குழலி- 04
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 04
அறையில் தெரிந்த சிறிய வெளிச்சத்தில் மனைவி தூங்குவதை பார்க்க அத்தனை பாந்தமாக இருந்தது பழனியப்பனுக்கு.அவள் அணிந்திருந்த சின்ன நீல வண்ண நைட்டி முழங்கால் வரை ஏறி இருக்க தலைக்கு மேல் ஒரு கையை வைத்திருந்தாள். வாய் சிறிது பிளந்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் குழலி.
வீட்டுக்கு வந்ததும் இந்த கல்யாணத்துக்கு எதற்கு கூட்டிப் போனாய் என்று தாயுடன் சண்டை போட்டு ஓய்ந்து போனாள் குழலி.அழுகை பொங்க அழுது தீர்த்தாள். கொஞ்சம் சமாதானமாகி இப்போது தான் உறங்க தொடங்கினாள் என்று பாவம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
குழலியின் கண்களின் ஓரம் காய்ந்த கண்ணீரின் சுவடுகள். அந்த சிறிய வெளிச்சத்திலும் தெளிவாக தெரிந்தது அவனுக்கு.தனிமையில் அவள் தூங்குவதை பார்க்க அன்புக்கு ஏங்கி நிற்கும் சிறுமி போல தெரிந்தது அவன் கண்களுக்கு.
தன் கல்யாணத்துக்கு வந்தவளை பிடித்து ஊரறிய தாலி கட்டி மனைவியாக்கி வீட்டுக்கு கூட்டி வந்தது சரி.ஆனால் யாரோ ஒரு ஜோதிடர் பேச்சை நம்பி தன் மனைவியை தானும் இல்லாத நேரத்தில் வெளியே போகச் சொன்ன தாயின் செயலை மன்னிக்க முடியவில்லை அவனால்.எப்படி மனைவியை சமாதானம் செய்ய போகிறேன் ஒன்று தடுமாற்றமாக இருந்தது அவனுக்கு.
கொண்டுவந்த பெட்டியை அங்கிருந்த மேசையில் வைத்து மெதுவாகத் திறந்தான்.வேட்டியையும் டிசேர்ட்டையும் எடுத்து மாட்டிக்கொண்டான். சுவரில் மாட்டியிருந்த ஹாங்கரில் இருந்த அவள் தொப்பியை நகர்த்திவிட்டு போட்டிருந்த ஆடையை அதில் தொங்க விட்டான்.குளித்துவிட்டு நடு இரவில் கார் ஓட்டி வந்தது வேட்டி கட்டியதும் குளிர்வது போல் இருந்தது .
‘எப்படி தூங்குறா பாரு… திருடன் வந்தாலும் தெரியாது இவளுக்கு…’என்றுதான் நினைத்தான்.
மெதுவா வந்து மனைவிக்கு பக்கத்தில் படுத்துக் கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
என்ன நினைத்தானோ தெரியாது அவளருகே நெருங்கி படுத்து அவள் தலையை தூக்கி தன் கையில் வைத்து மறு கையால் அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.
“சாரிடி….பட்டு உனக்கு தாலி கட்டி இப்படி எங்க வீட்டுல அவமானப்பட்டு நிக்கிற போல தவிக்க விட்டுட்டேன்.மாலதி ஓடிப்போன போறா எனக்கென்ன வந்தது என்று இருந்திருக்கணும் நான்.
கல்யாணம் நின்னா தன் பிள்ளைக்கு அவமானமா போயிடும். இப்பவே வேறு பெண்ணை பார்த்து கட்டி வைக்கிறேன் என்ற எங்கப்பாவை சொல்லணும்.அவர் உன்கிட்ட கெஞ்சி கேட்டதும் நீயும் மாமா கேட்கிறாரேன்னு எதுவும் சொல்லாம இருந்திட்ட.எங்கம்மா இப்படி எல்லாம் பண்ணுவாங்கன்னு நினைக்கலடி .சாரிடி பட்டு…..” என்றான் தூக்கத்திலிருந்த மனைவியின் முகத்தைப் பார்த்து.
அன்னையால் குழலிக்கு இப்பிடியெல்லாம் அவமானம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த கல்யாணத்தை நடக்க விட்டிருக்க மாட்டான் பழனியப்பன் என்பது தான் உண்மை.
இதையெல்லாம் அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் குழலி அவனை சிறிதேனும் மன்னித்து இருப்பாளோ தெரியாது.ஆனால் தூக்கத்தில் இருப்பவளுக்கு கணவன் தன்னிடம் புலம்புவது எதுவும் தெரியாது. பெருங் கோபத்துடன் மனைவி படுத்திருக்கிறாள் என்று அவனுக்கு சொல்லுவது யார்?
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மாலதி மண்டபத்தை போய் விட்டாள் என்றதும் மண்டபத்தில் யாராவது பெண்ணைப் பார்த்து தன் மகனுக்கு கட்டி வைக்கலாம் என்ற பேச்சு வரவும் அவனுக்கு சட்டென்று குழலியின் நினைவுதான் வந்தது.மண்டபத்தை கண்களால் அலசிப் பார்க்க அங்கே அவள் இருந்தால் தானே.
அடுத்த நொடி அத்தனை சலசலப்புகளுக்கும் மத்தியில் பட்டு புடவையில் தன் நீண்ட கூந்தலை முன்னாள் தூக்கிப் பிடித்தபடி தலை நிறைய பூவுடன் மண்டபத்துக்குள் நுழைந்த குழலியை பார்த்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சி அவன் மனதில். தந்தையை அழைத்து அவளிடம் பேச சொல்லிவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டான்.
அவள் தந்தையிடம் மறுத்துச் சொல்வதை பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்தது இவனுக்கு.அதையே மறுபடியும் புடவையை கொடுக்க வந்த தன்னிடமும் சொல்ல வந்தாள். அது தெரிந்து தான் கோப குரலில் பேசி விட்டு அங்கிருந்து வந்துவிட்டான்.காலையில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தபடி படுத்துக்கிடந்தான் பழனி.
“டேய் யாருடா நீ….. எதுக்கு இங்க வந்திருக்க….. போடா வெளிய….”என்று பதறி அடித்து எழுந்தபடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் குழலி.
நடு இரவில் தன் அறைக்குள் புகுந்து தன் கட்டிலில் ஒரு ஆண் உருவம் தன்னை அணைத்தபடி படுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் குழலி.தூக்க கலக்கம் வேறு அலைக்கழிக்க அவளால் நிதானமாக நிற்க முடியவில்லை .கனவில் தந்தை தான் வந்து அணைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள்.
“ இதொண்ணும் கனவில்லை கண்ணை திறந்து பாருடி…”
கணவனின் குரலை அடையாளம் கண்டு கொண்டவள் கண்களை கசக்கி அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
“என்ன பொண்டாட்டி இப்பயாச்சும் என்னை அடையாளம் தெரியுதா இல்லையா ….?
“எதுக்கு இங்க வந்து என் ரூமுக்குள்ள படுத்திருக்கீங்க .யாரு உங்கள இங்க வரச் சொன்னது….. கிளம்புங்க உங்க வீட்டுக்கு…” என்று கோபத்துடன் சொன்னாள்.
“வெளிய கேக்கப் போகுது காத்தாதடி….”
“நான் ஒன்னும் கத்தல…ஆமா எப்படி என் ரூமுக்கு வந்தீங்க நீங்க? முதல்ல வெளிய போங்க சொல்லிட்டேன்…”
“போக முடியாது… இனி காலத்துக்கும் உன்கூட தான் பட்டுக்குழலி”
“இப்ப போறீங்களா இல்லையா ?
“சத்தம் போடாதடி….” என்றபடி சுவரோடு சாய்ந்து நின்றவள் அருகே வந்து அவள் வாயை தன் கையால் பொத்தினான்.ஆனால் அடுத்த நொடி,
“ஆ…..” என்றபடி கையை உதறிக்கொண்டான் பழனி.
“எதுக்குடி கடிச்சு வச்ச…..?
“யாரை கேட்டு என் வாயை மூடுறீங்க .எதுக்கு இங்க வந்தீங்க. நீங்க இங்க வந்தது உங்கம்மாக்கு தெரியுமா.உன் பெண்ணை என் பையன் கூட வாழ வைக்க பிளான் போடுறியான்னு எங்க அம்மா கிட்ட சண்டை போட்டாங்க. என்ன பிளானில இங்க வந்தீங்க.ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க வேணாம் கிளம்புங்க நீங்க..”
“என்னை கொஞ்சம் பேசவிடு. எங்கம்மா பேசினத்துக்கெல்லாம் உன் கிட்ட நான் சாரி சொல்லிக்கிறேன்.இப்ப நம்ம ரெண்டு பேரை பற்றி மட்டும் பேசு அவ்வளவு தான்…”
தூக்கம் போய் தெளிந்து விட்டாள் என்று புரிந்து கொண்டான் பழனி.
“நம்ம ரெண்டு பேரை பத்தி பேச என்ன இருக்கு? என்றாள் கோபத்தோடு.
இங்கிருந்து தன்னை வெளியே அனுப்புவதில் தான் குறியாக இருக்கிறாள் என்று தெளிவாக புரிந்தது அவனுக்கு.கண்விழித்திலிருந்து ஒரு தடவை கூட தன்னை உரிமையோடு அத்தான் என்று அழைக்கவில்லை என்பதை கவனித்துக் கொண்டான் .யாரோ மூன்றாவது மனிதரிடம் பேசுவது போல தன்னை தூர நிறுத்தி பேசிக் கொண்டிருக்கிறாள் என்று கண்டு கொண்டான்.
‘இருடி உன்னை கதற விடுறேன் இப்போ…’ என்று நினைத்தபடி அவள் அருகில் வந்து கழுத்தை வளைத்து உள்ளே இருந்த தாலியை இழுத்து எடுத்து நைட்டியின் வெளியே அவள் மார்பில் மேல் தொங்கவிட்டான்.
“என்ன பண்றீங்க அத்தான்….தள்ளி போங்க..” என்றாள் அதிர்ந்து போய் அவனை தள்ளிவிட்டபடி.
“ஏன் நீ தானே சொன்ன நம்ம ரெண்டு பேரை பத்தி பேச என்ன இருக்குன்னு. இப்ப பதில் சொல்லுடி நமக்குள்ள ஒன்னும் இல்ல? என்றான் தாலியை பார்த்தவாறு.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அது….அது வந்து….” என்று பேச்சு வராமல் தடுமாறினாள் குழலி.அவன் தாலியை இழுத்து எடுத்தபோது அங்கங்கே உரசிய அவன் கை ஸ்பரிசம் வேறு எதோ செய்தது அவளுக்கு.
“இதோ பாரு என்னைக்கு இருந்தாலும் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி தான்.இதை எப்பவும் மாத்த விரும்ப மாட்டேன் நான். அது தான் உனக்கும்… போய் படு “ என்றான் .
“அது எனக்கு தெரியாது பாரு…… வந்திட்டார் அதிகாரம் பண்ணிக்கிட்டு…” சொல்லியபடி சுவர் ஓரம் போய் நின்று கொண்டாள்.
“போய் படுடி “
“ஆமா நீங்க எங்க படுக்க போறீங்க…. வெளிய போங்க முதல்ல” என்றாள் திரும்பவும்.
“என்னடி எங்கம்மா பண்ணதுக்கு என்னை பழிவாங்கறியா. ஐ ஆம் வெயிட்டிங் பொண்டாட்டி “
கணவன் சொன்னதை கேட்டு பேச்சின்றி உறைந்து போய் நின்றிருந்தாள் குழலி.
வருவாள்…………………