குழலி- 11

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 11

இரவு எல்லோரும் தூங்கியதும் மெதுவாக படிக்கட்டில் இறங்கி    மனைவியின் அறைக்கு வந்தான் பழனி.

குழலி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .நேரம் இரவு பன்னிரண்டு நாற்பது.மனைவிக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டு அவள் வயிற்றில் மெதுவாக தொட்டு பார்த்தான்.

“அத்தான் நீங்க பாப்பாவை தொட்டு பார்க்கிற போல இருக்கு” என்றாள் தூக்கத்தில் இருந்த குழலி.

“அடி  பாவி ஆழ்ந்த தூக்கத்துல கூட என்னையும் என்   தொடுகையையும்   உணர்ற  உன்னால எப்படி என்னை  விட்டுட்டு இருக்க முடியும்?அப்புறம்  எப்படி  டிவோர்ஸ் வரைக்கு போன என் லூசு பொண்டாட்டி..”

“பாப்பா அப்பா உங்களை தொட்டு பாக்கிறது உங்களுக்கு தெரியுதா.கொஞ்ச நாள் தான்டா… அப்பா உங்க கூட வந்திடுவேன் சரியா. உங்கம்மா என் மேல கோபமா இருக்கா.  சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். நீங்க நல்லா தூங்குங்க” என்று உள்ளிருக்கும் பிள்ளையுடன் மெதுவாக பேசிக் கொண்டான்.

“சாரி அத்தான்….நானும் பாவம் நீங்களும் பாவம் தான்.  என்ன பண்ண சொல்லுங்க.உங்கம்மா எப்பவும் எங்களை சந்தோசமா வாழ விடமாட்டாங்க.அது தான் நாங்களாவே பிரிஞ்சு இருந்துப்போம்   சரியா…ஆனா இப்போ உங்களை கட்டிக்கணும் போல தோணுது என்ன பண்ண….” 

“அடி பைத்தியமே தூக்கத்துல புலம்பும்  வியாதி வேற இருக்கா உனக்கு” என்றபடி மனைவியை இறுக்கி கட்டிகொண்டான்.

“தேங்க்ஸ் அத்தான்….இன்னும் நல்லா என்னை கட்டிக்குங்க….” என்றபடி அவன் மார்போடு ஒட்டிக் கொண்டாள்.

“இன்னைக்கு காலைல உங்கள பார்த்தப்போ சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சு. உன் புருஷன் சூப்பரா இருக்கான்டி   குழலின்னு கூட நினைச்சேன்.கெத்தா   மீசை  வச்சு பாக்குறதுக்கு சும்மா ஹீரோ போல் இருந்தீங்க.அப்படியே நீங்களும்  நானும் மட்டும் எங்கயாவது  தூரமா ஓடி போய்டலாமா ன்னு  கூட நினைச்சேன். ஆனா அதுதான் முடியாதே.

“ஆனாலும்  என்னை  மறந்து ஓடி வந்து உங்களை  வந்து கட்டிகிட்டேன். எதுக்கு உங்கக்கான்னு சொன்னீங்க? அதுக்கு உங்க மேல  செம கோபமா இருக்கேன்.பட்டுக்குழலின்னு என்கிட்ட சொல்லுங்க இப்ப.

 “சரி பட்டு குழலி..”

“அப்புறம் தான் நான் உங்களை வேணான்னு  நோட்டீஸ் அனுப்பிட்டேனே. அதுதான்  கில்ட்டியா பீல் பண்ணி உங்க கிட்ட சண்டை போட்டேன்.சாரி அத்தான்.நான்  சொல்றது புரியுதா?”   

“ நல்லாவே புரியுது….என்னை  விட்டுட்டு  இருக்குற ஆளா நீ ?

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஆமா  இதெல்லாம் உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு …” கண்ணை மூடி கொண்டு   புன்னகையுடன் பதில் சொன்னாள் .

“நீங்க கேட்டப்போ நானும் உங்க கூட துபாய்க்கு வந்திருந்தா இதெல்லாம் வந்திருக்காது தானே சாரி..”  

‘விட்டா தூக்கத்திலேயே குடும்பம் நடத்திடுவா போல. எல்லாத்தையும்  மனசுக்குள்ள வச்சுக்கிட்டு  என்னை விட்டு தனியா இருந்திடுவாளா  இவ’. 

“அத்தான்  நான் உங்கள வேணான்னு சொன்னாலும் நீங்க என்னையும் பாப்பாவையும் கூட இருந்து  பாத்துக்கணும் சரியா…”

“சரிடி  நல்லா பாத்துக்கறேன்… அப்புறம் வேற என்ன சொல்ல போற?

“வேற என்ன… ஆஹ்… துபாயிலிருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?

“ஒரு பெட்டி நிறைய  உனக்குத்தான் கொண்டு வந்திருக்கேன்.  நீதான் என்னை வீட்டுக்குள்ளயே விடலயே?

“அதுக்கு…..  உள்ள விடாட்டி என்ன….. என்னோட பெட்டிய  என்கிட்ட கொடுத்துட்டு   போயிருக்க வேண்டியது தானே நீங்க?

“ஏன் சொல்ல மாட்ட….. அது என்னடி நான் வேணாம்….. நான் கொண்டு வந்த பெட்டி மட்டும்  வேணுமா உனக்கு ? 

“ஏன் நீங்க தானே சொன்னீங்க? போன நாளிலிருந்து லிஸ்ட் போட்டு அனுப்பு. அப்பதான் நான் வர்றப்போ வாங்கிட்டு வரச் சரியா இருக்கும்னு. அதுதான் நாளுக்கு ஒரு ஐட்டமா அனுப்பி விட்டுட்டு இருந்தேன்.  நான் கேட்ட அத்தனையும்  வாங்கிட்டு வந்தீங்களா?

“எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். காலைல  பாரு உன் ரூமில பெட்டி  இருக்கும்…”

“ ஐய்…..  சூப்பர்…” என்றாள்  சிறு பிள்ளை போல.

“அத்தான்….”

“சொல்லுடி….”

“எனக்கு ரொம்ப தூக்கம் வருது தூங்கவா…நான் தூங்கினதும் போயிட மாட்டீங்க தானே.”

“தூங்கு நான் எப்பவும் உன் கூட  தான் இருக்கேன். நல்லா தூங்கு…” 

இன்னும் எத்தனை இருக்கிறதோ இவள்  மனதுக்குள் என்று  கலக்கமாக இருந்தது அவனுக்கு.நல்ல வேளை இங்கே வந்துவிட்டேன்.இல்லாவிட்டால் இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும் என்று நினைத்தபடி  மனைவியை  அணைத்துக்  கொண்டு படுத்தான்.  

அதிகாலை நாலு  மணிக்கு எழுந்து கோவர்த்தனன் அறைக்கு போனான். மறக்காமல் மனைவிக்கு  கொண்டு வந்த பெட்டியை  எடுத்து வந்து அவள் அறையில் வைத்து விட்டான்  

காலையில் கண் விழித்தாள் குழலி.

‘இதென்ன கனவில் அத்தான் சொன்ன போல பெட்டி ரூமுக்குள்ள இருக்கு ’  என்று நினைத்துக் கொண்டு பெட்டியை  ஆசையோடு தொட்டுப்பார்த்தாள்.

“அம்மா…. யாரு என் ரூம்ல கொண்டுவந்து பெட்டி  வச்சது…” என்றாள்  சாப்பிட உட்கார்ந்தபடி.

எதுவும் புரியாமல் மகளை பார்த்தார் சுந்தரவல்லி.

“அது மாமா கொடுத்துவிட்டு நான் தான் கொண்டு வந்து உன் ரூம்ல வச்சேன்கா” முந்திக்கொண்டு பதில் சொன்னான் தம்பி. 

“சரிடா….” என்று அமைதியாக பதில் சொன்ன தமக்கையை ஆச்சரியமாகப் பார்த்தான் கோவர்த்தனன். 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வருவாள்….