கூட நல்லுறவு அவனிடம் இல்லை.

நடக்கும் விபரீதத்தை உணர்ந்த வெண்பா,”மாமா அவரு ஏதோ கோவத்துல பேசுராறு.எனக்காக நீங்க உள்ள போங்க மாமா”என வேண்டவும்,
இதை தான் எதிர்பார்த்தேன் என்ற ரீதியில் வீரப்பன் மீசையை முறுக்கியபடியே தன்னறைக்கு சென்றார்.

“ஏப்பா”என பேசவந்த தாயை பொருட்படுத்தாமல் பிரபாகரன் வெண்பாவை அழைத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.

தன் மகளுக்கு ஆதரவாக மாப்பிள்ளை பேசுவதை நினைத்து வழக்கம் போல பாக்கியவதியும்,செல்வமும் நிம்மதியடைந்தனர்.

இந்த கதையின் மாந்தர்கள் எவை தன்வழியென்று என்று அறியாமல் பயணித்து கொண்டிருந்தவர்களை விதி கோர்த்து விட தயாராக தொடங்கியது.