என்மேல் விழுந்த மழைத்துளியே!

அத்தியாயம்-17

என் வீட்டு மலர்கள்

எனக்குப் பிடிப்பதில்லை..

அவற்றில் எல்லாம் உன்

கை தீண்டியது இல்லை.

     -வருண்.

‘ரோஜா.. இது எப்படி என்னோட பேக்கில்.. நான்.. ‘ அதை நன்றாக உற்று நோக்கினாள். நினைவடுக்கில் ஏதோ பூவைப் பறிப்பது போன்று தோன்றியது.

‘இது வருண் வீட்டில்… இருக்கற பூவாச்சே..’ என பிருத்விகா யோசித்துக் கொண்டிருக்கும் போது தீடிரென்று வகுப்பின் விளக்கு அணைக்கப்பட்டது. உடனே பூவை மீண்டும் பேக்கில் வைத்து மூடியவள் எதிரில் உள்ள புரோஜக்டரின் நீல நிற ஒளியின் மீது கவனத்தைப் பதித்தாள்.

மதிய இடைவேளை. கேண்டீனில் கிருஷ்ஷூடன் அமர்ந்திருந்தாள் பிருத்விகா. இரு கைகளின் ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் கொண்டு தலையை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன பிருத்வி? இன்னும் தலை வலிக்குதா?”

“இல்லைடா.. நேத்து ஏதோ நடந்திருக்கு. எனக்கு நினைவுக்கு வர மாட்டிங்குது.”

“என்ன நடந்திருக்கு?”

“இங்க பாரு.. இந்த ரோஸ் வருண் வீட்டுத் தோட்டத்தில் இருக்கறது. இது எப்படி என்னோட பேக்குள்ள வந்துச்சுனு தெரியலை.. ஆனால் நான்…”

“இந்த மாதிரி ஒரு ரோஸ் மட்டும் தான் இருக்கா என்ன?”

“ஆமா…. இந்த வெரைட்டி வருண் வீட்டில் மட்டும்தான் இருக்கு. அது மட்டுமில்லை.. இந்த ரோஸ் கார்டனில் யாரும் பூப் பறிக்க முடியாது. அதான் குழப்பமா இருக்கு.”

“இதுக்கு ஒரு வழிதான் இருக்கு. நாம இரண்டு பேரும் கார்டனுக்கு யாருக்கும் தெரியாமல் போய் செக் பன்னி பார்த்திரலாம்.”

“ஆமா.. இது கூட நல்ல ஐடியாதான்.” நிஜமாகவே தான் கூறியதை செய்யலாம் என்று நினைக்கும் தன் தோழியைப் பார்த்து கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தான்  கிருஷ்.

“ஹே.. ரோஸ் கார்டனாம். லூசு..”

“இல்லைடா.. நேத்து என்னவோ ரோஸ் கார்டனில் நடந்திருக்கு. அதில் வருணைத் தவிர யாருமே என்ட்ரி கூட ஆக முடியாது. அங்க இருக்கற ஒவ்வொரு ரோஜாவும் வருணே அவன் கையால் வச்சது. வருணோட ஸ்டிரஸ் பஸ்டர்ஸில் ஒன்னு அந்த ரோஸ் கார்டன். அதுன்னா வருணுக்கு ரொம்ப இஷ்டம். அவங்க மம்மியைக் கூட விட மாட்டான். அந்த கார்டனில் இருந்து ஒருத்தருக்கு மட்டும் தான் இது வரைக்கும் பூ பறிச்சு கொடுத்திருக்கான். அது எங்கம்மா மட்டும்தான்.”

“அப்படியா?”

“அந்த முரட்டு பாய்க்கு இப்படி ஒரு செண்டிமெண்டா!”

“ம்ம்ம்…” என தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பிருத்விகா.

கிருஷ் அவனுடைய பேக்கிலிருந்த தொப்பியை எடுத்துப் போட்டுக் கொண்டவன், “மிஷன் ரோஸ். பை டிடெக்டிவ் கிருஷ்.” என்று திரைப்பட வசனம் போல் கூறினான்.

பிருத்விகாவிற்கு அவன் கூறியதில் சிரிப்பு வந்துவிட, “போடா… விளையாடிட்டு..” என்றாள்.

“இல்லை பிருத்வி. இன்னிக்கு நைட் பத்து மணிக்கு நாம ரோஸ் கார்டன் போறோம். ஒத்த ரோசா மிஸ் ஆகுதானு செக் பன்றோம். உன் சந்தேகத்தை தீர்க்கறோம்.”

“ஓகே.. பார்க்கலாம்.”

இரவு பத்து மணி. வருண் ரூமில் உள்ள விளக்கு அணைக்கப்பட்டது. உடனே தன் கைப்பேசி வெளிச்சத்தின் மூலம் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள் வீட்டின் கதவைச் சாத்தினாள். மெல்ல நடக்க ஆரம்பித்தாள். பைஜாமா மற்றும் டீசர்ட்டின் மேல் ஒரு ஹூடியை அணிந்திருந்தாள். அவள் கேட்டுக்கு வெளியே டிராக், ஹூடியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்.

“ஹாய்… வா.. போலாம்.”

“ஆமா.. காம்பவுண்ட் சுவரை எப்படித் தாண்டப் போறோம்.”

“உன்னைக் குனிய வச்சு.. நான் மேலேறி குதிக்கப் போறேன். நீ ஜம்ப் பன்னி பின்னாடி வா. லூசு.. வாட்ச்மேன் அங்கிள் நான் தேவகி அம்மாளைப் பார்க்கப் போறேனா விட்ருவார். நீயும் என்கூட வந்திரலாம். வருணுக்கும் விஷயம் போகாது. நாம செக் பன்னிட்டு வந்திரலாம்.”

அவ்வளவுதான் என்பது போல் கைகளை விரித்துக் காட்டினாள் பிருத்விகா.

“அதை நீயே செய்யலாம் இல்லை.. நான் எதுக்குத் தேவை இல்லாம..” என்றான் கிருஷ்.

“ஒரு எண்டர்டெயின்மெண்ட்டுக்கு.. அது மட்டுமில்லாமல் வருண்கிட்ட மாட்டுனா.. நீ இருக்க இல்லை.. சோ..”

“பலிகடாவா என்னைக் கூட்டிட்டுப் போற..”

“ஆமா.. உன்னை பெஸ்ட் பிரண்டா வச்சுருக்கறது எதுக்கு?”

“அடிப்பாவி..” என்று பாவம் போன்று முகத்தை வைத்தவன் புன் சிரிப்புடன் அவளுடன் நடக்க ஆரம்பித்தாள். அவள் கூறியபடி உள்ளே நுழைந்து விட்டனர் இருவரும்.

“அங்க பாரு. அந்த லாஸ்ட்.. வருணோட பால்கனியில் இருந்து டேரக்ட் வியூ.. அந்த ரோஸ் கார்டன். நாம ரொம்ப கவனமாக இருக்கனும். வருண் ரொம்ப ஷார்ப்.” என்று முனு முனுத்தாள்.

“ஒத்தை ரோசாவுக்கு இத்தனை அக்கப் போரா..” என முனு முனுத்தான் கிருஷ்.

அவனைப் பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் மறைந்து நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியின்றி கிருஷ்ஷூம் அவளைப் போல் நடந்தான்.

இருவரும் ரோஜா தோட்டத்தின் அருகில் வந்துவிட்டனர். வருணின் ரோஸ்கார்டன் மட்டும் பத்து செண்டுகளில் இருக்கும். தனித்தனியாக தொட்டிகளில் வரிசையாக ரோஜா மலர்கள் மலர்ந்திருந்தன.

“இவ்வளவு ரோஸசா?..”

“ம்ம்ம்.. நீ அந்தப் பக்கம் பாரு. நான் இந்தப் பக்கம் பார்க்கறேன். இதில் இருந்து ஒரு பூ மிஸ் ஆனாலும் அது வருணுக்கு சுத்தமா பிடிக்காது. பார்த்து..” என அமைதியாக நடக்க ஆரம்பித்தாள். அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைக்கும் பழக்கும் உள்ள வருண் ரோஜாக்களை மட்டும் பல வண்ணங்களை கலந்து வைத்திருந்தான்.

பல மொட்டுகளுடன், விரிந்தும் காணப்பட்ட ரோஜாச் செடிகளை தோட்டத்து விளக்கொளியில் பார்க்க ஆரம்பித்தனர் இருவரும். பத்து செண்ட் இடம. பொறுமையாகத் தேட வேண்டும். அவள் கையில் இருந்த சிவப்பு நிற ரோஜாச் செடி வந்தது. ஆனால் அதை உற்றுப் பார்த்ததில் அதில் எந்த மலர்களும் இல்லை. இதோடு அதே நிறத்தில் மூன்றாவது செடி வந்துவிட்டது. விடாமல் தொட்டி இருக்கும் இடைவெளியில் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தாள் பிருத்விகா.

“என்ன கண்டுபிடிச்சியா?” மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. செடியைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்த பிருத்விகா.

“ம்ம்.. இன்னும் இல்லை..” என கிசு கிசுப்பாகக் கூறினாள்.

“அப்படி என்ன தேடறீங்க்?”

“டேய்.. என்ன தேடற..னு..” என நிமிர்ந்தவள் எதிரே இருந்தவனைப் பார்த்து விழிகளை விரித்தாள். விழிகளுடன் ஆவென்று இதழ்களும் அழகாகப் பிரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் வசமாக மாட்டிக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் பின்னால் நகர தொட்டி இடித்து அப்படியே பின்னால் விழப் போனவளை தன் கைகளால் பிடித்து நிறுத்தி இருந்தான் வருண்.

அவன் பிடித்த போது மீண்டும் ஏதோ நினைவு பிருத்விகாவின் மூளையில் மின்னல் போல் தாக்கியது. வருண் இப்படி அவளைப் பிடித்திருப்பது போன்ற பிம்பம் அது.

“கேர்புல்.. பேபி..” கோபத்தை அடக்கிய குரலில் கூறினான். கிருஷ்ஷைப் பார்த்ததும் அவளை விடுவித்தான்.

“ஓ காட்..” என்றபடியே அவள் பின்னால் வந்து நின்றான் கிருஷ். அவனைப் பார்த்து அலட்சியப் பார்வை ஒன்றை வீசினான் வருண்.

“அவளுக்குத்தான் சென்ஸ் இல்லைனா.. உனக்கு எங்க போச்சு கிருஷ். சம் ஒன்ஸ் ஹவுஸ்.. நைட் டைம்.”

“அவனைத் திட்டாத.. என்னோட ஸ்டட் மிஸ் ஆகிடுச்சு. அதான் தேடிட்டு இங்க வந்துட்டோம்..” என லேசாக குரலில் தயக்கத்துடன் பதில் கூறினாள்.

“ஸ்ட்டா?”

“ஆமா.. ஸ்ட் அந்த இன்பினிட்டி லவ் டிசைன். அதுல ஒன்னு மிஸ்ஸிங்க். நாங்க செக்யூரிட்டிட்ட சொல்லிட்டுதான் வந்தோம்..”

“ஒகே..” வருண் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வது போன்று தோன்றினாலும் ஒரு சந்தேகப் பார்வையுடன் பார்த்தான்.

“மார்னிங்க் தேடலாம். இப்ப போய் தூங்குங்க.” கிருஷ் முன்னே நடக்க ஆரம்பிக்க பிருத்விகாவும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ரீதியில் திரும்பினாள்.

ஆனால் திரும்பியவளின் இடது கையைப் பிடித்த வருண் அவள் கழுத்து வளைவில், “இப்ப எல்லாம் கொஞ்சம் பொய் சொல்லக் கத்துகிட்ட போல.. அவ்வளவு கஷ்டப்பட்டு நீ ரீகலக்ட் பன்ன வேணாம். நானே தேடறேன். லெட் இட் பி.” என முனு முனுத்து விட்டு தன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான்.

தன் முன்னால் நடக்கும் கிருஷ்ஷூடன் வேகமாகச் சேர்ந்து கொண்டாள் பிருத்விகா.

“மிஷன் ஒத்த ரோசா.. பெயிலியர்..” எனக் கேலியாகப் தன் தோழியைப் பார்த்தான்.

“நாளைக்குத் தேடுவோம்டா.. இப்ப மிஷன் பாஸ் மோடில் இருக்கு.” என அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள் பிருத்விகா.

“எப்படி பிருத்வி அழகாகப் பொய் சொன்ன?”

“நீ வேற ஏண்டா… இப்படி மாட்டிகிட்டா இப்படி சொல்லனும் ஒரு நூறு டைம் மைண்ட்டில் பிக்ஸ் பன்னிட்டேன். அதான் தைரியமா பொய் சொல்ல முடிஞ்சுது. அப்பவும் அவனுக்கு சந்தேகம். இருந்தாலும் நீ இருக்கறதால் சும்மா விட்டுட்டான்.”  

“அதெப்படி அவன் செம ஷார்ப்னு சொன்ன..”

“அதுவா.. அவன் சைல்ட்குட்டில் இருந்து அப்படித்தான்.  ஒரு சின்ன சேஞ்ச் இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவான்.”

“ரொம்ப கஷ்டம் தான் பிருத்வி. நீங்க இரண்டு பேரும் தான் அதிகம் பேசிக்க மாட்டீங்க. அப்புறம் எப்படி வருண் பத்தி உனக்கு எல்லாம் தெரியுது?”

“அது அப்படித்தான். வருணை எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். வருண் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். வருண் எங்க வீட்டில் இருப்பான். நான் அவங்க வீட்டில் இருப்பேன். இப்படித்தான்.. ஆனால் காலேஜ் வந்ததுக்குப் அப்புறம் அங்க போறது இல்லை. ஆண்டி ஹெல்த் ரீசனுக்காக மேட்டுப் பாளையத்துக்குகிட்ட இருக்கற எஸ்டேட்டுக்கு போயிட்டாங்க. அப்புறம் நான் அங்க போறதை விட்டுட்டேன். வருணுக்கும் எனக்கும் எப்போதும் பைட். சோ நான் போறதாவே இல்லை. என்னோட அம்மா இறந்து போறதுக்கு முன்னாடி என்னை நல்லாப் பார்த்துக்கனும் சொல்லி வருண்கிட்ட பிராமிஸ் வாங்கி இருக்காங்க. அதனால் வருண் எவ்வளவு என்கூட சண்டை போட்டாலும் அவன் அந்த பிராமிஸைக் காப்பாத்துவான். அவனுக்கு நான் எந்த விதத்திலும் முக்கியம் கிடையாது. ஆனால் அந்த பிராமிஸ் அவனை பவுண்ட் பன்னிருக்கு அவ்வளவுதான்.”

‘எனக்கு அப்படி ஒன்னும் தெரியலை.’ என மனதில் நினைத்த கிருஷ் அவளிடம் கூறவில்லை.

“சரி. வொய் டூ யூ ஹேட் ஹிம் சோ மச்?”

“ஐ ஹேட்..யூ.. சோ.. மச்..” கிருஷ் கூறியதைக் கேட்டதும் தீடிரென்று பிருத்விகா தன் தலையைப் பிடித்தாள்.

“என்னாச்சு பிருத்விகா?” கிருஷ்ஷின் குரல் கவலையுடன் ஒலித்தது.

“இல்லை.. வருண்கிட்ட இதே மாதிரி சொல்லி இருக்கேன். இது டீரிமா?.. இல்லை பாஸ்ட்டில் நடந்ததானு தெரியலை. சடன் பிளாஸ்பேக் மாதிரி வருது.”

“இட்ஸ் ஆல் ரைட். ஒத்த ரோசா மிசனை முடிச்சோம்னா நமக்கு தெளிவா ஒரு முடிவு கிடைக்கும்.” பேசிக் கொண்டே வீடு வரை வந்து விட்டனர்.

“சேரிடா.. பார்த்துப் போ.. நாளைக்கு லேப் வேற இருக்கு.”

“ஓகே.. குட் நைட்.”

கிருஷ் விடை பெற்று சென்றான். அவன் செல்லும் வழியைப் பார்த்துக் கொண்டு தன் வீட்டினுள் நுழைந்தாள்.

நுழைந்ததும் ஹாலின் விளக்கை உயிர்ப்பித்தாள்.

சோபாவின் அருகில் இருந்த டீபாயின் மீது அவள் கண்கள் சென்றது. அவள் விரித்து வைத்துச் சென்றிருந்தாள். ஆனால் அது இப்போது மூடி வைக்கப்பட்டிருந்தது. நடுவில் இருக்கும் பூச்சாடி சிறிது நகர்ந்திருந்தது. இதைப் பார்த்தவுடன் பிருத்விகாவின் கண்கள் சந்தேகத்துடன் விரிந்தது.

உடனே வீட்டுக் கதவைத் திறந்தவள் அதை மூடாமல் விட்டுவிட்டு தன் எதிர்வீட்டுக் கதவை நோக்கி ஓட ஆரம்பித்தாள் பிருத்விகா.

மழை கொட்டும்…