கோடிடாத இடங்களை நிரப்புக- டீசர்

கோடிடாத இடங்களை நிரப்புக…
கோடிட்ட இடங்களை நிரப்புக னு ஆரம்ப கால பள்ளித்தேர்விலிருந்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று. விடுபட்ட வார்த்தையினால் ஒரு வாக்கியமே முழுமையடையாமல் அர்த்தமற்று தொக்கி நிற்கும் அதுவே கோடிட்ட இடங்களை நிரப்புக. அப்போ கோடிடாத இடங்களை நிரப்புக என்றால் என்னவாக இருக்கும் என்பதே கேள்வி. என் கதையில் வரும் மாந்தர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளில் சிக்கிக்கொள்ளுவர்களுக்கு எந்த விடுபட்ட இடமும் விதி அளிக்கவில்லை. அவர்களே அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து நிரப்பி அர்த்தமுள்ளதாக மாற்ற போராடுவதே இந்த கதையின் தலைப்பிற்கான விளக்கம்.

டீசர்:
“பொண்ணை அழைச்சுட்டு வாங்க மா. மாப்பிள்ளை ரொம்ப ஆர்வமா இருக்காரு” என்று ஒரு மீசைக்காரர் நக்கலாக சிரித்தபடியே கூற, அவரின் கூற்றில் அந்த மாப்பிள்ளைக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“இதோ போங்க மா, அவளை அழைச்சுட்டு வாங்க” என்று பெண்ணின் தாயார் மகிழ்ச்சி பொங்கக்கூறிய அதேநேரம் அவளின் மகிழ்ச்சியை துடைத்து எடுக்கவே வீட்டின் வாசலில் நின்றவளைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
வீடு வாசலின் நின்றவளின் ஒப்பாரியில் மணபெண்ணாக அறையில் இருந்தவளின் செவியில் விழுந்த நொடியில் பதப்பதைக்கும் உள்ளத்தோடு ஓடி வந்தாள்.
“ஏன் டா நாங்க உன்னை எவ்வளோ சொல்லுறோம் கேளு மச்சி. காதல் வார்த்தைக்கு அர்த்தமில்லாத காதல் டா உன்னோடது. நீ பண்ணுறது சரியில்ல பார்த்துக்கோ” என்றவன் தன் நண்பனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் போதே, கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை அவன் சட்டென்று குடித்தான்.

அவன் எதை அருந்தினான் என்று அந்த மருந்தை வாங்கி ஆராய்ந்த நண்பனுக்கு தூக்கி வாரிபோட்டது.
விஷம் குடித்தவனை இழுத்து அறைந்தவன் அதே வேகத்தில்அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓட, அவனின் பின்னே மற்ற நண்பர்களும் ஓடினர்.

“இந்த வருஷம் ஆச்சும் எக்ஸாம் சமயத்தில் மழை வராம இருக்கணும். என்ன சொல்லுற நீ” என்றவள் பேசிக்கொண்டே வர அவளின் அருகில் வந்த அவளின் தோழி ஏதோ பித்து பிடித்தவள் போன்று வந்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு?” என்று வினா எழுப்பியபடி அவளை உலுக்க, அவளோ இவளை கட்டிக்கொண்டு அழ தொடங்கினாள்.
“ஏய் எதுக்கு இந்த கண்ணீர்” என்றவளுக்கு அழுகையை நிறுத்தியவள், “ நிஜத்தை புரிஞ்சுக்கிட்டேன் அழுதேன் அவ்வளவு தான்” என்று கூறிவிட்டு அவள் நடையை கட்ட அதனைக்கேட்டவளுக்கு உண்மை புரிய அவளின் பின்னே அமைதியாக சென்றாள்.