அவள் செவ்வரளி

செவ்வரளி -10

” நீ கடைக்கு இல்லையாப்பா ” என்று கேட்ட மகனை கொலைவெறியோடு பார்த்தான் நாதன்..

அதிலும் வந்ததும் ஓடி சென்று தாயை தான் கட்டிக்கொண்டான்…

அதை காண நாதனுக்கு அத்துணை மகிழ்ச்சி தான், “ஆனாலும் அப்பனை அப்பட்டமா வேண்டாம்னு சொல்றியேடா மகனே” என்று பார்த்திருந்தான்..

வண்டி முன் புறத்தில் நின்று கொண்டு ” ம்மா நான் நான் ” என்று ஓட்டுவதற்கு கேட்டான் மாறன்…

” நீங்க வீட்ல போய் ” என்றவள் மகனுக்கு கொடுக்கவில்லை.

பின்னே அவளே இன்னும் கத்துக்குட்டி தான், இதில் மகனை ஓட்டவிட்டு சமாளிக்கும் அளவு அவளுக்கு தெம்புயில்லை…

வீட்டிற்கு வந்து நாதனின் பார்வை மனைவியை துரத்தியது..

அது வாசுகிக்கு புரிந்தாலும், கண்டுகொள்ளாமல் மகனோடு அவன் சொல்லும் கதைக்கு ராகம் போட்டு கொண்டிருந்தாள்…

மாடு சத்தம் கேட்கவும் ” ம்மா தாத்தா ” என்று வெளியில் ஓடினான்..

இப்போது கொஞ்சமும் தயக்கமின்றி மனைவியை பார்த்தான், அப்பட்டமா ஆசையை முகத்தில் காண்பித்து…

ம்ஹும் இதற்கு மேலும் அவனால் அவளிடம் மறைத்து கொண்டு இருக்க முடியவில்லை…

சில நிமிடம் பொறுத்து பார்த்தவள் ” என்ன இப்போ உங்களுக்கு ” என்று கேட்டுவிட்டாள்..

அவளின் நேரடி கேள்விக்காக காத்திருந்தவன் போல ” ஏன் உனக்கு தெரியாதா ” என்றான் புருவம் உயர்த்தி…

தெரியாதென்று பொய் சொல்ல தோன்றவில்லை, தலையை மட்டும் நாலாபக்கம் ஆட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்…

உணவு முடித்து மாறன் சோபாவில் உறங்கியிருக்க ” மாமா மாறன் உங்க கூட தூங்கட்டும் ” என்று மகனை அவர் அறையில் உறங்கவைத்து வந்தாள் வாசுகி…

வெங்கடேசனுக்கு அப்படியொரு நிம்மதி, என்னவோ இத்துணை நாட்களாக கூட வாசுகி இந்த வீட்டில் ஒட்டமால் இருப்பது போல் அவருக்கு தோன்றும்…..

இருவரையும் அமர்த்தி பேசி சரி செய்வதற்கு அவர்கள் குழந்தைகள் அல்ல….

இருவருமே வாழ்க்கையில் அடிபட்டு சூழ்நிலை காரணமாக சேர்ந்தவர்கள் தான்…..

இனியாவது அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கட்டுமேன்று நினைத்தவர் ” நான் பார்த்துகிறேம்மா நீ போ ” என்றார்…

அறைக்கு வந்த மனைவியை திருமேனிநாதன் படுத்து கொண்டு பார்த்திருந்தான் என்ன செய்கிறாலேன்று…

தாழ் போட்டு  விளக்கனைத்து வந்து கணவன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்…

மகனை அழைத்துவிட்டு வந்து புடவையை மாற்றவில்லை…

இருவரும் பேசிக்கொள்ளவில்லை ஆளுக்கு ஒரு இடத்தில் படுத்திருக்க, அந்த அமைதி நாதனுக்கு பிடிக்கவில்லை..

ஏதேனும் பேச வேண்டுமென்று ” ஏன் டிரஸ் மாத்திக்கலையா ” என்றான் அவளை திரும்பி பார்த்து…

” ஹ்ம் ” என்றாள் வேறொன்றும் சொல்லவில்லை..

” ஏன் தம்பிய அப்பா கூட தூங்க சொல்லிட்ட ” பதில் தான் அவனுக்கு தெரியுமே ,இருந்தும் பதில் தெரியாத கேள்வி போல் கேட்டான்…

அவன் அப்போது சொன்ன பதிலை இப்போது பெண் சொன்னாள் ” ஏன்னு உங்களுக்கு தெரியாதா ” என்றுவிட்டு அமைதியாக இருந்தாள்..

” இவ்வளோ தள்ளி படுத்திருந்தா ” எப்படி தெரியும் என்றான் அவன் ராகமாக அவளிடம்..

நிறைய யோசித்து தான் பெண்ணவள் வந்திருந்தாள், ஆனாலும் பயம் முழுக்க முழுக்க, என்னால் ஏற்க முடியுமா,

இல்லை இவனும் அவனை போல் தன்னை நோகடிப்பான, ஏகப்பட்ட குழப்பம்..

இருந்தும் அவனோடே வாழ்ந்தாச்சு ” என் அத்தான் என்னை காயப்படுத்த மாட்டார் ” என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லி கொண்டு, நகர்ந்து வந்து அவன் மார்பில் தலை வைத்தாள்…

நெருங்கி வந்த மனைவியை இறுக்கி அணைத்து கொண்டு அவள் உச்சியில் அத்துணை முத்தம் கொடுத்தான்..

கடங்காரி ஒருமுறை கூட அவனுக்கு திரும்பி கொடுக்கவில்லை..

அவளை அணைத்தபடியே அவனது கைகள் அவளிடம் அத்துமீறி சென்றது..

அவனது கைகள் முன்னேற முன்னேற வாசுகிக்கு பயம் கூடியது..

அவளது உடலின் மாற்றம் கூட நாதனுக்கு புரிந்தது..

” என்னாச்சுடா வேண்டாமா ” என்றவன் கைகளை எடுத்து கொள்ளவில்லை, அவனுக்கு தான் வேணுமே..

ஆனால் மனைவி வேண்டாமென்றால், எடுத்துவிடுவோம் என்ற எண்ணத்தில் கேட்டான்..

” அத்தான் ப்ளீஸ் நீ ஒன்னுமே இப்போ பேசாதயேன் ” என்றாள் அவனிடம் கண்ணீரோடு..

ஆம் கண்ணீர் தான், மறைத்து வைத்திருக்கும் பாகத்தை வலி இல்லாமல் கூட ஒரு ஆண் தொடுவான் என்பதை இப்போது தானே உணர்கிறாள்…

அதை முழுதாக உணர முடியாமல், அடுத்து அவன் கைகள் நீண்டால் தெரிந்துவிடுமே என்ற பயமும் கூடியது…

எப்போது என்றாலும் தெரிந்தாக தானே செய்யும் என்றுதான், அவனை பேச வேண்டாம் என்றாள்…

அதன் பின் நாதன் ஒன்றும் பேசவில்லை, அவள் முகத்தை மட்டும் நிமிர்த்தி உதட்டு முத்தம் கொடுத்தான்..

இதில் இத்துணை மென்மையா என்று நினைத்தவள் தானாக கணவனின் தலையை பிடித்து அழுத்தி பிடித்து கொண்டாள்…

மனைவியின் முதல் ஒத்துழைப்பு இது தானே, அவனுக்கு தாபம் கூடியது..

மேலும் மேலும் அவள் உதட்டில் மூழ்கி மூழ்கி முத்தேடுத்தான்…

அவள் மேனியில் ஊர்ந்த கைகள், அவள் தொடையில் ஊர்ந்து வர முதலில் சிறு கோடாக இருக்க அதில் கையை வைத்து தடவியவன், மேலும் முன்னேறிட இப்போது யோசனையோடு தடவினான்..

இரு பக்கம் தொடையை தடவியவன் அப்படியே ஆடிப்போனான்…

அவனது தொடுகையில் பெண்ணவள் அவனை இறுக்கி கொண்டாள் தன்னோடு…

” பொன்னு ” என்றவனுக்கு வேறு வார்த்தையே வரவில்லை…

அவன் கண்களிலும் கண்ணீர் “பொன்னு இதெல்லாம் ” என்றவனுக்கு நா உலர்ந்து போனது…

அவன் நெஞ்சோடு ஒன்றியவள், ” இதுக்கு தான் நான் தள்ளியே இருந்தேன், நீ தான் வேணும் வேணும் சொன்ன ” என்றவள் அவன் மார்பில் அடித்தால்..

கோபமாக இல்லை, என்னவோ எல்லா இடத்திலுமே ஒரு இயலாமை…

தமிழிடம் காட்ட முடியாத கோபம், சில நேரத்தில் அவனிடம் பட்டுவிட்டு மீள முடியாத நேரம், இப்படியெல்லாம் யோசிக்க யோசிக்க கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை…

கணவன் மார்பில் அழுத்தமாக கடித்தாள், அவள் தொடை மேல் கை வைத்தவன் அப்டியே இருந்தான் கண்களில் கண்ணீரோடு..

வாசுகியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

கடைசியாக வாசுகி அவனது கொடுமையின் உச்சத்திற்கு சென்ற நாள் அது…

இரவு இரண்டு மணிப்போல் கதவு விடாமல் தட்டப்பட்டது…

வாசுகிக்கு கண் திறக்க முடியவில்லை, இருந்தும் கடின்னப்பட்டு திறந்து அறையை விட்டு வெளியே வந்தாள்..

மாமியார், மாமனார் இருவரும் வெளி ஹாலில் தான் படுத்திருந்தனர், ஆனாலும் எழுந்து திறக்கவில்லை..

காரணம் வந்திருப்பது தமிழ் என்பது அனைவர்க்கும் தெரியும், எப்படியும் குடித்துவிட்டு வந்துருப்பான்..

அவன் மனைவியே சமாளிக்கட்டுமென்று தான் படுத்திருந்தார்கள்…

இல்லையென்றாலும் இருவரும் கண்டுகொள்ள போவதில்லை..

கதவை திறந்த வாசுகியின் தலையில் கொட்டினான் வலிக்க வலிக்க, நான்கு ஐந்து முறை…

” புருஷன் இன்னும் வீட்டுக்கு வரலை, ஆனால் உனக்கு சுகமா உறக்கம் கேக்குதா ” என்றான்..

எத்துணை போதை இருந்தாலும் வார்த்தையில் குழறல் இருக்காது..

வந்தவன் அப்படியே அமர்ந்து அந்நேரத்தில் உணவு கேட்டான்..

உடனே கொடுக்கவில்லை என்றால் அடி விழும் சூடாக இல்லையென்றால் அதற்கும் அடி விழும்..

இரவுக்கு செய்த சாதம் நீர் விடாமல் இருக்கவும், இருந்த குழம்பு மட்டும் சூடு செய்து எடுத்து வந்தாள்….

” என்னடி இன்னைக்கு போய் சாம்பாரை ஊத்துற” என்றவன், அவளை முறைத்தான்…

இன்னைக்கு என்னவென்று நினைத்தபடி வேகமாக சென்று முட்டை பொறித்து எடுத்து வந்து வைத்தாள், உண்டு முடித்தவன் அறைக்கு சென்றான்…

அறைக்குள் வாசுகி நுழையும் போது புகையை பயங்கரமாக இழுத்து வெளியில் விட்டு கொண்டிருந்தான் தமிழ்..

இவள் நாசிக்கு பயங்கரமாக ஏறியது, என்னவோ அது ஒரு ஒவ்வாமை தந்தது அவளுக்கு..

சாதாரண புகை போல் தெரியவில்லை, வாயை மூடி கொண்டு வெளியில் சென்றவளை, குரலை உறுமி கொண்டு உள்ளே அழைத்தான்…

தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தவளை, கொத்தாக முடியை பிடித்து இழுத்தவன், ” என்னடி வெளில ஓடுற ” என்றபடி கட்டிலில் தள்ளியிருந்தான்…

” சத்தம் வெளிய கேட்கவே கூடாது ” என்றவன் போதையின் வீரியத்தில் அவளை பாடாய் படுத்தியிருந்தான்…

அதன் பின்னும் அவளை விடாதவன் எழுந்து சென்று எதையோ எடுத்து வந்தான் ” ஹாப்பி பர்த்டே தானே இன்னைக்கு எனக்கு, நீ ஹாப்பி பர்த்டே சொல்லு ” என்றபடி வாசுகி சுதாரிப்பதற்குள் இரு தொடைகளிலும் பிளேடு கொண்டு கிழித்திருந்தான் கணக்கில்லாமல்…

வலியில் அலறியவள் வாயை பொத்தியவன் ” மூச் ” என்றபடி மற்றொரு கையால் கழுத்தை இருக்கினான்…

” ஹம்ஹ்ம், ம்ஹுமும் ” என்று காலை உதைத்தவளை சில நொடியில் விட்டுவிட்டு தரையில் விழுந்தான்….

பெண்ணவள் இதற்கு இறந்தே போயிருக்கலாமே என்று சத்தமில்லாமல் தான் கண்ணீர் வடித்தாள்…

ஒருவேளை சத்தமிட்டு மீண்டும் அவன் விழித்து கொண்டால்..

இவளின் அலறல் வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்டது தான் ஆனால் என்னவென்று கேட்கவில்லை..

அவர்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற கோபம் எப்போதும் அவள் மீது…

எழுந்து சென்று சுத்தப்படுத்தி கொண்டு வந்தவள், எரிச்சல் தாங்காமல், வாயை பொத்தி கொண்டு அழுதாள்..

பின்னே சமையலறை சென்று மஞ்சள் வைத்து கொண்டு வெளி திண்ணையில் அமர்ந்துவிட்டாள்…

சில மணி நேர எரிச்சல் விடியலில் தான் குறைந்தது…

அப்போது அத்துணை கொடுமை அனுபவித்த போது கூட உயிரை மாய்த்து கொள்ள அவளுக்கு தோன்றவில்லை..

ஆனால் இன்னொருவனுடன் சேர்த்து வைத்து பேசியதும், இவனோடு இனியும் வாழ்க்கை வேண்டாமென்று தான் உயிரைவிட துணிந்திருந்தாள் பெண்…

வாய்விட்டு அழுதுவிட்டான் நாதன், இத்தனைக்கும் இன்னதென்று மனைவியிடம் கேட்கக்கூட இல்லை…

ஆனாலும் அழுகை நின்றாபாடில்லை அவனுக்கு, ஒருவர் அணைப்பில் மற்றவருக்கு அழுகை கூடியதே தவிர குறையவில்லை…

வாசுகி தான் கொஞ்சம் தெளிந்து அவனை ஆறுதல் படுத்தினாள்..

” சாரி, சாரிடி ” என்றான் ஏதோ இவன் செய்தது போல..

” ஒன்னுமில்லைத்தான் விடுங்க ” என்றவளை நொறுக்கி அனைத்தவன் உணர்வுகள் எங்கோ ஓடி சென்றுவிட்டது..

இருவருக்கும் உறக்கமில்லை, அதனால் பாதி வேலையில் மகன் அம்மா என்று அழும் சத்தம் கேட்டு, வாசுகி கணவனை விட்டு விலகி எழுந்தாள்…

” பொன்னு தண்ணி எடுத்துவா ” என்றவனிடம் விளக்கை போட்டுவிட்டு தலையை ஆட்டுவிட்டு சென்றாள்…

” ம்மா ம்மா ” என்றவன் அன்னையவள் தூக்கி கொண்டதும் மீண்டும் உறங்கிவிட்டான் அவள் தோளில் …

காலை எழுந்ததும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்..

திடீரென ” பொன்னு எங்கயாச்சும் கோவிலுக்கு, போய்ட்டு வருவோமா ” என்றவன் கேள்விக்கு “ஹ்ம் எப்போ ” என்றாள்…

” தம்பிக்கு லீவ் விடட்டும் ” என்றான் ” அப்போ சனி ஞாயிறு தான் ” என்றாள்…

” ஹ்ம் ஓகே” என்றவன் தந்தையிடம் ” அப்பா இந்த வாரம் சனி ஞாயிறு எதுவும் நல்ல நாள் இருக்கா பாரு ” என்றான் நாதன்..

” எதுக்கு தம்பி ” என்றவரிடம் ” கல்யாணம் முறைப்படி பண்ணலையே இன்னும் நாங்க, அதான் தேதி பாருங்க ” என்றான்..

கணவன் சொல்வது காதில் விழுந்தது, திரும்பி பார்த்தவள் இது எதுக்கு என்று தான் நினைத்தாள்.

நாதனுக்கு என்னவோ அவளுக்கு தாலி காட்டாதது, முழுமையாக தெரியவில்லை..

நேற்றும் அவளை நெருங்கும் நேரத்தில் ஒருவேளை இருவருக்கும், அந்த மாங்கல்ய உரிமை இருந்திருந்தால், ஏதோ ஒரு நெருக்கம் இன்னும் கூடியிருக்குமென்று தோன்றியது..

அதனால் தான் இந்த முடிவுக்கும் வந்திருந்தான்…

அவள் செவ்வரளி