என் மேல் விழுந்த மழையே!-27

அத்தியாயம்-27

பிருத்விகா நேற்று நடந்ததை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தாள். இப்போது இருக்கும் பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியுடன் கிருஷ்ஷின் காரில் வந்து கொண்டிருந்தாள்.

வருண் வீட்டின் உள்ளே நுழையும் போதுதான் சில புத்தகங்களை எடுக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே கிருஷ்ஷை காரை நிறுத்தக் கூறி இறங்கிச் சென்றாள்.

தன் வீட்டைத் திறந்து புத்தகங்களை எடுத்தவள் மேலும் சில பொருட்களை எடுத்து பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

கார் வருணின் சுற்றுச் சுவர் கதவருகே நின்று கொண்டிருந்தது.

வருண் தன் கைப்பேசியில் எதையோ பார்த்தான்.

“என்னாச்சு வருண் அவங்க எங்க இருக்காங்கனு எப்படி கண்டுபிடிக்கறது?”

முகத்தில் நிம்மதியுடன் நிமிர்ந்தான் வருண்.

“என்னடா?”

“அவங்க இங்கதான் இருக்காங்க.”

“இருக்காங்கனா? எங்க?”

“இன்னும் த்தீரி மினிட்ஸில் நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க.”

“இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.”

“சரி வா.. நாமளும் அவங்கள வரவேற்கப் போலாம்.”

“ம்ம்ம்..”

மூன்று நிமிடம் காத்திருந்தும் கிருஷ்ஷின் கார் உள்ளே நுழையவில்லை என்பதால் வருணும், மித்ராவும் தங்களுடைய காரில் வெளியே சென்றனர். சரியாக செக்யூரிட்டி ஆபிஸூக்கு அருகில் காரை நிறுத்திய வருணுக்கு எதிரே தன் வீட்டு கிரில் கேட்டை சாத்தி விட்டு வெளியே வரும் பிருத்விகா தெரிந்தாள்.

பிருத்விகாவும் வருணை பார்த்து விட்டாள். அவளை பார்த்துக் கொண்டே சில அடிகள் தூரம் எடுத்து வைத்ததும் ஏதோ ஒரு கார் வருவதில் பின் வாங்கினாள். பின் வாங்கியவள் அடுத்த நொடி அந்தக் காரில் தூக்கிப் போடப்பட அந்தக் கார் உடனே அந்த இடத்தை விட்டு பறந்து செல்ல ஆரம்பித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த செயலில் வருண், மித்ரா, கிருஷ் மூவருமே திகைத்து நின்றனர்.

காரின் கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த வருண், “ஏய்.. பிருத்விகா…” என கையை நீட்டிக் கத்தியபடி முன்னோக்கி நகர்ந்தான்.

மித்ராதான் முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள்.

காரில் ஏறி அமர்ந்தவள், “வருண் சீக்கிரம் காரில் ஏறு.” எனக் கத்தினாள். உடனே வருணும் காரில் ஏறி அமர்ந்தான்.

மித்ரா காரை எடுப்பதைப் பார்த்த கிருஷ்ஷூம் உடனே காரை எடுத்து தனக்கு முன்னால் செல்லும் காரை பின் தொடர ஆரம்பித்தான். ஒவ்வொருவரின் இதயமும் பன் மடங்காகத் துடிக்க ஆரம்பித்தது.

பிருத்விகாவுக்காக அனைவரும் துடிக்க அவளோ மயங்கிய நிலையில் காருக்குள் இருந்தாள். அவளைப் பார்த்து அந்த மாஸ்க் அணிந்த முகம் கோணலாக சிரித்தது.

“த கேம் ஸ்டார்ட்ஸ் நவ் பிருத்விகா. உன்னோட பிரண்ட் வீட்டில் தங்குனா என்னால் உன்னைத் தூக்க முடியாதா.. உன்னோட கால் சரியாகட்டும்தான் இவ்வளவு நாள் வெயிட் பன்னேன். உன்னோட பிரண்ட்ஸ் மூணு பேர் கண் முன்னாடி உன்னை தூக்கி அவங்கள துடிக்க வைக்கிறதுதான் என்னோட  பிளான்.” என மெதுவாகக் கூறியவன் அவளுடைய கூந்தலை ஒதுக்கி விட்டான்.

“பாவம் நீ.. உனக்கும் நடக்கறதுக்கும் சம்பந்தம் இல்லைனாலும் உன்னைப் பார்த்தால் என்னால் கன்ட்ரோல் செய்ய முடியலை. உன்னோட முகத்தில் இருக்கற அந்த தேஜஸ் குறைய மாட்டிங்கற. அதுவும் வசுந்தராவை, உனக்கு பிடிச்சதப் பார்க்கறப்ப எல்லாம் உன்னோட கண்ணு அப்படியே ஷைன் ஆகும். ஜொலிக்கும். அந்தக் கண்ணில் உயிர்ப்பு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும். உன்னை பார்த்து இவங்க அத்தனை பேரும் துடிச்சால் எப்படி இருக்கும். அதை நினைக்கறப்பவே.. நீ மட்டும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுவரைக்கும் என்னோட முதல் அட்டம்பிட்டில் யாரும் தப்பிச்சதே கிடையாது. நீ மட்டும் தான் விதி விலக்கு. இப்ப இரண்டாவது தடவை. எனக்கும் இந்த கேம் ரொம்ப பிடிச்சுருக்கு.” என்றபடி கார்க் கண்ணாடிக் கதவைத் திறந்தவன் வெளியில் சிலவற்றை டேஷ் போர்டில் இருந்து தூக்கிப் போட்டான்.

வருணின் காரும் கிருஷ்ஷின் காரும் அந்தக் காரைத் துரத்திக் கொண்டிருந்தது. இருவரும் இடம் வலமாக அந்தக் காரை நடுவில் விட்டு சேஸ் செய்து பிடிக்க முயன்று கொண்டிருந்தனர்.

சட்டென கதவைத் திறந்து அவன் வெளியே எதையோ போடவும், “வருண் கேர்புல்..” என்று கூறி முடிப்பதற்குள் இரண்டு கார்களும் தடுமாற ஆரம்பித்தன. அவசர கதியில் பிரேக்கை அழுத்தி காரை நிப்பாட்டினர்.

காரை விட்டு இறங்கிய வருணும், கிருஷ்ஷூம் ஒரே நேரத்தில், “ஷி*” என தார்ச்சாலையை ஒரு காலால் உதைத்தனர்.

ஆணிகளை அவன் போட்டுச் சென்றதால் கார் டயர்கள் பஞ்சராகி விட்டிருந்தது. எங்கும் செல்ல வழியில்லாமல் அதிகம் வாகனம் வராத நடு வழியில் அவர்களின் இரண்டு காரும் நின்றது.

“வருண்.. போலீஸ்க்கு கால் பன்னு.” மித்ரா அவசர கதியில் கூற வருணும் அழைத்தான்.

கிருஷ்ஷூம் கைப்பேசியில் செக்யூரிட்டிக்கு அழைத்து ஒரு காரை எடுத்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் சொன்னான். செக்யூரிட்டியும் நடந்ததை உணர்ந்தவர் உடனே காவல் நிலையத்துக்கு அழைத்து விட்டு ஒரு காரை தேவகி அம்மாளிடம் கூறிவிட்டு எடுத்து வந்து கொண்டிருந்தார்.

மித்ரா டென்சனில் சாலையில் குறுக்கும் நெடுக்கும் நடந்த வண்ணம் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் கார் ஓட்டி வந்த வேகம் அப்படி. இதுவரை அப்படி அவள் கார் ஓட்டியதே இல்லை.

“டே பிருத்விகாவுக்கு ஒன்னும் ஆகாது இல்லை..”

கிருஷ் அவளின் கையைப் பிடித்து தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தான். அதைத் திறக்கவே அவள் கைகள் நடுங்கியது.

ஒரு கையை மட்டும் நெற்றியில் வைத்தபடி கார்க்கதவில் சாய்ந்தபடி வருண் நின்றிருந்தான்.

“வருண் இப்ப என்ன செய்யறது?”

“கார் வரட்டும். அது வரைக்கும் வெயிட் பன்னலாம் கிருஷ். என்னோட கார் டிக்கியில் இருக்கும் அத்தனையும் வெளியில் எடுத்து வை. பிளீஸ்.”

கார்ச் சாவியை எடுத்து பின் பக்கத்தை திறந்த கிருஷ் அதிலிருந்த முதலுதவி பெட்டியையும், டூல் பாக்ஸையும் எடுத்து வெளியில் வைத்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செக்யூரிட்டி அந்த ஸ்போர்ட்ஸ் காருடன் வந்து அவர்கள் அருகே நிறுத்தினார்.

“எல்லாரும் சீக்கிரம் வாங்க டைம் இல்லை.” என்றபடி வருண் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வர கிருஷ் இன்னொரு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி காரில் ஏறினான். வருண் இப்போது டிரைவிங்க் சீட்டில் அமர்ந்திருந்தான்.

“எல்லாரும் சீட் பெல்ட் போட்டுக்குங்க.”

“அண்ணா நீங்க இந்தக் காருங்களை ரெடி பன்னுங்க..” எனக் கட்டளையிட்டுவிட்டு அடுத்த நொடியே ‘விரும்’ என்ற சத்தத்துடன் நீல நெருப்பை வெளியேற்றியபடி கிளம்பியது அந்த ஸ்போர்ட்ஸ் கார்.

“வருண்… இப்ப அவன் எங்க போயிருப்பானு நாம எப்படி கண்டு பிடிக்கறது?”

“உன்னோட போனை ஓப்பன் பன்னு. அதில் ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் பன்னி எனக்கு வழி சொல்லு. மித்ரா நீயும்தான்.”

அரை மணி நேரம் கழித்து ஒரு காட்டு வழியின் முன் கார் நிறுத்தப்பட்டது.

“என்ன வருண் வழியே இல்லை. இதில கார் போகாது.”

“ஆமாம் இதுக்கப்பறம் வழியில் இல்லை. ரெஸ்டிரிக்டு ஏரியா.” அவர்களுடன் சில நிமிடங்களில் போலீசாரும், வனத் துறையினரும் இணைந்து கொண்டனர். அவர்களுடன் ஏ.சி.பி இருந்தார்.

“சார்.. நீங்க சொன்னபடி டிராக்கர் பிருத்விகாகிட்ட இருக்கு. ஆனால் இந்த லொகேஷனுக்கு எப்படி போறது?” என தவிப்புடன் கேட்டான்.

“ஏப்பா உனக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி.. எங்கிட்ட கேட்கிற.. வாங்க சர்ச்சை ஆரம்பிப்போம்.”

“சார் இதுக்கு முன்னாடி அவன் கொன்னவங்களை எல்லாம் எத்தனை நாள் டார்ச்சர் பன்னி இருக்கான்..”

“மினிமம் த்ரீ டேஸ் டூ ஃபை டேஸ்..”

மித்ராவின் முகம் லேசாகக் கருத்தது.

“மித்ரா உனக்கு ரொம்ப பயமா இருந்தால் இங்கேயே போலீஸ் கூட இரு.”

“ம்கூம்.. பிருத்விகாவைப் பார்த்தால் தான் எனக்கு நிம்மதி.”

“சார் எல்லாம் ரெடி..” டிரோன் கேமிரா. லைடார் என அனைத்தும் செயல்பட அந்தக் காட்டுப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர் அனைவரும். வருணின் பின்னால் ஒரு போலீஸ் படையே இருந்தது.

கிருஷ்ஷின் வலது கை மித்ராவின் இடது கையைப் பிடித்திருந்தது. மித்ராவும் அவன் கையை விடவில்லை.

அனைவரும் நடக்க ஆரம்பித்தனர். வருணின் கையிலும், கிருஷ்ஷின் கையில் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகள் இருந்தது.

சிக்னல் காட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தனர். அந்த அடர்ந்த கானகத்தில் பாதையே தெரியவில்லை.

***

லேசாக கண் விழித்தாள் பிருத்விகா. அந்த மர வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. ஆரஞ்சு வண்ண பெயிண்டில் மிகவும் அழகாக இருந்தது. தலை வலியுடன் நிமிர்ந்து பார்த்தாள். கடிகாரத்தில் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

தான் கடத்தப்பட்டு இரண்டு மணி நேரங்கள் ஆகி இருந்ததை உணர்ந்தாள். கைகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தது. கால்களும் தான்.

அப்போது ஷூ அணிந்து வந்தால் ஏற்படும் காலடி சத்தம் கேட்டது.

முழுவதும் கருப்பு நிறத்தில் உடையணிந்து முகத்தில் மாஸ்க் இன்றி ஒருவன் வந்தான்.

“ஹலோ பிருத்விகா..” குரல் கொடூரமாக ஒலித்தது.

“யார் நீ?”

“அட என்னை மறந்துட்டியா? ஹாஸ்பிட்டல் மேரிகோல்ட் பொக்கே.. அதெல்லாம் நான் தான்.”

“உனக்கு என்ன வேணும்?” அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.

“பார்ரா.. கொஞ்சம் கூட பயமே இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் பயப்படுவ.”

“உன்னால் மிஞ்சி மிஞ்சிப் போனால் டார்ச்சர் பன்னி என்னைக் கொல்லுவ. அவ்வளவுதான். அதுக்கு மேல் என்ன செய்ய முடியும்?” என அவனைப் பார்த்து நிமிர்வுடன் கேட்டாள். பிருத்விகா அவ்வளவு எளிதில் எதற்கும் அஞ்ச மாட்டாள். யாரவது அடிக்க வந்தால் அப்படியே நிற்பாள். பின் வாங்க மாட்டாள். அவளுடைய அந்த குணம் தான் வருணுக்கு அவ்வப்போது பயமாக இருக்கும்.

“இண்டர்ஸ்ட்டிங்க்.”

“நீ கொஞ்சம் டஃப்தான் போல.. ஆனால் உன்னை பிரேக் பன்னி பார்க்கனும். நீ எவ்வளவு தாங்குறனு?”

“டேய்.. எல்லாருக்கும் சாவு வரதுக்கு முன்னாடி தெரியும் சொல்லுவாங்க. நான் சொல்றேன். இன்னிக்கு எனக்கு சாவு கிடையாது.” பிருத்விகாவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.

மழை கொட்டும்…