என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-13

சுந்தரியின் வேண்டுதல் படியே ராகவ் அங்கே தன்  வீட்டில் இங்கே நடந்தது பற்றி ஒன்றும் வாயே திறக்கவில்லை. இப்போதெல்லாம் காயத்ரி  சில நேரங்களில் பிரம்மை பிடித்தவள் போல் இருக்கிறாள். அல்லது சந்தோசமாக குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். அனைத்திற்கும் மேலாக தன்னுடைய காதல் கணவன் இன்னும் தன்  மீது காதலுடனே  இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். பைத்தியம்.

ஆம் ! இந்த காலத்தில் அப்பாவியாக இருந்தாலும் அதற்க்கு பெயர் பைத்தியம்தானே?

என்னால இதுக்கு மேல தத்துவங்கள் குடுக்க முடியல. அப்புறம் யாராவது வடிவேலு மீம்ஸ் போட்டுட்டு போறீங்க! நான் என்னோட பார்முக்கே வந்துடறேன்.

எப்படியும் இனிமே வரப்போகிற பகுதிகள் கொஞ்சம் தெறிச்சு ஓடறமாதிரிதான் இருக்கும். அதனால் சும்மா ஜாலியா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் ………..

வீட்டுக்கு வந்து  தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன், மாயாவிடம், காபி வேண்டாம் என்று விட்டான்.

சூர்யாவின் அன்னை,

என்னடா இன்னிக்கு அதிசயமா காபி வேண்டாங்கற?”

இல்லமா!  நான் சந்திராவோட காபி குடிச்சுட்டேன் “

முதன் முதலாக சூர்யாவின் வாயில் இருந்து ஒரு பெண் பெயரைக் கேட்டதும் மாயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாகிட்ட இதை பத்தி கேட்கணும். அவளுக்கே தெரியாமல்  மாயாவுக்கு மனதில் ஒரு மகிழ்ச்சி.

  அதிலும் சூர்யாவின் முகத்தில் இருக்கும் பிரகாசம் ! அது எப்போதுமே அவனுக்கு சந்திராவுடன் இருந்தபோது மட்டுமே வரும். என்னதான் அம்மாவுக்கு தன்  மகன் அழகு என்றாலும், அவனின் கவலைகளை மறந்து இருந்த நேரம் சந்திராவுடன் இருக்கும் நேரம் என்பது அவன் அன்னை அறிவாள். அவளுக்கு திருமணமாகி அவள்

கர்பமாக இருக்கிறாள் என்பதை என்னவோ சூர்யாவின் அன்னையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சூர்யா புரிந்துக் கொண்டதை விடவும் அவருக்கு சந்திராவைப் பற்றி நன்றாகவேத் தெரியும்.

இரவு, டின்னர் மூவரும் சேர்ந்தே உண்டனர். மாயாவும் அவர்களுடனே சாப்பிட்டு விட வேண்டும். இது சூர்யாவின் கட்டளை. இல்லையெனில், அவள் சரியாக உண்ண  மாட்டாள். ஏதேதோ கவலைகளில் உழன்றுக் கொண்டிருப்பாள் என்பதே காரணம்.

 மகனை பார்த்த அன்னைக்கு பெருமிதமாகவும் அதே சமயம், “இந்த புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கைய  குடுக்கக் கூடாத கடவுளே” என்ற கவலையும் வந்தது.

அன்னையிடம் சொல்லி  விட்டுத் தன், படுக்கையில் விழுந்தவனுக்கு சந்திராவுடன் இருந்த பழைய நினைவுகள் வந்தன.

அன்று வரலஷ்மி விரதத்தன்று,

அம்மா  போதும், பெத்த புள்ளைய கவனி” என்று அவள் எதிரிலேயே அவன் கூறவும் அவளுக்கு அவமானத்தால் முகம் சிவந்தது. தன்னை கிளம்பச் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டாள் .

வேகமாக வீட்டிற்குசென்றவள் இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு அவனின் சொற்கள் முள்ளாகத்தான் குத்தியது. இனி என்றுமே அவன் வீட்டிற்கு  செல்லக் கூடாது என்று நினைத்தாள். அதே சமயம் அந்த ஆன்டி என்ன பண்ணுவாங்க பாவம் இதுதான் சிடு மூஞ்சி. ஏதோ ஆபத்துல காப்பதினாறேன்னு கொஞ்சம் உதவி பண்ணா என்னோவோ நான் இது பின்னாடி அலையுற  மாதிரி. இவரு பெரிய மன்மத ராசா. இவங்க வீட்டிலையே தவம் கிடக்க  எனக்கென்ன ஆசையா? ஏதோ ஆன்டி பாவம் தனியா கஷ்டபடறாங்களேன்னு பார்த்தா , கொஞ்ச நேரம் இருந்ததும் எப்பிடி மூஞ்சில அடிச்ச மாதிரி வெளிய போன்னு  சொல்லிட்டான்?(அப்பிடியே எதுவும் நான் எழுதலையே). எனக்கென்ன  வீட்டுல வேலையா இல்ல?

கோபத்துடனே  உறங்கினாள் .

ஆனால்  மறு நாள் காலையிலேயே அவன் அன்னை , இவர்கள் வீட்டிற்கு வந்தார்.

நேத்து வாங்கினது பூ நிறைய இருந்தது. அதான் சந்திராவும் காயத்ரியும் வச்சுப்பாங்களேன்னு கொண்டு வந்தேன்.

ரொம்ப நன்றிங்க. ஆனா சந்திரா வெளில போய்  இருக்கா . எப்ப வருவான்னு தெரியல. காயத்ரிக்கு இன்னிக்கு ஸ்பெசல் கிளாசுக்கு போய் இருக்கா. நான் கொஞ்சம் எடுத்துக்கறேன். நீங்க வேற யாருக்காவது குடுங்க என்று சொல்லி சுந்தரி கொஞ்சம் பூக்களை எடுத்துக் கொண்டாள் .

சந்திராவை பார்த்து சமாதனப் படுத்தவே அவர் வந்தது. ஆனால்  அவள் இல்லை. பெரு மூச்சு விட்டு வீட்டிற்கு வந்தார் சூர்யாவின் அன்னை.

தோழியின் வீட்டிற்குச்  சென்றிருந்த சந்திரா , மதியமே வந்து விட்டாள் .

சந்திரா! உன்ன பாக்க கீழ் வீட்டு ஆன்டி வந்தாங்க பாரு” தோழியின் வீட்டிலேயே சந்திரா உணவு உண்டுவிட்டாள் . உண்ட களைப்பு தூக்கமாக வந்தது. இருப்பினும் அவர்களை பார்த்து என்னவென்று கேட்டுவிட்டு வந்து விடலாம் என்று அவர்கள் வீட்டிக்கு சென்றாள். அவர் பூஜை சாமான்களை எது ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

ஆன்டி வீட்டுக்கு வந்தீங்களா ?”

ஆமாண்டா கண்ணா! நிறைய பூ இருந்தது. அதான் உனக்கும் காயத்ரிக்கும்  குடுக்கலான்னு”.

ஓ ! குடுங்க ஆன்டி . தலை  குனிந்து காத்திருந்தவளை  அவர் குரல் நிமிர வைத்தது.

சாப்டியா கண்ணா ?”

ம்ம்! ஆச்சு ஆன்டி”. அமைதியாக இருந்தாள் .

நீங்க  சாப்பிட்டீங்களான்னு கேட்கவே இல்லையே”.

சாரி ஆன்டி” தலை குனிந்து சொன்னாள் .

நேத்து அவன் பேசினத தப்பா  எடுத்துக்காத. ஒரே பையன். அவனையேதான் எப்பையும்  கவனிப்பேன். புதுசா வேற யாரையோ கவனிச்ச  உடனே கோபம் வந்துட்டது . நேத்துலேர்ந்து எனக்கு ஒரே மனசுக்கு சங்கடமா போச்சு. நீ தப்பா  எடுத்துக்கல  இல்ல?”. தாடையை பிடித்து கொஞ்சினார். அவளுக்கு அது பிடித்திருந்தது.

இல்லை” என்று  தலை மட்டும் ஆடியது. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. அதை சூர்யாவின் அன்னை புரிந்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் இருந்துட்டு போறியா ?” கண்களில் ஆர்வத்தை தேக்கி  அவர் கேட்டார்.

இல்ல ஆன்டி!” அப்புறம் உங்க புள்ளைக்கு கோபம் வரும்.

அவன்தான் ஆபிஸ் போய் இருக்கானே .

சரி! வாங்க! முகத்தில் பல்ப் அடிக்க, கிச்சனுக்கு சென்று தட்டு கழுவி தண்ணீர் வைத்து உணவு பரிமாறினாள். அப்படியே சுந்தரிக்கும்  போன் செய்து தான் அவர்கள் வீட்டிலேயே சிறிது நேரம் இருப்பதாகச் சொல்லிவிட்டாள் . ஏனோ இன்று சந்திராவின் கையால் இன்னும் இரண்டு கை  அதிகம் சாப்பிட்டது  போல இருந்தது சூர்யாவின் அன்னைக்கு.  சூர்யா இல்லாத தைரியத்தில் ஏதேதோ கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவள் உட்கார்ந்தபடியே உறங்க ஆரம்பித்து விட்டாள் . அவளை சூர்யாவின் அன்னை அப்படியே படுக்க வைத்தார். தானும் சிறிது படுக்கலாம் என்று அவரும் அருகிலேயே படுத்துக் கொண்டார். எப்போதும் தந்தையை கட்டிக் கொண்டு தூங்கும் மகள், இப்போது முதல் முறையாக அன்னையைக் கட்டிக்  கொண்டு தூங்கினாள் . மதியம் வேலை முடித்து வந்தவன், அன்னை கதவைத் திறக்காமல் போகவும் தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவைத்  திறந்துக்  கொண்டு வந்து பார்த்த காட்சி இதுதான்.

இதை பார்த்தவனுக்கு தன்  அன்னையை இவளைத் தவிர வேறு யாராலும் இத்தனை பாசமாக பார்த்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது. அன்னையாலும் அத்தனை எளிதாக இவளை விட்டு விட முடியும் என்றும் தோன்றவில்லை. அவர்களை பார்த்து விட்டு உடல் கழுவி தானே உணவை உண்டுவிட்டான். மீண்டும் வந்து அவர்களை பார்த்தவனுக்கு,

” அம்மா  இருக்கற எடத்துல நான் இருந்தா நல்ல இருந்திருக்கும்”.

“ச!  என்ன எண்ணம் இது ? “என்று மனம் நினைத்தாலும் அவன் வாலிபம் அவனை பல இனிய கற்பனைகளுக்கு அழைத்துத்தான்  சென்றது.

அவன் அன்னை அதற்குள் எழுந்துவிட்டார். அவன் கதவைச் சாத்திக்  கொண்டு படித்துக் கொண்டிருந்தது  தெரியாமல் சந்திரா நிதானமாக எழுந்து சோம்பல் முறித்து பார்த்தால், அது தன்  வீடு இல்லை.

அச்சச்சோ அம்மா திட்டுவாங்களே?” என்று பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.

இரு இரு எதுக்கு இவ்ளோ பதட்டம்?” அருகில் இருந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஆன்டி கேட்டார்.

இல்ல! சாரி! ஆன்டி” அம்மா தேடுவாங்க, பதட்டத்தில் உளறினாள்.

அதெல்லாம் தேட மாட்டாங்க. நீ இங்கையே தூங்கி போய்ட்டேன்னு  சொல்லிட்டேன்”.

“இருந்தாலும் வீட்டுக்கு  போனா திட்டுவாங்க ஆன்டி”. நான் வரேன்.

அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவளுக்கு இங்கையே தல வாரிட்டு அனுப்பறேன்னு சொல்லிட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க  தான் நல்லா  பாக்கரீங்களே ?ன்னு சொல்லிட்டாங்க.

அப்படியா சரி”, அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது.

“போ! போய்  முகத்தை கழுவிட்டு வா” என்றாள்  பெரியவள்.

இவள் வந்ததும்  இவளுக்கு அழகாக தலை சீவி பூ வைத்து அழகு பார்த்தார்.

ரொம்ப அழகா இருக்க செல்லம்”

ஏதேது  எல்லா  கொஞ்சலையும் உங்களோட மருமகளுக்கும் வச்சுக்கோங்க ஆன்டி”

ஆமா!  வர்றது எப்படி இருக்குமோ பாண்டு  சட்ட போடுமோ இல்ல டிரௌசரை போட்டுக்கிட்டு கிராப்பு தலையோட நிக்குமோ? யாருக்கு தெரியும் ? அலுத்துக்  கொண்டார் சூர்யாவின் அன்னை.

எங்கிட்ட சொல்லற மாதிரியே உங்க பையன் காது பட  சொல்லிடாதீங்க ஆன்டி! அப்புறம் அவருக்கு கோபம் வந்துடப் போகுது”

அப்டியாடா உனக்கு கோபம் வருமா ? சத்தம் இல்லாமல் சமையல் அறையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனை பார்த்த சந்திராவுக்கு  வயிற்றில் பயப் பந்து வந்து உருண்டது.

ஆன்டி! நான் அப்புறம் வரேன்” மெதுவாக நழுவியவளை சூர்யாவின் ஓங்கியக்  குரல் தடுத்து நிறுத்தியது.

சூர்யாவின் அன்னை கை  கழுவப்  போனார்.

என்னோட பொண்டாட்டிய பத்தி நீ எதுக்கு பேசற?” கோபமாகக் கேட்டான். அவன் கண்களில் இருந்த ரசனையைத்தான் இவள் பார்க்கவில்லையே?

சோபாவில் அமர்ந்து அவன் கேட்க இவள் பள்ளியில் நிற்கும் சிறு குழந்தை போல சூர்யாவின் அன்னைக்கு பாவமாக இருந்தது.

திட்டதடா” கையால் செய்கை காண்பித்து சமையல் அறைக்கு ச் சென்றார்.

உன்கிட்ட கேட்ட  கேள்விக்கு நான் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

ஆமா!  நீ பெரிய பாஸு  நான் உனக்கு பதில் சொல்லனுமா ? “மனதில் திட்டிக் கொண்டிருந்தாள்.

நான் ஏன் பதில் சொல்லணும்?” முகத்தை திருப்பிக் கொண்டாள் .

ஏனோ மனதில் அவளை அருகில் அமர்த்தி கட்டி, கொஞ்ச வேண்டும் போல இருந்தது. இவள்தான் மனைவி என்றுதான் அவன் முடிவு செய்து விட்டானே ?

மனதை அடக்கியவன்,

“ஏன் பதில் சொல்லக் கூடாது?”

அதெல்லாம் சொல்ல முடியாது. முகத்தை திருப்பிக் கொண்டவளின் கையை பிடித்து இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான்.

அவன் மூச்சுக்கு காற்று அவள் மீது தென்றலாக வீசியது.

சரி! அதுக்கு பதில் சொல்ல வேண்டாம். எதுக்கு என்னோட இடத்துல என்னோட தலையணைல படுத்துகிட்ட ?” இதுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.

இவளுக்கு நாக்கு உள்ளேயே ஒட்டிக் கொண்டது.

பதிலுக்காக அவன் வெளியில் காத்திருந்ததாலும் அவன் மனம் உனக்குதாண்டி முழு உரிமையும் இருக்கு. மனம் உல்லாசமாக விசில் அடித்தது.

அது அது வந்து நான்” பதில் சொல்ல முடியாமல், வீட்டிற்கு மூச்சிரைக்க ஓடி வந்து விட்டாள் .

அவன் உதட்டில் காதலும் ரசனையும் புன்முறுவலாக இருந்தது. சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த சூர்யாவின் அன்னை அன்று பார்த்த அதே  பொலிவைதான்  இன்றும்  அவர்  மகனின் முகத்தில் கண்டது.

   மறுநாள், காலை இருவரும் அலுவலகத்துக்கு வந்தனர். அவள் கன்னத்தில் இன்னும்  அவன் கை  விரல்கள் பதிந்த தடம் இருந்தது.

அதை பார்த்த சூர்யாவுக்கு தன்  மீதே கோபம் வந்தது. “

ச! என்னதான் அவளாவே வந்து உட்கார்ந்தாலும் நான் அவளை வீட்டுக்கு விட்டிருக்க கூடாது. என்னவோ புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல போய் . சீ! நான் என்ன பண்ணறேன் என்று  தன்னையே திட்டிக் கொண்டிருந்தான். இனி அடுத்தடுத்து அவன் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் போவது தெரியாமல். (தம்பி விதி வலியது)

அவனுக்கு தெரிந்தாலும் அவன் சந்திராவிடம் எதுவும் கேட்கவில்லை. வீணா, சூர்யாவிடம்,

சார் நீங்க  இன்னும் பாக்ட்ரிய  பாக்கவே இல்லையே ?”

எஸ் ! வீணா  யு ஆர் கரெக்ட். கொஞ்சம் இங்க பாக்க  வேண்டியதை பார்த்துட்டு அங்க போகலான்னு  பார்த்தேன்”. இன்னிக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா ?

இருப்பது வரை மதியத்திற்குள் முடித்து விட்டு  தொழிற்சாலைக்குச் சென்றான். ஒரு நாள் என்பது இரண்டு மூன்று என்று இவன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தது. பழையதாக இருந்த சில கருவிகளைப்  பார்க்க , தொழிற்சாலை சங்க உறுப்பினர்களை பார்ப்பது அவர்களிடம் இருந்து தேவையான அறிவுரைகளை பெறுவது என்று அவனுக்கு நிறையவே வேலைகள் வைத்துக் கொண்டே  இருந்தன. அலுவலகத்துக்கு வருவதும், அங்கு வேலைகளை முடிப்பதும், மீண்டும் தொழிற்சாலைக்கு போவதும் வருவதும் என அந்த வாரம் அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது கூட அவனுக்கு தெரியாமல் போனது.(பசங்களுக்கு எக்ஸாம் வந்தா  அம்மாக்களுக்கு  நடக்குமே  அதே மாதிரிதான்)

அப்போது, ஒரு நாள் காலை  சந்திராவிடம் இருந்து அழைப்பு வந்தது மருத்துவமனையில் இருந்து……..

பூக்கள் பூக்கும்…………..