என் வாசம் நீ உன் சுவாசம் நான் -19

சில தினங்களுக்குபி பிறகு,
அலுவலகத்தில் மதிய உணவு முடிந்ததும் வந்து அமர்ந்தாள் சந்திரா. ஆயா அன்று விடுமுறையில் இருந்தார். அடுத்த இரு தினங்கள் மட்டுமே சந்திரா வேலைக்கு வருவாள். அதற்க்கு பின், என்ன என்பதை அவள் இன்னும் யோசிக்கவில்லை. அவளது விடுப்புக்கான அத்தனை விஷயங்களையும் சந்திரா சரி பார்த்தாள் . அதை வீணாவிடமும் கொடுத்து விட்டாள் . அவள்தான் சூர்யாவின் PA . ஏனோ வேலையை விட்டு போகும் முன் சூர்யாவுடன் சில நிமிடங்களாவது தனிமையில் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. ஏன் பிரசவத்தின் போதும் அவன் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்றும் மனம் ஏங்கியது. பிரசவத்தின் போது கணவன் அருகில் இருப்பான் தானே ? இவள் கணவன் அவன்தான். கழுத்தில் இருந்த அவன் கொடுத்த சங்கிலியை அவள் தொட்டு பார்த்துக் கொண்டாள் . அவள் பிறந்த நாள் பரிசாக அவள் விளையாட்டாக கேட்டாள் . மறுப்பில்லாமல் அவன் தந்தான். அவனுக்கு அவள் பதிலுக்கு கொடுக்க விரும்பியது ஆசையாய் சில முத்தங்கள். பாவம் அது என்றுமே கொடுக்க முடிந்ததில்லை. அவன் பிறந்த நாளைக்கு அவள் கொடுத்தது கொடிய வார்த்தைகள் தான். ஆசை ஆசையாய் பிறந்த நாள் அன்றுதான் அவன் தன் மனதை திறந்து காதலைச் சொன்னான். அவன் பிறந்த நாளை அவனை விடவும் அதிகமாக எதிர்பார்த்தது அவள்தான். இறுதியில் விதி வென்று விட்டது.
சரி! இது ஆப்பிஸ் டைம் . மனதை மாற்றிக் கொண்டு வேளையில் மூழ்கினாள் .
இல்லை. அவளால் முடியவில்லை. வயிற்றில் ஏதோ வலி. இது வரை அவளுக்கு இதை பற்றி தெரியவில்லை. பிரசவ வலியாக இருந்தால் முதுகில் இருந்து ஆரம்பிக்கும் என்று மருத்துவர் சொல்லி இருந்தார். இது அப்படி இல்லை. பால்ஸ் பெயினாக இருக்குமா? எட்டு மாதங்கள் முடிய போகிறது. இவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. சூர்யாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விடலாம். காத்திருந்தாள். உள்ளே சென்ற அரசியல் பிரமுகர் ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டிருந்தார். எல்லாத் தேவை இல்லாத பேச்சுக்களையும் பேசி அவர் சூர்யாவை பற்றி அவருக்கு தேவையான சில விஷயங்களை தெரிந்து கொண்டார். இறுதியில் அவர் விஷயத்துக்கு வரும்போது வெகு நேரம் ஆகி இருந்தது. அவர் மகளுக்கு சூர்யாவை மாப்பிள்ளையாக ஆக்கத்தான் அவர் வந்திருந்தார்.
“முடியாதுங்கறதையே ரொம்ப அழகா சொல்லீட்டிங்க தம்பி! எதுக்கும் வீட்டுல பேசிட்டு சொல்லுங்க”. விடை பெற்றுக் கொண்டார்.
அவர் சென்றதும் சட்டை மேல் பட்டனை திறந்து சிறிது ஆசுவாசப் படுத்திக்க கொண்டான். சில நிமிடங்களில் வீணா சந்திராவின் விடுப்புக்கான கோப்பு மற்றும் மற்ற கோப்புகளையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனாள் .
முதலில் சந்தராவின் விஷயத்தை முடிப்போம் என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சிலவற்றை பற்றி பேச வேண்டி இருந்தது.
“சந்திரா! ப்ளீஸ் கம் ” போனில் அழைத்தான்.
“சார் நீங்க இங்க வாங்களேன்! ப்ளீஸ் உடனே”
“அவள் குரல் சரியில்லை , வேகமாக ஓடினான்.அவளுக்கு முகமெல்லாம் வியர்த்திருந்தது.
“சந்திரா ஆர் யூ ஓகே ?
“நோ ! தலை ஆட்டினாள். டாக்டர்கிட்ட போகணும். கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது.
“வேகமாக அவளை கையில் ஏந்திக் கொண்டான். வீணா கார் கீ கொண்டு வா! அவளை தூக்கிக் கொண்டு காருக்கு ஓடினான்.
கார் சாவியுடன் வீணாவும் ஓடி வந்தாள் .
“ட்ரைவ் பண்ணுவியா?”
“எஸ் சார்! சொல்லிக் கொண்டே காரை திறந்திருந்தாள் . சந்திராவை மிக மெதுவாக காரில் கிடத்தியவன் சட்டையை பிடித்துக் கொண்டாள் . ப்ளீடிங் ஆகற மாதிரி இருக்கு சூர்யா. அது ட்ரைவர் சீட்டில் அமர்ந்த வீணாவுக்கும் காதில் விழுந்தது.
சந்திராவின் அருகிலேயே அமர்ந்து வீணாவுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தான். மருத்துவமனையை அடைந்தனர். பரிசோதித்த மருத்துவர்,”ஒன்னும் இல்லை . ஷி ஐஸ் நார்மல். வீட்டுல பெரியவங்க இருந்திருந்தா அவங்களே பார்த்திருப்பாங்க”.
“டாக்டர் ப்ளீடிங்?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை “. 8 மந்த்ஸ் முடிஞ்சுடுச்சு. இனிமே எப்ப வேண்ணாலும் இவங்களுக்கு டெலிவரி எக்ஸ்பெக்ட் பண்ணலாம். பேபி இஸ் பர்பெக்ட்லி நார்மல். பட் இவங்களுக்கு பிபி பிராப்லம் இருக்கு. அது கண்டிப்பா சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம். நீங்க இதை அலட்சியப்படுத்தினீங்கன்னா ரொம்ப பெரிய ப்ராப்லம். இது IVF சைல்ட் வேற. ஏதாவது ஒரு பிரச்சனைனா நாம இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும். நமக்கு குழந்தை அம்மா ரெண்டு பேரையும் பத்திரமா காப்பாத்தற பொறுப்பு இருக்கு. ஆஸ் அ ஹஸ்பெண்டா நீங்க தான் அவங்கள பத்திரமா பார்த்துக்கணும். ரொம்ப டயர்டா இருக்காங்க. வீட்டுல நல்லா தூங்க சொல்லுங்க. போங்க போய் பாருங்க”.சொல்லி விட்டு போனார் டாக்டர்.
” தங் யூ டாக்டர்”
சந்திராவை உள்ளே அழைத்துச் சென்றதுமே, வீணாவுக்கு நன்றி உரைத்து அனுப்பி விட்டான்.
வீணாவிற்கு மனம் வேதனையாக இருந்தது. சந்திராவுக்கு அத்தனை அருகில் இருந்தும் அவளால் தன்னிடம் எதுவும் சொல்ல முடியாத படிக்கு மிக கேவலமாக நடந்துக் கொண்டோமே? மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன? என்னுடைய மனிதாபிமானம் எங்கே போயிற்று? நான் இனி சந்திராவின் முகத்தில் எப்படி விழிப்பது?
இது வீணாவுக்கு மட்டுமான வார்த்தைகளா? நம்மில் பலர் மற்றவர்களுக்காகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

=============================================================சூர்யாவிடம் பேசிவிட்டு வரும்போது ராஜுவுக்கு மனம் முழுவதும் மாயாவை பற்றிய யோசனைதான். அவன் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஏதோ சூர்யாவிடம் பேசிவிட்டு வந்து விட்டானே தவிர அவனால் மாயாவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இல்லை மாயா? அவளால் எப்படி தன்னை ஒரு கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது இதோடு முடியக் கூடிய விஷயமா ? எதிர்காலத்தில் பிள்ளைகள்? இவனுக்கு இப்போது மனதில் சிறு பயம் வர தொடங்கியது.
மாயாவுக்கு சம்மதம் என்று அவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது? யோசித்தான். நிறைய யோசித்தான். பல கேள்விகளுக்கு நாம் யோசிக்கும்போது விடை கிடைப்பதில்லை. காலமே பதில் .

நடப்பது நடக்கட்டும். அவன் துணிந்து முடிவெடுத்தான். ஆனால் தெளிவு இல்லை. அவனுக்கு தெளிவை உண்டாக்கியது ராணிதான்.

வீட்டில் தன் அன்னையிடம் இதை பற்றி பேசினான். முதலில் பளீரென்று கன்னத்தில் ஒரு அரை விழுந்தது. அதற்கு பிறகு துடப்பதால் அடி சரமாறியாக விழுந்தது. அதை ராணிதான் ஓடி வந்து தடுத்தாள் .
இவன் சொல்லறது கேளு! எவளோ ஒரு *கண்ணாலம் பண்ண போறானாம் . அடி செருப்பால. அவள் முகத்தில் அத்தனை ஆங்காரம்.
“முதல்ல நான் என்ன சொல்லறேன்னு கேளு. நீயே பேசற?”
“இன்னும் என்னடா பேசணும்? எத்தனை நாளாடா அவகிட்ட போற ? எச்சக்கலை நாயே!”
வார்த்தைகள் மிக மோசமாக வந்தன.
“ஆயா இரு ! மாமா என்னதான் சொல்லறாருன்னு கேட்போம்”
“இந்த அசிங்கம் புடிச்ச கதையை வேற கேட்கணுமா? சீ ! தூ” காரி துப்பினாள் . முகத்தை துடைத்துக் கொண்டான். அன்னை கோபத்தில் வெளியே சென்று அமர்ந்து கொண்டாள் . அவளுக்கு மூச்சிரைத்தது. ராஜுவுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
“ராணி ஆயாக்கு கொஞ்சம் தண்ணி குடுத்து சமாதான படுத்து”.
“சரி மாமா ! ஆயாவுக்கு தண்ணீர் குடித்தபின் சிறிது சமாதானம் அடைந்தது. இரவு யாரும் உண்ணவில்லை. ராணிக்கு மட்டும் சாப்பாடு குடுத்தாள். அவளுக்கு இறங்கவில்லை. இருப்பினும் குழந்தைக்காக இரண்டு வாய் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தாள் .
மகனின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள் ஆயா . பேச இஷ்டம் இல்லை . முகம் பார்க்கவும் விருப்பம் இல்லை .
“ஏன் மாமா! ஆயாவுக்காக அந்த பொண்ண வேண்டான்னுதான் சொல்லேன்”
“எனக்கு என்ன வயசு ராணி? முப்பது மூணு வயசு. அவளுக்கு இருபத்தி ரெண்டு. உன்ன மாதிரி இருக்கற பொண்ண நான் கல்யாணம் பண்ண ஆசை படறேன்னா உடம்புக்காகவா? இது வரைக்கும் நான் யாரு கிட்டையும் அந்த மாதிரி போகல. சொல்லு உன் ஆயாகிட்ட . சூர்யா சார் வூட்டுல வேலை செய்யுதே அந்த பொண்ணு மாயாதான் அது.
“என்னடா சொல்லறே ? அந்த பொண்ணா ? என்னடா இது பெரிய இடத்துல போய் கைய வைக்கற? நான் எப்பிடிடா அந்த சாரு முகத்துல முழிப்பேன்? முடியுதோ முடியலையோ போய் நாலு காசு சம்பாதிக்கறேன். அதுவும் ஒனக்கு பொறுக்கலையா தலையில் அடித்துக் கொண்டாள் .
“ஆத்தா நிறுத்து நிறுத்து அவள் கையை பிடித்து நிறுத்தினான்”
“முதல்ல நான் சொல்லறதை கேளு. அப்புறமா நீ பேசு. மாயாவை பற்றி சுருக்கமாக சொன்னான்.
“இப்ப நீ என்னா சொல்றியோ சொல்லு”.
“அந்த பொண்ணு பாவந்தாண்டா நான் இல்லனு சொல்லல. ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையாடா? எதுக்குடா இப்படி ஒருத்திய”
” தெரியல ஆத்தா! ஏனோ அவங்களால்தான் என்னை சந்தோசமா வச்சுக்க முடியும்ன்னு தோணுது. அதோட மத்த பொண்ணுங்கள கட்டிக்க யாரு வேண்ணாலும் வருவாங்க. இவங்களுக்கு?
ராணிக்கு தன் கணவன் கூறிய அதே கரணம். விரக்தியாய் சிரிப்பு வந்தது. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஏதோ ஒரு காரணம். மனதில் இளக்காரமாக எண்ணம் வந்தது.
“உனக்கு நான் வேறு ஒரு நல்ல பொண்ணா பாக்கறேன் ராஸா. இது வேணாம். ஊரு உலகம் தப்பா பேசும் ராசா”, கெஞ்சலாய் கொஞ்சலாய் சொன்னாள் அவன் அன்னை.
“யாரு ஆத்தா நீ என்னையும் அக்காவையும் வச்சுக்கிட்டு தனியா நின்னபோது நமக்காக வந்து நின்னாங்களே அந்த ஊரா ? இல்ல வீட்டை காலி பண்ண சொல்லி சாமானை கடன்காரங்க வெளில போட்டாங்களே அந்த ஊரா ? போ ஆத்தா . நான் பழசை எதையும் நினைக்க விரும்பல. உனக்கு பிடிக்கலையா சொல்லு. எனக்கு வேணாம். அவங்க மட்டும் இல்ல. யாருமே வேணாம்”
“என்னடா இப்படி பேசற? ஏண்டா ஒரு உலகத்துல யாரு எப்படி போனா நமக்கு என்னடா வந்தது? அவ உனக்கு என்னத்த சொக்குபொடி போட்டாளோ ?”
“அன்னிக்கு சந்திரா அக்காவும் இதையே நினைச்சிருந்தா நானும் இன்னிக்கு ஏதோ ஒரு மாயாவாத்தானே இருந்துருப்பேன்? ராணியின் கேள்வி இருவருக்குமே சுரீரென்றது.
“போ!ராணி, இவங்க கிட்ட பேசறதே வேஸ்ட். தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பவே முடியாது. சொல்லி விட்டு அனைவரும் படுக்க போனார்கள். ராணி மட்டும் அசதியில் உறங்கிவிட்டாள் . ராஜூவுக்கும் அவன் அன்னைக்கும் தூக்கம் தொலைந்தது.

இரவெல்லாம் ஆயா யோசித்தாள் . என்ன முடிவெடுத்திருப்பாள் ?
பொழுது விரியும் வரை காத்திருப்போம்.

பூக்கள் பூக்கும்………