அவள் செவ்வரளி

செவ்வரளி -9

” அம்மாடி எப்புடிடா இருக்க ” என்று கேட்ட தந்தைக்கு ” நிம்மதியா இருக்கேப்பா ” என்றாள் மகள்…

இது என்ன பதிலென்று பார்த்தான் நாதன் மனைவியை…

கோபாலுக்கு புரிந்தது போல, அதனால் அமைதியாக இருந்தார்…

” தமிழு போலீஸ் கேஸ் கொடுக்க போறேன்னு சொல்லிட்டு திரியுறானாம் ஊருக்குள்ள ” என்றார் கோபால்..

வாசுகியின் முகத்தை தான் இப்போது பார்த்தான் நாதன் பயந்துவிடுவளோ என்று, ஆனால் அப்படியெல்லாம் இல்லை அவள்…

” கொடுக்கட்டும் விடுங்கப்பா, கொடுத்து என்ன செய்துடுவாரு, அப்படி கொடுத்தாலும் அத்தான் பார்த்துப்பாங்க ” என்றுவிட்டு கணவனை பார்த்தாள்…

மனைவி இப்படி சொல்லுகையில் உலகமே வந்தாலும் சமாளித்துவிடலாம் என்று தானே தோன்றும், அப்படித்தான் நாதனுக்கும் இருந்தது.

அதனால் அவனுமே ” விடுங்க மாமா அவன் கேஸ் எல்லாம் கொடுக்க மாட்டான், சும்மா மிரட்டி பாக்குறான் ” என்றான்…

” மாமா ஏற்கனவே எழுதி வாங்கின பத்திரம் எங்க இருக்கு, நான் வந்து அதை வாங்கிட்டு வரேன் ” என்ற மருமகனிடம், ” நானே எடுத்து வந்திருக்கேய்யா ” என்று ஒரு பையை கொடுத்தார்…

அந்த பையை வாங்கியவன் அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு ” இந்தா பொன்னு ” என்று மனைவியிடம் நீட்டினான்…

இவர் பிரித்து பார்க்காமல் ஏன் என்னிடம் கொடுக்கிறார் என்று நினைத்தப்படியே கையில் வாங்கியவள், பிரித்து பார்த்துவிட்டு தந்தையை பார்த்தாள்…

கோபாலோ சாதாரணமாக அமர்ந்திருந்தார் ” ப்பா என்னப்பா இது, எதுக்கு இதெல்லாம் ” என்றாள் தந்தையிடம்…

” உனக்கு அப்பா ஒன்னுமே நல்லது செயலையே கண்ணு, இதுல உனக்கும் பேரனுக்கும் கொஞ்சம் நகை இருக்கு, இருக்கட்டும் ” என்றார்…

” அம்மா ஒன்னும் சொல்லலயாப்பா ” என்று கேட்ட மகளிடம் ” உன் வாயால அவளை இன்னொரு தரம் அம்மானு சொல்லாத கண்ணு ” என்றுவிட்டு வெளிப்படையாகவே கண்கள் கலங்கினார் மனிதன்…

வயலில் இம்முறை நல்ல விளைச்சல், எப்போதும் என்ன லாபம் கிடைத்தாலும் அது காந்திமதி கைக்கு தான் செல்லும்..

இம்முறை பணத்தை வாங்கியதும், நகைகடைக்கு சென்று நகையை வாங்கி கொண்டு தான் வீட்டுக்கு சென்றார் மனிதர்….

நகை பையை கண்டு காந்திமதிக்கு ஏக மகிழ்ச்சியென்று தான் சொல்லவேண்டும்…

கணவனிடம் நகைக்காக கையை நீட்ட, அவரை தாண்டி உள்ளுக்குள் சென்றார் மனிதர்..

வருடம் ஆகியும் காந்திமதியுடன் பேச்சு வார்த்தை இல்லை அவருக்கு…

இப்போது காந்திமதிக்கு கோபம் வர கத்த தொடங்கினார் ” பேரனுக்கு வாங்கியாந்ததா என்கிட்ட காட்ட கூடாதோ ” என்றார்…

” பேரனுக்கு தான் ஆனால் அது உன் பேரனுக்கு இல்லை, என் பேரனுக்கு ” என்றார் எதையோ தேடியபடி…

” இப்போ நீங்க என்ன சொல்றிங்க ” என்று கேட்டு புடவையை தூக்கி சொருகி கொண்டு அவரிடம் வந்தார் காந்திமதி..

” ஏன் சொன்னது விளங்களையா ” என்றுவிட்டு வேலையை தொடர்ந்தார்..

வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறந்து முதல் பிறந்தநாளே வர போகிறது, அந்த குழந்தைக்கு கோபால் ஒன்றுமே செய்யவில்லை…

ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது அவருக்கு, துரை பாண்டியனும், காந்திமதியும், அத்துணை செய்துவிட்டார்கள் குழந்தைக்கு..

ஊருலிருந்து வந்த மகன் அக்காவை சென்று பார்க்க கூட இல்லை, அதிலே அவருக்கு புரிந்துவிட்டது, எந்த அளவுக்கு இவர்கள் எல்லாம் தன் மகளை நடத்திருப்பார்கள் என்று…

ஆம் மனிதன் விடியலில் வயலுக்கு சென்றாள், இரவு உறக்கத்துக்கு தான் வருவார், அதானல் வீட்டின் நிலவரகங்கள் தெரியாமலே போயிற்று…

” மகளுக்கு பிள்ளை பொறந்து வருஷம் போச்சு, இன்னும் ஒரு அரைஞன் கையூறு வாங்கி அவனுக்கு போடலை ” என்றார் முகத்தை வெட்டிக்கொண்டு…

” அதான் நீயும் உன் புள்ளையும் கொண்ட கொட்டிட்டு வந்திங்களே, அப்பறம் என்ன நான் வேற தனியா போடுறது ” என்றவர் தேடியது கிடைக்கவும், அதையும் ஒரு பையில் வைத்து கொண்டு கிளம்பினார்…

” நான் இங்க கத்திகிட்டு இருக்கேன், நீங்க உங்கப்பாட்டுக்கும் போனா என்ன அர்த்தம் ” என்றார் கோபமாக தலையை முடிந்து கொண்டு….

” நீ கத்துறதையெல்லாம் காதில நான் வாங்குறதில்லைனு அர்த்தம் ” என்றுவிட்டு சென்றார் ..

” ஒன்னுக்கு ரெண்டு புருஷன் கட்டினவளுக்கு, இத்துணை செய்ய தோணுதோ ” என்றவர் திரும்பி வந்து கோபால் விட்ட அறையில் தலை கிறுகிருக்க நின்றார்…

” என் மகளை பத்தி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை இனி நீ பேசின, கொண்ட வடக்கி வாரில வச்சு எரிச்சிப்புடுவேன் ” என்றுவிட்டு எக்ஸ்எல் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்…

அதன் பின் மகனுக்கும், மகளுக்கும் போன் போட்டு இவர் ஒப்பாரி வைத்த கதையெல்லாம் தனி…

” இப்போ எதுக்கு மாமா நகையெல்லாம் ” என்றான் நாதன்..

” இருக்கட்டும்யா என்ற மவளுக்கு ஒன்னுமே நான் செய்யலை, சாகுறதுக்குள்ள எதுனாலும் செய்யணும் ஆசை, உசுரு எப்போ போகும்னு தெரியாது, அதான் கைல காசு இருக்கும் போதே செஞ்சுட்டேன் ” என்றார்…

இதற்கு மேல் அந்த மனிதனிடம் ஒன்றும் சொல்லவில்லை நாதன்…

” பொன்னு அதை கொண்ட பீரோல வை ” என்றான் மனைவியிடம்..

ஒன்றும் சொல்லாமல் பையை எடுத்து கொண்டு அறைக்கு சென்றவள், அந்த பத்திரத்தை எடுத்து பார்த்தாள்..

அன்று நடந்தது நினைவு வந்தது…

இரு தரப்பிலும் இன்னும் ஒருமுறை கூட பேசினார்கள், கோபால் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை…

அதன் பின் பத்திரம் படிக்கப்பட்டது, கோபால் லேட். வாசுந்திர மகளான வாசுகிக்கும், பரிஜாதம், சிவராஜ் மகனான தமிழுக்கும், நடந்த திருமணம் இன்றோடு முறித்துக்கொள்ள படுகிறது, இனிமேல் ஒருவருக்கொருவர், பேசவோ பார்க்கவோ, அவர்களிடம் வீண் வம்புக்கோ செல்ல கூடாது, இருவரும் விரும்பினால் வேறு திருமணம் செய்து கொள்ளலாம், அதற்கு இருவரும் எதிர்ப்பு தர முடியாது, என்று இன்னும் சில வார்த்தைகள் நீண்டு முடிந்து, இருவரையும் கையெழுத்திட அழைத்தார்கள்…

முதலில் வாசிகி வந்து கையெழுத்திட, தமிழ் வாசுகியின் முகத்தை முகத்தை பார்த்தான்…

வாசுகிக்கு தமிழ் நல்ல கணவன் இல்லைதான், ஆனால் வாசுகி அவனுக்கு இத்துணை வருடம் நல்ல மனைவியாக தான் இருந்தாள்…

அவளை இழப்பது என்பது தமிழுக்கு மிக பெரிய இழப்பு தான்..

அன்றே தாலியை அவனிடம் கொடுத்திருக்க, இப்போது வீட்டிலிருந்த சில மெட்டியும் அவன் வாங்கி கொடுத்திருந்த ஒரு சையினையும் அந்த பத்திரம் மேல் வைத்தாள்…

” வாசுகி நில்லும்மா ” என்று ஒருவர் குரல் கொடுத்து, ” தமிழு கைய நீட்டு, அவன் கைலே கொடுத்திடும்மா ” என்றார்…..

கொடுக்கும் போது வாசகிக்கு கொஞ்சம் நடுக்கம் தான் ஆனாலும் கொடுத்துவிட்டாள்…

அதன் பின் தமிழ் கையெழுத்திட்டு, சிலர் சாட்சி கையெழுத்தும் போட்டு, அவர்களின் மண வாழ்க்கை முறிக்கப்படிருந்தது…

உள்ளே சென்ற மனைவி வெளியில் வராமலே இருக்கவும், மாமனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற நாதன் கண்டது பத்திரத்தை கையில் வைத்து வெறித்து கொண்டிருந்த மனைவியை தான்..

இதை அவளிடம் கொடுத்திருக்க கூடாது என்பது இப்போது தான் அவனுக்கு புரிந்தது…

அவள் கையிலிருந்து வாங்கியதை கூட உணராமல் நின்றாள் பெண்…

அதை மெத்தைக்கு கீழ் வைத்தான், அப்புறம் பீரோவில் வைக்கலாமென்று..

பின் மனைவியின் தோளை தொட்டான், உணர்வு வந்தது போல் அவனை திரும்பி பார்த்தாள்…

” எதுவும் யோசிக்காத பொன்னு ” என்றவன் தோளில் அவனுக்கு பாரமில்லாமல் சாய்ந்தாள் பெண்…

முதுகில் கைகொடுத்து சேர்த்து கொண்டான் கணவன் இதமாக..

” ஏன் அத்தான், நீங்களே என்னை அப்போ கல்யாணம் பண்ணிருக்கலாம்ல, இப்போ என்னால உங்க கூட சாதாரணமா வாழவே முடியலையே ” என்றாள்…

அவனுக்கு பாரமில்லாமல் சாய்ந்தவள், அவள் அறியாமலே அவன் நெஞ்சில் ஆயிரம் டன் பாரத்தை கடத்தியிருந்தாள், ஒற்றை வார்த்தையில்..

மனைவியை இன்னும் இருக்கினான், அவனது இறுக்கம் கூடவும், அவனுக்கு வலிக்குமே என்று விலக நினைத்த மனைவியை, ” எனக்கு வலிக்களை, அமைதியா நில்லு பொன்னு ” என்றான்…

என்னவோ அவளை இதற்கு முன் விட்டது போல் இப்போது விட்டுவிட கூடாதேன்று தோன்றியது…

எத்துணை ரணமான வார்த்தை இது, இவள் அவனோடு வாழ்ந்த வாழ்க்கை தான் என்ன?

இத்துணை ஆழமான காயங்கள் கொடுக்கும் அளவு ஒருவனால் நடந்திருக்க முடியுமா?

நீயே என்னை திருமணம் செய்திருக்கலாமே என்று கேட்டால், அப்போ எத்துணை எத்துணை கொடுமை இவள் அனுபவித்திருக்க கூடும்..

நெஞ்சம் பதறியது, அப்டியே அணைத்து நின்றான் சிறு நிமிடம்…

வாசுகித்தான் விலகினாள் ” அப்பா இருக்காங்க அத்தான், வாங்க போலாம் ” என்றுவிட்டு முன்னே நடந்தாள்…

நாதன் அந்த பத்திரத்தை ஒருமுறை படித்துவிட்டு, அதை பத்திரப்படுத்திவிட்டு தான் வெளியில் வந்தான்…

கோபால் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டார், “தங்கிட்டு போங்களே மாமா” என்றான் அவரிடம்…

” இல்லையா இருக்கட்டும், ஆடு மாடு கிடக்கு, நான் போய் தான் பார்க்கணும் ” என்றுவிட்டு சென்றார்…

மாறன் இப்போது ஒன்றாம் வகுப்பில் இருக்கிறான், வாசுகிக்கு செமஸ்டர் லீவ் என்பதால் வீட்டில் இருக்கிறாள்…

” பொன்னு நான் கிளம்பட்டுமா ” என்றான் மனைவியிடம், என்னவோ அவள் பக்கத்தில் இருக்க தோன்றியது…

எப்போதும் போய்ட்டு வருவேன் என்பவன், இன்று இப்படி கேட்கவும் அவனை பார்த்தாள்…

அவள் உள்ளே அவனிடம் கேட்டதை மறந்துவிட்டாள், அதனால் அவளுக்கு தெரியவில்லை ஏன் இப்படி கேட்கிறான் என்று..

இப்போது அவளுக்கும் அத்தானின் எண்ணம் வந்துவிட்டது போல, அதனால் ” உங்களுக்கு வேலை இல்லைனா நாம போய், மாறனை கூப்பிட்டு வரலாமா ” என்றாள்…

அவள் கணவனுக்கு ஏக மகிழ்ச்சி இதில், இப்போது நாதன் ஸ்டிக் உதவி இல்லாமல் நடக்க பழகியிருந்தான்…

அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவன் மனைவி தான் ” நடக்க முடியும்னு நம்புங்க, அதில நீங்க பேலன்ஸ் பண்றது கூட இல்லை,, சும்மாதான் புடுச்சுருக்கீங்க ” என்று ஓவ்வொரு நாளும் அவனிடம் பேசி பேசி, அந்த ஸ்டிகை தூர போட்டுவிட்டாள்…

முதலில் பயந்தவனும், இப்போது நன்றாக அந்த உதவி இல்லாமல் நன்றாவகவே நடக்க பழகிவிட்டான்…

இப்போது ஸ்கூட்டியும் வாங்கிவிட்டான், மனைவியும் ஓட்டி பழகி கொண்டாள், இப்போது அவர்கள் வெளியில் சென்றாள், அவள் தான் ஓட்டுவாள், மகனுக்கு குஷியாகி போகும்…

ஆனால் இன்று நாதனுக்கு குஷியாகி போனது, உடனே கிளம்பிவிட்டான், ” வா பொன்னு போலாம் ” என்றவனை முறைத்தாள்…

” என்னடி ” என்றான் அவள் முறைக்கவும் ” மணி மூணு தான் ஆகுது, தம்பிக்கு நாலு மணிக்கு தான் முடியும் ” என்றாள்..

” ஆமால ” என்றவன் மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்…

இங்கிருந்து பள்ளி நடந்து சென்றாலே பத்து நிமிடம் தான், வண்டியில் சென்றால் அதற்கும் குறைவு தானே..

” பொன்னு உனக்கு எதுவும் வேணுமா, நான் ஒன்னுமே வாங்கி கொடுக்கலை உனக்கு ” என்றான் அவள் கையை பிடித்து கொண்டு…

கணவனை பார்த்தவள் மெல்லிதாய் புன்னகைதாள் ” வாங்கி தான் கொடுக்கணும்னு இல்லையெங்க, எனக்கு நிம்மதிய கொடுக்குறீங்க, இப்போதைக்கு எனக்கு இது மட்டும் போதுமென்றாள்”..

அவள் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தவன், நெஞ்சோடு வைத்து கொண்டு சோபாவில் கண்மூடி பின்னே சாய்ந்துவிட்டான்…

அவனின் செயலில் என்ன ஆச்சு என்றாள் ” ம்ஹும் ஒன்னுமில்லை, என்னவோ நீ வேணும்னு தோணுது ” என்றவன் உணர்வுகளை மறைக்க கண்களை மூடி கொண்டான்…

இப்போது வாசுகிக்கு பயம், ஆம் பயம் தான், தாம்பத்தியம் ஹ்ம் அதற்கு சென்றுதானே ஆக வேண்டும், ஆனால் அவனால் சிலவற்றை தாங்க முடியுமா என்பதை நினைத்து பயம் வாசுகிக்கு…..

அவன் கேட்பதும் தவறில்லை, அவள் பயம் கொள்வதிலும் தவறில்லை..

சிலவற்றை இருவரும் சேர்ந்தே கடக்க வேண்டும், அதனால் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள் வாசுகி…

” உனக்கு இன்னும் என்னை ஏத்துக்க முடியாதுனு தோணுதா பொன்னு ” என்றான் கண்களை திறவாமல்…

ஆனால் பெண் அவனை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தாள்..

இவனை என்னால் ஏற்க முடியாதா, நான் ஏற்று கொண்டாள் இவனால் தாங்க முடியுமா, என்ன செய்வான்…

அவனது கேள்விக்கு பதிலை தவிர்த்தவள் போல ” வாங்க போகலாம் ” என்றுவிட்டு கையை உருவி கொண்டாள்..

மணி இன்னும் ஆகவில்லை தான் ஆனாலும் இருவரும் கிளம்பிவிட்டனர், மகன் அருகில் இருந்தால் மனம் சமன் படும் என்ற நினைப்பில்…

இது கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும், உள்ளம் நிறைந்த, உணர்வின் போராட்டம் அல்லவா, அதற்கு இடையில் தற்காலிகமாக ஒரு சமண்பாடு கிடைக்குமே தவிர.

இருவருக்குள் ஒருவர் மனதாலும், உடலாலும் கரைந்து போகாமல் சரியாகதே…

கணவனின் எண்ணம் மனைவிக்கு நன்றாகவே புரிந்தது அதனால், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் தான் வண்டியை செலுத்தினாள்..

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அவனது பொறுமை வியக்க தக்கது தானே..

அவனுக்காக யோசிக்க தொடங்கினாள், அவனை மட்டுமே யோசித்து கொண்டு பள்ளியை கடந்து சென்ற மனைவியை ” பொன்னு ஸ்கூல் தாண்டி போயிட்ட ” என்று நிறுத்தினான்..

” ஹான் ” என்று சுயம் பெற்றவள் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, கணவனை பார்த்தாள் பின் மகனுக்காக இருவரும் காத்திருந்தனர்..

அவள் செவ்வரளி