என் மேல் விழுந்த மழையே! Part -2 அத்தியாயம்-26
அத்தியாயம்-26
செவ்வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. மலைகளுக்கு இடையிலிருந்து மெல்ல கதிரவன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த அழகான காலையை ரசிக்கும் மன நிலையில் அங்கு இருப்பவர்கள் யாருமில்லை.
வருணின் பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அவர்கள் இருவரும் இல்லை. வருண் செக்யூரிட்டிக்கு அழைத்து பிருத்விகாவின் வீட்டையும் ஒரு முறை பார்க்கச் சொன்னான். அந்த முயற்சியும் தோற்றது.
“வருண் இப்ப என்ன செய்யறது?”
“ப்ச்ச்.. இரண்டு பேரும் சேர்ந்து வெளிய போயிருக்கலாம். மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகிருக்கலாம்.”
“இரண்டு பேருமே அவ்வளவு கேர்லெஸ் இல்லை. எனக்கு பயமா இருக்கு வருண்.”
அப்போதுதான் மித்ராவின் முகத்தைச் சரியாகக் கவனித்தான். அவள் விழிகள் இரண்டு செவ்வரி படர்ந்து முகமும் இமைகளோடு சேர்ந்து வீங்கியது போல் இருந்தது.
“மித்ரா உனக்கு என்னாச்சு?”
“எனக்கு ஒன்னும் இல்லை.”
“உன்னோட முகம் சரியில்லை. நேத்து எதாவது நடந்துச்சா? எதாவது பிராபளா?”
“இல்லைடா..”
அவளை கூர்ந்து பார்த்தவன் அமைதியாக நின்றான்.
“ஃபைன் எனக்கும் கிருஷ்ஷூக்கும் ஃபைட். அவன் என்னை விட்டு மூவ் ஆன் ஆகப் போறேனு சொல்லிட்டான்.”
“வாட்? நீங்க எப்ப லவ்வர்ஸா இருந்தீங்க?”
“ம்கூம்.. அவன் தான் புரப்போஸ் செஞ்சான். டிவெல்த் எக்ஸாம் முடிச்சதுக்கு அப்புறம். அப்ப ஒரு இன்சிடெண்ட். அதனால் நான் அவங்கிட்ட செவன் இயர்ஸா பேசவே இல்லை. நேத்து.. அதை விடு. ஆனால் என்னை விட்டு மூவ் ஆன் ஆகப் போறதா சொல்லிட்டான்.”
“அப்ப ஜில் அவுட் பன்ன போயிட்டாங்களோ இரண்டு பேரும்.”
“இருக்கலாம்.”
“நோ.. வெளியில் என்ன டேஞ்சர் இருக்குனு தெரிஞ்சும் போயிருக்காங்க.” என சலிப்புடன் கூறினான் வருண்.
“என்ன டேஞ்சர்?”
அருகில் இருக்கும் மித்ராவுக்கு வருண் கூறியது தெளிவாகக் கேட்டது.
“நத்திங்க் மித்து.”
“வருண்.. ஏதோ புராஜக்ட்க்காக் வரோம்னு நினைச்சேன். ஆனால் இங்க வந்தால் நாம அப்படி எதுவுமே செய்யலை. நான் இங்க இருக்கறதுக்கான உண்மையான ரீசன் என்ன?”
“மித்து?” வருண் யோசித்தான்.
“ஸ்பில் அவுட் வருண். இல்லைனா நான் இப்பவே கிளம்பிடுவேன்.”
“ஹே ஹே.. சொல்றேன். உன்னோட சேப்டிக்காக. இதை சொல்லி உன்னை பேனிக் பன்ன விரும்பலை.”
நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான். அதிர்ச்சியில் கண்களை விரித்துப் பார்த்தாள் மித்ரா.
“என்னடா இவ்வளவு சீரியஸ் இஸ்யூ. பிருத்விகா யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. உனக்கு எதாவது ஆகிடும்னு பயந்தா?”
“ம்ம்ம்.. நானுமே இப்படி ஒன்னை எதிர்பார்க்கலை. கிருஷ்ஷூக்கும் தெரியும். பிருத்விகாவுக்கு குளோஸா இருக்கற யார் வேணாலும் அபெக்ட் ஆகலாம். அதனால் தான் நாம எல்லாரும் ஒன்னா தங்கி இருக்கோம்.”
வருணுக்கும் மித்ராவுக்கு இதை வெளிப்படுத்த விருப்பமில்லை. நால்வரில் அவள் ஒருவளாவது நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம். ஆனால் அவளுக்கும் நடப்பது தெரிந்தால் அவளுமே கவனமாக இருப்பாள் என்பதால் உண்மையைக் கூறி இருந்தான். அனைத்தும் தெரிந்த இருவரே இதை இப்படி செய்து வைத்திருக்க மித்ரா அவர்கள் போல் செய்யாமல் இருக்க வருண் இந்த காரியத்தைச் செய்திருந்தான்.
“ஓ காட்.. இது தெரியாமல் உன்னை நிறுத்தி நான் பிளாஸ்பேக் கேட்டுட்டு இருக்கேன். இப்ப அவங்களை எங்க தேடறது?”
“இதை யூஸ் பன்ன வேண்டாம்னு பார்த்தேன். ஆனால் இன்னிக்கு யூஸ் பன்ன வேண்டியது ஆகிடுச்சு.”
“என்ன சொல்ற?”
“அதை மட்டும் நீ தெரிஞ்சுக்க வேணாம். லீவ் தட்.”
அவனுடைய கைப்பேசியை எடுத்தவன் எதையோ பார்க்க ஆரம்பித்தான்.
ஊட்டி மலைப்பாதையில் உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தனர் கிருஷ்ஷூம், பிருத்விகாவும். அவர்களது கையில் வைன் நிறத்தில் தேநீர் கண்ணாடி தம்பளர்களில் ஆவியுடன் இருந்தது.
சுற்றியும் பனி மூட்டம். சாலையோரச் சுவர்களில் இருவரும் அமர்ந்து சுற்றி இருப்பனவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிருத்விகாவின் முகத்தில் சோகம் இழையோடிக் கொண்டிருந்தது. கிருஷ்ஷின் முகத்தில் அது இருந்தாலும் அவன் பெரிதாக அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
“பிருத்விகா என்னாச்சு?”
“எதுக்கு லாங்க் டிரைவ் போலாம்னு சொன்ன?”
“நேத்து ஒரு மிஸ்டேக் பன்னிட்டேன். அதிலிருந்து கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆக டிரை பன்னேன். தட்ஸ் ஆல்.”
“என்ன சொல்ற?”
“கேட்காத.. நான் இப்படி செஞ்சது எனக்கே ஆச்சரியமா இருக்கு. அதனால் தெளிவாக யோசிக்க வேண்டி இருந்தது.”
“இருந்தாலும் இந்த டைமில் நாம இரண்டு பேரும் வெளியில் வந்திருக்கக் கூடாது.”
“இட்ஸ் ஓகே.”
“காலில் இருக்கற இம்மொபிலைசர் கூட ரீமுவ் செய்யலை.”
“அவ்வளோ பெயின் இல்லை.”
“சரி இப்ப எங்க போகனும்?”
“திரும்ப வீட்டுக்கே போகலாம். வருண் தேடுவான்.”
“அப்ப நீ இந்த டிரைவ் போகலாம்னு சொன்னது வருண்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக இல்லையா?”
“ம்கூம்.. இல்லை எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் தேவைப்பட்டது. அதான் உங்கிட்ட கேட்டேன்.”
“சரி நீ இந்த டிரைவ்க்கு ஒத்துகிட்ட காரணம் என்ன? நான் வேணால் சில சமயம் ரெக்லெஸ் அப்படினு சொல்லலாம். ஆனால் நீ அப்படி கிடையாது. பிரிசிஷன் அண்ட் கால்குலேட்டிவ்.” கேள்வியுடன் தன் நண்பனை நோக்கினாள் பிருத்விகா.
“சில சமயம் நானும் தடுமாறுவேன். சோ லீவ் இட்.”
“அந்த தடுமாற்றம் மித்ராவைலாயா?”
தன் தோழியை ஆராய்ச்சியுடன் நோக்கினான் கிருஷ்.
“நைட் நீ ஸ்டெப்ஸ் மேல போறதையும், மித்ரா அழுதுட்டே அவளோட ரூமுக்குள்ள போறதையும் பார்த்தேன். என்னதாண்டா உங்களுக்குள்ள பிரச்சினை?”
“ஹே.. அப்படி எல்லாம் எதுவுமில்லை.” கிருஷ்ஷின் முகம் சோகமாக சில விநாடிகள் மாறி பின்பு தன்னை இயல்பாக மீட்டுக் கொண்டது. ஆனால் அவை எல்லாம் பிருத்விகாவின் கண்களுக்குத் தப்பவில்லை.
அவள் தோளின் மீது கை வைத்தவள், “சரிடா.. சொல்லவேணாம்னா பரவால்லை விடு. நீ ஹேப்பியா இருந்தால்தான் சூட் ஆகும்” பிருத்விகா அமைதியாக தன் நண்பனின் முகத்தைப் பார்த்தப்படி தெரிவித்தாள்.
“நீ சொன்ன இல்லை.. பிரிசிஷன், கால்குலேட்டிவ்.. அங்கதான் நான் தோத்து போய் நிக்கறேன். இது வரைக்கும் நான் என்ன தப்பு செஞ்சு வச்சேனு எனக்குப் புரியலை. ஆனால் என்கிட்ட மித்ரா பேசறது இல்லை. ரீசனும் சொல்லவே இல்லை. என்னால் கண்டும் பிடிக்க முடியலை.”
அவனெப்படி அறிவான். அதன் காரணி வெளி நாட்டில் உல்லாசமாக திரிந்து கொண்டிருக்கிறான். இங்கே இவர்கள் இருவரும் இரு துருவங்களாக நின்று கொண்டிருக்கின்றனர்.
“உங்கிட்ட சொல்லக் கூடாது. நேத்து எங்களோட பர்ஸ்ட் கிஸ். பட் அதான் லாஸ்ட் கிஸ். செவன் இயர்ஸ் லவ். ஆனால் இப்ப அதிலிருந்து நான் மூவ் ஆன் ஆக முடிவு பன்னிட்டேன். நான் எப்போதும் ஹேப்பியா இருக்க டிரை பன்னுவேன். ஆனால் பல நேரங்களில் என்னால் முடியலை. அவளை நினைச்சால் இங்க வலிக்குது.” இருதயப் பகுதியைத் தடவிக் கொண்டான்.
“ஆனால் கண்ணு முன்னாடி அவ இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த இயரை முடிச்சுட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”
அவள் தோளில் மீது கை போட்டு ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள்.
“விட்றா.. விட்றா தேடுனாலும் உன்னை மாதிரி ஒரு நல்லவன் கிடைக்கமாட்டானு அந்தப் பொண்ணுக்குத் தெரியலை. நான் வேணா பேசி பார்க்கட்டுமா?”
அவள் குரலில் இருந்த அக்கறையைக் கண்ட மித்ரன் லேசாக புன்னகைத்தான்.
“வேண்டாம். அவளே வந்து ரீசன் சொன்னால் சொல்லட்டும். இல்லைனா தேவை இல்லை. சில கேள்விகளுக்கு பதில் கிடையாது. நானும் இதை அப்படியே நினைச்சுக்கிறேன்.”
“சரி.. என்னோட விஷயத்தை விடு. வருண் என்ன சொல்றான்?”
“வருண் என்ன சொல்றான்?” திரும்ப அவனையே கேட்டாள்.
“ரைட்டு..” தலையை ஆட்டிய கிருஷ், “இப்பவெல்லாம் வருண் கூட நீ சண்டை போடறது இல்லை. ஃபைட் பன்னறது இல்லையே? எங்கிட்ட வந்து அவனை மணிக்கணக்கா திட்டறது இல்லை. அதான் எப்படினு ஒரு டவுட். ஏழு வருஷமா நீ திட்டறதைக் கேட்டு என்னோட இரண்டு காது சவ்வும் கிழிஞ்சு போச்சு தெரியுமா?” என கேலியாக உதைத்தான்.
அவனை முறைத்தவள், “வருணும் எங்கிட்ட வம்பிழுக்கறது இல்லை. நானும் அவன் வழிக்குப் போறது இல்லை.” என பதில் உரைத்தாள்.
“ஆஹான்.. அப்படினா ஏழு வருஷம் முன்னாடியே வருண் கூட உன்னை விட்ருந்தால் என்னோட காது தப்பிச்சுருக்குமில்லை..”
தோளில் இரண்டு அடிகளை அதற்கு பதிலாக வாங்கிக் கொண்டாள்.
“இனி எல்லாம் அப்படி பேச மாட்டேன். எனக்கே சண்டை கட்டி கட்டி போர் அடிச்சு போச்சு.. அதான் இப்ப பீஸ் டீரிட்டில இருக்கோம். அது மட்டுமில்லாமல் இப்ப என்னோட சுட்சுவேஷனும் சரியில்லை. இன்கேஸ் எதாவது ஆனாலும் யார் கூடவேவும் எனக்கு பகை இருக்கக் கூடாது. அதுவும் எங்க அம்மாவுக்குப் பிடிச்ச வருண் கூட வேண்டாம்.”
“இப்படித்தான் சொல்லுவ. அப்புறம் இரண்டு பேரும் ஒரு எதாவது டிசைன் கண்டுபிடிச்சு பைட் பன்னுவீங்க..” கேலியாகக் கூறினான் கிருஷ்.
“சரி சரி நடக்கும் போது பார்த்துக்கலாம்.” என பேச்சை மாற்ற முயன்றாள் பிருத்விகா. ஆனால் அதற்கு கிருஷ் விடவில்லை.
“ஆனால் எனக்கு ஒரு டவுட்?”
“என்ன டவுட்?”
“எவ்ளோ சண்டை போட்ரூப்பீங்க. ஆனால் இப்ப உனக்கு ஒரு பிரச்சினை அப்படினதும் வருண் தான் எல்லாம் பார்த்து பார்த்து செய்யறான்?”
“ம்ம்.. உண்மைதான். பிகாஸ் என்னோட அம்மா அவங்கிட்ட பிராமிஸ் வாங்கிருக்காங்க. எனக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் வருண் என்னை நல்லா பார்த்துக்கனும். இராமசந்திரன் அங்கிள், ஆண்ட்டி எல்லாருக்கும் இது தெரியும். இவங்க எல்லார்கிட்டேயும் அம்மா சொல்லி இருக்காங்க.”
“அது மட்டும்தான் காரணம் அப்படிங்கிறியா?”
“அங்கிள், ஆண்ட்டிக்கு என்னை சின்ன வயசில் இருந்தே பிடிக்கும். ஆனால் வருணுக்குப் பிடிக்காது. வருணுக்கு நான் அப்பர் மிடில் கிளாஸ் பொண்ணு அப்படிங்கற இளக்காரம் இருக்கு. அவனோட ஸ்டேட்ஸ்க்கு நான் எல்லாம் ரொம்ப கீழனு நினைக்கிறான்.”
“எனக்கு அப்படி தோணலை. உன்னோட அம்மாவுக்கு வருணை ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவ. அப்புறம் என்ன?”
“ஏன் பிடிக்காது? அவன் செய்யற எல்லாத்துக்கும் அம்மா பயங்கர சப்போர்ட் பன்னுவாங்க. ஆண்ட்டி ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனால் அம்மா பேச்சை ஆண்ட்டி கேட்பாங்க. அதனால் வருண் தான் நினைச்ச அத்தனையும் செய்வான். முக்கியமா என்னோட் இண்டிபெண்ட்சில இரண்டு பேரும் தலையிடுவாங்க. நிறைய விஷயங்களில் சேர்ந்து இரண்டு பேரும் கண்ட்ரோல் செய்வாங்க. எங்க அம்மா சும்மா இருந்தாலும் வருண் சும்மா இருக்க மாட்டான்.”
கூறி முடித்து விட்டு அமைதியாக எதிரே இருந்த மலைப்பாதையைப் பார்த்தாள் பிருத்விகா.
“சரி.. சரி டைம் ஆச்சு கிளம்பலாம்.” கிருஷ் அவளை அழைத்துக் கொண்டு வருணின் வீட்டுக்குச் சென்றான்.
கேட்டின் முன்னால் வண்டியை நிறுத்தச் சொன்னாள் பிருத்விகா. அவளுடைய வீட்டிலிருந்து திங்க்ஸ் ஏதோ எடுக்க வேண்டும் என்று கூறினாள். எடுத்து விட்டு வரும் வழியில் கிருஷ்ஷின் கண் முன்னே பிருத்விகா கடத்தப்பட்டாள்.
…