ஒளி 15

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கல்லூரியில் விடுமுறை என்பதால் சக்தி தன் ஊருக்கு வந்திருந்தான். ஒரு தீர்க்கமான முடிவோடு தான் வந்திருந்தான்.. அங்கிருந்த கொஞ்சநாளிலே,தன் தாய் தனக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது தன் அக்கா தான் காரணம் என்று அப்ப அப்ப பேச்சில் சாடிக்கொண்டிருந்தார். தன் அக்காவோ வெளியே எதுவும் சொல்லாமல் தனக்குள்ளே பூட்டிவைத்துக்கொண்டு புலுங்கிகொண்டே வாழந்துகொண்டிருக்கிறாள் என அறிந்தான்.

” அக்கா…” என  அழைத்து அவள் அருகினில் அமர்ந்து பேசத் தொடங்கினான் சக்தி. ” சொல்லு சக்தி “

” அக்கா, நீ என்னோடு சென்னை வர்றீயா. அங்க சுந்தரம்பாள்ன்னு என் கூட வேலை பார்க்கிற ஒரு மேம் இருக்காங்க. அவங்க வீட்டுல மேல் போசன் காலியா இருக்கு. நீ வா அங்க உன்னைத் தங்கவைக்கிறேன்.  பாப்பாவையும் பக்கத்து பள்ளி சேர்த்துவிடுறேன். நீயும் வேலைக்கு போ.நீ தனியா  வாழ சம்மதமா
என்ன சொல்லுற அக்கா?.உன் மனசுல இருக்கிறத சொல்லு என்ன செயலாம்?.”

” டேய் என்னடா பேச்சு ?அவ எதுக்கு தனியா போகணும் நாங்க இல்லையா? நாங்க பார்த்துக்க மாட்டோமா?.” ராதா கேட்க,

” எத்தனை நாள் நீங்க பார்த்துபீங்க மா?,.”

” என்னபா சக்தி இப்படி கேட்குற ?அப்பா தெம்பு இருக்கிறவர பார்த்துபேன்டா.”
” அப்பறம் யாருப்பா பார்த்துப்பாங்க? “

” நீ பார்த்துக்கிற மாட்டியாடா ? “

” இப்படியே நீ பார்த்துக்க மாட்டியா, நான் பார்த்துகிறமாட்டியான்னு தான் பேசுறோம். ஆனால் அவளுக்கு என்ன தோணுது ஒருவார்த்தை கேட்டிங்களா?.. அவ என்ன பண்ண நினைக்கிறான்னு கேட்டிங்களா?.

அவள தன் பொண்ணா நினைச்சு நீங்க பார்த்துகிட்டது ரொம்ப நாளாச்சு மா.இப்ப நீங்க அவள ஒரு கணவனை இழந்த பெண்ணா அமங்கலியா இருக்கிற பெண்ணா தான் பார்க்கிறீங்க.இவளால தான் தன் மகனுக்கு கல்யாணம் ஆகலைனு சாடுறீங்க ” என்றதும்
தலைகுனிந்து நின்றார்.

இது என் வாழ்க்கைமா நான் எடுகிற முடிவுக்கு அக்காவை ஏன் தண்டிக்கிற.எனக்கு கல்யாணம் பண்ணிக்கத் தோணல. அதனால தான் வேண்டாம் சொல்லுறேன். ஆனால் அக்காவ நினைச்சுட்டு தான் சொல்லுறேன் ஏன்மா அக்காவ பேசுற?

உன்பொண்ணையே இன்னொருத்தவன் மனைவியா பார்க்கிற நாளைக்கு எனக்கு வரபோற என் மனைவிய நீ உன் பொண்ணாவ பார்ப்ப? அவள எப்படியெல்லாம் பேசுவ?.கடைசியில நீயும் மருமகள மகளா நினைக்காத மாமியாரா தானே இருக்க போற?

மாமா இறந்ததுக்கு அப்பறமா நீ தான்டா உன் அக்காவ பார்க்கனும் சொல்லிதானே கூட்டிட்டு வந்த? ஆனா, நான்
இன்னும் அவள அக்காவ தான் பார்க்கிறேன். நீ தான் வேலைகாரியா ஆக்கி வீட்டுகுள்ளையே முடக்கிப் போட்டு வச்சிருக்க.அப்பா வேலைக்கு போயிடா நீ அவள எதாவது பேசி குத்திக்காட்டுற. அவளுக்குள்ளையும் சில ஆசைகள் இருக்குமா.அத செய்றமோ இல்லையோ கேட்போமே மா.

அக்கா நீ சொல்லு, உன்மனசுகுள்ள என்னை இருக்கு ”  என கேட்டதும் சக்தியின் நெஞ்சில் சாய்ந்தவள் அழுதாள். மனதில் வைத்து புலுங்கியவை எல்லாம் கண்ணீராய் வெளியே வந்தது.
அவளை அழுக விட்டவன்.

” சொல்லுக்கா ?”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

” என் புள்ள கேட்கிறதை, நான் என் சொந்த காசுல மறுக்காம வாங்ககொடுக்கவாது நான் வேலைக்குபோனும்டா.

அவ யாரும் இல்லாதமாதிரி பிச்சைகாரிபோல இன்னோருதவங்கிட்ட கெஞ்சி திட்டுவாங்கி சாப்பிடறத பார்த்தா செத்துரலாம் போல தோணுது.என் சம்பாத்தியத்துல என் மகள நான் வாழவைக்கணும்.வேற எனக்கு எதுவும் ஆசையில்ல.என் சொந்த காலில் நின்னு யாரையும் நம்பி நான் இருக்க கூடாது.தனித்து நானும் என் பொண்ணும் வாழணும் டா.இதான் என் ஆசை..”

இதை கேட்ட அவளது அம்மாவிற்கு ஈட்டிவைத்து குத்தியதுபோன்றே இருந்தது..
” ஐய்யோ என்ன மன்னிச்சிருடி.இத்தனை கஷ்டத்த உனக்கு  கொடுத்திட்டேன் என்னைய மன்னிச்சிருடி அம்மாவ மன்னிச்சிருடி. “

” உன்னை மன்னிக்க நான் யாருமா? இன்னும் சரியா பெத்தவங்க, பசங்களை ஒரு மாதிரியும் பொண்ணுணா ஒருமாதிரி பார்க்க தான் செய்றாங்க.பொண்ணு புகுந்த வீட்டுக்கு போறவ, பையன் நம்ம கூடையே நம்மல பார்த்துக்கபோறவன்.ஒரு பார்ஸ்யாலிட்டி தானேமா.இப்பையே நீ என்கிட்ட இப்படி நடந்துகிட்ட வாழ வெட்டியா நான் வந்திருந்தேனா.

கல்யாணம் ஆகிற வரைக்கும் தான் நான் உன் பொண்ணா? கல்யாணம் ஆகிட்டா உன் பொண்ணு இல்லையாமா?.என்ன பண்ணாலும் நான் இன்னோருதரோட மனைவி அவ்வளவு தான். ஆனா, தம்பிக்கு கல்யாணம் ஆனாலும் உன் புள்ள. அப்படிதானேமா  “

தலைகுனிந்தார்.” இன்னொருத்தர நம்பி வாழுறது கொடுமைமா, தனக்குள்ளே தனக்கே கொடுத்துகிற தண்டனை.இனி என் பொண்ணுகாக தனியா வாழ போறேன்மா..

யாரு தடுத்தாலும் நான் போக தான் போறேன் என் பொண்ணு இன்னொருதரகிட்ட கைநீட்டி கேட்கிறது எனக்கு பிடிக்கலைமா.அப்பா என்னை மன்னிச்சிருங்கபா..உங்கள கஷ்டபடுத்திருந்தா.ஆனா நான் தனியா வாழ ஆசைபடுறேன்மா  ”  என்றுகூற இருவரும் அனுமதித்தனர்,..” என்னை விடுமா வர போற உன் மருமகளையாவது பொண்ணா பாருமா ”  என்றாள் தன்மகளின் முன் கையெடுத்துகும்பிட்டு அழுதார்.

சக்தி சுந்தராம்பாளிடம் பேசி வீட்டுக்கு வருவதாகவும் கூறினான்..” லீவிலே வேலையை முடித்துவிடலாம் ” என்று கூற வீட்டிற்கு தேவையானவை ஏற்கனவே இருந்ததை வேனிலும் இவர்கள் காரிலும் சென்றனர்..
விக்னேஷை உதவிக்கு அழைத்திருந்தான். முன்னதாகவே வேன் வருவதாகவும் அதில் ஜாமான்களை மட்டும் எடுத்து வை. நாம் அப்புறமாக அடிக்கி வைத்துகொள்ளலாம் என்றான் விக்னேஷ்ஷிடம்..

அந்த வீட்டிற்கு வர அந்த வீட்டை ஆராய்ந்தனர் ராதாவும் ஆறுமுகமும் பாதுகாப்பாகத் தான்இருந்தது.

” அப்பா வாங்கபா மாடில தான் வீடு ”  என்று விக்னேஷ் அழைத்துச்சென்றான்.சக்தி  ஆராதனாவை தூக்கிக்கொண்டு வந்தான். கதவை திறக்க, ” சப்ரைஸ் ”  என்றே கௌசியும் காயூவும் கத்த சக்திக்கு ஆச்சரியம் தான்.” ஹேய் நீங்க எப்படி இங்க?”

” சுந்தரம் அத்தை தான் சொன்னாங்க சாமி, இதான் நீங்க எங்கள குடும்பமா பார்க்கிற லட்சனமா? இருக்கட்டும் உங்களை பார்த்துகிறேன்  “

” அதுமாமி…” இழுக்க

” போதும்போதும்.” என்று ஆராதனாவை வாங்கிகொண்டாள்.உள்ளே கௌசி , காயூ , விக்னேஷ் ,ராமன், சுந்திரம் வருவதற்கு முன்னாடியே எல்லாத்தை சரியாக வைத்தனர். வந்தவர்கள் ரிலாக்ஸ்ஷாக இருந்தனர்..

” ஒய் குட்டி பெயர் உங்க பெயர் என்ன? ”  “ஆராதனா ” என்றாள்.

” என்ன படிக்கிறீங்க ?
” எல்கேஜி…. ” அவளிடம் காயூ பேச.அவரைப் பார்த்த ராதா சக்தியிடம் விசாரித்தார்.
” வாமா ” என்று சக்தி காயூவிடம் அழைத்துச்சென்றான்.

” காயூ இது அம்மா ராதா.இது அப்பா ஆறுமுகம்.இது அக்கா ஸ்வாதி.” காயூ இருவர் காலிலும் விழுக ஆசிர்வதினர்.” இதுகாயத்திரி மா  என்கூட வேலைபார்க்கிறாங்க. “

” ரொம்ப அழகா இருக்கமா? ” அவள் சிரிக்க ” எப்பையும் இப்படியே இருமா ” என்றார்.
காயூவைப் பார்த்ததும் தன் மனக்கணக்கில் அவளை சக்தியோடு சேர்த்துவைத்தே பார்த்துக்கொண்டார் அவளை மருமகளாகவே நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்.

விக்னேஷ் ஸ்வாதியின் கணவன் புகைப்படத்தை எங்கே வைக்க என்று கேட்டான்.அவர்கள் முழிக்க காயூவோ.  ” அண்ணா சாமி ரூம்ல ஓரமா வைங்க அண்ணா “

” எப்படிடா செத்தவங்க புகைப்படத்தை சாமிரூம்ல வைக்க சொல்லுற.. ” சுந்திராம்பாள் கேட்க

” இல்லைமா அவங்க சாகல இதோ, ஸ்வாதி அக்கா கிட்ட தான் அவங்க உயிர் இருக்கு.அதுமட்டுமில்லை ஹால்லை மாட்டினா,  அவங்க இறந்ததை நினைத்து பீல் பண்ணுவாங்க.அதுவே பூஜை அறையில இருந்தா.அவங்களையும் சாமிநினைத்து வணங்கிதனக்குள்ள இருக்க தைரியத்த கொண்டுவருவாங்க.ஒரு உத்வேகம் கிடைக்கும்,.”

” மாமி நல்லதான் பேசுறேள்  ” அவள் சிரிக்க. ஆரு குட்டி அவள் மடியில் அமர்ந்திருந்தாள் அவள் பேசுவதை பார்த்தவள்.” அம்மா நான் இவங்கள என்னானு சொல்லி கூப்பிடனும்  “அத்தைனு சொல்லுடா”  கௌசி கூற.

” அத்தை அத்தை…”  இருமுறை அழைக்க அவளை அணைத்து முத்தமிட்டாள்.கொஞ்சநேரம் அனைவரிடமும் பேசிவிட்டு கிளம்பினார்கள்.” சரி குட்டி அத்தை  கிளம்பிறேன்.
”  அடுத்து எப்ப வருவ அத்த?..”

” இனிமேல் சனி , ஞாயிறு ஆரு குட்டிய பார்க்க வருவேன் சரியா,..”

” ம்…” தலையாட்ட அவளுக்கொரு முத்தமிட்டாள்,
” அடிக்கடி வந்துட்டு போமா ”  ராதாவும் கூற ” கண்டிப்பா அண்ணிய நாங்க பார்த்துகிறோம். நீங்க கவலை படாதீங்கமா  ”  என்று கூறினாள்.கௌசி விக்னேஷோடு செல்ல, ராமன் தனது பைக்கில் செல்ல.காயூ தனியாக போனும் என்பதால் தான் இறக்கிவிடுவதாக கூறினான் சக்தி. முதலில் மறுத்தவள் பின் ஒத்துக்கொண்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவளை பேருந்து நிருத்ததில் இறக்கிவிடுமாறு கூறினாள்.அவனும் அவ்வாறே இறக்கிவிட ஆட்டோவிற்காகவும் பஸ்ஸிற்காகவும் காத்திருந்தாள்.

அவளை பார்த்துகொண்டிருந்தான் சக்தி
” என்னாச்சு சாமி என்னையே பார்க்குறேள். “

” இல்லை மாமி ரொம்ப நன்றி ” 

” எதுக்கு ? ” 

” நீ சொன்னதுனால தான் நான் வீட்டுக்கு போனேன் ” அங்க நடந்ததை கூறீனான்.
” நான் தான் சொல்லுறேன்ல பெண்களுக்கு , எப்பையும்  தனித்து வாழுறது ஐ மீன் இன்டிபெண்டண்டா தான் வாழ பிடிக்கும். இனி எல்லாமே நல்லாத நடக்கும் நல்ல வேலையா பார்த்து அனுப்பிவைங்க சாமி. பாப்பாவையும் நல்ல பள்ளில சேருங்க. அப்பறம் அவங்களே அவங்களைப் பார்த்துப்பாங்க.தூக்கிவிட ஆல் இருந்தா போதும் எழுந்து ஊண்டி நடந்திடுவாங்க, நீங்க அப்ப அப்ப ஆறுதலாபோய் பார்த்துங்க  ”  என்றாள்.

” சரி மாமி,நீ உன் வாழ்க்கை பத்தி என்ன முடிவு எடுத்திருக்க மாமி? “

” தெரியல சாமி போகுறது போகட்டும் பார்க்கலாம் ” பஸ் வந்தது, ஏறிச்சென்றாள்…

விடுமுறையும் முடிய ஜானிக்கு தான்பெரும் சந்தோசம் வேகவேகமாய் யாரையும் நினைக்காது சந்தோசமாக துள்ளிகுதித்துக்கொண்டு கிளம்பினான்.

கல்லூரியும் தொடங்கியது.சிவில் டிப்பார்மெண்ட் ஆசிரியர்களுக்கு மட்டும் மீட்டிங் வைத்தனர், அதில் ஆதியே பேசினார்.

” நம்ம காலேஜ்ல சிம்போசியம்(கருத்தரங்கு)
நம்ம டிப்பார்மெண்டிலிருந்து தான் ஆரம்பிக்குது,. அதற்கு மொத்த இன்ஜார்ஜும் காயூ மேம் தான் பார்க்கபோறாங்க. என்றதும் முதலில் உள்ளுக்குள் அதிர்ந்தவள் வெளிய காட்டிக்கொள்ளாது இருந்தாள். மற்ற யாவரும் பயந்தனர்.உங்களுக்கு எதாவது டவுட்னா உங்க கோலிக்ஸ் கேட்டுக்கோங்க.ஆல் தி பெஸ்ட்.யூ ஆர் டைம் ஸ்டார்ட் நைவ்.. ” என்றார் திமிராக.

” நன்றிசார்  ஐ வில் டூ மை பெஸ்ட்  ” அதே, திமிரோடு   கூறினாள். மீட்டீங் முடிந்து வெளியே வந்தனர்..

” பார்த்தீங்களா சுந்தரமா, அந்த ஆதி சார் எப்பையும் வொர்க் பிரிச்சுதானே கொடுப்பார். இன்னகி மொத்த வேலையும் காயூகிட்ட கொடுத்துருக்காரு.இந்த சின்ன பொண்ணு எல்லாத்தையும் எப்படி பார்க்கும்.  வந்த கொஞ்சா நாள் தான் ஆகுது இப்படி மொத்தவேலை திணிக்கிறாரு பாரேன்”  ராமன் கூறினார்.

” அப்படி என்ன இந்த சின்ன பொண்ணுமேல இத்தனை வஞ்சகம்? என்னதா கோபம் இருந்தாலும் நடக்கிற இந்த பங்சனோட மொத்த பொறுப்பை அவ தலையில கட்டிட்டார் “

” எனக்கென்ன மோ, உன்னை பழிவாங்க உன்னை வேலை விட்டு அனுப்ப பிளான் பண்றாரு நினைக்கிறேன் மாமி “

” ஆமாடா அவரு காயூவ இந்த வேலையில் சேர்க்கலையே.அதான் அவ மேல காட்டுறாரு ” விக்னேஷ்..

” இப்ப என்னாச்சு பா,என்னமோ என்னைய பாழுங்கிணத்துல தள்ளிவிட்டது மாதிரி புலம்புறீங்க, இங்க பாருங்க, நான் மட்டும் இத தனியா செய்ய போறதில்லை, அண்ட் என் குடும்பமான, நீங்க தனியா செய்ய
விட்டுவீங்களா சொல்லுங்க.நீங்க உதவி செய்ய மாட்டிங்களா? ராமன்ப்பா நீங்க சொல்லுங்க எனக்காக உதவி செய்ய வர மாட்டிங்களா ? “

” என்னடா இப்படி சொல்லிட்ட.உனக்கு பண்ணாமயா. கண்டிப்பா, நாங்க உனக்கு உதவி பண்ணுவோம் டா  ” ராமன் கூறினார்.

” உனக்காக நாங்க பேசுனா நீ என்னடி பேசுற?  “

” சுந்தரமா எப்படியும் ஒரு முடிவோட தான் இதை எனக்கு அவரு  இந்த வேலையைக் கொடுத்திருக்கார். அவரோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டாமா?.அதுனால இப்ப நாம புலம்பிறத்துக்கு வேலையில்லை மா.செயல் இறங்க போறோம்.
மாணவியா சிம்போசியத்தல கலந்திருக்கேன். இப்ப ஒரு ஆசிரியரா அதை   நடத்தப் போறேன் எனக்கு பெரிய சப்போர்டே  என் குடும்பம் தான்னு அவருக்கு தெரியல  பா,.”

” தங்கச்சிக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்துச்சு?.  “

”  எல்லாம் என் குடும்பத்தில இருந்துதான் அண்ணா.. “

நான்கு ஆண்டு மாணவர்களிடம் காயூ சக்தி , கௌசி , விக்னேஷ் சென்று இந்த சிம்போசியம் பற்றி கூறியும் யார் யார் எதில் கலந்துக்கப் போவதாகவும் யோசித்து நாளை பெயர் கொடுப்பதாகவும் கூறிச்சென்றார்கள்.

பத்துநாட்கள் கழித்து கல்லூரி வந்ததால். அனைவரும் நலம் விசாரித்தனர்..

” தேவ், உன்னோட சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்றோம் நாங்க ” தியாகு கூறினான்.
”  ஆமா குள்ளவாத்தே,
நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன். முக்கியமா தொக்கையும்  ” என்றான் ஜானி.

” அப்போ, என்னை யாரும் மிஸ் பண்ணல? என் சாப்பாட்டாத்தான் மிஸ் பண்ணிருக்கீங்க  ” என பொய் கோபம் கொண்டாள்.

” என்ன பண்றது நினைவில் இருப்பவையெல்லாம் சோறு சோறு சோறு” .
என்றான் பைசல், அவன் கூற,
தலையில்  கொண்டாள்..

” சரி பெங்களூர் டிரிப் எப்படி இருந்தது ” ஜானி கேட்க, ” செமயா என்ஜாய் பண்ணோம்.
” அங்க யாரு இருக்கா ? ” தாமஸ் கேட்க.  ” சித்தப்பாஸ் இருக்காங்க. சோ லீவுக்கு போனோம். ஹேய் எங்களுக்கு சிம்போசியம் நடக்க போகுதுபா ” என்றாள்.

” ஆரம்பிச்சுடாங்களா ?
இனி அதை பண்ணு இத பண்ணு டார்சர் பண்ணுவாங்களே  “

” ஆமா எங்களையும்சேர சொல்லி டார்சர் பண்றாங்க ” என்றாள் தர்ஷினி.

  ” “நாங்களாம் பேசிக்கலி வீட்டுவேலையே செய்ய மாட்டோம். இதுல இந்த வேலை தேவையா  ?” லத்திகா கூற….

” அடிப்பாவிகளா! நல்லா வாழ்றீங்கமா நீங்க லிட்டில் பிரின்ஸஸ் சொல்லி வீட்டுல ஒத்த வேலை பார்க்கிறது கிடையாது அப்படிதானே! கேட்டா அப்பாகிட்ட சொல்லிதருவேன் ஆட்டிகுட்டி சொல்லித்தருவேன்
கதவிடுறது. வேலை செய்யாம டிமிக்கி கொடுக்கிறது ” ஜானி கூறவே
” ஈஈஈ” என மூன்றுதேவிகளும் இளித்தனர்.

” சரி யாரு இன்ஜார்ஜ் இந்த சிம்போசியத்துக்கு?  ” தியாகு கேட்க,
” வேற யாரு எங்க அக்காதான்.”
” அடப்பாவத்த மொத்த வேலையும் அவங்கதானா?  “
” ஆமா பைசல், ஆதிசார் சொல்லிட்டாராம் “

” உங்க அக்கா என்ன சொன்னாங்க அதுக்கு ? ” தாமஸ் கேட்க,

” அவ ஒரு லூசு,  சரினு தான் சொல்லுவா  “

” எப்படி இவ்வளவு வேலையும் தனியா செய்ய முடியும் பிரிச்சுதானே கொடுப்பாங்க?  “

” ஆமாடா,அந்த சாருக்கு என்ன தாண்டா பிரச்சனை ” பைசல் கேட்டான்.
” தெரியலடா… சரி தேவ் உங்க அக்காக்கு என்ன உதவினாலும் எங்கிட்ட கேட்க சொல்லு, நாங்க பண்றோம்  “

” ஆமாமா நாங்க வெட்டியாதான் இருக்கோம் ”  தியாகு கூற,

” அதான் தெரியுதே, எப்பையும் கல்பெஞ்சே கதினு கிடைக்கிற வெட்டி பசங்கன்னு  ” தேவ் கூறினாள்.

”   சும்மா பேச்சுக்கு வெட்டிபசங்கன்னு, சொன்னா ரொம்ப பேசுற க்ளாஸ்க்கு ஓடிடு குள்ளவாத்தே “
” ப்பே  ” என்று சென்று விட்டாள்.,

அன்றைய கல்லூரி நாள் முடிய, வீட்டிற்கு வந்தவள்,  இரவு முழுதும் அந்த சிம்போசியத்துக்கான தலைப்பை தீம்மை தயாராகினாள்.கிட்ட தட்ட இரவானது.ஒன்று இரண்டல்ல பத்து தீம்மை தயார்செய்தாள்.ஆதியை பற்றித் தான் தெரியும் அல்லவா.ஒவ்வொரு தீமும் சிவில் இன்ஜினியரிங்களில் ஒவ்வொரு பகுதிக்கான சிறப்பை கொண்டாதாக இருந்தது.
மறுநாள் கல்லூரிக்கு வந்தாள். தான் தயாரித்த தீம் களை காட்ட, ஆதியிடம் சென்றாள்.

எல்லாத் தீம்களும் தரமாக இருக்க வியந்தவர்.பின்னும் சூழ்ச்சி செய்யவேண்டுமே.

இதில் எதுவுமே சரியாக இல்லை தனியாக இருக்கிறது, முழுமைஅடையவில்லை,
பலகாரணங்கள் கூறினார்..

அமைதியாக கைகட்டிக்கொண்டு நின்றாள்,” நீ படிச்சவா தானே .உனக்கு  இதுகூடத் தெரியாதா ?.ஒரு தீம் உன்னால ரெடிபண்ண முடியலையா?  ” என கேட்டார்.

” சார் நான் படிச்சவ தான். என் அறிவுக்கு எட்டுனதை நான் தயாரித்து கொண்டுவந்துருக்கேன்.இது சரியில்லை என்றால் உங்க அறிவு எட்டின தீம்மை தயார் செய்துகொடுங்கள் நாங்கள் செய்கிறோம்.”

” அப்ப எதுக்கு உன்னை இன்ஜார்ஜா போட்டிருக்கேன்.” என்னோட லெவளுக்கு நான் தயார்செய்து கொண்டு வந்துட்டேன் உங்க லெவளுக்கு நீங்க யோசித்து நீங்களே தீம்மை கொடுங்க.

குறுகிய நேரத்துல நிறையா வேலைகள் செய்யனும் சார் தீமிக்கே நாட்களை செலவிட முடியாது.இதில் ஒன்றைக்கூறுங்கள்.இல்லைன்ன நீங்களே சொல்லுங்க சார். அதுவுமில்லைன்னா,
சிம்போசியத்தைத் தள்ளி போட்டுறலாம்.எதுவும் செய்யாமல் இருந்தால்.யாரும் எங்களை கேட்க மாட்டாங்க, உங்களைத் தான் கேட்பாங்க  ”  என்றாள்.

” அவள் கூறியவதும் சரிதான் என்ன செய்தாலும்,  கேள்வி  என்னிடம் தானே கேட்பார்கள்  ‘ என்று யோசித்தவர் மீண்டும் அதனை ஆராய்ந்து ஒரு தீம்மைக் கொடுத்தார்.

” நன்றிசார்  ” என்றவள்.
அவரின் மனவோட்டத்தை அறிந்தவள்.
” உங்களை கேள்வி கேட்பதற்கு விடமாட்டேன் சார். ஐல் டூ மை பெஸ்ட்  “
என்று சென்றுவிட்டாள்..

‘ ச்ச,…இவள ஓடவிடலாம் பார்த்தா, இவ நம்மலுக்கே செக் வைக்கிறா.’ தான் நினைத்தது நடக்காமல் போனதை எண்ணி வெகுண்டார்.

தீம் ரெடியாக,என்ன என்ன ஈவண்ட்கள் அதை குறித்து யோசித்து யார் என்ன செய்ய போகிறார்கள்.,நான்கு ஆண்டு மாணவர்களுக்கும் அதில் பங்கு கொண்டனர் இதர மாணவர்களுக்கும் அதில் பங்கு உண்டு.எல்லாத்தை ஆராய்ந்தே கல்லூரி குடும்பத்தாரிடமே கலந்துகொண்டும்.
ஒவ்வொன்றையும் பார்த்தே செய்தாள்.பத்துநாட்கள் பாவம் இதேவேலையாக அலைந்திட ஜானியின் கண்களுக்கு  அவளின் தரிசனம் கிட்டவே இல்லை.

இவ்வாறு அத்தனையும் தயார் செய்தனர்.அதிலும் சிலவற்றை குறைசொல்லாமல் இல்லை ஆதி.அதையும் அதற்கெற்றார் போல் மாற்றினார்கள்.

அடுத்தநாள் சிம்போசியம் என்பதால்.மாணவர்களும் . டிரஷ் கோட் வைத்தனர்.புடைவையும் வேட்டியும் அதை உடுத்தியும் மேடையில் கலந்துகொள்ளலாம் என்றுதும் மாணவர்கள் சரியென  ஒத்துகொண்டனர்..சில பல அறிவுரைகளும் கூறினார்கள். அமைதிக்காக்கவும் என்று வழியுறுத்தினர் கருந்தரங்கில்.

அப்பறம் சாப்பாடு போடுவதாகவும் கூற அதற்கே கைதட்டல்  வேறு.கருத்தரங்கை தயார் செய்துவிட்டு போகுமாறு.
ஆதிகூறிவிட்டு சென்றார் .

அதுவும் கல்லூரி நேரத்தில் செய்யக் கூடாது முடிந்தபின்னே செய்யவேண்டும் என்றிட இரவானது மாணவிகளை அனுப்பிவைத்தாள். முதலில் பின் சுந்திராம்பாள் சென்றார்.கௌசியும் சென்றாள்.ராமனும் சக்தியும் விக்னேஷ் உடன் இருந்தனர். ” காயூ, நீ போ இனி நாங்க பார்த்துகிறோம்  “

” இல்லை  முடிச்சுட்டே போறேன்ப்பா, அப்பதான் திருப்தியா இருக்கும். “

” எங்கமேல நம்பிக்கை இல்லையா தங்கச்சி ? “

” அப்படி இல்லைண்ணா.முழுதாய் முடிச்சாதான் எனக்கு ஒரு நிம்மதி தூங்க முடியும்.”

ஜானியும் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான்.மறைவாக அவளது பாதுகாப்பிற்காக.

எல்லாம் முடியா எழுரை ஆனது.கல்லூரி வளாகமே இருட்டிருந்தது.” சக்தி, நீ காயூவ இறக்கி விட்டுட்டு  ”  என்றார் ராமன்.

” இல்லப்பா நானே போய்கிறேன்.” என்றாள்
” ரொம்ப நேரம் ஆச்சுடா காலம் சரியில்லை நீ அவன் கூடவே போ ”  என்றார். ” சரிபா”  என்று சக்தியோடு வண்டியில் சென்றாள்.அவள் சென்றதை உறுதிசெய்துவிட்டே ஜானியும் சென்றான்.

வீட்டிற்கு வந்தனர் வண்டியிலிருந்து இறங்கியவள் அவனை உள்ளே அழைத்தாள்.” உள்ள வாங்க சக்தி “
” இல்லை காயூ நான்… “

” அட ! வாங்க சாமி ” என்று அழைத்து வந்தாள்..

அம்மா அப்பாவிடம் முன்னாடியே தகவல் சொன்னதால், பதற்றமில்லை அவர்களுக்கு.

” யாருமா  இது ஜானியா?.” இதை கேட்டு
சக்தியோ முழித்தான்.
”  அப்பா, இது சக்தி சார்ப்பா.”

” ஓ…  சாரிமா தெரிலடா ” என்றார்.
கொஞ்சம் பேசினார்கள் இருவரும் பின், அவன் செல்வதாக கூற காயூவே வழியனுப்ப வந்தாள்.

” ஆமாம்,  ஏன் சாமி தயங்கினீங்க உள்ள வர ?”

” இல்லை எதாவது தப்பா நினைச்சுப்பாங்க தான். அது இது எதாவது  சொல்லிட்டா அதான். ” 

” ஹாஹா…இங்க எல்லோரும் என் மேல நம்பிக்கை வைத்திருக்காங்க சாமி.அப்பறம்  எங்க வீட்டுல  நாங்க  மனசை தான் பார்ப்போம். தப்பான எண்ணங்கள் இங்க இருக்காது “

” அப்ப என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சதா ? என்றான்.அவளோ
புரியாமல் பார்த்தவள் ” என்ன சாமி சொல்லுறீங்க?.”

” மனச தான் பார்ப்பீங்க சொன்னீங்கள, அதான் என்னோட மனசுல உள்ளது தெரிஞ்சதா கேட்டேன்.. “
ஒருபுன்னகை செய்தாள்.
அவனும் சிரித்துவிட்டு வண்டி ஸ்டார்ட் செய்தான்.

” சாமி…”

” ம்ம் சொல்லுங்க மாமி.”

” அது, பார்த்துப்போங்க.மெதுவா வண்டி ஓட்டுங்க ”  என்றாள்.

அவள் அப்படிச்சொல்ல, இவனுக்கோ  தன் மனையாளாகவே, காயூ தன்னை வழியனுப்ப வைப்பதாகவே தோன்றியது அவனுக்கு. ”  சரி ”  என்று சென்றுவிட்டான்.