என் வாசம் நீ உன் சுவாசம் நான்-22

“இப்பதான் யோசிக்கறீங்களா? இதுக்கு மேல எங்களால உங்க அட்டகாசம் தாங்க முடியாது. ஒடனே கல்யாணம்.என்ன அண்ணா சொல்லறீங்க?”
“நான் என்ன சொல்லறது சம்மந்தி அம்மா! அவ உங்க வீட்டு பொண்ணு”
அவங்கள சாப்பிட சொல்லி இருக்காங்க எல்லாரும் வெளில போங்க. யாராவது ஒருத்தர் மாட்டும் இருங்க அதட்டிக் கொண்டே வந்தாள் நர்ஸ்.
அவள் தந்தையுடன் இருக்க விரும்பினாள் .
“என்ன பாப்பா இப்படி பண்ணிட்டியே ? என் பொண்ணு என் பொண்ணுன்னு உன் வாழ்க்கையை பாழாக்கிட்டனே? குலுங்கி குலுங்கி அழுதார்.
” என்னப்பா இது சின்ன குழந்தையா நீங்க ? முதல்ல சாப்பாடு குடுங்க. எனக்கு சுத்தமா சக்தி இல்ல. கண்ணை துடைத்துக் கொண்டவர் மெதுவாக சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தார்.
“அப்பா! நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கறது உங்களுக்கு ஒகேதானே ?”
“இது என்ன கேள்வி தங்கம்?” கன்னத்தை வருடினார்.
அதே சமயம் கோபத்தினால் ராகவ் மருத்துவமனையை விட்டு வெளியேறி இருந்தான். அவன் அந்தப்பக்கம் செல்ல காயத்ரியும் சுந்தரியும் இந்த பக்கம் வந்திருந்தனர். அவள் உணவு உண்டு முடிக்கட்டும் என்று வெளியில் காத்திருந்தனர்.
சாரதா, சுந்தரியையும் காயத்ரியையும் நலம் விசாரித்தார். பிறகு சந்திராவை தன் மகனுக்கு பெண் கேட்டார்.
“நீங்க அவருகிட்டேதான் கேட்கணும்”
“ஏம்மா! உங்களுக்கும் அவ பொண்ணுதானே ?”
“இல்ல!சந்திரா எங்களோட பொண்ணு இல்ல. அவரோட தங்கச்சி பொண்ணு. நடந்த விஷயங்களைக் கூறினாள் சுந்தரி.
“ஆன்டி! அதே மாதிரி அக்கா இந்த எனக்காகத்தான் … அந்த குழந்தைக்கு அப்பா என்னோட கணவர்தான்.
“என்ன சொல்லறீங்க?” புரியாமல் கேட்டாள் சாரதா .
காதல் கதையில் இருந்து விளக்க ஆரம்பித்தாள் காயத்ரி.
ராகவும் காயத்ரியும் பெங்களுருவில் ஒன்றாக வேலை ,காதல், ஒரே அறையில் தங்குவது என்று லிவிங்கில் இருந்தவர்கள். இதை அவள் சொல்லும்போது சுந்தரி அவமானத்தால் நகர்ந்து சென்று விட்டாள் . அதில் காயத்ரி குழந்தை உண்டாகி கலைத்தும் விட்டாள் . இந்த விஷயம் அறிந்த ராகவின் பெற்றோர் காயத்ரியின் வீட்டிற்கே வந்து வெளியில் நின்று கத்த ஆரம்பித்து விட்டனர்.
“அம்மா இப்படி வெளில நின்னு கத்தாதீங்க. ரொம்ப அசிங்கமா இருக்கு”கெஞ்சினார் கணேசன்.
“உன் பொண்ணு என் பையனோட மாசக்கணக்குல ஒரே படுக்கைல இருந்தப்போ உனக்கு மானம் போகலையா?”
இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சென்றதும். தூக்கில் தொங்கி விட்டார். சந்திரா பார்த்து,காப்பாற்றி விட்டார்கள். ராகவின் பெற்றோர் காலில் விழுந்து கெஞ்சி அவர்கள் கேட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்தியது சந்திராதான் .அத்தனை கடுமையாக பேசினாள் .அதற்காக அவள் அலுவலகத்தில் இருந்து பலமுறை கடன் வாங்கி இருக்கிறாள். அது சூர்யாவுக்கும் தெரிந்ததே.
இவ்ளோ பெரிய அசிங்கத்தை எப்படி சந்திரா தன்னிடம் கூற முடியும்?பெரு மூச்சு விட்டாள் சாரதா.
கல்யாணத்துக்கப்புறம் நாலு மாசமா இருக்கும்போது ஆட்டோ சாஞ்சு நோண்டி வைச்சுருந்த பள்ளத்துல விழுந்து வயத்துல இருந்த குழந்தை ரொம்ப மோசமா சிதைஞ்சு.,சொல்ல முடியாமல் கேவினாள் . சாரதா அவளை அணைத்துக் கொண்டாள். நானே ரொம்ப சீரியஸா இருந்து தான் உயிர் பிழைச்சேன். அம்மா வீட்டுலதான் இருந்தேன். அவருக்கு என்னோட குளிக்காத உடம்பும், ரத்த வாடையும் ரொம்ப அருவருப்பா இருந்துச்சு. என்ன பாக்க வர்றத கூட நிறுத்திட்டாரு. அது, குழந்தை இழப்பு எல்லாம் சேர்ந்து எனக்கு மனசளவுல ரொம்ப பாதிப்பு. கிட்டத்தட்ட பைத்தியம் நிலைமைக்கு போய்ட்டேன். அப்பதான்,அக்கா உனக்கான குழந்தையை செயற்கை முறைல நான் பெத்துக்குடுக்கறேன்னு சொன்னா . அப்போ நான் இருந்த நிலமைல அக்காவை பத்தி யோசிக்க முடியல. ஏன் அப்பா அம்மாவால கூட யோசிக்க முடியல(அவள் அறியாத விஷயம் ராகவின் மிரட்டல்)முதல் தடவைலேயே அவளுக்கு க்ளிக் ஆகிடுச்சு. ஆனா அக்கா அவரை ஒரு நாள் கூட தப்பா பார்த்ததில்லை. அவ சூர்யா சார மட்டும்தான் விரும்பினா. அவளோட உடம்பு மனசு உயிர் எல்லாமே உங்க பையன்தான். அவரு படிச்சு பெரிய ஆளா வரணுங்கறதுக்காகத்தான் அவ தன்னோட நிலையை பத்தி வாயேதிறக்கலை. அவ எதைப்பத்தியும் வாய திறக்க மாட்டா . அவள் வச்ச கண்மூடித்தனமான பாசத்தை நாங்க உபயோகப்படுத்திகிட்டோம். உங்களுக்கு இதை சொல்ல வேண்டியது என்னோட கடமை.
நான் ஒரு சுயநலவாதி. லிவிங் ரிலேஷன் சிப் வேண்டான்னு எல்லாரும் சொல்லும்போது அவங்கள நாம பத்தாம் பசிலியா பாக்கறோம்.அதுவே அசிங்கம், டிப்ரஷன் வரும்போது? வீட்டு மனுசங்க செய்ய வேண்டியது கடமைன்னு நினைக்கிறோம்.
ஆழமான வார்த்தைகள். ஆமோதிப்பாய் தலை ஆட்டினார் சாரதா . இவற்றை எல்லாம் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மாயாவுக்கு இப்போது புரிந்தது. இந்த சந்திராவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதையே சந்திராவிடம் சொன்ன போது,
“அவள் தலை சாய்த்து அப்படியா?அப்போ ராஜூவை கல்யாணம் பண்ணிக்கோயேன்”
சூர்யாவுக்கும், சாரதாவுக்கும் தூக்கி வாரி போட்டது. அப்போ மாயா? கேட்கணுமா?
“நான் அவரை எப்படி?”
“நீங்க ரெண்டு பேரும்தான் நிறைய பேசல. ஆனா ராஜு ,அவர் ஆட்டோல நான் போகும்போது உன்ன பத்தி நிறைய பேசி இருக்கார். அவரு உன்ன எவ்ளோ விரும்பறாரு தெரியுமா? ரொம்ப நல்லவர். ஆயாவும் உன்ன நல்லா பார்த்துப்பாங்க.நான் ஏன் ராஜூவை சொல்லறேன்னு உனக்கு புரியும்போது நீ வேற லெவல்ல இருப்ப. எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும்போது உனக்கும் சந்தோசமான வாழ்க்கை கிடைச்சா ?

புருஷன்,பிள்ளைகள் இதுக்கெல்லாம் நமக்கும் தகுதி இருக்கு மாயா, கண்களில் குளம் கட்டியது . அதன் அர்த்தம் என்பது மாயாவுக்கும் புரிந்தது. அந்த வார்த்தைகள் மாயாவை உலுக்கி விட்டது.
“இது கட்டாயம் இல்லை . உன்னோட முடிவுதான்” திரும்பியவளின் கையைபிடித்தாள் மாயா.
“சரி! நான் கல்யாணம் பண்ணிக்கறேன்”,
மாயாவின் நெற்றியில் எம்பி முத்தமிட்டாள் சந்திரா . “காட் பிளஸ் யூ மாயா”
“மாயா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும்,

‘ஏண்டி! எனக்கும் அங்கம்மாவுக்கும்தான் சொக்கு பொடி போட்டன்னு நினச்சேன். அடுத்து மாயாவுமா?”
“டேய்! அந்த லிஸ்ட் பெரிய லிஸ்ட் டா “…… சாரதாவும் சேர்ந்து கிண்டலடித்தார்.
அன்னை, மாயா இருவருமே சம்மதம் சொல்லியதில் ராஜூவுக்குத்தான் ஏதாவது உள் குத்து இருக்குமோ என்னும் அளவுக்கு யோசனை வந்தது. வந்த அடுத்த முகூர்த்தத்திலேயே நால்வரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டனர். முதல் இரவில்……
சூர்யா சந்திராவை கையால் தூக்கிக் கொண்டான்.
“ப்ச்! கீழ விடுங்க பயமா இருக்கு”
“உனக்குதாண்டி பயமா இருக்கு. வயத்துல இருக்கற புள்ள ஜாலியா என்ஜாய் பண்ணுது” சொல்லிக் கொண்டே தன்னுடைய படுக்கையில் அவளை விட்டான். “எதுக்குடி அன்னிக்கு என்னோட இடத்துல எங்கம்மாவை கட்டிக்கிட்டு படுத்த ? “அவன் மேனி முழுவதுமே அவள் மேல் தான் இருந்தது கவனமாக. இப்போது அவளுக்கு உடல் எங்கும் கூச்சம் வந்து தொலைத்தது. உன்னோட பதிலுக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கறது?
“அது உங்களோட இடம்னு தெரிஞ்சுதான் படுத்துகிட்டேன்.
“கேடி” அப்பவே வாய விட்டு சொல்லி இருக்கலாமில்ல?
“படிப்பு படிப்புன்னு ஓடறவரை எப்படி தடுப்பணை போடறது. அதுவும் சும்மா படிப்பா ? நானும் கொஞ்சம் பொறுப்பா இருக்க வேணாமா?”, “சரி! நான் ஒரு கேள்வி கேக்கறேன்? நீங்க எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லையாம். மாயா புகழறா ?அப்படியா? “அவன் கன்னத்தை லேசாக கிள்ளி கொஞ்சினாள்.
“ம்ம்! அதுல என்ன?”
“நீ! அவ்ளோ நல்ல பையனா ?”
“ஏய்! நான் அம்மாவுக்கு அடுத்து பார்த்ததே உன்னைத்தானே. உன்ன பார்த்துட்டு அப்புறம் எப்படி வேற ஒருத்திய பாக்க முடியும்?” அவள் புரியாமல் விழித்தாள்.
“ஏ!மக்கு! முதன் முதல்ல உன்ன எங்கடி பார்த்தேன்?”
அதை நினைவு கூர்ந்தவள், “சீ! நீ பேட் பாய்” இப்படியே இரவில் கொஞ்சல்களும் கேள்வி பதிலும் தொடர்ந்தன.
“டெலிவரி ஆகற வரைக்கும் நான் குட் பாயாதான் இருக்கணும். இரு உங்க மாமியாரை அனுப்பி வைக்கறேன்”.
அவனை வெளியில் சென்றாலும் அவன் கஷ்டம் அவளுக்கு புரிந்தது.
அவள் ஆசைப்படியே பிரசவத்தின் போது அவள் கணவன் அருகில் இருந்தான். குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் கழித்து இவள் குழந்தையை காயத்ரியிடம் கொடுத்தாள். அவளின் ஏக்கம் இவளுக்கு தெரியாதா? குழந்தை வந்ததும், காயத்ரிக்கு உலகமே தெரியாமல் போயிற்று. குழந்தைக்கு சேவை செய்வதில் அவளுக்கு உணவு கூட மறந்து போயிற்று. மனமகிழ்ச்சியில் பழைய காயத்ரியாக அழகான தேவதையாக மாறிப் போனவளை மீண்டும் சுற்றி வர ஆரம்பித்தான் ராகவ்.
ராஜுவின் வீட்டில்…….
தயக்கத்துடன் திரும்பி படுத்துக் கொண்டவனை பார்க்க மாயாவுக்கு கஷ்டமாக இருந்தது. எத்தனையோ பேருக்கு மனைவியாக இருந்தவள், கணவனை எப்படி தள்ளி வைக்க முடியும, அதுவும் முதல் இரவில்? இவள் தானாகவே அவனிடம் சென்றாள்.அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். அவன் கையை தன் இடுப்பில் வைத்தாள் . ஆண் மகன் விழித்துக் கொண்டான்.
“உனக்கு என்ன புடிச்சிருக்கா?” ராஜு கேட்டான்.
அவளிடம் பதில் இல்லை.
“எனக்கு கால் இல்லையே?” அவன் உதடுகள் அவளிடம் சிக்கி இருந்தன.
அவளுக்கு வலித்து விடுமோ என்னும்படி அவளை அவன் பார்த்துக் கொண்டான். முத்தங்கள் கூட பூவுக்கு கொடுப்பது போலவே இருந்தது. எத்தனையோ வெறி பிடித்தவர்கள் மத்தியில் இருந்தவளுக்கு இது ஒரு இன்ப உணர்வாக இருந்தது. அவள் வயது அவன் உடலுக்கு ஏங்கியது. அவனின் கொஞ்சலினால் அவளுக்கு பழைய நினைவுகளை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தான் ராஜு. அன்று மட்டும் அல்ல. எப்போதுமே. உடலுறவில் ஆர்மபித்த அவர்கள் பந்தம் மனதையும் விட்டு வைக்கவில்லை.
அதற்க்கு காரணம்,
கால் இல்லாத ராஜு, அவன் கனவுப்படியே மனைவியை தடகள வீராங்கனை ஆக்கினான். அவன் விருப்பத்தை சொன்ன பொது மாயாவின் உணர்ச்சிகளை சந்தோசத்தை சொல்ல முடியாது.எந்த அளவுக்கு காலம் அவளை பாதாளத்தில் தள்ளியதோ அதை விட வேகமாக வானத்தில் பறக்க வைத்தது.அதற்காக அவளும் ராஜுவும் செய்த தியாகங்கள் அதிகம்தான். பட்ட கஷ்டங்களும் அதிகம்தான். மாயாவுக்கு இப்போது இதே வீட்டில் வேலைக்காரியாக இரு என்று சொன்ன அண்ணன் குடும்பத்தை பற்றிய கவலை இல்லை . அவர்கள் தன்னை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்ற ஏக்கம் இல்லை.
எந்த ஊருக்காக பயந்து ஆயா மாயாவை வேணடாம் என்றாளோ அதே ஊர் இன்று மாயாவின் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் தங்கம் வென்ற என்ற செய்தியை பார்த்த போது பக்கத்து வீட்டு ஆண்டாள் இவளைக் கட்டிக் கொண்டாள் . புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் ஆயா . அவளுடன் இருந்த ராஜூவுக்கோ கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பூக்களாக கொட்டியது…….

குழந்தையை காயத்ரியிடம் கொடுத்தவர்கள், அடுத்த சில வாரங்களில் ரிசெப்ஷன் வைத்தார்கள். அதற்க்கு ஸ்ரீ வரவில்லை.
“சார் நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தோம்”
“எனக்கும் வரணுன்னு ஆசைதான். ஏதோ வர முடியாமப்போச்சு. அதனால என்ன? சீக்கிரமா பொண்டாட்டி புள்ள குட்டிங்களோட வரேன்” குஷியாக சொன்னான் ஸ்ரீ.
“டேய் குட்டிங்கன்னா “
” ரெண்டு டா “
“சார பாருங்க தீயா வேல செஞ்சுருக்காரு” சந்திரா ஆச்சர்யமாக சொன்னாள் .
” நானும் எப்படி தீயா வேலை செய்யறேன்னு பாரு ” பெருமை பீத்தி கொண்டான் சூர்யா.
” இப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அன்னையின் வீட்டில் இருந்த கவனிப்பா அல்லது மருத்துவரின் கவனிப்பா என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த முறை எந்த பாதிப்பும் இன்றி பூரணிக்கு கர்ப்பம் நின்றது. இப்போது ஏழாவது மாதம்.
“அத்தை!நாங்க ஹனி மூன் போகப்போறோம். நீங்களும் வறீங்களா ?
“ம்ம் நானும் வந்தா அது சனி மூன்” நக்கலாக சொன்னாள் .
வீட்டிலேயே அவர்களுக்கு நேரம் போனது தெரியவில்லை.
வாலிப வயதிற்க்கான வயதில் காதலை சொல்லாமல் விட்டதற்கு அவர்களின் பொறுப்புகளும், மன முதிர்ச்சியுமே காரணம். ஆனால் இப்போது அவர்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அவர்கள் வாலிபத்தை இளமையை நன்றாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டார்கள். சூர்யாவை விடவும் சந்திரா தான் அவனுக்காக மிகவும் ஏங்கினாள். சில நாள் அவளுக்கு ஆசை அதிகரித்தால், அவனை படுத்தி எடுத்துவிடுவாள்.
அந்த குழந்தையின் நினைவும் அடிக்கடி வரும்.
“நீங்க ரெண்டு பேரும் எப்படி அந்த குழந்தையை அவ்ளோ ஈஸியா எடுத்துக்கிட்டிங்க?”
குழந்தை குழந்தைதான் அது யாரா இருந்தா என்ன? எப்படி வெறுப்பு காட்ட முடியும்? என்றாள் சாரதா.
“இவள் தலையில் லேசாக முட்டி,அந்த குழந்தைக்கு அப்பா ராகவ். ஆனா உன்னோட ரத்தம் சதைல வந்தது. காயத்ரி பாவம். இல்லனா நான் அந்த குழந்தையை குடுத்துருக்கவே மாட்டேன்”.
“ம்ம்! அந்த குழந்தை உங்களைத்தான் அப்பாவா நினச்சுது போல ” அவன் தோள் சாய்ந்தாள்.
“நீ ஏன் IVF க்கு ஒத்துக்கிட்ட சந்திரா ? அதுவும் கல்யாணத்துக்கு முன்ன ? உன்னோட லைப் யோசிக்கவே இல்லையா ?”
“எப்படி சூர்யா? காயத்ரி நிறைய தப்பு பண்ணி இருக்காத்தான். இன்னும் அவங்க வீட்டுல டைவர்ஸ் பண்ணிட்டா?அவ ராகவ எவ்ளோ லவ் பண்ண தெரியுமா? அதுலயும் குழந்தை அவ்ளோ மோசமான நிலமைல அழிஞ்சு போச்சுன்னா? அது ஒரு பொண்ணுக்கு எவ்ளோ பெரிய துன்பம். அப்போ என்னால அவளை பத்தி மட்டும்தான் யோசிக்க முடிஞ்சது. இது அவங்களுக்கான நன்றியா? இல்ல. அவங்க எல்லாருமே என்னோட குடும்பம். எனக்கு அம்மா, அப்பா, தங்கை. காயத்ரிதான் நான் பார்த்து பார்த்து வளர்த்த முதல் குழந்தை. என் குழந்தைக்காக நான் செய்யக் கூடாதா?
“நீ என்ன சொன்னாலும் சரி, இது தப்புதான்”.அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் .

“சரி சரி ! முடிஞ்சதைபத்தி இப்ப என்ன?” சமாதானப்படுத்தினான்.
“இனிமே பண்ண மாட்டேன்”.
“எப்டிங்க உங்களுக்கு அந்த குழந்தைக்கும் அப்படி ஒரு இணக்கம்?பெரிய விஷயம்” தலை தூக்கி அவன் கன்னம் உரசிக் கேட்டாள் .
“அன்னிக்கு நீ திடீர்னு என் கையை உன் வயத்துல வச்சப்போ இருந்த உணர்ச்சியை வாயால சொல்ல முடியாது. அப்படியே குறுகுறுன்னு கைக்குள்ள பூபூத்த மாதிரி., எனக்கு சொல்ல தெரியல. எல்லாருக்கும் குழந்தைய கைல வாங்கும் போது கிடைக்கற சந்தோஷம் எனக்கு மட்டும் அதுக்கு முன்னாடியே கிடைச்சுது. கண்களில் ஒளி தெரிய பேசியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
இப்போதெல்லாம் அவர்கள் எதை பற்றியும் கவலை படுவதே இல்லை. அவனின் சூட்டில் இவள் இன்பம் அடைந்தாள், இவளின் உணர்ச்சியில் அவன் குளிர் காய்ந்தான். சந்திராவை, அவளின் வாசத்தை சுவாசத்தை சூர்யா ஒவ்வொரு நாளும் அனுபவித்தான். அவர்கள் வாலிபத்தை, இளமையை அனுபவிக்கட்டும்.அன்று ஜன்னி கண்டவள் உயிருடன் இருப்பது அவனின் சுவாசத்தில்….
எந்த விதமான இலக்கும் இல்லாமல் இருந்த மாயா வாழ்வில் பூவாய் வாசமாய் சுவாசமாய் வந்தவன் ராஜு. அவன் மனதின் தெம்பு அவள் ஓடும் பாதையை பூவாக மாற்றி இருந்தது.
ராகவ், மகேஷ் போன்றவர்கள் வாழ்க்கை எனும் தோட்டத்தில் களை எடுக்கப்படவேண்டியவர்கள். சூர்யாவை போல ராஜூவை போல தாங்குவதற்கு நம்மை சுற்றி ஆண்கள் இருக்கும் போது எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் பூக்கள் பூத்து நந்தவனமாக மாறும்.