எழிலி 29

திரையின் வெளிச்சத்தையும் தாண்டி அங்கே இருளே ஆக்கிரமித்து  இருந்தது…

சத்தம் போட்டே தன்னைக் காட்டிக் கொள்ளும் தவளை போலவே, எழிலி கேட்ட ஒரு கேள்வியால், அவனிடம் மாட்டிக்கொண்டதும் இல்லாமல் பக்கத்திலிருந்தவர்களிடம் பகையைச் சம்பாரிக்க நேர்ந்திருக்கும். 

அவனது மயக்கும் விழியும் வசீகர சிரிப்பும் பெண்ணவள் பருகிய நீரையும் வெளிக் கொணர, முன்னே யாரும் அமரவில்லை, இல்லையென்றால் இந்நேரம் குளித்து இருப்பார்கள்.

பக்கத்ததில் இருப்பவர்களின் மேல் பட, கோபமாக எழுந்தவரிடம்  தனது கைகுட்டையைக் கொடுத்து மன்னிப்பு கேட்டுச் சமாதானம் செய்தவன், அவள் தலையைத் தட்டினான்.

அதை எடுத்து விட்டு, அவனது
புஜத்தை இடித்தவள். ” எல்லாம் உங்களால் தான் சீனியர்…” பல்லைக் கடித்துக் கொண்டே கூறியவள், தன் ஆடையில் படிந்த நீரைத் தட்டிவிட்டாள்.

“வாயாடி!! நீ  கேள்வி கேட்ட நான் பதில் சொன்னேன். எல்லாம் என்னாலங்கற…” அவளை மேலும் சீண்டினான்.  இதழை சுளித்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

அதன் பின் இருவரின் கவனம் படத்தில் லயிக்க, படத்தில் இன்டெர்மிஷன் போட்டனர்    “உனக்கு எதுவும் வேணுமா வாயாடி?” என கேட்டு எழுந்தான். ” எனக்கு எதுவும் வேணாம் ” என்றாள் விராப்பாக..

“ஓகே” என்றவன் தோலைக் குலுக்கிவிட்டுச் சென்றான்.

‘ வேணாம் சொன்னா அப்படியே போயிருவானாக்கும் கெஞ்ச மாட்டானா? இதுவே ரம்யாவா இருந்தா தாங்கு தாங்குன்னு தாங்கிருப்பான். நான் யாரோ தானே!” லேசாக அவளிடம் விசும்பல் வந்தது. தனியாக அமர்ந்திருந்தவளுக்கு கொஞ்சம் பயம் வேறு வாசலைப் பாரத்தவாறே இருந்தாள்.

வெகு நேரம் கழித்து அவனும் வர, திரும்பிக் கொண்டாள். அவளைக் கடந்து வந்தமர்ந்தவனின் கையில் ஒரு சாக்லேட் ஐஸ் கிரீமும் சிக்கன் பப்ஸ், ஃபிங்கர் சிப்ஸும் இருந்தது.

விரப்பாக, பேசினாலும் தனக்கு பிடித்ததையே வாங்கி வைத்திருக்கும் கணவனை கொஞ்சம் ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

அவன் அவளை சீண்ட, சிக்கன் பப்ஸை வாய்க்குள் திணிக்க போகும் வேளையில் ஓரக் கண்ணால் தன் மனைவியை ஒரு தரம் பார்த்து,மீண்டும் “வேண்டுமா” என கேட்க, அவள் முறைப்பில் தோளை குலுக்கியவன், மீண்டும்  வாய்க்குள் திணிக்க போக, அவள்  அதைப் பிடுங்கிக் கொண்டாள்.

வனிதையின் சிறுப்பிள்ளைத் தனத்தை
ரசித்தவன்,அவளிடம் ஐஸ்கிரீமையும் நீட்டி “உனக்காக தான் ரெண்டையும் வாங்கினேன் சாப்பிடு” என்றான்.

‘ தனக்கு இது பிடிக்கும் இவனுக்கு எப்படி தெரியும்? ‘ சிந்தையில் கேட்க, அவளது மைண்ட் வாய்ஸ் வீக்கானதை மறந்தும், எண்ணிக் கொண்டிருக்க ” உன்னை போல,  நான் எதையும் மறக்க மாட்டேன் வாயாடி. நம்ம எல்லாரும் தியேட்டருக்கு ஒண்ணா படம் பார்க்க, வந்தோமே… நீ கூட சிக்கன் பப்ஸ் கேட்டு அடம்பண்ணி அதை வாங்கிட்டு தான் உள்ளையே வந்த, சின்ன பிள்ளை போல ஐஸ்க்ரீமை ட்ரெஸ் எல்லாம் கொட்டி நீ சாப்பிட்டது எனக்கு நியாபகம் இருக்கு …” என்றதும் அகல விரிந்தது விழி மட்டுமல்ல வாயும் கூட தான். அவன் கூற ஒருநொடி அவள் அம்பகம் காதலை சுமந்து அவனை பார்க்க, திரையில் வந்த சத்தம் அவளை மீண்டும் நினைவுக்கு  கொண்டு வந்தது.

படம் பார்த்து  கொண்டே அனைத்தையும் காலிச் செய்தனர். அவள் எதிர்பாராத நேரம் திரையில் பேயைக் காட்ட, பயத்தில் கத்திவிட்டாள்.. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவளை பார்த்து திரும்பி மீண்டும் திரையை பார்த்தனர்.

” ஹேய் ரிலாக்ஸ்” என அவள்  கையைபற்ற,  ஆனால் அவளால் தான் பயத்தில்  அதி வேகமாய் துடிக்கும் இதயத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவன் புஜத்தில் தஞ்சமானாள். உடல் நடுங்க, அவன் புஜத்தில்  முகத்தை புதைத்து கொண்டாள்.

” ரொம்ப பயமா இருந்தா வீட்டுக்கு போயிருலாம் எழிலி” அவன் கேட்க.

See More  என் நித்திய சுவாசம் நீ! – 5

” வேணாம் நீங்க பாருங்க…  நான் இப்படியே இருக்கேன்” அவன் புஜத்தை விட்டு அகல வில்லை… படம் முடிய விளக்குகள் எரிந்தது.

” பேய் செத்து போச்சா? ” தன் தலையை நிமிர்த்தாமல் கேட்க, ” செத்து போனதால தான் அது பேய்… ” என்றான்  வழிந்தோடிய நக்கலுடன்.

” ஆமால, படம் முடிஞ்சா ?”

” முடிஞ்சு வா போலாம்..”  அவளது கையைப்பற்றி குழந்தையாய்  அழைத்து சென்றான்.

இருவரும் வெளியே வந்தனர். “நீ இங்கயே இரு, நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன்…”  என்றான்.

தன் தலையை ஆட்டினாலும்  பயம் இன்னும் குறையாமல் இருக்க , அவளுடல் நடுங்கி கொண்டு  தான் இருந்தது. மீண்டும் போஸ்ட்ரைப் பார்க்க மேலும் கூடியது அவளது ஐயம்.  அவள் முன் வந்து வண்டியை நிறுத்த, ஏறி அமர்ந்தாள். அவள் கையைப்பற்றி தன் இடையை சுற்றி போடுக் கொண்டான். அவள் கேள்வியாய் பார்க்க,

”  நீ வேற பயத்தில் நடுங்கிட்டு இருக்க,  எங்கயாவது விழுந்துட்டேனா?  அதான் ” என்றான். அவளும் எதுவும் பேசாது, இறுக கட்டிக் கொண்டாள்.

சீதளக்காற்றும் அந்த இரவின் மொத்த ஆளுமையும்  மோனநிலைக்கு கொண்டு சொல்லும் வேளை,  ஆனால் அதை உணராத பேதையவளோ பயத்தை கெட்டியாகப் பிடித்து கொண்டிருக்கிறாள்.  அவள் முதுகில் கண்மூடி சாய்ந்தவள் தான் வீடு வந்த பிறகு தான் திறந்தாள்.

அவன் வண்டியை நிறுத்த, அவளோ வேக எட்டில் உள்ளே வந்து கற்பகத்தின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

” என்ன விழி மா படம் எப்படி இருந்துச்சு? ” கற்பகம் கேட்க, அவளோ  அவர் மடியைத்  தான் நாடினாள்.
” அவ எங்க படத்தை பார்த்தா? ” என்றான்.

” என்னாது  படத்த பார்க்காம என்னடா பண்ணீங்க? ” கண்ணில் ஆர்வமின்ன அவர் வேறெதையோ எண்ணி கேட்க, அவர் கேள்வி  புரிந்தவனாய் ” அப்பா…” என பல்லை கடித்தான்.

” ஏங்க சும்மா இருங்க… டேய் படம் தானே பார்க்க போனீங்க, அவ படம் பார்க்கலேன்னு சொல்லுற”

” மா… நாங்க போனது பேய் படம்மா. அதுல வர பேய்யைப் பார்த்து பயந்து, பாதி படம் பார்க்காம கண்ணை மூடிக்கிட்டா…! ரொம்ப பயந்துட்டா” என்றான்.

” ஏன்டா, முதல் முறையா படத்துக்கு   கூட்டிட்டு போற, பேய் படத்துக்கா கூட்டிட்டு போகணும்? ” சலித்துக் கொள்ள,

” இல்ல அத்தே! அவர் கேட்டார், போலாமா? இல்லை வேற படம் பார்க்கலாமான்னு? நான் தான்  பேய் படமே  பார்க்கலாம் சொன்னேன்…” தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“ம்ம்…  சரி தான். இப்ப நீ  தானே பயந்துட்டு இருக்க,  சாப்டு தூங்கும் போது, சாமி  கும்பிட்டு திருநீறு பூசிவிடுறேன். நல்ல  தூங்குவ, இப்போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா விழிமா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” என்றார். என்றும் காட்டும் அக்கறையோடு..

அவளும் தலையை ஆட்டிவிட்டு உள்ளே செல்ல, அவனும் விரிந்த அதரங்களுடன்  பின்னே சென்றான்.

“என்ன பிள்ளைகளோ” தலையில் அடித்துக் கொண்டு  சமையற்கட்டுக்குள்  சென்று விட்டார்.

அவள் உடையை மாற்ற, குளியறைக்குள் செல்ல, ” நான் வேணா  துணைக்கு வரட்டும் வாயாடி? ”  என குறுநகையைச் சூட்டிக் கொண்டு அவளை சீண்ட,

விழியைச் சுறுக்கி  முறைத்தவள்,துணைக்கு உள்ள வரணும் அவசியம் இல்லை.. வெளியவே நிக்கலாம்” என்றவள் வெளியே நிற்க கட்டளை இட்டவள், கதவை தாழிடாமல் உடையை மாறினாள்.

அவனும்  தன்னுடையில் இருந்தது கைலிக்கு மாறிருந்தான். அவள் வெளியே வர, ” பரவாயில்லை மேடமுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு போல…” அவன் கேட்ட கேள்விக்கு சற்று  நிமிர்ந்தே பதில் கூறினாள்.

See More  சிந்தையில் பதிந்த சித்திரமே - 5

” என் சீனியர் மேல வைக்கிற நம்பிக்கை, என் அப்பா மேல நான் வைக்கிற நம்பிக்கை  போல, ஒருநாளும் அது குறையாது, உடையாது…” அவள் குரலிலும்  தன்னை வெகுவாய் ஈர்க்கும் அந்த இரு அம்பகத்திலும்   அவள் காதலையும் நம்பிக்கையையும் உணர்த்தி விட்டுச் செல்ல, மக்கு ட்யூப் லைட் அனைவராலும் திட்ட படும் ரூபனோ இன்று கப்பென்று புடித்துக் கொண்டான்.

அவள் தன்னுள் முழுதாய் தேக்கி வைத்த காதலை, அவன் பெற்றுக் கொள்ள,  அடித்தளமிட்டு, நெஞ்சில் குறித்துக் கொண்டான்.

இரவு உணவை விழுங்கியவள், கற்பகம் கையால், திருநீறையும் பெற்றுக் கொண்டு, அறைக்குள் சென்று ஓரமாக படுத்துக் கொண்டாள்.. அவனும் வழமை போலவே புத்தகத்தைப் புரட்டினாலும் ஓர விழியால் அவளை கவனிக்காமல் இல்லை..

புரண்டு புரண்டு படுக்கும்  தன் மனையாளை பார்க்க  பாவமாக இருந்தது, கோழி தூக்கம் போல கண்ணசற மீண்டும் முழித்துக் கொள்வாள்.  இப்படியே  மூன்று முறை எழும்ப, உறங்க என்றே இருந்தாள். 

புத்தகத்தை மூடி வைத்தவன்..
அவள் அருகே அமர்ந்து, ” வாயாடி, எழுந்திரி…” என்றான். அவளும் ஏதும் கேட்காது எழுந்து அமர்ந்தாள்.

முகம் பயத்தில் கறுத்து இருந்தது… ” என் தோள்ல சாய்ந்துக்கோ,  நம்ம ரெண்டு பேரும் பாட்டுக் கேட்கலாம். அப்படியே தூக்கம் வந்தால் தூங்கு…” கனிவாய் பேச கன்னிவள் கரைந்தே போனாள். அவன் புஜத்தை  இறுகப் பற்றி,  தோளில் தன் முகத்தை அழுத்தினாள்..  காதொலிபானை இருவர் காதலில் மாட்டிக் கொண்டனர்.

செல்லில் சாவன் இசை பயன்பாட்டை இணைத்தான்.. ” யார் சாங்க்ஸ் கேட்ப? ” என்றான் பாடல்களை தேடியவாறே.

“ஏ. ஆர்…”

“ம்ம், எனக்கு…” என்னும் போதே ” யுவன் ” என்றாள்.

” அதானே பார்த்தேன்…! “என்று முறுவலித்தவன்  பாடலை ஒலிக்க விட்டான்.

இருவருக்குமே இந்த நிலை பிடித்துக் இருந்தது. இது போல தினமும் கிடைக்காதா என்று மனமேங்க, வேறு வழியின்றி, அப்பாடலை மட்டும் உள்வாங்கி கொண்டிருந்தனர்.

வார்த்தைகளென்ன வரிகளேன்ன  குரலென்ன இசைக்கும் இசையென்ன… பிரித்து பிரித்து பாராட்டவா,ஒன்றாய் இணைத்து  மனதை மயக்கிச் செல்லும் இசையை கொடுத்த இவனை பாராட்டாவ
இசையரசனே!! இசை புயலே!!!

“கண்ணில் நூறு வழியிருந்தால் கனவுகள் வருவதில்லை… ” வரிகளில் அவள் பார்வை வெறித்து இருந்தது.

அடுத்தடுத்து பாடல்கள் இருவரையும் கட்டிப் போட்டது… இன்னும்  தூங்காமல் விழித்து இருந்தாள் . தூக்கம் வந்தால், எங்கே இந்த  நிமிடத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ பயந்து முழித்தே இருக்க, அவனோ இன்னும் பயமகலாமல் தூங்காமல் விழித்து இருக்கிறாள் என்றெண்ணிக்  கொண்டான்.

” இன்னும் உனக்கு பயம் போகலையா? “

” இல்லை ” என்று குறும்பாய் தலையை அசைத்தாள்.

” வாய் மட்டும் நல்ல பேசு வாயாடி. ஆனால் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி  பயந்துட்டு இரு…” அவளை செல்லமாகக் கடிந்தான்.

அவளோ பதில் அளிக்காமல், உதட்டைப் பிதுக்க, அவள் எதிர்பாரா நேரம் அவள் இதழை இருவிரலில் சிறையெடுத்திருந்தான். இமைகள் சிறகாய் படபடக்க, இதயம் எகிற, விழிகள் மருள பார்த்து இருந்தாள்.

” வாய் பேசுற இந்த வாய என்ன பண்ணலாம்? ” நெற்றி சுறுக்கி கேட்க,

வதனமெனும் சோலையில், வியர்வை பூக்கள் பூக்க, நெஞ்சமென்னும் வனத்தில்    தென்றல் வீச,  மன்னனவனின் விழிப்போரில் மான்விழியால் மருளி மயங்க,
மங்கையவள் நிலையறிந்து இதழை விடுவித்து… ” பின்னாடி பார்த்துகிறேன்…” என்றான்  அவள் நெற்றி முட்டி.

மாயவனின் தாக்குதலில்  எழிலியவள் வதனம் சிவபேற, இதற்கு மேல்  இதே நிலை நீடித்தால்  
பெண்ணவள் என்னவாளோ…! சட்டென அவளும் ” எனக்கு  தூக்கம் வருது…” என்றுரைத்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

See More  வஞ்சிக்கொடியின் வசீகரனே - 21

உள்ளுக்குள் அவள் நிலையைக் கண்டு சிரித்து விட்டு ” குட் நைட் வாயாடி…” என்றவனும் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

மெல்ல கதிர்கள்  வானை தழுவ, அத்தீண்டலில் வெளுமையை சூட்டிக் கொள்ள,  விடியல் பிறந்தது.

அவன் விழிக்க, அவளோ இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

அவளை தொந்தரவு செய்யாது,  எழுந்து காலை கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்து தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

” என்னடா விழி இன்னும் எந்திருக்கலையா?நைட் தூங்கினாளா? இல்லையா?
” அக்கறையாய் வினவ.

“ம்.. தூங்கினா மா…” என்றான். அவரும் அவர்கள் அறைக்குள்  செல்ல, அவளோ மாதவிடாய் தரும் வலியில் சிக்குண்டு இருந்தாள்.

“அவள் அருகில் அமர்ந்து  தலையை வருடி வினவ, அவளோ” பீரியட்ஸ் அத்தே ” என்றாள். அவளை உறங்கச் சொல்லிட்டு  வெளியே வந்தார். அவனும் அவரிடம், அவள் நிலையை கேட்டு தெரிந்துக் கொண்டான்.

அதன் பின் இருவரின்  அக்கறையில் வலி மறந்து தேறினாள். நாளைப் பள்ளி செல்ல, அவன் எடுத்து வைக்க, அவளுமெழ, அவளை எழ விடாது அவளுக்கும்  சேர்த்தே எடுத்து வைத்தான்.

முதலில் இவை எல்லாம் அன்னைக்காக செய்கிறானென எண்ணியவளுக்கு ,ரம்யாவை தாங்கிய நாட்களும் நினைவுக்கு வர, தலையை சிலுப்பிக் கொண்டாள்.

இரவாகிட, கருவறையில் இருக்கும் சிசுவை போலவே உடலைச் சுறுக்கி படுத்து இருந்தாள்.. அதைக் கண்டதும் பதறி போனவன், அவளிடம் ” என்னாச்சு எழிலி, ரொம்ப வலிச்சா ஹாஸ்பிடல் போலாமா? ” கனிவாய் வினவ

” இந்த டைம் கால் ரொம்ப குடையும், அதான் வேற ஒண்ணும் இல்ல… தூங்கினால்  ஒண்ணும் தெரியாது சீனியர்” என்றாள் வலியில் பல்லைக் கடுத்தப்படி.

அவனோ டைகர் பாம்மை எடுத்து அவளருகில்  அமர்ந்து, கால்களை அவன் மடியில் வைக்க, பட்டென கால்களை எடுத்துக் கொண்டாள்.

“சீனியர், நீங்க போய் என் காலை பிடிச்சிட்டு” என்றவள் பதற..

” ஏன் நான் என்ன கடவுளா?  சாதாரண மனுசன்  தான் மா… கால்  வலிக்குது சொல்லும் போது பார்த்துட்டு சும்மா இருக்கச் சொல்லுறீயா? காலை கொடு!” என்றான்.

அவளோ, அவன் மடியில்  தயங்கியே கால்களை வைத்தாள்.” வலி இருக்கும் போது, எப்படி தூக்கம் வரும்? நீ படு நான் தேய்ச்சு விடுறேன்…”என்றான்.

அவளும் படுத்திக் கொண்டாள், நைட்டியை முட்டி வரை  எடுத்துவிட்டவன் பாம்மை கொண்டு தேய்த்தான். அவன் தீண்டலில் காதலோ காமமோ இல்லை  வெறும் அன்பும் அக்கறையும் நிறைந்தே இருக்க, பெண்ணவள் வலிக் குறைந்தது, நெஞ்சில் தேங்கிய பாரம் குறைந்ததாய் எண்ணினாள்.

அவனது கவனிப்பு அவன் மேல் இன்னும் காதலை கூட, எட்டாக் கனியேன எண்ணியவளுக்கு, உனக்கே உனக்கு என எழுத்தி கொடுத்த கடவுளுக்கு காலம் முழுக்க நன்றிக்கடன் பட்டிருப்பதாக எண்ணிக் கொண்டவள்.. அவன் புஜத்தில் முகத்தை அழுத்தி கண்ணீர் சிந்தினாள்.

அவளது தீடீர் செயலில் பயந்தவன்” என்னாச்சி? ” என  பதற, ” தலையை அசைத்து “ஒண்னுமில்லை” என்றாள்.

அவன் அழுகை கொஞ்சம் புரிந்து, புரியாமலும் இருக்க ” உன் வலி, துக்கம்,  சந்தோசம், கவலை எல்லாத்திலும் நான் துணையா இருப்பேன்.. நானும் மனுஷன் தான் எனக்கும் கோபம்,  ஆசை , போஸ்ஸ்சிவ் எல்லாம் இருக்கு…  அதை உரிமையானவங்க கிட்ட தான் கட்ட முடியும்.  அதை தான் நானும் செய்தேன். தப்புனா சாரி… ” அவள் பதிலை வேண்டி அவள் முகம் காண,  அவளோ ஏதும் சொல்லாது அவன்
மடியில் படுத்துக் கொண்டாள்.

அவன் சீகையை வருடி விட, சுகமாய் உறங்கி போனாள் பெண்ணவள்.

இந்நிலை நீடிக்குமா?