குழலி- 03
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 03
மக்களே இத்தனை பேர் படிக்கிறீங்களே ஒரு லைக் comments போட்டு என் பிஞ்சு மனசுல பாலை வாத்தா என்ன? நானும் happy யா EP போடுவேனில்ல ?
தாயின் பேச்சை நம்பாமல் மாலினியிடம் உனக்கு இந்த திருமணத்துக்கு சம்மதமா என்று தான் கேட்டிருக்க வேண்டும் என்று யோசித்தபடி வந்தான் பழினியப்பன். நிச்சயம் முடிந்து ஒரு நாள் கூட மாலினி தனக்கு அழைத்து பேசவில்லை என்று அப்போது தான் நினைவுக்கு வந்தது அவனுக்கு.
அவன் அழைத்தால் பிஸியா இருக்கிறேன் என்று சொல்லி உடனே வைத்துவிடுவாள்.தன்னுடன் பேச கூச்சப்பட்டு இப்படி சொல்கிறாள் என்றல்லவா நினைத்திருந்தான் பழனியப்பன்.
போலீஸ் ஸ்டேஷன் வேலைகளை முடிந்து பழனியப்பனும் தந்தையும் வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவாகி விட்டது.இருவரும் குளித்துவிட்டு வரவும் எதுவும் பேசாமல் இருவருக்கும் மௌனமாக சாப்பாட்டை பரிமாறினர் செல்வராணி.
“எங்க மத்தவங்க எல்லாம் தூங்கியாச்சா? என்று கேட்டார் காசிலிங்கம்.
“ஆமா எல்லாரும் அப்பவே தூங்க போயிட்டாங்க…”என்று பொதுவாக சொன்னார் செல்வராணி. வீட்டில் நடந்த பிரச்சனை பற்றியோ குழலி கிளம்பி அவள் வீட்டுக்கு போனது பற்றியோ அவர்களிடம் வாய் திறக்கவில்லை அவர்.
‘குழலி எங்க காணோம் .என்னோட ரூமிலயும் இல்லை…. மோகனா கூட தூங்குகிறாளா? என்று தான் பழனியின் சிந்தனை ஓடியது.
ஆண்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் சமையல் அறை லைட்டை அணைத்துவிட்டு நல்ல பிள்ளை போல செல்வராணி தன்னறைக்குள் போய் படுத்துக்கொண்டார்.
ஆனால் தாய் அந்தப் பக்கம் போகவும் வேகமாக அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் மோகனா. வீட்டில் தாயும் அவர் சொந்தக்காரர்களும் சேர்ந்து செய்த கலவரத்தை ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டாள். அண்ணியும் அவர்கள் வீட்டு மனிதர்களும் அப்பவே கிளம்பி போய் விட்டனர் என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு நைசாக அறைக்குள் போய் படுத்து விட்டாள் மோகனா.
பெரும் கோபத்துடன் அருகிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கி தூர எறிந்தான் பழனியப்பன்.வெளியே சத்தம் கேட்டதும் உள்ளே போன மோகனா வெளியே வந்து பார்த்தாள் .ஆனால் செல்வராணியின் அறைக்கதவு அப்போதும் மூடியே இருந்தது.
தாயின் செயலை நினைக்க நினைக்க பழனிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதிலும் குழலி திரும்ப தன் வீட்டுக்கு போய்விட்டாள் என்றதும் நிதானம் இழந்து விட்டான் அவன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
தன்னை நம்பி வீட்டிற்கு வந்தவளை துரத்திவிட்ட அன்னையை நினைத்து அவமானமாக இருந்தது .ஸ்டேஷனுக்கு கிளம்பும் போது சீக்கிரம் வந்து விடுவேன் வீட்டில் போய் இரு என்று மனைவியிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று தாமதமாகத்தான் புரிந்தது அவனுக்கு.
ஒரே நாளில் இத்தனை துன்பங்களும் நாலா திசையில் இருந்தும் தன்னை தாக்கி துரத்தி அடிக்கும் என்று கணமும் நினைத்திருக்கவில்லை அவன்.
இவ்வளவு நடந்த பின்பும் எதுவும் தங்களிடம் சொல்லாது கமுக்கமாக அறைக்குள் போய் படுத்துக் கொண்ட மனைவியின் செயலை நினைக்க நினைக்க என்ன வாழ்க்கை இவளுடன் வாழ்ந்திருக்கிறேன் நான் என்று வெறுத்துப் போனது காசிலிங்கத்துக்கு.
“பழனி….உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு மருமக வீட்டுக்கு கிளம்பி போயிடு.முடிஞ்சா அப்படியே உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு துபாய்க்கு போயிடு.அவ்வளவு தான் சொல்லுவேன். சீக்கிரம் கெளம்பு உங்க அம்மா வந்து எதுவும் சொல்றதுக்குள்ள போயிடு…”
“அப்பா என்ன சொல்றீங்க.சாமம் பன்னிரண்டு மணியாச்சு.இப்ப எப்படி அத்தை வீட்டுக்கு போக …”
“கிளம்பு பழனி இந்தா இருக்கு தென்காசி.இன்னைக்கு கல்யாணம் ஆனவன் போலயா இருக்க?போலீஸ் கேஸ்ன்னு அலைஞ்சுட்டு..இனிமேலாச்சும் நிம்மதியா இருடா.”
“அப்பா நான் வேணா காலைல போகவா? தயக்கத்துடன் சொன்னான்.நடு இரவில் மனைவி வீட்டுக்கு போய் நிற்க ஒரு மாதிரி இருந்தது அவனுக்கு.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.அங்க யாரும் எதுவும் உன்னை கேட்க மாட்டாங்க…கிளம்பு . நான் தாலி கட்டின சம்சாரம் தான் சரியில்லை . நீயாச்சும் உன் பொண்டாட்டி கூட நல்லா வாழணும்டா…
“தங்கமான பொண்ணு குழலி. அதுவே கோபப்பட்டு கிளம்பி அவங்க வீட்டுக்கு போயிருக்குன்னா உங்க அம்மா என்னவெல்லாம் பேசி இருப்பான்னு நெனச்சு பாரு.அந்த புள்ள மனசு என்ன பாடு பட்டிருக்கும்?நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கலங்கி நின்னா நம்ம குடும்பத்துக்கு தான்டா ஆகாது.…. கிளம்பு” என்று அவன் தோளில் அணைத்தபடி குரல் கமற சொன்னார் தந்தை.
“நீங்க யோசிக்காதீங்கப்பா… எல்லாம் ஒரு நாள் சரியாகும்.”
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.எல்லாம் உங்க அம்மா கையில தான் இருக்கு. அது வரைக்கும் என்ன பண்ண சொல்ற….கிளம்பு சீக்கிரம்.போலீஸ் உங்கம்மாவை இழுத்துட்டு போய் ரெண்டு தட்டு தட்டி இருந்தா தெரிஞ்சிருக்கும் அவளுக்கு ” எரிச்சலாக இருந்தது காசி லிங்கத்துக்கு.
பழனி தன்னறைக்குள் நுழைந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டான். நேற்று ராத்திரி தூங்கும் போது வரும் நாட்களில் இந்த அறையில் தன்னுடன் மாலினி இருப்பாள் என்று நினைத்திருந்தான். ஆனால் இன்று தான் கூட அந்த அறையில் தங்க முடியவில்லை என்று நினைத்த போது ஒரு வித கசப்பு வந்தது அவன் மனதில்.
“நான் கிளம்புறேன் அப்பா….” என்றபடி தன் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் .
“அம்மா கேட்டா நான் கிளம்பி துபாய்க்கு போயிட்டதா மட்டும் சொல்லுங்க..” என்றபடி தன் காரை தென்காசியில் இருக்கும் மனைவியின் வீட்டை நோக்கி செலுத்தினான் பழனி.
மகன் வீட்டை விட்டு போனதை இன்னும் அறியவில்லை செல்வ ராணி. வீட்டில் நடந்த கலவரம் பற்றி கணவனோ இல்லை மகனோ ஏதாவது கேட்டு விடுவார்கள் என்று நினைத்தபடி அறைக்குள் நுழைந்து கெட்டித்தனமாக கதவை பூட்டி விட்டாரே . அவருக்கு எப்படி மகன் கிளம்பி மனைவி வீட்டுக்கு போய் விட்டான் என்று தெரிய வரும்.
“ஹலோ மாமா எங்க இருக்கீங்க ? ஸ்டேஷனில இருந்து வந்துட்டீங்களா? என்று போனை எடுத்ததும் கேட்டான் கோவர்த்தனன்.
“வந்துட்டேன்டா…நீ கதவத் திற…..உங்க கேட்டில தான் நிக்கிறேன்.”
“என்ன மாமா முதலே கூப்பிட்டு சொல்லியிருக்கலாமே? நான் வந்து திறந்து விட்டுருப்பேன்…” என்றபடி வேகமாக ஓடி வந்து கதவைத் திறந்து வெளியே வந்து கேட்டை திறந்தான் கோவர்த்தனன்.
“அம்மாவும் அக்காவும் நல்ல தூக்கம்…இருங்க அவங்களை எழுப்பறேன்.”
“வேணாம் இரு. உங்கக்கா ரூம் எங்கன்னு சொல்லு .அத்தை தூங்கட்டும் விடு.”
“இது தான் அக்கா ரூம். அவ எப்பவும் நைட்ல டிம் லைட் போட்டு தான் தூங்குவா.மூணு பேர் படுத்து தூங்குற அளவு பெரிய கட்டில்ல தான் படுத்திருப்பா. எங்கப்பா கிட்ட சண்டை போட்டு தன் ரூமுக்கு வாங்கின கட்டில் அது. நீங்க அந்த பெட்டில தூங்குங்க…”
“சரிடா…” என்று புன்னகையுடன் பத்தி சொன்னான் பழனி.
“இப்படியா தூங்க போறீங்க..” என்றான் அக்கா கணவனின் பேண்ட் சட்டையை பார்த்து.
“என் டிரஸ் எல்லாம் பெட்டியில கார்ல இருக்கு.வா எடுத்துட்டு வருவோம்..”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
வேகமாக போய் மாமனின் பெட்டியை உருட்டிக்கொண்டு வந்தான் மைத்துனன்.
“என்ன மாமா இவ்வளவு பெரிய பெட்டி எடுத்துட்டு வந்திருக்கீங்க.ஊருக்கு போறீங்களா என்ன?
“ஏன் உனக்கு நடந்தது எல்லாம் தெரியாதா? இனி இங்க தான் தங்க போகிறேன். அதுக்கு தான் இந்த பெரிய பெட்டி…”
“ஐயோ மாமா என்ன சொல்றீங்க இதெல்லாம் அத்தைக்கு தெரியுமா? என்று பதட்டத்துடன் கேட்டான் கோவர்த்தனன்.
“நான் இங்க வந்தது எங்க அப்பாவை தவிர வேற யாருக்கும் தெரியாது. நீயும் யார்கிட்டயும் உளறி வைக்காதே சொல்லிட்டேன்..”
“என்ன மாமா எதுக்கு இப்படி பண்றீங்க.”
“டேய்….காலைல பேசிக்கலாம் போய் படு.” என்று சொல்லியபடி பெட்டியை உருட்டிக்கொண்டு மனைவியின் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டினான் பழனியப்பன்.
சிறிது நேரம் யோசனையோடு தமக்கையின் பூட்டிய அறையின் கதவை பார்த்துக் கொண்டு நின்றான் கோவர்த்தனன்.காலையில் என்ன வர காத்திருக்கிறதோ என்ற யோசனையோடு மேலே இருந்த தன் அறைக்கு போனான் . புருஷனை பார்த்ததும் அக்கா என்ன ஏழரையை கூட்ட போறாளோ என்ற கலக்கம் அவனுக்கு.
இப்போது காசிலிங்கம் தன் மனைவியிடம் சொல்லாமல் மகனை மருமகள் வீட்டுக்கு அனுப்பிவிட்ட செயல் தான் பின்னாளில் பழனியப்பன் வாழ்வில் பெரும் சிக்கலை உண்டாக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வருவாள்…………