என் மேல் விழுந்த மழைத்துளியே!-7

அத்தியாயம்-7

மேற்கு தொடர்ச்சி மலைச்சாரல். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பொழியவில்லை. கருப்பு நிறக் கார் ஒன்று ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டர் தாண்டி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டிருந்தது.

இருள் மெல்ல மலை முகட்டைத் தீண்டிக் கொண்டிருந்த நேரம். காரிலிருந்து டிக்கியிலிருந்து பிங்க் நிற உடை அணிந்த ஒருவன் இறங்கி ஓடினான். அவன் நெற்றிப் புறத்தில் இரத்தம் வழிந்து திட்டு திட்டாக உறைந்திருந்தது. அதைப் பொருட்படுத்தும் நிலையில் இல்லை அவன். முகத்தில் வியர்வை வழிய ஓட ஆரம்பித்தான்.

கால்கள் தடுமாறின. இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினான். ஆனால் அவன் ஓடுதலில் பலன் இல்லை.

காரில் இருந்து இறங்கிய கருப்பு உடை அணிந்த உருவம் கத்தி போல் ஏதோ ஒன்றை அவன் காலை நோக்கி வீசியது. உடனே அது காலில் பட்டு தடுமாறி கீழே வீழ்ந்தான் ஓடிக் கொண்டிருந்தவன். விழுந்தவனால் எழ முடியவில்லை.

“ஆ…..அ..” என்ற முனகல் மட்டுமே பிங்க் நிற உடைக்காரனால் எழுப்ப முடிந்தது. சாலையில் இரத்தம் மெல்ல வழியத் தொடங்கியது. கண்கள் மெல்ல சொருகியது அவனுக்கு.

அவனருகில் வந்த கருப்பு உருவம் அவனைப் பார்த்து புன்னகைத்தது. பிங்க் உடைக்காரனின் தலையைப் பிடித்தப்படி இழுத்துக் தார்ச்சாலையில் இழுத்துக் கொண்டு சென்றது. இருள் முழுக்க சூழ்ந்து அந்த இடமே பயமுறுத்தும்படி மாறியது. பல வித ஒலிகள் காட்டில் இருந்து எழுந்த வண்ணம் இருந்தது. காரின் பின் புறத்தில் அவனைக் கடத்திய அந்த உருவம் முன்புறம் அமர்ந்து காரை எடுத்தது.

லேசாகச் சாரல் தொடங்கியது. கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு அந்தக் காரில் கூண்டில் மாட்டிக் கொண்ட இரையாய் இரத்தத்துடன் கிடந்தான் அந்த பிங்க் சட்டைக் காரன்.

***

“எதுக்குடா இப்படி பொய்யா சொல்லிட்டு இருக்க. பாரு தஸ்வி அழுதுட்டே போறா. உங்க லவ்வர்ஸ் குவாரல்ல என்னை எதுக்கு இழுத்து விடறீங்க?” என்று கோபமாகக் கேட்டாள் பிருத்விகா.

கோபத்தில் அவள் முகம் லேசாகச் சிவந்தது. அவளைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.

“பதில் சொல்லு வருண்? அவளை ஜெலஸ் ஆக்கனும்னா அதுக்கு எதுக்கு என்னை யூஸ் பன்னற?” வர வர உன்னோட பிராங்க்ஸ் லிமிட்ட கிராஸ் பன்னிட்டு இருக்கு. எதுக்கு மார்னிங்க் அவகிட்ட அப்படி சொன்னேனு கேட்டியே? சும்மா உன்னை லவ்வா பன்னா அதோட இருக்கனும். அதை விட்டுட்டு நான் உன்னோட சைல்ட்கூட்டில் இருந்து வளர்ந்தேனாம். உனக்கு எனக்கும் ஸ்டேட்டஸ்.. பிளா.. பிளா. அதான் லைட்டா வெறுப்பேத்துனேன். அவ்வளவுதான். உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? உன்னை அவ லவ் பன்னால் என்னை சும்மா சீண்டிட்டே இருந்தாள் அதான். ஜஸ்ட் ஹார்ம்லெஸ் ஜோக். அதுக்கு நான் இந்தப் பேரு எல்லாம் கேட்கனும் இருக்கா? வருண் நீ என்னோட வாழ்க்கையில் இல்லாமல் இருந்தால் நான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்.”

வார்த்தைகளை கோபமுடன் கொட்டிவிட்டு பிருத்விகா அங்கிருந்து நகர முற்பட்டான். பேசியதில் அவளுக்குத் தலைவலியே வந்து விட்டது. டென்சன் ஆனதில்  தலைவலி வந்து விடத் தலையைப் பிடித்துக் கொண்டே நகர முற்பட்டாள்.

அவள் இவ்வாறு பேசியதைக் கேட்டு வருண் அதிர்ந்து நின்றான். அதுவும் சில நொடிகள் தான். பிருத்விகா தலையைப் பிடிப்பது தெரிந்தது. தலையின் பின் பக்கத்தில் யாரோ பிடித்து அழுத்திக் கீழே தள்ளுவது போல் இருந்தது.

தலையைக் குனிந்து கொண்டாள்.

“வருண்..” என்று வலியுடன் ஒலித்தது பிருத்விகாவின் குரல்.

“பேபி.. என்னடி ஆச்சு?” என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“வரு…” என்று கூறி முடிப்பதற்குள் கண்களை மூடிக் கொண்டே வருணின் வெற்று மார்பில் சாய்ந்தாள் பிருத்விகா.

இவ்வளவு நேரம் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலோ அவன் மார்பிலேயே தஞ்சம் அடைந்திருந்தாள். மழையின் இயல்பு மண்ணில் வீழ்வதுதானே.

அவள் கன்னத்தைத் தட்டிய வருண் உடனே எதிரில் இருந்த கடிகாரம் கொண்டு அவளுடைய நாடித் துடிப்பை அளவிட்டான். பிறகு அவனுடைய அறையில் கட்டிலில் அவளைப் படுக்க வைத்தவன் தன்னிடம் இருந்த டிஜிட்டல் இரத்த அழுத்தக் கருவியைக் கொண்டு அதனை அளந்தான்.

இமைகளைத் திறந்து ஐரிசின் நீட்சி, சுருக்கம் பார்த்தான். பிறகு குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து பிருத்விகாவின் முகத்தில் தெளித்தான். சில நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தான் இருக்குமிடம் விளங்கியது. சட்டென எழுந்து அமர்ந்தாள். அவளருகில் வருண் அமர்ந்திருந்தான்.

“என்னோட ரூமில்தான் இருக்க.”

உடனே கட்டிலை விட்டு இறங்கிப் போக முயற்சித்தாள் பிருத்விகா. ஆனால் வருண் அவளைப் போகவிட்டால் தானே. மீண்டும் இழுத்து கட்டிலில் தள்ளினான்.

“சொல்லு எதனால் உனக்கு அக்யூட் ஸ்டிரஸ் ஹெட் ஏக் வந்தது? எவ்வளவு நாளா இருக்கு?”

அவன் கேள்விக்கு பிருத்விகா பதில் சொல்லாமல் நகர முயற்சிக்க அவன் விடவில்லை. பிருத்விகா வாயைத் திறக்கவில்லை.

“சொல்லுடி.” அவள் வாயைப் பிடித்து இரு விரல்களால் அழுத்தினான்.

“ஒரு அன்சர் செய்யறதுக்கு உனக்கு என்ன?” அவள் வாயை விடும் போது ஒரு விரல் சில விநாடிகள் அவள் உதட்டை வருடியது போல் இருந்தது.

“அது உனக்கு தேவை இல்லாத விஷயம் வருண். உண்மையான ரீசன் ஒன்னு உன்னோட அப்பாகிட்ட நீ பதில் சொல்லனும். இல்லை அந்த தஸ்வியை வெறுப்பேத்த முயற்சி செய்யனும். அதனால் அவ என்னை டார்ச்சர் செய்வாள். இதுதான் உன் பிளான்.”

என்று தெளிவாக வார்த்தைகளைக் கூறினாள்.

வருண் அவளை ஒரு நொடி உற்றுப் பார்த்தவன், “அப்ப இவ்வளவு நேரம் உனக்கு சப்போர்ட்டா பேசுனது எல்லாம் தஸ்வியை வெறுப்பத்தனு சொல்ற?”

“ம்ம்ம்ம்..”  என்று பிருத்விகா தலையைக் குனிந்தப்படி உம் கொட்டினாள்.

“சரி உனக்கு ஜீனியஸ் மூளைதான். அதே மாதிரி மார்னிங்க் நான் சொன்ன இரண்டு விஷயத்தையும் செஞ்சால் உன்னை நான் தொல்லை பன்ன மாட்டேன்.”

பிருத்விகா இதைக் கேட்டதும் நிமிர்ந்தாள்.

“அதுவும் முதல் விஷயத்திற்கு ஏத்த மாதிரி நீ கரக்டான இடத்தில் தான் இருக்கற. சொல்லு யெஸ் ஆர் நோ?”

முதல் விஷயம் என்றதும் பிருத்விகாவுக்கு வேர்த்தது. காலை வருண் கூறியது நினைவுக்கு வந்தது.

“நான் நேத்து லாண்டரி ரூமில் செஞ்ச எக்ஸ்பிரிமெண்ட் பேரு டாமினண்ட் அண்ட் சப்மிஸ்வ், பி.டி. எஸ். எம்மில் வரும். நீயும் படிச்சுருப்பனு நினைக்கிற.”

இதைக் கேட்டதும் தான் பிருத்விகா அதிர்ந்தாள். இப்போது அதையே அவன் பேசவும் பிருத்விகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“வருண் உன்னோட விளையாட்டு ரொம்ப அதிகமாகப் போயிட்டு இருக்கு.” பிருத்விகா வருணின் கண்களை சந்திக்க முயற்சிக்கவில்லை. எங்கோ பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தை மீண்டும் பிடித்துத் திருப்பியவன் தன் முகத்தைப் பார்க்க வைத்தான்.

வருணின் கண்களை வேறு வழியின்றி பார்த்தாள் பிருத்விகா. அவன் கண்களில் இருந்த உண்மையைப் பார்த்ததும் பிருத்விகா தானாக படுக்கையில் பின்னால் நகர்ந்தாள். வருண் உண்மை கூறும் போது இருக்கும் முகபாவம் அப்படியே இருந்தது. இதைப் பார்த்ததும்  பிருத்விகா அதிர்ந்தாள்.

உடனே எழுந்தான் வருண். தன் தலை முடியைக் கோதியவன் ஏளனப் பாவனைக்கு முகத்தை மாற்றினான்.

“பார்ரா.. பிருத்விகா உன்னை ரொம்ப ஈசியா ஏமாத்திரலாம் போலவே. எதைச் சொன்னாலும் நம்பற. ஜஸ்ட் உன்னோட எக்ஸ்பிரஸன் பார்க்க நினைச்சேன். இட்ஸ் பிரைஸ்லெஸ்.” என்று சிரித்தவன் அமைதியாக அருகில் உள்ள நீரை எடுத்துக் குடித்தான்.

வருண் கூறியதின் அர்த்தம் புரியவே பிருத்விகாவுக்கு சில விநாடிகள் ஆனது. எதில் எதில் விளையாடுவது இல்லையா என்று தோன்றியது.

உடனே அந்தப் படுக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

“ரெஸ்ட் எடுத்துட்டு போ.” ஜக்குடன் கையில் நின்றவனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைத்தாள் பிருத்விகா.

“வர வர உனக்கு எதில் எதில் விளையாடறதுனு விவஸ்தை இல்லாமல் போயிருச்சு. உன்னோட விளையாட்டை எல்லாம் உன்னோட லவ்வர் தஸ்விகிட்ட வச்சுக்க. என்கிட்ட வச்சுகிட்ட தொலைச்சுருவேன். நானும் மாமாகிட்ட சொல்ல வேண்டி இருக்கும்.”

என்று அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள். ஜக்கை கீழே வைத்தவன் நடப்பவளின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்தான். ஆனால் பிருத்விகா இதை எதிர்பார்த்தவள் போல் அருகே இருந்த கட்டிலின் தூணைப் பிடித்துக் கொண்டாள். அதனால் வருண் தான் அவளருகே வர வேண்டியதாயிற்று.

“சொல்லு பேபி. எனக்கு பிரச்சினையே இல்லை. அப்பா கேட்டாருனா எனக்கு பிருத்விகா ரொம்ப பிடிச்சுருக்கு. அவளையை கல்யாணம் செஞ்சுக்கிறேனு சொல்வேன். உங்க அப்பாகிட்டேயும் இதையே சொல்வேன் தெரியுமா?” என்று அவள் காதில் முனு முனுத்தான்.

நிமிர்ந்து அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவளுக்கு அவன் தன்னைப் பழி வாங்க செய்தாலும் செய்வான் என்று தோன்றியது.

பிருத்விகாவின் கண்களில் லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

“புரிஞ்சா சரி. பேசாம தூங்கி எழுந்துட்டுப் போ. தஸ்வி நினைச்ச மாதிரி இனி நாம இரண்டு பேரும் கபில்ஸ்.”

“உன்னை…” பற்களைக் கடித்த பிருத்விகா அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். “ச்சே… ஏண்டா உசுரை வாங்குற?” என்று முனுமுனுத்தாள்.

‘எப்படியும் தஸ்வி நாளை கல்லூரி முழுவதும் இந்த விஷயத்தைப் பரப்பிவிடுவாள் என்று தெரியும். அதனால் பிருத்விகாவுக்கும் வேறு வழி இல்லை என்று தோன்றியது.

அதன் பிறகும் அவளுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. அவனுடைய புத்தகங்களில் ஒன்றை எடுத்தவள் படிக்க ஆரம்பித்தாள். அவளை அங்கு விட்டு விட்டு வேறொரு அறைக்குச் சென்றான் வருண்.

சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்த பிருத்வி அப்படியே உறங்கிவிட்டாள். இதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் உள்ளே நுழைந்தான் வருண்.

. மழை கொட்டும்..