கலைந்த ஓவியம்- 8
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அனைவருக்கும் பொது கல்வி என்பதைப் போல அனைவருக்கும் பொதுவானது தானே காதல்… பூவின் மேல் வேருக்கு இருக்கும் காதலுக்கும், அதே பூவின் மேல் வண்டுக்கு இருக்கும் காதலுக்கும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்..
தந்தையை போல் பார்த்துக் கொள்ளும் தமையனின் பாசமும், தாயை போல் பார்த்து கொள்ளும் தனைக்கியின் பாசமும் காதல் தானே… அந்த காதல் சிலருக்கு தாமதமாக கிடைக்கும் என்றால் சிலருக்கு அந்த காதல் கிடைக்காமல் போகிறது, சிலருக்கு அந்த காதல் இருந்தும் இல்லாத நிலை தான்…
இதோ நம் கதையிலும் அதே நிலையில் தான் மூன்று வேறுபட்ட அண்ணன் தங்கை உறவுகள்… தாய், தந்தை உடன் இருப்பதாலோ என்னவோ சகோதரனின் அன்பை புரிந்தும் புரியாமல் இருக்கும் ஜீவனாய் பூங்கொடி இருக்க, தந்தையில்லா தாய் அன்பில் வளர்ந்த நிவேதாவுக்கோ தந்தையின் நிழலை போல் தன்னைத் தொடரும் சகோதரனின் அன்பும் புரியவில்லை அவனின் பாசமும் கண்களுக்கு தெரியவில்லை…
இவர்களுக்கு மத்தியில் விதி விலக்காய் நம் சரணவணனும், மகிமா என்கிற மகாலட்சமியும்… காண்போம் இந்த (பாச)மலர்களின் மூலமாக மற்ற மலர்களில் வாசம் வீசுகிறதா?? இல்லையாயென?
பிளு பிளு பிளு பிளாம்மிபிளு பிளு பிளு ஐய்பிளு பிளு பிளு
என்ற பாடலை ரிங்க்டோனாக வைத்ததில் முதல் முறையாக வருத்தப்பட்டான் பூங்கொடியின் அண்ணன் கிருஷ்ணன்…
தற்போது கிருஷ்ணன் சிங்கப்பூரில் இருக்கும் மிகப்பெரிய (construction) கான்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை செய்கிறான்.
இந்தியாவிற்கும், சிங்கப்பூரிற்கும் இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்கள் நேர வித்தியாசம் இருக்கும், இந்தியாவின் நேரப்படி மதியம் ஒரு மணி என்றால் அதே சிங்கப்பூரில் மூன்று மணி முப்பது நிமிடங்களாக இருக்கும்…
இந்தியாவில் தற்போது மதியம் ஒரு மணி இருக்கும் என்பதால் அலைபேசியை சைலண்ட்டில் போடவில்லை. (நம்ம ஊருல மதியம் அதிகம் தூங்குவார்கள், அதுவும் விவசாயிகள் சொல்லவே வேண்டாம் காலையில் ஆறு மணிக்கு வந்து மதியம் வரை வேலையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தான் சற்று கண் மூடி படுபார்கள்) இந்த நேரத்தில் எவரும் அழைக்க மாட்டார்கள் என்ற அல்ப நம்பிக்கையில் போனை சைலண்ட்டில் போடாது அப்படியே விட்டுவிட்டான்…
தொலைபேசியின் அதிரலில் சட்டென பேண்ட் பாக்கெட்டிலிருந்த தொலைபேசியை அணைத்தவன் சுற்றிலும் பார்வையைப் பதித்தான். அவனுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அதனால் வந்த சங்கடம் தான் இது. அவர்களைப் பார்த்து பொதுவாக சிரித்தவன் “சாரி காய்ஸ்…” என மன்னிப்புக் கேட்டு வெளியேறினான். ஆபிஸ் கரீடிடோரில் நின்று அலைபேசியைப் பார்த்தான். அவன் வீட்டிலிருந்து தான் அழைத்து இருந்தார்கள்.
ஏதாவது அவசரம் என்றால் மட்டுமே இந்த நேரத்தில் அழைப்பு வரும் என நினைத்தவாறே மீண்டும் அதே நம்பருக்கு அழைத்தான். ஒரே ரிங்கில் எதிர் முனையில் அழைப்பு ஏற்க பட்டது. இவன் ஹலோ என்பதற்குள் எதிர் முனையில் “ஹலோ அண்ணா,..” என்ற குரல் கேட்டது…
ஒரு முறைக்கு இரு முறை தன் அலைபேசியின் தொடுத்திரையை பார்த்தவன் “சாரிங்க ஏதோ ராங்க் நம்பர்…” என அழைப்பைத் துண்டிக்கப் போனான்…
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சனியன், நாயே, என்ன நக்கலா கொன்றுவேன்…” என பூங்கொடி கத்தியவுடனே பக்கென சிரித்து விட்டான் அவளின் அண்ணன் கிருஷ்ணன்…
அவனின் சிரிப்பில் கடுப்பானவள் “மூஞ்சி, சிரிக்காத நாயே,..” என பல்லைக் கடிக்க, அவனுக்கோ அத்தனை சிரிப்பு….
“கழுதை நாயே, இப்படியே சிரிச்சிட்டே இருந்த கண்டிப்பா தேடி வந்து கொல்லுவேன் டா…” என மேலும் பற்களை கடித்தபடி மிரட்டினாள் அவனின் தங்கை…
“என்ன மகுடி, அதிசயமா போன் பண்ணி இருக்க,..” எனக் குதுகல குரலில் கேட்டான்.
“அதுவா உனக்கு அம்மா பொண்ணு பாத்து இருக்குன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்…” என பெருமையாகக் கூறினாள்.
“பார்ரா, என்னையும் ஒருத்தி சரின்னு சொல்லி இருக்கா, யாரு டி அது…” ஒரு ஆர்வம் அவனின் குரலில் தெரிந்தது.
“எல்லாம் உனக்கு தெரிஞ்சா பொண்ணு தான்…” அவனின் ஆர்வத்தாள் எழுந்த புன்னகையோடு கூறினாள்.
“யாரை சொல்ற, அடியே அந்த நெட்டை கொக்கு கௌசல்யாவை சொல்லலயே…” என்றான் படபடப்பாக
யானை தன் மேல் மண்ணை அள்ளி போட்டுக் கொள்வது போல கிருஷ்ணனிடம் கூறி அவளுக்கு அவளே மண்ணை அள்ளிக் கொட்டி கொண்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சரி,நான் அப்புறம் பேசறேன்…” கத்துவன், திட்டுவான் என இவள் நினைக்க, அவன் எதுவும் பேசாது அழைப்பை துண்டித்தது எங்கோ அபாய மணி அடிப்பது போல் தோன்றியது பூங்கோடிக்கு., இருந்தும் அதை அலட்டிக் கொள்ளாமல் சரவணனுக்கு சாப்பாடு கட்டிக் கொண்டு அவனின் தோட்டத்தை நோக்கி புறப்பட்டாள்… *******
ஹ்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.ம்ம்ம்மெல்லிசையே என் இதயத்தின்மெல்லிசையேஎன் உறவுக்கு இன்னிசையேஎன் உயிர் தொடும்நல்லிசையே என தொலைபேசி சத்தமிட்டு கத்த, அலைபேசியைப் பார்த்தாள் மகி… தொடுதிரையில் கிருஷ்ணா மாமா என்றிருந்தது. அவனின் பெயரைக் கண்டதும் இதழ்களில் மலர்ந்த சிறு புன்னகையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு…” என்றவனின் குரலில் இருந்த மாற்றம் நன்றாகவே தெரிந்தது மகிக்கு…
பூங்கொடி தன்னிடம் பேசியதை இவனிடமும் பேசி இருப்பாள் போல, அதனால் தன்னிடம் கோபமாக பேசுகிறான் என நினைத்தவள்
“மாமா,…” என மெல்ல அழைத்தாள்.. அது அறையினுள் வந்த நவினுக்கும் கேட்டது. நவின் உள்ளே வந்ததும் மரியாதை நிமத்தமாக எழுந்து “எக்ஸுமீ சார்…” என்றவள் நேராக வெயிட்டிங் ஹாலில் அமர்ந்துக் கொண்டாள்…
“மாமாவா, எவன் அவன்…” என நினைத்தபடியே தன் கேபினில் அமர்ந்தவனின் கண்கள் நொடிக்கொருமுறை வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தவளை வட்டமிட்டப்படியே இருந்தது… சோபாவில் கால்கள் மடக்கி வாகாக அமர்ந்துக் கொண்டவள்
“என்ன மாமா உன் வாய்ஸ்லயே அனல் பறக்குது, என்னாச்சு…” என வரவழைக்கப்பட்ட சாதாரணமானக் குரலில் கேட்டாள்…
“என்ன நடந்துச்சு மகி..” என அழுத்தமாகக் கேட்டான்.
மகி என்ற அழைப்பே அவன் கோபமாக இருக்கிறானென பறைசாற்ற, மெல்லிய குரலில்
“அது மாமா…” என ஏதோ சொல்ல வர,
‘ டேய் கோபம் பத்தல, இன்னும் சத்தமா பேசு அப்போ தான் இவ பயப்படுவாள்…’ என நினைத்தவன் அவள் பேசி முடிப்பதற்குள்
“பொய் சொன்ன வெட்டிருவேன் ராஸ்கல். உண்மையை சொல்லு, என்னாச்சு, என்ன நடந்தது…” எனக் கத்தினான், அவன் நினைத்தது போலவே அவனின் கத்தல் அவளிடம் வேலை செய்தது…
ஆம் மகியிடம் ஏதாவது உண்மையை வாங்க வேண்டுமென்றால் சரவணன் சற்று அதட்டிப் பேசினாலே போதும் அனைத்து உண்மையை உளறி விடுவாள்.. சரவணனிடம் மட்டுமல்ல கிருஷ்ணாவின் அதட்டலுக்கும், கோபத்திற்கும் பயந்து தான் போவாள்.நேற்று முன்தினம் சரவணனின் அதட்டலுக்கும் இது தான் காரணம்.
‘இனி வேலைக்கு செல்லவே மாட்டேன் உன் கூடவே இருக்கேன் அண்ணா…’ எனக் கூறியவள் திடீரென வேலைக்கு செல்கிறேன் எனப் புறப்பட்டு சென்றது சரவணனுக்கு சந்தேகத்தினை கொடுக்கவும் தான் அதட்டலாக பேசி அவளிடம் உண்மையை வாங்க நினைத்தான். அதற்குள் இவர்களுக்கு இடையில் பூங்கொடி வந்து ஏதோதோ கூறி சமாளித்தாள்… பூங்கொடியும் மகியின் பயத்தைப் பற்றி அறிவாள் அல்லவா…
சொல்லபோனால் மகியின இந்த பயத்தை பயன்படுத்தி தான் பூங்கொடியும்,வேணியும் தங்களின் திட்டத்தை செயல் படுத்த முயன்றனர். ஆனால் இவர்களுக்கு தெரியாத ஒன்று மகிக்கு நெருக்கமானவர்களின் கோபத்திற்கு மட்டும் தான் பயந்து நிற்பாள் மற்றவர்களின் கோபத்தை தூசியாய் கூட நினைக்க மாட்டாளென்று.. (அப்போ பூங்கொடி மிரட்டியதற்கு ஏன் அமைதியாய் நின்றாள் என்ற கேள்வி நிச்சியம் வரும்.. பூங்கொடியின் மிரட்டலுக்கு அவள் பயப்படவில்லை தன் அண்ணனின் காதலுக்காக தயங்கி நின்றாள்…)
“மாமா…” என அழைத்தவளின் குரல் வெளியிலேயே வரவில்லை, அவள் நன்றாக பயந்துவிட்டாள் என எண்ணியவன்
கிருஷ்ணாவுக்கு தெரியாத தன் உயிர் நண்பன் சரவணனை பற்றியும், மகுடிக்கு ஆடும் பாம்பாக இருக்கும் தன் தங்கையை பற்றியும். கிருஷ்ணா அப்படி கேட்கவும் சட்டென “ஹ்ம்ம் ஆமா மாமா,..”என பதில் கூறினாள்.
‘அது சரி,…’ என நினைத்த கிருஷ்ணாவோ,
“இல்ல எனக்கு புரியல பாப்பா, அவங்க இரண்டு பேரும் லவ் பண்ணா, நம்ம இரண்டு பேரும் ஏன் கல்யா., எனக்கு அந்த வார்த்தையை சொல்ல கூட வாய் வரல,ஆனா நீ…” நிஜமாகவே அத்தனை கோபம் வந்தது அவனுக்கு.
‘இந்த விசயத்தில் முழுக்க முழுக்க தன் அண்ணனுக்காக மட்டுமே யோசித்தவள் கிருஸ்ணனை மறந்து தான் போனாள்…)
“இல்லை மாமா, கொடி தான்…” என இழுத்தாள்…
“என்ன கொடி தான்… தெளிவா சொல்லு..” மீண்டுமொரு அதட்டல் அவனிடமிருந்து வெளிவந்தது. அவனின் அதட்டலில் நடந்த அனைத்தும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள்.
“அவ தான் ஏதோ அறிவில்லாம சொல்றான்னா உனக்கு எங்க போச்சு அறிவு, அவ எது சொன்னாலும் நம்பிடுவியா…” என கிட்டத்தட்ட கத்தவே செய்தான்.
“இல்லை, மாமா முதல்ல நானும் கொடி சொல்றதை நம்பல மாமா, ஆனா அண்ணாவும்,பூங்கொடியும் ஹக்…” என ஏதோ சொல்ல வரவும்”நீ தப்பு பண்ணிட்ட மகி…” என்றவனிடம் அடுத்து இவள் பேச வருவதற்குள் “ங்ங்..” என்ற சத்தத்தில் அவனின் அழைப்பு துண்டிக்கப் பட்டது…
கிருஷ்ணனின் கோபம் இவளுக்கு புதிது, சரவணன் கோபப்பட்டால் கூட இவளுக்காக முதலில் பேசுவது கிருஷ்ணாவாக தான் இருக்கும். தற்போது அவனே இவள் மீது கோபப்பட்டது அழுகை வரும் போல் இருந்தது…
கண்கள் இரண்டையும் கண்ணீர் சூழ்ந்து கொண்ட சமயம் மீண்டும் அவளின் அலைபேசி கத்தியது… கிருஷ்ணா தான் அழைத்து இருந்தான் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்
அவளிடம் இனி பதில் வாங்குவது சாத்தியம் இல்லை என நினைத்தவன்
அவன் தண்ணீரை நீட்டியதும் என்ன என்பதை போல் பார்த்தாள். அவளின் பார்வைக்கு பதில் பார்வைப் பார்த்தபடி நின்றவன் நீட்டிய கையை மடக்கவே இல்லை, இவ்வளவு நேரம் தன்னை தான் பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல என நினைத்தவள் சிவந்த கண்களுடன் முறைத்தாள்.
அவனைக் கொள்ளையிடும் கண்கள் குங்குமத்தை போல் சிவந்து,அதில் நீர் தழும்புவதைக் கண்டதும் அவளிடம் போனில் பேசியவனின் மேல் அத்தனை கோபம் வந்தது நவினுக்கு. அது அவனின் முகத்தில் பிரதிபலிக்க”முதல்ல தண்ணியை வாங்குங்க…” எனக் கடுமையான குரலில் கூறினான். அவனின் அதட்டல் ஏனோ அவளிடம் வேலை செய்ய சட்டென தண்ணீரை வாங்கி கொண்டாள்.
‘சிறுத்தை வேசம் போட்ட சில் வண்டு டா உன் பொண்டாட்டி…’ என மனம் அவளைக் கேலி செய்ய”நீ மூடு…” என்றவன் அவள் தண்ணீரை குடிக்கும் வரைக் கைகட்டி அவளையே பார்த்தான்.இரண்டு மிடறு பருகிய பின் “போதும்…” என தலையாட்டி வாட்டர் பாட்டிலை நீட்டிட,
அலைபேசியின் சத்தம் அந்த இல்லத்தயே நிறைக்க வழமை போலவே சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் சிவகாமி”நிவேதா, என் போன் அடிக்குது பாரு, எடுத்து பேசு…” என கத்தினார்.