அவள் செவ்வரளி

செவ்வரளி -7

ஒரு மாதம் வீடு கல்லூரி என்று இளமை திரும்பியது போல் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள் வாசுகி..

அதிலும் கல்லூரி முடிந்து வந்ததும், ” ம்மா உங்க ஹோம் ஒர்க் நோட் எடுத்து வாங்க ” என்று மகன் அழைக்கையில் அப்படியொரு சிரிப்பு பொங்கும் வாசுகிக்கு…

காலையில் பள்ளிக்கு கிளம்பியதும் ” ம்ம்மா டைரி டைரி வாங்க வாங்க எடுத்து, ஓடிவாங்க ம்மா, அப்பா சைன் வேணும்ல ” எனும் போது குடும்பமே சிரிக்கும்..

மகனை முடிந்தமட்டும் கொஞ்சி கொண்டாடுவாள் பெண்…

என்னவோ அந்த தற்கொலை முயற்சிக்கு பின் மாறனின் மழலை தான் அவளை மீட்டது என்பது உண்மை..

அன்று விடுமுறையென்று மகனை அழைத்து சென்ற நாதன், வாசுகி மாறனிடம் மட்டுமே பேசுவதை கண்டுவிட்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழைத்து வந்து விட்டுவிடுவான்…

யாரும் சொல்லாமலே வாசுகியை அவனே அம்மாயென்று அழைக்க தொடங்கிவிட்டான்..

இத்துணை வருடம் தன்னை பார்த்து பார்த்து வளர்த்த தந்தையை விட்டுட்டு இப்போது தாயிடம் அப்படியே ஓடிகொண்டான்….

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் மாறன் விடியல் வேலையில் எழுந்துவிட்டு, ” ம்மா டிவி போடுங்க ” என்றான் வாசுகியிடம்…

” தங்கம் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குவோமே” என்ற தாயிடம் ” ம்மா ப்ளீச் ம்மா ” என்றான் கொஞ்சலோடு அவள் கன்னம் பிடித்து..

” நீ இருக்கியே ” என்றபடி ” இரு அம்மா வரேன் அப்பாவை எழுப்பிடாதே ” என்றுவிட்டு முகம் அழம்ப சென்றாள்..

பின் மகனை தூக்கி சென்று அவனை சுத்தம் செய்துவிட்டு, டிவி அதிகம் சத்தமில்லாமல் போட்டுவிட்டு, அவனுக்கு பால் கலந்து எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொல்லி, வெளி வேலைகள் செய்ய சென்றாள்..

அங்கு அவளுக்கு முன் எழுந்து மாடு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார் வெங்கடேசன்..

” நான் கூட்டுறேன் நீங்க போங்க மாமா ” என்றவளிடம் ” நீ ஏன் பாப்பா இப்போவே எழுந்த, போய் தூங்கு ” என்றார் அதட்டலாக…

” உங்க பேரன் தான் எழுப்பிட்டான், தூக்கம் போச்சு நீங்க போங்க ” என்றவள் அவர் கையிலிருந்த துடப்பத்தை வாங்கி கொண்டாள்..

வெளி வேலை முடித்து கொண்டு வீட்டிற்கு வரவும் ” ம்மா இது வேணும் ” என்றான் மாறன் டிவியில் ஓடும் விளம்பரத்தை காட்டி…

குளோப் ஜாமுன் விளம்பரம் தான் ஓடியது, ” அப்பாவ வாங்கிட்டு வர சொல்லுவோம் ” என்றவளிடம் ” உங்களுக்கு செய்ய தெரியாதம்மா ” என்றான் தாயிடம்…

” அது எப்படி தங்கம் உனக்கு இதெல்லாம் மட்டும் நல்லா பேசவருது ” என்று கேட்டவளுக்கு வெட்க சிரிப்பை பதிலாக கொடுத்தான் மகன்..

வெளியில் தாயும் மகனும் பேசிக்கொள்ளும் சத்தத்தில், நாதனும் விழித்து கொண்டான்…

புன்னகையோடு எழுந்தவன் பக்கத்தில், காலையும், ஸ்டிக்கயும் தேட, அது பக்கத்தில் இல்லாமல் சற்று தூரத்தில் இருந்தது…

” மாறன் இங்கவா ” என்றான் உறக்கமாக எழுந்த மகனை ” நீ டிவி பாரு, நான் போறேன் ” என்றுவிட்டு உள்ளே போனாள் வாசுகி…

” என்ன வேணுங்க ” என்று வந்தவளிடம் ” இதை ஏன் எடுத்து தூரமா வைக்கிறீங்க, உங்க கிட்ட நான் உதவிக்கு கெஞ்சனும்னா ” என்றான் எரிந்து விழுந்து…

நாதனை முறைத்தவள் ஒன்றும் பேசாமல், அவனுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட்டு, அவனையே பார்த்து நின்றாள்…

அது என்னவோ நாதனுக்கு இது போன்ற விடயத்தில் யாரோட உதவியையும் நாட, அத்துணை அசிங்கமாக தோன்றுகிறது..

காலுக்கு பவுடர் போட்டு, பின் காலை எடுத்து மாட்டி கொண்டவன் ” சாரி ” என்றுவிட்டு சென்றுவிட்டான்..

அதற்கு வாசுகி ஒன்றும் ரியாக்ட் செய்யவில்லை, அவளால் புரிந்து கொள்ள முடிந்ததோ என்னவோ அமைதியாக காலை உணவை தயாரிக்க சென்றுவிட்டாள்…

தந்தையிடம் வெளியில் சென்று அமர்ந்த நாதனின் பக்கத்தில் ஓடிவந்து அவனது மகனும் அமர்ந்து கொண்டான்..

” ப்பா மெக்கானிக் பதினோரு மணி போல வருவாரு, வண்டிய எடுத்து போறதுக்கு, இதை கொடுத்துட்டு வேற வாங்குவோம் ” என்றான் அவரிடம்…

” ஏன் தம்பி இந்த வண்டிய போட்டுட்டு தான் வேற வாங்கணுமா ” என்று கேட்டார் வெங்கடேசன் வருத்தமாக  மகனிடம்..

” இனிமே இது எதுக்குப்பா ” என்றான் விரக்தியாக காலை பார்த்தப்படி..

அது நாதன் ஆசை ஆசையாக வாங்கிய ஆர்எக்ஸ் 100 வண்டி..

திருமணத்திற்கு ஒரு வண்டி அவனுக்கு கொடுத்திருக்க, அதன்பின் பழைய வண்டியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டான்..

சில வருடமாக பாதுகாத்து வந்த வண்டியை இன்று விற்பதற்கு எடுத்து போக சொல்லி, தெரிந்த மெக்கானிக் ஒருவரிடம் பேசிவிட்டான்…

விபத்தில் திருமணத்திற்கு கொடுத்த வண்டி நொறுங்கி போய்விட்டது, அதோடு காலும் போய்விட்டது…

அதனால் அதன் பின் வண்டியை பற்றி நாதன் நினைக்கவில்லை…

இப்போது அவசியம் வந்துவிட்டது வண்டி வாங்க..

அன்று வாசுகி சொன்னதற்கு பின் தினமும் அவளோடு சென்று வந்தான் ஒருவாரம்..

ஆட்டோவில் தான், அதனால் செலவு கொஞ்சம் கூடுதல் ஆனது,வாசுகியிடம் சொல்லிவிட்டான் ” பொன்னு டெய்லி வந்துட்டு போறது கஷ்டமா இருக்குடா, கூட வரணும்னா சொல்லு வரேன் ஆனால் டெய்லி வேண்டாமே ” என்றான்..

அவனை நிதானமாக பார்த்தவள் ” உங்க இஷ்டம் ” என்றுவிட்டாள்..

இப்படி சொல்லிவிட்டு போனவளை என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்தவன், இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்..

அதனால் தான் இந்த வண்டியை கொடுத்துவிட்டு, வாசுகிக்கு ஸ்கூட்டி வாங்க நினைத்து கொண்டான், அவளுக்கு வண்டி ஓட்ட தெரியுமா என்று கேட்காமல்…

” நீங்க என்ன கடைக்கு போகலையா, மாமா வயலுக்கு போகலையா ” என்று கேட்டபடி வந்தவளிடம் ஓடி சென்றான் மாறன்..

” ம்மா தூக்கு தூக்கு “என்றான் ” அடேய் அஞ்சு வயசு ஆகப்போகுது, உனக்கு இன்னும் அம்மா மடி கேக்குதா ” என்றார் வெங்கடேசன் ஏதோ நினைப்பில் சிரித்து கொண்டு…

” தாத்தா அம்மா இப்போ தானே என் கிட்ட வந்தாங்க ” என்றவன் வாசுகி காலை கட்டிக்கொண்டான்..

யோசிக்காமல் தான் வெங்கடேசன் சொன்னார், ஆனால் கேட்ட அனைவர்க்கும், வெவ்வேறு மன நிலைக்கு இழுத்து சென்றது..

ஏன் சொன்னவருக்கும் கூட தான், பழையதை நினையாதே மனதே என்று அனைவரும் சொல்லி கொண்டார்கள் போல..

வாசுகி மகனை தூக்கி கொண்டு ” வாங்க சாப்பிடலாம் ” என்றுவிட்டு சென்றாள்…

அதன் பின் அவரவர் வேலையை நோக்கி சென்றுவிட, மதிய நேரத்தில் வண்டியை எடுத்து செல்ல வந்த மெக்கானிக்கிடம் இப்போ விற்கும் எண்ணமில்லை என்று சொல்லி வாசுகி அனுப்பிவிட்டாள்…

மதிய உணவிற்கு வந்தவன், வண்டி நிற்பதை கண்டு மெக்கானிக் எண்ணுக்கு அழைத்தான்..

அவரோ ” ண்ணே உங்க வீட்டம்மா தான் இப்போ விக்கிறது இல்லைனு சொல்லிட்டாங்க, உங்களுக்கு போன் போட்டேன் வரலை அதான் கிளம்பிட்டேன் ” என்றான் அவன்…

அதை கேட்டு யோசனையோடு உள்ளே சென்றவன் ” பொன்னு ” என்றான் அவளை ஹாலில் காணாமல்…

உள்ளே சென்று பார்த்தான் மகன் மட்டும் தான் கட்டிலில் உறக்கத்தில் இருந்தான்..

எங்கே இவ போனா என்று துணி துவைக்குமிடம் செல்ல அங்கேயும் இல்லை….

அவள் அழைபேசிக்கு அழைக்க, அது அறைக்குள் சத்தமிட்டது, மகன் உறங்கிக்கொண்டு இருக்கவும் உடனே துண்டித்துவிட்டான்…..

அறையிலிருந்து வெளியில் வந்தவன் எதிலோ மோதி தடுமாற, ” அத்தான் பார்த்து ” என்றபடி அவனை தாங்கி பிடித்தாள் வாசுகி….

நிமிடத்தில் இருவருமே பயந்துவிட்டார்கள், எப்போதும் மூன்று மணிக்கு மதிய உணவு உண்ணுபவன், இன்று இரண்டு மணிக்கு முன்பே வந்திருந்தான், அந்நேரத்தில் அவனை வாசுகி எதிர்பார்க்கவில்லை..

யாருடா இது வீட்டுக்குள்ள என்று முதலில் பயந்தவள், பின் அவனின் ஸ்டிகை கண்டு தான் தாங்கி பிடித்தாள்…

கொல்லைப் புறத்தில் தான் பாத்ரூம் என்பதால், அங்கு தான் குளித்து கொண்டிருந்தாள், நாதன் சரியாக கவனிக்காமல் வந்துவிட்டான்…

வீட்டில் யாரும் இல்லை என்பதால், உள்பவாடை மட்டும் ஏற்றி கட்டி துண்டை சுற்றி கொண்டு வந்திருந்தவள், கணவன் தடுமாறவும் தாங்கிபிடிக்க, மேலிருந்த துவாலை விலகிவிட்டது….

அவன் சரியாக நின்றதும் கீழே கிடந்த துண்டை எடுத்து மேலே போட்டு கொண்டவள் ” டிரஸ் மாத்திட்டு வரேன், கை கழுவிட்டு வாங்க ” என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள்…

நாதனுக்கு தான் கால்கள் தள்ளாடியாது, மனைவி இறந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டது, அதன் பின் துறவி போல் வாழ்ந்தவன்…

இன்று மனைவியானவள் அரைகுறையாக அவன் முன்பு, ஹையோ இதுவல்லவா உலகின் கொடுமையான நிமிடம் என்றுதான் தோன்றியது அவனுக்கு…

அவன் முன்பு அப்படி நின்றது அவளுக்கு சங்கடம் தான், ஆனால் வெட்கமேன்றெல்லாம் இல்லை..

உடை மாற்றும் நேரத்தில் அவள் யோசனையெல்லாம் ” இவரை கடைசியா எப்போ அத்தான்னு கூப்பிட்டோம் ” என்பது தான்..

நினைவில் இல்லை, எப்படியும் பத்து வருடமிருக்குமென்று அவளே நினைத்து கொண்டு நைட்டி ஒன்று மாட்டிக்கொண்டு, தலையில் இருந்த துண்டை அவிழ்காமலே சென்றாள்..

வாசுகி வருவதை பார்த்தவன், இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தான் ” பொன்னு போய் தலையை துடைச்சிட்டுவா ” என்றவன் குரலில் கண்கள் கலங்க பார்த்தாள்…

ம்ஹும் இப்படி அக்கறையாக, கரிசனமா, வளர்க்க வந்தவளும் சொன்னதில்லை வாழ்க்கைபட்டு போனவனும் சொன்னதில்லை..

அவளை அறியாமல் நினைவுகள் பின்னோக்கி சென்றது…

வாசுகிக்கு நீளமான சுருள் முடி, தலைக்கு குளித்தால் காய கொஞ்சம் நேரமெடுக்கும்..

ஒருநாள் தலைக்கு குளித்தவள், துண்டை அவிழ்த்துவிட்டு தமிழுக்கு உணவு பரிமாறினாள்..

” புருஷனுக்கு சோறு போடுறதை பாரு, தலை முடிய விருச்சு போட்டுக்கிட்டு ” என்று இன்னும் சில வார்த்தை பாரிஜாதம் பேசிவிட்டு சென்றார்…

காதில் வாங்கினாலும் வாசுகி வாய் திறக்கவில்லை, மனைவியை பார்த்து முறைத்தவன் உணவை அள்ளி உண்டான், ஒன்றும் சொல்லாமல்…

அன்று வாசுகியின் போறாத நேரம் அவன் உணவோடு முடியும் வாய்க்குள் சென்று சிக்கியது..

உணவை அப்படியே தட்டில் துப்பியவன், தொண்டைக்குள் சிறிது சென்றுவிட்ட முடியை சிரமத்தோடு தான் எடுத்தான்..

அப்படியே கீழே அமர்ந்திருந்த வாக்கில் அவள் முடியை கொத்தாக பிடித்து இழுத்தவன்..

” எங்க அம்மா எதுக்கு முடிய விருச்சு போட்டு சோறு வைக்க வேண்டாம்னு, சொன்னுச்சுனு இப்போ தெரியுதா ” என்று கேட்டு தொடையை திருகினான், உணவு கையோடே..

” மாமா இன்னைக்கு அம்மாச்சி தான் சமைச்சாங்க ” என்றவள் பதிலில் ” எங்க அம்மா ஏன் இன்னைக்கு தான் சமைக்குதா”..

” ஏன் இத்துணை வருஷம் சமைக்கலையா ” என்று கேட்டு முரட்டு தனமாக அவளை கிள்ளிவிட்டு, இனி தலைமுடியை விருச்சுகிட்டு வந்த தொலைச்சிடுவேன் “..

” எனக்கு சாப்பாடு வச்சிட்டு அப்பறம் காய வச்சா, அதுக்குள்ள ஜன்னியா வந்துடும் ” என்றுவிட்டு சென்றான், பாதி உணவோடு…

வாசுகி அப்படியே நிற்கவும் எழுந்து வந்து ஒற்றை கையால் அவள் தலையில் சுற்றியிருந்த துண்டை அவிழ்க்க முயன்றான் நாதன்…

அதில் சுயம் பெற்றவள் ” நா.. நானே செய்றேன் நீங்க உக்காருங்க ” என்றுவிட்டு நகர்ந்தாள்…

” சரி சரி அதுக்கு ஏன் பதட்ட படுற, அப்படியே நிக்கவும் தான் வந்தேன் ” என்றவன் மீண்டும் சென்று அமர்ந்து கொண்டான்…

தலையை தட்டி இரண்டு பக்கமும் கிளிப் போட்டு வந்தவள், உணவை பரிமாறிட வாசுகியை ஆராய்ச்சி செய்தபடியே உண்டான் நாதன்….

பின் நினைவு வந்தவனாக ” பொன்னு ஏன் பைக் எடுக்க வேண்டாம்னு சொல்லிருக்க ” என்றவன் கேள்விக்கு ” இப்போ அதை ஏன் விற்கணும் ” என்றாள் பதில் கேள்வியாக…

அவனுக்கு இந்த பைக் எத்துணை பிடித்தமென்று அவளுக்கும் தெரியும், அவனது கல்லூரி நாட்களில் எங்கு சென்றாலும் அதில் தான் செல்வான்…

இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் அவனால் மீண்டும் அவனால் அந்த வண்டியை இயக்க முடியுமென்று வாசுகி நம்புகிறாள்..

ஆம் இரண்டு கால் இல்லாதவனே, வண்டி ஓட்டுகையில் இவனால் முடியாத என்ன?

நாதனால் ஸ்டிக் இல்லாமல் கூட நடக்க முடியும், ஆனால் அவனுக்குள் அழ பதிந்து விட்டது, ஸ்டிக் இல்லையென்றால் என்னால் பேலன்ஸ் பண்ண முடியாதென்று…

” பொன்னு அது இருந்து இப்போ என்ன யூஸ் ” என்றான் முகத்தில் வேதனையோடு…

” அதெல்லாம் யூஸ் ஆகும், இப்போ சாப்பிடுங்க ” என்றாள் அவனிடம்…

” ஏய் அதை போட்டுட்டு உனக்கு ஸ்கூட்டி வாங்கலாம்டி ” என்றான் வேகமாக…

அவனை நேர்கொண்டு பார்த்தாள் இப்போது, ஏதோ அவன் உரிமையாக பேசுவது போல் தோன்றியது…

இந்த உரிமையான பேச்சும் மங்களாக நினைவில் வந்தது, ஆனால் ஒளிரவில்லை மனதில்…

அவளை முழுதாக மனைவியாக ஏற்று கொள்ள நினைப்பவனால், அவனை அறியாமலே உரிமையும் நிலை நாட்ட வந்துவிட்டது…

அதை அவன் உணரவில்லை, அதை உணர்ந்தவள் அவனிடம் காட்டிக்கொள்ளாமல் ” எனக்கு ஓட்ட தெரியாது ” என்றுவிட்டு சென்றாள், அது உண்மை தான் அவளுக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது…

” நீ சாப்பிடலையா ” என்றான் போகும் அவளிடம் ” ரொம்ப தான் அக்கறை உங்க வயிறு நிரஞ்சதும் ” என்றாள் திரும்பிபாராமல்…

புன்னகைத்து கொண்டவன் ” வாய் கூடுது ” என்றான் சிரிப்போடு ” ரொம்ப வருஷம் அப்பறம் இப்போதான் சாதாரணமா பேசுறேன் ” என்றாள் அறைக்குள் நுழைந்தவள் நின்று நிலையை பிடித்து கொண்டு தலைசாய்த்து..

அதை சொன்னவளுக்கு சாதாரணம், ஆனால் கேட்டவனுக்கு நெஞ்சம் வலித்தது ” பொன்னு சாரிடா ” என்றான் உள்ளார்ந்து…

” ச்ச்சு எனக்கு வருத்தமில்லை தம்பிக்கு சாப்பாடு கொடுக்க தான் அவனை எழுப்ப போனேன் ” என்றவள் மகனை தூக்கி கொண்டு சென்றாள்…

அவள் செவ்வரளி