என் மேல் விழுந்த மழையே! -29
அத்தியாயம்- 29
OPEN YOUR EYES MY DEAR.
YOU ARE MY EARTH.
I CANNOT GO ON WITHOUT YOU.
YOU ARE MANDTORY FOR MY LIFE LIKE OXYGEN.
YOU ARE MY ONE AND ONLY LOVE EARTH.
I DON’T HAVE GROUND WITHOUT YOU.
“கொஞ்சம் சீரியஸ்தான். பிருத்விகா கை கால் முகம் எல்லாம் இன்சூரிஸ். இடது கையில் விரல்ல பிராக்ட்சர்ஸ் இருக்கு. கால் விரலிலும் இருக்கு. ஸ்டொமக்கில் எட்டி உதைச்சுருக்காங்க. நல்ல வேளை இண்டர்னல் ஆர்கன்ஸ்க்கு பாதிப்பு இல்லை. மயக்கத்தில் இருக்காங்க. செடேஷனில் இருக்காங்க. கண் விழிச்சதுக்கு அப்புறம் தான் அங்க என்ன நடந்துச்சுனு தெரியும். ஷி வில் பி ஓகே.”
“டாக்டர்.. பிருத்விகாவை…”
“நோ டிரேசஸ் ஆஃப் ரேப். ஷிஸ் ஈஸ் பேட்லி பீட்டன் அப்.”
ஷரணி வருணின் தோள் மீது கை வைத்து ஆறுதலாகக் கூறினாள். மது பாலனும், “சியர் அப் வருண். தலைக்கு எந்த அடியும் இல்லை. நானும் பார்த்துட்டேன். அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.” என்றான்.
“தேங்க்ஸ்..”
“என்னோட வொய்ஃப்தான் தீடிர்னு போன் பன்னி அவ சொல்ற லொகேஷனுக்கு ஷரணியோட ஏர் ஆம்புலன்ஸ் அனுப்ப சொன்னாள். ஆனால் பிருத்விகாவுக்குனு எனக்குத் தெரியாது.”
கண்களை மூடித் திறந்தான் வருண்.
“உங்களுக்கு மில்லியன் டைம்ஸ் தேங்க்ஸ் சொன்னாலும் தீராது. மருதி மேடம்கிட்ட சொல்லிடுங்க. ஷி ஷேவ்ட் மை லைஃப்னு.”
கண்களை மூடித் திறந்தான் மதுபாலன். அவனின் நிலை அவருக்கும் புரிந்தது. அவன் கண் முன்னே வருணின் கவலையை விட காதல்தான் தெரிந்தது. மதுபாலனும் முதல் காதலைப் பறி கொடுத்தவர் என்பதால் அவருக்கும் புரிந்தது. ஷரணிக்கும் தன் தங்கையை இழந்தது நினைவுக்கு வர அவளுக்கும் புரிந்தது. பிருத்விகா, வருணின் உறவைப் பற்றி அவளுமே அறிவாள்.
மதுபாலன் கிருஷ்ஷையும், மித்ராவையும் நோக்கினர்.
“பார்த்துக்குங்க..” என்றபடி அங்கிருந்து நகர்ந்தனர். ஷரணி வார்டு பாயிடம் கூறி மூவருக்கும் பழச்சாறு ஏற்பாடு செய்தாள்.
வார்டு பாய் கொண்டு வந்து தரவும் கிருஷ்ஷோ, வருணோ இருவரும் அதைக் கையில் எடுக்கவில்லை.
‘டிரேவை இங்க வச்சுட்டுப் போங்க. நான் கொடுத்துக்கிறேன்.”
முதலில் வருணிடம் சென்றாள்.
“வருண்.. இந்தா குடி..”
அவளை நிமிர்ந்து பார்த்தான் வருண். அவன் முகமும் , கண்களும் குற்ற உணர்ச்சியில் தவித்தன.
“வருண்.. உன்னாலதான் பிருத்விகாவை காப்பாத்த முடிஞ்சுது. இந்தா ஜூஸ் குடி. அவளுக்கு எதுவும் ஆகாது. நீ நல்லா இருந்தால் மட்டும்தான் அவளைப் பார்த்துக்க முடியும். அவங்க அம்மாவுக்கு கொடுத்த பிராமிஸை நினைச்சுப் பாரு.”
வருண் உடனே அந்த ஜூஸை எடுத்து ஒரே மடக்கில் குடித்து விட்டான். ஒருவனைக் குடிக்க வைத்த நிம்மதியில் கிருஷ்ஷிடம் நகர்ந்தாள்.
கிருஷ்ஷின் மனதில் திரும்ப திரும்ப பிருத்விகா ஸ்ரீயின் தோற்றமே நினைவு வந்தது. அவளின் புன்னகை, சேட்டை இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதும் ஒரு வித பாசிட்டிவ் வைபிரேசனில் இருப்பாள். அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததை அவனால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. உயிரல்லாத தோற்றம் அது. யாரோ ஒருவனின் வெறிக்கு பழியான தோற்றம் அது. தன்னை கேலி கிண்டல் செய்து கொண்டே உத்தரவு போடுவாள். அவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொண்டு வருவாள். பட்டாம் பூச்சி போல் திரிந்தவள்.
“கிருஷ்ணா.. இந்தா ஜூஸ் குடி. இப்பதான் நீ பிருத்விகாவுக்குத் தேவைப்படற. அவங்க அம்மா இழப்பிலிருந்து மீளறதுக்கு நீதான் முக்கிய காரணம். அதே மாதிரி இப்பவும் நீதான் அவளைப் பார்த்துக்கனும். எங்களை விட நீதான் பிருத்விகாவுக்கு குளோஸ். சாப்பிடு. இதுக்கு மேலதான் ரெஸ்பான்சிபிளிட்டி.”
யார் என்ன செய்தார்களோ இல்லையோ மித்ரா தான் படித்தப் படிப்பிற்கு ஏற்றது போல் அவர்களிடம் பேச இருவரும் ஜூஸைக் குடித்திருந்தனர். காலையில் இருவரும் பட்டினி கிடக்கின்றனர். இவ்வளவு ஏன் மித்ராவும் உண்ணவில்லை.
கிருஷ் குடித்ததும் மீதி இருந்த கண்ணாடி தம்பளரை எடுக்க முயலும் போது மித்ராவின் கரங்கள் லேசாக நடுங்கியது. அவளுக்குமே அந்த நிகழ்வின் அதிர்வலைகள் இன்னும் இருந்தது.
மித்ராவின் செய்கையை கிருஷ்ஷும் பார்த்து விட்டான். அதனால் அவனே ஒரு ஸ்ட்ராவினை எடுத்து போட்டு அவள் முன் நீட்டினாள்.
“இந்தா குடி..”
தினம் தினம் பல விதமான மக்களின் பிரச்சினைகளை பார்ப்பவர்கள்தான். இன்னும் மோசமான விஷயங்களைப் பார்த்தவர்கள்தான். ஆனால் தன்னைச் சார்ந்த ஒருவருக்கு எதாவது நடந்தால் அதனால் பாதிக்கப்படுவது இயல்புதானே. அதே நிலையில்தான் மித்ரா இருந்தாள்.
அவளும் குடித்து முடித்தபின் கிருஷ் கண்ணாடி தம்பர்களை டிரேயில் வைத்தான்.
அன்று மாலையே கண் விழித்தாள் பிருத்விகா. அவள் அருகில் அமர்ந்திருந்தது லஷ்மி. வருணின் அன்னை.
“கண்ணு முழிச்சுட்டியா தங்கம்.. இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு. வருண் விஷயத்தைச் சொன்னதும் எனக்கு உயிரே இல்லை.. ரொம்ப வலிக்குதா..”
பிருத்விகா மெதுவாக பேசினாள். அவளது தாடை வீங்கி இருந்தது. எச்சிலை விழுங்கினாலே வலித்தது.
“அத்..தை வ..ரு…”
அவள் முனகலாகப் பேச, “வருண் வெளியில் இருக்கான். வர சொல்லட்டுமா?” என்றவர் வெளியில் சென்று வருணை அழைத்தார். வருணுடன் அவரும் செல்ல முற்பட கிருஷ் அவரை அழைத்துப் பிடித்துக் கொண்டார்.
வருண் முகத்தில் வழியும் சோகத்துடன் உள்ளே நுழைந்தான்.
“பிருத்விகா ஸ்ரீ.. சாரி..”
“ஸாரி.. எதுக்கு?.. எப்படியோ என்னை… காப்பாத்திட்ட.. தேங்க்ஸ்…”
“நான் கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தால் உனக்கு இவ்வளவு அடிபட்டிருக்காது.”
கண்களை மூடித் திறந்தாள் பிருத்விகா.
“எது..வும் உன்.. கையில்.. இல்லை.. தேங்க்ஸ்..”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அமைதியாகவிட்டாள். அவளின் வலது கையை மென்மையாக எடுத்து தன் கைகளுக்குள் வைத்தான். கை முழுக்க கட்டுப் போடப்பட்டிருந்தது.
வருணின் கையில் இருந்து ஒரு துளி கண்ணீர் சொட்டியது.
“உன்னோட பிராமிஸை நீ காப்பாத்திட்ட..”
சில நாட்களுக்குப் பிறகு பிருத்விகாவை விசாரிக்க காவலர்கள் வந்தனர். ஏசிபியும் வந்திருந்தார். அவரும் நடந்ததை விசாரித்தார்.
பிருத்விகா நடந்தது அனைத்தையும் தெரிவித்தாள். அவனிடம் இருந்து தப்பிதற்காக நடந்த சண்டையில் தான் மண்ணெண்ணெய் விளக்கை உபயோகப்படுத்தியதையும் தெரிவித்தாள்.
அந்த கேபின் முழுவதுமாக எரிந்திருந்தது. அவனுடைய உடல் எரிந்த சடலமாக கிடைத்தது. அவன் கூறிய அனைத்தையும் பிருத்விகா தெரிவித்தாள்.
அது மட்டுமின்றி ஒரு பென் டிரைவைக் கொடுத்தாள்.
“இதை செக் பன்னிப் பாருங்க. அந்த வீட்டில் இது கிடைச்சது. விளக்கை எடுத்த போது இந்த பென் டிரைவும் கிடைத்திருக்க தன்னுடையை பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி விட்டாள் பிருத்விகா.
அவளை விரைவில் நலமாக வாழ்த்தியும் சென்றனர். இது வரை அவனால் எட்டு பேர் இறந்துள்ளனர். ஒன்பதாவது ஆளான பிருத்விகா ஒற்றை ஆளாக தப்பித்து உள்ளாள்.
கொலைகள் தொடர்ந்து செய்ய செய்ய கொலைகாரர்களுக்கு ஒரு தைரியம் வரும். ஆணாக இருந்தால் கூட தப்பித்து விடலாம். இத்தனை சிறிய உருவமுடைய பெண் எப்படி தப்பிக்க முடியும் என்ற நினைப்பில் அவன் பிருத்விகாவை அடிக்கும் முன் அவளது கட்டுகளை விடுவித்திருந்தான். எந்த அளவுக்கு இந்த சிறிய வீட்டில் அவள் தப்பிக்க முயற்சிக்கிறாள் என ரசித்து அவளைக் கொள்வதற்காக அதைச் செய்திருந்தான் அவன். அது இறுதியில் அவனுக்கே எதிராய் முடிந்திருந்தது.
ஒரு மாதம் கழிந்தது. மருத்துவமனையில் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தாள் பிருத்விகா. வசுந்தரா பிருத்விகாவை வந்து பார்த்து சென்றிருந்தார். பலர் அவளை சந்தித்து நலம் விசாரித்தனர்.
ஒரு மாதம் கழித்து கல்லூரி செல்ல கிளம்பினாள். தேவகி அம்மாள் அவளை முழுவதும் கவனித்துக் கொண்டார். அவரும் இருப்பதெல்லாம் அதிகம் பிருத்விகா வீட்டில் தான். லஷ்மியும் வருணுடன் தங்கி விட்டார். வருண் அதிகம் பிருத்விகாவைப் பார்ப்பது இல்லை.
அவள் கல்லூரி கிளம்பிக் கொண்டிருக்க லஷ்மி வந்தார்.
“வாங்க ஆண்ட்டி.. உட்காருங்க..”
“காலேஜ் கிளம்பிட்டியா பிருத்வி..”
“ஆண்ட்டி.. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத்தான் போறேன்.”
“பிருத்விகா உன்னோட அப்பாட்ட பேசிட்டு இருந்தேன். அவரு உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு செஞ்சுருக்கார். அவருக்கு நடந்ததை இது வரைக்கும் நாம சொல்லலை. எங்க பொறுப்பில் அவரு உன்னை விட்டுட்டு போயிருக்கார். அவரும் இந்த மாச நடுவில் இங்க டிரான்ஸ்பர் கிடைச்சு வந்துருவார். அவரு வந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம் சொல்லிட்டார். பையனும் அவரே முடிவு பன்னிட்டார்.”
அவளுக்கு மிகவும் பிடித்த பெண்மணி இப்படி அசராமல் ஒரு அணுகுண்டை அவள் தலையில் போட்டார்.
“அத்தை…”
“ஆமாம்.. நீதான் அப்பாகிட்ட யாரைப் பார்த்தாலும் மேரேஜ் பன்னிக்கறனு சொன்னியாம். இந்தக் காலத்தில் இப்படி ஒரு பொண்ணுனு உன்னைப் பத்தி அப்பா ரொம்ப பெருமையா பேசிட்டு இருந்தார். உன்னோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் உனக்கு கல்யாணம் பன்னிப் பார்க்கறதைத்தான் அண்ணனோட ஒரே ஆசை. இன்னும் கொஞ்ச நாளில் படிப்பு முடியப் போகுது. முடிஞ்ச உடனே கல்யாணம்.”
அவர் கூறுவதை அமைதியாகக் கேட்ட பிருத்விகா தலை குனிந்தபடி தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
“சரி அத்தை. நான் போயிட்டு வரேன். பாய்.”
“பார்த்துப் போமா. வருணைக் கொண்டு வந்து விட சொல்லட்டுமா?”
“வேண்டாம். கிருஷ் வரேனு சொல்லி இருக்கான்.”
கூறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்தாள். வெளியே ஜீப்பை நிறுத்தினான் கிருஷ்.
“ஹே பிருத்வி. என்ன மார்னிங்கே டல்லா இருக்க? நைட்டு காலேஜ் போகறதைப் பத்தி ரொம்ப எக்சைட்டடா பேசிட்டு இருந்த? இப்ப என்னாச்சு?”
“ஒன்னுமில்லைடா.. ரூபை ஓபன் பன்னு.”
கூரையைத் திறந்து விட்டதும் வாகனம் செல்ல செல்ல காற்று வந்து கண்களில் மோத பிருத்விகாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கிருஷ் கூலர் அணிந்திருந்ததால் அவனுக்கு அந்த பிரச்சினை இல்லை.
வாகனத்தை நிறுத்தினான்.
“பிருத்வி.. ரூபை குளோஸ் பன்னட்டா?”
“இல்லை வேண்டாம்.”
என்றதோடு சரி பிருத்விகா அதற்கு மேல் பேச முயலவில்லை. கிருஷ்ஷும் அமைதியாக வாகனத்தை ஓட்ட கல்லூரியை வந்தடைந்தனர்.
பார்க்கிங்கில் பேசியபடி நின்று கொண்டிருந்தான் வருண்.