அவள் செவ்வரளி

செவ்வரளி -14

” எங்க மாமா போறீங்க வரீங்க, ஒன்னுமே தெரிய மாட்டது ” என்ற வாசுகியிடம் புன்னகையை மட்டும் பரிசாக கொடுத்தார் வெங்கடேசன்…

மருமகளிடம் விடயத்தை சொல்ல வேண்டும் தான் ஆனால் மகனும் கூட இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது அவருக்கு ..

அவர் பதில் பேசாமல் இருக்கவும் மீண்டும் அவரிடம் தோண்டி துருவி கேட்கவில்லை வாசுகி…

இப்போது வாசுகி கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருக்க, மாறன் ஒன்றாம் வகுப்பில் இருந்தான், நிறைய பேச கற்றுக்கொண்டான்…

ஆனால் ஒரு ஒரு செயலுக்கும் சொல்லுக்கும் அம்மா வேண்டும்…

மாறன் மட்டுமல்ல அவன் தந்தையும் மனைவியிடம் நிறைய பேச கற்றுக்கொண்டான்..

மகன் பள்ளியில் நடப்பதை எப்படி மாலையில் தாயிடம் ஒப்பிப்பானோ, அதேபோல் நாதனும் இரவில் அன்று நடந்த கதை அனைத்தையும் சொல்லி அவளையும் பேச வைக்க தொடங்கிருந்தான்…

கல்லூரி வேலைகள் முடித்து கொண்டு தாமதமாக உறங்க வரும் மனைவியை பேசுவதோடு சரி பெரிதாக அவளை நாடமாட்டான்..

ஆனால் விடுமுறை நாட்கள் என்றால் விரிப்பு தரையில் தான் ” அத்தான் புதுசா கல்யாணம் ஆனா போல செயிரிங்க ” என்றாள் வாசுகி சிரித்து கொண்டு அவன் செய்வதை பார்த்து ஒருநாள் …

” ஏன்டி புதுசா கல்யாணம் ஆனவங்க மட்டும் தான், சந்தோசமா வாழனுமா என்ன? ” என்றான்…

அதன்பின் அவள் கேள்வி இப்படி கேட்பதில்லை, அவன் செய்வதை தடுப்பதுமில்லை..

வார விடுமுறை இரண்டு நாட்கள் அதனால் இன்றும் விரிப்பு கீழே போட்டு படுத்துவிட்டான் நாதன்…

அவனுக்கு கீழே படுப்பது அத்துணை சிரமம் தான் இருந்தும் அவனது பொன்னுக்காக அதை சுகமாகவே செய்தான்…

மகனுக்கு சரியாக போர்வை போர்த்திவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு கணவன் அருகில் வந்து படுத்தாள் வாசுகி…

” ஏய் பொன்னு ” என்று இறுக்கியவன்  இன்னும் சீகைக்காய் போட்டு தான் குளிக்கிறியா நீ என்றான் கூந்தலை வாசம் பிடித்து…

” த்தான் இதே கேள்விய தான் டெய்லி கேக்குற ” என்றவள் அவன் புஜத்தில் கிள்ளி வைத்தாள்..

சிரித்து கொண்டு இருந்தவன் தீடீரென “பொன்னு அந்த பக்கம் திரும்பி படு ” என்றான் அவசரமாக..

” என்னாச்சுங்க ” என்றவளிடம் ” நீ திரும்புடி ” என்றான் அவள் திரும்பியதும், சேலையை விலக்கி வயிற்றை வருடியவனுக்கு அப்படி இருக்குமோ என்றுதான் தோன்றியது…

வாசுகிக்கு ஒட்டிய வயிறு இப்போது கொஞ்சம் மேடாக தெரிந்தது போல் உணர்ந்தான் நாதன்…

எப்படி இருவரும் இதை கவனிக்காமல் போனோம், ஒருவேளை எனக்கு தான் இப்படி தோணுதா, அப்படியிருந்தா பொன்னு சொல்லியிருக்குமே என்று ஆயிரம் யோசனை அவனுக்குள் ஓடியது..

அவன் வருடல் தந்த இதத்தில் கணவனின் மார்போடு மேலும் ஒட்டிக்கொண்டாள் பெண்..

தலையை தூக்கி அவள் கன்னத்தோடு கன்னம் உரசியவன் ” அப்படி இருக்குமா ” என்றான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்..

” எப்படி இருக்குமோ ” என்றாள் பெண் கைகளை கொண்டு அவன் கன்னம் வருடி….

” நிஜமா உனக்கு ஒன்னும் தோணலையா பொன்னு ” என்றான் வருடலை நிறுத்தாமல்…

” த்தான் ஒன்னுமே சொல்லாம இப்படியா, அப்படியான்னு கேள்வி கேட்டா, நான் எப்படி பதில் சொல்ல ” என்றவளின் கன்னத்தை மீசை முடியால் உரசியவன் ” எனக்கு அப்படி தான்னு தோணுது ” என்றான்…

” அடி வாங்க போறீங்க நீங்க ” என்றுவிட்டு தள்ளி சென்று படுத்தவளை, இவனும் நகர்ந்து சென்று அனைத்தவன் ” நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம் ” என்றான்….

முதலில் அவனுக்கு என்னவோ என்று நினைத்தவள் பின், அவன் வருடலும், குழைவதும் வேறு சங்கதி சொல்லியத்தை இப்போது உணர்ந்தவள் போல, வருடும் அவன் கரங்களை இறுக்கி பிடித்தாள்…

” தலைக்கு குளிச்சு எவளோ நாள் ஆகுது ” என்றான் அடுத்த கேள்வியாக ” அத்தான் ” என்றவளுக்கு வேறு வார்த்தை வரவில்லை…

” அப்படியா தான் இருக்கும் தோணுது, உனக்கு அப்படி தோணவே இல்லையா இத்துணை நாள் ” என்றான்..

பெண்ணவளுக்கு பேச தெரியும் என்பதே மறந்து போனது போல, அப்படியே அவன் கரங்களை அழுத்தி கொண்டாள், விடவே இல்லை கண்களில் கண்ணீர் நிற்காமல்…

” நிஜமா அப்படி இருக்குமா அத்தான் ” என்றாள் வார்த்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தோடு…

” என் உள் மனசு அப்படிதான்னு சொல்லுது, உனக்கு உடம்பு கொறஞ்சிட்டு ஆளும் ரொம்ப சோர்வா இருக்கிற, ஆனா முகம் பலப்பலப்பா இருக்கு, இந்த குட்டி வயிறு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தெரிது ” என்றான் அவனுக்கே உறுதி ஆகாத விடயத்தை உண்மை போல…

பெண்ணவளுக்கு மூச்சு அடைத்தது, கணவனை விட்டு எழுந்து வெளியில் சென்றுவிட்டாள் நொடியில்…

அவள் அப்படி சென்றது மனம் வருத்தத்தை கொடுத்தாலும், மனைவி பக்கத்தில் தான் இப்போது இருக்க வேண்டுமென்று நினைத்தவன், மெல்லமாய் நகர்ந்து காலை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் சென்றான்..

கதவு திறந்து இருந்தது, வெளியில் சென்றவன் கண்டது அப்டியே திண்ணையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து வாயை கையால் பொத்தி கொண்டு அழுது கரைபவளை தான்..

யோசிக்க அப்படியிருக்குமென்று தான் அவளுக்கும் தோன்றியது, எப்போதும் சரியாக வரும் மாதவிடாய் இப்போது வராமல் இருப்பதை எப்படி தான் கவனிக்காமல் விட்டோம் என்பதே அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது…

இன்னும் சொல்ல போனால் அவள் இப்படியெல்லாம் எதிர்பார்க்கவில்லை, கணவன் சொன்னதை வைத்து இப்போது அவளே கணித்துவிட்டாள், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தள்ளி போயிருக்கிறது..

” பொன்னு என்னடா ” என்று வந்து அமர்ந்தவனை  நிமிர்ந்து பார்த்தவள், வாயிலிருந்து கையை எடுத்து கொண்டு புன்னகைக்க முயன்றாள்..

அவள் கரங்களை பிடித்து “என்னடா நான் தெரியாம எதுவும் சொல்லிட்டேனா  ” என்றான்  கொஞ்சம் நடுக்கமாக…

ஆம் அவளிடம் இப்படித்தான் இருக்குமென்று சொன்ன பின் இப்படியொரு நிகழ்வு பொய்த்து போனால் மனைவியாள் நிச்சயம் தாங்க இயலாதே,

எப்படி உணராமல் தான் பேசினோம் என்று நினைக்க கொஞ்சம் குற்ற உணர்வாகி போனது…

இல்லையென்பது போல் தலையை ஆட்டியவள், அவன் கையை தட்டிவிட்டு அப்படியே அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்…

அப்படியே தலையை வருடி கொடுத்தவன், அவள் சொன்ன வார்த்தையில் கண்ணீரோடு “செய்வேண்டி ” என்றபடி அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்..

அவன் முகம் பார்க்காமல் கண்களை மூடி இருந்தவள் ” அத்தான் எனக்கு நீ வளகாப்பு பெருசா, ரொம்ப பெருசா செய்யணும் ” என்றாள் கண்களை திறக்கவேயில்லை…

மூச்சு திணற திணற முத்தமிட்டவன், அப்படியே அவள் கழுத்தில் புதைந்திருந்தான்..

எத்துணை பெரிய ஏக்கம், எவ்வளவு வசவுகள் எத்துணை அவமானங்கள், எல்லாம் இந்த தருணத்திற்காக தானே..

ஆனால் அதற்காக அவள் பட்டப்பாடுகளை வார்த்தையில் சொல்லி முடித்திட இயலாதே..

” பொன்னு டேய், கால் வலிக்கிதுடா ” என்றபின் தான் அவனிடமிருந்து விலகினாள் வாசுகி…

” வலிச்சாலும் தாங்கிக்கணும் நான் டெய்லி இனிமே உங்க மடில படுக்க தான் செய்வேன் ” என்றாள் பெண் நன்றாக புன்னகைத்தபடி, முழுதாக அவள் முகம் தெரியாத போதும் ரசித்தான் அவளை…

மனைவி உரிமையோடு சொல்லுகையில் மறுக்க தோன்றுமா என்ன?

இருவருக்குள்ளும் எங்கோ கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்த திரையும் இப்போது உடைந்தது போன்று தோன்றியது நாதனுக்கு…

” ஹம்ஹ்ம், வலிச்சா நீ தான் கால் அமுக்கணுமே ” என்றான் கணவனும் இயல்பாக…

அதே ஹம்ஹ்ம் ராகம் போட்டவள் ” அப்டியே கத்தனும் போல இருக்கு அத்தான் நான் அம்மா ஆகிட்டேன்னு, இந்த இருட்டுல கத்தினா எல்லாருக்கும் நல்லா கேக்கும்ல ” என்றபடி கணவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்…

மனம் நிஜமாய் நாதனுக்கு கனத்தது, அவள் மீது குறையே இல்லாமல் எத்துணை குறை சொல்லி அவளை அசிங்கப்படுத்தினார்கள்..

இன்று அவர்கள் எல்லாம் எங்கு சென்று முகத்தை வைப்பார்கள், அவனுக்கு திண்ணமே மனைவி கர்பம் என்பதில், ஆனாலும் நாளை மருத்துவமனை சென்று உறுதி செய்ய வேண்டுமென நினைத்து கொண்டான்…

மகனை தானே சென்று பள்ளியில் விட்டு வந்தவன், அவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லியே சோர்ந்து போனான்..

வீட்டில் இருக்கும் போதே ” ப்பா அம்மா மட்டும் லீவ், எனக்கும் லீவ் வேணும் ” என்றான் முதல் கேள்வியாக..

” டேய் அம்மாவுக்கு காய்ச்சல்டா ” என்றான் நாதன் மகனிடம்…

ஓடிச்சென்று தாயை தொட்டு பரிசோதித்தவன் ” அப்போ எனக்கும் காய்ச்சல் ” என்றான் சூடு அதிகம் இல்லாததால்….

” டேய் அம்மாக்கு நாலு ஊசி போடப்போறோம், உனக்கு எத்துனை வேண்டும் ” என்றபின் தான் வாயை மூடினான்…

அதிலும் எங்கே மகன் மனைவி மடியில் குதித்துவிடுவனோ என்ற பயத்தில் அவனை அவளிடம் நெருங்கவிடாமல் வைப்பதே பெரும்ப்பாடகி போனது நாதனுக்கு…

பள்ளிக்கு அழைத்து செல்லும் போதிலும் படுத்திவைத்தான் தகப்பனை…

” சரியான அம்மா பையன்டி ” என்றபடி அமர்ந்தவனை பார்த்தவளுக்கு, அப்படியொரு நிறைவு தான்…

நிச்சயம் இன்னதென்று தெரிந்தபின்னும், மருத்துவமனையில் பயத்தோடு அமர்ந்திருந்த மனைவியின் கரங்களை அழுத்தமாக பற்றிக்கொண்டான் நாதன்….

மருத்துவர் அழைத்து வாழ்த்து சொன்ன பின்னும் அப்டியே கண்ணீர் வடித்து கொண்டு இருந்தவளை, அழாதே என்று கூட சொல்லாமல் அவளை பார்த்திருந்தான் நாதன்…

முப்பது வயதை தொட்டுவிட்ட காரணத்தால் மருத்துவர் இருவரிடமும் கவனமாக இருக்கும்படி சில அறிவுரைகள் சொல்லி, சத்து மருந்து மாத்திரைகளும் எழுதி கொடுத்தார்..

ஆட்டோவில் அமைதியாக வந்த மனைவியை மட்டுமே பார்த்து கொண்டு வந்தான் நாதன்..

வந்ததும் அதே அமைதியோடு இருவருக்கும் உணவு எடுத்து கொண்ட மனைவியிடம் ஒன்றும் கேட்காமல் உண்டு முடிக்க, அவளே சென்று மருந்து மாத்திரை எடுத்து கொண்டு வந்து கணவன் பக்கத்தில் அமர்ந்தாள்…

” அத்தான் கவனமா இருக்கணும்ல ” என்றவளை முறைத்து பார்த்தான் கணவன்..

என்னவென்று புருவம் உயர்த்தி பார்த்தவளிடம் “இவளோ நேரம் பக்கத்துல ஒருத்தன், இருந்தானா இல்லையானு பார்த்தியாடி ” என்றான் அதே முறைப்போடு….

” ஆமா ஆமா தெரியாமத்தான் இருந்தேன் ” என்றாள் பெண் உதட்டை சுழித்து…

” பயந்துட்டேன் பொன்னு, நீ அமைதியாவே வரவும் ” என்றவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் “மனசு முழுக்க சந்தோசம் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சு என்னவோ அப்போ பேச தோணல ” என்றவள் இப்போது அழவில்லை சாதாரணமாக தான் சொன்னாள்…

” ஷு என்னடா இது பேச்சு ” என்றபடி அவள் முதுகில் தட்டி கொடுத்தவன் ” மாமாவுக்கு சொல்லுவோம் ” என்றான் அழைபேசியை எடுத்தப்படி…

” வேற யாருக்கும் சொல்ல வேண்டாம் சொல்லிடுங்க ” என்றாள் தலையை மட்டும் திருப்பி….

நேற்று இரவு கத்தனும் போல இருக்குனு சொன்னவ இப்போ வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது வியப்பாக இருந்தது….

” வேணா அத்தான் நான் இப்போதான் சந்தோசமா இருக்கேன், இந்த விடயத்தை கேட்டு இங்க சந்தோச படுறவங்க கம்மிதான், அதனால வெளில தெரியவரும் போது தானா தெரியட்டும், அதுவரை நம்மளா யாருக்கும் சொல்ல வேண்டாம் ” என்றாள் நீண்ட விளக்கமாக…

மனைவி சொல்வதும் சரியென்று பட்டதால், கோபாலுக்கு அழைத்து விடயத்தை சொன்னவன் யாருக்கும் சொல்ல வேண்டாமென்ற விடயத்தையும் சேர்த்து சொன்னான்…

அவருக்குமே சந்தோஷத்தில் ஒன்றும் சொல்ல முடியவில்லை ” நான் அந்திக்கு வீட்டுக்கு வரேன் ” என்றுவிட்டு வைத்துவிட்டார்…

வெங்கடேசனுக்கு அழைத்து விடயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வர சொல்லிவிட்டு வைத்துவிட்டான்…

” பொன்னு நான் கடைக்கு கிளம்பட்டுமா ” என்று கேட்டவனிடம் ” இன்னைக்கு மட்டும் என் கூடவே இருங்களே, என்னவோ இப்படியே இருக்க தோணுது ” என்றாள் மனதை மறையாமல்…

மனைவி இப்படி சொல்லியபின் அவளை விட்டு நகருவானா என்ன?

“உன் பையன் வந்ததும், என் சட்டையை புடிப்பான்டி, என் அம்மா பக்கத்துல எதுக்கு உக்காந்திருக்கன்னு ” என்றவன் சொல்லிவிட்டு சிரிக்க, அவன் மார்பில் வலிக்காமல் குத்தினால் பெண்…

” எனக்கு பையன், உங்களுக்கு என்ன? சும்மா குழந்தையை எதாவது சொல்லிட்டே ” என்றவளுக்கும் சிரிப்பு தான்…

அன்றைய நாட்கள் என்ன தான் அப்பாவை அப்படி சொல்ல கூடாதேன்று வாசுகி சொல்லியிருந்தாலும், மாறனுக்கு அம்மா வேண்டும், அதுவும் அவன் பேசும் நேரத்தில் அப்பவே ஆனாலும் பக்கத்தில் வருவதை அவன் இன்றுவரை விரும்பவில்லை…

நாதன் பழகிக்கொண்டான் மகனும், மனைவியும் பேசுகையில் தள்ளி நின்று ரசிப்பதற்கு….

இப்போது தெளிவாக வேறு பேசுகிறான், ” பொன்னு நீ வேணா பாரேன், கண்டிப்பாக வந்ததும் ஏன்பா கடைக்கு போகலையான்னு தான் கேப்பான் ” என்றான் மனைவியிடம்…

அது தான் நடக்குமென்று அவளுக்கும் தெரிந்ததால் சிரித்து கொண்டாள் வாசுகி..

அவள் செவ்வரளி