என் மேல் விழுந்த மழையே!

அத்தியாயம்-16

என் மனதில் வட்டமிடுகின்றது..

உன் வளையல் ஓசைகள்.

   -வருண்.

வருணின் வீட்டுத் தோட்டம். நிலவு மேகத்திரள்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் விளக்கொளியில் அங்கிருந்த ரோஜா மலர்கள் அழகாய் மலர்ந்திருந்தது.

“வருண்.. ரோஸ்… எனக்கு இந்த ரெட் ரோஸ் ரொம்ப பிடிச்சுருக்கு… அதில் இந்த வெயிட் பர்பெக்ட்டா மிக்ஸ் ஆகிருக்கு. ரெட், வெயிட்.. ரெண்டு ஆப்போசிட் கலர்ஸ்… உனக்கு கார்டனில் யாரும் பிளவர்ஸை தொட்டால் பிடிக்காதே.. எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் தர்ரியா?”

ஒரு மலரைப் பறிக்கச் சென்றாள் பிருத்விகா. ஆனால் தடுமாறியபடி கீழே விழப் போனவள் வருணின் கையில் இருந்தாள். வருண் இரு கைகளாலும் அவள் இடையைத் தாங்கிப் பிடித்திருந்தான்.

“எனக்கு ரோஸ்… வேணும்..”

“உனக்குத்தான் ரோஸ் பிடிக்காதே…”

“ப்ச்ச்ச்.. எந்தப் பொண்ணுக்குத்தான் ரோஸ் பிடிக்காது. எல்லாருக்கும் பிடிக்கும். என்னோட அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். அம்மா…” தலையை சிலுப்பியவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.

தீடிரென்று அவள் கை விரல்கள் நீண்டு அவன் கன்னத்தைத் தீண்டியது.

“இப்ப உன்னைப் பார்க்க எவ்வளவு சாந்தமா இருக்க.. அப்புறம் ஏண்டா.. என்னை மட்டும் உனக்குச் சின்ன வயசில் பிடிக்கறது இல்லை. என்னோட அம்மா உங்கிட்ட டெத் பெட்டில் வாங்கின பிராமிஸ்க்காக… என்னை கேர் பன்னற மாதிரி நீ நடந்துக்க வேண்டியது இல்லை.. என்னை நான் நல்லாப் பார்த்துக்குவேன்… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் சொல்லு?”

“ம்ம்ம்…”

“ஏன்னா.. என் அம்மாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்னோட அம்மாவுக்கு மட்டும் தான் அந்த ரோஸ் கொடுப்ப.. என்னை செடியைக் கூட தொட விட மாட்டே… நான் உன்னை எதுவுமே செஞ்சது இல்லையே? நான் உன்னை முதல் முதல்ல பார்த்தப்ப நீ எனக்கு நல்ல பிரண்டா இருப்பனு நினைச்சேன்.. ஆனால்.. நம்ம இரண்டு பேரும் இப்படி எதிரிகளாவோம்னு நினைக்கல.. எதுக்கு என்னை நீ வம்பிழுத்துட்டே இருக்க?”

இப்போது கன்னத்தில் இருந்த விரல்கள் அவன் மூக்கைப் பிடித்து இழுத்தது. உடனே அவனுடைய மூக்கு சிவந்து விட்டது.

வருண் முகம் சுழித்தான்.

விரல்களை எடுத்தவள், “அச்சோ… சிவந்து போயிருச்சு.. சாரி வருண்..” அவன் மூக்கை நன்றாக ஆராய இன்னும் அருகில் வந்தாள் பிருத்விகா. அவன் பின்னந்தலையில் கை கொடுத்து தன்னருகில் இழுத்தாள்.

இருவரின் மூச்சுக் காற்று உரசும் இடைவெளி. அவனுடைய கீழ் உதட்டில் இருக்கும் பழுப்பு நிற மச்சம் தெளிவாகத் தெரிந்தது அவள் கண்களுக்கு. இப்போது ஒரு விரலால் அதைத் தொட்டுப் பார்த்தாள். வருண் ஒரு கையால் அவள் விரலைப் பிடித்தான்.

“பிருத்விகா..” அவன் குரல் முனு முனுப்பாக வெளிவந்தது.

அவள் விரலை எடுத்துவிட்டவுடன் அவள் முகம் மாறியது.

“நீ மட்டும் என்னை டச் பன்னலாம். நான் பன்னக் கூடாதா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

ஒற்றை விரலால் அவன் கன்னத்திலிருந்து இதழ்கள் வரை வருடியவள், “இப்படித்தானா அன்னிக்கு மார்னிங்க் செஞ்ச. நானும் செய்வேன்.”

“பிருத்வி…. காட்..” அவளை விலக்க முயன்றான் வருண். ஆனால் எதை எதிர்த்த பிருத்விகா இன்னும் அவன் அருகில் நெருங்கினாள். அவர்களுக்குள் இருந்த இடைவெளி இன்னும் குறைந்தது. வருண் அவள் முகம் நோக்கி குனிந்தான். பிருத்விகாவின் இமைகள் தானாக மூடியது.

சட்டென கண் விழித்தாள். முகம் வியர்த்து வழிந்தது. எழுந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“எல்லாம் கனவா?..அதானா.. நம்ம பிரைன் இருக்கே பிரைன்..” என்று அவள் மூளையைத் திட்டியவள் எதுக்கு இப்படி தலை வலி என யோசித்தாள்.

மணியைப் பார்த்தாள். ஏழு முப்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது.

அவள் மேசையில் ஜூஸ் இருந்தது. எடுத்துக் குடித்தவள் எழுந்து மெதுவாகக் கல்லூரிக்குத் தயாராகத் தொடங்கினாள். தேவகி அம்மாள் வைத்திருப்பார் என்று அவளுக்குத் தெரியும். தலைவலி இன்னும் லேசாக இருந்தது.

இன்று அவளுக்கு டிரைவ் செய்ய இஷ்டமும் இல்லை. கிருஷ்ஷூக்கு அழைத்தாள்.

“சொல்லு.. பிருத்வி..”

“என்னை பிக் அப் பன்னிக்கோ.. ஹெட் ஏக்கா இருக்கு.”

“ஓகே. 30 மினிட்ஸ். பி ரெடி.”

அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

மியூசிக் பிளேயரில் ஏர். ஆர் ரகுமான் மெலடி பாடல்களை ஓட விட்டவள் வெயிட் டாப், ஆலிவ் நிற பாலோசோ பேண்ட்டுடன் தன் பையில் பொருட்களை அடுக்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.

அவள் வருவதற்கும் கிருஷ் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது பிருத்விகாவிற்கு.

“ஹேப்பி மார்னிங்க்..”

“குட் மார்னிங்க். சீக்கிரம் ஏறு. டைம் ஆகிடுச்சு.”

காரில் ஏறி அமர்ந்தவள் எஃப். எம் ரேடியோவை ஆன் செய்தாள்.

“என்ன இன்னிக்கு உன்னை டிராப் பன்ன அந்த பாடி பில்டர் வரலை? அப்புறம் ஹேங்க் ஓவர் இருக்கு. நேத்து வருண் சார்தான் டிராப் பன்னார். நினைவிருக்கா உனக்கு?”

“என்ன வருண் டிராப் செஞ்சானா?”

“பின்ன? காக்டெயிலை.. மாக்டெயில்னு மாத்தி குடிச்சுட்டு நீ செஞ்ச அட்டகாசம். என்னோட போன் ஓப்பன் செஞ்சு பாரு.”

கிருஷ்ஷின் பாஸ்வேர்ட் அவள் அறிவாள் என்பதால் அலைபேசியின் கேலரிக்குள் சென்றாள்.

அதில் பிளவர் வாசை எடுத்துக் கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிலையின் முன் நின்று ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள். வீடியோவைப் பார்த்த பிருத்விகா அதிர்ந்தாள்.

அதற்கேற்ப அசைவுகளும் வேறு. இறுதியில் வருண் தான் அவளைச் சாமாதனப்படுத்தி அழைத்துச் சென்றான்.

“நல்ல வேளை.. நீ குடிச்சுட்டனு தெரிஞ்சதும் உடனே அந்த இடத்தை விட்டு அழைச்சுட்டு போயிட்டான். இல்லைனா.. பார்ட்டி களை கட்டிருக்கும். நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேனு சொன்னேன். ஆனால் அவனே கூட்டிட்டுப் போறேனு சொல்லிட்டான். என்னை மித்ராவை டிராப் பன்ன சொன்னான். நீயும் என்கூட வரமாட்டினு அடம் பிடிச்ச… தண்ணீ உள்ள போனதால் நீ என்ன என்ன சேட்டை பன்ன தெரியுமா?”

அவன் கூறியதில் திரு திருவென விழித்தாள் பிருத்விகா. அவள் முகம் மாறியதைக் கவனித்த கிருஷ், “ஹே.. சில்.. காரில் நீ தூங்கிட்டதா வருண் சொன்னான். ஆக்சிடென்டலா குடிச்சதுதானே. விடு. டேஷ் போர்டில் டேப்லெட் இருக்கும் எடுத்துப் போடு. தலைவலிக்கு நல்லாயிருக்கும்.”

இருந்தும் பிருத்விகாவின் முகம் தெளியவில்லை.

“ஹே நீ வேற எதுவும் செய்யலை. கச்சேரி பன்னிட்டு உடனே தூங்கிட்ட. அதான் வருண் உன்னை தனியா வீட்டில் விட முடிஞ்சுது. வருண் கூட அனுப்ப எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் உன்னோட பேம்லி அவனைத்தானே அதிகம் நம்புது. அதான் விட்டுட்டேன்.”

“ஓகே..” முனு முனுத்தப்படி வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்தாள்.

அவளுக்கு சிறிது நேரம் தனிமை கொடுத்தவன் பிறகு அவள் பாடிய பாடலைக் கொண்டு சீண்ட ஆரம்பித்து புத்தகத்தில் சில அடிகளை வாங்கிக் கொண்டான் அந்த சேட்டைக்காரன்.

“சரி அதெல்லாம் விடு.. மித்ரா என்ன சொல்றாங்க?”

“என்ன சொல்றாங்க?” ஒன்றும் அறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டான் கிருஷ்.

“ஓ…ஓஹோ… சம் ஒன் ஈஸ் பிளேயிங்க் போக்கர்.”

“போக்கரும் இல்லை.. ஜோக்கரும் இல்லை. பேசாம வா பிருத்வி..”

“எனக்கும் புரியலை.. எல்லாத்தையும் ஓப்பனா பேசற நீ  மித்ரானு மட்டும் வந்தால் அப்படியே ஆப்போசிட்டா மாறிருது. என்னை மீட் பன்னற வரைக்கும் நீங்க நல்ல பிரண்ட்ஸ்னு கேள்வி பட்ருக்கேன். இப்ப மட்டும் ஏன் நீங்க பேசிக்கறதே இல்லை.”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை பிருத்வி.” என்று மறுத்துவிட்டு கல்லூரி வளாகத்தில் காரை செலுத்தினான்.

“ஒரு நாள் இல்லை ஒரு நாள் எனக்கு பதில் சொல்லித்தான ஆகனும். அப்ப பார்த்துக்கிறேன்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் தன் பேக்கில் ஐடி கார்டைத் தேடி எடுத்தாள். வகுப்பு வழக்கம் போல் நடந்தது. காலை பிரேக் முடியும் வரை வருண் வரவே இல்லை. பிருத்விகாவும் அவன் ஏன் வரவில்லை என்று யோசித்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. எப்படியும் வருண் வந்து விடுவான் என்று நினைத்தாள்.

நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது பேனாவில் மை தீர்ந்து விட பேக்கில் இருக்கும் பால் பாயிண்ட் பேனாவை எடுக்கப் பையில் ஒரு ஜிப்பைத் திறந்தாள். பேனாவிற்குப் பதில்  ரோஜா மலரொன்று சிரித்துக் கொண்டிருந்தது.

மழை கொட்டும்…