என் மேல் விழுந்த மழையே! -9
அத்தியாயம்-9
பீப்..பீப்..பீப்..
அந்த மருத்துவ உபகரணம் ஒலித்துக் கொண்டே இருந்தது. செயற்கை சுவாசத்திற்குரிய முகமூடியின் வழியே சுவாசித்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா ஸ்ரீ. அவள் உடல் வெள்ளை நிற மருத்துவ படுக்கையில் கடத்தப்பட்டிருந்தது. கையில் ஐவி பேக் பட்டர் பிளை ஊசியின் உதவியால் ஏறிக் கொண்டிருந்தது.
அவள் அருகில் அமர்ந்திருந்தான் கிருஷ். அவன் முகம் கவலையைத் தாங்கி இருந்தது. அவன் தோழி நான்கு மணி நேரமாக கண் விழிக்கவில்லை. அவளுடைய அப்பாவுக்கும் தகவல் கூறவில்லை. மார்பில் சுவாசம் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது டாக்டர் வசுந்தரா உள்ளே நுழைந்தார். அவளுடன் இன்னொரு மருத்துவரும் உள்ளே நுழைந்தார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்.ஷஎஎஎஃஒ
பிருத்விகா ஸ்ரீயைப் பரிசோதித்தார் அந்த மருத்துவர். அருகில் வசுந்தரா படுக்கையில் சுய நினைவற்றுக் கிடக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“ஆல் ரைட்.. இந்தப் பொண்ணு ஆபத்து கட்டத்தை தாண்டிடாங்க.. அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.”
அப்போது சரியாக கண் விழித்தாள் பிருத்விகா ஸ்ரீ. இமைகள் அசைந்தது. விழிகளை உருட்டினாள். நடந்தவை அனைத்தும் அவள் நினைவுக்கு வந்தது.
“ஹலோ.. பிருத்விகா.. லுக் சி இஸ் பேக்.” அந்த அவசர சிகிச்சை மருத்துவர் பிருத்விகாவை முதலில் பார்த்துப் பேசினார்.
செயற்கை சுவாசத்தை பிருத்விகாவே எடுத்தாள். அவளாக நன்றால் சுவாசிக்க முடிந்தது.
“ஹாய் பிருத்விகா.. யூர் ஆர் ஓகே நவ். டேக் ரெஸ்ட். ஐ வில் சி யூ லேட்டர்.” அவள் தலையை தடவி ஆதுரமாகப் பேசிவிட்டு வசுந்தரா நகர்ந்தார். அவரைப் பார்த்து தலையை மட்டும் அசைத்தாள் பிருத்விகா ஸ்ரீ.
அவர்கள் இருவரும் வெளியே செல்லும் போது, “யான் பேடிச்சுப் போயி.. பிருத்விகா.. நல்ல வேளை உனக்கு ஒன்னும் இல்லை..”
பிருத்விகா பேச முயன்றாள். ஆனால் தொண்டை மிகவும் கட்டி இருந்தது. தலையும் பாரமாக இருந்தது. நெஞ்சில் ஏதோ அழுத்தமான உணர்வு. பேச முயன்றவளின் வார்த்தை சரியாக வரவில்லை.
“பேச டிரை பன்னாத.. ஆல்ரெடி திரோட் இன்பெக்சன் இருந்திருக்கு. நீ விழுந்து வாட்டரை நல்லா குடிச்சுட்ட. சோ திரோட்.. இன்பெக்ட் ஆகிருக்கு. கொஞ்ச நாளில் சரியாகிடும்.”
கையை அசைத்து நான் இங்க எப்படி வந்தேன் என்று கேட்க முயன்றாள். யார் என்னை காப்பாற்றியது? என்ற கேள்வி முக்கியமாக இருந்தது.
“அப்பாகிட்ட சொல்லவே இல்லை. அவர்கிட்ட சொன்னால் நீ கஷ்டப்படுவேனு தெரியும்.”
அப்போது உள்ளே நுழைந்தனர் வருணும், இராம சந்திரனும். இராம சந்திரனைப் பார்த்தும் பிருத்விகாவின் முகம் லேசாக மலர்ந்தது. அவள் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தவர், “என்ன பிருத்வி பார்த்து இருக்கக் கூடாதா? கொஞ்ச நேரத்தில் எல்லாரையும் பயமுறுத்திட்ட.. வருண் தான் போன் பன்னான். நீ டிஸ்சார்ஜ் ஆனதும் முதல் வேலை நீச்சல் கத்துகிறதுதான். வருண் போற கிளப்பில் நீ சேர்ர. இது உன்னோட மெம்பர்ஷிப்.” என அவள் கண் முன் அந்த பிரபல நீச்சல் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மெம்பர்ஷிப் கார்டை காட்டினார்.
அவளை அமைதியாகப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தான் வருண். அவளிடம் எதுவும் பேசவில்லை.
“நல்லா ரெஸ்ட்.. எடுக்கனும். ரிவகரி ஆகற வரைக்கும் காலேஜ் போக வேண்டாம். வருண், கிருஷ் எல்லாரும் உன்னோட லெசன்ஸ் கவர் பன்னிருவாக்குவாங்க. வசுந்தரா மேடம்கிட்ட நான் பேசிட்டேன். சோ டோண்ட் வொர்ரி.”
அவள் பேசுவதைக் கேட்காமல் அவரும், கிருஷ்ஷூம் பேசினர். அவள் கேட்கும் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை.
“அப்புறம் போலீஸ் வருவாங்க. இந்த இன்சிடெண்ட் பத்தி சின்ன என்குயரி. நீ ஒன்னும் பயப்படாத. பேச முடியலைனா எழுதிக் காண்பி. அங்கிள் உன்னை நாளைக்கு வந்து பார்க்கிறேன். நம்ம வீட்டிலேயே கொஞ்ச நாள் இரு. வருணும், தேவகி அம்மாவும் உன்னைப் பார்த்துப்பாங்க. பாய்..” என்று கூறி விடை பெற்றார். அவருடன் சென்ற வருண் சில நிமிடங்களில் ள்ளே வந்தான்.
“கிருஷ்.. நீ வெளிய இரு. நான் பிருத்விகாகிட்ட தனியாப் பேசனும்.”
கிருஷ் உடனே பிருத்விகாவின் முகத்தைப் பார்த்தாள். அவள் தலையை அசைத்தாள். அதனால் சிறிது தயக்கத்துடன் அவன் வெளியேறினான். எதுவும் பேசாமல் வருணின் முகத்தைப் பார்த்தாள் பிருத்விகா.
“ஏய்..லூசு.. ஒன்னும் தெரியாத மாதிரி பார்க்காத.. நான் உன்னை எங்க நிக்க சொன்னேன். நீ எங்க நின்ன? உனக்கே தண்ணீனா பயம் தானே. அப்புறம் எதுக்கு அதைப் போய் எட்டிப் பார்த்த.. நான்…” என்று ஏதோ சொல்ல வந்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டான்.
“பேசண்ட்டு பார்க்கிறேன். இல்லைனா… ஈவினிங்க் டிஸ்சார்ஜ் ஆனதும் நேரா என்னோட வீட்டுக்குப் போறோம். சும்மா அங்க வந்து அடம் பிடிக்கக் கூடாது.” என்று கோபமாக கூறிவிட்டு வெளியேறினான். ஆனால் அவன் முகத்தில் கோபம் தென்படவே இல்லை.
வருண் வெளியேறியதும் உள்ளே நுழைந்தான் கிருஷ்.
“என்ன சொன்னாரு ஹீரோ?.. சும்மா சொல்லக் கூடாது பிருத்வி. நான் கூட வருணுக்கு உன் மேல் அக்கறை இல்லைனு நினைச்சேன். நீ தண்ணிக்குள்ள இருக்கறதை எப்படி கண்டுபிடிச்சானு தெரியலை. உடனே தண்ணிக்குள்ள யோசிக்காமல் குதிச்சுட்டான். காப்பாத்தி பர்ஸ்ட் எய்டும் பன்னிட்டு.. எமர்ஜென்சி மெடிசன் வரை தூக்கிட்டு ஓடி வந்துட்டான்.. நான் கூட அவனை தப்பா நினைச்சுட்டேன்.” என்று பிருத்விகா காப்பாற்றப்பட்ட செய்தியை உரைத்தான்.
மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்து வெளியில் தெரியும் மலையை வேடிக்கைப் பார்த்தான் வருண்.
அவள் மனதில் பிருத்விகாவின் நினைவுகள் தான். அவளைப் பார்க்க வந்தால் அந்த இடத்தில் அவள் இல்லை. சுற்றும் முற்றும் தேடினால் அவளுடைய கர்ஃசீப் மட்டும் அருகில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. உடனே தண்ணீருக்குள் குதித்து விட்டிருந்தான். அந்த நொடி அவளுக்கு எதாவது நடந்திருந்தால் என்ற எண்ணம் அவன் மனதைக் கொன்றது. அவளுக்கு நீச்சல் தெரியாது என்று அவனுக்குத் தெரியும். நீருக்குள் மூழ்கி தண்ணீருக்குள் மயங்கிய நிலையில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
உடனே அவளை இழுத்துக் காப்பாற்றினான். முதல் உதவி செய்து அவளை எமர்ஜென்சி மெடிசன் டிபார்ட்மெண்ட் கொண்டு செல்லும் வரையில் அவனும் ஒரு நிலையில் இல்லை என்பதுதான் உண்மை. அவளுக்கு எதாவது நேர்ந்திருந்தால்… அப்படி ஒன்றையே நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.. அவன்.
இப்போதுதான் தன் உடைகளை மாற்றிவிட்டு வந்திருந்தான். பிருத்விகாவுக்கும் உடையை தேவகி அம்மாள் மூலம் அவன் தந்தையிடம் கொடுத்து விடச் செய்திருந்தான்.
திரும்ப காருக்குச் சென்றவன் அந்த உடைகளை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தான். அப்போது காவலர்களிடம் எழுதிக் காண்பித்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா.
நான் தவறி விழுந்தேன் என ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள். அவர்கள் எப்படி கேட்டும் அவள் தன் பதிலை மாற்றவில்லை. அவர்களும் திரும்பி சென்று விட்டனர். அவளுடைய உடையை கிருஷ்ஷிடம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டான்.
“டிஸ்சார்ஜ் இன்னும் கொஞ்ச நேரத்தில் செஞ்சுடலாம். நீ ரெடியா இரு. நான் உன்னை டிராப் பன்னுவேன். என்னையே எல்லாத்தையும் பார்த்துக்க சொல்லிட்டு ஹிரோ கிளம்பிட்டாரு..” கிருஷ் கூறியவுடன் அதற்கு தலையை மட்டும் அசைத்தாள் பிருத்விகா.
“இனிமேல் நான் இல்லாமல் நீ கேம்பஸில் தனியாக எங்கேயும் போக முடியாது. இந்த உன்னோட டிரஸ்.” அவன் நண்பன் அவளிடம் பையைக் கொடுத்து விட்டு வெளியேறினான். அவளிடம் எந்தக் கேள்வியும் அவன் கேட்கவில்லை. கிருஷ் அப்படித்தான். அவளுக்கு எதாவது என்றால் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான். ஐவி பேக் முடிந்ததும் மெதுவாக செவிலியரின் உதவியுடன் பிருத்விகா உடைகளை மாற்றினாள்.
டிஸ்சார்ஜ் புரசிட்சர் முடிந்ததும் கிருஷ் அவளுடைய காரில் அழைத்துச் சென்றான். முன் சீட்டில் அமர்ந்த பிருத்விகா ஸ்ரீ அமைதியாக பயணம் செய்தாள். கிருஷ்ஷூம் எதுவும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளுக்குத் தேவையான தனிமையை எப்போதும் கொடுப்பான். அவள் மன நிலை புரிந்து அமைதியாக வந்தான்.
வருணின் வீட்டு முன் கார் நின்றது. அவர்கள் காரைப் பார்த்ததும் கேட் திறந்துவிடப்பட்டது. அவன் கார் வீட்டுக்குள் நுழைந்ததும் வருணும் வெளியே வந்தான்.
இப்போது கேசுவல் உடையில் இருந்தான்.அப்போது எதுவும் அவனைப் பேசவில்லை வருண்.
“கம் கிருஷ்.. அவளைக் கூட்டிட்டு வா..” அப்போது தேவகி அம்மாளும் வெளியே வந்தார்.
“கண்ணு.. இப்ப எப்படி இருக்கு? நான் பயந்தேடே போயிட்டேன். நீ கொஞ்ச நாள் இங்கேயே இரு பாப்பு. நான் உன்னைப் பார்த்துகிறேன். நீ வீட்டுக்குப் போக விட மாட்டேன்.”
அவருடைய அன்பைப் பார்த்ததும் அவள் புன்னகைத்தாள்.
“எனக்கு ஒன்னுமில்லை. நல்லாயிருக்கேன்.”
“சரி உள்ளவா.. பாப்பா.. நீயும் வாப்பா..”
அவர் முன்னே சென்று விட மூன்று பேரும் உள்ளே நுழைந்தனர். தேவகி அம்மாள் கிருஷ்ஷூக்கு மட்டும் ஜூஸ் ஒன்றை எடுத்து வந்தார். அது கிருஷ்ஷுக்கு பிடித்த ஜூஸ். அதனால் குழப்பத்துடன் பார்த்தான்.
“டிரிங்க் கிருஷ். உனக்கு இது பிடிக்கும் தானே?”
“ம்ம்..”
“மெடிசன்ஸ் இதில் இருக்கு.”
“நான் பார்த்துக்கிறேன்.”
“ஓகே.. டேக் கேர். பிருத்விகா நான் நாளைக்கு வரேன். நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வா. புரியுதா?”
“ம்ம்ம்ம்…”
“ஓகே பாய்..”
கிருஷ் திரும்பி ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு சென்றான்.
“போ என்னோட ரூமுக்குப் போ.. ரெஸ்ட் எடு. தேவகிம்மா பார்த்துக்குங்க.” வருண் வழக்கமாகப் பேசுவது இல்லாமல் அமைதியாக சென்று விட்டது பிருத்விகாவுக்கு ஆச்சரியம் என்றாலும் அவளுக்கு களைப்பாக இருந்தது. அதைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அமைதியாக தேவகியுடன் வருணின் அறைக்குச் சென்றாள்.
“படுத்துக்க கண்ணு.. நைட் சாப்பாடு ரெடி பன்னிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அமைதியாக தேவகியும் நகர்ந்து விட்டார்.
அவளின் கைப்பேசி, கணினி அவளுக்குத் தேவையான அனைத்தும் வருணின் அறையில் இருக்கும் டேபிளில் இருந்தது. சில புத்தகங்களும் தான். அதைப் பார்த்துவிட்டு அமைதியாக கண்களை மூடிப் படுத்துக் கொண்டாள். மாத்திரைகளின் விளைவாக உறக்கம் தழுவியது என்றே கூறலாம்.
கல்லூரி மாலை நேரம். பிருத்விகா மட்டும் தனியே இருந்தாள். பாதையில் நடந்து கொண்டிருப்பவளுக்கு யாரோ பின் தொடர்ந்து வருவது போல் தோன்றியது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஆனால் பயம் இன்னும் குறையவில்லை. இப்போது வேகமாக ஓட ஆரம்பித்தாள். அவளைத் துரத்தியது காலடி சத்தம். ஓடியவள் மிகப் பெரிய குளத்தின் முன் நின்றாள். இப்போது அந்தக் காலடி சத்தம் அவள் திரும்பி பார்ப்பதற்குள் அவளை நீருக்குள் தள்ளிவிட நீரில் குப்புற விழுந்தாள் பிருத்விகா..
“வருண்……” என்று கத்தியப்படி எழுந்தாள். வியர்த்து கொட்டிக் கொண்டிருந்தது. மழை தூரல் போட்டுக் கொண்டிருப்பதால் ஏசி ஆன் செய்யவில்லை அவள். குளிர் அடிப்பது போல் இருந்ததால் கம்பர்ட்டரை எடுத்து நன்றாக போர்த்தியப்படி உறங்கி இருந்தாள்.
கண் விழித்துப் பார்த்தவளுக்கு பெட் லேம்ப் வெளிச்சத்தில் வருண் மட்டும் தெரிந்தான். அவன் கைப்பேசி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“சொல்லு பிருத்விகா.. எதுக்கு என்னை கூப்பிட்ட?”
அவன் அழைத்ததை உணர்ந்தாலும் அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
“இல்லை.. நான் கூப்பிடலை.”
“ஓகே…” அவன் முகத்தில் என்ன இருக்கிறது என்று பிருத்விகாவால் கண்டறிய முடியவில்லை.
“சரி.. கெட் அப். சாப்பிடப் போலாம். எய்ட் தேர்ட்டி ஆச்சு.”
அமைதியாக அவளிடம் பேசும் இந்த வருண் அவளுக்கு வித்யாசமாகத் தெரிந்தான். இருந்தாலும் குழப்பத்துடன் எழுந்து அவனைத் தொடர்ந்தாள்.
இரவு உணவும் அமைதியாகக் கழிந்தது. தேவகி அம்மாள் அவளிடம் தழை ரசத்தைக் கொடுத்தார்.
“பாப்பா.. இதைக் குடி. நெஞ்சுச் சளி, தொண்டை வலி எல்லாத்துக்கும் கேட்கும். ரொம்ப நல்லது. சாப்பாட்டில் கூட போட்டு பிசைஞ்சு சாப்பிடு.”
பிருத்விகாவும் அவர் சொற்படியே அமைதியாக உண்டார்.
“வர்ர ஞாயித்துக்கிழமை சுத்தி போட்ரலாம். யாரு கண்ணு பட்டுச்சோ.. நல்ல வேளை வருண் தம்பி காப்பாத்திருச்சு. அவரு போன் பன்னி சொல்லும் போது எனக்கு உசிரே இல்லை. அது நாப்பஞ்சி அடி தொட்டியாம். ஒன்னும் பயப்படாத.” பூசை அறையில் இருந்து திருநீரை எடுத்து அவளுக்குப் பூசி விட்டார். “இது வருண் தம்பி குல தெய்வத் திண்ணீரு.. ரொம்ப சக்தி வாய்ந்த சாமி. கெட்ட கனவு காணாமல் கம்முனு தூங்கு கண்ணு.”
தேவகி அம்மாள் நீரை எடுத்து வர வருண் அவளுக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தான். அதை உண்டவள் மீண்டும் எழுந்தாள்.
“இனி நான் பார்த்துகிறேன். நீங்க சாப்பிட்டு தூங்குங்க.”
பிருத்விகா மேல் ஏற வருணை மட்டும் நிறுத்தினார் தேவகி அம்மாள்.
“தம்பி என்ன இருந்தாலும்.. வயசு பொண்ணு. கவனம் தம்பி. பேர் கெட்டிடக் கூடாது.”
“ம்ம்ம்.. புரியுதுமா.. நம்ம பிருத்விகாதானே.. அப்பா சொல்லி இருக்கார். அங்கிளும் நம்ம கூட இருந்தால் ஒன்னும் நினைச்சுக்க மாட்டார். காலேஜ் போனதில் இருந்து இங்க அவ வரவே இல்லை. இப்பதான் வர்ரா..”
“புரியுது தம்பி.”
வருணும் பெரு மூச்சு விட்டபடி மேலே ஏறினான்.
பிருத்விகா அமைதியாக அறையில் நின்று ஜன்னலின் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் எதையோ வெறித்துக் கொண்டிருந்தது.
“என்ன பிருத்விகா.. அடுத்து எப்படி பொய் சொல்லலாம்னு யோசனையா?”
அவனின் கேள்வியில் வெடுக்கென்று திரும்பினாள்.
“என்ன பொய்?” குரல் கோபத்துடன் ஒலித்தது.
“போலீஸ்கிட்ட சொன்ன பொய்தான். சொல்லு. உன்னை யாரு தள்ளிவிட்டா?”
“என்னை யாரும் தள்ளிவிடலை. நானாதான் விழுந்தேன்.”
இதுவரை கதவின் அருகே கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நின்றவன் அமைதியாக அவளருகே நெருங்கினான். அவன் பார்வை அவள் முகத்தில் பதிந்திருந்தது. அவனின் பார்வை அவள் அவள் மனதை ஊசி போல் துளைத்துக் கொண்டிருந்தது.
“பிருத்விகா.. நீ பொய் சொல்லும் போது எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும்? எப்படி தெரியும்? நீ பாட்டுக்கு எதையோ இமேஜின் செஞ்சா.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”
“எப்படி தெரியுமா? அப்ப நீ பொய் சொன்னேனு ஒத்துக்கிறியா?”
வார்த்தைகளை விட்டு அவனிடம் மாட்டிக் கொண்டிருந்தாள் பிருத்விகா.
-மழை கொட்டும்..