காற்று 14
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
காலை வேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த எம்.ஜீ. ஆர் பேருந்து நிலையம் அரசு பேருந்துகள் ஒரு புறமும், சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துங்களும், மினி பேருந்துங்களும், உள்ளூரில் சுத்தும் பேருந்துங்களும் வரிசை கட்டி நிற்கவும்; வெளியிலிருந்து வரவும்; வெளியேறுவதுமாக இருந்தன.
திருமோகூரிலிருந்து தாமதமாகவே வந்த பேருந்து நேராக எம். ஜீ . ஆர் பேருந்தது நிலையத்தில் வந்து நின்றது. பள்ளி , கல்லூரி மாணவர்களிலிருந்து வேலைக்கு செல்பவர்கள் வரை, ஆண்கள் பெண்கள் பேதமின்றி இறங்கினார்கள்.
அதில் சாகரனும் ஒன்று, தினமும் அவன் இப்படித்தான் வருவதுண்டு. வீட்டில் கண்ணமாவிலிருந்து சாரதி வரைக்கும் அவனிடம் வண்டி வாங்கிக் கொள்ளுமாறு பணித்தார்கள்.
ஆனால் அவனோ, முதல் வழக்கு வெற்றிக்கரமாக முடியட்டும் வாங்கிக் கொள்கிறேன் என்று சமாளித்து வருகிறான்.
அவனுக்கு பேருந்தில் பயணிப்பதென்பது தன்னவளோடு காதல் மொழி பேசுவது போலவே, ஜன்னல் சீட்டில் அமர்ந்து, காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு, தன்னூர் அழகை ரசித்து வந்தாலும் மனக்கண்ணில் தன்னழகியை ரசித்து பாடல் வரிகளோடு, அவளுடன் இணைந்து வாழ்வது போல கற்பனை செய்துக் கொண்டு பயணிப்பது அவனுக்கும் மிகவும் பிடிக்கும்.
அது மிதியுந்தில் நிச்சயம் கிடைக்காது, சாலையில் கவனம் வைக்க வேண்டும் பின் வரும் வண்டிகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதாலே மிதியுந்தை அறவே வெறுத்தான்.
இரவு முழுக்கப் போதாமல் காலை வேளையும் கேட்கிறது போலும் அவனுக்கு அவளோடு இருக்கும் கற்பனை நேரங்கள். இவை எல்லாம் கருத்தில் கொண்டு தான், மிதியுந்தை வாங்க சொல்லியும் சமாளித்து வருகிறான்.
பேருந்து நிற்கவும் கூட்டம் இறங்க, சீட்டில் அமர்ந்திருந்த இவனும் இறங்க எழுந்தான், கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கும் வேளையில், பேருந்தில் இருந்த துருப்பிடித்த கம்பி இவனது கையை பதம் பார்க்க, இரத்தம் வழிந்தது.
“ஸ்ஆஆ !” என்று வலது கையைப் பார்த்தான், இரத்தம் வழிய, அருகே வந்த பெரியவர் ஒருவர்.
“பார்த்து இறங்கி இருக்கக் கூடாதா தம்பி ? இங்க பாருங்க இரத்தம் வழியுது.” என்றவர் தன் கையில் இருந்த கைக்குட்டையை அவன் கையில் இறுக்கமாக கட்டிவிட்டார். கை வலியால் முணங்கினான்.
“போய் ஒரு டி.டி ஊசி போடுப்பா ! இதேல்லாம் துருப்பிடிச்சி கம்பிங்க, சீக்கிரமா ஒரு ஊசி போட்டுருங்க !” என்று சொல்லி விட்டு அவர் செல்ல, அவர் செல்வதை முறுவலுடன் பார்த்தவன் நேராக அதிதி பள்ளி வழியே செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
வழக்கமாகவே காலை உணவை முடித்து விட்டு அவரவர் வேலையைப் பார்த்து நடையைக் கட்ட, வாசுவின் காரில் மிருதுளா ஏறி அமர, ” மிரு” என அழைத்தாள் நிழலி.
காருக்குள் இருந்தவாறே, வாசுவிடம் , ” போச்சு, டெய்லி உன் கூட போறத பார்த்து, கண்டுப்பிடிச்சிருப்பா ! என்ன கேள்வி கேட்க போறாளோ ! ” என நகங்களை கடித்தவாறே எட்டிப் பார்க்க , அதற்குள் நிழலி அவளருகே வந்தவள், கதவை திறந்து, அவளது ஷாலை உள்ளே போட்டு விட்டு சரியாக கதவை மூட, அவளுக்கு உயிரே வந்தது.
“பார்த்து ஏறு டி !” என்றவள் வாசுவிடம் ” பார்த்து கூட்டிட்டு போ !”என்றாள்.
அவன் தலையை அசைக்க, “தேங்க்ஸ்க்கா லவ் யூ !” என்று டாட்டா காட்டினாள். வண்டி கிளம்ப, செல்லும் வண்டியை வெறித்தாள்.
“அக்கா கிட்ட இருந்து இந்த சடர்ன் சேஞ்சஸ்ஸ நான் எதிர்பார்க்கல வாசு. ஏதாவது சொல்லுவான்னு தான் நினைச்சேன். ஆனா,
அவ பார்த்து போக சொல்லுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணல. இனி ஸ்கூட்டிய பிரண்ட் வீட்ல நிறுத்த வேணாம் தாராளமா வீட்லே நிறுத்திட்டு உன்கூட ரைட் ராயலா வருவேன் ” என்று கைதட்டி குதூகலித்தாள்.
அதைக் கேட்டு சிரித்தவன், ” லூசு, உன்னை நான் அப்படி செய்ய சொன்னதே, அவ மேல உள்ள மதிப்பும் பயத்தினாலயும் தான். பாதிக்க பட்டவளால அந்தத் துரோகத்தை மறக்க முடியல.
எங்க உனக்கும் அதே போல நடந்திடுமோ பயப்படுறா ! அவ பயம் நியாயமானது தானே ! நான் அவ கசினா இருந்தாலும் இந்த விசயத்துல
என்னை ஒரு ஆணாக தான் பார்க்கறா ! அவளையும் தப்பு சொல்ல முடியாது. அதுக்காக, மேரேஜ்க்கு முன்னாடி கிடைக்கற ஸ்வீட் மெமரீஸ் என்னால மிஸ்
பண்ணவும் முடியாது .
அதான் நான் உன்னை ஸ்கூட்டிய, உன் பிரண்ட், வீட்ல விட்டுட்டு, ரிப்பேர் ஆச்சுன்னு பொய் சொல்ல சொல்லி, உன்னை, என் கூட கூட்டிட்டு போறேன். கொஞ்ச நாள் அப்படியே போனால் . நம்ம ஃபிலீங்கஸ் புருஞ்சுகிட்டு அவங்களே அனுப்புவாங்கனு நினைச்சேன். அது தான் நடந்திருக்கு. ஆனால், நிழலியே ஃபர்ஸ்ட் அக்சபட் பண்ணுவானு எதிர்பார்க்கல. ஆல் கிரெடிட் கோஸ் டூ சாகரன் ப்ரோ தான். “என்று மனதார அவனுக்கு நன்றி சொன்னான்.
“சாகரன் மாமா வா, அவர் தான் இதுக்கு காரணம்னு எப்படி சொல்ற?”
“அன்னைக்கு, நிழலி, உன்னை நிக்க வச்சு கேள்வி கேட்கும் போதே, அவர் முகம் போன போக்கை கண்ணாடி வழியா பார்த்தேன். அவர் தான் எதாவது அட்வைஸ் பண்ணிருக்கணும் கெஸ் பண்றேன்” என்று சரியாக யூகித்தான்.
“அக்கா, அட்வைஸ் கேட்க ஆரம்பிச்சுட்டாளா? பரவாயில்ல அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆள் இருக்கு !”
“இதுக்கே ஆச்சர்யபடுறீயே !இன்னொரு சாக் நியூஸ் இருக்கு சொல்லட்டா !” எனக் கேட்டு அவள் முகம் பார்க்க, அவளும் ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள்.
” சாகரன் ப்ரோ, லவ்ஸ் நிழலி! ” என்றான். விழிகள் இடுங்க வாசுவைப் பார்த்தவள். ” என்ன சொல்ற வாசு, உண்மையா வா?”
“ம்ம்ம்… ஒரு ஆணோட மனசு ஒரு ஆணுக்கு தான் புரியும் .ஒரு ஆணோட பார்வை ஒரு ஆணுக்கு தான் புரியும். நேத்து சாகரன், நிழலிய பார்த்த பார்வையிலே தெரிஞ்சது. ஹீ லவ்ஸ் ஹேர். எனக்கு கொஞ்சம் கில்ட்டீயா தான் இருந்தது , அவளை இந்த நிலமையில விட்டுட்டு நான் மட்டும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கறத நினைச்சு, பட். இப்போ இல்ல, நிச்சயம் சாகரன் அவளை பார்த்துப்பான். அண்ட் அவனோட காதல் சடர்னா வந்ததும் இல்ல. வருசங்கள் கடந்து இருக்கும் நினைக்கறேன். அவ மனச மாத்தி கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கறான். அவனுக்கு நாம கண்டிப்பா ஹெல்ப் பண்ணனும் மிரு! ” என்று நிழலி மேலுள்ள அக்கறையில் கூறினான்.
“கண்டிப்பா வாசு, எனக்கும் அக்காவை பார்த்து ஃபீல்லா இருக்கும். அவளோட வாழ்க்கை எல்லாரையும் போல நார்மல் இருக்கணும் நினைப்பேன். சாமிக்கிட்ட கூட வேண்டுவேன். ஆனால் அதுக்கு பலன் கிடைச்சிருக்கு, சாகரன் மாமாக்கு நாம ஹெல்ப் பண்ணனும் வாசு !” என்றவளின் கூற்றை ஆமோதிக்க, மேலும் அவனை வம்பிழுக்க, “பரவாயில்ல, என் மாமாவுக்கு கொஞ்சம் மூளை இருக்குப்பா ! இவ்வளவு விஷயத்தை நோட் பண்ணிருக்கீயே !” எனக் கேலி செய்ய அவளது காதை செல்லமாக திருக்கினான்.
இங்கோ, நிழலியின் பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள் அதிதி . பள்ளியில் அந்தப் பெரிய மைதானத்தில் நின்று கொண்டு வாசலை பார்த்தவாறே அங்குமிங்கும் நடந்தாள்.
“பேபி, என் பொறுமைய ரொம்பவே நீ சோதிக்கற ! டைமாகுது கிளாஸ்க்கு போகாம ஏன் இங்க நின்னுட்டு ஏன் டைம் வேஸ்ட் பண்ற?” அவளை கடிந்துக் கொள்ள, அந்த சிறு வதனத்தில் வரைந்து வைத்த வில்லை சுருக்கி தன் அன்னையை முறைத்தவள், ” உனக்கு எத்தனை முறை சொல்வேன், சாகா வராம நான் கிளாஸ்க்கு போக மாட்டேன் ! இன்னும் கிளாஸ் ஸ்டார்ட் ஆக டைம் இருக்கு. ஸோ சாகாவை பார்த்துட்டு தான் போவேன். உனக்கு டைம் ஆச்சுன்னா நீ போ ! அங்க போய் ‘ ஈ ‘ தானே ஓட்ட போற, போய் ஓட்டு ” என்றாள் கடுப்புடன்.
“வர வர உனக்கு கொழுப்பு கூடி போச்சு டி ! அவன் வரலேனா நீ கிளாஸ்க்கு போக மாட்டீயா? இது என்ன புது பழக்கம் அதிதி எத்தனை முறை சொன்னாலும் நீ திருந்தவே மாட்டீயா ?அவன் தினமும் வருவான் ஏன் நீ எக்ஸ்பெக்ட் பண்ற? இது நல்லதுக்கு இல்ல அதிதி !” எனக் குரலை உயர்த்தி கடிந்துக் கொள்ள, முகம் வாடி தலை குனிந்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.
அதைக் கண்டவளின் கோபம் தனிய, அவள் உயரம் அமர்ந்து “பேபி, நம்ம லைப்ல நீயும் நானும் மட்டும் தான் சொல்லிருக்கேன்ல. மத்தவங்க எல்லாருமே மூணாவது மனுசங்க தான். இங்ளுடீங் சாகரன் . அவன் அன்பு உண்மையானது தான். ஆனா, அது எத்தனை நாளைக்கு கூட வரும் சொல்ல முடியாதும்மா ! அவனுக்கு ஒரு ஃபேமிலி உன்ன போல ஒரு பொண்ணு வந்தால் , அந்தப் பொண்ணு மேல தான் அன்பு காட்டுவான் ! இட்ஸ் நேசர் பேபி. அம்மா உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் மத்தவங்க பாசத்தை அதிகம் எதிர்பார்க்காத, ஒரு நாள் இட் வில் சேஞ்சுனு. ஏன் புரிஞ்சுக்க மாட்ற? இன்னைக்கு அவனுக்கு வேலை இருந்து வராமல் போனால் என்ன பண்ணுவா ? பிராமிஸ் எப்பையும் நிறைவேத்துவாங்க எக்ஸ்பெக்ட் பண்றது தப்பு பேபி. அம்மா உன் நல்லதுக்கு தான்
சொல்லுவேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்
அதிதி ! ” என்று அவள் முகமுயர்த்தி கண்ணீரை துடைத்து விட்டு நெற்றியில் முத்தம் வைக்க,
“சாரி பேபி ! நான் கிளாஸ்க்கு போறேன் பேபி !” குரலுடைந்து இதழை பிதுக்கி கண்ணீர் வடிய ஒரு முறை வாசலை பார்த்தவள் ஏமாற்றத்தோடு நடந்தாள் . ஏனோ மகளின் தோய்ந்த முகம் ஒரு புறம் வதைக்க, சாகரன் வராத ஏமாற்றமும் வலித்தது. ‘ஏன் வரல ?’ கேள்வி குடையாமல் இல்லை, அதிதியை பார்த்தவள் திரும்பி நடக்க, வேகமாக ஓடி வந்த சாகரனை கண்டாள். அவனோ அவளை பாராது ” அதிதிதிதி …!” என்றழைக்க, அவனது குரலை கேட்டு புன்னகைத்தவள், நொடியும் தாமதிக்காமல் அவனிடம் ஓடி வர அவளை அள்ளிக் கொண்டு முத்தமழையை இழைத்தான் சாகரன்.
இருவரை பார்த்து ‘ பே ‘ வென விழிப்பதே நிழலியின் வேலையாயிற்றே !’ என் ராஜா தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டாதே ! ‘ என்பது போல தான் அவள், அதிதியிடம் பேசிய யாவும் காற்றோடு கலந்து விட்டன.
“ஏன் சாகா லேட் ?”
“பஸ் லேட் பேபி !சாரி ரொம்ப நேரம் உன்னை வெய்ட் பண்ண வச்சிட்டேனா? இனி இது போல ஆகாது பேபி. நான் டைம்க்கு வந்திடுவேன் ஒ.கே ! ” என்று சமாதானம் செய்து முத்தம் வைத்தான்.
“சாகா, உன்னால் இந்தப் பிராமிஸ் டெய்லி பாலோவ் பண்ண முடியுமா? உனக்குனு பேபி வந்துட்டால், என்னை மறந்திடுவீயா? ” நிழலியை சொன்னதை சொல்லி அவளை மாட்டி விட்டாள் அதிதி.
‘இதேல்லாம் உன் வேலையா ?’ என்பது போல அவளை முறைத்தவன். ” பேபி !நம்ம பிரண்ட்ஷிப்ப கெடுக்கவே அந்நிய சக்தி நம்மளையே சுத்தி வருது. அந்த அந்நிய சக்தி பேச்சை எல்லாம் கேக்காத என்ன !” எனவும், அவள் வாயை மூடி தாயை பார்த்து சிரித்தாள். இருவரையும் முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள் நிழலி.
“பேபி, நான் உன் பிரண்ட் தானே ?.எல்லா உறவை விட, பிரண்டால மட்டும் தான் கடைசி வரைக்கும் நமக்கு கஷ்டம் குடுக்காம, அந்தக் கஷ்டத்திலும் துணையா இருந்து கூட வரும். அது எல்லா பிரண்ட்ஷிப்புக்கும் பொருத்தும் பேபி ! அண்ட் நம்ம பிரண்ட்ஷிப்குள்ள யாரையும் வர விடக் கூடாது. யார் பேச்சையும் கேட்கவும் கூடாது ஓ.கே வா !” எனவும் தலையை ஆட்டி விட்டு முத்தம் வைத்தவள், அவனுக்கு ‘ பாய் ‘ சொல்லி விட்டு புறப்பட்டாள்.
அவள் சென்றதும் நிழலியின் அருகில் வந்தவன் , “மிஸ் நிழலி நீங்க எப்போ இருந்து எங்க பிரண்ட்ஷிப்க்கு வில்லியானிங்க?” எனக் கேட்க அவனை முறைத்தவள் ” நான் உண்மை தான் சொன்னேன் ” என பேசவும் ” ஷட் அப் !” எனக் கத்த, அவளதிர்ந்து விட்டாள்.
“நீ என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டே இருக்க நிழலி ! தயவு செய்து சொல்றேன், எனக்கும் அதிதிக்கும் நடுவுல நீ வராதே ! அவகிட்ட போய் உண்மை சொல்றேன், அவளையும் ஹர்ட் பண்ணிட்டு இருக்க. இங்க பார், எனக்கு பேபியே வந்தாலும் அதிதி தான் ஃபர்ஸ்ட் புருஞ்ச்கோ !” என்றான்.
விரக்தியில் சிரித்தவள், “பேச, நல்லா தான் இருக்கும் சாகரா ! பட் பிராக்டிக்கலா ஒத்து வராது . மனுசங்க எல்லாரும் ஒரு நாள் மாறுவாங்க. அதுல நீயோ நானோ விதி விலக்குனு நினைக்கறீயா? “
“யா, யூ ஆர் ரைட் பேபி ! மனுசங்க மாறுவாங்க. வாட் அபௌட் யூ ! நீயும் உன் அன்பும் அதிதிக்கு ஸ்ரெஞ்சு ஆகுணுமா ?” என அவளது கூற்றை அவளுக்கே திசை திருப்ப,
“நான் அவ அம்மா, நான் எப்படி மாறுவேன் ?”
“நீ தான், நீயோ நானோ விதி விலக்கு இல்லைனு சொன்னீயே பேபி, மறந்துட்டீயா? லிஸன் என் அன்பு மாறாதுனு நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது இன்னும் என்னையும் அவளையும் நெருங்கத்தானே தவிர விலக இருக்காது. உனக்கும் சரி அவளுக்கும் எப்பையும் நான் உங்க கூட இருப்பேன். என் பிரண்ட்ஷிப் கடைசி வரைக்கும் வரும், அதை வார்த்தையா சொல்ல முடியாது வாழ்ந்து தானே காட்ட முடியும் . காட்டுறேன் பாரு ! அப்பையாவது இந்த சாகரனோட அன்பை புருஞ்சக்கறீயா பார்ப்போம் ” என்று காரில் ஏறி அமர, அவளும் அவன் கூறியதை உறுபோட்டு கொண்டே ஏறி அமர்ந்து, அவன் புறம் திரும்ப, கையில் இருந்த காயத்தை கண்டாள்.
“ஹேய் சாகரா ! என்ன இது? ” அவன் கையை தொட, “ஸ்ஸ்… “என்று கையை எடுத்துக் கொண்டான்.
“ஒண்ணுல்ல பஸ்ல இருந்து இறங்கறச்ச, பஸ் கம்பி கிழித்திடுத்து “
“ஹாஸ்பிட்டலுக்கு போனீயா? “
“இல்ல ” என்றான், அவனை முறைத்து விட்டு, நேராக வண்டியை ஹாஸ்பிட்டலுக்கு தான் விட்டாள். டி.டி போட்டு விட்டு மாத்திரை மருந்து வாங்கி கொண்டு அலுவலகத்திற்கு வந்தனர், அர்ச்சனா முன்னாடியே வந்து அலுவலகத்தை திறந்து வைத்திருந்தாள்.
இருவரும் சேர்ந்து வர, அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாது தன் வேலையை பார்க்கச் சென்றாள். சாகரனும் நிழலியும் அந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்து கொண்டிருந்தனர்.
நேரம் செல்லவே, உணவு நேரம் வர அர்ச்சனா சொல்லியே இருவரும் உணவு நேரம் என்பதை உணர்ந்தனர்.
அர்ச்சனா, புளிக்குழம்பும் கத்திரிக்காய் கூட்டும் கொண்டு வந்திருக்க, நிழலிக்கோ வீட்டிலிருந்து கொடுத்த எலும்பிச்சை சாதமும் உருளை கிழங்கு பொரியலும் இருந்தது.
சாகரனோ, தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கொண்டு வந்திருந்தான். ‘எப்பையும் தயிர் சாதமா? ‘ என எண்ணியவள் தன் உணவை பகிர்ந்து கொண்டாள். அர்ச்சனாவும் நிழலியும் உண்ண, தன்னவள், தன் அன்னையின் கை பக்குவத்தினாலான ஊறுகாயை ருசிக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தான்.
இது கல்லூரி காலத்திலிருந்தே வழக்கமான ஒன்று தான். சாகரன் கொண்டுவரும் உணவை அவள் தான் முதலில் ருசிப்பார்ப்பாள். கண்ணம்மாவின் கை பக்கும் அசைவ உணவிற்கும் மேலே ! அவள் பாதி உண்ட பின்பே, மீதி அவனுக்கு தருவாள். அதை எண்ணி பார்த்துக் கொண்டான்.
“ஐயங்கார், என்ன சாப்பிடாம என்னையே பார்த்திட்டு இருக்க?”
“அ… அது கை வலிக்குது நிழலி. அதான் சாப்பிடாம ” என இழுத்தான்.
“சொல்லு வேண்டியது தானே சாகரா ! அதுக்காக என் வாயவே பார்ப்பீயா? “என்றவள், சாதத்தை அவன் வாயருகே கொண்டு செல்ல, முதலில் அதிர்ந்து விழிந்தவன், பின் சகஜமாக வாங்கிக் கொண்டான். அர்ச்சனாவோ, வாயை பிளந்தாள். நிழலியின் கையால் உண்டவன், வாயை திறந்து இருக்கும் அர்ச்சனாவை பார்த்து நிழலி அறியாது ” கிளோஸ் தி டோர்” என்று சைகை செய்தான்.
உணவு வேளை(லை) முடிய, மீண்டும் வேலையை தொடர்ந்தனர். பணி நேரம் முடிய, மூவரும் கிளம்பினார்கள். அர்ச்சனா அவள் வண்டியில் கிளம்ப, தன் டிரைவரிடம் காரை, எடுத்து வீட்டில் விட சொல்லியவள், சாகரனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் பைக் ஷோ ரூமிற்கு வந்தாள்.
“இங்க எதுக்கு என்னை கூட்டிண்டு வந்திருக்க? “
“ம்ம்.. வேடிக்கை பார்க்க, யோவ் ஐயங்கார் இங்க எதுக்கு வருவாங்க பைக் வாங்க தான். உனக்கு பிடிச்ச பைக் சூஸ் பண்ணு வாங்கலாம் ” என்றாள்.
“எனக்கு பைக் வேணாம் நிழலி, நான் பஸ்லே வந்த போயிக்கிறேன் ப்ளீஸ் !” எனவும் அவனை முறைத்தவள்.
“நீ பஸ்ல வந்து போற லட்ஷணத்தை தான் பார்க்கறேனே ! ஒழுங்கா, உனக்கு பிடிச்ச பைக்கை செலக்ட் பண்ணு ! ” என்று விடாமல் அதிலே இருக்க, அவனும் தனக்கு பிடித்ததை விட, அவளுக்கு பிடித்த கருப்பு வண்ண பைக்கை தேர்வு செய்தான்.
ரெடி கேஸ் கொடுத்து பைக்கை வாங்கியவள், சம்பளத்தில் பிடித்து கொள்வதாக கூறினாள். வண்டியை அவனே வெளியே ஓட்டிக் கொண்டு வந்து நின்றான்.
“இப்படி பட்ட ஒரு ஸ்வீட் பாஸ் எல்லாருக்கும் கிடைச்சா எவ்வளவு நன்னா இருக்கும் !” என வழிய,
“எதுக்கு, அவா எல்லாரும் துண்டை போட்டு உட்காரவா ! “எனவும் பெரிதாய் சிரித்தான்.
“தேங்கஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் நிழலி !”என்றவன், ” அப்போ நான் கிளம்புறேன். ஆமா, நீ எப்படி போவ? ” எனக் கேட்க, புருவத்தை உயர்த்தி, அவனை முறைத்தவள், ” ஆட்டோல தானே வந்தோம் ஆட்டோலே நான் போயிக்கிறேன் “தன் தன்மானத்தை விட்டுக் கொடுக்காது, அவனிடம் பதிலளிக்க, அவன் எதிர்பாராத பதில் கிடைக்காமல் போனதால் சற்று முகம் வாடித்தான் போனான்.
இருந்தும் விடாது முயற்சியும் செய்தான், ” நிழலி, என்னை தப்பா எடுத்துக்காதே ! எனக்குன்னு சில எதிக்ஸ் இருக்கு அதை மீற முடியல ஸோ…! “என அவனிழுக்க,
“எதிக்ஸ் ? என்ன அது?”
“நான் முதன் முதலா பைக் ஆர் கார் வாங்கினாலோ , முதல்ல என் அம்மாவையோ இல்லை என் ஆம்படையாளையோ அழைச்சிண்டு போகணும் முடிவு பண்ணிருக்கேன். ஸோ என் எதிக்ஸ் மீற கூடாதுனு தான் உன்னை ட்ராப் பண்ணவா ன்னு கேட்கல, சாரி பேபி ! என்னுடைய வருங்காலம் உன்னோட சேர்ந்து போறாது பார்த்து பீல் பண்ணால் என்னால தாங்கிக்க முடியாது பேபி ! ” தன்னெஞ்சின் இடது புறத்தை தொட்டு கூற, இதுவரை அவன் கூறிய கூற்றை முறுவலுடன் கேட்டவள் கடைசியாக கூறிய வார்த்தைகளை கேட்டு கொஞ்ம் கோபமும் பொறாமையும் அவளுக்குள் எட்டிப் பார்த்தது, ‘ வருங்காலங்கறான் , ஆம்படையாள்ங்கறான் ஆனால் கண்ணுல காட்டல மாட்டீக்கிறானே,அவங்க யாரா இருக்கும்?அவங்களுக்கு ரொம்ப தான் முக்கியத்துவம் கொடுக்கறான் ! ‘ என யோசித்தவள் திடீரென எழும்பிய பொறாமையையும் கோவத்தையும் தட்டிப் படுக்க போட்டாள்.
“இட்ஸ் ஓகே சாகரா ! நான் ஆட்டோலே போயிக்கிறேன் ” ஓலாவில் ஆட்டோ இருக்கிறதா என்று பார்க்க, அவனுக்கு மேலும் வெறியானது, ‘ இவ வழிக்கே வர மாட்டாள் ! இவளை மாத்துவது சிரமம் டா சாகரா !’ என எண்ணியவன் இறங்கி வந்து,
“நிழலி !” என அழைத்தான். அவள் ‘என்ன’ என பார்க்க , ” வா, உன்னை ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போறேன்” எனவும் அவள் கேலியாக, “என்னாச்சு உன் எதிக்ஸ் ? மீற முடியாதுனு சொன்ன?”
“ம்ம்.. இப்பையும் நான் மீறல !” என்றான் அழுத்தமாக, “வாட் ?”
“ம்ம்… உன்னை நான், என் அம்மாவோட சாயலா தான் பார்க்கறேன். வா வந்து வண்டிலே ஏறு !” எனவும் அவள் விழிகள் கணிந்தது.
அவளிடம் அன்னையின் சாயலென்றாலும், மனதில் தன் உயிரின் சாயலாகவே எண்ணிகிறான் அவன்.
அவள் பைக்கில் ஏறி, தோளில் கைப் போட சென்றவள், குறும்பாக, “உங்க தோள்ல கைப் போட்டால், உங்களுக்கும் உங்க ஆம்படையாளுக்கும் ஏதும் பிரச்சனை இல்லையே ஐயங்கார் !”
‘ ஓ.. என் பிட்டை நேக்கே போடுறீயா ! ‘
“என் ஆம்படையாளுக்கு என் மேல் நம்பிக்கை அதிகம். நேக்கோ, அவாளுக்கோ எந்த பிரச்சனையும் இல்ல. நோக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னா போட்டுக்கோ ! ” பதில் கொடுக்க, அவளும் உதட்டை சிலுப்பிக் கொண்டு கையைப் போட்டிக் கொண்டாள்.
சிக்கனலில் வண்டி நிக்க, அதே சிக்கனலில் ஆதர்ஷனின் காரும் வந்து நின்றது. எதர்ச்சையாக அவன் திரும்ப, இருவரும் மிதியுந்தில் இருப்பதை பார்த்து வெகுன்றான். அவனுக்கு முன்னால் அமர்ந்த சாகரன் தெரியவில்லை பின்னால் அமர்ந்திருந்த நிழலியே தெரிய ! தோள் மீது கைபோட்டு சிரித்து பேசுவதை கண்டவன், கொதித்து போனான். ‘முன்னே யாரென ‘ யோசிப்பதற்குள் வண்டி கிளம்ப ஆரம்பித்தன.
‘என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு, நீ இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்துறீயா? என் வாழ்க்கைய பாழாக்கினது போல உன் வாழ்க்கையையும் பண்றேன் டி ! என் கல்யாணத்த நிறுத்தி, என்னை பார்த்து ஆம்பளையானு கேட்கும் படி வச்சிட்டேள டி , உன்னை எல்லார் முன்னாடியும் ஆசிங்கப் படுத்தறேன் !’ என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டவன்.
மறுநாள் அவளை கோட்டில் சந்திக்க, தன்னை பார்த்து முகச்சுழிப்புடன் நின்றவளை, பொது இடமென்று பார்க்காமல் அவளை ஏசினான் ஆதர்ஷன்.