என் வாசம் நீ உன் சுவாசம் நான்-11

சூர்யாவுக்கும் சந்திராவுக்கும் வழக்கம் போலவே நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. நாட்கள் செல்ல செல்ல வயிற்றின் பாரமும் அதிகரிக்கத் தொடங்கியது.
“ஏன் சந்திரா நீ ஏன் பஸ்சுல வர்ற? உன்னோட கணவர் கிட்ட சொல்லி ஏதாவது ஆட்டோ ஏற்பாடு பண்ணிக்க வேண்டியதுதானே ?”
“நீதானேடா எனக்கு எல்லாம் பண்ணனும்? “சந்திராவின் மனம் அடித்துக் கொண்டது. அவள் எதையும் வாயால் சொல்வதாக இல்லை. அவளுக்கு மனதிற்குள் ஆயிரம் கற்பனைகள், எண்ணங்கள், ஆசைகள். இருந்தாலும் தான் அவனுக்கு சரியில்லை என்ற எண்ணம் மட்டும் அவளை துன்புறுத்திக் கொண்டே இருந்தது. இவர்களுக்குள் இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வருமோ தெரியவில்லை. எனக்கே முடியலையே அப்போ படிக்கறவங்க பாடு ? கஷ்டம்தான்.

அன்று மாலை ராகவ் வந்தான். டூ வீலர்லதானே ?(வாசகர் வாய்ஸ்)
அவனை பார்த்தாலே இவளுக்கு பிபி ஏறி விடும். அதிலும் டூ வீலர். அன்றைய தினத்திற்கு பிறகு அவனுடன் இனி எப்போதும் டூ வீலரில் செல்லக் கூடாது என்று தீர்மானித்திருந்தாள் .
அதன் படியே அவனிடம் வர முடியாது என்று தீர்மானமாக கூறி விட்டாள் . இருந்தும் அவன் அவளைக் கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தான்.
அப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டே சூர்யாவும் வந்தான்.
அவன் காரில் செல்லும்போது கை காட்டி அதில் இவள் ஏறிக் கொண்டாள் .
அவன் இவளை ஆச்சர்யமாகவேப் பார்த்தான்.
“என்ன என்ன பாக்கறீங்க வண்டிய எடுங்க ! “
இதனால் ராகவ் ஆடப் போகும் பேயாட்டத்தைப் பற்றி இவளுக்கு தெரியாதா ? இருந்தாலும் இந்த நொடி அவளுக்கு சூர்யாவே போதும் என்றிருந்தது. எம்மா அவன் வேணுமா? வேண்டாமா? ஒரு முடிவுக்கு வா.(இப்போ புரியுதா மனம் ஒரு குரங்கு)
எங்க போகணும் சந்திரா ?
ம்ம் !எங்க போகனுன்னு உங்களுக்கு தெரியாதா ? வள் என்று விழுந்தாள்.
அவனுக்கு அவளின் உடல் அசதியும் மனச் சோர்வும் புரிந்தது. காரை பார்த்து பார்த்து ஒட்டியவன் ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்தான்.
காரை வேகமாக திறந்து வந்து அவள் அருகில் நின்றுக் கொண்டான். அவளோ இறங்குவதற்க்கு சற்று சிரமப்பட்டாள்.
என்ன கைய பிடுச்சு ஹெல்ப் பண்ண மாட்டிங்களா ? அதட்டினாள்.
பயந்து போய் அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றான் . ஏனோ ராகவை பற்றிய பயமா? எதிர்காலத்தை பற்றிய பயமா? தெரியவில்லை. அவளுக்கு அவன் கைகள் தேவைப் பட்டது. அதில் ஒரு இதழ் ஒற்றல் கிடைத்திருக்கலாமோ? அவன் முகத்தை பார்த்தவளுக்கு மனம் ஏங்கியது. மெதுவாக அவளை அழைத்து சென்றான். இப்போதெல்லாம் சிறிது நடந்தாலே அவளுக்கு மூச்சிரைக்கிறது. மெதுவாக நின்று நின்றுதான் வந்தாள் .
“ரொம்ப வீக்கா இருக்கியே சந்திரா”.
இவள் வீட்டிற்கு வரும் நேரமெல்லாம் டிவி சீரியலில் வரும் உமாவுக்கு இப்போது 5ம் மாதம். (அன்னிக்கு ஒரு பொண்ண கடத்திக்கிட்டு போனாங்களே அதே பொண்ணுதான்) அவள் அன்னை அவளுக்கு முகம் துடைத்து போட்டு வைத்துக் கொண்டிருப்பதை தான் பார்த்துக் கொண்டிருப்பாள். இதெல்லாம் தனக்கு என்றுமே கிடைக்காதது என்று விரக்தி புன்னகையுடன் சென்று விடுவாள். நேரத்திற்கு காபி சாப்பாடு எல்லாம் கிடைத்து விடும். அதில் சிறிது பாசத்தை கலந்திருக்கலாம். இவள் அடிக்கடி சூர்யாவின் அன்னையை பார்க்க சென்றதற்கான காரணமும் அதுதான் . இவள் சொல்லவில்லை. ஆனால் வயதில் மூத்தவர் அவருக்குத் தெரியாதா ? சந்திராவுக்கும் காயத்ரிக்கும் சுந்தரி காட்டும் பாகுபாடுதான் சூர்யாவுக்கும் புரிந்து விட்டதே.
ஏனோ மனம் சுய பச்சாதாபத்தில் தவித்தது.
ஏதேதோ யோசித்தவள்,
“இது உங்க குழந்தையா இருந்திருக்கக் கூடாதா சூர்யா. வாய் விட்டே கேட்டு விட்டாள் “.
ஆனால் அதை கேட்கத்தான் அவன் அங்கு இல்லை. இவள் ஏதோ யோசிப்பது புரிந்தவன் கை கழுவப் போய் இருந்தான்.
இவளும் எழுந்து மெதுவாக வந்தாள் .
“நீ ஏன் தனியா வர ? நாந்தான் வருவேனே ?” முதலில் கைகளை கழுவிக் கொண்டவள், பிறகு முகத்தையும் கழுவினாள் . அவள் முகம் துடைக்க சட்டென தன் கைக்குட்டையை தந்தான். அதில் வந்த அவனின் வாசம் அவளுக்கு பிடித்திருந்தது. சந்தோசமாக முகத்தைத் துடைத்துக் கொண்டாள் .
“சார் வழுக்கிட போகுது. மேடத்தை புடிச்சுக்கிட்டு கூட்டிட்டு போங்க” வேலை செய்யும் பெண் சொன்னாள் . இவனும் , அவளை தண்ணியில் வழுக்கி விடாமல் அவளை மெதுவாக பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான். அவன் அவளை பார்த்துக் கொண்டது ஏதோ ஒரு பூவை தங்குவது போல இருந்தது. இதற்க்கு தானே அவள் பல வருடங்களாக ஏங்கி கொண்டிருக்கிறாள்.
பிறகு இருவரும் சிற்றுண்டியை உண்டு விட்டு கிளம்பினார்கள். அவள் முகம் சற்று தெளிந்திருந்தது .
“பாவம் தினமும் எப்படித்தான் வீட்டுக்கு போறாளோ ? “காதலனின் மனம் கவலைக் கொண்டது.
“எங்க போகணும் சந்திரா? அம்மா வீட்டுக்குத்தானே ? “
“ம்ம்! எனக்கு வேற எங்க போக்கிடம் இருக்கு?” சொல்லிக் கொண்டே அவன் தோளிலேயே சாய்ந்தவளை எழுப்ப அவனுக்கு ஏனோ மனம் வரவில்லை. அவன் தோளிலேயே சாய்ந்து உறங்கும் அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது . அவளுக்கு தேவையான கவனிப்பு அவள் வீட்டில் இருந்து கிடைக்கவில்லை என்பது அடுத்த முறை அவன் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதில் இருந்து புரிந்தது.
சந்திராவை வீட்டில் விட்டு விட்டு சூர்யா தன் வீட்டிற்கு வருவதற்க்கு சற்று நேரமாகி விட்டது. அன்னையிடமும் தெரிவித்து விட்டான். அதனால் அவன் அன்னை கவலை இல்லாமல் இருந்தார்.
மகளின் முகத்தில் சோர்வும் கூட சேர்ந்து இருந்த பொலிவும், அவள் சூர்யாவுடன் தான் வந்திருக்கிறாள் என்பதை கணேசனுக்கு சொல்லி விட்டது.
அதற்க்கு முன்பேதான் ராகவ் வீட்டிற்க்கு வந்து கத்திக் கொண்டிருக்கிறானே ? இன்னும் வேறு என்ன வேண்டும்?
வீட்டிற்கு வந்த சந்திராவை பார்த்தவன் குதிக்க ஆரம்பித்து விட்டான்.
“என்னடி உனக்கு அவ்ளோ திமிரு, நான் உனக்காக வந்து காத்துகிட்டு இருக்கேன். நீ வேற எவன் கூடையோ போய் ஊர சுத்திட்டு வர ?”
அவள் பதில் ஏதும் சொல்லாமல் பையை வைத்து விட்டு கை கால் கழுவப் போனாள் .
“மாப்பிளை இருங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க. புள்ளத்தாச்சி பொண்ணு. ரொம்ப முடியாம வந்திருக்கா”. சமாதனப் படுத்த முயன்றார் கணேசன்.
ராகவனுக்கு ஏதோ தன் சொத்தே போனது போல அத்தனை ஆத்திரம். அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கேன். பதிலே சொல்லாம போற ?” கோபத்தில் அவள் பின் தலையை பிடித்து உலுக்கி பளார் என்று கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
கணேசனுக்கு வந்த கோபத்தில், “ராகவன் வீட்டை விட்டு வெளில போங்க” கத்தினார்.
“என்னங்க யாரை பார்த்து என்ன சொல்லறீங்க? அதிர்ச்சியாக கேட்டாள் சுந்தரி.
“என்னோட பொண்ண அடிச்சவனே பார்த்து வெளில போகச் சொல்லறேன்”
“இவளுக்காக நம்ம வீட்டு மாப்பிள்ளையை நீங்க அவமானப் படுத்துவீங்களா ?” கத்தினாள் சுந்தரி.
“விடுங்க அத்தை நான் அப்புறமா வரேன்” நான் இதை சும்மா விட மாட்டேன். “உன்ன வச்சுக்கறேண்டி” பல்லை கடித்து விட்டு வேகமாக கோபத்துடன் சென்றான் ராகவ்.
வீட்டிற்கு வந்த சூர்யாவுக்கு மனதிற்குள் ஏதோ ஒரு பயம்……..
இனி இந்த பயப் பந்து சூர்யாவையும் சந்திராவையும் எப்படி பாடாய் படுத்தப் போகிறது என்று பார்க்கலாம்……..

பூக்கள் பூக்கும்…..