என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 20

மருத்துவரிடம் பேசியவனுக்கு மண்டை குழம்பியது. இவளுக்கு என்ன பிரச்சனை? ஏன் எதையும் வாய் விட்டு சொல்ல மாட்டேங்கறா? நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான். அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன. அதனால் இவனால் எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை. சந்திரா தூங்கட்டும் என்று விட்டு விட்டான். செய்தியை கேள்வி பட்ட கணேசன் ஓடி வந்தார். அவருடன் சேர்த்தே அவர்கள் வீட்டில் கொண்டு விட்டான்.
“நீங்க தான் என் பொண்ணை ஒவ்வொரு தடவையும் பெரிய பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தறீங்க. உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்லறதுன்னே தெரியல.” அவரை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. தன் அன்னையை உரிமையாக தங்கச்சி என்றுதான் அழைப்பார் . இன்று யாரோ போல நின்றுக் கொண்டிருக்கிறோம். அவனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. அவர்கள் இருவரும் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென காரை கிளப்பினான். மனதில் ஒரு பக்கம் கோபம், வேதனை, வருத்தம் அதனுடன் இனம் புரியாத ஏதோ ஒரு மகிழ்ச்சி. புரியாத கலவையாக வீடு வந்து சேர்ந்தவனுக்கு தன் அன்னையிடம் நடந்ததை கூறாமல் இருக்க முடியவில்லை.

அனைத்து விஷயங்களையும் கேட்டவள் பெருமூச்சு விட்டாள் . அவளுக்கும் மனதில் ஏதோ ஒரு வித உணர்வு. அப்போதும் எப்போதும் அவளுக்கு சந்திரா தான் தன்  மருமகள் என்று மட்டும் மனம் கூறிக் கொண்டே இருந்தது. அன்றிரவு சந்திராவை பற்றி அசை  போட்டவளுக்கு அவள் ஏதோ ஒரு கட்டாயத்தினால்தான் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. அவளிடம் எப்படி கேட்பது. எதையும் கேட்கவே கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள் . 

சூர்யாவால் இயல்பாக சிந்திக்க முடியவில்லை. அவனின் வருத்தம், வேதனை அவனை மூடனாகவும், ஆத்திரக்காரனாகவும் மாற்றிக் கொண்டிருந்தது. எதற்காக தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னையும் தன் தாயையும் இப்படி காயப்படுத்த வேண்டும்? சந்திராவை அம்மா தனது வயிற்றில் பிறந்த மகளாகத்தான் பார்த்தார்.
ஏன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கல்லூரியில் ஒன்றாக படித்த நெருங்கிய தோழன் மணிப்பூரில் இருந்து பார்க்க வந்திருந்தான். இப்போது அவன் சென்னையில்தான் பணிபுரிகிறான். அன்னைக்காக அங்கு மட்டுமே பிரத்தேயேகமாக தறிக்கப் (தயாரிக்க)படும் தாமரை பட்டில் அன்னைக்காக ஒரு ஷால் கொண்டு வரச் சொல்லி இருந்தான்.
“அதை எடுத்து அலமாரியில் வைத்தார். பின்னோடே கை கட்டி நின்றிருந்த மகனிடம் , என்னடா இங்க நிக்கற?
“அத எடுத்து போட்டுக் காட்டுங்க. அவனுக்கும் காட்டணும்”
“இல்லடா! அது அது வந்து சந்திராவுக்கு……..புள்ளத்தாச்சி பொண்ணாச்சே அவளுக்கு குடுக்கலான்னு…..”
“அவனின் முறைப்பில் ஆயிரம் கேள்விகள் இருந்தன. பதில் பேசாமல் அதை எடுத்து பிரித்து அன்னைக்கு போர்த்தி விட்டான். அப்படியே அவளை தோழன் முன்பு வந்து நிறுத்தினான். மூவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்படி எதை எடுத்தாலும் இன்னமும் அவருக்கு சந்திரா நினைவு போகவே இல்லையே ? எதையெதையோ யோசித்தவனுக்கு அந்த அரசியல்வாதி வந்ததை பற்றிய நினைவே இல்லாமல் போயிற்று. அடுத்த இரு தினங்களுக்கு மூச்சு விட முடியாமல் வேலை இருந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வந்திருந்தனர். மனைவிக்கு உடல் நலம் இல்லாததால் ஸ்ரீதரால் வர முடியவில்லை. அனைத்துமே நேர்மையாக சுத்தமாக தயாரிக்கப்பட்டது என்பதால் எந்த வித பிரச்சனையும் இருக்கவில்லை, என்றாலும் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இவனிடம் இருக்கிறதே! இதெல்லாம் அவனுக்கு முதல் முறை என்பதாலும் மனதில் ஒரு சிறு பதட்டம் இருக்கத்தான் செய்தது. சந்திராவும் இப்போது வேலைக்கு வருவதில்லை.
அனைத்தையும் நல்ல விதமாக முடித்தவனுக்கு ஒரு சிறு பிரேக் தேவைப்பட்டது. அதனால் அனைத்து கவலைகளையும் மறந்து சிறிது நேரம் கடற்கரையில் அமர விரும்பினான். தன்னவளுக்கு மிகவும் பிடித்த இடம். அவள் தராத ஆறுதலை அந்த அலைகளாவது தருமா? அவள் மேனி பதறாத தன் உடலை கடல் அலைகளாவது சாந்தப்படுத்தட்டும். மனதில் அவனுக்கு அடங்காத கோபம் இருந்தாலும் அவனை சாந்தப்படுத்த கூடியவள், அவனை குளிர்விக்ககே கூடியவள் அந்த சந்திரா தானே? . மனமும் உடலும் அவளுக்காக ஏங்கியது. அவள் இன்னொருவர் மனைவி என்பதை அவனாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த சூரியன் அந்த சந்திரனை எரிக்கப்போவது எனக்கு மட்டுமே தெரியும். ஆனால் நான் என்ன செய்வது?

ஸ்ரீதர் தொலைபேசியில் ……….
“டே! மச்சான் எல்லாத்தையும் நேர்ல பேசறதை விட நீ ஹைட்ரபாட் வந்துடேன் , நானும் இங்க பேரெண்ட்ஸோடடைம் ஸ்பென்ட் பண்ண வந்துருக்கேன்.
” ஓ ! அவங்க இந்தியா வந்தாச்சா? பூரணிக்கு ஒடம்பு சரியில்லைன்னு சொன்ன? “
“நீ வாடா!எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்”
மறுநாள் காலை விமானம் .
இப்போது கடற்கரையில்……….
இதோ அவன் நின்றுக் கொண்டிருக்கிறான். அன்று அவளுடன் நின்றிருந்த இடத்தில் ………….. பழைய நினைவலைகளுடன்……..
“அம்மா! வாம்மா பீச்சுக்கு போகலாம்” என்று மகன் அழைத்தான் .
“போடா! இன்னிக்கு நான் வரல. எனக்கு இன்னிக்கு மூடு இல்ல. வேண்ணா அடுத்த வாரம் போகலாம்” “சரிம்மா! நான் ஸ்ரீயோட போயிட்டு வரேன் என்று கிளம்பினான் சூர்யா .
ஆனால் ஸ்ரீ அவன் தந்தையுடன் ஏதோ பிசினஸ் பார்டிக்குச் சென்று விட்டான். இந்த மாதிரி விஷயங்களை தவிர்க்காமல் கட்டாயம் செல்ல வேண்டும் என்பது ஸ்ரீயின் தந்தையின் கட்டளை. ஏனெனில் இது போல பார்ட்டிகளில் நிறைய பிசினெஸ் விஷயங்களும் நடக்கும். தொழில் செய்பவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு விடக் கூடாது என்பதை ஒரு தொழில் அதிபராக மகனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்.
அதனால் தந்தை சொன்னதும் அவனும் சரி என்று கிளம்பி விட்டான். அவர்கள் இருவரும் காரில் செல்லும்போது யார் யார் வருகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் அவர் விளக்கிக் கொண்டே வருவார். அவர் சொல்லும் மனிதர்களைப் பற்றியும் அவர்களின் கம்பனியை பற்றியும் உடனே அவன் கூகிள் செய்து தெரிந்துக் கொண்டுவிடுவான். அப்படி அவன் தெரிந்துக் கொண்டவள்தான் பூர்ணிமா. அன்றைய தினமே அவளை பார்த்தவன் , எதிர்காலத்தில் அவளையே காதலித்து கைப்பிடித்தான்.
அவன் தந்தை அழைக்கிறார் என்றால் ஏதோ முக்கியமாகத்தான் இருக்கும் என்று சூர்யாவும் விட்டு விட்டான்.
“சரி! வந்ததற்கு சில நிமிடம் அலையில் நிற்கலாம்” என்று இவன் நின்றுக் கொண்டிருந்தபோதுதான் அவன் எதிர்பாராமல் சந்திராவைப் பார்த்தான்.
“என்னங்க நீங்க இங்க ?” சூர்யாதான் முதலில் பேச்சுக்கு கொடுத்தான் .
“பிரண்டோட வந்தேன்”
“ஓ ” அவனையும் அறியாமல் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம் இருந்ததோ?
“அவங்க எங்க ?” அவனே கேட்டான்.
“அதோ” யாரோ ஒரு ஆண் மகனுடன் ஒரு பெண் நின்றிருந்தாள் நெருக்கமாக. அவன் கையை பிடித்துக் கொண்டு அலையில் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
“மேடம் என்கூட வந்துட்டு பியான்சி கூப்பிட்டார்னு அவரோட போய்ட்டா. துரோகி”. வார்த்தைகள் திட்டினாலும் முகத்தில் தோழிக்கான மகிழ்ச்சி தெரிந்தது அவளின் புன்னகையில்.
இவனும் சிரித்தான். தன்னை அறியாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டதும் அவள் வெட்கப்பட்டு ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினாள். அப்போது ஒரு பெண் வந்து,
” அய்யா! பூ வாங்கிக்கோங்க” என்றாள் . எவ்வளவு என்று அவன் கேட்டான். இவளளோ இல்.,வேணாம் வேற யாரையாவது பாருங்க என்று விட்டாள் .
“ஏன்! சந்திரா வாங்கி இருப்பேன்ல”
“நீங்க வாங்கினா அவங்க நம்மள தப்பா புரிஞ்சுக்குவாங்க”.
“என்ன தப்பு, நாம ப்ரண்ட்சு. இதுல என்ன தப்பு ?”
“தலையில் அடித்துக் கொண்டவள், இதுக்கு எப்படி பவர் சப்பளை குடுத்து பல்பு எரியவைக்கறது?”
“நம்மள புருஷன் பொண்டாட்டின்னு நினச்சுக்குவாங்க”
“ஓ ” அதுதான் அவன் வாயை மூடிக் கொண்டான்.
“நீங்க என்ன இங்க? ” அவள் தான் மௌனம் கலைத்தாள்.
“பிரண்டை பாக்கலான்னு வந்தேன். கடைசில அவன் அவங்க அப்பாவோட ஏதோ பிசினஸ் பார்ட்டிக்கு போய்ட்டான். அதான் தனிமைல இனிமை”
“ஓ! நான்தான் கெடுதிட்டேனா ?”
“எதை?”
“உங்களோட இனிமை தனிமை” காற்றில் பறந்த முடியை கோதி விட்டாள் .
“அதெல்லாம் இல்ல. இதோ கிளம்பனும்”.
இருவரும் அலையில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது சட்டென்று அங்கே ஒரு நாய் வந்தது. அப்போது பயந்தவள் இவன் கையை பிடித்து ஒட்டி நின்றாள். அதற்குப் பிறகு இருவரும் ஒட்டியே நின்றிருந்தனர் வெகு நேரம், கையைப் பிடித்துக் கொண்டு. அவள் முகம் முதல் **** அவனை உரசிக் கொண்டுதான் இருந்தது. அது அவர்களுக்கு தெரிந்திருந்ததா? ஆனால் நேரம் போனது,தெரியவில்லை. மாலை மயங்கும் நேரம். அழகான சூர்யன், கொதிக்காமல். அதே நேரம் மனதிற்கு இதமாய். சந்திராவுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள்.
சூர்யாவுக்கும் அதேதான். இத்தனை அருகில் தன் மனதை வருடியவள், வசப்படுத்தியவள்,இதோ என்னை ஒட்டி நிற்கிறாள். அவளின் மேனி என்னை தழுவிக் கொண்டு என்ன ரம்யமான நேரம்? அப்போது அந்த இதமான மௌனத்தை அங்கே ஓடி வந்த குதிரை க(ணை)லைத்தது. இருவருமே சுய நிலை அடைந்தனர்.
“ச! மனசுக்கு கடிவாளம் போடணும்” சூர்யா நினைத்தான்.சந்திராவும் சட்டெனெ நகர்ந்து கொண்டாள் . அந்த ஒரு நொடி இருவருமே மனதில் நினைத்ததை சொல்லி இருந்தால் இப்போது அவர்கள் இப்படி யாரோ போல நின்றிருக்க தேவை இருந்திருக்காது. அப்போது சொல்லவில்லை என்றாலும் மனதில் இருப்பதை சூர்யா வேறு ஒரு நாளில் சொல்லி விட்டான். ஆனால் சந்திரா அப்போதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை. எதிர்காலத்தில் ?
அந்த நொடி,
சந்திரா” இல்ல! நான் ஏதாவது சொன்னா அவரோட படிப்புல கவனம் இருக்காது. நான் எதுவும் சொல்லக் கூடாது, அவரோட படிப்புதான் அவருக்கு வாழக்கை, வெற்றி எல்லாமே என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் .
இப்போதும் அதேப் போல. அந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டு அதே கடற்கரையில் நின்றுக் கொண்டிருந்தனர் வேறு வேறு இடத்தில் . அவள் இல்லாத கடல் அலையில் நிற்க அவனுக்கு விருப்பம் இல்லை . கேரளாவிலும் அவன் கடற்கரைக்கு சென்றதில்லை.
அதே நேரம் சந்திராவும் அங்கே கடற்கரையில்,
அந்த மணலில் கால் புதைய நடக்க அவளுக்குத் தெம்பு இல்லை. அங்கிருந்த பலவிதமான மக்களை பார்த்துக் கொண்டிருந்தாள். பல காதலர்கள் உல்லாசமாக இருந்தனர். மனம் சூர்யாவுக்காக ஏங்கியது. அன்று விட்டது எல்லாம் இன்று பெற முடியுமா ? அவன் கை பிடித்து நடக்க ஆசையாக இருந்தது. அவன் கையால் பூ வாங்கிக் கொள்ள ஆசையாக இருந்தது. எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட ஆசையாக இருந்தது. ஏதேதோ எண்ணத்தில்,ஏக்கத்தில் கண்ணீர் உடைத்து வெளியில் வரக் காத்திருந்தது. அவள் கண்ணை கண்ணீர் மறைத்தது. வழக்கம்போல கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்ந்தால் அங்கே சூர்யா நின்றுக் கொண்டிருந்தான். கையைக் கட்டிக் கொண்டு.
“யார் கூட வந்திருக்க?”
அவன் மிரட்டலில் இருந்தே அவனுக்கு பதில் தெரியும் என்று அவள் அறிந்திருந்தாள் .
“தனியாத்தான்” அவள் பதிலில் அவனுக்கு அத்தனை கோபம்.
“பளார்னு ஒன்னும் விடணும்போல இருக்கு. அறிவிருக்கா ? எப்போதும் அவன் கேட்கும் அதே கேள்வி”. அவளுக்கு அவனிடம் பிடித்த விஷயங்களில் இந்த உரிமையும் ஒன்று. அன்று இதே கேள்வியைக் கேட்டுத்தான் மனதில் புகுந்தான்.
“பால்ஸ்பெயின் வந்து இன்னும் ரெண்டு நாள் தான் ஆகுது. டாக்டர் அன்னிக்கு உன்ன எவ்ளோ கவனமா இருக்க சொன்னாங்க? அதுக்குள்ள மேடம் தனியா ஊர சுத்த ஆரம்பிச்சுடீங்க”. அவன் கோபத்தில் நியாயம் இருந்தது. அவள் ஏங்கி இருப்பது இந்த உரிமைக்காகத்தான்.
தலையை குனிந்துக் கொண்டாள் .
அடுத்து அவளின் இயலாமையால் கண்ணீர் வரும். அதுதான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே ?
“வா! போகலாம். இந்த சில் காத்துல சளி புடிக்காது ?” திட்டிக் கொண்டே இரண்டடி எடுத்துவைத்தான். இவளால் நடக்க முடியாது என்பதை பார்த்தவன் மெதுவாக கை பிடித்து அழைத்துச் சென்றான். அப்போதும் அதே பெண்மணி பூ விற்றுக் கொண்டிருந்தார். ஏக்கத்துடன் சூர்யாவின் முகத்தைப்பார்த்தாள் சந்திரா. அவன் இவளுக்கு பூ வாங்கிக் கொடுத்தான். ஏன் இப்போது இவர்களை கணவன் மனைவி என்று அவர் நினைக்க மாட்டாரா ? மற்றவரின் கேள்விகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ……..

பூக்கள் பூக்கும்.