என் மேல் விழுந்த மழைத்துளியே-4

அத்தியாயம்-4

பத்து நிமிடங்கள் கழித்துதான் தஸ்வியிடமிருந்து வருணால் தப்பிக்க முடிந்தது. ஓயாமல் அவள் பேசிக் கொண்டே இருந்தாள். கிருஷ்ஷின் மீது எரிச்சல் படர்ந்தது அவனுக்கு. மனதுக்குள் அவனைத் திட்டிக் கொண்டான்.

வகுப்புகள் ஒரு வழியாக முடிய வருண் மித்ராவிடம் நூலகம் செல்வதாகக் கூறிவிட்டு நகர்ந்தான். சில புத்தகங்களில் அவன் குறிப்பெடுக்க வேண்டி இருந்தது. அதைப் பார்த்து குறிப்பெடுத்து விட்டு கிளம்ப மாலை ஆறாகி இருந்தது. இன்றும் மழை வரும் போல் இருந்தது.

மலை பக்கம் என்பதால் எப்போது மழை வரும் என்று கூற முடியாது. அதுவும் சில்லென்ற கோயம்புத்தூரில் சொல்ல வேண்டியது இல்லை. சலித்தப்படியே தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

பிருத்விகா கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு கிருஷ்ஷுடன் செல்வதைப் பார்த்தான். செல்லட்டும் என்று விட்டு விட்டான். அவனுக்கு அப்போது அவளைச் சீண்டும் எண்ணம் இல்லை. கிருஷ் அவளை டிராப் செய்து விட்டு தன் வீட்டுக்குச் சென்றிருப்பான் என்று தோன்றியது.

தேவகி அம்மாளுக்கு காரில் பயணம் செய்தபடியே அழைத்தான்.

“சொல்லுங்க தம்பி.”

“அம்மா.. பிருத்விகா என்ன செய்யறாங்க?”

“பாப்பா பிரண்டோட சேர்ந்து படிச்சுட்டு இருக்காங்க.”

பிரண்ட் என்றதும் கிருஷ் இன்னும் வீட்டை விட்டுச் செல்லவில்லை என்று புரிந்தது.

“சரிம்மா. எதாவது லைட்டா சமைச்சுக் கொடுத்து சாப்பிட வச்சுருங்க.”

அவர் சரி என்று தலை ஆட்டவும் அழைப்பைத் துண்டித்தான். கார் வேகம் எடுத்தது. நேராகச் சென்று தன் வீட்டில் நிறுத்தியவன் சூடான நீரில் ஒரு குளியலைப் போட்டான்.

இலகுவான உடைக்கு மாறியவன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு பிருத்விகா வீட்டுக்குச் சென்றான். கிருஷ் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். தன் எதிரில் நிற்பவனை முறைத்தான் வருண்.

“எதுக்கு தஸ்வி மேல ஜூஸ் கொட்டுன கிரிஷ்?”

தன் ஒற்றைக் கண்ணை அடித்தவன், “வாட் டு டூ? இப்பவே தஸ்வி மேல் உனக்கு எவ்வளவு அக்கறை. தஸ்விக்கு கியூபிட்டா மாறலாம்னு நான் முடிவெடுத்துட்டேன். உங்க இரண்டு பேரையும் கபில்சா பார்த்தால் என் மனசுக்கு நிம்மதியாக இருக்கும்.” என்றதும் வருணுக்கு கோபம் தலைக்கேறியது.

ஆனால் அப்படி எல்லாம் அதை வெளிப்படுத்தி விடுபவன் அல்ல வருண். அமைதியாகப் பேசினான்.

“ஏன் அப்பதான் உனக்கு இருக்கற பிளாக் கிளியர் ஆகுமா?”

“என்ன பிளாக் வருண்?”

ஒன்றும் புரியாமல் கேட்பதைப் பார்த்துச் சிரித்த வருண், “பிருத்விகா..” என்றான்.

வருண் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்து விட்டதும் கிருஷ்ஷின் முகம் சிவந்தது.

“அசிங்கமாகப் பேசாத வருண். அவ என்னோட பிரண்ட் புரியுதா?” என்று அடிக்குரலில் எச்சரித்தான்.

வருண் எதுவும் கூறாமல் அமைதியாகப் பார்த்தான்.

“பிருத்விகா தான் தஸ்வியை பத்தி அங்கிள்கிட்ட சொல்லி உனக்கு மேரேஜ் பன்னி வச்சா நல்லாருக்கும்னு சொன்னா. அப்புறம் நான் பேசி அதை ஸ்டாப் பன்னி இருக்கேன். அதனால் எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லனும். குட் பாய்.”

என்று கூறிவிட்டு விலகி நடந்தான்.

கேட்டுக்கு வெளியே செல்பவனை வெறித்த வருண், “என்னோட கண்பார்வையில் இருந்து பிருத்விகா எப்போதும் தப்பிக்க முடியாது கிருஷ். உன்னால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோ..” என்று அவனுக்கு கேட்கும்படி கூறிவிட்டு வருணும் உள்ளே நடந்தான்.

ஹாலில் சோபாவில் தலையைச் சாய்த்த கண்களை மூடியிருந்தாள் பிருத்விகா. வருவது யாரென்று அவளுக்குத் தெரியும். அவனின் காலடித் தடங்களை அறிவாள். அதனால் கண்களைத் திறக்காமல் அமர்ந்திருந்தாள். கண்களில் எரிச்சல் மிகுந்திருந்தது.

வருண் அமைதியாக அருகில் வந்தவன் , “பிருத்விகா..” என்று அழைத்தான்.

சோம்பலும், அலட்சியமாக கண்களை விழித்தான். அவன் கையில் தெர்மா மீட்டர் இருந்தது. அவளிடம் எதுவும் கூறாமல் அதைக் காதில் வைத்தான். டிஜிட்டல் தெர்மாமீட்டர் சில நொடிகள் கழித்து பீப் என்ற சத்தத்துடன் வெப்ப நிலையை அளந்து முடித்தது.

“பீவர் கொஞ்சம் இருக்கு. போய் ரெஸ்ட் எடு.”

“ஓகே.” பிருத்விகா அமைதியாகப் பதில் அளித்தாள்.

அவள் பதிலில் அவனுக்கும் ஆச்சரியமே. அவன் கூறி எதையும் அவள் அவ்வளவு எளிதில் ஓப்புக் கொண்டதில்லை. என்ன அதிசயம் என்ற ரீதியில் பார்த்தான்.

“இன்னிக்கு மழை கொட்டப் போகுது. நான் சொல்ற ஒன்னுக்கு உடனே ஓகே சொல்லிருக்க. ஆர்க்யூ செய்யவே இல்லை.” என்று நக்கலுடன் கேட்டான்.

“லுக் வருண். எனக்கு உன் கூட சண்டை போட தெம்பு இல்லை. இனிமேல் போடவும் மாட்டேன். பிராங்கா ஸ்பீக்கிங்க், உன்னை இக்னோர் செய்யப் போறேன். எனக்கு இந்த சின்னப் புள்ளைத் தனமா இருக்கறது புடிக்கலை. நானும் அடல்ட். நீயும் அடல்ட். அதுவும் டாக்டர்ஸ். அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும்….” இன்னும் அவள் பேச முயல்கையில் இருமல் வரத் தொடங்கியது.

வரிசையாக இருமல் வர அவள் கண்களில் நீர் கசிந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு இருமினாள். அவள் இருமலைப் பார்த்துவிட்டு தலையை இட வலமாக ஆட்டியவன் அமைதியாக கிட்சனுக்குள் சென்றான்.

தேவகி அம்மாள் பக்கத்தில் கடைக்குச் சென்றிருந்தார். அதனால் சுடு பாலில் சிறிது மிளகு கலந்து எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி அமைதியாகப் பருகிய பிருத்விகா சிங்கினுள் போட எழுந்தவள்  லேசாகத் தடுமாறினாள். அவளிடமிருந்து அதை வாங்கியவன் அமைதியாக சிங்கினுள் போட்டான்.

மீண்டும் சோபாவில் அப்படியே அமர்ந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“பிருத்விகா.. கம் நான் ரூமில் விடறேன்.”

அமைதியாக அவள் எழுந்து நின்று கொள்ள கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். அவள் அறைக் கதவு வந்ததும், “ஐம் பைன். தேங்க் யூ.” என்றாள். அவனை வெளியேறும் படி குறிப்பாகக் கூறினாள் பிருத்விகா.

“ப்ம்ச்..” அவளை அப்படியே அவள் அறைக் கதவின் மீது தோளைப் பிடித்துச் சாய்த்தான்.

அவள் அருகில் நெருங்கியவன், “மேடம் அப்பாகிட்ட தஸ்வியைப் பத்தி சொல்லப் போறீங்களாம். நியூஸ் வந்தது..” என்று கேட்டான்.

பிருத்விகா உயரம் என்றாலும் வருண் அதிக உயரம். அதனால் அவனை நிமிர்ந்துதான் பார்க்க முடியும். நேராக அவன் கண்களைப் பார்த்தவள், “ஆமா. அதனால் என்ன? யூ டூ மேக் எ குட் ஃபேர். தஸ்வியும் ரொம்ப நாள் உன்னை லவ் பன்னிட்டு இருக்காள். அதனால் தான் சொன்னேன். என்னை இம்சை பன்னறதைத் தவிர அவ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை ரொம்ப டீஃப்பா லவ் பன்றாள்.” என்று அமைதியாகக் கூறினாள்.

ஹிந்தி பட ஹிரோயின்கள் போன்று ஹிரோ அருகில் வந்தால் அதாவது பர்சல் ஸ்பேசில் நுழைந்தால் மெல்ல மெல்ல காதிலில் விழ அவள் சாதாரண பெண் இல்லை. மன நல மருத்துவம் படிக்கும் டாக்டர். இந்த டெக்னிக்கை எல்லாம் அலசி ஆராய்ந்து படிப்பவள் என்பதால் வருணை இயல்பாக நோக்கினாள். பிராக்டிக்கலான பெண் பிருத்விகா. மதியமும் சிசிடிவியில் மாட்டினால் தேவையில்லாத பிரச்சினை வருமோ என்று எண்ணினால் தவிர அவனை சட்டை பட்டனை கழட்டுவதில் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் வருண் என்ன செய்வான் என்று கணிக்க முடியாது.  

“அப்படியா?.. இன்னிக்கு மதியம் நாம இரண்டு பேரும் செஞ்சோமே அதோட பேர் சொல்லட்டுமா?” சம்பந்தம் இல்லாமல் கேட்பவனைப் பார்த்தாள்.

“சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசறதே உனக்கு வேலையாப் போச்சு. ஏண்டா.. இப்படி இம்சை பன்னற. எனக்கு எந்தப் பேரும் தேவை இல்லை. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. போ போய் எப்படி தஸ்வியை மேரேஜ் பன்னிட்டு வாழலாம்னு யோசி. என்னை இம்சை பன்னாத. அப்புறம் தஸ்வி இனிமேல் அடிக்கடி உங்கிட்ட வருவா..”

என்று கர கர குரலில் பேசினாள்.

அவள் பேசுவதை அமைதியாகக் கவனித்தவன், “நீ பிளான் செஞ்சபடி எங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியும்னு உனக்குத் தோணுதா? அதுக்கு நான் விட்ருவேனு நினைக்கிறியா?”

“போடா சைக்கோ பாத். இதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.” என்றவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். படுக்கையில் சென்று அமைதியாகப் படுத்தாள். சிறிது நேரம் தூங்கி விட்டு இரவு உணவை உண்டு கொள்ளலாம் என்று நினைத்து உறங்கினாள்.

அடுத்த நாள் காலை.

ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த்தைச் சுற்றி உள்ள ஒரு காட்டின் ஒரு பகுதி.காட்டிற்குள் மலைப் பாம்பாய் கரிய நிறத் தார்ச் சாலை வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. முன் தினம் இரவு பெய்த மழையால் சாலை சற்று அடர்ந்த கருப்பாகவும், வழ வழப்பாகவும் இருந்தது. சில இடங்களில் கருங்கற்கள் பெயர்ந்து செம்மண் எட்டிப் பார்த்தது. சாலையைச் சுற்றிலும் உள்ள இடத்தில் மரங்கள் செழித்து வளர்ந்து அடர்ந்து காணப்பட்டன. தார்சாலையை சுற்றியுள்ள விளிம்புகளில் செம்மண் நனைந்து சேறாக மாறியிருந்தது. அப்போது அந்த வழியில் வேகமாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.

இந்த வழி அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க சிலர் இந்தப் பாதையைப் பயன்படுத்துவர். வனக் காவலர்கள் இந்த வழியை அதிகம் ரோந்து செல்ல பயன்படுத்துவர். மொத்தத்தில் காட்டுக்குள் இருக்கும் சாலை.

செல்பவன் ஒரு வனத் துறையில் பணிபுரிபவன். தீடிரென்று அவனுடைய கார் நின்றது. திரும்ப இயக்க முயற்சித்தான் எதுவும் நடக்கவில்லை. அதனால் இறங்கி முன்பக்க பானெட்டைத் திறந்தான். எஞ்சின் அதிக அளவு சூடாக இருந்தது.

“ச்சே..” என்று முனுமுனுத்து விட்டு காரின் பின் பக்கத்தில் உள்ள ஐந்து லிட்டர் கேன் ஒன்றை எடுத்தான். காரைப் பூட்டி விட்டு சாவியை பாக்கெட்டிற்குள் போட்டவன் தார்ச்சாலையில் சிறிது தூரம் நடந்து அதன் பிறகு காட்டுக்குள் இறங்கினான்.

மழை பெய்து ஈரம் இருப்பதால் பார்த்து நடக்க வேண்டும். கவனமாக நடந்தான். அவனுடைய ஷூக்கள் இப்படி பட்ட இடத்தில் நடக்க பொருத்தமானவை. இங்கு நீரோடை போன்ற ஒன்றில் இருந்து நீரை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவன் நடந்து சென்றான்.

அங்கு ஒரு நீரோடை இருப்பதை அவன் அறிவான். அதனால் அமைதியாக முன்னே நடந்து சென்றான். ஐந்து நிமிட நடையில் நீரோடை தென்பட்டது. அதில்  நீரை நிரப்பியவன் சட்டென பக்கவாட்டில் பார்த்தான். மனிதனின் கால் கட்டை விரல் போன்ற ஒன்று மண்ணிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. பார்த்ததும் அவன் அதிர்ச்சி அடையவில்லை. அமைதியாக தன் வாக்கி டாக்கியை எடுத்தவன் குறிப்பிட்ட ரோடியோ அதிர்வெண்ணை வைத்தான்.

வாக்கி டாக்கி கிர் என்று இயங்க ஆரம்பித்தது. தகவலை கூறியவன் வனக் காவலர்களையும், மக்கள் காவலர்களையும் வர வைத்தான். இறந்து சில மணி நேரங்களே ஆகி இருக்கும் என்று தடவியல் வல்லுநர் கூறினார். ஆனால் பிணத்தின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரு துப்பு பிணத்தின் உடலில் இருந்த உடை. அது பிங்க் நிறத்தில் ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் மருத்துவமனையில் எம்பிராய்டரி செய்யப்பட்ட லோகோவுடன் அழுக்குப் படிந்து காணப்பட்டது. இல்லை சகதியில் ஊறி காணப்பட்டது.

மழை கொட்டும்..