என் நித்திய சுவாசம் நீ – 16

“நித்திலனை பார்த்ததும் பிடிச்சிது எனக்கு!
நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அவரைப் பார்த்தேன். சென்னைல இரண்டு மூனு வருஷமா வேலை செஞ்சிட்டு இருந்த நான், வேற கம்பெனியில வேலைக்குப் போலாம்னு தேடிட்டு இருந்தப்ப, பெங்களூர்ல ஓபனிங்க்ஸ் இருக்குனு தெரிய வந்து அங்க இன்டர்வியூ அடெண்ட் செய்யலாம்னு போனேன். அப்பாவும் தாத்தாவும் அதுக்கு ஒத்துக்கவே இல்லை. அம்மா தான் அவங்ககிட்ட பேசி ஒத்துக்க வச்சி அனுப்பி வச்சாங்க. சென்னைல இருந்து பெங்களூர் போகுற வரை எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா அங்க இருந்த லோக்கல் பஸ்ல இன்டர்வியூ நடக்கிற இடத்துக்குப் போகும் போது இறங்க வேண்டிய ஸ்டாப் மறந்து போய் நான் திணறிட்டு இருக்கும் போது வந்து ஹெல்ப் பண்ணாரு. எங்க போகனும் கேட்டு அந்த ஆபிஸ் போகுற வரை கூட இருந்தார். இன்டர்வியூல செலக்ட்டான பிறகு மூனு மாசம் கழிச்சு அந்த ஆபிஸ்ல ஜாய்ன் பண்ணிட்டு பெங்களூர்ல ஒரு ரூம் பார்த்து ஷிப்ட் ஆகிட்டேன். அதுக்குப் பிறகு நான் வேலை பார்த்த ஆபிஸ்ல யாரையோ பார்க்க வந்து ஆபிஸ் கேட் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தாரு. அப்ப போய் பேசினேன். அதுக்குப் பிறகு அடிக்கடி அந்த ஆபிஸ்ல வேலை செய்ற ஃப்ரண்ட்டை பார்க்க வந்ததா சொல்லி என்கிட்ட பேசிட்டு போக ஆரம்பிச்சாரு. எனக்குப் பெங்களூர்ல ஃப்ரண்ட்னு சொல்லிக்கப் பெரிசா யாரும் இல்ல. எங்கயும் வெளில போகனும்னாலும் தனியா தான் போய்ட்டு இருந்தேன். இவரும் அப்ப கூட ஜாய்ன் பண்ணிக்க ஆரம்பிச்சாரு. இப்படியே எங்க ஃப்ரண்ட்ஷிப் டெவலப் ஆகி ஒரு ஆறு மாசத்துல நாங்க க்ளோஸ் ஃப்ரண்ட்டா மாறின டைம்ல தான் ஒரு நாள் நிவேதாவை ஒரு ஹோட்டல்ல வச்சி எனக்கு இன்ட்ரோ கொடுத்தாரு. நிவேதா அவங்க கிட்ட ரொம்ப உரிமையா பேசினது எனக்கு ஒரு மாதிரி மனசு கஷ்டமா இருந்துச்சு. அப்ப நிவேதா நித்தலனுக்கு ப்ரபோஸ் செஞ்சாங்க. நித்திலனும் அக்சப்ட் பண்ணிக்கிட்டது போல ரியாக்ட் செய்யவும், நான் அழுதுட்டே அந்த இடத்தை விட்டுப் போய்ட்டேன். என் அழுகையைப் பார்த்துட்டு இரண்டு பேரும் என் பின்னாடியே வந்தாங்க! அவங்களும் நிவேதாவும் நடிச்சதா சொன்னாங்க. நித்திலனுக்கு அவங்க லவ்வை என்கிட்ட டைரக்ட்டா சொல்ல தயக்கமா இருந்தனால, நித்திலன் லவ் சொல்லி நான் இருக்கிற ஃப்ரண்ட்ஷிப்பையும் வேண்டாம்னு சொல்லிடுவேன்னு பயந்தனால இப்படி ப்ளான் செஞ்சதா நிவேதா சொன்னாங்க.

என் உணர்வை வச்சி இரண்டு பேரும் விளையாடிருக்காங்கனு எனக்கு அவங்க மேல செம்ம கோபம். அடுத்த ஒரு மாசத்துக்கு நித்திலன் கிட்ட நான் பேசவே இல்ல. அவர் என்னைய கன்வின்ஸ் பண்ண ரொம்ப ட்ரை பண்ணாரு. நான் அவரை ரொம்பவே அவாய்ட் செய்ய ஆரம்பிச்சேன். அப்ப நான் ஒரு வீக்கெண்ட்ல சென்னை வந்தப்ப எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா அப்பா அம்மா தாத்தா எல்லாரும் நிறைய ஃபோட்டோஸ் ஜாதகம்னு காமிக்கவும் எங்க நித்திலனை மிஸ் பண்ணிடுவேனோனு பயம் வந்துடுச்சு. சென்னைலருந்து வந்ததும் நித்திலன்க்கு கால் பண்ணி அவரை உடனே பார்க்கனும்னு சொன்னேன். எங்க பிஜிகிட்ட இருக்கப் பார்க்ல வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தார். என்னைய பார்த்ததும் மிஸ் யூனு ரொம்பவே ஃபீல் செஞ்சி பேசினாரு. எங்க என்னைய அவர் ஃலைப்ல மிஸ் பண்ணிட்டாரோனு நினைச்சு ரொம்பக் கவலைபட்டதா சொன்னாரு. அப்ப தான் நிவேதா யாரு என்னனு சொன்னாரு.

நிவேதாவும் அவங்களும் ஸ்கூல் டேஸ்லருந்தே ஃப்ரண்ட்டா இருந்திருக்காங்க. நிவேதா ஊருக்கு போகும் போதெல்லாம், நிவேதா இவங்க கூடத் தான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்கனு சொன்னாரு. நிவேதாக்கு இங்கயே ஐடி வேலை கிடைக்கவும், இப்படி வீக்கெண்ட்ல மீட் பண்ணிப்பாங்கனு சொன்னாரு. நிவேதாவும் இவங்களும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னும் இவங்களுக்குள்ள தெரியாத எந்த ரகசியமும் இல்லனும் சொன்னாரு. என் எண்ணமெல்லாம் நித்திலனை கல்யாணம் செய்றதுல தான் இருந்துச்சு. அதனால நான் நிவேதா பத்தி பெரிசா யோசிச்சிக்கலை. எனக்கு என் நித்திப்பாவை நான் ஃலைப்ல மிஸ் செஞ்சிட கூடாதுங்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு. அடுத்து வந்த வீக்கெண்ட்ல நித்திலனோட தான் சென்னைக்குப் போனேன். அப்பா அம்மாக்கு அவரை ரொம்பப் பிடிச்சிது. ஃப்ரண்ட்னு தான் அப்போதைக்குச் சொல்லி வச்சேன்!

நான் இப்படி ஒருத்தரை ஃப்ரண்ட்டுனு வீட்டுக்கு கூட்டிட்டு போனதே அது தான் ஃபர்ஸ்ட் டைம். அதனால எல்லாருக்குமே சந்தேகம் வந்துடுச்சு. தாத்தாக்கு இவரைச் சுத்தமா பிடிக்கலை. நேரடியாவே நித்திப்பா கிட்ட ஹார்ஷா தான் தாத்தா பேசினாங்க. தாத்தாக்கு அவர் எங்க கேஸ்ட் இல்லன்றது பெரிய பிரச்சனையா இருந்துச்சு. ஆனா அப்பா அம்மா என் சந்தோஷம் தான் முக்கியம்னு எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. தாத்தா கோபத்துல என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டாரு. நித்திலன் பேமிலிகிட்ட பேசி கல்யாணம்லாம் ஃபிக்ஸ் செஞ்ச பிறகு அப்பா அம்மா நான் எல்லாரும் சேர்ந்து பேசி தாத்தாவை சமாதானம் செஞ்சோம். கல்யாணம் அண்ட் ரிசப்ஷென் எல்லாமே சென்னைல கடல் கிட்ட நடந்துச்சு. நானும் நித்திப்பாவும் ஒவ்வொன்னும் ப்ளான் பண்ணி அரேஞ்ச் பண்ணோம். Those are the most happiest days of my life. அங்க இருந்த எங்களோட பீச் ஹவுஸ்ல ஒன் வீக் ஸ்டே செஞ்சோம். அந்தக் கடலலைல என் கால் படற மாதிரி நின்னு லவ் யூ நித்திப்பானு கத்திருக்கேன். தினமும் நைட் அவர் கூடக் காலாட அந்தக் கடல் மணல் பேசிட்டே நடக்கிறது மனசுக்கு அவ்ளோ சுகமா இருக்கும். என்னைய அங்கிருந்து டெய்லி தூக்கிட்டுப் போகச் சொல்லி அடம்பிடிச்சி அவர்கிட்ட ரொம்பவே கொஞ்சிட்டு இருப்பேன்.

அதுக்கப்புறம் ஹனிமூன்காக மாஞ்சோலை போனோம். அங்க வீடு மாதிரி இருந்த ரூம் எடுத்து தங்கினோம். அங்க இருக்க மலை ஜாதி மக்கள் டாட்டூ குத்துவாங்கனு கேள்விபட்டு, நானும் நித்திப்பாவும் டாட்டூ குத்திகலாம்னு போனோம். அவங்க கைல நிநினு டாட்டூ குத்திக்கிட்டாங்க. அவருக்குக் குத்தும் போதே நான் முகத்தைச் சுருக்கினதை பார்த்துட்டு அவர் என்னைய டாட்டூ குத்திக்க விடலை. அங்க நிவேதா வீட்டுல மறுவீடு அழைப்புக்கு போனோம். பாலன் மாமா, நிவேதா தம்பி தான் இருந்தாங்க. நிவேதா அப்ப அங்க வரலை. ஆபிஸ்ல லீவ் தரலைனு சொல்லிட்டாங்க. மேரேஜ்க்குமே முழுசா அவங்க நிக்கலைனு அப்ப தான் யோசிக்க ஆரம்பிச்சேன். மேரேஜ் அன்னிக்கு சென்னைக்கே லாஸ்ட் மினிட்ல தான் வந்தாங்க. மேரேஜ் முடிஞ்சதும் கிளம்பி போய்ட்டாங்க. அவங்க ஆபிஸ்ல லீவ் இல்லனு நித்திப்பா அப்ப சொன்னதால நானும் பெரிசா எடுத்துக்கலை.

அங்க நிவேதா வீட்டுல மறுவீடு விருந்து முடிஞ்சு, பாலன் மாமாவோட யமாஹா டூ வீலர் வண்டியில நாங்க ரிட்டன் மாஞ்சோலை ரூம்க்கு போகும் போது எங்களுக்கு அங்கிருந்த கவர்மெண்ட் ஸ்கூல் கிட்ட ஆக்சிடெண்ட் நடந்துச்சு. அவருக்குக் கால் முட்டியில ரொம்பவே ரத்தம் வந்தது. எங்கேயும் ப்ராக்சர் ஆகலைனாலும் நான் ரொம்பவே பயந்து போய்ட்டேன். நித்திப்பாவோட அப்பா அம்மா, என்னோட அப்பா அம்மாலாம் வந்துட்டாங்க. தாத்தா வரலை. இரண்டு பேரோட அப்பா அம்மாவும் எங்க கூட ஒன் வீக் தங்கிருந்துட்டு போனாங்க. நான் ஒரு மாசம் அங்க தான் இருக்கனும் முழுசா குணமான பிறகு போய்க்கலாம்னு சொல்லி அங்கேயே ஒரு மாசம் தங்க வச்சிட்டேன். அதுக்குப் பிறகு பெங்களூர்ல இரண்டு பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம். அங்கே எங்களோட மேரேஜ் லைப் ஸ்டார்ட் ஆச்சு. நான் அணு அணுவாய் ரசிச்சு வாழ்ந்த நாட்கள் அவை. என் உலகம் முழுவதும் நானும் நித்திப்பாவும் மட்டுமே இருந்துச்சு. ஆறு மாதம் முடிஞ்சிருந்த டைம்ல தாத்தா எங்களைப் பார்க்க பெங்களூர் வந்திருந்தார். அவருக்குக் கோபம் குறைஞ்சிருந்தது.

எனக்குத் தாத்தாவே எங்களைப் பார்க்க வந்ததுல அவ்ளோ சந்தோஷம். நித்திப்பா ஆபிஸ் விட்டு வர்ற நேரமாகும்னு சொன்னதால நானும் தாத்தாவும் கோயிலுக்குப் போனோம். திரும்பி வந்தப்ப நிவேதாவும் நித்திப்பாவும் வீட்டுகுள்ள பேசிக்கிற சத்தம் கேட்டுச்சு. கதவை திறக்க போன நேரத்துல நிவேதா நித்திப்பாவை லவ் பண்றதா சொல்றது கேட்டு அப்படியே கதவு கிட்டயே நாங்க நின்னுட்டோம். நிவேதா நித்திப்பாவை லவ் பண்றது கூட, நித்திப்பா என்னை லவ் செஞ்ச பிறகு, அவங்களுக்கு வந்த லோன்லினஸ் ஃபீல்ல தான் தெரிஞ்சிக்கிட்டதாக நிவேதா சொன்னாங்க. இதைக் கேட்டதும் தாத்தாக்கு செம்ம கோபமா வந்துட்டு. உடனே வீட்டுக்குள்ள நுழைஞ்சு நித்திப்பாவை ரொம்பவே அசிங்கமா அவங்க ஜாதி வச்சிலாம் பேசி திட்டிட்டாங்க. நிவேதா அழுதுட்டே அங்கிருந்து போக, நித்திப்பாக்கும் தாத்தாக்கும் செம்ம சண்டை நடந்துச்சு.

தாத்தா அடுத்த நாளே அவரோட அப்பா அம்மா என்னோட அப்பா அம்மானு எல்லாரையும் வர வச்சி ரொம்பவே பேசிட்டாங்க. அதுல நித்திப்பா எங்கப்பா அம்மாவை எதிர்த்து பேச, வார்த்தை வளர்ந்து போய்ப் பெரிய சண்டையா போன சமயத்துல, இது எனக்கும் என் புருஷனுக்குமுள்ள பிரச்சனை! இதை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் அனுப்பி வச்சிட்டேன்.

ஆனா நித்திப்பா மேல எனக்கு நிறையக் கோபம், நிவேதாவை ஃப்ரண்ட்னு சொல்லி என்னைய ஏமாத்திருக்காரு! நிவேதா இவரை ஒன் சைட்டா லவ் பண்ணதை என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்காரு, இதுல எங்க வீட்டாளுங்க கேட்டதுக்குச் சண்டைக்கு நின்னாருனு அவர் மேலுள்ள க்ரைம் ரேட் கூடிட்டே போகச் சண்டையும் சச்சரவுமாவே இரண்டு மாசம் ஓடி போச்சு. நிவேதாவை வச்சே எங்க இரண்டு பேருக்குள்ள நிறையச் சண்டை வந்துச்சு. நான் அவரை அவகிட்ட பேச கூடாதுனு சொன்னதுக்கு…. “அவளுக்கு மேரேஜ் ஆகிட்டுனா சரியாகிடும். அவ முன்னாடிலாம் இப்படி இல்ல. இப்ப லோன்லியா ஃபீல் செய்றதால அப்படிப் பேசுறா.. நான் செல்லி புரிய வைக்கிறேன்னு” நிவேதாகிட்ட போய்ப் பேசினாங்க நித்திப்பா. நிவேதா சீக்கிரமா மேரேஜ் செஞ்சிக்கிறதா சொன்னாங்க. அவங்களால எங்க ஃலைப்ல ப்ராப்ளம் வர மாதிரி இனி நடந்துக்க மாட்டேன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு நித்திப்பா நிவேதாகிட்ட ரொம்பப் பேசுறதை குறைச்சிக்கிட்டாங்க.

தாத்தா என்னைய நித்திப்பாவை டிவோர்ஸ் செஞ்சிட்டு வர சொன்னாரு. இல்லனா அப்பாவை கம்பெல் பண்ணி சொத்தெல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்திட வச்சிடுவேன்னு என்கிட்ட சொன்னாரு. என்ன நடந்தாலும் நான் நித்திப்பாவை விட்டு பிரிஞ்சிட கூடாதுங்கறதுல முடிவா இருந்தேன். அப்ப தான் என்னோட ப்ரக்னன்சி கர்ஃபர்ம் ஆச்சு. மீண்டுமாய் வாழ்க்கை இன்பமயமாய் மாறிச்சு. பாப்பா பிறக்கும் போது நித்திப்பா என் கூடவே இருக்கனும்னு எனக்கு ரொம்பவே ஆசை. பாப்பாக்கு பேர்லாம் செலக்ட் செஞ்சி அவளை எப்படி வளர்க்கனும்னுலாம் ப்ளான் செஞ்சோம். அப்ப முழுக்க முழுக்க எங்க பேச்சு எல்லாமே எங்க பிறக்க போற எங்க குழந்தைய சுத்தியே தான் இருந்துச்சு.

இரண்டு மாசமான நிலைல அபாஷனாயிடுச்சு. தாத்தா வந்து அபார்ட் ஆனதுக்கு நித்திப்பா தான் காரணம்னு சொல்ல அதுக்கு அவரும் ஒத்துக்கொள்ள, என்னைய தாத்தா சென்னைக்குக் கூட்டிட்டு போய்ட்டாரு.

தாத்தா சொத்தை வச்சி என்னைய டிவோர்ஸ் செய்யச் சொன்னது அப்பாக்கு தெரிய வர, சொத்தை என் பேருக்கு மாத்திட்டாங்க. நான் சென்னைக்கு வந்த ஒன் வீக்ல அப்பா அம்மா நானு கார்ல கோயிலுக்குப் போய்டுருந்தப்ப நடந்த ஆக்சிடெண்ட்ல அப்பா அம்மா இறந்திருக்காங்க.

அந்த ஆக்சிடெண்ட் நடந்து என்னைய ஹாஸ்பிட்டல்ல சேர்த்த நேரம், அப்ப ஏதோ ஆப்ரேஷன் எனக்குச் செஞ்சாங்க. அது முடிஞ்சதும் மைல்ட்டா எனக்கு நினைவு திரும்பிச்சு! அப்ப தாத்தா நித்திலன்கிட்ட, “நீ தான் டா இது எல்லாத்துக்கும் காரணம். உன்னால தான் இந்த ஆக்சிடெண்ட் நடந்துச்சுனு” திட்டிட்டு இருந்தது கேட்டாச்சு. அப்படியே நான் திரும்பவும் மயக்கமாகிட்டேன். அதோட நான் கோமால போய்ட்டேன். முழுச்சி பார்த்தப்ப தாத்தா நான் கோமால இருந்ததாகவும் அப்பா அம்மா இறந்துட்டதாகவும் சொன்னாங்க.

என்னைய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. நான் பெங்களூர் போன பிறகு தான் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு அப்பாவும் அம்மாவும் வீடு மாறினாங்க. நான் அப்பப்ப வீக்கெண்ட்ல வந்து போனதுல அங்க சில பேர்கிட்ட பேசியிருக்கேன். அதனால் தான் கோமால இருந்து விழிச்சதுக்குப் பிறகு எனக்கு அங்கிருந்தது எதுவும் நினைவுல இல்ல. அடுத்து ஆறு மாசம் என்னை ஊடிக்கு கூட்டிட்டுப் போய்த் தங்க வச்சிருந்தாங்க தாத்தா.

டாக்டர் இயற்கையான சூழல்ல நான் இருக்கனும்னு சொன்னதால கூடிட்டு வந்ததா சொன்னாங்க, ஆனா இப்ப தான் புரியுது அவங்க என்னைய நித்திப்பாகிட்ட இருந்து மறைக்க இப்படிக் கூட்டிட்டு வந்திருக்காங்கனு! என்னோட அம்னீசியாவ யூஸ் பண்ணி எனக்கும் நித்திப்பாவுக்கும் நடந்த கல்யாணத்தை மறைச்சி வேறொருத்தருக்கு என்னைய கட்டிக் கொடுக்க நினைச்சிருந்திருக்காங்க தாத்தானு இப்ப புரியது. நாங்க திரும்பச் சென்னைக்கு வந்தப்ப என்னைய ஒரு வாடகை வீட்டுக்கு தான் கூட்டிட்டு போனாங்க. பவானி கம்பெனியில இன்டர்வியூ அடெண்ட் செய்யும் போது தான் அங்க பவானியை பார்த்தேன். அதுக்குப் பிறகு தான் நான் என்னோட கவலைகள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வர ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அடுத்த ஆறேழு மாசத்துல தாத்தா உடம்பு சரியில்லமா இருந்துட்டாங்க! அதுக்குப் பிறகு திரும்பவும் பழைய நிலைக்குப் போய்ட்டேன். பவானி தான் அவ கூட என்னைய தங்க வச்சிக்கிட்டு என்னைய கவனிச்சிக்கிட்டா”

நிவாசினி இதனைக் கூறும் போது அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப அவளது முகம் காட்டிய உணர்வுகளைப் பார்த்துப் பிரமித்துத் திகைத்து போய் அமர்ந்திருந்தாள் பவானி.

“என்னடி இது! நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்ன்ற மாதிரி புருஷனையே மறந்துட்டு இருந்திருக்க நீ” என ஆச்சரிய பாவனையில் கண்களை விரித்து முகத்தில் வியப்பை தேக்கி அவள் கேட்க, வாய் விட்டு சிரித்தார் கிருஷ்ணன்.

“ஆமா எப்படிமா உனக்குப் பழசுலாம் ஞாபகம் வந்துச்சு” என டாக்டர் கிருஷ்ணன் கேட்க,

“அன்னிக்கு உங்களைப் பார்த்துட்டு போன பிறகு முருகன் கோயிலுக்குப் போய்ட்டு வீட்டுக்கு போன பிறகு அங்க படிக்கட்டு ஏறும் போது மயக்கம் வந்து படியில உருண்டு விழுந்துட்டேன்” என நிவாசினி கூற,

“ஆமா டாக்டர்! நான் ரொம்பவே பயந்துட்டேன். நானும் என் ஹஸ்பண்டும் சேர்ந்து இவளை ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் செஞ்சிட்டு இவ ஹஸ்பண்ட்க்கு இன்பார்ம் பண்ணி காத்திருந்தோம். இரண்டு நாள் மயக்கத்துல தான் இருந்தா! முழிச்சதும் பாப்பாக்கு என்னாச்சுனு தான் கேட்டா.. பாப்பா சேஃப்னு தெரிஞ்ச பிறகு தான் நிம்மதியானா… நித்திலன் அண்ணா இவளை தனியா விடவே மாட்டேன்னு ஒரே அடம். இவ அவர் கூடப் போக மாட்டேன்னு அடம். அதான் உங்க கிட்ட ட்ரீட்மெண்ட் முடிச்சிட்டு என்ன தான் இவளுக்குப் பிரச்சனைனு தெரிச்சிக்கலாம்னு நினைச்சு இவளை கூட்டிட்டு வந்தா… இவளுக்குப் பழசுலாம் ஞாபகம் வந்திருக்கு ஆனா என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கா.. ” எனக் கூறி பவானி நிவாசினியை முறைத்தாள்.

நிவாசினி சோகமாய் அமர்ந்திருந்தாள். மீண்டுமாய்க் கவலை சோகமென மனமெங்கும் வலி பரவியிருந்தது. வயிற்றிலிருந்த பிள்ளைகாக வாழுவதாய்த் தன்னைத் தானே தேற்றி கொண்டிருந்தாள்.

“ஏன்மா உன் புருஷன் கூடப் போக மாட்டேன்னு சொல்ற” எனக் கிருஷ்ணன் கேட்க,

“என்ன தான் இருந்தாலும், ஒரு உயிரை கொல்ற அளவுக்குத் துணிச்சிருக்காரே? எனக்காகத் தான் கண்டிப்பா இதைச் செஞ்சிருப்பாருனு புரியுது டாக்டர். ஆனா அது பாவம் இல்லையா! எனக்கு இன்னும் அவர் அப்படிச் செஞ்சதுக்கான காரணம் தெரியாது. ஆனா என் அப்பா அம்மா ஆக்சிடெண்டுக்கு அவர் காரணமா இருப்பாருனு தெரிஞ்சப்ப கூட வராத கோபம், இப்ப என் கருவை கலைச்சிருக்காருனு தெரியுற டைம்ல ரொம்பவே வருது. ரொம்பவே மனசு பாரமா இருக்கு டாக்டர்” அவள் கூறவும்,

“ஆமா டாக்டர்! அவ நித்திலன் அண்ணா கூட ஒன்னும் வாழ வேண்டாம். இப்படித் தனியாவே இருக்கட்டும். சரியான கொலைகாரன் அந்த அண்ணன். அப்படி ஒரு கொலைகாரன் கூட நீ வாழலாமா?” எனப் பவானி பொரிந்து தள்ள,

“அவர் ஒன்னும் கொலைகாரன் இல்ல பவி! நீ அவரை அப்படிச் சொல்லாதே! கண்டிப்பா எதுவும் காரணமில்லாம அவர் அப்படிச் செஞ்சிருக்க மாட்டாரு” எனக் கண்களைத் துடைத்தவாறே அவள் கூற,

அவளின் இருதலை கொள்ளி நிலைமையைப் பார்த்து ஆதுரமாய் அணைத்து கொண்டாள் பவானி.

“ஏன் அண்ணா அப்படிச் செஞ்சாங்கனு எனக்குத் தெரியும். டாக்டருக்கும் தெரியும்! நாங்க சொல்றதை விட, நீ இதை டாக்டர் மூலமா தெரிஞ்சிக்கிறது தான் சரியா இருக்கும்னு தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். நீ இப்ப இரண்டு நாள் மயக்கத்துல இருக்கும் போது தான் அண்ணா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க” என்றாள் பவானி.

— தொடரும்