என் மேல் விழுந்த மழையே!-28

+16 – grapic violence

“ம்ம்ம்.. டிரை பன்னு. என்னை டார்ச்சர் செய்வ. அதனால் நான் கத்தனும். அவ்வளவுதானே.. நீயும் முடிஞ்சதை செஞ்சுக்கோ..”

“உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?”

“இருக்கே.. நான் இல்லைனு சொல்லவே இல்லையே..”

“நீ சொல்றது புரியலையே?” எதிரில் இருப்பவனின் குரலில் கோபம் சேர்ந்திருந்தது.

“அதெல்லாம் பீலிங்க்ஸ் இல்லாத சைக்கோபாத்தான உனக்குப் புரியாது.” என்றவுடன் அவளுடைய தாடையில் ஒரு குத்து விழுந்தது.

பிருத்விகா தளர்ந்து கீழே விழுந்தாள். உடம்பெல்லாம் மின்னல் அடித்தது போன்ற உணர்வு. உள்ளே ஈறுகளில் இரத்தம் கசிந்தது.

“என்ன ஒரு குத்துக்கே விழுந்துட்ட?” அவளைப் பார்த்து ஏளனமாகக் கேட்டான்.

இருமிக் கொண்டே, “உன்னை விட …பிசிக்கலா.. வீக்கா இருக்கறவங்களை… கடத்தி வந்து கொன்னுட்டு நீ எல்லாம்.. பலசாலினு சொல்லிட்டு திரியாத..” தாடை வலித்தாலும் இதை பேசி முடித்தாள் பிருத்விகா.

ஷூ காலால் அவளுடைய கையின் மீது வைத்து நசுக்க ஆரம்பித்தான். அவளுடைய சிறிய கை அந்த பெரிய ஷூனை அணிந்திருப்பவனின் எடையால் நசுங்க ஆரம்பிக்க பிருத்விகா , “அம்மா…” என வலியால் அலறினாள். கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

“இது எப்படி இருக்கு?”

இரண்டு கைகள், கால்கள் இவற்றை மாற்றி மாற்றி மிதிக்க பிருத்விகாவின் அலறல் அந்த மர வீடு முழுக்க எதிரொலித்தது.

***

வருண், காவலர்கள், மித்ரா, கிருஷ் அனைவரும் ஒரு மரத்தின் கீழ் நின்றிருந்தனர்.

டிராக்கர் காட்டிய இடம் இதுதான்.

வருண் பர பரவென்று தேடினான் இலையைக் கலைத்துத் தேடினான். அப்போது அவன் கையில் அகப்பட்டது அந்த சிறிய வஸ்து.

“கிருஷ் இப்ப என்ன செய்யறது? பிருத்விகாவை எப்படிக் கண்டு பிடிக்கறது?”

ஏசிபி வருணைக் கேள்வியாகப் பார்த்தார்.

“வருண்.. அவன் டிராக்கரை எடுத்துட்டு இங்க தூக்கிப் போட்டு வேற எங்காவது போயிருந்தால் என்ன செய்யறது?”

“இதுக்குத்தான் நாங்களே சர்ச் பன்றோம்னு சொன்னோம்.”

“இதை அவன் தூக்கிப் போட்டுருக்க வாய்ப்பில்லை. அப்படி தூக்கிப் போட்டுருந்தால் பிருத்விகாவோட ஸ்மார்ட் வாட்ச், மொபைல் கிடைச்ச இடத்திலேயே அது கிடைச்சுருக்கும். இது ஆக்ஸிடெண்டலா விழுந்திருக்கலாம்.”

மீண்டும் கைப்பேசியில் எதையோ பார்த்தவன், “சார் வாங்க.. லெகேஷன் கிடைச்சுருச்சு. மத்த மூணு டிராக்கரும் இந்த இடத்தைக் காட்டுது.”

“மூணு டிராக்கரா?”

“யெஸ் சார். ஒன்னு மிஸ்ஸான வேணுமில்லை. அதான் எக்ஸ்ட்ரா மூணு டிராக்கர்.”

“இந்த இடத்திற்கு எப்படிப் போகனும்?”

“இது இங்க இருந்து 800 மீட்டர் தூரத்தில் இருக்கு. இங்க ஒரு யூஸ் பன்னாத கேபின்  இருக்கனு நினைக்கறேன்.”

வருண் கேட்டபடியே வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

மலைப்பாதை அவனுக்கு சிரமமாக இருந்தது. மித்ரா கொஞ்சம் தடுமாறிக் கொண்டே நடக்க கிருஷ் அவளைப் பிடித்துக் கொண்டான்.

பிருத்விகாவை எழுப்பி தோள்களை அழுத்திப் பிடித்தவன், “என்ன இப்ப எப்படி இருக்கு?” அவள் உடலில் அங்காங்கே இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மிகவும் தளர்ந்து காணப்பட்டாள் பிருத்விகா. தன் பலம் முழுவதையும் கூட்டி அவனுடைய கால்களின் நடுவே உதைத்தாள். உடனே அவளையும் விட்டப்படி அவனும் கீழே விழுந்தான்.

அப்படியே மெதுவாக நகர ஆரம்பித்தாள் பிருத்விகா.

“வருண்..” என அவள் இதழ்கள் முனு முனுத்தது. நகருவளின் தலை முடியை கொத்தாகப் பற்றி இழுத்தான் அவன்.

“ஆஆஆஆஆஆஆஆஅ…”

திரும்பி அவன் காலைக் கடித்து வைத்தாள் பிருத்விகா.

அவள் எதிரே உள்ள கபோர்டில் மண்ணென்ணெய் விளக்கு, மெழுகு வர்த்தி , லைட்டர் இருந்தது. அது அரை இமை மூடி இருந்த பிருத்விகாவின் கண்களில் பட்டு விட்டது.

கடித்தவளை உதைக்க நேராக அந்த கபோர்டின் அருகில் விழுந்தாள் பிருத்விகா. வயிற்றில் உதைத்ததால் வலி உயிர் போனது.

அவள் வலியால் துடிப்பதை சிரித்தப்படி ரசித்தான்.

“இப்ப சொல்லு. சாவை கொஞ்ச கொஞ்சமா பார்க்கும் போது எப்படி இருக்கு?”

மெதுவாக சாய்ந்து அமர்ந்தாள். அவள் தலை தொங்கி இருந்தது. வாயிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அதைத் துப்பியவள் , “இன்னும் அடிடா..” என முனு முனுத்தாள்.

அவள் நடுங்கிய கைகள் எப்போதே திறந்திருந்த கபோர்டினை தேட ஆரம்பித்திருந்தது.

அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் அவளை அடிக்க ஏதோ ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டிருந்தான். இந்த சாக்கில் அந்த மண்ணெண்ணெய் விளக்கைத் திறந்தாள்.

கூர்மையான ஆயுதத்துடன் அவள் அருகில் வந்தான் அவன்.

“இப்ப எதுக்கு எப்படி நீ ரியாக்ட் செய்யப் போறேனு பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்..”

அவன் எதிர்பாராத வண்ணம் அவன் மீது அந்த அந்த மண்ணென்ணெய் விளக்கை வீசி அடிக்க அதிலிருக்கும் மண்ணென்ணெய் அவன் மீது வழிந்தது.

“ஏய்…”

அவன் மீது லைட்டரை தூக்கி ஏறிய நொடிக் கணக்கில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்தது. முதலில் தலையில் பிடித்த தீ அவன் சட்டையில் பற்ற ஆரம்பித்தது. அவனோ அலறிக் கொண்டு தண்ணீரைத் தேடி ஓடினான். அந்த எரி பொருள் கீழேயும் சிந்தியதால் அந்த மர வீட்டில் தரைத் தளம் தீப்பிடிக்க ஆரம்பித்தது. பிருத்விகா மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தாள். அவள் நகர நகர அவளுடைய குருதித் தடங்களும் ஒரு பக்கம் உருவாக ஆரம்பித்தது. அங்கிருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீப்பற்ற ஆரம்பித்தன. கதவு வரை தட்டுத் தடுமாறி நகர்ந்து சென்ற பிருத்விகா ஸ்ரீ கதவின் அருகில் மயக்கமுற்றாள். அவளின் வலது கை கதவை நோக்கி நீட்டி விரல்கள் விரிந்து கிடந்தது. 

வேகமாக காட்டுக்குள் நடந்து கொண்டிருந்த வருணுக்கு மனதில் தீடிரென்று பயம் உருவாக ஆரம்பித்தது.

நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான். உடனே கிருஷ் அவன் தோளைத் தொட்டான். திரும்பிய வருணின் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து விட்டது. அவன் முகத்தில் பயம் ஒன்று எட்டிப் பார்த்தது.

“அவளுக்கு ஒன்னும் ஆகாது வருண்.” கிருஷ் ஆறுதலாகக் கூறினாலும் அவன் முகத்திலும் கவலை தெரிந்தது. அவனால் அதை நம்பத்தான் முடியவில்லை.

“ஐம் கோயிங்க் டூ ரன்.”

வருண் கைப்பேசியை வைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான். கிருஷ்ஷூம் அவனைத் தொடர்ந்தான். காவல் துறையினரின் நாய்களும் வருண் ஓடிய திசையில் சட்டென்று ஓட ஆரம்பித்தது.

“சார் அங்க பாருங்க புகை தெரியுது?”

“அதுவும் இவ்வளவு புகை..”

அந்த மர வீட்டில் பற்றிக் கொண்ட தீ பரவ ஆரம்பித்திருந்தது. காவல் துறையினரும் அந்த திசையில் ஓட ஆரம்பித்தனர். காட்டில் ஓரிடத்தில் தீ பிடித்தால் காட்டுத் தீயாக மாறிவிடும் வாய்ப்புகளும் அதிகம். பிருத்விகாவை மீட்பதும் அவசியம்.

சில நிமிடங்களில் வருண் அங்கு வந்து சேர்ந்தான். வெளியில் கைவிட்டப்பட நிலையில் இருந்தது அந்த கேபின். வருணின் டிராக்கரின் சிக்னல் இந்த இடத்தில்தான் நிலை பெற்று இருந்தது.

கைப்பேசியைக் கீழே போட்டவன் உள்ளே நுழைய முற்பட அவனைக் காவல் துறையினர் தடுத்தனர். அந்த கேபின் சிறிது சிறிதாகத் தீக்கிரையாகி விட்டிருந்தது.

“பிருத்விகா.. பிருத்விகா.. என்னை விடுங்க.. ” என்ற வருணின் அலறல் அந்த காடு முழுவதும் கேட்டிருக்கும். நால்வரை தள்ளி விட்டு விட்டு அந்த கேபினின் கதவைத் திறந்தான் வருண். கதவை விட்டு இரண்டடி தொலைவில் கிடந்தாள் பிருத்விகா.

சுற்றிலும் தீ முழங்கிக் கொண்டிருந்தது. அவளது காலணியிலும் லேசாக தீ பிடித்துக் கொண்டிருந்தது. அதிக வெப்பமும், புகையும் அங்கு சுவாசத்தைத் தடை செய்தது. ஏதோ ஏதோ பொருட்கள் விழும் சத்தம் கேட்டது.

வருண் உடனே உள்ளே நுழைந்து பிருத்விகாவைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தான்.

“உனக்கு ஒன்னும் ஆகாதுடி பேபி..” அவளைத் தூக்கும் போதே பலகீனமான இதயத் துடிப்பை உணர்ந்திருந்தான் வருண். அவன் வெளியே வரும் போதே கிருஷ்ஷூம், சில காவலர்களும் அங்கு வந்திருந்தனர்.

வனத் துறையினரும் வந்திருந்ததால் தீயைக் கட்டுப்படுத்தும் வேலையில் அவர்கள் இறங்க ஆரம்பித்தனர். கேபினின் பின்னால் ஒரு சிறிய சிற்றோடை இருந்தது. அதனால் நெருப்பை அணைக்க முயன்றனர்.

வருணோ பிருத்விகாவை மடியில் கடத்திக் கொண்டான்.  அவள் முகம், கை கால்கள் எல்லாம் வீங்கி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

கிருஷ் வேகமாக முதல் உதவிப் பெட்டியை எடுக்க மித்ராவும் அவள் காயங்களுக்கு உடனே மருந்திட்டு முதல் உதவி செய்தனர். வருண் கண்களில் கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது.

“உனக்கு எதுவும் ஆகாது.. யூ ஆர் ஆல் ரைட்..”

ஏசிபி வருணின் தோள் மீது கை வைத்தார்.

“வருண் அவங்களை சீக்கரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்.”

அப்போது சரியாக வானத்தில் ஹெலி ஹாப்டர் வரும் சத்தம் கேட்டது. அதன் விசிறி ஏற்படுத்திய சுழலில் அங்கிருக்கும் இலை தழை அணைத்தும் பறந்தது. தீ கூட லேசாக பிடிக்கும் போலிருந்தது. அதிலிருந்து இரண்டு பேர் கயிற்றில் இருந்து குதித்தனர்.

அதன் பின்னர் ஸ்ரட்ச்சர் இறக்கப்பட்டது.

மேலே நிமிர்ந்து பார்க்கும் போது அதில் ‘பாலன் ஹாஸ்பிட்டல்’ என்ற பெயர் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. பாலன் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்திருந்தது.

குதித்த இருவரும் ஸ்ட்ரெச்சரில் பிருத்விகாவைப் படுக்க வைத்து பெல்டால் சில நிமிடங்களுக்கு கட்டினர்.

வருணும் எழுந்து நின்றான். தானும் வருவதாகக் கூறினான். ஆனால் ஹெலிகாப்டரில் இடமில்லை என்று கூறி விட்டனர்.

ஹெலிகாப்டரில் இருந்து ஷரணி எட்டிப் பார்த்தாள். தன் நெஞ்சத்தில் கை வைத்து தான் பார்த்துக் கொள்கிறேன் என முனு முனுத்தாள். வருண் புரிந்தது என்பது போல் தலையாட்டினான்.

“வருண்.. வா சீக்கிரம் அடிவாரத்திற்கு போலாம். கமான்.” அவர்களுடன் சில காவலர்களையும் செல்லுமாறு ஏசிபி பணித்தார்.

மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு,

தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்னர் மூவரும் அமர்ந்திருந்தனர். ராம சந்திரனும் வந்திருந்தார். வருணின் அன்னையும் கூட நீலகிரியில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்.

பிருத்விகாவின் அறையில் இருந்து ஒரு மருத்துவக் குழுவினர் வெளியே வந்தனர். அதில் ஷரணியும், மதுபாலனும் இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் உடனே எழுந்து நின்றான் வருண். அவனுடைய முகத்தில் கவலை படிந்திருந்தது. மிகவும் ஓய்ந்து காணப்பட்டான். பிருத்விகா இருந்த நிலை அவனால் மறக்கவே முடியாது. கசக்கி ஏறியப்பட்ட கொடி போல் இருந்தாள்.

ஷரணி அவன் தோளின் மீது கரம் வைத்தாள்.

“மனசை எல்லாரும் தேத்திங்க..”

மழை கொட்டும்…