அவள் செவ்வரளி

செவ்வரளி -16

தொட தொட கையை தட்டிவிடும் மனைவியை எப்படி கையாள்வது என்று புரியாமல் விழித்து கொண்டு நின்றான் நாதன்…

அவள் வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டு அப்படி அழுவது அப்படி மனதை கணக்க செய்தது…

அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தவன் இப்போது ஒன்றுமே பேசாமல் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டான்…

தொடும் போது தட்டியவள், இப்போது அவன் அணைப்புக்குள் அழுது கரைந்தாள்..

அழுது முடியும் வரை முதுகை தட்டி கொடுத்து அமைதியாக இருந்தான் நாதன்…

அழுகை சில நிமிடங்களுக்கு பின் தான் நின்றது, அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து மேலும் இறுக்கி கொண்டவனை, தானும் முடிந்த மட்டும் இறுக்கி பிடித்து கொண்டாள்…

” ஏன் அத்தான் அப்படி சொன்னிங்க ” என்றாள், நாதனுக்கு விளங்கவில்லை எப்படி என்ன சொன்னமென்று…

” பொன்னு என்னடா சொன்னேன் ” என்று அவளிடமே கேள்வி கேட்டான்…

” அப்போ வெளில மாறன் கிட்ட ” என்றவள் மீண்டும் அழுகைக்கு தயாராக…

” ஷு பொன்னு இப்போ எதுக்கு திரும்ப அழற, என்னனு சொல்லு ” என்றான் பொறுமை இழந்தவன் போல..

தான் என்ன சொன்னோம் எத்துணை யோசித்தும் தவறாக எதுவும் சொன்னதாக நியாபகம் வரவில்லை…

” நீங்க பாப்பாக்கும் வேணா சொல்றிங்க ” என்றாள் அழுகையை உதட்டை கடித்து அடக்கி கொண்டு…

இப்போது புரிந்தது அவனுக்கு என்னவென்று ஆனால் சிறுபிள்ளைப்போல் தோன்றியது அவள் செயல்..

” டேய் சும்மா கிண்டலுக்கு சொன்னேன், இதுக்கா இப்படி அழுத, நான் கூட பயந்துட்டேன் ” என்றான் சிரித்தபடி….

அவனிடமிருந்து விலகி எழுந்து கொண்டவள் “உங்களுக்கு கிண்டலா தான் தெரியும், அத கேக்குற எனக்கு தான வலி தெரியும், விளையாட்டுக்கு சிலர் சொல்றது வினைல முடியுறது எத்துணை இடத்துல பாக்குறோம், நல்லதுக்கு நல்லது, எதாவது ஒன்னுனா இனி என்னால சமாளிக்க முடியும்னு நெனைக்க கூட தெம்பு இல்லை, நீங்க இல்லம்மா எனக்கு மாறன் இல்லை, அதே மாதிரி நீங்க இல்லைனா எனக்கு எதுவுமே இல்லை, இருக்கவே முடியாது என்னால ”  என்றவள் அப்படியே வெளியில் சென்றுவிட்டாள்..

அமர்த்திருந்தவன் அப்படியே இருந்தான் அசையாமல், மனம் மட்டும் ஆனந்த கூத்தாடியது, சில நேரம் நாதன் நினைத்திருக்கிறான் வேறு வழி இல்லாமல் தன்னோடு வாழ்கிறாளோ என்று..

ஆனால் இன்று அப்படியில்லை என்று புரிந்தது, கூடவே வேண்டாம் என்ற வார்த்தைக்கு சொல்லும் விடயத்தை பொறுத்து ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்றும் புரிந்தது…

அந்த நேரத்தில் தான் சொன்ன வேண்டாம் என்பது தவறான அர்த்தம் மனைவிக்கு புரிந்திருக்கிறது, இனி பார்த்து பேச வேண்டும் என்பதை யோசித்தவன், வளைகாப்பு பற்றி மனைவியோடு பேச வந்ததை மறந்து போனான்…

“என்னப்பா தீடீர்னு வந்திருக்கீங்க ” என்றபடி தகப்பனை வரவேற்றாள் வாசுகி..

” மாப்பிளை தான் வர சொன்னுச்சு, நீ எப்படி கண்ணு இருக்கிற ” என்றார் மகளை பார்த்துக்கொண்டு..

“நல்லாருக்கேன்ப்பா நீங்க தான் போக போக மெலிஞ்சுட்டு இருக்கீங்க ” என்றவள் மாறனை அழைத்து தண்ணீர் எடுத்து வர சொன்னாள்..

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல ஆண் பிள்ளைக்கும் வீட்டில் இருக்கும் சிறு சிறு வேலைகளை செய்ய சொல்லி பழக்கி வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள்..

அதனால் அவ்வப்போது சில வேலைகள் மகனை செய்ய சொல்வாள், இப்போதும் அவளே சென்று தண்ணீர் எடுத்து வரலாம் ஆனால் யாரேனும் வீட்டுக்கு வந்ததும் ஆண் பிள்ளையும் இதெல்லாம் செய்யலாம் என்பதை மகன் உணராமல் போய் விடுவான் என்பதால் அவனை கொண்டு வர சொன்னாள்…

“போக போக வயசு தான கண்ணு கூடுது, இனி என்ன வீடு போ போன்னு சொல்லுது, காடு வாவான்னு சொல்லுது, நீ நல்லா இருக்கிறதை கண் குளிர பார்த்துட்டேன், அது போதுமென்றார்”  மனிதர் ஓய்ந்து போய்..

“என்ன மாமா இப்படி சொல்றிங்க ” என்று வந்தான் நாதன் மனைவிக்கு முன்…

ஏற்கனவே தான் பேசியதற்கு இப்படி வருந்துபவள், தந்தை பேசியதற்கு போச்சுடா என்று நினைத்தபடி வந்தவன் அவரிடம் பேசினான்..

அவன் நினைத்தது சரி என்பது போல கண் கலங்கி தான் நின்றாள் பெண்..

“பொன்னு போய் முகம் அழம்பிட்டு வா பேசணும் ” என்றான் நாதன்..

மாறன் தண்ணீர் கொண்டு வந்து கோபாலிடம் கொடுக்க, அவனை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டு தின்பண்டங்களை எடுத்து கொடுத்தார்…

கணவனை பாராமல் அவன் சொன்னதை செய்தவள், வந்து அப்படியே நின்றாள் மீண்டும்..

வெங்கடேசன் தான் “உக்காரு பாப்பா ” என்று நாதன் பக்கம் இருந்த இடத்தை சுட்டி காட்டினார்..

கணவன் பக்கத்தில் அமர்த்தாலும் அவனை திரும்பி பார்க்கவில்லை, தாத்தனிடமிருந்து நழுவி தாய் மடியில் வந்து அமர்ந்து கொண்டான் மாறன்…

தந்தையிடம் சொன்னதை மாமனிடமும் நாதன் சொல்லிட ” அவளோ பெருசா எல்லாம் வேண்டாம் ” என்றாள் வாசுகி..

அவள் தான் பெரிதாக செய்ய வேண்டும் என்று சொன்னதை மறந்துவிட்டாள் போல…

மற்றவர்களும் அதே தான் சொன்னார்கள், இவளோ பெருசா ஏன் செலவும் இழுத்துக்கும் என்றார் கோபால்…

” செய்யலாமான்னு கேக்கல மாமா நான், இப்படித்தான் செய்ய போறேன்னு தகவல் சொல்றேன் ” என்றான் நாதன்..

இப்படி சொல்பவனிடம் என்ன பேசுவது, அனைவரும் அமைதியாகிவிட்டார்கள்..

வாசுகி மட்டும் கணவனை முறைத்து கொண்டு இருந்தாள், தான் அன்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கு கணவன் இப்படி கண்டிப்பாக செய்வான் என்பதை எதிர்பார்க்கவில்லை…

அதன் பின் நாதன் குரல் தான் ஒலித்தது, எப்படி பத்திரிகை அடிப்பது, யார் சென்று கொடுப்பது எப்படி எப்படி எப்படி வேலைகளை முடிக்கலாமென்று பேச்சு தொடங்கி நீண்டு கொண்டே சென்றது…

மாறன் உறக்கத்திற்கு செல்லவும், அவனை தூக்கி கொண்டு உணவு ஊட்ட சென்றுவிட்டாள் வாசுகி…

அவர்கள் பேச்சு முடிய இரவு ஒன்பதை கடந்தது, முடிவாக ஏழாம் மாதம் இறுதியில் தேதி குறிக்கப்பட்டது…

அதன்பின் உணவு உன்ன, கோபால் வீட்டுற்கு கிளம்புவதற்கு தயாரானார்..

காலை செல்லலாம் என்று தங்க சொல்லிவிட்டான் நாதன், இல்லை கிளம்புறேன் என்று நின்றவரை “யோவ் மாமா சும்மா இருய்யா ” ரொம்ப தான் பண்ற உன் மகளுக்கு மேல என்றான் சிரித்து கொண்டு…

இப்படி தான் அப்போது நாதன் கலகலப்பாக இருப்பான், மாமனிடம் நெருக்கம் அப்போது நிரம்பவே ” அவ்வப்போது வாய போயா என்பான் ” பழைய நாதன் போல் தோன்ற கண் கலங்கியது கோபாலுக்கு…

வெங்கடேசணும் தங்க சொல்ல அதற்கு மேல் மறுக்கவில்லை அவரும்…

அறைக்குள் வந்த மனைவி என்ன செய்கிறாள் என்றுதான் பார்த்திருந்தான் நாதன்..

அவன் முகத்தை பார்க்கவே இல்லை அவள், கோபமாக இருப்பது தெரிந்தது ” சமாளிக்க முடியலைட சாமி ” என்று நினைத்தபடி இருந்தான்…

விளக்கை அணைக்காமல் அப்படியே நின்றிருந்தாள் வாசுகி, சிரித்து கொண்டு இருந்தான் நாதன் அவளை பார்த்து…

பின்னே அவன்தான் இன்னும் அவனது செயற்கை காலை கழட்டி வைக்கவில்லையே பின்னே எப்படி விளக்கை அனைப்பது…

” எனக்கு தூக்கம் வருது ” என்றாள் பல்லை கடித்து ” தூங்குங்க டீச்சர் ” என்றான் சிரித்து கொண்டு..

இப்படியெல்லாம் அவன் அவளை அழைத்ததில்லை, அதனால் கணவனை திரும்பி பார்த்தாள் புருவம் உயர்த்தி…

” வருங்கால டீச்சர் தானே ” என்றான் நன்றாக கட்டிலில் சாய்ந்து கொண்டு…

“உங்களை போத்தான் ” என்று அவனிடம் வந்தவள் தானே அவனுக்கு எல்லாம் செய்தாள்..

இப்போதெல்லாம் மனைவியின் இந்த செயலை விரும்பி எதிர்பார்த்தான், உரிமையான செயல் அல்லவா, அதனால் ரசித்தான்…

” இவளோ செலவு வேண்டாம், வீட்லே விசேஷம் வச்சிக்கலாம் ” என்றாள் அவன் முகத்தை பார்த்து…

“லைட் ஆப் பண்ணிட்டு வா பேசலாம் ” என்றான் “ம்க்கும் லைட் ஆப் பண்ணிட்டு என்னத்த நீங்க பேசுவீங்க ” என்றவளின் கன்னம் கிள்ளியவன் “கட்டிப்புடுச்சுக்கிட்டு பேச தோணுதே ,” என்றான்…

அவளும் அப்படித்தான் நினைத்தாளோ என்னவோ உடனே செய்துவிட்டு வந்தாள்…

“ஹ்ம் இப்போ சொல்லுங்க ” என்றாள் அவனிடம் “கன்னத்தில் முத்தமிட்டவன், கன்னம் புஸுனு இருக்குடி ” என்றான்…

கணவனுக்கு அதை பற்றி பேசுவதில் விருப்பமில்லை என்பது புரிந்து அடுத்து ஒன்றும் கேட்காமல் அமைதியாகிவிட்டாள் வாசுகி…

“ரொம்ப அழகா இருக்கிற ” என்றவன் நெற்றியில் இதழ் பதிக்க, இதுபோன்ற பேச்சுகள் வாசுகி கேட்டு பழகவில்லையே, அதனால் எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை அவளுக்கு…

“கண்டிப்பா பொண்ணு தாண்டி பிறக்கும் ” என்றான் “பையன் பொறந்தா ” என்றாள் இப்போது வாயை திறந்து…

” ம்ஹும் ரொம்ப அழகா இருக்க, கண்டிப்பா பொண்ணு தான்,  ” என்றான்..

“ம்க்கும் இந்த வயசுல என்ன அழகு கண்டிங்க, நீங்க ” என்றாள் கொஞ்சம் வெட்கம் வந்ததோ என்னவோ…

” அழகுக்கு ஏதுடி வயசு, என் பொண்டாட்டி எனக்கு குச்சி ஊனி நடக்கையிலும் அழகா தான் தெரியுவா ” என்றவன் அவள் முகத்தை நெஞ்சில் புதைத்து கொண்டான்…

அவன் வார்த்தைகள் விட அவனது அரவணைப்பு தான் பெரிதும் பெண்ணை நெகிழ்த்தியது..

அவனுக்குள் உள்ளே புதைந்தவள், அவன் நெஞ்சில் இதழ் பதித்தாள்..

ஆடவனுக்கு ஆனந்த அதிர்ச்சி “பொன்னு ” என்றான் கொஞ்சம் சத்தமாக மேலும் இறுக்கி கொண்டு..

பின்னே பெண்ணவள் சத்தமாக முத்தமிட்டு, சுத்தமா விலகாமல் அப்படியே இருந்தால் அவனின் எண்ணங்களை வார்த்தையில் விவரித்திட முடியுமா என்ன?

” வாழ்க்கைல பட்ட கஷ்டமெல்லாம் கூட, உன்கூட
இப்படி இருக்கும் போது மறந்துடுதுத்தான், பழைய வாழ்க்கையை என்னால கண்டிப்பா மொத்தமா மறக்க முடியாது, அதேபோல உன்கூடவே இருக்கும் போது வேற எதுவும் நெனப்புல வராது ” என்றாள் பெண் மனம் திறந்து…

வேறு என்ன வேணும் அவனுக்கு, இது போதுமே மனைவியை மேலும் மேலும் நெஞ்சில் இறுக்கி கொண்டான் விடாமல்…

அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டமெல்லாம் காலத்தால் அழிக்க முடியாதென்றாலும் கால போக்கில் மறந்து போற விடயம் தான், ஆனால் பெண்ணவள் உடலால் ஒருவனிடம் பட்ட துன்பம் என்பது இன்னொருவருடன் வாழ முனைகையில் சில நேரங்களில் மறக்க முடிகின்ற விடயமா என்ன?

அதுவே உன் அருகில் மறக்கிறேன் என்கிறபோது, கண்டிப்பாக சில மன வடுகளை மேலும் அழித்து விடுவேன் என்ற நம்பிக்கை உண்டானது திருமேனிநாதனுக்கு….

” ஷு விடுத்தான் போட்டு நெருக்குற, குழந்தைக்கு மூச்சு முட்டும் ” என்று மனைவி சொன்ன பின் தான் அவளை கொஞ்சம் தளர்த்தினான்..

அவனுக்கு முதுகுகாட்டி படுத்தவள், கழுத்தோடு இருந்த அவன் கரங்களை எடுத்து வயிற்றில் போட்டு கொண்டு சுகமாய் உறங்கி போனாள்…

அவள் செவ்வரளி