குழலி- 08

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 08

மனைவி தன்னுடன் வரவில்லை என்றதும் வழமை போல்  தனியாக விமானம் ஏற  புறப்பட்டு விட்டான் பழனி. தம்பியையும்  கூட்டிக்கொண்டு தானும்  கூடவே வந்திருந்தாள் குழலி.காசிலிங்கம்  வழியனுப்ப வரவில்லை.ஊருக்கு போனதும் போன் போடு என்று மகனிடம்  சொல்லிவிட்டார். 

கிளம்பும் நேரம் வந்ததும் விடைபெற்று உள்ளே போனான் பழனி.சட்டென்று வேகமாக கணவனை கட்டிக்கொண்டு நுனிவிரலில் எம்பி அவன் உதட்டில் அழுத்தமாக  முத்தமிட்டாள் குழலி. அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டது.

அங்கிருந்த ஒரு சிலரின் பார்வை தங்களை நோக்கி திரும்புவதை கூட மறந்து கணவனுடன் ஒன்றிவிட்டாள்  அவள்.

“இதுக்கு தான் உன்னையும் வான்னு சொன்னேன் கேட்டியா…”என்று குரல் தழுதழுக்க சொன்னான் பழனி.

தமக்கையின் செயலில் அதிர்ந்து போய் நின்றிருந்தான் கோவர்த்தனன்.கணவனும் மனைவியும் விடைபெறும்போது பேசிக் கொள்ளட்டும் என்று அவர்களை விட்டு தள்ளி தான் அவன் நின்றிருந்தான் அவன். 

“என்னை இவ்வளவு தேடுறவ எதுக்கு வரலைன்னு சொன்ன? போனதும்  உனக்கு விசாவுக்கு எல்லாம்   பார்க்கிறேன் சீக்கிரம் வந்திடு சரியா…?

சரி என்று வேகமாக தலையாட்டி  ஒத்துக் கொண்டாள் இப்போது.

மனைவியின் கலங்கிய முகத்தை பார்த்தபடி விமானம் ஏறி கிளம்பினான் பழனி.சீக்கிரம் அவளை தன்னுடன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனை மட்டும் தான் இப்போது.  

 பழனி கிளம்பிப்  போய்  ஒன்றரை  மாதங்கள் வேகமாக  கடந்து விட்டது. கணவன்  மனைவி இருவரும் நினைத்த போதெல்லாம் போனில் பேசி தங்கள் காதலை  வளர்த்துக் கொண்டிருந்தனர் .

தன்  உடல் நிலையில் மாற்றம் தெரியவும்  வீட்டில் சோதனை செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்தாள் குழலி.இருந்தாலும் எதற்கும் டாக்டரை பார்ப்போம் என்று தம்பியுடன்  போய் வந்தாள். தாயிடம் விஷயத்தை சொன்னதும் சுந்தரவல்லி ஆனந்த கண்ணீர் வர மகளை கட்டிக் கொண்டார்.

தன்  மகளும் மருமகனும்  சேர்ந்து வாழ்ந்தால்  பிள்ளை பிறக்காது என்று சொல்லி மகளை துரத்தி விட்ட செல்வராணிக்கு நாக்கை பிடுங்குவது போல நாலு கேள்வி கேட்டாக வேண்டும் என்று தான் தோன்றியது அவருக்கு .

உடனே அண்ணனுக்கு அழைத்து  விஷயத்தை சொல்லி விட்டார் சுந்தரவல்லி.தான் வெளியூரில் இருப்பதால் நாளை ஊருக்கு வந்ததும்  வீட்டுக்கு வந்து மருமகளை பார்ப்பதாக மகிழ்ச்சியோடு சொன்னார் காசிலிங்கம். 

கணவனுக்கு உடனே விஷயத்தை சொல்ல வேண்டும் என்று  ஆசையுடன் அழைத்தாள்  குழலி.அவளின் நேரமோ என்னவோ அன்று பார்த்து பழனி போனை எடுக்கவில்லை.முக்கியமான ஆயில் ஆராய்ச்சியில் மாட்டிக் கொண்டான் அப்போது அவன்.    

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

மகளும் மகனும் வீட்டினுள் இருக்க  வீதிக்கு வந்து ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு அண்ணன் வீட்டுக்கு கிளம்பி விட்டார் சுந்தரவல்லி.   

“என்ன சுந்தரவல்லி உங்கண்ணா ஊர்ல இல்லாத நேரம் பார்த்து வந்திருக்க என்ன விஷயம்”

“வாங்க  அத்தை…” என்று   மோகனா  தான் புன்னகையுடன் வரவேற்றாள்.

“ஆஹ்….என் பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து வாழ்ந்தால் பிள்ளை  பிறக்காதுன்னு சொல்லி துரத்தி    விட்டீங்க.இப்ப என் பொண்ணு மாப்பிள்ளை கூட   சந்தோஷமா  வாழ்ந்து   மாசமா இருக்கா. இனி என்ன பண்ண போறீங்க அண்ணி?

“என்ன சொல்ற குழலி மாசமா இருக்காளா? என்று மகிழ்ச்சியோடு கேட்டார் செல்வராணி.

கணவன் சொன்னது போல்  மகன் தன் மனைவி  வீட்டில் தான் தங்கி இருந்தானா?    அங்கிருந்து கிளம்பி போன நாளில் இருந்து தந்தை தங்கையிடம் மட்டும் பேசுபவன்  தன்னிடம் பேசாத வருத்தம் வேறு அவருக்கு.அப்போதெல்லாம் துபாயில் இருந்து தான் மகன் பேசுகிறான் என்றல்லவா நினைத்திருந்தார் அவர் .

ஆனால்  அடுத்த நொடி  வாயை  மூடிக்கொண்டால்  செல்வராணியின் கெத்து என்னாவது.

அண்ணியின் செய்கை ஏதோ சரியாக படவில்லை சுந்தரவல்லிக்கு.

“என்ன சொன்ன சுந்தரவல்லி?  கல்யாணத்தன்னைக்கு  ராத்திரியே என் புள்ள உங்க வீட்டுக்கு வந்தனா?  உன் பொண்ணோட  வாழ்ந்து வயித்துல புள்ள வந்துச்சா என்ன பேசிட்டு இருக்க நீ?

அண்ணன் மனைவியின் பேச்சைக்  கேட்டு  என்ன பெண் இவர் என்று அருவருத்துப்  போனது சுந்தரவல்லிக்கு. தான் இங்கே வந்திருக்க கூடாது. தமயனிடம் விஷயத்தை சொல்லி விட்டு பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து  தான் புரிந்தது  அவருக்கு.

“ஆமா…. மாப்பிள்ளை கல்யாணத்தன்னைக்கு  ராத்திரி எங்க வீட்டுக்கு வந்துட்டார்.  கூட பதினைந்து  நாள் தங்கியிருந்திட்டு தான் ஊருக்கு போனார். ஏன் உங்களுக்கு தெரியாதா?

“ஓஹோ….எனக்கு தெரியாமல்  இவ்வளவு நடந்திருக்கா” என்று  அதிர்ந்து போய் கேட்டார்  செல்வராணி.

“சுந்தரவல்லி உன் பொண்ணு எங்க போய் சீரழிஞ்சு புள்ளை  வாங்கிட்டு வந்தாளோ தெரியாது. என் புள்ளைய உன்  கெட்டுப்போன பொண்ணோட  குழந்தைக்கு  தகப்பனாக்க  பாக்குறியா நீ..”  என்று   வார்த்தைகளை  நஞ்சாக கக்கினார் செல்வராணி.

வீட்டில் தாயை காணாமல்  இங்க தான் வந்திருக்க வேண்டும் என்று  நினைத்து காரில் தம்பியுடன் கிளம்பி வந்த  குழலி மற்றும்  கோவர்த்தனன் காதுகளில்  செல்வராணியின் வார்த்தைகள் எல்லாம்  தப்பாமல் வந்து  விழுந்தன.

அத்தையின் பேச்சை கேட்டு கணவன் வீட்டு வாசலுக்கு  வெளியே அவமானத்தில் தலை குனிய   குனிந்து நின்றிருந்தாள்  குழலி .உள்ளே போய் சண்டை போட அவள் தன்மானம் இடம் தரவில்லை.இதற்கு எப்படி பதில் சொல்வது என்றும்  அவளுக்கு தெரியவில்லை.

“கிளம்பும்மா….” என்று   தாயை அழைத்துக்கொண்டு கலங்கி நின்ற அக்காவையும்   அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான் கோவர்த்தனன். 

நடந்தவற்றை எல்லாம் ஒன்றும் விடாமல்  பழனிக்கு   மெசேஜ்  போட்டு சொல்லிவிட்டான் கோவர்த்தனன்.

மறுபக்கம் மோகனா தந்தையை கூப்பிட்டு எல்லாவற்றையும் ஒப்புவித்து விட்டாள்.

மகள் சொன்னதை கேட்டதும் அடித்து பிடித்து வீடு வந்து சேர்ந்தார் காசிலிங்கம்.

“நீயெல்லாம் ஒரு பொம்பளையா சீச்சீ…. மனுசப் பிறவியாடி ராட்ஷசி?  இத்தனை காலம் உன் கூட குடும்பம் நடத்தினதை நினைச்சா எனக்கு  அருவருப்பா   இருக்கு. போதும் உன் சகவாசம்…” என்று கோபத்துடன் ஆக்ரோஷமாக கத்தினார் காசிலிங்கம்.

ஆனால் அப்போதும் அடங்காமல் கணவனை மறுத்து ஏதோ சொல்ல வந்தார் செல்வராணி.

‘பளார் ‘என்ற சத்தத்துடன் மனைவி  கன்னத்ததில் கோபத்துடன் ஓங்கி  ஒன்று விட்டார் காசிலிங்கம்.

“தள்ளி  போடி…..உன் கூட  இருந்தா  என் பொண்ணு வாழ்க்கையும் நடுத்தெருவில் தான் நிக்கும்.என் தங்கச்சி மேலயும் அவ பெத்த புள்ளைங்க மேலயும் அப்படி என்னடி கோபம் உனக்கு .நாத்தனார் கொடுமை எல்லாம்  கேள்விப்பட்டிருக்கேன்.அதையெல்லாம்  இங்க தான் நேரடியா பார்க்கிறேன்.உன்னை எல்லாம் அன்னைக்கு மண்டபத்துல  போலீஸ் பிடிச்சுட்டு போகட்டும் என்று விட்டிருக்கணும் நான் ”

“இல்லைங்க….. நான்….” என்று தடுமாறினார் செல்வராணி.  

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“பேசாத மூடு வாய….. ஊர்ல எல்லாருக்கும் பெரிய மனுசனா இருந்து பஞ்சயாத்து பண்ற எனக்கு என் வீட்டு  பிரச்சனையை தீர்க்க தெரியல. நானெல்லாம் என்ன பெரிய மனுஷன்.என் வீட்டு பிரச்சனையை தீர்க்காமல் ஊருக்கு  உபதேசம் பண்ணி என்ன காண  போறேன்…நானும் என் பொண்ணும்   தங்கச்சி வீட்டுக்கு கிளம்புறோம்.” கவலையோடு பேசிய தந்தையை கண்கலங்க பார்த்தாள்  மோகனா.  

“உங்கண்ணன் புத்திசாலித்தனமா இந்த வீட்டை விட்டு போய் தன்  பொண்டாட்டி கூட வாழ தொடங்கிட்டான்.நீயும் புத்தியோட பிழைச்சுக்கோ.போய் உனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு வா கிளம்பலாம்” என்றார்.

மகள் வேண்டியதை  எடுத்து வரவும்  காசிலிங்கம் காரை கிளப்பினார்.தயக்கமாக  ஒரு நொடி  தாயை பார்த்த  மோகனா தந்தையுடன் கிளம்பிவிட்டாள்.  

வீட்டு வேலைக்காரர்கள் முன்னாடி கணவனிடம் அடி வாங்கி தனியாக நிற்பதை அவமானமாக உணர்ந்தார்  செல்வராணி. 

எப்படி என்னை விட்டு போகலாம் என்ற கோபம் வேறு அவருக்கு.உடனே மகனுக்கு அழைத்தார்.ஆனால் அந்த பக்கம் போன் எடுக்க தான் ஆள் இல்லை.

மறுபக்கம் நடந்தவற்றை   எல்லாம் நினைத்துப் பார்த்த குழலிக்கு கணவனுடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது.எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட துணிந்து விட்டாள்  அவள். 

வருவாள்….