என் மேல் விழுந்த மழைத்துளியே!-6

அத்தியாயம்-6

அன்றைய நாள் மாலை ஆறு மணி. கதிரவன் அங்கும் இங்கும் மலை முகட்டில் தன் கதிர்களால் கண்ணாமூச்சி ஆடியபடி மலையை இருளால் மூழ்கடிக்க ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக மறைய ஆரம்பித்திருந்தான். நூலகத்தின் பின் பக்கத்தில் உள்ள சுவற்றில் பிருத்விகாவை சுவற்றில் சாய்த்து ஒரு கையை வைத்து தடுத்தபடி வருண் அவளிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் எள்ளளவும் அந்தக் கோபம் தெரியவில்லை. ஆனால் வார்த்தையில் மட்டும் வெடித்துக்  கொண்டிருந்தது.

“சொல்லு பிருத்விகா. எதுக்கு தஸ்விகிட்ட அப்படி சொன்ன?”

“நான் என்ன சொன்னேன்?”

அவனைக் கண்டு சளைக்காமல் நேர்ப்பார்வை பார்த்தப்படி கூறினாள் பிருத்விகா.

“லாண்டரி ரூமில் என்ன நடந்ததுனு சொன்ன?”

“லான்டரி ரூமில் என்ன செய்வாங்க? வாஷ் செய்வாங்க. அந்த உண்மையைத்தான் சொன்னேன். அத அவ தப்பா புரிஞ்சுகிட்டா நான் என்ன செய்யறது?”

அவனின் கோபத்தை வேண்டுமென்ற அதிகப்படுத்த அவள் பேசிக் கொண்டிருந்தாள். வருணுக்கும் அவள் தன்னை வெறுப்பேற்ற இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.

உடனே தன் பேசும் தொனியை மாற்ற ஆரம்பித்தான்.

“பிருத்வி பேபி நான் அப்பவே உனக்கு பேர் சொல்றேனு சொன்னேன். நீதான் கேட்கலை.  அவளுக்கு நீ தெளிவாப் புரிய வச்சுருக்கனும். ஒன்னும் பிராபளம் இல்லை. இப்ப பேர் சொல்றேன். கேட்டுட்டு அவகிட்ட சொல்லு..”

அவன் கூறிய பெயரில் பிருத்விகாவுக்கு லேசாக உடல் நடுங்கி நா உலர ஆரம்பித்தது. ‘தன்னை எப்படி … அதற்கு வாய்ப்பே இல்லை…’  மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் ஏளனப் புன்னகை குடி கொண்டிருந்தது.

“ச்சீ போடா லூசு. நீ என்ன சொன்னாலும் நான் நம்பிருவேனு நினைச்சியா? அதுக்கு வேற ஆளப் பாரு.” என்று அவனைத் தள்ளி விட்டு நகரப் பார்த்தாள்.

அதற்கு அவன் விட்டால் தானே.

“அது உன் விருப்பம்.. ஆனால்” அவள் உதட்டை தன் ஆள்காட்டி விரலாலும் பெருவிரலாலும் வளைத்துப் பிடித்தவன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான்.

வருண் என்ன செய்கிறான் என்று பிருத்விகா யோசிக்கும் போதே அவளை விட்டுவிட்டு அவன் பாட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்.

அதை வாட்ஸ்ப்பில் ஸ்டேட்சில் தஸ்வி, கிருஷ், மித்ரா மற்றும் பிருத்விகா மட்டும் தெரியும்படி செட் செய்துவிட்டு பதிவிட்டான். அது “ஹாட்டர் தென் சகாரா.” என்ற தலைப்புடன் மின்னிக் கொண்டிருந்தது.

அவன் என்ன செய்கிறான் என்று பிருத்விகா யோசித்தப்படியே பின்னால் வந்தாள். ஆனால் அவளைப் பார்க்க வருண் விடவில்லை.

“வருண் என்ன செஞ்ச? எதுக்கு என்னோட போட்டோ?” எனக் கேட்டாள்.

“ஒன்னுமில்ல பிருத்விகா. செகண்ட் பேஸ் பனிஸ்மெண்ட். ரிலாக்ஸ். நான் ரெபரன்ஸ் எடுக்கனும். நீ கிளம்பு வீட்டுக்கு.” என்று இயல்பாகக் கூறினான்.

அவளை அப்படியே விட்டு பின்பு அப்படியே நூலகத்திற்குள் நுழைந்தான் வருண்.

‘இவனை..’ என்று மனதிற்குள் திட்டிய பிருத்விகா பேக்கைத் தூக்கித் தோளில் போட்டவாறு நடக்க ஆரம்பித்தாள்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்தவள் அவள் பாட்டுக்குப் படிப்பில் ஒரு மணி நேரம் மூழ்கி இருப்பாள். அப்போதுதான் கிருஷ்ஷிடம் இருந்து செக் வருண் ய ஸ்டேட்டஸ் என்ற மெசேஜ் வந்தது.

உடனே சந்தேகத்துடன் அவன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிற்குள் செல்ல பிருத்விகாவின் இயல்பாகச் சிவந்த உதடுகள் வருணின் இரண்டு விரல்களில் அகப்பட்டிருக்க ஓவல் ஷேப்பில் வளைந்திருக்க ‘ஹாட்டர் தென் சகாரா’ என்று தலைப்புடன் பதிவிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் பிருத்விகாவுக்கு உட்ச பட்சம் கோபம் முகத்தில் தெரிந்தது.

‘என்ன வேலை பார்த்திருக்கான் பாரு அந்த லூசு?’ என்று அவனைத் திட்டியவள் உடனே வேகமாக எழுந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

வேகமாக கிரில் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறிவளை வருணின் வீட்டு வாட்ச்மேன் அவளைப் பார்த்ததும் சில நொடிகள் யோசித்தவர் கதவைத் திறந்துவிட்டார். அவர் யோசிப்பதிலும் காரணம் உண்டு. பிருத்விகா அந்த வீட்டில் காலடி வைத்து பல வருடங்கள் ஆகிற்றே.

இன்று பிருத்விகா உள்ளே நுழைவது அவருக்கு குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஒருங்கே வழங்கியது.

பாதையில் இரு பக்கத்திலும் விளக்குகள் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. தோட்டத்துச் செடிகளை அவை அழகாக்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் இரசிக்கும் மன நிலையில் அவள் இல்லை. நேராக நடந்து வருணின் வீட்டு காலிங்க் பெல்லை அடித்தாள்.

தேவகிதான் கதவைத் திறந்தார்.

“பிருத்விகா பாப்பா..”

“வருண் எங்கமா?”

“தம்பி மாடியில் இருக்கார்.” என்று அதன் திசையைக் காட்ட அவள்பாட்டுக்கு  வேகமாக முன்னேற ஆரம்பித்தாள்.

வருண் அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தவன் வென்னீரில் குளியல் ஒன்றை போட்டுவிட்டு உடை மாற்றி விட்டு தலையில் துண்டை வைத்துத் தேய்த்து தலையை உலர வைக்க முயன்றான்.

டிரையரை எடுப்பதற்குள் புயலென உள்ளே நுழைந்தாள் பிருத்விகா. பிருத்விகாவின் காலடி ஓசையில் திரும்பிய வருண் அவளை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.

“பிருத்விகா நீ இங்க…?”

வருணை அவள் மதிக்கவே இல்லை. அவள் கண்கள் சோபாவில் கிடந்த அந்த சேம்சங்க் பிலிப் போனின் மீது படிந்து விட்டது. உடனே சென்று அதை எடுத்தாள்.

வருண் அவள் வருவாள் என்று எதிர்பார்த்தாலும் உடனே இப்படி கைப்பேசியை எடுக்கச் செல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை.

போனை விரித்தவள் பாஸ்வேர்டை போட முயன்றாள். அதுவரை வருண் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் தானே.

“பிருத்விகா.. ஸ்டாப்..” என்றபடி அருகே வரவும் பிருத்விகா சோபாவிற்கு அந்தப் பக்கம் குதித்து அவனிடம் இருந்து தப்பிக்க முயன்றாள்.

வருணும் விடுவதாக இல்லை. அவளும் அவனைப் பின் தொடர்ந்தாள். அந்த பெரிய அறையில் ஓடுவதற்கு அதிக இடம் இருந்தது என்பதே உண்மை. கட்டிலைச் சுற்றிக் கொண்டு ஓடினர்.

பிருத்விகா போனின் பாஸ்வேர்டை நகர்ந்தப்படி போட முயன்று கொண்டிருந்தாள்.

“ஏய் பேபி..நில்லு..”

நைட் டிரஸ் பேண்ட் சர்ட்டி டைப் மாடலில் இருந்ததால் அவளால் சுலபமாக ஓட முடிந்தது.

இரண்டு நிமிடங்கள் போக்கு காட்டியவள் கீழே விழுந்து கிடந்த வருணின் பெரிய தேங்காய் பூ(பாத் டவல்) டவலில் கால் சிக்கி கீழே விழ ஆரம்பித்தாள். பாதி விழப் போனவள் அருகிலிருந்த டிரஸ்ஸிங்க் டேபிளில் கையை ஊன்றி சமாளித்தாள்.

மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் அவள். விழப் போனவளை தலைக்கும் வயிற்றுக்கும் ஒரு கையைக் கொடுத்துப் பிடித்திருந்தான் வருண்.

“ஏண்டி இப்படி அட்டகாசம் செய்யற?”

என்று வருண் முனு முனுத்தான்.

“நானாடா? அட்டகாசம் செய்யறேன். நீதான் அநியாயம் பன்னிட்டு இருக்க. எதுக்குடா அப்படி போஸ்ட் பன்ன?”

இருவரும் கண்ணாடியைப் பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தனர். பிருத்விகா கையில் பிலிப் போன் இன்னும் இருந்தது. விட்டால் ஓடி விடுவாள் என்பதால் வருண் அவளை விடவில்லை. வயிற்றோடு இறுக்கிப் பிடித்திருந்தான். விடுபட முயற்சித்தால் வருண் கைப்பேசியைப் பறித்து விடுவான் என்பதால் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா.

“தஸ்வி அப்படியே நினைச்சுகட்டும். அதுக்காகத் தான். ஐம் நாட் இண்டர்ஸ்ட்டு இன் ஹெர். புரியுதா?”

“அதுக்கு இப்படி செய்வியாடா?”

“வேற  வழி இல்லை. நீ மதியம் தஸ்விகிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது.”

“அவ மேல் இவ்வளவு அக்கறை இருக்கு. அப்புறம் ஏண்டா அவளை உனக்குப் பிடிக்கலை.”

“அக்கறை இருக்க எல்லாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது.”

“நீ பொய் சொல்ற. உனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அவளை நீ அப்படிப் பார்க்கறத நானே பார்த்துருக்கேன்.”

“பிருத்விகா..” குரல் கோபத்துடன் ஒலித்தது.

“உனக்கு எதுவுமே தெரியாது. அமைதியா இரு.”

“ஐ நோ. உனக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் ஏதோ காரணத்தால் வேண்டாங்கற. அதனால் ஆண்ட்டிகாக உங்க இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைப்பேன்.”

கண்ணாடியைப் பார்த்தவண்ணம் இவர்களது சண்டை தொடர்ந்து கொண்டிருந்தாலும் பிருத்விகா கைப்பேசியைத் திறக்க முயன்று கொண்டிருந்தாள். அப்போதுதான் உள்ளே நுழைந்தாள் தஸ்வி.

வருணும் பிருத்விகாவும் இருந்த நிலையைப் பார்த்தவளுக்கு ஆயிரம் மின்னல்கள் தாக்கியதைப் போல் இருந்தது. அதிலும் வருணின் பிடியில் இருந்த பிருத்விகாவின்  இடையில் உள்ள சட்டை மேலேறி இருந்தது.

“வாட்…************** ஹேப்பனிங்க்?” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.

தஸ்வியை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

அந்தக் கத்தலில் உடனே இருவரும் விலகினர். பிருத்விகா திரு திருவென்று விழித்தாள்.

“தஸ்வி ஐ கேன்..” என்று அவள் ஆரம்பிக்கும் முன் தஸ்வி அவளைத் திட்ட ஆரம்பித்திருந்தாள்.

பிருத்விகாவை நோக்கி , “ஏய் கோல்ட் டிக்கர். ****ட்ச் வருணை நீ நினைச்ச மாதிரியே செட்யூஸ் பன்னிட்ட இல்லை. சைல்ட்குட் இருந்து ஒன்னா வளர்ந்தது எல்லாம் பொய்.” என்று எக்குத்தப்பாகப் பேசினாள்.

“ஸ்டாப் இட் தஸ்வி.” பிருத்விகாக்கு முன் வந்து நின்றான் வருண்.

“நீ யாரு? எனக்கு அவளுக்கும் இருக்க ரிலேஷசன்ஷிப் பத்தி பேச. உனக்கு என்ன உரிமை இருக்கு. நான் எப்பவாது உன்னை லவ் பன்றேனு சொல்லி இருக்கேனா?” நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க. கெட் அவுட் பிரம் மை ஹவுஸ். இதுக்கு மேல் எப்பவும் வருண்னு பேச வந்துறாத. அவ என்னோட பியான்சி. அவ கூட நான் எப்படி வேணாலும் இருப்பேன். அவுட்.” என்று இதுவரை முகத்தில் கோபத்தை என்று காட்டி இராத வருணின் அவதாரத்தில் தஸ்வி மிரண்டு தான் போனாள். பிருத்விகாவும் வருணுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று நினைக்கவில்லை. அவளே ஒரு அடி பின் நகர்ந்தாள்.

தஸ்வி இரண்டு கண்களிலும் நிறைந்த நீருடன் , “வருண் அவள நம்பாதடா. அவ கிருஷ்..”

“ஸ்டாப் இட். இனி அவளை கிருஷ் கூட வச்சுப் பேசாத. அவளைப் பத்தி இந்த உலகத்தில் என்னை விட யாருக்குமே நல்லாத் தெரியாது. ஐ செட் கெட் அவுட்.” என்று மீண்டும் கத்த தஸ்வி அழுது கொண்டே வெளியில் ஓடினாள்.

உடனே வாட்ச்மேனுக்கு அழைத்தவன், “அண்ணா இப்ப போற பொண்ணு பத்திரமா வீட்டுக்குப் போயிருச்சானு நம்ம பசங்கள விட்டு பார்க்கச் சொல்லுங்க.” என்று கட்டளை பிறப்பித்தான்.

அதன் பிறகு பிருத்விகாவிடம் திரும்பினான். பிருத்விகாவைப் பார்த்ததும் அவன் முகம் அப்படியே சாந்தமாக மாறியது.

பிருத்விகா அவனை விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மேடம் இப்படி பார்க்கீறிங்க?”

மழை கொட்டும்…