என்  வாசம் நீ உன் சுவாசம் நான் –4

முதல்ல சந்திரா சூர்யாவை பத்தி  ஆரம்பிக்கலாமா? இல்ல மகேச பத்தி ஆரம்பிக்கலாமா ? பல வித ஆராய்ச்சிகளுக்கு பிறகு என்னுடைய சிறிய மூளை என்ன சொல்லியது என்றால்! அதெல்லாம் இருக்கான்னு கேட்கப்படாது .. அப்புறம் கைப்பிள்ளை கதறி கதறி அழும்.  எப்படி தெரியுமா ? சூர்யா ஒரு நாள் அழுவானே  அந்த மாதிரி…..

அந்த ஈஸ்வரன் மேல பாரத்தை போட்டு அந்த மகேஸ்வரனை பத்தியே  ஆரம்பிப்போம். கடவுளே சந்திராவை  நீதான் காப்பாத்தணும். மகேஷ்கிட்டேர்ந்து மட்டுமா ? இல்ல இன்னொருத்தர் இருக்காரே அவர்கிட்டேர்ந்துமா? (கடவுளின் குரல்தான் )

 “சொல்லுங்க மகேஷ் சார்”… வேண்டுமென்றே அந்த சாரை  அழுத்திச் சொன்னாள் .

சந்திரா, அம்மாவுக்கு திடீர்னு நேத்துலேர்ந்து உடம்புக்கு முடியல. முட்டி வலி.  ஹார்ட் செக் பண்ண சொல்லி இருக்காங்க”. “எனக்கு ஒடம்புல ஏதோ பெரிய பிரச்சனை. நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோன்னு” நேத்துலேர்ந்து ஒரே தொல்லை.

அதுக்கு” ?

நான் உன்ன தானே லவ் பண்ணறேன். வேற யாரை கட்டிக்க முடியும்” ? அவன் ஒருமையில் அழைத்தது  அவளுக்கு பளீரென்று புரிந்தது.

நீங்க உங்க காதல எங்கிட்ட இவ்ளோ நேர்மையா சொன்னது வரைக்கும் சந்தோஷம். ஆனா நான் உங்கள விரும்பல”.

அதனால என்ன ? நாம ரெண்டு பேரும்  முதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் பார்த்துக்கலாம்.”

சாரி! சார் நான் உங்கள மட்டும் இல்ல, வேற  யாரையுமே கல்யாணம் பண்ணிக்கற ஐடியால  இல்ல.”

ஏன்” ? (நமக்கு நேரம் நல்லா  வேல செய்யுதுப்பா)

அது அப்படிதான். எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல முடியாது.” ஒருவேளை அவள் வேறு ஏதாவது காரணம் சொல்லி இருக்கலாமோ ? எதிர்காலத்தில் அவனின் வார்த்தைகளால் அவள் துன்பபட்டிருக்க  மாட்டாளோ ?

சந்திரா ப்ளீஸ் சந்திரா..”

மகேஷ், ப்ளீஸ் என்னை  வற்புறுத்தாதீங்க”

மீண்டும் அடுத்த சில நாட்களில் திரும்பி வந்தான். “என்ன சந்திரா அம்மா எப்படி இருக்காங்க ? எதுக்கு ரெண்டு நாள் லீவுன்னு கூட கேட்கமாட்டேங்கறீங்க “?

நான் எதுக்கு கேட்கணும்” ?

என்னங்க! நீங்க கேட்காம வேற யார் கேட்பா” ?

மகேஷ் என்ன வற்புறுத்தாதீங்கன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்.”

நான் உங்கள ஒண்ணுமே சொல்லலீங்க ! ஏன் லீவுன்னு உரிமையோடு கேளுங்கன்னுதானே சொன்னேன்”. “அந்த உரிமையை நான் உனக்குத்தான் குடுத்துருக்கேன் சந்திரா.”

இவளுக்கு எரிச்சல் மண்டியது. சாரி சார்  எனக்கு நிறைய வேலை இருக்கு, நீங்க உங்க வேலைய பாக்கப் போறீங்களா ?

எங்கடி போகப் போறே ? இங்கதான் வேலை  பாக்கப் போற ? உன்ன மெதுவா கரெக்ட் பன்னரேண்டி.

மனதிற்குள் திட்டம் போட்டான்.

இவன் தொல்லை  பொறுக்க முடியாமல் ஸ்ரீதரிடம் சொல்லி விட்டாள் .

என்ன மகேஷ் உங்கள பத்தி தப்பான பேச்சு வருதே” ?

என்ன சார்? எதைப்பத்தி “?

சந்திரா !

ஒ !  அதுவா. அது ஒன்னும் இல்ல சார் எனக்கு அவங்கள புடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்ன புடிச்சுருக்குத்தான். எதையும் ஆபிசுல பேசாதீங்கன்னு சொன்னாங்க. நாந்தான் கொஞ்சம் ஆர்வக் கோளாறுல….”

அவன் பொய் உரைப்பது ஸ்ரீதருக்கு நன்றாகவே புரிந்தது.

மகேஷ் !நீங்க இப்பதான் வேலைல சேர்ந்திருக்கீங்க. உங்க பர் ஃஆமன்ஸ் ரொம்ப நல்லா  இருக்கு. அதனாலதான் உங்களுக்கு வார்னிங் மட்டும் கொடுக்கறேன். ஒழுங்கா நடந்துக்க முடியும்னா  இங்க இருக்கலாம். அதர் வைஸ்  உங்கள வேலைலேர்ந்து தூக்க வேண்டி இருக்கும். அண்ட் ஒன்  மோர்  திங்! இங்க நீங்க வேல செய்யறதுக்கு மட்டும்தான் வந்துருக்கீங்க. பொண்ணு பார்த்து கரெக்ட் பண்ண இல்ல.”

அலுவலகம் தாண்டியும்  அவன் தொல்லை அதிகரிக்கவே செய்தது.

அவள் வீட்டு  அட்ரஸ் கண்டுபிடித்தான். இவள் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது அடிக்கடி பைக்கில் வந்தான். என் கூட வாங்க நாம் சேர்ந்தே போகலாம் என்று தொல்லை(படுத்த) ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அவளுக்கு வேலையை விட்டு விடலாம் என்றுக் கூடத்  தோன்ற ஆரம்பித்து விட்டது.  பாவம் அவளின் பணத்  தேவை அவளை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் அவன் தொல்லை அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் ஸ்ரீதர் ,

கொஞ்ச நாள் பாக்கலாம் சந்திரா. இல்லனா வேலைய விட்டு தூக்கிடறேன்”, என்று சொல்லி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத வண்ணம் அவனை மார்கெட்டிங்கை பார்த்துக் கொள்ளவும் மாற்றினான். அதனால் பெருமளவு சந்திராவுக்கு தொல்லை குறைந்தது எனலாம். ஆனால்  முழுவதுமாக குறையவில்லை. மாறாக அதுவே குத்தல் பேச்சாக மாறியது. அவள் பிள்ளை உண்டாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு-சற்று வயிறு மேலே தெரிய ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொவொருவராய் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர். மெது மெதுவாய் சலசலப்புத் தோன்றியது. சந்திராவுக்கு திருமணம் நடக்கவில்லை என்பது அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே தெரியும் தானே ?

ஸ்ரீதரும் அதைப் பற்றி விசாரித்தான்.

சந்திரா”

எஸ் சார் !

உங்ககிட்ட ஒன்னும் கேட்கணும்.”

சொல்லுங்க சார்”

நீங்க  கண்டிப்பா தப்பா  நினைக்கக் கூடாது.”

சந்திராவின் மூளை உஷாரானது.

நீங்க  தப்பா  கேக்கலைன்னா தப்பா  நினைக்க மாட்டேன் ஸார் “

அது நீங்கமனதில் தைரியத்தை வரவாழைத்துக் கொண்டான். மகேஷை போன்றவர்களாக இருந்தால் எதைப்பற்றியும் எப்படியும் பேசி விடலாம். அதுவே நல்ல பண்பாளனாக இருந்தால் மற்றவர்களை தன்  வார்த்தைகள் காயப் படுத்திவிடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்யும். மாயாவிடம் சூர்யாவுக்கு இருந்ததுபோல.

இது எத்தனையாவது மாசம் சந்திரா ? “

பதில் சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சி அவளின் வாயை கட்டியது .

அவளை பார்க்க இவனுக்கு பாவமாக இருந்தது.

சந்திரா தப்பா  நினைக்காதீங்க. உங்களுக்கு லீவு வேணுமில்ல. அதான் எப்பதுலேர்ந்து  லீவு வேணும் எவ்ளோ மாசம் வேணும் இது எல்லாத்தையும் பிளான் பண்ணறதுக்குத்தான். வேற உங்களோட பர்சனலாம் எதுவும் இல்ல.”

ம்! உதடுகள் விரக்தியில் விரிந்தது. இதுதானே முதல் கேள்வி மனம் உடைந்தது.

சார்! எனக்கு இது நாலு நடக்குது. 5678 இன்னும் ஒரு நாலு  மாசம் சார். ம்! ஒரு ரெண்டு மாசம் போகட்டும் சார்.  நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டு நிலைமையை பார்த்துகிட்டு சொல்லறேன் சார்”

சந்திரா நீங்க ஒன்னும் தப்பா  நினக்கலியே ?

இல்ல சார்!

சந்திரா ரொம்ப கவனமா இருங்க”. தன்னை அறியாமல் ஸ்ரீதரின் கண்கள் குளத்தை நிரப்பிக் கொண்டது.

அதை சந்திராவால் பொறுத்துக்  கொள்ள முடியவில்லை. தன்னையும் அறியாமல்,”கவலைப்படாதீங்க சார். உங்களுக்கும் நல்லது நடக்கும். நீங்களும் மேடமும் ரொம்ப நல்லவங்க சார். கடவுள் உங்கள கை  விட மாட்டார்”.

நீயும் நல்லவதான் சந்திரா. யார் என்ன சொன்னாலும் நான் உன்ன நம்பறேன். அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்துச் சொன்னான். இதே வார்த்தைகளை ஏன் சூர்யா சொல்லவில்லை என்று அவள் ஏங்கும்  நாட்கள் தூரத்தில் இல்லை.

===========================================================================================

மகேஷ் முதலில் சாரா என்ற பெயரை அழைத்த நாள்,

பேருந்தில் ஜன்னலோரம் அமர இடம் கிடைத்தது சந்திராவுக்கு. பேருந்து முன்னோக்கி செல்ல அவள் மனம் பின்னோக்கிச் சென்றது.

  சூர்யாவும் சந்திராவும் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தனர். சூர்யா முதல் தளத்திலும் சந்திரா மூன்றாம் தளத்திலும் வசித்து வந்தனர். முதலில் அவர்களுக்குள் பெரியதாக பழக்கம் இல்லாவிட்டாலும், அடுத்த சில மாதங்களில் நன்றாகவே பழக்கம் ஏற்பட்டது.  அதுவும் இவர்கள் இருவருக்கும் என்று கூட சொல்ல முடியாது. சந்திராவுக்கும் சூர்யாவின் அன்னைக்கும்தான் பழக்கம்.

 சில சமயம் அவள் மாடிப் படி ஏறி வரும்போது அவன் எதிரில் வருவான். முதலில் ஒருவருக்கொருவர் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். பிறகு ஹாய்  ஹலோ என்று ஆரம்பித்தது. தன்  மகன் ஒரு பெண்ணை முகம் பார்த்து ஹாய்  சொல்வது அவன் அன்னைக்கே ஆச்சர்யம்தான்.  ஆம்! பெண்கள் விஷயத்தில் மட்டும்  இல்லை. அவன் எந்த விஷயத்திலும் மனதையும்  கவனத்தையும் சிதறவிட்டதில்லை . அவனுடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது படித்து பெரியாளாக வர வேண்டும் என்பதே.

முதன் முதலில் சந்திராவை பார்த்த சூர்யாவின் அன்னை சொன்னது இதுதான்.

ரொம்ப நல்ல பொண்ணா  இருக்காப்பா , இந்த காலத்துல யாரு வந்து கேட்டு உதவி பண்ணறா ? “

அன்னையின் வார்த்தைகளும் அவன் அவளிடம் பழக ஒருக்  காரணம் .

முதன் முதலில் சூர்யாவின் அன்னை சந்திராவின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவள் இல்லை.

கதவைதிறந்த சுந்தரி,

எஸ்!  என்றாள் .

சந்திரா வீடு? தயக்கத்துடன் கேட்டார் சூர்யாவின் அன்னை.

ஆமா  இதுதான் “

அவ இல்லையா” ?

இல்ல. நீங்க” ?

நான் புதுசா குடி வந்துருக்கேன்.”

ஓ ! உள்ள வாங்க. உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க” அழகாய் உபசரித்தார் சுந்தரி. எனக்கே ஆச்சர்யம்தான். ஏன்னா சீரியலுக்கு இது பிரேக் டைம் , இல்லனா நம்ம சுந்தரி கழுத்து எங்கையும் திரும்பாது.

காயத்ரி காயத்ரி !”

என்னம்மா” கூறிக் கொண்டே வெளியில் வந்தாள்  காயத்ரி.

ஆண்டிக்கு தண்ணி குடும்மா “

ஓகே மா” ! உள்ளே சென்றால் காயத்ரி .

அதற்குள் கடைக்கு சென்றிருந்த சந்திரா காலணிகளை எடுத்து ஷெல்பில் வைத்துவிட்டு உள்ளே வந்தாள் .

வாம்மா “

ஆன்டி, நீங்கதான் எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க. அவதான் உங்கள வாங்கன்னு கூப்பிடனும்” முத்து பல் வரிசை தெரிய சிரித்தாள் காயத்ரி.

அதனால என்னம்மா ?” நீரைப் பருகியவர்,

வர்ர  வெள்ளிக்கிழமை எங்களுக்கு வரலஷ்மி விரதம் இருக்கு. நீங்க  கண்டிப்பா வந்து  வெத்தலை பாக்கு  வாங்கிக்கணும்.

சரிங்க. கண்டிப்பா வரேன்”

பொண்ணுங்களையும் கூட்டிட்டு வாங்க”

பாக்கலாங்க . எல்லாம்  ஆபிசுக்கு  போய்டும்”

இந்தம்மா ” சந்திராவுக்கும் காயத்ரிக்கும்  கூட குங்குமம் கொடுத்தார்.

உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா”காயத்ரியின் முகவாயைப் பிடித்துச் சொன்னார்” தப்பா  எடுக்காதீங்க. எனக்கு பொண்ணு இல்லையா! அதனால் எந்த பெண்  குழந்தையை பார்த்தாலும் ஆச வந்துடும்” என்றாள்  சூர்யாவின் அன்னை.

அதனால் என்னங்க ?} இது சுந்தரி.

அப்போ வெள்ளிக்கிழமை பாக்கலாங்க”. விடைபெற்றுக் கொண்டார் சூர்யாவின் அன்னை.

மறு  நாள் காலை  அலுவலகத்துக்கு போகும்போது கண்ணாடியை பார்த்து முகத்தை சரிபடுத்திக் கொண்டு கிளம்பினாள் சந்திரா. கண்ணாடியை பார்ப்பது என்றால் தலை சரியாக இருக்கிறதா? பொட்டு சரியாக இருக்கிறதா? அவ்வளவுதான். இயற்கையிலேயே நல்ல நிறம் என்பதால் பவுடர் லிப்ஸ்டிக் எந்த வேலையும் கிடையாது. அதிலும் இந்த கொரோனா  வந்ததில் இருந்து முகக்கவசம் மட்டுமே முக்கியம் என்பதாகிவிட்டது. (எனக்கும் அப்படித்தான் . லிப்ஸ்டிக் எங்க இருக்குன்னு கூட தெரியல. ஆனா கலர் கலரா மாஸ்க் நிறைய வச்சுருக்கேன்)

அவள் இறங்கி வரும்போது சூர்யாவின் அன்னையை எதிரில் பார்த்தவள் ,”பை!ஆன்டி” என்று புன்னகைத்துவிட்டுப் போனாள் . எதேச்சையாக அதை ஜன்னலில் இருந்து பார்த்தான் சூர்யா. அவனையும் மீறி உதட்டில் புன்னகை வந்தது. எப்போதுமே பெயருக்கு ஏற்றாற்போல கொதித்துக் கொண்டிருக்கும் மகனுக்கு சிரிப்புக் கூட வருமா ? ஆச்சர்யமாக பார்த்தாள்  அன்னை.

செல்லும் வழி எல்லாம் ஏனோ சந்திராவுக்கு, அவங்க ஏன் காயத்ரியை மட்டும்  அழகா இருக்கான்னு சொன்னாங்க? என்னை ஏன் சொல்லலை ? நான் அழகா இல்லையா ? நான் இன்னும் கொஞ்சம் ஒழுங்கா ட்ரஸ் பண்ணணுமோ ? குனிந்து தன்  ஆடையைப் பார்த்தாள் . ஆரஞ்சு வர்ண சுடிதார். நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் காயத்ரி போடுவது போல பளிச்சென்று இல்லை . எப்போதுமே ஆடையில் பெரியதாக அக்கறை செலுத்தாதவளுக்கு இப்போது ஏனோ மனம் குன்றியது.

இது நல்லால்ல  காயத்ரி, வேற மாத்திக்கோ. உனக்கு வேண்ணா போய்  டிரஸ் எடுக்கலாமா ? இந்தாடி அந்த கலர் நல்லால்ல  இதைப் பாரு! விலை குறைச்சலா இருந்தா கொஞ்ச நாள்ல சாயம் போய்டும்” பார்த்துப்பார்த்து கவனிக்கும் அன்னையின் வார்த்தைகள் இப்போது அவளுக்கு, இருவரிடமும் இருக்கும் வேறுபாட்டை புரியவைக்க ஆரம்பித்தது.

அது எல்லாம் அடுத்த சில நிமிடங்களுக்குத்தான் . பேருந்தில் கும்பலாக இருந்தது. இதுக்கு இதுதான் சரி என்று மனதை மாற்றிக் கொண்டாள் .

மெதுவாக நடுப் பகுதிக்கு வந்தவள்அமர்ந்திருந்தவரிடம் பைகளைக் குடுத்து விட்டு கவனமாக கம்பியைப் பிடித்துக் கொண்டாள் .

சற்று நேரத்தில் உட்கார இடம் கிடைத்தது. அப்போது எதேச்சையாக பார்த்தால், சிக்னலில் அவன் வண்டியில் காத்துக் கொண்டிருந்தான்.

அவன் வண்டி எண்  தெரியும் என்பதால்,

இவனும் இதே ரூட்டுல  போறான். எங்க வேல பாக்கறான் ? மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

அடுத்த இரண்டாவது நாள்,

 மீண்டும் இவள் திரும்பி வருவதற்காக பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். அன்று யாரோ அமைச்சரின் வீட்டில் வருமான வரி ரெய்டு  நடந்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம். அதனால் அலுவலகத்தில் இருந்து அனைவருமே சீக்கிரம் கிளம்பி விட்டனர். பேருந்து வரவில்லை என்றாலும் பலர் கிடைத்த ஆட்டோ, ஷேர்  வான், ஷேர் ஆட்டோ என்று கிடைத்ததில் தொங்கிக்  கொண்டு சென்றனர். இவளோ எதிலும் ஏற  முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாக அவன் பைக்கில் வந்து நின்றான்.

ஏங்க!  வாங்க வந்து ஏறுங்க. சீக்கிரம் போகணும்”. உரிமையுடன் அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு கோபம் வந்தது.

இல்ல நான் வரல”

ஏங்க  ப்ளீஸ் நிலைமையை புரிஞ்சுக்கோங்க , வாங்க, சீக்கிரமா நாம வீட்டுக்கு போகணும் அதுதான் சேப்” .

இல்ல பரவால்ல நீங்க  போங்க” எதிரில் வந்த ஆட்டோவை கை  காட்டினாள், சந்திரா . அது நிற்காமல் சென்றது.

வண்டியை விட்டு கீழே இறங்கியவன் ,

ஏங்க!  ஒரே பிளாட்ல இருக்கோம், பக்கத்து  பக்கத்து  ஆபிஸ் உங்கள இந்த மாதிரி நிலமைல எப்படிங்க தனியா விட முடியும்?”

இல்லங்க! நான் உங்க கூட வந்தா தப்பாயிடும்”

“உனக்கு ஏதாவது அறிவிருக்கா ? வா, வந்து ஏறு”  சட்டென அவன் அப்படி திட்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதை யோசிப்பதற்குள் ,

யாரோ ஒரு குடிமகன் பொறுப்பாக பேருந்தின் மீது வீசிய கல், பேருந்திற்கு பதிலாக இவர்களை நோக்கி வந்தது. எதிரில் வரும் கல் சந்திராவின் பின் தலையில் படாமல், சட்டென சாரா என்று அவள் தலையை குனித்து  அவனும் குனிந்துக் கொண்டான். இருப்பினும் கல் அவன் தோளை பதம் பார்த்து விட்டது.

“வாங்க  வாங்க போகலாம்….. “பதட்டத்தில் வண்டிக்கு அருகில் ஓடினாள்.

இருவரும் ஒன்றாக ஒரே பைக்கில் பயணிக்க ஆரம்பித்தனர்…..

பூக்கள் பூக்கும்…….