அவள் செவ்வரளி

செவ்வரளி -6

” இப்போ எதுக்கு சும்மா இங்கயும் அங்கேயும் நடந்துட்டு இருக்கீங்க ” என்று நாதனை முறைத்தாள் வாசுகி…

பின்னே ஏதோ முதல் நாள் எல்கேஜி பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவது போல், வாசுகிக்கு ஸ்னாக்ஸ் முதற்கொண்டு டப்பாவில் அடைத்து கொண்டு வந்தவனை பார்த்து அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்…

” ப்பா அம்மா பிக், மாறன் தான் சுமால், எனக்கு தான் ஸ்னாக்ஸ் ” என்றான் மாறன் தந்தையின் கையிலிருந்த டப்பாவை வாங்குவதற்கு கை நீட்டி கொண்டு…

” உனக்கு உன் பேக்ல வச்சாச்சு தங்கம், இது ஈவினிங் வந்து சாப்பிடுங்க ” என்றபடி வாசுகி நாதன் கையிலிருந்த டப்பாவை வாங்கி அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள்…

அன்று அந்த அப்ப்ளிகேஷன் போரம் எடுத்து கோடி முறை பார்திருப்பாள் வாசுகி…

எட்டாக்கணி என்று நினைத்தது இன்று அவள் கையில், அதை கொடுத்தவன் மீது கொஞ்சம்  கூடுதல் கரிசனம் இப்போது வந்திருந்தது..

போரம் பில் பண்ணி வைத்திருப்பதை இரவு வீட்டிற்கு வந்து பார்த்தவன், நாட்களை கடத்தாமல் மறுநாளே அவளிடம் பணத்தை கொடுத்து கல்லூரிக்கு சென்றுவிட்டு வர சொன்னான்…

தன் கையில் பணத்தை கொடுத்தவனை நிமிர்ந்து பார்த்தவள் ” நான் மட்டுமா ஏன் நீங்க வரலையா ” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி…

அவனுக்கு வேறு முக்கியமான வேலை இருந்தால் அடுத்த நாள் கூட செல்லலாம் என்று நினைப்பில், அவள் கேள்வி கேட்க..

அவனோ ” இல்லை பொன்னு நீயே போய்ட்டுவா ” என்றான்..

” உங்களுக்கு வேலை இருந்தா இன்னொரு நாள் போலாம் ” என்றுவிட்டு அடுத்த வேலை பார்க்க சென்றாள் வாசுகி…

பின் கட்டுக்கு துணி துவைக்க சென்றிருந்தவள் பின்னே இவனும் சென்று நின்றான்..

துணியை கையில் எடுத்தவள் அங்கே வந்து நின்றவனை என்ன என்பது போல் பார்த்தாள், இப்படியெல்லாம் அவள் போகுமிடமெல்லாம் இவன் இதுவரை வந்தது இல்லையே, அதன் வியப்பே…

” என்ன ” என்றாள் கையிலிருந்த துணியை வாளியில் மீண்டும் வைத்துவிட்டு…

” இல்லை பொன்னு நீ படிக்கிற இடம், நான் இப்படியே வந்தா உனக்கு சங்கடம் தானே ” என்றான் கையிலிருந்த ஸ்டிக்கயும், பிளாஸ்டிக் காலையும் சுட்டி காண்பித்து..

இப்படி ஒரு கோணத்தில் வாசுகி யோசித்ததே இல்லை, நெஞ்சம் ஒருமுறை படபடத்து அடங்கியது பெண்ணுக்கு…..

அவனுக்கு நூலளவு இடைவெளி மட்டும் விட்டு நெருங்கி வந்து நின்றவள்…

” ஏன் துரை இந்த வீட்டுக்கு என்னை கூப்பிட்டு வரும் போது நீங்க எப்படி இருந்திங்க, இல்லை அப்போ எனக்கு கண்ணு தெரியாம நான் இங்கு வந்தேன்னா, அதுவும் இல்லன்னா எனக்கு இனி எங்கேயும் உங்க கூட போக வர இருக்கும்னு தெரியாதா ” என்றாள் நிச்சயம் கோபமாக தான்…

இத்துணை பேச்சு அவளிடம் அவன் எதிர்பார்க்கவில்லை ” பொன்னு அப்படி இல்லை, காலேஜ் எல்லாம் போனா பிரிஎண்ட்ஸ் இருப்பாங்க, இவன் யாருனு கேட்டு எதாவது சொல்லி உன்னை கிண்டல் செய்தால், என்ன பண்ணுவ ” என்றான்..

இது அவளுக்கான கேள்வியா இல்லை அவனே அவளிடம் கேட்கும் கேள்வியா, அதை கேட்டவன் மட்டுமே அறிவான்…..

அவனை ஏதோ வேற்று கிராகவாசி போல் பார்த்தவள் ” என் புள்ளைக்கு அப்பென்னு சொல்லுவேன் ” மேலும் அவனை உற்று பார்த்தவள்.

” அவனை கிண்டல் பண்ணினா நான் பேசமாட்டேன் என் காலுல இருக்குறது தான் பேசும்னு சொல்லுவேன் ” என்றுவிட்டு அவனை தாண்டி முன்னே நடந்தவள்…

திரும்பி பாராமல் ” இனி டெய்லி என்னை காலேஜ்ல விட்டுட்டு தான் நீங்க கடைக்கு போகணும், இப்போ வந்து கிளம்புங்க போய் அட்மிஷன் போட்டு வந்துடலாம் ” என்றுவிட்டு தானும் தயாராக சென்றாள்…

ஆம் ஏழு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து தான் வந்திருந்தான்..

இருவரும் தாலி கட்டி முப்பது முக்கோடி தேவர்கள் ஆசி வாங்கி கொண்டு வாழ வரவில்லை..

நெற்றியில் சிறு கீற்றாக குங்குமம் வைத்து தான் அழைத்து வந்திருந்தான்..

வாசுகியை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது உடலில் உள்ள அபாரணங்களை கழட்டி கொடுத்திருந்தனர் செவிலியர் கோபால் கையில், தாலி உட்பட..

மகள் சரியாகி வீட்டுக்கு வந்ததும், மகள் உயிரை பறிக்க நினைத்த அந்த தாலியை மீண்டும் அவள் கழுத்தை நெறிக்க கோபால் விரும்பவில்லை..

அதனால் மற்ற நகைகளை மகளிடம் கொடுத்தவர், அந்த பொன் தாலியை தானே வைத்து கொண்டார், மீண்டும் தமிழிடம் கொடுத்துவிடும் எண்ணத்தில்..

வாசுகி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாள் பின் தான் தமிழ் அவளை அழைத்து செல்ல வந்திருந்தான்…..

கோபால் வீட்டில் இல்லை, பின்னே இத்தனை நாள் மகளை கவனித்து கொண்டு இருந்ததில் வயல் வேலையெல்லாம் அப்படியே தானே கிடந்து போயிற்று..

அதனால் மகளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு மதிய உணவையும் பக்கத்திலே எடுத்து வைத்துவிட்டு தான் சென்றிருந்தார்…

காந்திமதி தான் தம்பிக்கு தகவல் சொல்லியிருந்தார், கணவர் வீட்டில் இல்லை இப்போது வந்தால் அவளை அழைத்து சென்றுவிடலாமென்று…

தமிழ் வந்தவன் நேராக வாசுகி அறைக்குள் நுழைந்தான்..

அவளோ இவன் வந்தது கூட தெரியாமல், எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்…

” வாசுகி கிளம்பு போலாம் ” என்ற குரலில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரும்பி பார்த்தவள்,, இப்போது கண்களை மூடிக்கொண்டாள்…

” ஏய் எடுப்பட்ட சிறுக்கி, என் தம்பியே வந்து கூப்பிடுறான், உனக்கு என்னடி வீராப்பு, எழுந்து கிளம்புடி ” என்றார் காந்திமதி…..

அவரை அவள் மனுசியாக மதித்தது போலவே தெரியவில்லை, தமிழையாவது திரும்பி பார்த்தாள், காந்திமதி பேசியதை காதில் கூட வாங்கிக்கொள்ளவில்லை…

தமிழ் மீண்டும் அழைத்தான், இதுவரை அவளிடம் காட்டாத பொறுமையை இன்று காட்டினான்….

” நடந்தது நடந்து போச்சு, எல்லாத்துக்கும் உன்னை மன்னிச்சுடுறேன் வா போலாம் ” என்றான்..

இப்போது எழுந்து சுவற்றில் சாயிந்து அமர்ந்தாள் வாசுகி..

என்னை இவன் மன்னிப்பதா எதற்கு? இப்போது தானே வருகிறான், வந்தவன் என் நலனை பற்றி ஒரு வார்த்தை இல்லை, அறுபட்ட கை எப்படி இருக்கிறது என்று கூட பார்க்க தோன்றவில்லையா, என்ன மனிதன் இவன் என்று அவனையே தான் பார்த்திருந்தாள்..

” என்ன வாசுகி நான் இவளோ தூரம் இறங்கி வந்து கேக்குறேன், நீ அப்டியே இருக்க ” என்றான் தானாக குரல் உயர்ந்தது…

அதன் பின் வேகமாக எழுந்தவள், அறைக்குள் இருந்த ஒவ்வொரு பையாக தேடினாள்…

ஆம் வெறும் பைத்தான் அங்கு இருந்தது, பீரோல் என்றெல்லாம் இல்லை..

சில நிமிட தேடுதலுக்கு பின் வேண்டியது கிடைத்துவிட்டது அவள் கைகளுக்கு…

வாசுகி ஒரு ஒரு பையாக ஆராய்வதை கண்ட தமிழ், அவள் தன்னோடு வருவதற்கு பொருட்கள் எடுக்கிறாள் என்றுதான் நினைத்திருந்தான்..

ஆனால் அவளோ தேடி எடுத்ததை கொண்டு வந்து அவன் முன்பு நின்றாள்..

” போலாமா வாசுகி ” என்று அவள் கைபிடிக்க நீட்டியவனின் கையில் தான் எடுத்ததை வைத்து ” போய்டுங்க ” என்றாள் திடமாக…

அதற்குள் கோபாலும் வீட்டிற்கு வந்திருந்தார்..

பக்கத்து வீட்டு பெண்ணிடம் சொல்லி வைத்து தான் வயலுக்கு சென்றிருந்தார்…

அந்த பைய வீட்டுக்கு வந்தானா எனக்கு ஒரு போன் போட்டுடு ஆத்தா என்று…

அவரும் தமிழ் வந்ததை கண்டு கோபாலுக்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டார்…

வாசுகி கையில் வைத்ததை பார்த்து அதிர்ந்து நின்றான் தமிழரசன்…

” வாசுகி தெரிஞ்சு தான் செயிறியா நீ ” என்றான் கடும் கோபமாக..

அவனுக்குள் வாசுகி தாலி கட்டிய காலத்திருந்து ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை, நாம் என்ன செய்தாலும் நம்மை விட்டு இந்த வாயில போச்சி பிரிந்து செல்லாதேன்று…

அது பொய்யாய் போனதை அவனால் ஏற்க முடியவில்லை..

” வெளிய போடா ” என்ற குரல் கேட்டு பின்னே திரும்பி பார்த்தான் தமிழ்..

காந்திமதிக்கு உடல் நடுங்கியது என்று தான் சொல்ல வேண்டும்…

பின்னே இத்துணை நாளாக கோபால் வீட்டில் யாருடனும் பேசுவதில்லை, தனியாக அவருக்கும் வாசுகிக்கும் சமைத்து கொள்கிறார், மனைவியை திரும்பியும் பார்ப்பதில்லை..

தம்பி இவளை அழைத்து சென்றுவிட்டால் எப்படியம் கணவனை சமாளித்து விடலாம், புருஷசன் வந்து கேட்டதும் உன் மக பின்னாடியே போய்ட்டானு சொல்லிடுவோம்னு நினைத்திருக்க, அது நடக்காமல் இப்படி மாட்டிக்கொண்டதில், கொஞ்சம் பயம் வந்துவிட்டது…

” யோவ் மாமா, என்னை மிருகமா நீயும் உன் மகளும் மாத்திடாதீங்க, அவளை வந்து என்கூட மரியாதையா குடும்பம் நடத்த சொல்லு ” என்றான் காட்டுக் கத்தளாக…

” என் மக வேண்டாம்னு தானே உன் கைல தாலிய கொடுத்தா, எடுத்துட்டு கிளம்பு ” என்றார் கோபால் விரைப்பாக…….

இவர்கள் பேசிக்கொள்ள, அதிக நேரம் நின்று கொண்டு எல்லாத்தையும் தலையை நுழைத்தி ஆராய்ந்ததில் வாசுகிக்கு தலை கிறுக்கிருக்க, அப்டியே அமர்ந்துவிட்டாள்…

” என்னையா கோபாலு உன்ற வீட்டு பிரெச்சனை தான் ஊரு முழுக்க தம்பட்டமா இருக்கு ” என்றபடி சிலர் வந்திருந்தனர் வீட்டுக்குள்…

அங்கு என்ன பேசப்பட்டதோ, சொல்லப்பட்டதோ நிமிடத்தில் அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்…

” இங்கருப்பா தமிழு அந்த புள்ள உசுருக்கு போராடிட்டு இருக்கும் போது கூட நீ போய் ஆசுப்பத்திரிய எட்டி பார்க்கல, முன்னாடியும் இப்படிதான் அந்த புள்ள மண்டைய ஒடச்சிப்போட்டு கண்டுக்காம போயிட்ட, இப்போவும் அப்படித்தான் இருக்க, இப்படியே போனா அந்த புள்ள உசுரு எப்போ போகுமோனு நெனச்சே இவன் போயிடுவான் போல ” என்றார் ஒருவர் கோபாலை கைநீட்டி…

” என்னங்க பேசுறீங்க புருஷன் பொண்டாட்டினா ஆயிரம் சண்டை சச்சரவு வரும் தான் ” என்றான் தமிழ் எகிறிக்கொண்டு…

” சண்டை சச்சரவு நாங்களும் நெறய பார்த்துருக்கோம், எங்க குடும்பத்துலயும் நடக்குது தான், ஆனால் நீ பண்றது எல்லை கடந்து போகுது ” என்றார்..

” முடிவா என்ன சொல்றிங்க” என்றான் அனைவரிடமும்…

கோபால் முன்னாடி சொன்னதுல தெளிவா இருக்குறாப்புல, அந்த வாசுகி புள்ளையும் அந்த முடிவுல தான் இருக்கு அதுனால நாம முன்னாடி பேசினது தான் ரெண்டு பக்கமும் வக்கீல் வச்சு எழுதி வாங்கிட்டு போக வேண்டியது தான்..

விருப்பப்பட்ட வேற கல்யாணம் பண்ணிக்கோங்க வக்கீல்கிட்ட கலந்து பேசிக்குவோம், இப்போ நீ கிளம்புயா என்றார் ஒருவர் தமிழிடம்…

அழையடித்து ஒயிந்தது போல் இருந்தது அந்த இடம் அப்போது…

” பொன்னு இறங்கு” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் வாசுகி…

ஆம் ஆட்டோவில் இருவரும் கல்லூரிக்கு வந்திருந்தனர்…

” சரி நான் போறேன், நீங்க கவனமா போங்க, மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடணும், மாறன் வந்ததும் அவனுக்கு முதல சாப்பாடு ஊட்டி விட்டுடுங்க ஸ்னாக்ஸ் கொடுக்காதீங்க ” என்றுவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் நாதனின் பொன்வண்டு…

திரும்பி பார்க்காமல் அவள் சென்றுவிட, இவனோ கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்து நின்றுவிட்டு தான் சென்றான்…

” ப்பா அம்மா வரல” என்ற மகனை வாஞ்சையோடு பார்த்தான் நாதன்..

மகனுக்கு புரிவது போலவே பதில் சொன்னான் ” மாறன் சுமால் அதான் இப்போவே வந்துட்டீங்க, அம்மா பிக் அதனால லேட்டா தான் வருவாங்க ” என்றான்…

மாறானுக்கு மூன்று மணிக்கு பள்ளி முடிந்துவிடும், வீட்டிற்கு வந்தவன் அமைதியாக தந்தை ஊட்டிய உணவை வாங்கி கொண்டு சமத்தாக தந்தையோடு கடைக்கு கிளம்பிவிட்டான்…

அம்மா எப்போது வருவாங்க என்ற ஆவலோடு..

அவள் செவ்வரளி