அவள் செவ்வரளி

செவ்வரளி -12

” பொன்னு ” என்றபடி நாதன் மனைவியின் கரங்களை அழுத்த, அதை ஒருவித வெறியோடு பார்த்து நின்றான் தமிழரசன்…

” டேய் நீ எதுக்குடா இங்க வந்த ” என்ற கோபாலை முகம் சுழித்து பார்த்த தமிழ், ” என் பொண்டாட்டிய பார்க்க  தான் ” என்றான் வரவழைக்கப்பட்ட நக்கல் தோணியில்…

” பிரெச்சனை பண்ணாதீங்க, போங்க ” என்ற நாதனை மேலும் கீழும் பார்த்தவன்…

” என்னடா நொண்டி நொண்டி நடக்க, கைல இருக்கிற குச்சிக்கு பதிலா என் பொண்டாட்டிய புடுச்சுட்டு நடக்கறியா ” என்றான் தமிழ் ஆத்திரத்தோடு முறைத்து..

” வார்த்தை பார்த்து பேசு, உனக்கும் அவளுக்குமான உறவு முடுஞ்சு போச்சு ” என்றான் நாதனும் மனைவி கரங்களுக்கு அழுத்தம் கொடுத்து….

” எனக்கும் அவளுக்கும் முடுஞ்சு போச்சா, எங்க அதை அவளை சொல்லு ” என்றவன் வாசுகியை நெருங்க..

வெங்கடேசன் அவனை தடுத்தார் ” தம்பி பிரச்னை வேண்டாம், நல்லது நடக்கும்னு நாங்க கோவிலுக்கு வந்திருக்கோம் ” என்றார்..

” என்னயா அப்போ நான் நாசமா போகணும்னா கோவிலுக்கு வரேன் ” என்றவன் எகிறி கொண்டு வந்தான்…

” மச்சான் நீங்க அவங்களை கூப்பிட்டு சன்னதி போங்க ” என்றான் பவியின் கணவன்…

பிரெச்சனை வேண்டாமென்று நினைத்த நாதனும் மனைவியை அழைத்து செல்ல திரும்ப…

நொடி பொழுதில் நாதன் காலை தட்டிவிட்டிருந்தான் தமிழ்..

நிலை தடுமாறி நாதன் அப்படியே கீழே விழ, மாறன் வீறிட்டு அழுதான்…

வாசுகி பதறியப்படி ” அத்தான் ” என்று அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மடங்கிய அவன் கால்களை எடுக்க பார்க்க…

வாசுகியை பிடித்து இழுத்தான் தமிழ்,” என்னடி அத்தான், பொத்தான் ” என்று கூறியபடி..

அவன் கரங்களை உதறியவள் ” இதுக்கு மேலையும் என்னை கொடுமை படுத்த உனக்கு மிச்சம் இருக்கா ” என்றாள் ஆவேசமாக..

அவளை பார்த்து சிரித்தவன் ” அது என்னவோ என்று ” வார்த்தையை இழுத்தவன் பேசிய வார்த்தையில், பவியின் கணவன் ஆவேசமாக அவனை அடிக்க தொடங்கினான்…

” என்னடா நீ மனுஷன், நானும் போனா போகுது வயசல பெரிய ஆளுன்னு, சும்மா நின்னா, தப்பு தப்பா பேசுற” என்றவன், வெளுத்து வாங்கினான்…

பவியின் கணவன் மாதவன் கொஞ்சமில்லை நிறையவே கோபக்காரன் ” கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் ” என்ற வார்த்தைக்கு சொந்தக்காரன்…

இருவரும் அடித்து கொள்ள, கோவிலுக்கு வந்த கூட்டம் அங்கு கூடியது , கோபாலும், வெங்கடேசணும் iruvaraiyயும் பிரிக்க பார்க்க முடியவேயில்லை..

பின் இன்னும் சிலர் சேர்ந்து  தமிழை இழுத்து சென்றனர், மாதவனிடமிருந்து பிரித்து…

ம்ஹும் அதற்கெல்லாம் தமிழ் அடங்க நினைத்தாலும், அவனுக்குள் இருக்கும் போதை அவனை மனிதனாக விடாமல் சண்டிதானம் செய்தது..

மற்றவர்களிடமிருந்து பிரிந்து வந்தவன் வாசுகியை இழுத்து சென்றான், அங்கு வீறிட்டு அழுது கொண்டிருந்த மாறன், தாயை இழுத்து செல்லவும், பவியிடமிருந்து கையை உதறி கொண்டு ஓடினான்…

ஓடியவன் தமிழ் காலை இறுக்கி கட்டிக்கொண்டு ” அம்மாவை விடு ” என்று அலறினான்..

தமிழின் பலத்துக்கு முன் மாறன் எத்துணை பொடியன், அவனை பார்த்து நக்கலாக சிரித்தவன் ” யாருடா உனக்கு அம்மா” என்றவன் காலை உதறிவிட மாறன் தள்ளி சென்று விழுந்தான்..

எல்லாம் சில சில நிமிடங்களுக்குள் நடந்தேறியது , குழந்தை கீழே விழுந்ததும் அனைவரும் பதறிவிட்டு அவனை தூக்க செல்ல,

மாதவன் மீண்டும் தமிழை நெருங்க அதற்குள் வாசுகி ஒரு அறை விட்டிருந்தாள் தமிழுக்கு…

இதுவரை அவன் மீது இருந்த நடுக்கமும், பயமும் மகனை அவன் எட்டி தள்ளியதும் எங்கோ ஓடிவிட்டது…

ஒன்று, இரண்டு,  மூன்று நிற்காமல் அறைந்து தள்ளினாள் அவனை,, யாரும் வாசுகியை தடுக்க முன் வரவில்லை…

எல்லாம் குழந்தை அருகில் நிற்க நாதன் வந்து தான் மனைவியின் தோளை தொட்டான்…

இத்துணை அடிக்கும் தமிழ் அவளை திருப்பி அடிக்கவில்லை, மாறாக அவளை பார்த்து சிரித்து கொண்டு நின்றான்…

” இந்த அடியை நீ எனக்கு முன்னாடியே கொடுத்திருக்கலாமோ, என்னவோ ” என்றான் அவளிடம்…

வாசுகியின் கரங்கள் மட்டுமல்ல, பூமியும் அப்படியே நின்றுவிட்டது…

” நீ என்ன விட்டு போகவும் தான், நீ வேணும் வேணும்னு மனசு தவிக்கிது ” என்றான் அத்துணை போதையிலும்…

” முன்னாடியே நீ என்னை பிரிஞ்சு போய்டுவியோன்னு, பயம் வந்திருந்தா, நானும் திருந்திருப்பேன் ” என்றான்…

” என்னடா பேசிக்கிட்டே போற, நீயெல்லாம் திருந்துறவன்னு யாரடா நம்ப சொல்ற ” என்று கோபால் சட்டையை பிடித்தார்…

” திருந்தனும் நெனச்சிருந்த என் பொன்னு தலைல ரெத்தத்தை பார்த்த அப்போ திருந்திருப்ப, இல்லைனா என் மக கைய அறுத்துகிட்டு உயிர் போற நிலைல இருந்தாலே அப்போ திருந்திருப்ப ” என்றவர் மேலும் தொடர்ந்தார்

” இப்போ வருஷம் போய், திரும்ப என் மக உயிரை பறிக்க தான் வந்திருக்க ” என்றவர் ” இதுக்குமேல நீ என் பொண்ண தொந்தரவு பண்ண நினைச்சா கூட உன்னை வெட்டி போட்டுடிவேன் ” என்றார்…

தகவல் தெரியப்பட்டு தமிழின் பெற்றோர்கள் கூட வந்துவிட்டனர் அங்கு…

” நீ ஏன்டா இவளை புடுச்சுட்டு தொங்குற, நாங்க உனக்கு நல்ல பொண்ணா பார்க்குறோம் வா ” என்றபடி இழுத்து சென்றனர்…

ஒரு அசாத்திய சூழ்நிலை இப்போது, நல்ல விடயகிற்காக வந்து இப்போது அது நடக்குமா என்ற பயமே வந்துவிட்டது அனைவர்க்கும்…

வாசுகி தமிழ் பேசியதில் அமைதியானவள் தான் அதன்பின் எதுவுமே பேசாமல் சிலைப்போல் தான் நின்றாள்..

மாறனின் அழுகை சத்தம் குறையவேயில்லை, அவன் அம்மா அம்மா என்று அழ அனைவரும் வாசுகியை பார்க்க அவளோ எங்கோ பார்த்து நின்றாள்…

நாதனுக்கு என்னவோ வாசுகியை நெருங்க சிறு தயக்கம் வந்துவிட்டது இப்போது அவனே அறியாமல்..

ஆம் மகனின் கண்ணீர் கண்டு கூட அவள் அமைதியாக நிற்பது அவனை தடுமாற செய்தது…

நாதன் மகனை நெருங்கி தூக்கி தோளில் போட்டு கொண்டு தட்டி கொடுத்தான்..

” ப்பா, ம்மா ப்பா, ” என்று மூச்சுக்கு ஏங்கி அழும் மகனை என்னவென்று அவனும் சமாதானம் செய்வான்…

” அழக்கூடாது அப்பா இருக்கேன்ல ” என்றவனிடமிருந்து குழந்தை உதறி கொண்டு தாவ, நாதன் திரும்பி பார்த்தான்..

வாசுகி தான் கையை நீட்டி கொண்டு நின்றிருந்தாள்…

அவ்ளோதான் நொடியில் அன்னையிடம் தாவி விட்டான் ” ஷு என் ராஜா அழலாமா ” என்றவளிடம் ” ம்ம்மா வலிக்கிது ” என்றான் காலை தொட்டு..

கீழே தமிழ் தள்ளியத்தில், மாறனின் பேண்ட் கிழிந்து உள்ளே முட்டியிலும் சிறிதாய் காயம் இருந்தது…..

” இப்போ வீட்டுக்கு போய்டுவோமா, அப்பறம் மருந்து போடுவோமா” என்றவள் மகனுக்கு முத்தமழை பொழிந்தாள்…

நல்ல நேரமே முடிந்துவிட்டது இன்னொரு நாள் பார்த்துப்போம் என்றார் வெங்கடேசன், நல்லதாக அவர் மனதுக்கு படவில்லை…

மற்றவர்களும் அதுவே சரியென்பது போல் தலையசைக்க ” இல்லை மாமா இன்னிக்கே நடக்கட்டும், நல்லது கெட்டது பார்த்து செய்தது போதும் ” என்றாள் வாசுகி யார் முகத்தையும் பார்க்காமல் திடமாக…

கோபாலும் ” இல்லைம்மா ” என்று ஏதோ சொல்ல வர ” பொன்னு சொல்றப்படியே நடக்கட்டும் ” என்றான் நாதன்..

இப்படி அப்படியென்று வாழ்க்கையில் இனி கற்பனை வேண்டாம், வாழ்க்கை பயணம் எப்படி செல்கிறதோ அப்டியே செல்வோம் என்ற முடிவுக்கு இருவரும் வந்திருந்தனர்…

ஆகிற்று கோவிலுக்கு சென்று வந்து இரண்டு வாரங்கள் ஆகிற்று, பழையபடி வந்து நின்றது வாசுகி நாதன் நிலை…

என்னவோ இருவருமே பேசுவதை குறைத்து கொண்டனர்…

நாதனுக்கு பயம் மனைவியை நெருங்க, என்னவோ அன்று தமிழ் பேசியபின் அவள் கடைபிடித்த அமைதி அவனை இன்றுவரை தடுமாற செய்கிறது…

நாதன் அமைதியாகவே இருக்கவும் தான் வாசுகியும் அமைதி ஆகிவிட்டாள், ஒருவேளை “ஏய் பொன்னு ” என்ற நாதனின் குரல் எப்போதும் போல் வந்திருந்தால் அவன் தோள் சாந்திருப்பாளோ என்னவோ?

வீட்டில் எப்போதும் போல் இருப்பது மாறன் மட்டும் தான்…

வெங்கடேசன் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் தீவீரமான வேலையில் கோபாலோடு இணைந்து செய்து கொண்டிருந்தார்..

” ம்மா ராஜாக்கு காச்சல் ” என்று வாசுகி மடியை விட்டு எழாமல் இருந்தான் மாறன்…

ஆம் வாசுகி அவனை கொஞ்சுவதேன்றால் ராஜா என்றுதான் சொல்வாள், அவளை தாஜா செய்ய அதே வார்த்தையை உபயோகிப்பான் மாறன்..

மகனின் வார்த்தையில் சிரித்தவள் ” ராஜாக்கு எங்க காச்சல் ” என்றாள் மகனுக்கு கீச்சு கீச்சு மூட்டி..

” ம்மா, ம்மா ” என்று சிரித்தவன் துள்ளி கொண்டு தந்தையிடம் ஓடினான்…

” கண்ணா அப்பா தூங்குறாங்க இங்க வா ” என்று அவன் பின்னோடு சென்றாள் வாசுகி..

நாதன் உறங்கி கொண்டு தான் இருந்தான், மகன் கட்டிலில் ஏறி குதிக்கவும் விழித்து கொண்டவன், மெதுவாக எழுந்தான்…

” மாறா இன்னும் ஸ்கூல் கிளம்பலையா நீ ” என்ற தந்தையிடமும் அதே கதையை சொன்னான்..

” அப்படியா ” என்று கேட்டப்படி மனைவி முகத்தை பார்த்தான்…

அவளோ இல்லையென்பது போல புன்னகையோடு தலையசைத்தாள்…

” பொன்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணு, தம்பிக்கு போய் ஊசி போட்டு வருவோம் ” என்றான் மகனை தூக்கி அணைத்து கொண்டு…

” ப்பா நோ ஊசி, ஒன்லி சிக்கு புக்கு ” என்றான் அவனது எலக்ட்ரிகல் ட்ரெயின் வண்டியை நினைவில் கொண்டு…

” அடி படுவா ஸ்கூல் போகாம இருக்க என்னேனா பேசுற நீ ” என்றபடி பொய்யாக முறைத்த தந்தையை பாவமாக பார்த்தான் மாறன்..

” ப்பா நான் ஏ, பி,சி, டி, சொன்னா மட்டும் எங்க மிஸ் என்னை நிக்க வச்சிடுறாங்கப்பா, நான் ஸ்கூல் போகலை ” என்றான்…

இதுக்கு ஏன் நிக்க வைக்கிறாங்க என்பது போல் மீண்டும் மனைவியை பார்க்க ” அவன் சொல்ற அழக நீங்களே கேளுங்க ” என்றாள் கணவனுக்கு தேவையானதை எடுத்து கட்டிலில் வைத்தபடி…

” எங்க சொல்லு ” என்றான் நாதன் மகனிடம்..

தந்தை கேட்கவும் கட்டிலில் ஏறி நின்று கொண்டவன் ” ஏ, பி, சி, டி மொட்டைமாடி கீழ விழுந்தா டெட்பாடி ” என்றான் டான்ஸ் ஆடிக்கொண்டு…

நாதனுக்கு அப்படியொரு சிரிப்பு ” டேய் யாருடா இப்படியெல்லாம் உனக்கு சொல்லி தந்தது ” என்று கேட்டு சிரிக்க, வாசுகி அமைதியாக புன்னகைதாள்…

மகனை தூக்கி கொண்டு குளிக்க வைக்க சென்றாள், பின்னே ஒருநாள் இப்படி மகன் கேட்கிறான் என்று லீவ் போட அனுமதித்தால் இதே பழக்கம் ஆகிவிடுமென்று அவனை பள்ளிக்கு கிளப்புவதில் கண்ணாக இருந்தாள்…

பின் சில நிமிடங்களில் மகனை கிளப்பி சென்று வண்டியில் விட்டு வந்தாள்…

வாசுகி வரும் நேரம் நாதன் கடைக்கு கிளம்பி இருந்தான்…

மனைவி கல்லூரிக்கு கிளம்பாமல் இருக்கவும் “ஏன் பொன்னு காலேஜ் போகலையா ” என்றான்..

அவன் கேள்விக்கு பதில் பேசாமல் உள்ளே சென்றாள் வாசுகி அவனை கடந்து….

அவள் பின்னோடு சென்றான் இவனும், என்னவோ அவள் அப்படி சென்றது அவனுக்கு கோபத்தை கொடுத்தது…

” உன்ன தானடி கேக்குறேன் ” என்று வந்து அறையில் நின்றவனை, மேலும் கீழும் பார்த்தவள் ” இப்போ எதுக்கு பேசுறீங்க ” என்றாள்…

“நான் எப்போ பேசாம இருந்தேன் ” என்றான் அவளை நெருங்கி..

” ஏன் உங்களுக்கு தெரியாத ” என்றாள் பெண் கைகளை கட்டிக்கொண்டு…

தலையை கோதியவன் ” தெரியலை ” என்றான், “தெரியாமலே இருக்கட்டும் ” என்றுவிட்டு நகர்ந்தவள் கையை இறுக்கி பிடித்தான்..

அவளால் நிச்சயன் உதறி கொண்டு செல்ல முடியும் ஆனால் பேலன்ஸ் செய்யாமல் அவன் நின்றால் நிச்சயம் தடுமாறி விடுவான், அதனால் அப்படியே நின்றாள்…

” என்னடி பேசமாட்டிய ” என்றவன் முகத்தை பார்த்தவள் ” ம்ஹும் ” என்று தலையசைத்தாள்..

” ஏன் ” என்றான் ஒற்றை வார்த்தையாக..

“ஏன் பேசணும் நீங்க பேசுனீங்களா, அன்னைக்கு நடந்த பிரச்னைக்கு அப்பறம் உங்க ஆறுதல் தானே எனக்கு வேணும் நெனச்சேன் கொடுத்தீங்களா, யாரோ போல தாலிகட்டிட்டு கொண்டு வந்து விட்டுட்டு நீங்க பாட்டுக்கும் இருந்தீங்க தான, இப்போ மட்டும் ஏன் பேசணும், போங்க ” என்றவள் கண்ணீரை கட்டுப்படுத்தினாள்..

அவனும் இதை தெரிந்து தான் இருந்தான், ஆனால் என்னவோ அப்போ இருந்த மன நிலையில் யோசிக்க தெரியவில்லை…

இப்போது வாசுகியே கேட்கவும், அவளை இழுத்து மார்போடு அணைத்து கொண்டான்…

இதை அன்றே செய்திருந்தால் என்னவென்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப, மனைவியின் உச்சியில் இதழ் பதித்தான்…

ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் கொடுக்க முடியாத ஆறுதல், அவனின் அணைப்பிலும் முத்தத்திலும் இருந்தது…

” நான் ஒன்னும் குழந்தை இல்லை அத்தான், சும்மா ஒருத்தர் வந்து பேசினதும் மனசை மாத்திகிட்டு போறதுக்கு, எனக்கு தெரியும் அவர் அன்னைக்கு பேசினது ஒரு அதிர்ச்சி தான், ஆனால் அதுக்காக நான் அப்படியே போய்டுவேன்னு நீ நெனச்சுட்ட தானே ” என்றவள் அவன் அடித்தாள்.

அவள் சொல்வது உண்மையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை, அது அவனுக்கே தெரியும் அந்த நொடி அவன் பயந்தான் தானே..

” எனக்கு நீங்க முக்கியம்னு எல்லாம் நான் சொல்லலை, எனக்கு என் பையன் முக்கியம், அவனை விட்டு கொடுத்திடுவேன்னு, எப்படி நீங்க நினைக்கலாம் ” என்றவள் அவன் மார்பில் முகத்தை தேயித்தாள்…

இருவரின் மன காயங்களும், அந்த அணைப்பில் கரைந்து கொண்டிருந்தது…

அவள் செவ்வரளி..